Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
4 posters
Page 1 of 1
மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
பாகுபலி படம் பார்த்தாச்சு... வரலாற்றில் நிகழ்ந்தது போல் அரச பரம்பரை, வஞ்சகம், சூழ்ச்சி என எல்லாம் கலந்து மகிழ்மதி என்ற நகரத்தை கற்பனையில் உருவாக்கி பாடம் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் அருவியின் கீழே இருக்கும் நாயகன் மேலே இருக்கும் நகருக்கு ஏற முயற்சிப்பதையும் பின்னர் அங்கு செல்வதையும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல் காட்டியிருக்கிறார்கள். நாயகன் பறந்து பறந்து செல்லும் போது இதெல்லாம் எங்க தளபதி குருவியில பறந்து பறந்து பண்ணிட்டாரேன்னு சொல்லத் தோணுச்சு. வரலாற்றுக் கதை என்றாலும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து டூயட் பாடல்களையும் இணைத்திருக்கிறார்கள். கேமரா மிக அருமை... காட்சிகளை அழகாக தனக்குள் வாங்கிக் கொண்டிருக்கிறது. கிராபிக்ஸ் கலக்கல்... போர்க்களக் காட்சிகள் மிக நேர்த்தி...
சத்யராஜ், பிரபாஸ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என நடிகர்கள் தங்களது தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். தமனாவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் முதல் முறை பார்ப்பதால் கொஞ்ச நேரத்துக்கு மனதில் ஒட்டவில்லை. அனுஷ்கா இரும்புச் சங்கிலிக்குள் சிரிக்கிறார். நடிக்க வாய்ப்பில்லை... இரண்டாம் பாதியில் இவர்தான் நாயகி... அதில் சிறப்பாக செய்வார் என்று நம்பலாம். இயக்குநர் ராஜமௌலி மிகச் சாதாரண ஒரு படத்தை கிராபிக்ஸ் மற்றும் அரண்மனை செட்களை வைத்து பிரமாண்டமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். பாகுபலி கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் என்பதே என் கருத்து.
*************
மாரியும் பாத்தாச்சு... செஞ்சுடுவேன்னு சொல்லியே உக்காரவச்சி கழுத்தறுக்கிறானுங்க... தனுஷின் நடிப்பு மற்றும் ரோபோ சங்கரின் காமெடி இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. என் நண்பர் ஒருவர் இவனெல்லாம் ஒரு ரவுடியா... அதுக்குன்னு ஒரு உடம்பு வேண்டாமா என்றார். உண்மைதான்... ஆனா ரவுடியின்னா உடம்பு இருக்கணுமின்னு சட்டமா என்ன.. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறவென்னால் சுள்ளான் மாதிரித்தான் இருப்பானுங்க... தனுஷின் நடிப்பு செம... கலக்கல் காமெடி... இப்படி இரண்டும் இருந்தும் புறா பந்தயம் விடும் சொதப்பலான... அரதப்பழசான கதை மாரியை மண்ணைக் கவ்வ வைத்து விட்டது. காஜல் சும்மா வந்து போகுது... அனிருத் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்காரு... ஆனா தனுஷ் வரும்போதெல்லாம் எதுக்கு இவ்வளவு பில்டப்புன்னுதான் தெரியலை... மாரி தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடி... மற்றவர்களுக்கு மழையில் நனைந்த புஸ்வானம்...
