சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

தாயின் காலடியில் சொர்க்கம் Khan11

தாயின் காலடியில் சொர்க்கம்

3 posters

Go down

தாயின் காலடியில் சொர்க்கம் Empty தாயின் காலடியில் சொர்க்கம்

Post by கமாலுதீன் Sun 10 May 2015 - 7:27

(தி ஹிந்து நாளிதழில் "தக்கலை ஹலிமா" அவர்கள் எழுதிய கட்டுரை)


தாய்மைப் பேற்றின் துடிப்பை, துயரை, அயர்வை திருக்குர்ஆன் தளும்பும் சொற்களால் பதிவுசெய்கிறது. இஸ்லாத்தில் ஒரு தாய் என்பவள் மரியாதைக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியவளாகக் கருதப்படுகிறாள்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தந்தையை இழந்த நபிகள் நாயகத்தின் பிறப்பும் ஆறு வயதில் அன்னையை இழந்து அநாதையாகி அவர், கருணையின் முளைப்பாரியாக கண்விழித்த வாழ்க்கைச் சூழலும் பெண்மை வாழ்க என்று அவரது நபித்துவக் காலம் நெடுகிலும் பேரன்புடன் நினைவுகூரச் செய்தது.

ஒருமுறை நபித் தோழர் ஒருவர் அவரது நன்றிக்கடனுக்கு அருகதையானவர்களை வரிசைப்படுத்திடக் கேட்டு நபிகளின் முன் நின்றபோது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என மூன்று நிலைகளில் தாய், தாய், தாய் என்று கூறி நான்காவதுதான் தந்தை என நபிகள் நாயகம் தெரிவித்தார்.
 
“அவனது அன்னை அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமத்துடன் தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும் அவனைச் சும்பபதற்கும் பால்குடியை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்களாகின்றன” என்கிறது திருக்குர்ஆன்.
 
வேறெவரும் நம்மைச் சுமக்கவில்லை. அவளேதான் கரு சுமந்தாள். வேறொருவர் உணவு தரவில்லை. அவளது உதிரம்தான் நமக்கு அமுதமானது.

சூல்கொண்ட கருவறையில் வேறெவரும் நம்மைப் பாதுகாக்கவில்லை. அவளது வெப்பமும் அவளது செவிப்புலனும் அவளது விழிகளும் அவளது நடையும் அவளது அசைவும், அவளது தசையும் அவளது எலும்பும் அவளது சுவாசமும் தான் நம்மை சிசுவாகக் காத்து வளர்த்தெடுக்கிறது. நாம் பிழைப்பதற்காக அவள் அளைத்திருப்பார்.

“அற்பஜலம் அக்கினியால் அழியாமற் காவல்செய்து

கெற்பமதில் வைத்துருவாய் கிளர்ந்ததற்பின்-மெய்ப்புடனே

தாரணியிலாக்கி யென்னை தான்வளர்த்து காத்தவொரு..”

எனத் தக்கலை பீர்முகம்மது அப்பா என்ற சூஃபிக் கவிஞரிடமிருந்து வீசுதென்றலாக ஒரு வெண்பா வெளிப்படும். இறைவன் நம்மைக் கருவில் முளைக்கவைத்து கற்பத்திலிருந்து இறக்கிவைக்கும்வரை மாதாவின் கருவறையைத்தான் தன் பாதுகாப்புப் பெட்டகமாய் பரிபாலிக்கிறான்.

ஒருவன் அவனது அன்னையைக் கனிவோடும் கண்ணியத்தோடும் நடத்துவதைக் காட்டிலும், அவனை இறைவனது நெருக்கத்துக்கு கொண்டு சேர்க்கின்ற மற்றொரு அறமிருப்பதாக நான் அறிந்ததில்லை” என அண்ணல்நபி தெரிவிக்கிறார்கள்.

செவிலித்தாய் ஹலீமா

நபிகள் நாயகத்தைப் பார்ப்பதற்கு அவருக்கு அமுதூட்டிய செவிலித்தாய் ஹலீமா வரும்போதெல்லாம் தனது மேலங்கியைத் தரையில் விரித்து அதில் அவரை அமரச்செய்து தான் உபசரிப்பார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது.
 
“உயிரைக்காக்கும் உயிரினைச் சேர்க்கும்

உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”

என்று பரவசமாகுவான் பாரதி.
 
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் தனது வயோதிக அன்னையை முதுகில் சுமந்துகொண்டு மக்கா நகரத்தின் புனித ஆலயத்தைச் சுற்றிவந்து ‘தவாப்’ என்ற வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அங்கு வந்த அப்துல்ல இப்னு உமரிடம், தனது அன்னைக்கான நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திவிட்டேனா என்று கேட்டார்.

“நீ குழந்தையாக உன் அன்னையின் கர்ப்பத்தில் இருந்து வெளியேவரும் போது அவள் அனுபவித்த ஒரு நொடி வேதனைக்கு உனது உதவிகள் எதுவும் ஈடாகாது” என்றார்.

இஸ்லாமிய பேரறிஞர் இயாஸ் இப்னு முஆவியா, அவர் தாய் மறைந்த வேளையில் கதறி அழுதார். அவரைப் பார்த்தவர்கள், “இப்படி நீங்களே அழலாமா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நான் சுவனம் செல்வதற்காகத் திறந்திருந்த இரண்டு வாசல்களில் ஒன்று இப்போது அடைபட்டுவிட்டது. அதற்காகத் தான் அழுகிறேன்.” என்றார்.
 
அன்னைக்குப் பணிசெய்வதன் மூலம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தை அடையும் பேறினை அடைவதை திருக்குர்ஆனும் நபிமொழியும் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தாயின் காலடியில் சொர்க்கம் Empty Re: தாயின் காலடியில் சொர்க்கம்

Post by *சம்ஸ் Sun 10 May 2015 - 7:42

அருமையான  பதிவு சார் 

தாயின் மகிமை பற்றி தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாயின் காலடியில் சொர்க்கம் Empty Re: தாயின் காலடியில் சொர்க்கம்

Post by நண்பன் Sun 10 May 2015 - 9:01

அன்னை பற்றிய சிறப்பான ஒரு கட்டுரை பகிர்ந்த உறவுக்கு நன்றிகள் பல 
அன்னைக்குப் பணிசெய்வதன் மூலம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தை அடையும் பேறினை அடைவதை திருக்குர்ஆனும் நபிமொழியும் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.


இறைவன் கடைசி வரை எனக்கும் அந்த பாக்கியத்தைத் தரனும் அன்னையைப் போற்றுவோம் சுவர்க்கம் பெறுவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயின் காலடியில் சொர்க்கம் Empty Re: தாயின் காலடியில் சொர்க்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum