சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

‘கர்ணன்’ Khan11

‘கர்ணன்’

Go down

‘கர்ணன்’ Empty ‘கர்ணன்’

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:50

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

‘கர்ணன்’ Karnan_us1600x300-1




காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் கர்ணனின் கம்பீரம் மட்டும் குறையவில்லை எத்தனை மறுவெளியீட்டிலும்.
கர்ணன் திரைப்படம் சோகத்திலேயே தொடங்கி சோகத்திலேயே முடிந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லை . அதேபோல் இது புராண காலகட்டக் கதையாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்திலும் வெளிப்படும் தாழ்த்தப்பட்டவனுக்கு நிகழும் அவமானங்களும் அதனூடாக அவன் அனுபவிக்கும்  வலியும் வேதனையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது 1964 ல் வெளிவந்த இந்த கர்ணன் .  அதற்கு உதாரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வீற்றிருக்கும் அரங்கில் அர்ஜுனனைவிட "வில்" வித்தையில் கர்ணன் சிறந்து விளங்கினாலும் பிறப்பால் தாழ்த்தபட்டவன் என்கிற ஒரே காரணத்தால் அந்த இடத்தில்அவன் சந்திக்கும்
 அவமானங்களும், என்னதான் துரியோதனின் நண்பன் , குறுநில மன்னன் போன்ற உயரிய கௌரவத்தை கொண்டிருந்தாலும் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என தெரிந்ததும் அவன் மீதான அவரது மாமனாரின் ஏளன பார்வையும் , வார்த்தைகளுமே அதற்கு அருமையான சாட்சிகள் 
ஊருக்கே கெட்டவனாக இருந்தாலும், என்னதான்  அர்ஜுனனை அவமானபடுத்தும் நோக்கமிருந்தாலும் அந்த போட்டி மைதானத்தில் கர்ணனுக்கு (தாழ்த்தபட்டவனுக்கு) ஆதரவாக துரியோதனன் பேசும் உண்மைகள் சாட்டையடி.  மேலும் மற்றொரு காட்சியில் முத்துக்களை எடுக்கவா சிதறிய முத்துக்களை கோர்க்கவா என துரியோதனன் கேட்பது கர்ணன் துரியோதனன் நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டே மட்டுமல்லாமல் ஒருவேளை துரியோதனனும் நல்லவனா என தோன்றவைக்கும் காட்சிகள்
 இவ்வளவு விசேஷங்கள் இருந்தும் படத்தில் விறுவிறுப்பு  ஆரம்பிப்பது என்னவோ இடைவேளைக்கு பின்னரே அதுவும்  கிருஷ்ணராக என் டி ஆர் வந்த பின்னரே . குறிப்பாக அந்த அரசவை காட்சியை சொல்லியே ஆகவேண்டும் .பாண்டவர்களுக்கு ராஜ்யத்தில் சமபங்கு என தொடங்கி கடைசியில் 5 பேருக்கு 5 ஊரையாவது கொடுங்கள் என கிருஷ்ணர் கேட்பதும் கொடுப்பதில் பிரச்சனையில்லையென்றாலும் அவர்களுக்கு (பாண்டவர்களுக்கு ) ஏன் கொடுக்கவேண்டும் என்பதில்தான் பிரச்சனை துரியோதனனுக்கு அதனிமித்தமாக அங்கே கர்ணனுக்கும் - கிருஷ்ணருக்கும் நடக்கும் வாக்குவாதம்  ஒரு அசத்தல் விவாதம்.

  என்னதான் தர்மம் வெல்லவேண்டும் என காரணங்கள் சொன்னாலும்,
  கிருஷ்ணரின் சாதுரியங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் கதை கர்ணனின் பார்வையில் பயணிப்பதால் கிருஷ்ணர் பாண்டவர்களின் சகுனியோ என எண்ணத்தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை (அந்த இறுதி காட்சியை  தவிர்த்து .)

இறக்கும்வரையில் துரியோதனனை காப்பாற்ற நினைத்தது கர்ணனின் கதாபாத்திரமென்றால் அந்த கர்ணனின் கதாபத்திரத்தை படத்தில் இறக்கும் வரை காப்பாற்றியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனே . அவரது உடலின் ஒவ்வொரு அசைவுகளும் ஒரு வினாவையோ அல்லது  வினாவிற்கு விடையையோ சொல்கிறது  அதிலும் குறிப்பாக தனது தாயிடத்தில் அவர் பேசும் காட்சியில் கோபம்,சோகம்,கம்பீரம் ,பாசம் ,தியாகம் ,தெளிவு என அத்தனையும் ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் விறுவிறுப்பின் உச்சமென்றால் அது அந்த போர் காட்சிகளே "வீரத்தை வீரம் இழிவுபடுத்துமா" என பீஷ்மர் சொல்லி இறக்கையில் தொடங்குகிறது கர்ணனின் போர்கள என்ட்ரி . உண்மையில் போரில் வெற்றிபெற அனைத்து தகுதிகளும் தன்னகத்தே கொண்டிருந்தும் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் நிமித்தமாகவும் , தனது சாபத்தின் பலனாகவும் ,
அறத்தின் வெற்றி பொருட்டும் கம்பீர மரணம் ஏற்கிறான் கர்ணன் . என்னதான் கெட்டவர்களின் கூடாரத்தில் இருப்பினும் ஒரு நல்லவன் அழிந்தானே என பார்வையாளன் ஏங்குவது பரந்தாமனுக்கும் புரிந்ததுபோல அதனிமித்தமாக அவர் கர்ணனை புகழும் பாடலான "உள்ளத்தில் நல்ல உள்ளம்"  பாடலும் ,இறக்கும் தருவாயிலும் அவனது கொடைவள்ளல் குணமும் ," உன் ஒருவனால் அவனை கொல்லமுடியுமா உனக்கு முன்னரே அவனை ஆறு பேர் கொன்று விட்டனர் கடைசியில் செத்த பாம்பை அடித்துவிட்டு நான்தான்கொன்றேன் நான்தான்கொன்றேன் என ஏன் வீராப்பு பேசுகிறாய்" என கிருஷ்ணர் கர்ணனின் வீரத்தை பறைசாற்றுவதும்,அனைத்திற்கும் தலையாய் தர்ம மாதாவே வந்து கர்ணனின் மரணித்திற்கு அழுவதும் என காட்சிகளை அடுக்கி கர்ணனின் கதாபாத்திரத்தின் மீதே ஒரு கம்பீரத்தை பார்வையாளனுக்கு வர வழைத்துவிட்டார்கள் கர்ணனின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனரும் . (இத்தகைய  ஹீரோஹிசம் கொண்ட கர்ணனின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்ற்கொண்டார்கள் என்றால் அந்த கதாபாத்திரத்தை தாங்கிய சிவாஜியைத்தான் அந்த பெருமை சேரும்)

படத்தின் மிகபெரிய பலம் வசனங்கள் வீரர்களை பற்றிய கதையில் விவேகமான வசனங்கள் குறிப்பாக "பாடசாலைக்கு தீ வைத்தாயே அறிவுள்ள நீ அப்படிசெயயலாமா" என கர்ணன் சிறுவனை பார்த்து கேட்க "அறிவில்லாதவர்கள் என்னை அப்படிசெய்ய தூண்டினார்கள்" என அவன் பதில் தருவதும் அதை தொடர்ந்துவரும் வசனங்களும் சிறந்த எடுத்துகாட்டு

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

‘கர்ணன்’ Empty Re: ‘கர்ணன்’

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:51

மேலும் கர்ணனின் தாய் கர்ணனிடம் "நம்மை நாம் யாரென்று அறிந்த பிறகு ரத்த பாசத்தோடு சேர்வதுதனே இயல்பு  என கேள்விகனை தொடுப்பதும் அதற்குக் கர்ணன் "ரத்தபாசத்தை உடையவர்கள் என்னை ஒதுக்கியபோது யாரோ ஒருவன் என்னை ரத்தபாசத்தை உடையவனாக ஆக்கிக்கொண்டானே என அதே கேள்விகனையை நயமாக திருப்பிவிடுவதும் அசத்தல். இப்படி எண்ணற்ற பதிலடி வசனங்களின் ஊடாகவே படத்தில் வெளிப்படுகிறது.
 "உள்ளத்தில் நல்ல உள்ளம் " பாடல் மட்டுமே அல்லாமல் படத்தின் அனைத்து பாடல்களும்  அருமை அதிலும் போர் செய்ய அர்ஜுனன் மறுப்பதும் அதற்கு
"புண்ணியமும் கண்ணனுக்கே பாவமும் கண்ணனுக்கே" என்கிற தொனியில் அமைந்த கண்ணனின்  உபதேசிக்கும் பாடலும் , அந்த சீமந்த பாடலும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல்கள் . (ஆனால் படத்தில்   அடிக்கடி பாடல்கள் வருவது  இப்பொழுது பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் சோதிக்கும் )
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அந்த போர்க்காட்சிகளை எடுக்கவேண்டுமேன்றாலே நிச்சயம் அதிக சிரமம் தேவை அப்படியிருக்கையில் அக்காலக்கட்டத்தில் எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் எப்படி எடுத்தார்கள் என்பது ஆச்சர்யமே அதிலும் அந்த கடைசி பாடலில் அனைத்து குதிரைகளும் ஒரேநேரத்தில் படுத்துகொண்டிருப்பதை ஆச்சரியபடாமல் பார்க்க இயலாது  (அந்த காட்சியை நார்த் இந்தியாவில் 21 நாட்கள் எடுத்தார்கள் என கேள்விப்பட்ட நினைவுண்டு ஆனால் சரியாக தெரியவில்லை )
ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அவனது அன்னையின் வளர்ப்பினை பொறுத்ததே என ஒரு பாடல் சொல்லும் அப்படிபார்கையில் அன்னையையே காணாமல் இருந்தும் நல்லவனாகவே வாழ்ந்த கர்ணனின் மீது குறையேதும் எனக்கு தோன்றவில்லை இருந்தாலும் செஞ்சோற்று கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து செத்து மடிந்தான் இந்த கர்ணன். இதை கர்ணனே உணர்ந்துதான்  "என்னுடைய கடமையும் ,நன்றியும்  என்னையே அழிக்கவா பயன்படவேண்டும்"  , " தர்மம் வெல்லவேண்டும் அதற்கு இப்படியெல்லாம் நடைபெறத்தான் செய்யும் " போன்ற வசனங்களை படத்தில் பேசியிருப்பார்
 கர்ணன் இப்பொழுது பெரிதாக பேசப்பட்டாலும் அக்காலத்தில் அது ஒரு தோல்விபடமே.
மொத்தத்தில் இப்படத்தில் சொல்வதுபோலவே கர்ணன் வாழ்ந்தானா என்பது எனக்கு தெரியாது ஆனால் வாழ்ந்தால் இப்படிதான் வாழவேண்டும் என படத்தை பார்க்கும் ஒவ்வொருவரையும் நினைக்க வைப்பான் இந்த கர்ணன்.
‘கர்ணன்’ Karnan
தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த பந்துலு ஒரு கன்னடக்காரர்.  அவர் மீதான மதிப்புக்கு இதுவும் காரணம்.
எம்.ஜி.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் வித்தியாசமான பின்னணியும் பிரம்மாண்டமும் கொண்ட படம். அதை தயாரித்து இயக்கியவரும் பி.ஆர். பந்துலுவே.
மகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்த ‘கர்ணன்’ திரைப்படம் ஒரு புராணப்படமாக அறியப்பட்டாலும், என்னை பொறுத்தவரை ‘கர்ணன்’ சிறந்த அரசியல் திரைப்படம்.
எனக்கு தெரிந்த வரையில், ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு, மகாபாரதத்தின் கிளைக்கதையாக, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பார்வையோடு இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பரதன் இயக்கிய ‘வைசாலி’ மலையாள படம் மிக முக்கியமான ஒன்று.
தொலைக்காட்சியில் மட்டுமே ‘கர்ணன்’ படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். மீண்டும் திரைக்கு வரவிருக்கிற இந்த படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பேரார்வத்தில் இருக்கிறேன்.
என் பேரார்வத்திற்கு காரணம் பி.ஆர். பந்துலு, இந்த படத்தில் நுட்பமான வசனங்களுக்கு சொந்தக்காரரான சக்தி கிருஷ்ணசாமி; இவர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வசனம். மற்றும் சிவாஜி கணேசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
கோபம், பெருமிதம், வெட்கம். கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் கலந்து நம் கண்முன் கர்ணனை நிறுத்திய சிவாஜியின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.
‘கர்ணன்’ Karnan-2jpg
பெருமிதம்
அதுபோல் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பாடல்கள்; கர்நாடக சங்கீதத்தின் நுட்பம் என்றால், அது கே.வி. மகாதேவன்தான் என்று ஒரு அடையாளம் உண்டு, அது உண்மையும்தான்.
காரணம், பக்தி இலக்கியங்களை திரைப்படமாக்குவதில் சிறந்தவராகவும், நாட்டியத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற மிகச் சிறந்த பொழுது போக்கு படங்களை எடுத்த ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் கே.வி. மகாதேவன், ‘கர்நாடக இசை மேதை’ என்பதை நிரூபித்திருப்பார்.
‘கர்ணன்’ திரைப்படம் கே.வி. மகாதேவைனை போலவே, விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கர்நாடக மற்று இந்துஸ்தானி இசையின் மேதைகளாக அடையாளம் காட்டியது.
கேட்ட மாத்திரத்தில் யாரையும கலங்க வைக்கிற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. பாடலும், ‘ஆயிரம் கரங்கள் நீட்டி.. அணைக்கின்ற தாயே போற்றி…’  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…’
’இரவும் நிலவும் வளருட்டுமே.’. என்று இந்துஸ்தானி இசையில் அமைந்த இனிமை, ‘என் உயிர் தோழி கேளொரு செய்தி..’ என்ற இன்னொரு இனிமை என்று விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் விரிந்த இசையறிவுக்கு இவைகள் சாட்சி.
நம்பிக்கை துரோகம், நயவஞ்சகம், தந்திரம், மோசடி. உறவாடி கழுத்தறுப்பது என்று இன்றைய நிகழ்கால அரசியலோடு பொருத்தி பார்ப்பதற்கு மட்டுமல்ல; இந்திய அரசியலில் என்றைக்குமே நிகழ்கால அரசியலாக இருக்கிற பார்ப்பன உயர்வும், சத்திரியர்களின் கவுரமான அடிமைத்தனமும், பார்ப்பன, சத்திரியர்களின் சூத்திர வெறுப்பும்,  சூத்திர இழிவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
யாராலும் வெல்லமுடியாத அளவிற்கு கர்ணன் பெரிய வீரன், அறிவாளி, நல்லவன், உயர்ந்த குணங்கள் கொண்டவன்; ஆனாலும் துரோணாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களால் மட்டுமல்ல, பிஷ்மர்  போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.
அதுமட்டுமல்ல, கடவுள் கண்ணன் ஒரு நியாயவாதியல்ல, காரியவாதி. கவுரவர்களுக்கு ஒரு சகுனி. அதே சகுனி வேலையை பாண்டவர்கள் சார்பாக செய்வதற்கு, ஒரு கடவுள் கண்ணன் என்று பதிவு செய்திருக்கிறது படம்.
இந்த படம் எடுத்தவர்களுக்கு இதை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், படம் அதை சொல்லியிருக்கிறது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum