Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Yesterday at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
போரை வென்றுவிட்டாலும் சமாதானம் இன்னும் மலரவில்லை
Page 1 of 1
போரை வென்றுவிட்டாலும் சமாதானம் இன்னும் மலரவில்லை
இரு தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டும்
போரை வென்றுவிட்டாலும் சமாதானம் இன்னும் மலரவில்லையுத்தம் வெல்லப்பட்டாலும் இன்னும் சமாதானம் மலரவில்லை. எனவே இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுபட்டுள்ள இந்த வரலாற்றுத் தருணத்திலாவது அதிகாரங்களைப் பகிர்ந்து சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் (25) இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வா நினைவு தின உரை இடம்பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கொழும்புக் கிளையின் தலைவர் தவராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சட்டத்தரணி ராஜேந்திராவும் இங்கு உரை நிகழ்த்தினார்கள்.
இவ் வைபவத்தில் உரையாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்க மேலும் உரையாற்றுகையில்:
நாம் இந்தச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இதுவரைக்கும் எங்களால் அடைய முடியாமல் இருந்த அதிகாரப் பகிர்வை அனைவரும் ஏற்படுத்த வேண்டும். சம உரித்து, சம சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இந்த ஆட்சியின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதன் மூலமாக இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.
போரை மட்டும் நாம் வென்றாலும், சமாதானம் மற்றும் சூபீட்சம் ஏற்படுத்துவதற்கு ஒரு வழியை நாங்கள் ஏற்படுத்துதல் வேண்டும். அதற்கான களநிலவரங்கள் மலர்ந்துள்ளன. அதனை தற்போதைய காலகட்டத்தில் நாம் முயற்சிக்க வேண்டும். இப்பொழுது அவ்வாறானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த நாட்டில் பொருளாதாரம் ஓங்கி வரவேண்டும். ஏழ்மை, வறுமை, கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும்.
தந்தை செல்வா சிறுபான்மையினது. உரிமைகளை வென்றிட பல முயற்சிகளை செய்ததொரு தலைவர் செல்வா - பண்டாரநாயக்கா ஒப்பந்தங்களை அவர் கைச்சாத்திட்டார். தந்தை செல்வாவின் முயற்சிகளை பெளத்தர்கள் சிலர் செய்ய விடாமல் தடுத்தனர்.
1956ஆம் ஆண்டு தனிச் சிங்களம் அரச மொழியாக உருவாக்கப்பட்டது. அதனால் சிறுபான்மை மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இணைப்பு மொழியான ஆங்கிலமும் அதில் இருந்து வெளியே போய்விட்டது. இதன் புறக்கணிப்பு தொடர்ந்து இரு கட்சிகளின் காலத்திலும் நடைபெற்றன. இதனால் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காமல் கட்சிகள் மாறி மாறி தட்டிக் கழித்தன.
நான் 1994ல் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தபோது 23வீத பெளத்த மக்கள் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற நிலையில் இருந்தனர். ஏனைய வீதத்தினர் யுத்தத்தினாலேயே தீர்வு என்ற நிலையில் இருந்தனர். ஆனால் 2 வருடத்திற்குள் “வெண்தாமரை” என்ற இயக்கம் அமைத்தேன். அதனூடாக பெளத்த மக்களிடையே பல அபிப்பிராயங்களை தெரிவித்து அம் மக்களை மாற்றியதனால் 68 வீத பெளத்த மக்கள் பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணமுன்வந்தனர். அரசின் தலைவர்கள் எதையாவது கொடுக்க நினைத்தால் மக்கள் மனதையும் மாற்றி அவர்கள் மனதையும் வென்றெடுக்க வேண்டும். மக்களின் அபிப்பிராயம் மனப்பாங்கு மட்டுமல்லாமல் ஒருவர் மேல் மற்றொருவருக்கு உள்ள சந் தேகத்தையும் பயங்களையும் நாம் மாற்ற வேண்டியதாகவும் இருக்கின்றது.
அரசியல் அதிகாரங்களை மற்ற மக்களும் பயன்படுத்துகின்றபோதுதான் சமாதானம் முழுமை பெறும். எனது காலத்தில் அதிகாரப் பகிர்வு திட்டத்தினை வழங்க முற்பட்டோம். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பக்கமாக எதிர்த்தார்கள். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியினர் அதனை எதிர்தார்கள். இதனால் எனது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் போய்விட்டது எனவும் சந்திரிக்கா அம்மையார் அங்கு உரையாற்றினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?
» சமாதானம்
» சமாதானம் - ஒரு பக்க கதை
» போரை வென்றெடுத்த அரசாங்கத்தினால் ஏன் கிறிஸ் பூதத்தை ஒழிக்க முடியவில்லை – ஜே.வி.பி.
» நாட்டில் சமாதானம் நிலைபெற இறைவனைப் பிரார்த்திப்போம்
» சமாதானம்
» சமாதானம் - ஒரு பக்க கதை
» போரை வென்றெடுத்த அரசாங்கத்தினால் ஏன் கிறிஸ் பூதத்தை ஒழிக்க முடியவில்லை – ஜே.வி.பி.
» நாட்டில் சமாதானம் நிலைபெற இறைவனைப் பிரார்த்திப்போம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum