Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
Page 1 of 1

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரைஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நாட்டில் உறுதிப்படுத்த சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து மக்கள் உரிமையைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் மூலம் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
குறிப்பாக நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைகின்ற இந்த சந்தர்ப்பத்தில் உங்களால் நியமிக்கப்பட்ட உங்களின் முதன்மை ஊழியன் என்ற வகையில் உங்களுக்கு உரையாற்றுவது பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். கடந்த ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் ஜனவரி 09 ஆம் திகதி இந்நாட்டின் அரச தலைவராக இன்றேல் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் வாய்ப்பு உங்களால் எனக்கு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை கழிந்த 100 நாள் காலவரையறையில் குறிப்பாக இந்நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக அரசியல், அபிவிருத்தி, சர்வதேச தொடர்புகள் ஆகிய இவ்வனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றபோது நாங்கள் புதிய அரசு என்ற வகையில் புதிய நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஜனவரி 08 ஆம் திகதி இந்நாட்டின் மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தி மிகத் தெளிவாக தமது ஜனநாயக உரிமையில் ஒரு மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளனர் என நான் கருதுகிறேன்.
அவ்வாறு ஏற்படுத்திய மாற்றமும் புரட்சியும் கிடைத்த சுதந்திரம் மற்றும் ஜனநாயக பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அதை சார்ந்திருத்தல் போன்ற இவ்விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த மூன்று மாத காலப்பகுதியில் செயலாற்றுகின்ற போது நாட்டில் ஒரு சிலரின் நடத்தைகள், ஒரு சிலரின் அரசியல் முடிவுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துகின்ற போது வரலாற்றில் உலகத்தில் ஒரு சில நாடுகளில் புரட்சி இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் அப்புரட்சியின் பின்னர் ஏற்பட்ட விளைவுகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றது.
பெரும்பாலும் புரட்சியின் பின்னர் நாடுகளில் மீள்புரட்சியொன்று ஏற்படுதல் பொதுவான நிலையாகும் என்பதை நாம் அறிவோம். அதேபோன்றுதான் எனது ஞாபகத்தில் உள்ளபடி 1990, 1991 போன்ற காலப்பகுதிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்கின்ற போது சோவியத் தேசத்தின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பாவில் கொமியூனிஸ்ட் அரசுகள் வீழ்ச்சியடைந்தமை என்பவற்றினூடாக குறிப்பாக அரசியல் தீவிரவாதத்தை நோக்கிச் சென்றுள்ள அவ்வாட்சியில் மாற்றம் ஏற்பட்ட போது மக்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அனுபவிக்கின்ற போது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் சில பிரச்சினைகளும் நெருக்கடிகளும் தோன்றின என்பது என ஞாபகத்தில் இருக்கின்றது-
தொடர்ந்து....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
அது மாத்திரமல்ல எபிரஹாம் லிங்கன் போன்ற மனித நேயம் கொண்ட தலைவர் ஒருவர் அமெரிக்காவை ஆட்சி செய்த காலத்தை நினைவுபடுத்துகின்ற போது அடிமைத்தளையை முடிவுறுத்துவதற்காக சட்டங்களை இயற்றி சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் அடிமைகளே சில சந்தர்ப்பங்களில் அடிமைத்தளையே நல்லது என்று சொல்லியிருந்தனர்.
ஏனெனில் சுதந்திரத்தை அனுபவித்த சுய சக்தியுடன் ஒரு மனிதனாக உருவாவதற்கு இருக்கின்ற உரிமையை விட ஒருவரின் கீழ் சேவை செய்து அடிமையாக வாழ்ந்து தங்களது வாழ்க்கையை முன்னெடுப்பது அவ்வாறு கிடைத்த சுதந்திரத்தைவிட நல்லது என சில அடிமைகள் நினைத்தனர்.
அதனால் அடிமைத்தளையை முடிவுறுத்தி அதை சட்டபூர்வமாக்கி அடிமைத்தளையிலிருந்து அமெரிக்க மக்களை விடுவித்ததன் பின்னரும் கூட சிறிது காலம் சென்றதன் பின்னர் ஒரு சில அடிமைகள் அடிமை வாழ்வு நல்லது என்று கூறியிருந்தனர். இதுதான் மானிட சமுதாயத்தின் பொதுவான நிலை. எனவே நாம் இந்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இப்பொழுது சிலர் இந்த 100 நாட்களில் என்ன செய்திருக்கிறோம் என்று கேட்கின்றனர். 100 நாட்களில் பல விடயங்களைச் செய்திருக்கிறோம். அவை பெறுமதியானவைகள். பெளதீக ரீதியாக கண்பார்வைக்கு புலப்படுகின்றவைகள் அல்ல.
ஜனவரி 09 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்கின்ற போது நமது நாட்டைப்பற்றி இருந்த சர்வதேச நிலைமை உங்கள் ஞாபகத்தில் இருக்கும் எம்மால் சர்வதேசம் பிரிந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்புச் சபை என்பவற்றில் ஏற்பட்ட நிகழ்வுகள் உங்கள் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், எம்மால் பிரிவடைந்த சர்வதேசம் ஜனவரி 09 ஆம் திகதியின் பின்னர் இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கு நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையே சர்வதேசமும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தது. இன்று இந்நாட்டின் சுதந்திரத்தை ஜனநாயகத்தை, மனித உரிமையை மற்றும் அடிப்படை உரிமைகளை இவ்வரச தலைவர் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
கடந்த காலப்பகுதியில் நான் சில நாடுகளுக்கு விஜயம் செய்ததை நீங்கள் அறிவீர்கள். முதலாவதாக எமது அயலில் உள்ள எமது நட்பு நாட்டுக்குச் சென்றேன். அதன் பின்னர் பொதுநலவாய தின விழாவுக்காக பிரித்தானியாவுக்குச் சென்றேன். பொதுநலவாய தினத்தைக் கொண்டாடியதைப் போன்று அதைவிட முக்கியமானதாக இருந்தது, எமது நாட்டுக்காக பிரித்தானிய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டு செயலாளர் மற்றும் மகாரணியார் ஆகியோரை சந்தித்ததன் மூலம் நான் பிரித்தானியாவை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தையே வெற்றிகொண்டுள்ளேன் என நான் நினைக்கிறேன்.
அதேபோன்று நான் சீனாவுக்குச் சென்றேன். எமது நட்புநாடு என்ற வகையில் எமது நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் அனுசரணை வழங்கிய முதலீடுகளைச் செய்த சீனாவுக்குச் சென்று எம்மிடையே இற்றைவரை இருந்து வந்த நட்புறவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள என்னால் முடிந்தது. நான் அதன் பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்றேன். பாகிஸ்தான் எமக்கு மிக நெருங்கிய நட்பு நாடு.
தொடர்ந்து..

இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயம் சர்வதேச ரீதியாக முழு உலகத்தையும் வெற்றி கொண்டதாக அமைகிறது என நான் நம்புகிறேன். எம்மீது வைத்துள்ள நம்பிக்கையும் குறிப்பாக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துதல், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன், இந்தியாவின் பக்கத்தில் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சரிப், சீன ஜனாதிபதி சி ஜின் பிங் அவர்கள் ஆகிய இவ்வரச தலைவர்கள் எம்மீது கொண்டுள்ள அன்பும் ஆதரவும் நட்புறவும் மிகவும் விரிவானதாகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் நான் ஜனாதிபதியானவுடன் எனக்கு நல்வாழ்த்துக்கூறிய முறை என் ஞாபகத்தில் இருக்கிறது.
செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியொருவர் சமீபத்தில் எமது நாட்டுக்கு வந்தார். அதேபோன்று மேலை தேசம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஆசிய பிராந்தியத்தின் வெளிவிவகார அமைச்சர்களும் இராஜதந்திர பிரதிநிதிகளும் பெருமளவில் இம்மூன்று மாதங்களில் எமது நாட்டுக்கு வந்து என்னை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் என் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
அதனால் இந்த 100 நாட்களில் நாம் இன்று என்ன செய்திருக்கின்றோம் என்று கேட்கின்றவர்களுக்கு குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் முறிவடைந்திருந்த சர்வதேச நட்புறவு, நம்பிக்கை என்பவற்றை மிகவும் வலுவான முறையில் எனது அரசாங்கம் என்ற வகையில் எனது மக்களுக்காக வெற்றிகொள்ள என்னால் முடிந்தது என்பதை நான் குறிப்பிட வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள நம்பிக்கையில் எமக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பு நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக பெளதீக வளங்களின் அபிவிருத்திக்கு சர்வதேச நடவடிக்கைகளுக்கு வழங்கியிருப்பதை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும்.
இப்பொழுது இந்த நிலைமையில் உங்களுக்குத் தெரியும் நீங்கள் ஏன் என்னை இப்பதவியில் அமர்த்தினீர்கள் என்று எனது ஞாபகத்தில் வருகிறது. கடந்த ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் பொதுவாக எமது பிரதேச சபை உறுப்பினர்களுடன் கதைக்கின்ற போது சத்தம் போடுவார்கள். தொலைபேசியில் பேச வேண்டாம் டெப் செய்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அரச அதிகாரிகள் சுதந்திரமாகப் பேசவில்லை. இராணுவத்தின் பொலிஸின் கீழ் மட்டத்தில் இருந்த உத்தியோகத்தர்கள் தொலைபேசியில் சுதந்திரமாகக் கதைக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் கதைப்பதற்கு சுதந்திரம் இருக்கவில்லை.
இம்மூன்று மாத காலப்பகுதியில் அந்த சுதந்திரம் வலுவடைந்துள்ளது. அதேபோன்று ஊடக சுதந்திரம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் ஊடக அதிகாரிகளுக்கும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் ஆகியோரிடம் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் எவ்வாறு கதைத்தார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அதில் நிர்ப்பந்தங்கள், அச்சுறுத்தல்கள், உளவியல் ரீதியான அழுத்தங்கள் இருந்தன. இன்று ஊடகம் அவை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறது. நாம் இந்த சுதந்திரத்தை வழங்கியிருக்கிறோம். நாம் இங்கு பேசப்படுகின்ற அநாகரீகமான சுதந்திரத்தை உருவாக்கிக்கொள்ளப் போகிறோமா. சில ஊடக நிறுவனங்கள் நடந்துகொள்கின்ற முறையைப் பார்க்கின்ற போது நான் ஆச்சரியப்படுகிறேன். கிடைத்துள்ள இந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் மக்களின் ஜனநாயக உரிமையையும் ஊடக சுதந்திரத்தையும் நாம் உறுதிப்படுத்தினோம்.
மறுபுறம் நீதிமன்றம், உங்களுக்குத் தெரியும் சட்டத்தின் ஆதிக்கம் எந்தளவுக்கு முறிவடைந்திருந்தது என்பது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றம் ஆகிய அனைத்தும் அரச ஆட்சியாளரின் தொலைபேசி அழைப்புக்கு கீழ்படிந்து இருந்தன. உங்களுக்குத் தெரியும் பல்வேறுவிதமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எப்படி அக்காலத்தில் விடுதலை கிடைத்தது என்பது.
வழக்குத் தீர்ப்புகள் எவ்வாறு கிடைத்தன என்பது, சட்ட மா அதிபருக்கு சுதந்திரம் இருந்ததா, சட்ட மா அதிபராக தமது கடமைகளைச் செய்வதற்கு குறிப்பாக பிரதம நீதியரசரை நியமித்தல், இராணுவத்தளபதியை நியமித்தல் என்பவற்றை அந்த பிரிவில் இருக்கின்ற அனைவரும் அறிவார்கள். உங்களுக்குத் தெரியும் மூப்புரிமைக்கு அமைவாக அவ்வனைத்து தகைமைகளையும் கொண்டவர்களைத் தான் அப்பதவியில் நான் நியமித்துள்ளேன். அதனால் நாம் சட்டத்தின் ஆதிக்கத்தைப் பலப்படுத்தியிருக்கின்றோம். சுதந்திரமும் சமாதானமும் அதற்கு மிகவும் அவசியமானதாகும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கின்றோம்.
தொடர்ந்து...

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது நான் முப்படைக்கும் பொலிஸார் அனைவருக்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறேன். இற்றைவரை செய்ததைவிட மிக நல்ல முறையில் அப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதனால் நாம் நீண்ட பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இது அதற்கான ஆரம்பம் மாத்திரம் தான். அதேபோன்று குறிப்பாக நான் உங்களுக்கு இன்னும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும்.
இந்த 100 நாள் கால வரையறையில் ஜனாதிபதி என்ற வகையில் எனது நடத்தை தொடர்பாக சிலருக்கு சிற்சில விமர்சனங்கள் இருக்கின்றன. சிலர் சொல்லுகிறார்கள் சக்தியில்லையென்று, சிலர் சொல்லுகிறார்கள் பலவீனமானவர் என்று, இன்னும் சிலர் சொல்லுகிறார்கள் ஒரு தலைவன் அல்ல என்று. ஆனால் அந்த அனைத்து விமர்சகர்களுக்கும் எனது அன்பான மக்களுக்கும் நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் இந்த 100 நாள் காலப்பகுதியில் வரையறையற்ற அதிகாரமுள்ள பதவியின் அதிகாரத்தை நான் பயன்படுத்தவில்லை என்பதைக்கூற வேண்டும்.
ஏனென்றால் இந்த அதிகாரத்தைக் கொடுப்பதற்காகத்தான் நீங்கள் என்னை நியமித்தீர்கள். அதற்காகத்தான் நான் வந்தேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குள்ள வரையறையற்ற அதிகாரங்களை அகற்றுவதற்காக வந்தேன். எனவே இவை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. நான் தெளிவாக ஒரு விடயத்தைக் கூற வேண்டும்.
எனது தேர்தல் பிரகடனத்தில் நான் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற விடயம் என்னவெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குள்ள வரையறையற்ற அதிகாரங்களை நீக்குவதாகும். இப்பொழுது இந்த விடயத்தின் போது நான் எந்தளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறேன் என்று கூறுவதானால் 1978 அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட நாள் முதல் இந்நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராகவே இருந்தது.
அதனால் 94 முதல் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரகடனத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் வரையறையற்ற அதிகாரங்களை நீக்குவோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். அவர்கள் எவருக்கும் அதைச் செய்ய முடியவில்லை.
அதேபோன்றுதான் 78 அரசியலமைப்புடன் வந்த விருப்புக்குரிய வாக்குமுறைக்கு அன்றிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. அப்பொழுது இவ்விரண்டுக்கும் இடதுசாரி முற்போக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சி முதல் முறையாக 1999 ஆம் ஆண்டு அவர்களுடைய மாநாட்டின் போது இதற்கு எதிராக ஒரு பிரேரணையை அங்கீகரித்தனர் என நான் நினைக்கிறேன்.
1999 முதல் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இது பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு கருத்தாடலாகும். அவர்களுடைய அரசியல் அறிவு புலமை, ஞானம், சமயோசிதம், புரிந்துணர்வு, அனுபவம் என்பவற்றுடன் இருந்தது. எனவே அதைச் செய்யத்தான் வேண்டும். இது 19 ஆவது திருத்தம்.
இந்த முறையின் மூலம் இந்நாட்டில் சுதந்திரமான ஜனநாயகத்தை நாகரீகமான சமுதாயமொன்றை உருவாக்க ஏகாதிபத்தியவாதிகள் உருவாவதைத் தடுப்பதற்கு அரச அதிகாரம், அரச சொத்துக்கள், நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகிய அனைத்தையும் தமது தனி அதிகாரத்திற்குள் வைத்திருக்க முடியும். இதை உடனே மாற்ற வேண்டும். கடந்த மூன்று மாத காலப்பகுதியில் உலகத் தலைவர் இவ்விதமான அதிகாரம் இருக்கின்ற பதவிக்கு வந்து தமது கையில் இருக்கின்ற இந்தளவு அதிகாரத்தை கைவிடுவதற்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பார்கள் என்பதை நான் கேள்விப்பட்டதில்லை.

அரச சட்ட மா அதிபர் உயர் நீதி மன்றத்திற்குச் சென்று எனது அறிவுறுத்தல்களின் பிரகாரம் இந்த அதிகாரங்களை நீக்கும்படி சொன்னார். என்னுடைய தனிப்பட்ட அரசியல் அமைப்பு தொடர்பான ஆலோசகர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று அதிகாரங்களை நீக்கும்படி கூறினார். நாம் அதுபற்றி அரசியல் தீர்வொன்றை வழங்கி இருந்தோம். உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது. அதற்கப்பால் நாம் செல்ல முடியாது. அதனால் பாராளுமன்றத்திற்கு இந்த 19வது திருத்தத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தற்பொழுது கடந்த சில தினங்களில் சிற்சில இடையூறுகள் ஏற்பட்டன. நான் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அன்பான கெளரவ மக்கள் பிரநிதிகளே, அமைச்சர்களே உங்களிடம் மிக கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.
இதற்கு கட்சியின் வாக்கை பயன்படுத்துவது வரலாற்று ரீதியாக உங்களுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு விடயமாகும். மக்களின் சுதந்திரம், சனநாயகம், நாகரீக சமூகம், ஒழுக்கத்தை மதிக்கின்ற பணிவுள்ள ஒரு நாடு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அவ்வனைவரும் இந்த 19வது திருத்தத்தை அங்கீகரிப்பதற்கு தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். நான் மிக கெளரவமாக உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதற்காக உங்களுடைய பெறுமதிமிக்க வாக்கைப் பயன்படுத்தி இந்த நாட்டின் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் உறுதிப்படுத்துகின்ற பணியின் பங்காளர்களாக ஆகும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
19வது திருத்தத்திற்கு அதேபோன்று தேர்தல் முறையை மாற்றுவது என்பது நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய தேர்தல் முறை தொடர்பாக தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து அங்கீகரித்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் இலஞ்ச ஊழல்களை விசாரிப்பதற்கு தற்பொழுது சனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது.
அத்துடன் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சக வாழ்வு நட்புறவு நமது நாட்டின் பெளத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களைப் போன்று இனங்கள் என்ற வகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கியர் ஆகிய அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் ஒற்றுமை, சகோதரத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி சந்தேகம், நம்பிக்கையின்மை, அச்சம் என்பவை இல்லாமல் வாழ்வதற்கு உலகத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மிக உயர்வாக அனுபவிக்கின்ற நாடுகள் எந்தளவுக்கு அந்த நாடுகளில் உள்முகத்தில் பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்கள் இருக்கின்றார்களோ அதேபோன்று நாங்கள் பன்மத சமுதாயத்தை, பல்லினங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமுதாயமாகும்.
இவை அனைத்திலும் எமது சிங்கள பெளத்த மக்களின் வரலாற்று ரீதியான அடிப்படையுடன் அந்த கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் ஏனைய அனைத்து மக்களுக்கு சகோதரத்துவத்துடனும் நட்புறவுடனும் சக வாழ்வுடனும் நீதியான சமூக முறையொன்றில் சந்தேகமும் அவநம்பிக்கையுமின்றி வாழ்வதற்குரிய உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இதற்காக நாம் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்தோம். இனங்களுக்கிடையில் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணி மிக வெற்றிகரமாக செயல்படுகிறது. நாம் அத்துடன் நின்றுவிடவில்லை தேசிய ஒற்றுமை தொடர்பாக நல்லிணக்கம் தொடர்பாக செயலாற்றுவதற்கு செயலகம் ஒன்றை நாம் ஆரம்பித்தோம்.
இந்த நாட்டில் இருக்கின்ற உள்ளக பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவைகள் புரையோடி முப்பது ஆண்டுகளாக நடந்த யுத்தத்தின் விளைவுகளை நாம் மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்காமல் செயலாற்ற வேண்டும். இவற்றை செயற்படுத்துகின்ற போது அந்த அனைத்து மக்களிடையேயும் நட்புறவு இருக்க வேண்டும்.
ஆனால் நான் கவலையோடு சொல்ல வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எமது அரசியல் எதிராளிகள் இணையத்தளங்கள் ஊடாக மற்றும் ஒருசில ஊடகங்கள் ஊடாக உண்மையற்ற பிரசாரங்களைச் செய்து வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளுக்கு காணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களைவிட அதிக உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். முழுமையாகவே இக் கதைகளை தீவிர இனவாதிகள் பரப்புகின்றனர். தயவு செய்து இந்தப் பொய் பிரசாரங்களை உலக மக்களுக்கு வழங்க வேண்டாம்.
வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கையர்களை தவறான முறையில் வழி நடத்துகின்றனர். ஆனால் நாம் மிகத் தெளிவாக சொல்ல வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புப் படை வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல கொழும்பு நகரிலும் தனியார் காணிகளை தமது பயன்பாட்டுக்காக எடுத்தனர்.

அப்படியானால் ஆரம்ப உரிமையாளர்களுக்கு அக்காணிகளை வழங்குவது தவறா? பாதுகாப்புப் படையினருக்கு எந்தவித தாக்கமும் ஏற்படாத வகையில் தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முகாம்கள் எந்தவிதத்திலும் நலிவடையாத வகையில் கொழும்பு கோட்டை, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை சுற்றுவட்டத்தில் எவ்வளவு தனியார் காணிகள் வீடுகள் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்தன. அப்படியானால் அவற்றை நாம் ஆரம்ப உரிமையாளருக்கு கொடுக்கக் கூடாதா? ஆனால் இவற்றை பற்றி தவறான பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள்.
அதனால் நாம் இவ்வனைத்து பிரிவுகள் தொடர்பாக மிகத் தெளிவான கொள்கையில் இருக்கின்றோம். அது மாத்திரமல்ல அரச சொத்துக்களை மீள பெற்றுக்கொள்கின்ற விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. கைமாற்றப்பட்ட அரச சொத்துக்கள் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் வைப்பில் இடப்பட்ட இந்நாட்டுக்குரிய பணம் இவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு உள்ளூர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் அதற்கான ஒத்துழைப்பு பெறப்படுகின்றது.
அதனால் இவ்வனைத்து பிரிவுகள் தொடர்பாகவும் நாம் மிகத் தெளிவாக செயற்படுகின்றோம் என்பதை நான் சொல்ல வேண்டும். இப்பொழுது பாருங்கள் நமது நாட்டின் அபிவிருத்தியின் போது இந்நாட்டுக்கு வருடாந்தம் 400 பில்லியனுக்கு மேற்பட்ட உணவு பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. அப்படியானால் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோமா? பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்வதில் பாதைகளையும் கட்டிடங்களையும் அமைத்தால் மாத்திரம் இப்பிரச்சினை தீர்ந்து விடாது. உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். நமது நாடு எவ்வளவு அழகான வனப்புமிக்க சூழலைக் கொண்டுள்ள நாடு. உலகத்தில் உன்னதமான நாடு நமது நாடு.
இந்த நாட்டில் இருக்கின்ற இயற்கை வளங்கள், கால நிலை, எமக்கு பெரும் ஆசீர்வாதமாகும். 400 பில்லியனுக்கு மேற்பட்ட உணவுகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றிய தெளிவான கொள்கையில் நாம் இருக்கின்றோம். உள்ளூர் விவசாயம் விவசாயியின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் போன்று அரச ஊழியர்கள், தொழிலாளர்கள், வேலை செய்கின்ற மக்கள், தனியார் துறை இவ்வனைத்தையும் பலப்படுத்துவதற்கு உரிய வேலைத்திட்டத்தை நாம் படிப்படியாக முன்னெடுப்போம். அதனால் இவ்வனைத்து நடவடிக்கையின் போது இவ்வனைத்து பிரிவுகளையும் கவனத்தில் கொண்டு தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டதைப்போன்று இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல தவறான முறையில் அனுபவிக்காமல் நாட்டின் எதிர்காலத்திற்காக இன்று வாழ்கின்ற மக்களைப் போன்று நாளை பிறக்கப்போகின்ற பிள்ளைகளுக்காகவும் எமது பொறுப்புக்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.
ஊழல்களையும் மோசடிகளையும் குறைப்பதற்காக முழுமையாக ஒழித்து விடுவதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நான் இற்றைவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் எந்தவொரு அதிகாரியுடனும் தொலைபேசி அழைப்பை மேற்கெள்ளவில்லை. எவருடனும் கதைக்கவில்லை. நீதிமன்றத்தில் எவருடனும் நான் தனிப்பட்ட முறையில் கதைக்கவில்லை. அதுதான் நல்லாட்சியில் தேவை. அரச பிரிவு பொது மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
ஜனாதிபதி செயலகத்திற்கு நான் செல்கின்ற போது ஊழியர்களின் எண்ணிக்கை 1575. தற்பொழுது ஊழியர்களின் எண்ணிக்கை 600. 1000 குறைக்கப்பட்டுள்ளது. நாம் அவ்வாறு முன்மாதிரியாக திகழ்கிறோம்.
அதனால் எனது அன்பான மக்களுக்கு நான் மிகவும் கெளரவமாக தெரிவிப்பது என்னவென்றால் தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதியை அதே விதமாக நிறைவேற்றுவதற்கு என்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன். அதேபோல்தான் ஊழலுக்கு, மோசடிக்கு, களவுக்கு, வீண் விரயத்திற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல அடிமைத்தளையை நீக்குவதற்கு சட்டம் கொண்டு வந்த போது சில அடிமைகள் இல்லை. நாம் அடிமைகளாக இருப்பதுதான் நல்லது என்று சொன்னதைப்போல் இந்த ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்த போது சிலர் பொதுமக்களை தவறாக வழி நடத்த முயல்கின்றனர்.
நான் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். மக்கள் சரியானதை தெரிவு செய்வார்கள் என்பதை நான் அறிவேன். நாட்டின் சட்டம் சீர்குலைய இடமளிக்க முடியாது. நான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் முடிவெடுப்பேன். குறிப்பாக மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி ஊழல்களையும் மோசடிகளையும் இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக நான் எடுக்க வேண்டிய, எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். துணிச்சலுடன் தேர்தலில் தோற்றியது உயிரைத் தியாகம் செய்துதான். நானும் என்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையோடு நான் பெருங் கடலில் பாய்ந்துள்ளேன். நான் இன்றும் அப்படித்தான்.
எனவே, நான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் உள்ளது. நல்ல நாகரிகமான சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இவை அனைத்திற்கும் இன்று வாழ்கின்ற மக்களைப் போன்று நாளை பிறக்க இருக்கின்ற பிள்ளைகளுக்காகவும் நீங்களும் நாங்களும் சகோதரத்துவத்துடன் நட்புறவுடன் எமது தாய் நாட்டின் அன்பான மக்களுக்காக முன் செல்வோம்.
தினகரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum