Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சம்பூர்ண ராமாயணம்
Page 1 of 1
சம்பூர்ண ராமாயணம்
சம்பூர்ண ராமாயணம்
இராமாயண காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக என். டி. ராமராவும் பரதனாக சிவாஜிகணேசனும் ராமரின் மனைவி சீதையாக பத்மினியும், சத்துருக்கனாக பி. வி. நரசிம்ம பாரதியும் நடித்து சிறப்பித்துள்ளனர்.
பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது.இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.
ஏ.பி.நாகராஜன்-எம்.ஏ.வேணு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட பல படங்களை இயக்கிய டைரக்டர் கே.சோமு, தமிழின் மிக நீளமான படமான "சம்பூர்ண ராமாயண"த்தை விறுவிறுப்பாக இயக்கி, வெள்ளி விழாப் படமாக்கினார்.
சோமுவின் சொந்த ஊர் பழனி. 1917-ம் ஆண்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் 12-வது பிள்ளையாகப் பிறந்தவர். இவரது மூத்த அண்ணன் உடுமலைப்பேட்டையில் பிரபல வக்கீலாக இருந்தார்.
சோமுவின் மற்றொரு அண்ணன், நாடகங்கள் நடத்துவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து, சோமுவும் நாடகத்தில் நடித்தார். ராஜாஜி எழுதிய "விமோசனம்" என்ற மதுவிலக்குப் பிரசார கதையை நாடகமாக நடத்தினார்.
நகரசபை அலுவலகத்தில் வேலை கிடைத்தும், அதை உதறித் தள்ளிவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்சில் நடிகராகச் சேர்ந்தார். எம்.ஜி.ஆர். தளபதியாக நடித்த "மந்திரிகுமாரி" யில் துணைத்தளபதி வேடம் இவருக்குக் கிடைத்தது.
இவரைப் பார்த்தவர்கள், "யார் இந்த புதுமுகம்? எம்.கே. ராதாவைப்போல் இருக்கிறாரே!" என்றனர்.
சினிமாவில் நடிகராக முன்னேற வேண்டும் என்பதே சோமுவின் ஆசை. ஆனால் இவருடைய திறமையைக் கண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு, துணை டைரக்டர் பதவியை கொடுத்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ், ஆங்கிலத்தில் "ஜங்கிள்" (காடு) என்ற ஆங்கிலப்படத்தைத் தயாரித்தது. அதன் டைரக்டரான வில்லியம் பர்க் என்ற ஆங்கிலேய டைரக்டருக்கு துணை டைரக்டராக சோமு பணியாற்றினார்.
இந்த காலக்கட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பணியாற்றிய கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோருடன் பழகி, அவர்களின் நட்பைப் பெற்றார், சோமு.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாகப்பணியாற்றிய எம்.ஏ. வேணு, அதிலிருந்து விலகி "எம்.ஏ.வி. பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் முதல் படம் "மாங்கல்யம்." இதன் கதை -வசனத்தை எழுதிய ஏ.பி. நாகராஜன், கதாநாயகனாகவும் நடித்தார். பி.எஸ்.சரோஜா கதாநாயகி. மற்றும் ராஜசுலோசனா, எம்.என்.நம்பியார் நடித்தனர்.
1954-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். முதல் படமே, வெற்றிப்படமாக அமைந்தது.
"எம்.ஏ.வி"யின் இரண்டாவது படம் "பெண்ணரசி." இதில் ஏ.பி.நாகராஜனும், சூர்யகலாவும் ஜோடியாக நடித்தனர். மற்றும் கண்ணாம்பா, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா நடித்தனர். இதை சோமு டைரக்ட் செய்தார்.
இதைத்தொடர்ந்து, எம்.ஏ.வேணு -ஏ.பி.நாகராஜன் - கே.சோமு ஆகியோர் ஒரு கூட்டணியாக செயல்பட்டு, பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
அஞ்சலிதேவி - எம்.என்.கண்ணப்பா நடித்த "டவுன் பஸ்" குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா", "பொன்னான வாழ்வே மண்ணாகி போமா" ஆகியவை இதில் இடம் பெற்ற "சூப்பர் ஹிட்" பாடல்கள்.
சோமு இயக்கிய 4-வது படம் "நான் பெற்ற செல்வம்." இதில் சிவாஜிகணேசனும், ஜி.வரலட்சுமியும் ஜோடியாக நடித்தனர்.
பிறகு சோமு இயக்கிய "மக்களைப் பெற்ற மகராசி", வரலாறு படைத்த படமாகும். தமிழ்ப்பட உலகில், வட்டாரத் தமிழ் வசனம் முதன் முதலாக இடம் பெற்ற படம். இது சிவாஜிகணேசன் கொங்குத் தமிழ் பேசி அற்புதமாக நடித்தார். மற்றும் பானுமதி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி ஆகியோரும் நடித்தனர்.
"ரத்தக்கண்ணீர்" (1954) படத்துக்கு பிறகு, மீண்டும் நாடக உலகுக்குத் திரும்பிவிட்ட எம்.ஆர்.ராதாவை திரும்பவும் சினிமாவில் நடிக்க வைத்து, அவர் ஏராளமான படங்களில் நடிப்பதற்கு வழிவகுத்த பெருமை சோமுவுக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் உண்டு.
அவரையும், சவுகார் ஜானகியையும் ஜோடியாக நடிக்க வைத்து, ஏ.பி.நாகராஜன் கதை வசனத்தில், 28 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார், சோமு. அந்தப் படம்தான் 16-2-1958-ல் வெளிவந்த "நல்ல இடத்து சம்பந்தம்." சென்சாரில் ஒரு அடி கூட வெட்டப்படாமல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கிய புதிதில், அதிக பாடல்கள் இடம் பெற்றதால் படங்கள் நீளமாக இருந்தன. அவற்றின் நீளம் சுமார் 20 ஆயிரம் அடியாக இருந்தன.
தமிழில் மிக நீளமான படத்தை, விறுவிறுப்பாக இயக்கியவர் என்ற பெருமை கே.சோமுவுக்கு உண்டு. அந்தப் படம்தான் "சம்பூர்ண ராமாயணம்." 14-4-1958-ல் வெளிவந்த இந்தப் படத்தின் நீளம் 22,953 அடி.

anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum