Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிவியல் ரீதியாக சிகரெட்டை நிறுத்துவது எப்படி?
2 posters
Page 1 of 1
அறிவியல் ரீதியாக சிகரெட்டை நிறுத்துவது எப்படி?
‘சிகரெட்டை ஏன் பிடிக்கிற? சொல்லு?' ‘சார் பிடிக்காட்டி கீழே விழுந்திரும்...’ இப்படி சிகரெட் குடிப்பதைப் பற்றி எண்ணற்ற ஜோக்குகள் உள்ளன. ஏதோ காரணம் சொல்லி சிகரெட்டை விட முடியாதவர்களும் பல முறை சிகரெட்டை விட்டவர்களும்தான் அதிகம்.கேன்சரில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை வருகிறது என சிகரெட் அட்டையிலேயே எச்சரிக்கை வாசகங்களை அச்சடித்தும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சிகரெட்டை நிறுத்துவதற்கு எலெக்ட்ரானிக் சிகரெட், நிகோடின் சூயிங்கம், கையில் ஒட்டிக்கொள்ளும் பேட்ச் என எத்தனையோ வழிகள் இருந்தும், அதை ஏன் நிறுத்த முடிவதில்லை? டாக்டர் ஆனந்த் பாலன், போதை மீட்பு சிகிச்சை நிபுணர்...
‘‘பல ஆண்டுகளாக புகைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்றோடு நிறுத்திவிடலாம் என முடிவு செய்வார்கள். இதற்கு ‘கோல்டார் கீ’ என்று பெயர். திடீரென்று நிறுத்துவது மிகவும் கடினமான விஷயம். மீண்டும் புகைப்பிடித்தலுக்கு தூண்டப்பட்டாலோ, முன் குடித்துக் கொண்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமாக பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சிகரெட்டை நிறுத்துவதைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபர் சுயமுனைப்புடனும் விருப்பத்துடனும் மட்டுமே செய்ய வேண்டும். புகைப்பதை நிறுத்தும் போது, மூளையானது பழகிய நிகோடினை கேட்கும்.
சிகரெட்டில் நிகோடின், கோல்டார், கார்பன் மோனாக்சைடு போன்ற மூலக்கூறுகள் உள்ளன. கோல்டார் என்பதுதான் கார்சினோஜெனிக் காரணிகளை தூண்டி கேன்சர் வருவதற்குக் காரணமாக அமையும். அதனால், நிகோடினை மட்டும் மூளைக்கு அனுப்பி அதனை திருப்தியுறச் செய்து, சிகரெட் புகைத்தலை தவிர்க்க செய்யும் சிகிச்சைக்கு ‘நிகோடின் ரீபிளேஸ்மென்ட் தெரபி’ என்று பெயர். நிகோடின் சூயிங்கம், உடலில் ஒட்டிக் கொள்ளும் நிகோடின் பேட்ச் பயன்படுத்தியும் பயன் அடையலாம். சிகரெட் குடிக்கும் எண்ணம் வரும் நேரத்தில் நிகோடின் சூயிங்கத்தை வாயில் போட்டு மெல்லலாம். நிகோடின் சூயிங்கம் காரமான சுவையில் இருக்கும். ஒருமுறை மென்றுவிட்டு கடைவாய் பகுதியில் அடக்கி வைத்துக் கொள்ளலாம்.
நிகோடின் பேட்ச்சை ரத்த ஓட்டம் அதிகமான பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். உடலுக்குத் தேவையான நிகோடின் இதன் மூலம் கிடைத்துவிடும். சிகரெட் பிடிக்கும் எண்ணம் குறையும்...’’ டாக்டர் வெங்கடேஷ் ராமச்சந்திரன், மனநல மருத்துவர்...‘‘சிகரெட்டை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு வருபவர்களின் குடும்பச்சூழலையும் பணியிடச்சூழலையும் அறிந்து கொண்டுதான் அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பிப்போம். குறிப்பிட்ட நபருக்கு எதற்காக சிகரெட் தேவைப்படுகிறது, இப்போது எதற்காக விட நினைக்கிறார்கள் என்பதையும் கேட்போம்.சிலர் தாங்களாகவே எலெக்ட்ரானிக் சிகரெட்டை பயன்படுத்தி சிகரெட்டை விட முடியுமா என்று பார்க்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.
பல நிறுவனங்கள் எலெக்ட்ரானிக் சிகரெட்டை தயாரித்தாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஒரு எலெக்ட் ரானிக் சிகரெட்டை புகைப்பது 50 சிகரெட்டுகள் புகைப்பதற்குச் சமம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டவிஷயங்களை மட்டுமே நாங்கள் பரிந்துரைப்போம். அதனால், எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. சிலர் மைல்ட் சிகரெட்டுகளுக்கு மாறி, அதன் பிறகு விடலாம் என்று எண்ணுவார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கிறார் என்றால் மைல்ட் சிகரெட்டில் 20 சிகரெட் புகைத்தால்தான் திருப்தி ஏற்படும். அவரால் விட முடியாமல் அதிகமாக புகைக்க ஆரம்பித்து விடுவார்.
ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் சிகரெட்டை உடனடியாக நிறுத்த முடியும். நிகோடின் சூயிங் கத்தை உபயோகிக்கச் சொல்கிறோம். அலுவலகத்தில் மென்று கொண்டு இருக்க முடியவில்லை என்பவர்கள், உடலில் நிகோடின் பேட்ச் ஒட்டி சமாளிக்கலாம். நிக்கோலேண்ட்ஸ் என்று மிட்டாய் மாதிரியான வடிவத்திலும் நிகோடின் தேவையை நிறைவேற்றலாம். மிட்டாய் போலவே வாய்க்குள் வைத்து சப்பி சாப்பிட வேண்டும். சிகரெட் பிடிக்கும் நேர இடைவெளியையும் அதிகமாக்கிக் கொண்டே வர வேண்டும். 10 சிகரெட் குடிப்பது 5 சிகரெட்டாக குறையும். இப்படி மெல்ல சிகரெட்டுகளின் எண்ணிக்கை அளவை குறைத்து, ஒருநாள் நிறுத்திவிட வேண்டும். சிகரெட்டை நிறுத்திய பின்னும், 6 மாத காலம் வரை, ‘மறுபடியும் பிடிக்கலாமா’ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும்.
அதற்கு இடம் கொடுக்காமல் 6 மாத காலம் தாக்குப்பிடித்துவிட்டால், பிறகு சிகரெட் பக்கம் அவ்வளவு எளிதில் போக மாட்டார்கள். இதெல்லாம் பலன் அளிக்கவில்லையெனில் ஆன்டி டிப்ரசன்ட் மாத்திரைகள் கொடுத்து, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தைப் போக்க முயற்சி செய்வோம். சிகரெட்டை நிறுத்த விரும்பும் நபர் மிகுந்த சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் எளிதாக இப்பழக்கத்தை விட்டு விடலாம். அதோடு, குடும்பத்திடமும் இது பற்றி தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மனநலம் சார்ந்த ஆதரவும் அவருக்குக் கிடைக்கும்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3459
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அறிவியல் ரீதியாக சிகரெட்டை நிறுத்துவது எப்படி?
மிக மிக பயனுள்ள பதிவு இது போன்று இன்னும் ஆயிரம் பதிவிட்டாலும் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அவர்களாக திருந்தாத வரை அதிலிருந்து விடு பட முடியாது என்பதுதான் எனது கருத்து
புகை பிடிப்பவர்களைக்கண்டால் வெறுப்புத்தான் வரும் நெருங்கிய உறவுகள் புகை பிடித்தால் அது பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் சொல்லுவேன் கேட்காத பட்சத்தில் நாசமா போங்கன்று விட்டு விடுவேன் கோபம் கோபமா வரும்
என் தந்தையும் புகை பிடிப்பவராகத்தான் இருந்தார் அதனால் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் இனியும் இப்படி எனது உறவுகளுக்குள் ஒரு மரணம் நிகழக்கூடாது என்று பல முறையில் நான் கையாண்டு வருகிறேன் புகை பிடிப்பை தடுப்பதற்கு
சில நேரங்களில் தோற்றுத்தான் போகிறேன்
புகை பிடிப்பவர்களைக்கண்டால் வெறுப்புத்தான் வரும் நெருங்கிய உறவுகள் புகை பிடித்தால் அது பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் சொல்லுவேன் கேட்காத பட்சத்தில் நாசமா போங்கன்று விட்டு விடுவேன் கோபம் கோபமா வரும்
என் தந்தையும் புகை பிடிப்பவராகத்தான் இருந்தார் அதனால் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் இனியும் இப்படி எனது உறவுகளுக்குள் ஒரு மரணம் நிகழக்கூடாது என்று பல முறையில் நான் கையாண்டு வருகிறேன் புகை பிடிப்பை தடுப்பதற்கு
சில நேரங்களில் தோற்றுத்தான் போகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum