சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Khan11

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Go down

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Empty 35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 7:28

நேபாள நிலநடுக்க அச்சம்

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை


நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம் காரணமாக அச்சமடைந்த 35 இலங்கையர்கள் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று நாடு திரும்பினர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள் மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து நேபாளம் சென்று மீண்டும் நாடு திரும்பிய விமானம் மூலமே 35 இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் 35 இலங்கையர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடபெற்ற விசேட செய்தியாளர் மாநாட் டில் விளக்கமளித்த விமானப் படையினர் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,
மீட்புப் பணிப்பாளர்கள் மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து விமானப் படைக்குச் சொந்தமான சி - 130 ரக விமானம் நேற்றுக் காலை நேபாளம் சென்றடைந்தது. இந்நிலையில், அச்சம் காரணமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள 35 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததால் அவர்களை அழைத்துச் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே நேற்று மீண்டும் நாடு திரும்பிய விமானத்தில் இலங்கையர்களை அழைத்து வர உரிய நடவடிக்கைகளை விமானப் படையினர் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் வாழும் இலங்கையர்களின் நலனை கருத்திற்கொண்டே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை விமானப் படையினர் இந்த சேவையை வழங்கியதாக தெரிவித்த அவர், அங்குள்ள இலங்கையர்கள் மேலும் இவ்வாறு வரவிரும்பும் பட்சத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்தை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அடுத்து சென்று வரும் விமானங்கள் ஊடாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க உரிய சேவை வழங்க விமானப் படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Empty Re: 35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 7:29

அவசர உதவிப் பொருட்களுடன் இலங்கைக் குழு நேபாளம் விரைவு
நேற்றும் நில அதிர்வு

உயிரிழப்பு 2200 ஆக அதிகரிப்பு

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை N1504221
நேபாளத்தை தாக்கிய பயங்கர நில நடுக்கத்தில் 2200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் மற்றொரு மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாக்கிய நில நடுக்கம் நேபாளத்தில் 80 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மோசமான நில நடுக்கமாக பதிவானது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மோசமான ஒரு தொடர் நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் தலை நகர் கத்மண்டுவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கட்டடங்கள் மோசமாக அசைந்து, அல் லாடி, அதிர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அச்சத்தில் பொதுமக்கள் கட்டடங் களைவிட்டு வெளியேறி மைதானங்களை நோக்கி ஓடினர்.
நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, பங்களாதேஷிலும் நேற்றைய நில நடுக்கம் உணரப்பட்டதோடு, எவரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பளிச்சரிவுகளையும் தோற்றுவித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள், மருத்துவர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்கள் பலரும் விமானங்கள் மூலம் நேபாளத்தில் வந்தவண்ணமுள்ளனர்.
உறவுகள் தொடர்புகொள்ள 009779851020057 
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அவசர கூட்டம்

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான இந்தியா மற்றும் சீனா விமானங்களும் கத்மண்டுவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
அடுத்த சில நாட்களுக்குள் நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகள் இன்னும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பல மலைப்பாதைகளும் நிலச்சரிவுகளால் தடைப்பட்டுள்ளன.
தலைநகர் கத்மண்டுவில் மாத்திரம் 700 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதால் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை N1504222கட்டட இடிபாடுகள் மற்றும் சிதைவு களில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்று வதற்கு மீட்பாளர்கள் வெறும் கைகளை பயன்படுத்தியே நேற்றைய தினத்திலும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மத்திய நேபாளத்தில் தலைநகர் கத்மண்டு மற்றும் பொகாரா நகருக்கு இடையில் கடந்த சனிக்கிழமை காலை ரிச்டர் அளவுகோளில் 9.8 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானது. இந்த பகுதியை ஒட்டிய இந்தியா, பங்களாதேஷ், சீனாவின் திபெத் பிராந்தியங்களிலும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ப்பலிகள் இடம்பெற்றன. கடந்த 1934 ஆம் ஆண்டு சுமார் 8,500 பேர் கொல்லப்பட்ட நில நடுக்கத்திற்கு பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மோசமான நில நடுக்கம் இதுவாகும்.
இதேவேளை நேபாளத்தை சனிக்கிழமை காலை உலுக்கிய பாரிய பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் வெளிவிவகார அமைச்சு அதற்கான துரித ஏற்பாடுகளை உடனுக்குடன் முன்னெடுத்து வருகின்றது.
பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள போதும். எந்தவொரு இலங்கையரும் இந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழக்கவோ அல்லது காயங்களுக் குள்ளாகவோ இல்லையென நேபாளத் திலுள்ள இலங்கை தூதுவர் டபிள்யு. எம். செனவிரட்ன ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
இந்த அனர்த்தம் நேபாளத்தின் கத்மண்டுவுக்கும் பொக்ஹாராவுக்கும் இடையிலேயே ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியிலுள்ள மனிப்பால் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 120 இலங்கை மாணவர்களும் கத் மண்டுவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 20 இங்கையர்களும் எவ்வித ஆபத் துக்களுமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு உறுதி செய் துள்ளது.
இதேவேளை, இலங்கையர்கள் நேபாளத்தில் வசிக்கும் தமது உறவுகள் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளும் முகமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் நேபாளத்தி லுள்ள 009779851020057 என்ற விசேட தொலைபேசி இலக்கமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திற்கூடாக தமது உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதனை இலங்கையர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
இலங்கையிலுள்ள நேபாள தூதுவர் மூலமாகவும் அங்கு தேவைப்படும் நிவாரண உதவிகள் தொடர்பான விவகாரங்களை வெளிவிவகார அமைச்சு திரட்டிய வண்ணமுள்ளது.
நேபாளத்தில் முன்னெடுக்கவுள்ள நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகமும் பாதுகாப்பு அமைச்சும் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.
சனிக்கிழமை காலை நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு தேவையான அவசர நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர கூட்டமொன்றை ஜனாதிபதி செயலகத்தில் கூட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் முக்கிய அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு இலங்கையிலுள்ள நேபாள தூதுவரும் கலந்துகொண்டு அங்கு ஏற்பட்டுள்ள உடனடி தேவைகள் குறித்து சுட்டிக் காட்டினார்.
சனிக்கிழமை இரவே இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றினூடாக சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள். சத்திரசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் ஆகியோர் அவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்பு சாதன உபகரணங்கள் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளன. அதனைத் தொடர்ந்து நேற்றுக் காலையும் மேலுமொரு தொகுதி மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இன்னுமொரு விமானம் கத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப் பட்டது.
வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலான ஆழ்ந்த சோகத்தையும் அனுதாபத்தை யும் நேபாளத்திற்கு தெரியப்படுத்தி யுள்ளது.
நேபாளத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்து இலங்கை திரும்ப விரும்புவோர் தொடர்பிலான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Empty Re: 35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 7:30

இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை N1504223நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானப் படைக்குச் சொந்தமான சி - 130 ரக விமானம் காலை 10.30 மணியளவில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு சென்றடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸின் தலைமையில் முப்படைகளைச் சேர்ந்த 156 அதிகாரிகள் மற்றும் வீரர்களை நேபாளத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவற்றில் 131 இராணுவத்தினரும் (12 அதிகாரிகள் 119 வீரர்கள்), 14 கடற்படையினரும் (1 அதிகாரி 13 வீரர்கள்), 11 விமானப் படையினரும் (1 அதிகாரி 10 வீரர்கள்) நான்கு மருத்துவ நிபுணர்களும் அடங்குவர். இவர்களில் முதற்கட்டமாக பெரும் தொகையான நிவாரணப் பொருட்களுடன் முப்படைகளைச் சேர்ந்த ஒரு தொகுதியினரும், நான்கு விசேட மருத்துவ நிபுணர்களும் நேற்று நேபாளத்தைச் சென்றடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நேபாளத்தில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட 7.9 ரிச்டர்
35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை N1504224அளவுடைய பாரிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங் களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக்காலை இடம் பெற்றது.
முப்படைகளின் பேச்சாளர்களும் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ஐயனாத் ஐயவீர மேலும் விளக்கமளிக்கையில்,
நேபாளத்தில் நேற்று முன்தினம் திடீரென் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவுடைய பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் பலியாகியும் மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காயமடைந்தும் உள்ளனர். இந்நிலையில், இலங்கை 1957 ஆம் ஆண்டு தொடக்கம் நேபாளத்துடன் இராஜதந்திர உறவை பேணிவரும் நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான நேபாள துதுவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று முன்தினம் மாலையும் நேற்றுக் காலையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரை யாடல்கள் இடம்பெற்றன.
35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை N1504225இதன்போது அந்நாட்டின் உடனடி தேவையின் நிமிர்த்தம் நிவாரண பொருட்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடன் 156 முப்படை வீரர்களை விசேட விமானம் மூலம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நிவாரண பொருட்களுடன் முதலாவது விமானம் கொழும்பிலிருந்து நேபாளத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றதுடன் காலை 10.30 மணியளவில் கத்மண்டுவை சென்றடைந்தது. மீட்பு பணியாளர்களுடன் 666 கிலோ எடை தண்ணீர் போத்தல்கள், 2 ஜெனரேட்டர்கள், 1882 கிலோ மருந்து வகைகள், 244 கிலோ உலர் உணவு பொதிகள், கூடாரங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பெரும் தொகையான உபகரணங்கள் என்பன கொண்டு செல்லப்பட்டன.
இதுதவிர முப்படையின் மீட்புக் குழுவில் மீட்பு பணிகளுக்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட குழுவினரும் கொமாண்டோ படைப்பிரிவின் பொறியியல் மற்றும் பொறியியல் சேவை படைப்பிரிவினரும் இதில் அடங்குவதாக தெரிவித்தார்.
இதேவேளை, மீட்புப் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைகளின் தளபதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு அனுப்பப்பட்டுள்ள குழுவிற்கு பொறுப்பாக சென்ற மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் விடுக்கும் வேண்டுகோளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், நேபாளத்திற்குச் சென்று மனிதாபிமான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள முப்படையினர் தொடர்ந்தும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான சி - 130 ரக விமானம் முதற் தடவையாகவே கொழும்பிலிருந்து நேபாளம் நோக்கிச் சென்றுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
மேற்படி விமானத்தின் கெப்டனான ஸ்கொட்ரன் லீடர் மஹனாம மற்றும் வின்ங் கொமாண்டர் கிரிஷாந்த ஆகி யோர் 5 மணித்தியால பயணத்திற் குப் பின்னர் நேற்றுக் காலை 10.30 மணியளவில் கத்மண்டுவை சென்ற டைந்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த விமானம் நாடு திரும்பியவுடன் இன்று மீண்டும் புறப்பட்டுச் செல்லவுள்ளது என்றார்.
இதேவேளை, கடற்படையின் குழுவில் மருத்துவர்களும், நிவாரண உதவியாளர்களும் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Empty Re: 35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 7:36

தொண்டர் பணியில் ஈடுபடவிரும்பும் மருத்துவர்கள், தாதியர்களுக்கு அழைப்பு

நேபாள பிரதமருடன் பிரதமர் ரணில் தொலைபேசியில் அனுதாபம்
நேபாளத்தில் இடம்பெற்றிருக்கும் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பிலான ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித் துள்ளார்.
அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ர ¡லாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள நேபாளத்துக்கான தூதுவர் ராம் பரன் யாதவ்வுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த சோகத்தை தெரிவித்துக் கொண்டதுடன், நேபாளத்தின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
நேபாளம் அரசு எதிர்நோக்கியுள்ள தூரதி ஷ்டவசமான நிலைமையில் இலங்கை அரசு நேபாளத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் தொடர்ந்தும் அங்கு உயிருக்கு போராடி வருவதனால் நேபாளத்தில் மருத்துவர்கள், தாதி மற்றும் மருத்துவ உதவியாளர்களின் தேவை அதிகரித் துள்ளது.
நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற விரும்பும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பிரதமர் அலுவலகத்தின் விசேட தொலைபேசி இலக்கமான 0712492484 உடன்  தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினருடன் இணைந்து அந்நாட்டில் மருத்துவக் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர்களும் பாதிக்கப்பட்டோருக்கு சேவையாற்ற வேண்டுமென்றும் பிரதமர் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
நேபாளத்தில் மருத்துவக் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர்கள் இது குறித்து மேலதிக விபரங்களை நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை Empty Re: 35 இலங்கையர்களை விசேட விமானத்தில் அழைத்து வந்தது விமானப்படை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum