சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

தமிழ் அகராதி - "க" Khan11

தமிழ் அகராதி - "க"

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:00

க - அரசன் : நான்முகன் : தீ : ஒன்று என்னும் எண்ணின் குறி : ஒரு வியங்கோள் விகுதி : ஆன்மா : உடல் : ஓர் எழுத்து : கந்தர்வ சாதி : காமன் : காற்று : கதிரவன் : செல்வன் : திருமால் : தொனி : நமன் : மயில் : மனம் : ஆனைமுகக் கடவுள் : காந்தாரமாகிய கைக்கிளையிசையின் எழுத்து : அடிக்கும் மணி : இயமன் : ஒரு கந்தருவன் : திங்கள் : உடல் : நலம் : சூனியச் சொல் : தலை : திரவியம் : நனைதல் : நீர் : பறவை : ஒளி : பொருத்து : முகில் : வல்லவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:00

கஃகான் - ககரவெழுத்து.
கஃசு - காற்பலம்.
கஃறெனல் - கறுத்து விளங்குதல் : கறுப்பாதல்.
கஃறு - நிறத்தை உணர்த்தும் குறிப்பு மொழி.
ககணி - விண்ணிலுள்ள பொருள்களின் கதியை அறிபவன்.


ககராசன் - கருடன்.
ககனசாரி - விண்ணில் இயங்குவோர்.
ககனசாரிகை - விண்ணில் இயங்குகை : பரத நாட்டிய உறுப்புள் ஒன்று.
ககநபம் - வீணாதண்டு.
ககனம் - ஆகாயம் : ஒரு கிழங்கு : காடு : படை : புட்பொது : வாயுமண்டலம் : சேனை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:01

ககனாக்கிரம் - அண்டமுகடு.
ககனாரவிந்தம் - ஆகாயத் தாமரை.
ககபதி - இராசாளிப் பறவை : கருடன்.
ககமாறம் - மணித் தக்காளி.
ககம் - அம்பு : பறவை : காற்று : தெய்வம் : பாணம் : வெட்டுக்கிளி.


ககு - தீச்செய்கை உள்ளவன்.
ககுஞ்சலம் - சாதகப்புள்.
ககுதி - முத்திரை குத்தின எருது.
ககுத்து - எருத்தின் பிடர் : நாக்கு : முக்கியம் : திகில்.
ககுந்தலன் - சிவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:01

ககுபம் - திசை : கருமருது.
ககேசன் - கதிரவன் : கருடன்.
ககேசுரன், ககேந்திரன் - கருடன் : கதிரவன்.
ககோதரம் - பாம்பு.
ககோளசாத்திரம் - வானநூல்.


ககோளம் - வானமண்டலம் : மண்டல வடிவமான விண்.
ககோற்கன் - கதிரவர்களுள் ஒருவன்.
கக்கதண்டம் - அக்குளில் இடுக்கி நடக்கும் கழி.
கக்கம் - அக்குள் : கைக்கீழிடம்.
கக்கட்டமிடுதல் - நகைப்பில் பேரொலி செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:01

கக்கதேசம் - ஒரு நாடு.
கக்கரி - முள்வெள்ளரி.
கக்கலும் விக்கலுமாய் - கதிர் ஈன்றதும் ஈனாததுமாய்.
கக்கல் - வாந்தி செய்தல் : வெளிப்படுத்தல்.
கக்கல் கரைசல் - கலங்கனீர்.


கக்கவைத்தல் - நெருக்கி வாங்குதல்.
கக்கார் - தேமா.
கக்குவான் - கக்கிருமல்.
கங்கடகம், கங்கடம் - கவசம்.
கங்கணங்கட்டுதல் - ஒரு செயலை முடித்தற்கு முனைந்து நிற்றல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:01

கங்கணம் - மஞ்சட்காப்பு : கைவளை : நீர்த்துளி : ஒரு நீர் வாழும் பறவை : முடி : முகிற்கூட்டம் : தொடி.
கங்கணவிசர்ச்சனம் - காப்பு நாண் நீக்குதல்.
கங்கதம் - சீப்பு.
கங்கபத்திரம் - பருந்தின் இறகு : அம்பு : உமி.
கங்கம் - கழுகு : சீப்பு : பருந்து : பெருமரம் : சிறப்பு : ஒருவகைப் பாம்பு : வேள்வித்தூண் : 
வரம்பு : தமிழ்நாட்டையடுத்துள்ள ஒரு நாடு.


கங்கரம் - மோர்.
கங்கர் - ஓர் அரசகுலத்தார் : பருக்கைக்கல் : கக்கான் கல்.
கங்கவி - பருந்துப் பறவை.
கங்கன் - சீயகங்கன் என்னும் அரசன் : கஞ்சனுடைய தம்பி : ஒரு மருந்து : தருமர் விராட நகரத்தில்
இருந்த போது வைத்துக் கொண்ட பெயர்.
கங்காசுதன் - முருகன் : வீடுமன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:02

கங்காணம் - கண்காணி என்னும் மேலாள்.
கங்காதரன் - சிவபெருமான்.
கங்காபட்டாரசி - கோயில்களில் இறைவனுக்கணியும் ஒருவகை அணிகலம்.
கங்காளமாலி - சிவன்.
கங்காளன் - எலும்புக் கூடு : பெருங்கலம்.


கங்காளன் - சிவன்.
கங்காளி - பார்வதி : மாகாளி : ஏழை.
கங்காரூபன் - ஒருவகைக் குதிரை.
கங்கானம் - குதிரை : வாசி.
கங்கு - எல்லை : கருந்தினை : கரை : கவர் : கழுகு : தீப்பொறி : வயல்வரப்பு : வரிசை : துண்டு : வரையறை : அணை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:02

கங்குகரை - எண்ணிக்கை.
கங்குல் - இரா : இருள் : பரணி நாள் இரவு.
கங்குல்வாணர் - அரக்கர்.
கங்குவடலி - அடிக்கருக்குள்ள பனை மரம்.
கங்கைகுலம் - வேளாளர் மரபு.


கங்கைமாத்திரர் - சிறுவர் விளையாட்டில் உள்ள ஒரு பெயர்.
கசகசத்தல் - உடம்பு வியர்த்தல்.
கசகர்ணம் - யானை போற் காதாட்டும் வித்தை.
கசகர்ணம்போடுதல் - பெருமுயற்சி செய்தல்.
கசகசா - அபினிச் செடி : கசகசா விதை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:02

கசகம் - வெள்ளரி.
கசகுதல் - பின்வாங்குதல் : தளர்தல்.
கசக்கால் - ஊற்றுக் கால்.
கசங்குதல் - நிலைகெடுதல் : தளர்தல்.
கசடன் - கீழ்மகன் : குற்றமுள்ளவன்.


கசடு - அடிமண்டி : ஐயம் : கீழ்மை : குறைவு : குற்றம் : தழும்பு : மாசு : வடு : அழுக்குக் கறை.
கசட்டம்புல் - சுக்கு நாறிப்புல்.
கசட்டை - துவர்ப்பு : இளமை : கசப்பு.
கசத்தல் - கைத்தல் : வெறுத்தல்.
கசதை - யானைக் கூட்டம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:03

கசபம் - கோரை : அறுகு முதலிய சிறு புல்.
கசபரீட்சை - அறுபத்து நான்கு கலையுள் யானை இலக்கணம் அறியும் வித்தை.
கசப்பி - வேம்பு : மயிர்ச் சிகைப்பூடு : காசித்தும்பை : பேய்த்தும்பை.
கசமாலம் - புகை : தூபம் : அரி.
கசம் - இரண்டுமுழ அளவு : மிகுதி : குளம் : யானை : தலைமயிர் : தாமரை : நீரூற்று : 
முகில் : இருமல் நோய்.


கசரத்து - உடற்பயிற்சி.
கசரை - காலேயரைக்காற் பலம்.
கசர் - சிவப்புக் கல்லின் குற்றம் : மீதம் : குறைவு.
கசனை - ஈரம் : உப்புப் பற்று : பற்று : சூட்டுக் குறி.
கசா - செடிவகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:03

கசர்கூளம் - பல சாதிக் கலப்பு : குப்பை : தாறுமாறு.
கசாக்கிரம் - மயிர் நுனி : ஒரு சிற்றளவு.
கசாது எழுதுதல் - திருமணப் பதிவு செய்தல்.
கசாப்புக் கிடங்கு - ஆடு மாடுகள் அடிக்குமிடம்.
கசாலை - கோக்காலி சுவர்மேல் ஆரல் : சமையல் செய்யும் இடம்.


கசானனன் - ஆனைமுகக் கடவுள்.
கசி - ஈரம் : வியர்வை : நீரொழுகல் : அழு : ஊறு : கசியென்னேவல்.
கசிதம் - பறிக்கை : துடுப்பு.
கசிதல் - அழுதல் : இரங்கல் : உருகல் : ஊறுதல் : கரைதல் : ஈரமுறுதல் : வியர்த்தல் : 
உப்பு முதலியன இளகுதல் : நெகிழ்தல்.
கசிபு - இரங்கி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:03

கசியம் - கள் : குதிரையின் இடுப்பு.
கசிவு - ஊறுகை : ஈரம் : மன நெகிழ்ச்சி : வருத்தம்.
கசு - காற்பலம்.
கசுகசுப்பு - ஈரத்தன்மை.
கசுமாலர், கசுமாலி - அழுக்குடையோர் : போரிடுவோர் : கெட்ட நடத்தையுடையோர்.


கசூர் - அசட்டை.
கசேரிகை - முதுகெலும்பு : புறவெலும்பு.
கசேருகம் - தமரத்தை.
கசை - அடிக்குஞ் சவுக்கு : பசை : கவசம் : குதிரைச் சம்மட்டி : சவுக்கு : பின்னற் கயிறு : 
கச்சை : முறுக்கின கம்பி : மயிர் மாட்டி.
கசைமுறுக்கி - தட்டான் குறடு : கயிறு திரிப்பவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:04

கச்சகம் - குரங்கு.
கச்சங்கடாய் - ஆமையோடு : கச்சபக் கடாய்.
கச்சங்கட்டுதல் - கச்சை கட்டுதல் : ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல்.
கச்சங்கம் - ஒப்பந்தம் : ஒற்றுமை : தீர்மானம்.
கச்சடா - இழிவு : போலித்தன்மை.


கச்சந்தி - கோணிப்பை.
கச்சந்தி அவிழ்த்தல் - பொய் மூட்டை அவிழ்த்தல்.
கச்சபம் - ஆமை : நவநிதியுள் ஒன்று.
கச்சபாலயம் - காஞ்சியில் உள்ள ஒரு சிவப்பதி.
கச்சபி, கச்சபீ - கலைமகள் வீணை : பெண்ணாமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:04

கச்சம் - ஆமை : இலக்கம் என்னும் எண் : ஒரு மீன் : ஒருவகை அளவு : கடன் : கவசம் : குதிரையின் அங்கவடி : 
உறுதி : மரக்கால் : கச்சு : முன்தானை : வார் : ஊற்று : யானைக் கழுத்தில் இடுங் கயிறு : ஒப்பந்தம் : தானைச் செருக்கு.
கச்சலம் - முகில்.
கச்சலி - ஒரு மீன்.
கச்சல் - இளம் பிஞ்சு : ஒல்லி : கசப்பு : ஒரு மீன் : வெறுப்பு : பிசகு.
கச்சவடம் - சிறுவணிகம்.


கச்சளம் - இருள் : கண்ணிடுமை : கரிப்புகை : மை.
கச்சன் - ஆமை : கூர்மம்.
கச்சா - தாழ்மை : ஒருநிறை.
கச்சாச்சேர் - எட்டுப்பலங் கொண்ட நிறை.
கச்சாத்து - நிலவரி முதலிய கணக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:04

கச்சாலை - கச்சபாலையம்.
கச்சால் - மீன் பிடிக்கும் கூடு.
கச்சான் - மேற்குக் காற்று : மேல் திசை.
கச்சி - சிரட்டை : காஞ்சி : சின்னி : சீந்தில் : கொட்டாங்கச்சி : ஊமற்பிளவு.
கச்சிதம் - ஒழுங்கு.


கச்சிப்பேடு - கச்சி.
கச்சு - அரைப்பட்டிகை : நூற் கயிறு : மகளிர் : மார்புக் கச்சு : கச்சைப் பட்டை : பிணிக்கை : வம்பு : வார் : சிவிகை : இடைக்கட்டு.
கச்சுதல் - கடித்தல்.
கச்சுரி - நெருப்பு.
கச்சுரு - நெருப்பு : அக்கினி : தீ : கனல் : அனல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:05

கச்சுரை - பெருங் காஞ்சொறி : கச்சூர்க்காய்.
கச்சூரம் - பேரீந்து : சுழற்காய்.
கச்சேரி - அலுவற் கூடம் : ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம்.
கச்சை - அரைக்கச்சு : கயிறு : கவசம் : கீழ் வயிற்றிற்கச்சை : கௌபீனம் : முழுப்புடவை : வார் : யானைக் கழுத்திடு கயிறு.
கச்சைகட்டுதல் - ஆடையை இறுக்கிக் கட்டுதல் : ஒன்றைச் செய்ய மூண்டு நிற்றல்.


கச்சைக் கொடியோன் - கன்னன்.
கச்சோடி - வெள்ளை வெற்றிலை.
கச்சோதம் - மின்மினி.
கச்சோலம் - ஒருவகை வாசனைப் பண்டம் : சிறு ஏனம் : அலப்பட்டை : மாஞ்சில் : ஏலக்காய்த் தோல் : கிச்சிலிக் கிழங்கு.
கஞலுதல் - நெருங்குதல் : விளங்குதல் : செய்தல் : மிகுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:05

கஞரம், கஞறம் - கள்.
கஞறல் - எழுச்சி : கடுப்பு : சினக்குறிப்பு : சிறுமை : நிறைதல் : நெருங்கல் : பொலிவு மிகுதி.
கஞற்றுதல் - நிரப்புதல் : செய்தல்.
கஞன்றல் - எழுச்சி : எழுப்புதல்.
கஞ்சகம் - கறிவேம்பு : கச்சின் தலைப்பு : கண்ணிலிடும் ஒரு மருந்து : முன்தானை.


கஞ்சகாரன் - கன்னான்.
கஞ்சக்கருவி - வெண்கலத்தால் இயன்ற தாளவாத்தியம்.
கஞ்சங்குல்லை - கஞ்சாங்கோரை : ஒரு பூஞ்செடி.
கஞ்சம் - தாமரை : நீர் : வெண்கலம் : வஞ்சனை : அப்பவருக்கம் : கயிறு : கவசம் : கீழ்வயிற்றிற் கச்சை : கௌபீனம் : அமுதம் : ஒருவாத்தியம் : ஓர் ஊர் : கஞ்சா : கிண்ணம் : கைத்தாளம் : துளசி : நொண்டுதல் : வஞ்சம் : மோசம்.
கஞ்சரன் - குறியவன் : கதிரவன் : நான்முகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:06

கஞ்சரீடம் - வலியான் கருவி.
கஞ்சல் - பயனற்றது : குப்பை கூளம் : அழுக்கு : எளியது.
கஞ்சனம் - கண்ணாடி : கைத்தாளம் : கரிக்குருவி.
கஞ்சனை - கண்ணாடி : தூபகலசம்.
கஞ்சன் - கிருட்டிணன் மாமன் : குறியவன் : பிசினன் : நான்முகன் : முடவன்.


