Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பர்ஸ்... பாதிப்பு!
Page 1 of 1
பர்ஸ்... பாதிப்பு!
நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம்தான் அது. இன்று பாரபட்சமில்லாமல் எல்லோரையும் பாடாகப்படுத்திக் கொண்டிருக்கும்
முதுகுவலிக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் ...அது... பேன்ட் பாக்கெட்டின் பின்னால் பர்ஸ் வைப்பது! பர்ஸ் எப்படி முதுகுவலிக்கு காரணமாகிறது? எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவரான கிருஷ்ணகுமார் விளக்குகிறார்.
‘‘முதுகுவலி வராமல் இருக்க வேண்டுமானால் நிற்பது, நடப்பது, அமர்வது என எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, உட்காரும்போது சரியான முறையில் அமர வேண்டும். பின்பக்கம் முதுகுக்கு சாய்மானம் இருக்க வேண்டும். கைகளை அதற்குரிய இடத்திலும் (Hand rest), கால்களை அதற்குரிய இடத்திலும் (Foot rest) வைக்க வேண்டும். இதுதவிர நாம் அமரும்போது சரிசமமான இடத்தில், சரிசமமான முறையிலேயே அமர வேண்டும். பர்ஸை பின்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு உட்காரும்போது, சமம் இல்லாமல் ஏறுக்கு மாறாக உட்கார்கிறோம்.
அதிலும், இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்ட், பணம் என்று பெரிய லக்கேஜையே ஒவ்வொருவரும் சுமந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்று, தடிமனான பர்ஸ் மேல் உட்காரும்போது நம் முதுகெலும்பின் சமநிலை குறைந்து வளைகிறது. நீண்ட நேரம், நீண்ட நாட்களாக இதே முறையில் அமர்பவர்களுக்கு முதுகில் வளைவு ஏற்படும். நாளடைவில் உட்காரும் க்ளுட்டியல் பகுதியில் (Gluteal region) அதிக அழுத்தம் ஏற்பட்டு சியாட்டிக் (Sciatic) என்ற முக்கிய நரம்பு பாதிப்படையும். இதனால் கால் பகுதி மரத்துப்போவது, குடைவது போன்ற உணர்வுகள் வரும். கால்களில் வலி வருவதும் இதனால்தான். இதையே Sleeping foot என்கிறார்கள். இது உடனடியாக ஏற்படும் பிரச்னை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த இடத்தில் முதுகெலும்பு வளைகிறதோ, அந்த இடத்தில் தேய்மானம் அதிகமாகும். இதனால் முதுகில் உள்ள Sciatica என்ற முதுகெலும்பு நரம்பு பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக காலிலும் முதுகிலும் வலி ஏற்படும். இது முதலில் சொன்ன Sciatic அல்ல. பேன்ட் பாக்கெட்டில் பர்ஸ் வைக்கிற எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வராது. பர்ஸ் மீது யார் உட்கார்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும். இது நாம் அணிகிற பேன்ட்டை பொறுத்தும் மாறும். சாதாரண பேன்ட் அணிகிறவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்னை வருவதில்லை. ஏனெனில், உட்காரும்போது பர்ஸ் கொஞ்சம் நகர்ந்துகொள்ளும். ஆனால், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணியும்போது பர்ஸின் மேலேயே உட்கார வேண்டியிருக்கும்.
கடினத் தன்மை கொண்ட பர்ஸாக இருந்தால் இன்னும் அதிகமான பிரச்னை ஏற்படும். அலுவலகத்தில் அமரும்போது மட்டுமல்ல... பைக் ஓட்டும்போதும் இதைக் கவனிக்க வேண்டும். தான் எதன் மீது உட்கார்ந்திருக்கிறோம் என்பது ஒருவருக்கு நிச்சயம் தெரியும். அதனால், பர்ஸில் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தால் அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். பர்ஸை முன் பாக்கெட்டில் வைப்பது இன்னும் சிறந்த வழி!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3695

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பர்ஸ் பறிகொடுத்து கன்னத்துல அடி வாங்கினாயா..ஏன்?
» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
» புற்றுநோய் பாதிப்பு குறைய
» இயல்புநிலை பாதிப்பு
» வெள்ளத்தின் பாதிப்பு
» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
» புற்றுநோய் பாதிப்பு குறைய
» இயல்புநிலை பாதிப்பு
» வெள்ளத்தின் பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum