Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Page 1 of 1
கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
உலகளவில் சர்க்கரை நோய் பாதிப்பை அடுத்து கொலஸ்டிரால் எனும் கொழுப்பு நோய் பாதிப்பு அதிகம் காணப்படுவது இந்தியாவில் தான். சர்க்கரை நோய் வந்து விட்டாலே அதன் உடன் பிறப்புகளான ரத்த அழுத்தம் (பிரஷர்), கொழுப்பு (கொலஸ்டிரால்) போன்றவையும் பின் தொடர்ந்து வருகின்றன. இதனை கவனிக்காமல் விட்டால் இதயம், மூளை முதல் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும். தற்போதைய நமது உணவுபழக்கம், மது மற்றும் புகை, உடற்பயிற்சி இன்மை போன்றவை இந்நோய்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. கொலஸ்டிரால் பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் மைலாடியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லாசரோன் கூறியதாவது:
கொழுப்பு என்றால் என்ன?
கொழுப்பு என்பது ரத்த நாளங்களில் படிந்து அதன் சுற்றளவை குறைத்து அடைப்பு ஏற்படுத்தி இறுதியில் இதயத்தின் செயலுக்கு ஊறு விளைவிக்கும் துகள்கள் ஆகும். நம் உணவு பழக்கத்தின் வேதியியல் மாற்றத்தில் நிகழும் இதனை நமது ஈரல் 75 சதவீதம் உற்பத்தி செய்கிறது. 25 சதவீதம் உணவின் மூலம் சாதாரணமாக பெறுகின்ற நல்லது
உடலுக்கு தேவையாகவும், எஞ்சிய நிலையில் இதன் துகள்கள் உடல் முழுவதும் உள்ள செயல்பாடுகளுக்கு கேடும் விளைவிக்கிறது.
அறிகுறி
கொழுப்பு அதிகமாக உடலில் தங்கும் போது உடனடியாக வெளிக்காட்டாது. ஆனால் உடலில் ஆழமான உறுப்புகளில் இதன் தாக்கம் இருக்கும். அதிகமாக படிவதால் சுத்த ரத்த தமனிகளில் (artery) அடைப்பு ஏற்படுத்தும் நிலையை அத்ரோஸ் கிளோரிஸ் என்கிறோம். இது இதய நோய்க் குரிய அச்சுறுத்தும் அறிகுறி.
ரத்த பரிசோதனை
கொழுப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய ரத்த பரிசோதனைகள் அவசியம். 20 வயதிற்கு மேல் 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரத்தத்தில் கொழுப்பு அளவை பரிசோதிப்பது நல்லது. காலையில் உணவு அருந்தும் முன்பு லிப்போ புரோட்டின் புரோபைல் எனும் சோதனையை செய்ய வேண்டும். இதன் மூலம் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் டிரைக்கிளிஸ் (triglycericles) அளவுகளை கணக்கிட முடியும்.
கெட்ட கொழுப்பு என்றால் என்ன?
எல். டி. எல் எனும் (லோடென்சிட்டி லிப்போபுரோட்டின்ஸ்) கெட்ட கொழுப்பு ரத்தத்தில் பயணித்து மற்ற புரதங்களுடன் சேர்ந்து தமனிகளை அடைக்கும். உணவில் உள்ள பூரணகொழுப்பு (ssturatedfat) இதற்கு மூல காரணம். கெட்ட கொழுப்பு 100 க்கு குறைவாக இருந்தால் ஆரோக்கியம் .100-120 வரை இருந்தால் ஆரோக்கியத்தின் அருகில் இருக்கிறோம். 130-159 வரம்பு அல்லது நடுநிலை. 160-189 இருந்தால் அதிகம். 190க்கு மேல் இருந்தால் மிக அதிகம்.
நல்ல கொழுப்பு என்றால் என்ன?
நல்ல கொழுப்பு ஹெச்.டி.எல் (ஹைடென் சிட்டி லிப்போ புரோட்டின்) எனப்படும். ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பு படிவங்களை தடுக்கிறது. இதன் அளவு அதிகமாக இருப்பது நல்லது. இதன் அளவு குறையும் போது இதய நோய்க்கு வழி வகுக்கும். ஆலிவ் எண்ணை இதனை அதிகரிக்க செய்கிறது. நல்ல கொழுப்பு 60க்கு மேல் இருந்தால் ஆரோக்கியம். 40க்கு கீழ் ஆண்களுக்கு இருக்கக்கூடாது. 50க்கு கீழ் பெண்களுக்கு இருக்கக்கூடாது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
டிரை கிளிசரீஸ்
உடலில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹால் டிரை கிளிசரீசாக மாற்றப்பட்டு கொழுப்பு வடிவில் உடலில் சேர்கிறது. பெரும்பாலும் மதுபானம் அருந்துவோர் புகைப் பிடிப்பவர்களுக்கு, அதிக எடை உடையவர்களுக்கு இது அதிகம் உள்ளது. இதன் அளவு 150 க்கு அதிகமாக இருந்தால் உடலில் செயல்பாடுகள் பாதிப்பால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வரும்.
டோட்டல் கொலஸ்டிரால்
எல். டி. எல்., ஹெச். டி. எல்., வி. எல். டி. எல் சேர்ந்த நிலையை டோட்டல் கொலஸ்டிரால் எனச் சொல்கிறோம். இதன் அளவு 200க்கு குறைவாக இருப்பது நல்லது. 200க்கு மேல் இருந்தால் இதயநோய் வரும். உணவும் , ஈஸ்ட்ரோஜனும் பால், முட்டை, இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகம் உள்ளவை. தினசரி மனிதனுக்கு 300 கிராம் கொழுப்பு போதும். ஒரு முட்டையில் 186 கிராம் கொழுப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடர் கொழுப்பு, பரம்பரையாக கொழுப்பு நோய் இருந்தாலும், அதிக உடல் எடை உடையவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
அதிக கொழுப்பின் விளைவுகள் பக்கவாதம், இதயநோய், கோரோநெரி ஆர்டரி நோய் வரும். சீராகரத்தம் இதயம் மற்றும் மூளைக்கு போகாத பட்சத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்
கரையும் தன்மையுள்ள நார்சத்து உணவுகள் கெட்ட கொழுப்பை குறைக்கும். தானிய வகைகள், ஓட்ஸ், பழங்கள், காய்ந்த கனிகள் (உலர் பழங்கள்) காய்கறிகள், ஓமோகா 3 போன்றவற்றில் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
நல்ல கொழுப்பை அதிகரிக்க
நல்ல மூச்சு பயிற்சி மூலம் 5 சதவீதம் நல்ல கொழுப்பை பெற முடியும். முறையான உடற்பயிற்சியான நீச்சல், நடை, ஓட்டம் 30 நிமிடங்கள் செய்வதாலும் கெட்ட கொலஸ்டிரால் குறையும்.
துணை உணவுகள்
ஆளி விதை, மீன் எண்ணெய், வெந்தயம், பிகாம் போஸ் விட்டமின், கடுக்காய், ஓட்ஸ் போன்றவற்றை உணவுடன் உட்கொள்ள வேண்டும். ரெட் ஒயின், கிரீன் டீ, பீன்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய் போன்றவையும் உட்கொள்ளலாம். மல்லி தூளை கொதிக்க வைத்த நீர், அல்லது 2 சுட்ட வெள்ளை பூண்டு, காட்டு நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், தேன், மீன் எண்ணெய், சம்பா அரிசி, ஆலிவ் எண்ணெய். பீன்ஸ், ஆப்பிள் சீடர் வினிகர் 2 கரண்டி கலந்து சாப்பிடலாம்.
எளிய முறைகள்
*சீரான உணவு, நீர் உட்கொள்ளுதல், உள்ளங்கை அளவு மாமிச, மீன் , அரிசி உட்கொள்ளலாம்.
*மன அழுத்தம் இல்லாமல் அமைதி , தியானத்தை கடைபிடிக்கலாம்.
வீட்டு வைத்தியம்
வெள்ளை பூண்டு, மஞ்சள், இஞ்சி, வால் மிளகு, நல்ல மிளகு கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மருதம் பட்டை, வெங்காயம் கெட்ட கொழுப்பை மாற்றி நல்ல கொழுப்பிற்கு உதவுகிறது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3722

Permissions in this forum:
You cannot reply to topics in this forum