*************
எனது முதல் தொடர்கதையான கலையாத கனவுகளை சேனைத் தமிழ் உலா நிஷா அக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் அங்கு பதிந்து வருகிறேன். அந்தக் கதையை இதுவரை படிக்காத எனது நட்புக்கள் அங்கு படித்து கருத்திட்டால் எனது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். முதன் முதலாக எழுதிய தொடர்கதை அது... மனசு வலையில் 80 வாரங்கள் எழுதினேன்... அப்போது அதிக வரவேற்ப்பு அதற்கு இல்லை என்பதை அறிவேன். வாசித்தவர்கள் நூறுக்கு மேல் இருந்தாலும் கருத்து ஒன்று இரண்டை தாண்டுவதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் கிடைக்கும் உண்மையான கருத்துக்களே அடுத்து வரும் பதிவுகளை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டும். அந்த வகையில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாவது தொடர்கதையான வேரும் விழுதுகளுக்கும் பிரபலங்கள் பலரும் வாசித்து கருத்துச் சொல்லும் போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றுவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதை புத்தகமாக கொண்டு வர வேறு சில நண்பர்கள் சொல்கிறார்கள்... அடபோங்கப்பா சிறுகதையை புத்தகமாக்க நினைத்து ரெண்டாண்டுக்கு மேல் ஓடிப்போச்சுன்னு சொல்லி சிரிக்கத்தான் முடிகிறது. சரிங்க... சேனைத் தமிழ் உலாவில் தொடர்கதை படிக்க நினைத்தால்...
இங்கே சொடுக்கிப் படியுங்கள். தவறாமல் தங்கள் கருத்தையும் சொல்ல மறக்காதீங்க...
*************
கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு என்பதால் அலுவலக பணி நேரமும் குறைவு... வேலையும் அதிகமில்லை... இன்று மறுபடியும் பழைய வேலை நேரம்... ஒன்பது மணி நேரம் சும்மா கொன்னு எடுத்துப்புட்டானுங்கல்ல... அறைக்கு வந்ததும் எப்படா படுப்போம்ன்னு வந்திருச்சு... அறையில் நண்பரிடம் ரொம்ப டயர்டா இருக்குன்னு சொன்னப்போ அவரு கொஞ்சம் போட்டா போதுமாங்க... சும்மா கும்முன்னு இருக்குமாம்... வாங்கிருவமா என்றார் சிரித்துக் கொண்டே. ஆமாய்யா இன்னைக்கு உடம்பு வலிக்கிதுன்னு கொஞ்சம் போடச்சொல்லும்... அப்புறம் தினம் கேக்கும்... கொஞ்ச நாள்ல அது இல்லேன்னா தூக்கம் வரலைன்னு சொல்லச் சொல்லும்... அப்புறம் அதுதான் வாழ்க்கையாகும்... அப்படியே போய்ச் சேர வேண்டியதுதான் என்று சொன்னதும் இப்ப என்ன சொல்லிப்புட்டேன்னு இம்புட்டுக் கதை என்று சிரித்தாரே பார்க்கலாம்... இனி தண்ணியடிப்போமான்னு கேப்பாருங்கிறீங்க...
*************
சனிக்கிழமை அன்று என்றும் இல்லாத திருநாளா பத்து நிமிஷம் ஒழுங்கா பேசாத விஷால், ரொம்ப நேரம் என்னுடன் ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தான். உங்க பேரை குமாரசாமியின்னு எழுதி வச்சிருக்கேன்... ஸ்பெல்லிங் சொல்லுங்க பாப்போம் என்றான். குமாரசாமிதான் நமக்கு வச்ச பேரு... ஆனா பள்ளியில் சேர்க்கும் போது அம்மா அழகா இருக்கட்டுமேன்னு குமார்ன்னு சுருக்கிட்டாங்க... அதை அவனிடம் அம்மா ஒரு முறை சொன்னதில் இருந்து எப்போதாவது தோணினால் குமாரசாமியின்னு கூப்பிடுவான். சரியின்னு நான் K...U...M...A...R என ஒவ்வொரு எழுத்தா சொன்னதும் குமார் என்று சொன்னவனிடம் சாமிக்கு... என்று ஆரம்பிக்க அதுதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்லிட்டு குமாருக்குப் பக்கத்துல KUMAR கூட GOD சேர்த்தா KUMARGOD, குமாரசாமி ஆயிடும்ல்ல என்றானே பார்க்கலாம். என்னமா இப்படிப் பண்றீங்களேம்மான்னு புல்லரிச்சிப் போச்சு போங்க...
*************
இருங்க... இருங்க... அப்படியே இந்த தப்பாட்டத்தையும் பார்த்து கேட்டு ரசிச்சிட்டுப் போங்க... மனசுக்கு இதமாவும் சந்தோஷமாவும் இருக்கும்ல்ல....
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
ஓ
சினிமாவை இப்படி அலசுவதே ஒரு தனி சிறப்பு
அப்படி ஆராய்ந்து இருகிறீர்கள் அருமை அருமை
வாழ்த்துகள்
சினிமாவை இப்படி அலசுவதே ஒரு தனி சிறப்பு
அப்படி ஆராய்ந்து இருகிறீர்கள் அருமை அருமை
வாழ்த்துகள்
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
குமாருடன் கோட் சேர்த்தால் குமார சாமியா? அறிவுக்கொழுந்துப்பா விஷால்! என் பாராட்டையும் சொல்லிருங்க!
தப்பாட்டம் பார்க்க சொன்னால் போதுமோ? இணைப்பு எங்கேயாம்?
பாகுபலி விமர்சனம் சூப்பர்? படம் பார்க்காதோரையும் பார்க்க வைக்கும் விமர்சனம்!
தனுஷுக்கு வில்லன் ரோலும் பொருந்தும்ங்கறிங்க.. எனக்கு என்னமோ திருடா திருடி போன்ற கதைக்கு தான் அவர் உடல் வாகு லாயக்கு என தோணுது! என்ன இருந்து என்னப்பா... ரஜனி மகளே இந்த ஒல்லி உடம்பை கண்டு மயங்கி காதலித்து கல்யாணமும் கட்டிகிட்ட பின் எல்லாம் பொருந்தும் என எடுத்துக்கணுமாக்கும்!
கலையாத கனவுகள் தொடருக்கும் சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பரத்துக்கும் நன்றி.
விளம்பரத்துக்குரிய கமிஷனை நம்ம சம்ஸும், நண்பன் தும்பியாரும் சீக்கிரம் அனுப்பி வைக்கணும் என நான் சிபாரிசு செய்திட்டேனாக்கும்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
பாகுபலி திரைவிமர்சனம் அருமை ஒவ்வெரு ரோலும் எப்படி என்று அசத்தலாக சொன்ன விதம் பாராட்டதக்கது.
சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பர கமிஷனை நிஷா அவர்கள் அனுப்பிவைப்பார்.
சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பர கமிஷனை நிஷா அவர்கள் அனுப்பிவைப்பார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
Nisha wrote:குமாருடன் கோட் சேர்த்தால் குமார சாமியா? அறிவுக்கொழுந்துப்பா விஷால்! என் பாராட்டையும் சொல்லிருங்க!
தப்பாட்டம் பார்க்க சொன்னால் போதுமோ? இணைப்பு எங்கேயாம்?
பாகுபலி விமர்சனம் சூப்பர்? படம் பார்க்காதோரையும் பார்க்க வைக்கும் விமர்சனம்!
தனுஷுக்கு வில்லன் ரோலும் பொருந்தும்ங்கறிங்க.. எனக்கு என்னமோ திருடா திருடி போன்ற கதைக்கு தான் அவர் உடல் வாகு லாயக்கு என தோணுது! என்ன இருந்து என்னப்பா... ரஜனி மகளே இந்த ஒல்லி உடம்பை கண்டு மயங்கி காதலித்து கல்யாணமும் கட்டிகிட்ட பின் எல்லாம் பொருந்தும் என எடுத்துக்கணுமாக்கும்!
கலையாத கனவுகள் தொடருக்கும் சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பரத்துக்கும் நன்றி.
விளம்பரத்துக்குரிய கமிஷனை நம்ம சம்ஸும், நண்பன் தும்பியாரும் சீக்கிரம் அனுப்பி வைக்கணும் என நான் சிபாரிசு செய்திட்டேனாக்கும்.!
கமிஷனை யாருக்கு அனுப்பி வைக்கவேண்டும் மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
நன்றி கவிஞரே.கவிப்புயல் இனியவன் wrote:ஓ
சினிமாவை இப்படி அலசுவதே ஒரு தனி சிறப்பு
அப்படி ஆராய்ந்து இருகிறீர்கள் அருமை அருமை
வாழ்த்துகள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
Nisha wrote:குமாருடன் கோட் சேர்த்தால் குமார சாமியா? அறிவுக்கொழுந்துப்பா விஷால்! என் பாராட்டையும் சொல்லிருங்க!
தப்பாட்டம் பார்க்க சொன்னால் போதுமோ? இணைப்பு எங்கேயாம்?
பாகுபலி விமர்சனம் சூப்பர்? படம் பார்க்காதோரையும் பார்க்க வைக்கும் விமர்சனம்!
தனுஷுக்கு வில்லன் ரோலும் பொருந்தும்ங்கறிங்க.. எனக்கு என்னமோ திருடா திருடி போன்ற கதைக்கு தான் அவர் உடல் வாகு லாயக்கு என தோணுது! என்ன இருந்து என்னப்பா... ரஜனி மகளே இந்த ஒல்லி உடம்பை கண்டு மயங்கி காதலித்து கல்யாணமும் கட்டிகிட்ட பின் எல்லாம் பொருந்தும் என எடுத்துக்கணுமாக்கும்!
கலையாத கனவுகள் தொடருக்கும் சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பரத்துக்கும் நன்றி.
விளம்பரத்துக்குரிய கமிஷனை நம்ம சம்ஸும், நண்பன் தும்பியாரும் சீக்கிரம் அனுப்பி வைக்கணும் என நான் சிபாரிசு செய்திட்டேனாக்கும்.!
கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன் அக்கா...
அப்படியே எனக்கும் ஒரு விளம்பரம் என்பதால் விளம்பரம் இலவசம் அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
கருத்துக்கு நன்றி அண்ணா...*சம்ஸ் wrote:பாகுபலி திரைவிமர்சனம் அருமை ஒவ்வெரு ரோலும் எப்படி என்று அசத்தலாக சொன்ன விதம் பாராட்டதக்கது.
சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பர கமிஷனை நிஷா அவர்கள் அனுப்பிவைப்பார்.
இலவசம் என்று சொல்லியாச்சு அண்ணா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
சே.குமார் wrote:கருத்துக்கு நன்றி அண்ணா...*சம்ஸ் wrote:பாகுபலி திரைவிமர்சனம் அருமை ஒவ்வெரு ரோலும் எப்படி என்று அசத்தலாக சொன்ன விதம் பாராட்டதக்கது.
சேனைத்தமிழ் உலாவுக்கான விளம்பர கமிஷனை நிஷா அவர்கள் அனுப்பிவைப்பார்.
இலவசம் என்று சொல்லியாச்சு அண்ணா...
அண்ணேனா?? சரியாப் போச்சு போங்க..!! நான் தான் உங்கள அப்டி கூப்பிட வேண்டியிருக்கும்.. ரொம்ப சின்னப்பையன் நானு..!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
ஆமாமா குமார். எனக்கே தாத்தா அவர். நீங்க அண்ணானு சொல்லக்கூடாது. தாத்தானு அழைக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
ஹலோ மேடம் உங்களுக்கு அதிகம் தான் கொழுப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
என்னாது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
என்னாச்சி மேடதிற்கு கோபம் வந்திருச்சு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
நான் ஐஸ்கிரிம் சாப்பிடுவதில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
Nisha wrote:நான் ஐஸ்கிரிம் சாப்பிடுவதில்லை!
எனக்கு மழையில் நனையும் போது ஐஸ்கிரிம் சாப்பிடனும் அது ரெம்ப பிடிக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
அது சரி. மழையில் நனைந்து தலை இடி வந்தால் தாங்காதுப்பா. மழை பிடிக்கும் , அதில் நனைந்தால் தலையிடியும் பிடிக்கும் என்பதால் நனையப்பிடிக்காது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...
இஸ்டப் பட்டு கஷ்டப் படுவது ஒரு சுகம் அது தனி சுகம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum