சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Khan11

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

+3
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
7 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் Mon 27 Jul 2015 - 20:13

First topic message reminder :

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11223738_579090635562907_5241134336992629826_n

அப்துல்கலாமின் பெருமைகள்:
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 10:47

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11265002_816407218471952_226605313468163128_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 10:47

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11250149_816407341805273_1739336289757057186_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 10:50

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11822277_513872925434132_5163724526761770752_n
எல்லாம் வல்ல அல்லாஹ் 
A.P.J அவர்களின் குற்றங்களை மன்னித்து அவர்களின் இறுதி முடிவை அல்லாஹ் பொருந்திக்கொண்டதாக ஆக்கி அவர்களின் மன்னறையை சுவர்க்ப்பூங்காவாக ஆக்குவானாக
மேலும் அவரின் என்னம் போல் நம்பாரத திருநாட்டை நேசித்து தாய் நாட்டிற்காக உழைக்கும் பல இளைஞர்களை அல்லாஹ் உண்டாக்குவானாக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:44



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:46

 ”யாதும் ஊரே யாவரும் கேளிர் ” 


அருமையான விளக்கம் சொன்னார்  சலூட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 15:58

ஐயா அப்துல் கலாம் அவர்களின் வாழ்விலிருந்து அனைத்து அரசியல் வாதிகளும் உயர் பதவி வகிப்பவர்களும் கற்று கொள்ள வேண்டிய கட்டாய பாடம்.( Rest in Peace sir,,, Dr. Abdul kalam( We all miss u sir,)

Posted by Yo Yogan on Monday, July 27, 2015



ஐயா அப்துல் கலாம் அவர்களின் வாழ்விலிருந்து அனைத்து அரசியல் வாதிகளும் உயர் பதவி வகிப்பவர்களும் கற்று கொள்ள வேண்டிய கட்டாய பாடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jul 2015 - 8:18

*சம்ஸ் wrote:ஐயா அப்துல் கலாம் அவர்களின் வாழ்விலிருந்து அனைத்து அரசியல் வாதிகளும் உயர் பதவி வகிப்பவர்களும் கற்று கொள்ள வேண்டிய கட்டாய பாடம்.
உண்மை உண்மை 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 21:59

இப்படி ஒரு ஜனாதிபதி இனிமேல் கிடைப்பாரா...: எளிமையின் மறுபெயராக விளங்கியவர்...
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025841529_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_02585934_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025903520_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025909895_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025914191_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025918617_1305695
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025922707_1305695

 எளிமை என்பதற்கு ஏராளமானோர் விளக்கம் தந்திருக்கின்றனர். 'எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டுமோ, அதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்' என்றார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
'உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்' என்றார்பிரமாண்டங்களைப் படைத்த
இத் தாலியின் லியனார்டோ டாவின்சி. 'ஆழ்ந்த சிந்தனையின்விளைவாக இயற்கையிலேயே எழுகிற குணாதிசயம்தான் எளிமை' என்றார் வில்லியம் ஹாஸ்லிட் என்ற தத்துவ ஞானி.
இதுபோன்று எளிமைக்குஎத்தனையோ பேர் எத்தனையோவிதங்களில் விளக்க முயன்றிருக்
கிறார்கள். ஆனால், நாடு பேதமில்லாமல் தற்போது உலகில் வாழும் அனைத்து தலைவர்களுக்கும், சிறந்த முன்னுதாரணமான எளிமைவாதியை பார்க்க முடியும் என்றால் அவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.


அறிஞர்களும் நிபுணர்களும் ஆழ்ந்து சிந்தித்து விளக்கம் கூறிய எளிமையை வாழ்வில் கடைப்பிடித்த மகான் அவர். யாரும் எளிமையாக வாழ்ந்துவிடலாம். ஆனால், பதவியிலும் அதிகாரத்திலும் உள்ள ஒருவர் எளிமையை கடைப்பிடிப்பது அபூர்வம்.அந்த குணத்தைக்கொண்டவர்தான் கலாம்.தாய்நாடு முன்னேற வேண்டும் என்று எல்லா இந்தியர்களும் நினைப்பார்கள். ஆனால் கலாம் போல் ஒவ்வொரு உழைப்பிலும் தாய்நாட்டு சிந்தனை கொண்டு உழைப்பவர்கள் அரிது.
அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள்தான்தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில், தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக் கொண்டுஉலகத்தரத்துக்கு இந்தியாஉயர்வதற்கு வழிகாட்டியவர். அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர், 'ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம்' என்று கூறக் கேட்டிருக்கிறோம்.


வியப்பு :


1987--88ம் ஆண்டுகளில்கனடாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி, எம். வித்யாசாகர், தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார், 'அப்துல் கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம்.வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும்பணிபுரிந்தார்கள். வேறு எங்கும் இதைக் காண முடியாது' என்று வியந்து கூறினார்.அப்போது அப்துல் கலாம்,இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வது 'புதிய ஸ்டைலாக' இருக்கிறதோ என்று கேட்டபோது, 'நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை. வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.


அறிவியல் ஆசான்:


இது விண்வெளி அறிவியலுக்கு எவ்வளவு பொருத்தமானது. முயற்சிகள் தோல்வி அடையும் போது, அதையே அடுத்த முறை வெற்றியாக மாற்றிக் காட்டும் வாய்ப்பு கலாம் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு கிடைத்தது. செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டான எஸ்.எல்.வி.யின் முதல் பரிசோதனை தோல்வியில் முடிந்தது. ஆனால், அதற்கடுத்த ராக்கெட் வெற்றியுடன் சீறிப் பறந்தது. விண்வெளியை ஆளும் சக்தி படைத்த உலக நாடுகளின் வரைபடத்தில் இந்தியாவும் இடம்பெற்றது.இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கு விதைபோடும் விஞ்ஞானி வந்துவிட்டார் என்று அவரைக் கொல்ல வெளிநாட்டு சதிகள் வரலாம் என்பதற்காக, இந்திய அரசு பாதுகாப்பு அளித்தது. அவர் இரவு 10.30 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பாதுகாவலர்கள் பின் தொடர்ந்தார்கள். ஆனால்அவர்களிடம் கூட, நான் என்நண்பருடன்தானே நடக்கிறேன். நீங்கள் திரும்பிப் போங்கள் என்று கூறிவிடுவார்.டி.ஆர்.டி.ஓ., தலைமைப் பதவிக்கு போது, அதுவரை இருந்த நடைமுறைகள் எல்லாம் தலைகீழாக மாறின. எது தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தஊழியர்கள் அதிகாரிகளுக்கு செயல்முறை வழி பயிற்சி எளிமையாக அளிக்கப்பட்டது. இதனால் பலர் பணிகளை விரும்பிச் செய்யும் சூழல் ஏற்பட்டது. அன்று எஸ்.எல்.வி.,யில் தொடங்கி இன்று ஜி.எஸ்.எல்.வி., வரைஇந்தியாவின் வெற்றிக்கதை தொடர்ந்ததற்கு அடிப்படைக்காரணம் இவரதுஒருங்கிணைப்புத் திறன்தான்.
'ஏவுகணைகளின் தந்தை' என்று இவர் அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் தான்.அவருடன் பணியாற்றியவர் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருப்பவரானாலும் சமமாக பழகியவர், அவர்களுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்.
கலாம் மிகக் கடுமையான சுயகட்டுப்பாடு மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர். அசைவம் உண்ணாதவர், மது அருந்தாதவர் மற்றும் திருமணமாகாமல் பிரம்மச்சார்ய விரதம்
கடைபிடித்தவர்.


திருக்குறளில் ஈடுபாடு:


திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர்.2002ம் ஆண்டில் பதவியிலிருந்த பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த போது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தில்பதவியேற்ற பின் அவர் அதைவலியுறுத்தினார்.இந்தியா சூப்பர்பவர் நாடாக வேண்டும் என்றும் அதற்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்பதிலும் நாட்டம் காட்டினார். வல்லரசு நாடாக வேண்டுமானால் ஒவ்வொரு துறையும் செய்ய வேண்டியது என்ன என்பதை சுட்டிக் காட்டினார். தினமும் காலை 5.30 க்கு எழும் அவர், இரவு 1 அல்லது 2 மணிக்குத்தான் துாங்கச்செல்லும வழக்கத்தை வைத்திருந்தார்.
சேதமடைந்த திசுக்களுக்குப் பதிலாக உயிரிபதியன் முறை மூலம் மாற்ற அவர் யோசனை கூறி வருகிறார். இதன் மூலம் இதய வால்வு உள்ளிட்ட நோயால் இழந்த உடல்பாகங்களை பெற்றுக் கொள்ள முடியும். நேனோ டெக்னாலஜி துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் கூறிவந்தார்.அதேபோல், காப்புரிமைகள் கோராத பொதுவான சாப்ட்வேர் வெளியிட்டு தகவல் தொழில்நுட்பம் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அறிவியல் மூலம் எல்லாவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பது அவரது நம்பிக்கை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்றும் விரும்பினார்.


ரப்பர் ஸ்டாம்ப் அல்ல:


ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவில்லை. 2005 அக்டோபர் 25ம் தேதி அவர் மாஸ்கோ சென்ற போது, பீகார் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கவர்னர் பூட்டா சிங் பரிந்துரையை ஏற்க இருப்பதாக பிரதமர் மன்மோகன் கலாமிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. என்றாலும் அமைச்சரவை அதை நியாயப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட் அதை ஜனநாயக படுகொலை என்று வர்ணித்தது.ஆதாயம் தரும் பதவி மசோதாவை திருப்பி அனுப்பினார். ஒருவர் இரு பதவிகள் வகிப்பது நியாயமாகாது என்ற கொள்கை உடையவர் அவர். அந்த மசோதா திருப்பி அனுப்பிய நேரம்தான் 'சோதனைக்குள்ளான பதவிக் காலம்' என்று கலாம் குறிப்பிட்டார்.வெளிப்படையான நிர்வாகம், ஊழல் இன்மை, நிர்வாகத் திறன், நேர்மை ஆகியவற்றுக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்.விஞ்ஞானிகளுக்க மட்டுமல்லாது அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக நடந்து காட்டினார்.
நவீன காந்தியாக வாழ்ந்து ஜனாதிபதி மாளி கைக்கே பெருமை சேர்த்த தமிழர் தான் கலாம்.
இந்தியாவின் மிக உயர்ந்தபதவியை இதைவிட மிகச்சிறப்பாக யாரும் வகித்திருப் பார்களா என்பதும்... இனி யாரும்வகிக்கப் போகிறார்களா என்பதும் கேள்விக்குறியே.


கடைசி வரை அவர் 'பிஸிமேன்'தான்!


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம்
சஞ்சீவ ரெட்டி போன்றோர் கூட ஓய்வு பெற்றபின்னர் மீண்டும் அரசியல் பணிக்கோ கல்விப் பணிக்கோ திரும்பவில்லை.ஆனால், கலாமைப் பொறுத்தவரையில்ஜனாதிபதி பதவிக்குப் பிறகும் கல்விப் பணியை மீண்டும் தொடர்ந்தார்.இது அவரது அதிசய மனத்தின் குணாதி
சயத்தை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.மத்திய அரசோ கலாம் டில்லியில் இருந்து அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்பியது. இவரது குடும்பத்தினரோ ராமேஸ்வரம் வந்து தங்களுடன் தங்க வேண்டும் என்று விரும்பினர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் வருகை. பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு வேண்டுகோள் விடுத்தன. அதில் இருந்து நாடு முழுவதும் கல்விப் பணி மற்றும்விழிப்புணர்வு பணியாற்றியதில் 'பிஸிமேன்' ஆனார். கலாம் பதவிக் காலத்தில் விவசாயிகள், தபால்காரர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ராஷ்டிரபதி பவனுக்கு வந்து சென்றார்கள். நமது பாரம்பரியம் இளைஞர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, ராஷ்டிரபதி பவனில் மூலிகைத் தோட்டம் அமைத்தார். தக்காளி ரசம் மற்றும் முருங்கைக் காய் சாம்பார் என்றால் கலாமுக்கு பிரியம்.


அந்த இரண்டு சூட்கேஸ்:


ஜனாதிபதிகள் ராஷ்டிரபதி பவனை விட்டு கிளம்பிச் செல்லும்போது, லாரி லாரியாக பொருட்களை ஏற்றிச் செல்வது உண்டு. கலாமுக்கு லாரிகள் தேவைப்படவில்லை. இரண்டு சூட்கேஸ்களுடன் அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி, மாளிகையை விட்டு கிளம்பிய போது, அவருடைய பொருட்கள்ஏற்றிய லாரியில், ஜனாதிபதி அமர்வதற்குரிய அசோக சின்னம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த நாற்காலியும் ஏற்றப்பட்டது. பின்னர், அது பாதுகாவலர்களால் அடையாளம் காணப்பட்டு திரும்ப ராஷ்டிரபதி பவனில் வைக்கப்பட்டது.
அதே போல் பரிசுப் பொருட்களை பலர் தங்களுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்துல்கலாம் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அங்கேயேவிட்டு வந்துவிட்டார். கலாமின் குடும்பத்தினர் டில்லிசுற்றுப்பயணம் சென்ற போது, ராஷ்டிரபதி பவனை சேர்ந்த ஒரு வாகனம் கூட பயன்படுத்தப்படவில்லை, அவர்கள் ராஷ்டிரபதி பவனில் சாப்பிட்ட உணவுக்கு கூட அவரே பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்தவர்.இனி ஒரு ஜனாதிபதி இவரைப் போல் அங்கு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்குஎளிமையாக இருக்க முயற்சியாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.கலாம் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தபோது, எடுத்து வந்ததை விட, அவர் திரும்பிச் செல்லும் போது கொண்டு சென்றது குறைவு. அவர் விலை கொடுத்து வாங்கியபுத்தகங்களைத்தான் அவர் உடன் எடுத்து சென்றார்.


எதிலும் 'முதல்வன்!'


* ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்.
* ஜனாதிபதி ஆன முதல் விஞ்ஞானி மற்றும்திருமணமாகாதவர்.
* ஜனாதிபதி ஆன அரசியல் கட்சிகளை சாராத தலைவர்.
* இமயமலையில் சியாச்சின் பனிமலைஎல்லையில் உள்ள உலகின் உயரமான போர்க் களத்துக்கு சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெருமை பெற்றவர்.
* நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி.
* வேகமாகப் பறக்கும் சுகோய் ரக போர்விமானத்தில் பறந்த ஜனாதிபதி இவரே.
* ஆயிரக்கணக்கான மாணவர்களைசந்தித்து அவர்களிடம் நாட்டு வளர்ச்சியைப் பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தியவர், அவர்களுடைய கேள்விக்கு நேரடியா கவும் இமெயில் மூலமும் பதில் அளித்தவர்.
* பதவிக்குரிய கட்டுப் பாடுகளை தளர்த்தியவர். சிக்கனத்தை கடைபிடித்தவர். எளிமையாக
வாழ்ந்ததால் மக்கள் ஜனாதிபதி என்ற பெயரையும், ராஷ்டிரபதி பவனுக்கு மக்கள் மாளிகை என்றபெயரையும் பெற்றுத்தந்தார்.
* பரிசுப் பொருட்களை யாரும் பெறக்கூடாது என்று அறிவுரை கூறி அதை கடை பிடித்து நடந்தார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:00

ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம்
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025733648_1305696
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025737641_1305696
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025742586_1305696
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025747471_1305696
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025753707_1305696
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_025758676_1305696
ஜூலை 28,2015 00:55ஏவுகணை விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, இளைஞர்களின் வழிகாட்டி, எளிமையின் நாயகனாக திகழந்தஅப்துல்கலாம் நேற்று மாரடைப்பால்காலமானார்.
இவர் 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு பயின்றார். ஆங்கிலம்ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லுாரிப் படிப்பை முடித்த அவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் விமானயியலில் பட்டம் பெற்றார். வெளிநாட்டு நிறுவனங்களில் பயிற்சி பெற வாய்ப்பின்றி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே

உருவானவர்.


பன்முக விஞ்ஞானி:


1958ல் டி.ஆர்.டி.ஒ.வில் பணியாற்றத் தொடங்கிய கலாம், 1962ல் இஸ்ரோவில் (இந்திய செயற் கைக்கோள் ஆராய்ச்சி அமைப்பு) திட்ட இயக்குநராகச் சேர்ந்தார். ரோகிணி செயற்கைக் கோளை விண்வெளியில் கொண்டு செலுத்திய எஸ்.எல்.வி.3ஏவுகணையை உருவாக்கினார்.ஏவுகணை வடிவமைப்பு, மேம்பாடு, மற்றும் கட்டுமானம் ஆகியவற்றைக் கவனித்தார். பின் 1982ல் டி.ஆர்.டி.ஒ.வில் மீண்டும் சேர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடத்தின் (டி.ஆர்.டி.எல்) இயக்குநரானார்.ஏவுகணைகளை உள் நாட்டி லேயே தயாரிக்க ஒருங்கிணைந்த செலுத்துஏவுகணைகளை உள்நாட்டிலேயேஉருவாக்கும் திட்டம் வகுத்தார்.ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கக்கூடிய கலாம் அறிவியல் தொழில்நுட்பத்தையே காதலித்தார். தமிழ் இலக்கியத்திலும் வீணை மீட்டுவதிலும் ஈடுபாடுடைய இவர்,திருமணமே செய்து கொள்ளவில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்.


பாதுகாப்பு சக்தி:


இவருடைய நண்பர்கள் இவருடைய எளிமையையும் உயர் அளவிலான
சிந்தனையையும் போற்றினர். கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்.
அவருடைய சகாக்கள் எப்போதும் அவரை அணுகும் விதமாக
அவருடைய இல்லம் இருந்தது.இவரது திறமையிலும் ஆர்வத்திலும் நம்பிக்கையுடைய அனைவரும்டி.ஆர்.டி.ஒ.வில் இவர் திறம்படவே செயல்படுவார் என்று எதிர்பார்த்தனர்.அதே போல் ஒருங்கிணைந்த செலுத்து ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் துவங்கி 7 ஆண்டுகளில் தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து தரை இலக்கை பிருத்வி, நடுத்தர வேக ஆகாஷ் ஏவுகணை, பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஆகிய பாதுகாப்பு சக்திகள் மேம்படுத் தப்பட்டன. அதன்பின் 1989ல் வெற்றிகரமாக சோதித்தறியப் பட்ட அக்னி, வெளியுலகுக்கு
இந்தியாவில் பெருமையைஉணர்த்தியது. அக்னி எஸ்.எல்.வி.3ராக் கெட்டின் மறுவடிவமேயாகும்.இந்தியா சொந்த முயற்சியிலேயே முன்னேற வேண்டும் என்று கருதிய அவர் இந்திய விஞ்ஞானிகள் எந்தவொரு நாட்டு விஞ்ஞானிகளுக்கும் சளைத்தவரல்லர் என்று கூறினார். 60க்கும் மேற்பட்ட கல்வி, ஆராய்ச்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டதன் அடிப்படையில் இதனை கலாம் தெரிவித்திருந்தார். ஐ.ஜி.எம்.டி.பி. மூலம் அப் துல் கலாம் பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தினார். உந்து விசை, செலுத்து அமைப்பு, உயரிய உலோகக் கலவைகள் ஆகியவற்றை டி.ஆர்.டி. ஒ.வின் தொழில் நுட்ப இயக்குநரகம் கவனித்தது.
3 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை காம்ப் ரோக் என்னும் மையம் உருவாக்கியது. இதுஏவுகணைகள் தீப்பிடித்து எரிந்து விடாமல் இருக்க பயன்பட்டது.அக்னியின் திண்ம உந்து விசை எரிபொருள் இஸ்ரோ எஸ்.எல். வி.3 பயன்படுத்தியதாகும். திரவ எரிபொருள் குறித்த ஆய்வு அக்னியின் 2வது கட்டத்துக்குப் பயன் பட்டது. பிருத்வி திரவ இயக்கு எரி பொருளால் உந்தப்படுகிறது. எனவே இந்திய தொழில்நுட்பத் தைக் கொண்டே கலாம் பாது காப்பு சக்திகளுக்கு வலுவூட்டினார்.டி.ஆர்.டி.ஒ.வில் தலைமை இயக்குநராக இவர் பதவி வகித்த போதே இந்தியா மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியது. 2வது முறையாக ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் அணுகுண்டுச் சோத னையை நிகழ்த்தியது. இந்திய அணுசக்தி துறை (டி.ஏ.இ.) டி.ஆர்.டி.ஒ. மற்றும் இஸ்ரோஆகிய அமைப்புகள் இணைந்து
இச்சோதனையை நிகழ்த்தின.டி.ஆர்.டி.ஒ.வின் சார்பில் முழுவீச்சில் சோதனையில் கலாம் ஈடுபட்டார்.டி.ஆர்.டி.ஒ.வின் ஒரு ஆய்வுக் கூடம் நிரூபிக்கப்பட்ட வடிவமைப்பை ஆயுதமாக்கும் பணியைப் செயல்படுத்தியது. வெடிப்பைத் தோற்றுவிக்கும் கருவிகள், அதிக மின்சாரத்தைத் துாண்டும் கருவிகள் ஆகியவற்றை ராணுவத் தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, சோதனை செய்து உற்பத்தி செய்வது இந்த ஆய்வுக் கூடத்தின் பணியாக இருந்தது. வளி இயக்கம் இயற்பியல், படைக்கலன், பிளப்பு, பாதுகாப்பு, பறப்பு சோதனைகள்ஆகியவற்றில் மேலும் மூன்றுஆய்வுக் கூடங்கள் பணியாற்றின.


அணு ஆயுத சோதனை:


1998ல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இதில் அப்துல்கலாமின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தார். எதிர்நோக்கி யிருந்த அணு ஆயுத அபாயத்தை அகற்றும் வகையில் அணு ஆயுதச் சோதனையில் அணுசக்தி துறையிலிருந்து ஆர்.சிதம்பரம் முக்கியப்பங்காற்றினார். அவருக்கு இணையாக டி.ஆர்.டி.ஒ.வில் அப்துல்கலாம்பணியாற்றினார்.


விருதுகள்:


தேசிய வடிவமைப்பு விருதுகள், டாக்டர் பிரேன் ராய் விண்வெளி விருது; ம.பி. அரசின் தேசிய நேரு விருது, 1994ல் இந்திய வானியல் சங்கம் வழங்கிய ஆர்யப்பட்டா விருது. 1996ல் பேராசிரியர் ஒய்.நாயுடம்மா நினைவு தங்கப்பதக்கம், ஜி.எம்.மோடி அறிவியல் விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உன்னதத்துக்கான
எச்.கே.பிரோடியா விருது உட்படபற்பல விருதுகளை அப்துல்கலாம் பெற்றுள்ளார். 1981ல் பத்மபூஷன் விருதும், 1996ல் பத்ம விபூஷன் விருதும் பெற்ற அப்துல்கலாம் 1997 டிசம்பரில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார்.இந்திய வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய பொறியியல் அகாடமி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் அகாடமி, மின்னணு மற்றும் தொலைத் தகவல் தொடர் புக் கழகத்தின் ஆய்வாளராகவும் அப்துல் கலாம் திகழ்ந்தார்.


எழுதிய நுால்கள்:


இந்தியா 2020, பொற்காலத்தை நோக்கி ஒரு பார்வை என்ற புத்தகத்தை இஸ்ரோவின் செயல் இயக்குனர் வி.எஸ்.ராஜனுடன் இணைந்து
எழுதினார். இவரது சுயசரிதையை'அக்னி சிறகுகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இரண்டுமேஆங்கிலத்தில் வெளி வந்தவை.2002 ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது ஜனாதிபதியாகபதவியேற்றார். 2007 ஜூலை 25 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் 'மக்களின் ஜனாதிபதி' என அழைக்கப்பட்டார். மாணவர்களுக்கு அடிக்கடி 'கனவு காணுங்கள்' என அறிவுறுத்துவார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் மறையும் வரை இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:00

புதிய எண்ணங்களுடன் வெற்றி காணுங்கள்": அப்துல் கலாம்
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_02250466_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022512390_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_02251651_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022531884_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022539268_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022545207_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022550608_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022601219_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022605451_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022610894_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022614912_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022619460_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022623475_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_02263386_1305721
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Gallerye_022638972_1305721
தினமலர்' மற்றும் டி.வி.ஆர்.அகாடமியின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 2012 டிச., 6ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
அவரது சிறப்புரையின் முழுத்தொகுப்பு:
புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க
எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,

என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.
நண்பர்களே, இன்றைக்கு தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் வந்து மாணவர்களாகிய உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்பிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை வருடம் தோரும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். மாணவர்களை பரிச்சைக்கு தயார் படுத்தி, மேல்படிப்புக்கான வாய்ப்புகளை தெளிவு படுத்தி அதன் மூலம் மாணவர்களை தங்களது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்ககூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் தினமலர் நாளிதழுக்கு எனது பாராட்டுக்கள். இந்த பணி ஒரு அரும் பெரும் பணியாகும். எனவே மாணவ நண்பர்களே, "புதிய எண்ணங்களுடன் வெற்றி காண்க" என்ற தலைப்பில் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


வெற்றிக்கவிதை:




உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு எழுச்சியுற்ற இளைய சமுதாயமாக திகழ்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளீர்கள் - அதாவது ஜெயித்துக்காட்டுவோம் என்ற உறுதி மொழிதான் அது. இளைஞர்களின் உள்ள உறுதியின் அடுத்த பக்கம் என்னால் முடியும் என்பதாகும். நான் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கவிதையை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கவிதையின் மூலாதாரம் என்னவென்றால், என்னால் முடியும், நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்பதாகும். அந்த வெற்றிக்கு மூலகாரணமானவைகள் எவை. அறிவு, உழைப்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி.
அன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக எனது இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்திய மாணவன் உலகத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல
நான் 11வது குடியரசுத்தலைவராக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழது ஒரு நாள். ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, ஐஅகு/ஐககு அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பையன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான். கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன், அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. அவை என்ன.
1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.
இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன். ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த்MIT USக்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான்.
எழுத்து தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு. அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை ரெடியாக இருக்கிறது என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒருவேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில் இருந்து மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ வெற்றியடைய முடியும்
நான் DRDL, Hyderabadல் டைரக்டராக இருந்த போது, என்னிடம் கதிரேசன் என்பவர் எனது கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு நான் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும் பொழுதெல்லாம், கதிரேசன் எதாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தேன். அதை வெற்றிகரமாக முடித்தார். அதன் பின் B.A படித்தார். அப்புறம் நான் டெல்லி சென்று விட்டேன். அனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார் M.A முடித்தார், MPhil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (குஞிச்ttஞுணூடிணஞ் ணிஞூ ஃடிஞ்டt), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (கீச்ட்ச்ண உஞூஞூஞுஞிt) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


எனது கிராமப்புர கல்வியின் அனுபவம்:


நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்த போது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையில் தான் எங்கள் பள்ளி இருந்தது. இராமேஸ்வரம் தீவில் அது ஒரு பள்ளி தான். 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல் வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்கள் கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயரும், அறிவியல் ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப் பட்டவர்கள். நான் அப்பொழுது 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ் தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொன்னார், மற்ற பாடங்களில் 80க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது என்று கேட்டார். மாணவர்கள் நிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்கவைப்பது தான் என்று. அது மட்டுமல்ல, கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம் தான் என்று சொல்வார்.உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாட்டுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும் படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள் விவாதிக்க வைத்தார். அதன் மூலம், கணிதத்தை எங்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். அப்புறம் 10 முக்கியமான கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகு தான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே, நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.


அறிவு அற்றம் காக்கும்:


எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.


புத்தகம் படிப்பதின் அவசியம்:


ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு சிறு புத்தக நூலகம் அமைவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.
அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்.
நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.


மனசாட்சியின் மாட்சி:


சமீபத்தில் திரு சமர்பண் எழுதிய "Tiya: A Parrot?s Journey Home" என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தகம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் திரு சமர்பண். எப்படி நல் மனசாட்சி கொண்ட ஓரு அருமையான பச்சைக்கிளியின் வாழ்வு, தியாவின் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் அது.கோபம் விவேகத்திற்கு அழகல்ல. இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால்.
எனக்குள் ஒரு அரும் பெரும் சக்தி புதைந்துள்ளது.
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து,
என் சக்தியாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்.
புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்
நண்பர்களே, புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி நல்ல புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறரைக் குறித்து மட்டும் ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்...... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம்....... உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Mச்ஞ்ணஞுtடிண்ட் பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார். கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.
ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney GÊv¯ Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார். பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அனால் கணித வாழ்வில், உலக மேதையாகி வெற்றியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்க கற்றுக் கொள்வது தான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.


வெற்றி என்பது இறுதிப்புள்ளி....:


தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்..
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளை
தோல்வியடையச் செய்து உன்னால் வெற்றியடைய முடியும்.வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் தோல்விகள் தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுமைப் பெறச் செய்பவை.
திருவள்ளுவர் சொன்னது போல்
இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படா தவர்.
எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
புதிய சிந்தனைகளுடன் படி:எனவே மாணவர்களே, இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லு ம். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூல் நிலையங்களுக்கு சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப் படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது. கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.
நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தக்த்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்த்து. தமிழிலும், கணித்த்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகைகள் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருக்கிறேன். கணிதத்தில் 100 சதவிதம் எடுப்பேன். இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுதவேண்டும், அது மனதில் என்றென்றும் பதிந்து விடும்.
எனவே, ஆசிரியர் சொல்லித்தருவது, உங்களுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஒவ்வொரு பாடத்தின் முதல் நிலை அறிமுகம் முடிந்தவுடன். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, அந்த பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும், மாணவர்கள் குழு அவர்களது கற்பனைத்திறத்தோடு, பல்வேறு புத்தகங்களின் துணை கொண்டு, பள்ளியில் விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்டு மாணவர்களே அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு பாடத்தையும் செய்து பாருங்கள், எந்த படிப்பும் கஷ்டமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில், பள்ளி விடுதிகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும்.
எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதானல் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.


கனவு காணுங்கள்!


அப்துல் கலாமின் சில பொன் மொழிகள்.கனவு காணுங்கள். அவற்றை நனவாக்ககடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்... இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
* முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்வந்தது என விமர்சிப்பர்.
* மழை வந்தால் பறவைகள் எல்லாம்பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து,மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகிடைக்கிறது.


40 டாக்டர் பட்டங்கள்:


ஒரு டாக்டர் பட்டம் பெறுவதே அரிதான காரியம். ஆனால், அப்துல் கலாமின் உயரிய பணிகளை பாராட்டி உலகம் முழுவதும் இருந்து 40 பல்கலை., சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
தேசத்தின் மீது நேசம்ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முகமனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்றுமிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது 'ரோல்மாடலாக' கொண்டு செயல்பட்டார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:02

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 VIKATAN%20DIGITAL%20EXCLUSIVE%20JPg
இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் மீனவ கிரமமான ராமேஸ்வரம் இந்தியாவுக்கு அளித்த வரம் அப்துல் கலாம். உலகமே இந்த மாமேதைக்காக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. வயது வரம்புகளை தகர்த்து கலாமுக்கு வருந்திய உள்ளங்கள் ஏராளம்.  
 
"இறுதியாக, பிப்ரவரி மாதம் தன் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வந்தார். இங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார் " என்கிறார் கலாமின் அண்ணன் பேரனான ஷேக் சலீம்(படம்). அவரிடம் பேசினோம், "தாத்தா இறந்துட்டார்ங்கிற செய்தியை எங்களால கேக்குற சக்தி கூட இல்லை. இது எங்க குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெரிய இழப்பு. தாத்தாவுக்கு என்னவோ ஏதோன்னு கேள்விப்பட்டு வீட்டுக்கு நிறைய பேர் வந்தாங்க. அவர் இறந்துட்டார்னு தெரிஞ்ச உடனே ராமேஸ்வர மக்கள் மனதளவுல ஒடிஞ்சு போயிட்டாங்க. கடைசியா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்கு வந்தாங்க அப்பக்கூட நல்ல ஆரோக்கியமா தான் இருந்தாரு. ரெஸ்ட் எடுத்துக்கோங்க தாத்தானு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஒரு விபரீதம் நடந்துடுச்சு. தன் தம்பி இறந்துட்டான்னு செய்தியை கேட்டு நேற்றிலிருந்து அவருடைய அண்ணன் ரொம்பவே சோகமா இருக்கார்" என்று கலங்கினார் சலீம்.
        அப்துல் கலாம் 'நிஜம்' என்றால் அவருடைய நிழலாக பின் தொடர்ந்தவர் ஶ்ரீஜன் பால் சிங். அப்துல் கலாமின் உதவியாளர்.  ஶ்ரீஜன் பால் சிங், கலாமுடன் சேர்ந்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அப்துல் கலாமை பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட போட ஶ்ரீஜன் பால் சிங், "அப்துல் கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் இருந்துவந்தது. அது, தன்னுடைய பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லை என்பதுதான். இதனை அவர் அவ்வப்போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul-the%20hindu(1)
அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள் 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 KALAM-01(1)
டாக்டர் அப்துல் கலாம் - இந்தியாவின் விஞ்ஞானி

முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல  சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

* ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார்.
 திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார். 
* சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.
*  பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு  சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார். 

* பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.

ஏவுகணை உருவாக்கம்:
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Agni_prathvi(1)
* 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ISRO) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை (launcher) (எஸ். எல். வி-III) தயாரிக்கும திட்டத்தின் இயக்குனர் ஆனார்.
* 1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக  விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.
* கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
* 1963–64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

* 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

* தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான  பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.
* 1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை!
 
* 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வேலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும், பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தின் மூலம்  விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார்.
* அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு  கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.
தலைமை அறிவியல் ஆலோசகர்:

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul_Kalam-HT(1)

* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.
* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது.

இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 
‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 
‘ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான். 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.
இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.

ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்
கலாமின் கனவு இந்தியா 2020!
 
'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 BRAHMOS-cruise-missile
 அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 05
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு.
தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 
உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
 
ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு.

கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்-ராமேஸ்வரத்து படகோட்டியின் மகன் ராஷ்ட்ரபதி பவனைத் தொட்ட வரலாறு இது. எளிமையைத் தாங்கியபடி ஏவுகணைகளால் எழுச்சி தந்த பெருங்கதை இது. ஆடம்பரத்தின் சாயல் படாத அற்புதம் அது. அவருக்குப் பிடித்த பகவத் கீதை வாசகமே அவருக்கு உரிய சமர்ப்பணமாக இருக்கக்கூடும்:

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:02

அப்துல் கலாம் - எளிமையான வாழ்வு! சிவக்குமார் பேச்சு

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul%20kalam

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:03

அப்துல் கலாம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam%20rameswaram(1)

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 27ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam01
இதையடுத்து, டெல்லியில் இருந்து அப்துல் கலாமின் உடல் இன்று ராணுவ விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கொண்டு வரப்பட்டது. மண்படத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாம் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள்
 அப்துல் கலாம் உடலக்கு மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரம் வருகிறார்'' என்றார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam02
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Stalin-%20kalam%20anjali

கலாமுக்கு மணிமண்டபம்: மு.க. ஸ்டாலின்

 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ''சென்ற நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கு பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம். இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் அடக்கம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதேபோல், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.க்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும்'' என்றார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam-vijayakanth
விஜயகாந்த்
 அப்துல் கலாமின் உடலக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவருடன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.க.வினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் கூறுகையில், ''நேருக்குவுக்குப் பின் குழந்தைகளை மிகவும் கவர்ந்தவர் அப்துல் கலாம். நாளை காலை ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்'' என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்
 அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''கனவுளை நனவாக்குவதுதான் அவருக்கு சிறந்த அஞ்சலி'' என்றார்.
ஜி.கே.வாசன்
 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்  கூறுகையில், ''நாடு முழுவதும் பள்ளி  புத்தகங்களில் அப்துல் கலாமின் சாதனை இடம்பெற வேண்டும்'' என்றார்.
ஜிவாஹிருல்லா
 மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜாஹிருல்லா எம்.எல்.ஏ., ''கலாம் விருப்பப்படி பாம்பன் மேம்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Ramanathapuram
திரையுலகினர்
 அப்துல் கலாம் உடலக்கு நடிகர்கள் வடிவேலு, விவேக், கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு கூறுகையில், ''அப்துல் கலாம் போதனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்'' என்றார்.
இதேபோல், ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களும் நீண்ட கியூ வரிசையில் நின்று கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam-vaiko
முன்னதாக மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமார், சுந்தர்ராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,  வக்போர்டு தலைவர் தமிழ்மகன் உசேன், ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார், முன்னாள் மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ராமச்சந்திரன்,   முன்னாள் எம்.பி.கள் என்.எஸ்.வி.கிட்டன், உடையப்பன், மாவட்ட தலைவர் ராமவன்னி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:04

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! (1931 - 2015)
 
  
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்  நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.  ராக்கெட் நாயகனின் வாழ்க்கை பக்கங்கள்..
இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Poko1

உயர்நிலைக் கல்வியை முடித்த பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.
கல்லூரியில் உணவுச் செலவை குறைக்கச் சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ”இதைவிடப் பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்” என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.
விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Poko3
புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ”என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே” எனக் கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!’ என மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.
இந்தியா முழுக்க மாணவர்களைச் சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காகத் தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.
ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்குச் சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்தப் பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Poko2
இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:05

கலாமின் கடைசி புத்தகம் “கடந்த நிலை” - காலம் கடந்து காற்றில் கலந்த மனிதர்!
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 27-1438018668-kalam343545
சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்களின் கடைசி புத்தகமான "கடந்த நிலை" நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று மாலை மேகாலயாவில் அவருடைய உயிர் காலம் கடந்து காற்றில் கலந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தனது ஆன்மீக அனுபவங்கள் தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து "ட்ரான்செடன்ஸ்" என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்த நூலை பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லியில் வெளியிட்டார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 81AgjVXxauL
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Nool_2488013f
டெல்லி அக்‌ஷர்தாம் கோயிலில் தனக்கும் குரு பிரமுக் சுவாமிக்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து அப்துல் கலாம் இந்த நூலினை எழுதியுள்ளார். தமிழில் இந்த நூல் "கடந்த நிலை" என்ற பெயரில் வெளியானது. நூல் குறித்த சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று முன் தினம் நடந்தது. அப்துல் கலாம் எழுதிய அந்த புத்தகம் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு முஸ்லிமாக பிறந்து, இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகள் பற்றிய தன்னுடைய உள்ளார்ந்த கருத்துக்களை இந்நூலில் வெளியிட்டு சமய நல்லிணக்கத்திற்கு கடைசியாக வித்திட்டுச் சென்றுள்ள காலம் கடந்த அப்துல் கலாம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:05

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 My-journey-400x400-imadnyyhdraasvpk
அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள் எது தெரியுமா?
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண்.
இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

திருக்குறள்தான் வழிகாட்டி
ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில் பேசிய அவர், உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான் என்று கூறினார்.
எது கனவு
இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமே. உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.
தோல்வியை தோல்வியடைச் செய்யுங்கள்
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:06

கலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்!
 
  
மறைந்த கலாமின் உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய  மக்கள் வேண்டுகோள்
 ராமேஸ்வரம்: நாட்டின் 11 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி தான் பிறந்த ராமேஸ்வரத்தை முன்னேற்றுவதில் பெரும் பங்கி வகித்தார். அவரது திடீர் மரண செய்தி ராமேஸ்வரத்தில் காட்டு தீ போல் பரவியது. கலாமின் மரணம் பற்றிய செய்தி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரக்காயர் இல்லத்திற்கு இரவு 7 மணியளவில் வந்தது. இதனை உறுதி படுத்தி கொள்ளும் முன்பே அவரது வீட்டின் முன்பு பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் பதட்டத்துடன் கூடினர்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Ram_1

கலாமின் மூத்த சகோதரரின் பேரன் சலீம், கலாம் இறந்த செய்தியை பொதுமக்கள் முன் சொல்ல முடியாத சோகத்துடன் கண்ணீர் சிந்தியபடியே தெரிவித்தார். இதனை கேட்ட பொதுமக்கள் அனைவரும் கண்கலங்கியபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி கொண்டிருந்தனர். இந்நிலையில் 92 வயதுடைய முகம்மது முத்து மீரா மரைக்காயரிடம் தனது தம்பி கலாம் காலமான செய்தியை உறவினர்கள் எடுத்து சொல்ல அவரது கண்களில் இருந்து கண்ணீர் அவரை அறியாமலே வடிய தொடங்கியது.
ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் - முகம்மது ஆசியா அம்மாள் தம்பதியரின் 5 பிள்ளைகளில் மூததவர் முத்து முகம்மது மீரா. கடைக்குட்டி டாக்டர் அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்க நாட்டுக்காகவே உழைத்த கலாமின் உறவு ராமேஸ்வரம் தீவு மட்டுமே.  கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். இறப்புக்கு முதல் நாள் மாலை தனது சகோதரர் மற்றும் பேரன் சலீம் ஆகியோரிடம் பேசியுள்ளார். அப்போது தனது பெயரில் இயங்கும் அருங்காட்சியத்தினை பற்றியும். அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அருங்காட்சியக்கத்தில் விற்பனையாகி வரும் புத்தகங்கள் குறித்தும் ஆர்வமுடன் விசாரித்துள்ளார். விரைவில் ராமேஸ்வரம் வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  அதற்கும் இந்த சோகம் நிகழ்ந்து விட்டது.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Ram_2

படத்தில் இருப்பது மறைந்த கலாமின் மூத்த சகோதரர்

 அப்துல்கலாமின் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் உடல்கள் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்ஹா அடக்க ஸ்தலங்களில் அடககம் செய்யப்பட்டுள்ளது. அதே போல அப்துல்கலாமின் உடலையும் ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பது கலாமின் சகோதரர் மற்றும் உறவினர்கள், உள்ளூர் மக்களின் விருப்பமாக உள்ளது . இதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பதை வேண்டுகோளாக தெரிவிப்பதாக கலாமின் பேரனும், கலாம் அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருபவருமான சலீம் தெரிவித்தார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:08

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11-inspirational-quotes-from-dr-apj-abdul-kalam_143805824310
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11-inspirational-quotes-from-dr-apj-abdul-kalam_143805824300
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11-inspirational-quotes-from-dr-apj-abdul-kalam_143805824340
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11-inspirational-quotes-from-dr-apj-abdul-kalam_143805824330
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 11-inspirational-quotes-from-dr-apj-abdul-kalam_143805824320




டிவி பார்ப்பதை குறையுங்கள்... வீட்டுக்கு வீடு நூலகம் திறங்கள்... கலாம் கொடுத்த கடைசி அட்வைஸ்!

மதுரை: வீட்டுக்கு வீடு நூலகம் திறக்க வேண்டும் என்பது தான் மதுரையில் கடைசியாக கலந்து கொண்ட விழாவில் அப்துல் கலாமின் வேண்டுகோளாக இருந்தது.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில், மாணவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர் அப்துல்கலாம். அவரது கடைசி நிமிடங்களும் கூட மாணவர்கள் மத்தியில் தான் அமைந்தது.இந்நிலையில், கடந்த 18ம் தேதி தொழில்வர்த்தக சங்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

அங்கு ‘டிஜிட் ஆல்' கணினி தொழில் நுட்ப பிரிவை தொடங்கி வைத்த கலாம் தொழில் முனைவோர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-ஊரணிக்கு உயிர் கொடுப்போம் திட்டத்தின்கீழ் தென் மாவட்டங்களில் கண்மாய்களை சுத்தப்படுத்த சங்கத்தினர் முன்வர வேண்டும். தொழில் முனைவோருக்கு இணைய தள பயன்பாடு அவசியம்.பெற்றோர் டி.வி. பார்ப்பதை தினமும் ஒரு மணி நேரம் குறைத்து குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு நூலகங்கள் திறக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.கலாமின் கடைசி ஆசையை நாம் நிறைவேற்றுவோமா..?

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:09

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Tamil_News_large_1306214
 புட்டபர்த்தி: பந்தா ஏதுமின்றி அனைவருக்கும் நெருக்கமாக இருப்பவர் அப்துல் கலாம் என்று ஸ்ரீ சதய் சாய் பாபா, 2002ம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். புட்டபர்த்தியில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் சென்றிருந்தார். அந்த விழாவில் ஸ்ரீ சத்ய சாய் பாபா நிகழ்த்திய உரை வருமாறு: "இந்திய ஜனாதிபதியான அப்துல் கலாமின் வருகை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு முகமதியராக இருந்தபோதும் அவர் மத உணர்வு கொண்டவராக இருக்கவில்லை. அவர் அனைவரையும் நேசிக்கிறார். அனைவருக்கும் நெருக்கமானவராக இருக்கிறார். சிறந்த விஞ்ஞானியாக இருந்தும் அவர் வேறு நாட்டிற்கு செல்லவில்லை. இங்கேயே தங்கி இந்த நாட்டிற்கு சேவை செய்கிறார். இத்தகைய ஒரு விஞ்ஞானியை வேறு எங்கும் காண இயலாது. எவ்வித பந்தாவும் இல்லாதவர்; அவருடைய இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பவர்; சிறந்த குணம் உள்ளவர். எனவேதான் அவர் இந்திய ஜனாதிபதியாக முடிந்தது. அவர் இந்த நாட்டிற்கு சேவை செய்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்."

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:09

ரேடியோதான் கேட்பார் வீட்டில் டி.வி கிடையாது... கிராமத்து மனிதராகவே மறைந்த விஞ்ஞானி!
 
  
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் டெல்லி வீட்டில் டி.வி கூட வைத்திருக்க வில்லையென்றும்,  ஆல் இந்திய ரேடியோ செய்திகளை கேட்பதில்தான் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அவருக்கு உதவியாளராக இருந்து வரும் ஹரி செரின்டன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று ஷில்லாங்கில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அப்துல் கலாமின் மரணத்தை அவரது உதவியாளர் ஹரி செரின்டனால் நம்ப முடியவில்லை.
அப்துல் கலாமின் கடைசி நேரங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், '' திங்கட் கிழமை 12.20 மணியளவில் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். செவ்வாய்க்கிழமை வருவதாக சொன்னார். புறப்படும் போது அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. மாலை 7 மணியளவில் ஷில்லாங்கில் எனது உதவியாளர்  ஒருவர்,  என்னை போனில் தொடர்பு கொண்டார். 'சார்... பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
உடனே நான் பதறிப் போனேன். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் வந்தது. 'சார் இறந்து விட்டார்!'என்று சொன்னார். என்னால் அந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. இப்போதும் அப்துல் கலாம் இறந்து விட்டதாகவே நான் உணரவில்லை.  அப்துல்கலாம்  விடியகாலை 6.30 மணி முதல் பணிகளைத் தொடங்கி விடுவார். இரவு 2 மணி வரை அவரது பணிகள் தொடரும். அதற்கு பின்னரே உறங்குவார்.
தொலைக்காட்சி பார்க்கமாட்டார். ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை விரும்பி கேட்பார். தினமும் அவருக்கு ஏராளமான அழைப்புகள் வரும். கருத்தரங்கில் பேச, விழாக்களில் பங்கு கொள்ள என்று அந்த அழைப்புகள் இருக்கும். அவற்றையெல்லாம் தினமும் பார்த்து விடுவார். தினமும் மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து அவரை பரிசோதித்து செல்வார்கள். மனிதநேயமிக்க கலாம் சார் போன்று இந்த நாட்டுக்கு ஏராளமான தலைவர்கள் உருவாக வேண்டும்" என்றார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abd
மேலும் அப்துல் கலாமின் அடக்கம் குறித்து ஹரி கூறுகையில், '' அப்துல்கலாமின் உடல்  டெல்லியில் அவர் வாழ்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் ரமேஸ்வரத்திற்கு எடுத்து சென்று அவரது மூத்த சகோதரர் முஸ்தபா மராக்கையரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது'' என்றார்.
கடைசியாக அப்துல்கலாம் கடந்த 2011ஆம் ஆண்டு 'டார்கெட் 3 பில்லியன்' என்ற புத்தகத்தை மற்றொரு எழுத்தாளர் ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுதான் கலாம் கடைசியாக எழுதிய புத்தகம் ஆகும்.
 
தமிழில் 'எண்ணத்தில் நலமிருந்தால் புதிய தமிழகம் உருவாகும், புயலைத் தாண்டினால் தென்றல்' என்ற புத்தகத்தை அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜுடன் இணைந்து அப்துல் கலாம் எழுதி வந்தார். ஆனால் இந்த புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு முன்னதாகவே அப்துல் கலாம் மறைந்து விட்டதாக பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:09

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 9
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 7
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 8
  
புதுடெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல், கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அப்துல்கலாமின் உயிர் பிரிந்த ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.

ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது. அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட கலாமின் உடலை, டெல்லி பாலம் விமான நிலையத்தில் முப்படை தளபதிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் பெறப்பட்டது.
பின்னர், அப்துல்கலாம் அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் நஜிம் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அப்துல்கலாம் உடலுக்கு பிற்பகல் 3 மணிக்கு முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இன்று முழுவதும் கலாம் உடலுக்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
நாளை 1 மணிக்கு அப்துல்கலாம் உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட உள்ளது. இடம் தேர்வு செய்யும் பணியை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:10

கலங்கரை விளக்கம் சாய்ந்தது
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul_Kalam_248853_2489117f
வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.
‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.
பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.
1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.
அறிவியல் ஹீரோ
1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.
ஏவுகணை அவசியம் 
‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.
எளிமையின் சிகரம் 
ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.
ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.
இசைப்பதும் ரசிப்பதும் 
உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.
வாருங்கள் இளையோரே 
‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.
நிறைவேறாத கனவு
உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.
பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.
அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:11

இது ஒரு கலாம் காலம்!
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_2489265f
இந்த மாபெரும் நாட்டில் நான் நன்றாகவே இருக்கிறேன். இதன் கோடிக்கணக்கான சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன். எனக்குள்ளிருந்து அவர்கள் வற்றாத புனிதத்தை முகந்து இறைவனின் அருளை எங்கும் பரப்ப வேண்டும். ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைக்கிற மாதிரி.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_2489260a
வீணை வாசிக்கும் கலாம் 
 அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489266a
நெல்சன் மண்டேலாவுடன்... 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489258a
குடியரசுத்தலைவர் மாளிகையில் குழந்தைகளுடன்... 
  அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489261a
மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது...
 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489262a
குடும்பத்தினருடன்...
 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489256a
சுகாய் போர் விமானப் பயணத்தை முடித்ததும்... 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489263a
பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது...
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489269a
தலாய் லாமாவுடன்... 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_2489264a
ஐஎன்எஸ் சிந்துரட்சக் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது.. 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489267a
ஒபாமாவுடன்... 
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Kalam_jpg1_jpg1_jp_2489255a

மும்பையில் ஒரு பள்ளி விழாவில்...

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:12

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul-kalam-vikatan
  
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul-kalam-shillong
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே!’ என்பார்.
 
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.
 
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
 
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.
 
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள்  போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம்.
 
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2  முறை ஆட்சிகள் மாறியது.  பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.
 
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேளவியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம். 
 
மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்புனோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul-kalam-soldier

 
ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார்.
 
பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Abdul-kalam-vikatan
‘Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள்.
 
மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை  முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார்.
 
அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது.
 
அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!
 
இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.  
 
‘நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’  என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன்.
 
‘ஆசிரியர்’ என்றார் கலாம்.
 

 
2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்'  என்றார்.
 
இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம்.
 
உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள்.  இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha Thu 30 Jul 2015 - 22:13

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113207
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113196
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113197
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113198
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113200
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113201
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113202
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113203
அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 113205

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள். - Page 4 Empty Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum