Latest topics
» கதம்பம்by rammalar Yesterday at 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Yesterday at 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Yesterday at 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Yesterday at 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Yesterday at 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Yesterday at 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Yesterday at 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» ஆன்மீக சிந்தனை
by rammalar Sun 26 Mar 2023 - 11:57
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
» சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு
by rammalar Fri 24 Mar 2023 - 13:16
» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
by rammalar Fri 24 Mar 2023 - 13:09
» ஜெயம் ரவியின் 32 வது படம்
by rammalar Fri 24 Mar 2023 - 13:06
» அனுஷ்காவுக்கா மானஸி பாடியி ’நோ நோ’ பாடல்
by rammalar Fri 24 Mar 2023 - 13:03
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 23 Mar 2023 - 20:00
» கொசுவைப்பற்றிய தகவல்கள்
by rammalar Thu 23 Mar 2023 - 19:43
» தினம் ஒரு மூலிகை - காவட்டம் புல்
by rammalar Wed 22 Mar 2023 - 17:17
» படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 22 Mar 2023 - 17:14
படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
3 posters
Page 1 of 1
படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!



டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
1. சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
2. கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.
3. புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
4. பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
5. அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
6. நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
7. ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
8. சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
9. பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
10.சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
11. ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
12. குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
13. யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
14. துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
15. சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.
16. மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.
17. லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
கடைப்பிடிக்க வேண்டியவை
1. படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.
2. உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
3. பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
http://vembady.com/

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
மிக மிக அரிய வகையான மருந்து வகைகள் பாட்டியின் வைத்தியத்தில் பகிர்வுக்கு நன்றி தல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
தோலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ள இயற்கை சிகிச்சை தகவல். பகிர்வுக்கு நன்றி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
நண்பன் wrote:மிக மிக அரிய வகையான மருந்து வகைகள் பாட்டியின் வைத்தியத்தில் பகிர்வுக்கு நன்றி தல
இந்த நோய் வந்தால் சொறிந்து கொண்டே இருக்கும்.ரொம்ப கஷ்டப் படுவார்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|