கஞ்சாகம் - தவிடு.
கஞ்சாங்கொற்றி - கனமற்றது : பாலற்றது : பிச்சிப் பேய் : பெருமையில்லாதவன்.
கஞ்சாரி - கண்ணன் : கிருட்டினன் : கோவிந்தன்.
கஞ்சி - காஞ்சிபுரம் : சோற்றின் வடிநீர் : நீர்கலந்த உணவு.
கஞ்சிகை - குதிரை பூண்ட தேர் : ஆடை : உருவுதிரை : இரத்தினச் சிவிகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:06

கஞ்சிப்பொழுது - உச்சிவேளை : நடுப்பகல்.
கஞ்சிரா - சிறுகைப்பறைவகை.
கஞ்சுவம் - அதிமதுரம் : சட்டை : சிவந்திக்கோரை : பாம்பின் தோல்.
கஞ்சுகன் - காவற்காரன் : மெய் காப்பாளன் : வைரவன் : சட்டை போட்டவன்.
கஞ்சுகி - அந்தப்புரக் காவலன் : பாம்பு சட்டை.


கஞ்சுளி - சட்டை : பரதேசியின் பொக்கணம்.
கடகண்டு - ஒரு பழைய கூத்து நூல்.
கடகக்கை - கூத்தின் ஒருவகைக்கை.
கடகடத்தல் - கழன்று போதல் : தளர்ந்து போதல் : நெகிழ்வடைதல் : ஆட்டங் கொடுத்தல்.
கடகத்தண்டு - சிவிகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:06

கடகநாதன் - படைத்தலைவன்.
கடகம் - ஆயுதவருக்கம் : இராச தானி : உருள் : ஓராறு : ஓர் ஊர் : ஓர் எண் : இணையா இணைக்கை முப்பத்து மூன்றுள் ஒன்று : கங்கணம் : கற்கடக ராசி : கேடகம் : கைவளை : படை : நாடு : மதில் : மலையின் நடு : மலைப்பக்கம் : யானைக் கூட்டம் : வட்டம் : வீடு : தோளணி : பனையோலைப் பெட்டி : ஆடி.
கடகன் - காரியத்தை நடத்துபவன் : வல்லவன் : நட்டுவன் : கடகராசியிற் பிறந்தவன்.
கடகாதகம், கடகாதகன் - காக்கை : நரி.
கடகாவருத்தனம் - இரண்டு கையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்குங் கடகக்கை.


கடகி - மனை : வீடு : புகலிடம் : மனைவி.
கடகு - கேடகம் : பாதுகாப்பு.
கடக்கல் - கடத்தல்.
கடக்குழி - மதம் உண்டாகும் குழி.
கடசம் - கங்கணம் : கடகம் : காப்பு : கைவளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:06

கடதீபம் - குட விளக்கு.
கடத்தல் - அளவிறத்தல் : கடந்து போதல் : வெல்லுதல் : செலுத்துதல் : தாண்டுதல் : நீங்குதல் : நெடுகவிடுதல் : பாய்தல் : மீறுதல் : நாட்போக்குதல்.
கடத்தி - கழப்புகிறவன் : கழப்புணி.
கடத்து - தோணி : பெயர் : செலுத்து : விலக்கு : தவணை : கொல் : நெடுகவிடு : கழப்பு : நாட்போக்கு.
கடத்துதல் - செலுத்துதல் : கடப்பித்தல் : காலம் போக்குதல் : கழப்புதல்.


கடநம் - தாழ்வாரம் : பொருத்துதல் : முயற்சி.
கடநாகம் - யானை : மதமலை.
கடந்தஞானம் - முற்றத் துறந்த அறிவு : மெய்யறிவு.
கடந்தடல் - நேர்பொருது கொல்லல் : வஞ்சியாது பொருதல்.
கடந்தநிலை - மேலான நிலை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:07

கடந்தபொருள் - கடவுள் : போன பொருள்.
கடந்து - அழித்து : எதிர் நின்று.
கடந்தேறல் - கடந்து போதல் : இடையூறு கடத்தல்.
கடந்தை - திருப்பெண்ணாகடம்.
கடப்பட எனல் - சப்தசாலத்தினால் மருட்டிப் பேசுதற் குறிப்பு.


கடபலம் - தேக்குமரம்.
கடபி - வாலுளுவை.
கடப்பநெல் - கருங்குறுவை நெல்.
கடப்பளி - ஒழுக்கமில்லாதவன் : ஈகையில்லாதவன்.
கடப்பாடு - கடமை : முறைமை : கொடை : ஒப்புரவு : மிகுதல் : நடை நேர்மை : செய்யவேண்டுவது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:07

கடப்பாட்டாளன் - கடமையறிந்து அதனைச் செய்பவன்.
கடப்பாரை - இரும்பினாலாகிய ஓர் ஆயுதம் : நீங்குபவரை : மீறுபவர்களை.
கடப்பு - கருங்குறுவை நெல் : கடத்தல் : கடவை : கடப்ப நெல் : கடக்கை : இடுக்கு மரம் : மிகுதியானது.
கடப்புக்கால் - வளைந்த கால் : ஊனமுள்ள கால் : தொழுவு முதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலையிழுத்துப் போடும்படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் ஒரு மரம்.
கடமனை - தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு.


கடமர்த்தன் - நோய் தீர்ப்போன்.
கடமா - மதயானை : காட்டுப் பசு.
கடமாதம் - மாசி மாதம்.
கடமான் - காட்டுப் பசு : யானை.
கடமுனி - அகத்தியன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:07

கடமை - கடப்பாடு : குடியிறை : காட்டுப் பசு : பெண்ணாடு : ஒருவகை மான்.
கடமைக்கால் - அரசினரால் ஏற்படுத்தப் பெற்ற மரக்கால்.
கடம் - அருநெறி : உடம்பு : ஒருமந்திரம் : ஓரளவு : கடமை : கடன் : கயிறு : காக்கை : காடு : குடம் : குடமுழுவு : கும்பராசி : கொடிக்கடை : கோழை : சாரல் : கடலை : தோட்டம் : நண்டு : நீதி : மரமஞ்சள் : யசுர் வேதத்தின் ஒரு பகுதி : யானை மதம் : வாச்சியத்தில் ஒன்று : வானம் : தீவினை : ஈமம்.
கடம்பகோர நியாயம் - கடம்ப மரத்தின் அரும்புகள் ஒரே காலத்திற் பூப்பது போலப் பல செய்திகளும் ஒரு காலத்தில் நிகழ்வதைக் குறிக்கும் நியாயம்.
கடம்படுதல் - நேர்ந்து கொள்ளுதல் : சினங்கொள்ளுதல்.


கடம்பம் - அம்பு : ஒருமரம் : கீரைத்தண்டு.
கடம்பல் - குமிழமரம்.
கடம்பவனம் - மதுரை : திருவாலவாய் : கூடல்.
கடம்பன் - ஒருகுடி : கந்தன் : முருகன் : முரடன்.
கடம்பாடவி - மதுரை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jul 2015 - 15:07

கடம்பி - கெட்டவள் : வேடுவப் பெண்.
கடம்பு - ஒருமரம் : தீங்கு : கடும்பு : நீபம் : கடம்புப்பால் : இந்துளம் : கதம்பம் : மராமரம்.
கடம்பை - கடமா : குளவிவகை : கடம்பூர் : ஒரு காட்டு விலங்கு : தென்னை நார் : கடமை : ஒரு தலம்.
கடரி - மரமஞ்சள் : குச்சி மஞ்சள் : அரிசனம்.
கடகலம் - ஊர்க்குருவி : ஆமணக்கு.


கடலஞ்சிகம் - தருப்பை.
கடலடி - இலவங்கம்.
கடலடைத்தான் - அபின் : கஞ்சா.
கடலமிழ்து, கடலமிர்து - கடல்படு பொருள்களாகிய உப்பு முதலியன.
கடலர் - நெய்தல் நில மக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழ் அகராதி - "க"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum