Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆராரோ... ஆரிரரோ...
2 posters
Page 1 of 1
ஆராரோ... ஆரிரரோ...
நீண்ட நாட்களாகவே எனக்குள் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி பதிவெழுத வேண்டும் என்று ஆசை. இதை இதை எழுத வேண்டும் என்றெல்லாம் குறிப்பெழுதி வைத்து அது குறித்து ஒரு பதிவும் போட்டிருந்தேன். பின்னர் அலுவலக வேலையின் காரணமாக அது குறித்த தேடல்களைத் தொடர முடியாமல் போய்விட்டது.
இந்தக் காலத்தில் நாட்டுப் புறப்பாடல்களை இசையோடு பாடி தொகுத்து வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் வாய்வழிப்பாட்டுத்தான். எதையுமே நம்மவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. எத்தனை பாடல்கள்... எல்லாமே செவி வழியாய்க் கேட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் தலைமுறைக்கேற்ப மாற்றத்தை உள்வாங்கி நிறைய அழிந்து விட்டது என்றே சொல்லலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் கொல்லங்குடி கருப்பாயி என்றால் அவ்வளவு பிரபலம். அதுவும் நடிக்க வந்திச்சு... ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு அப்பத்தாவாக வரும். அந்தப் படத்துல கூட காட்சிக்கு காட்சி அது நாலு வரி பாடும்... எல்லாமே நாட்டுப்புறப் பாட்டுத்தான். ஆனா அது பாடுனதெல்லாம் தொகுப்பாகவோ சேகரிக்கப்படவோ இல்லை என்பதுதான் உண்மை. பரவை முனியம்மா, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அனிதா குப்புச்சாமி, சிங்கம்பட்டி தங்கராசு இப்படி மிகப் பிரபலமான சிலர் நாட்டுப்புறப் பாடல்களை எல்லாம் கேசட்டுகளாகவும் சீடிகளாகவும் மாற்றி காசு பார்த்தார்கள் என்றாலும் அழிந்து போய்க் கொண்டிருக்கும் நாட்டுப்புற பாடல்களை சேமித்து வைத்தார்கள். அவர்களின் தொகுப்புக்கள் எல்லாம் இனி காலங்களுக்கும் நிலைத்திருக்கும்.
நாட்டுப்புறப் பாடல்கள் என்பது செய்யும் வேலைக்கு ஏற்ப வேலையின் கடினம் தெரியாத வண்ணம் பாடுவதே ஆகும். இது பிறப்பில் ஆரம்பித்து இறப்பு வரைக்குமான கிராமத்து வாழ்க்கையில் பாடப்படுகிறது. திருவிழா, விவசாயம், திருமணம், சடங்கு, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றிற்கும் பாடல் இருக்கிறது. இதில் முக்கியமாக
தாலாட்டுப் பாட்டு
நடவுப் பாட்டு
குலவைப் பாட்டு
மொளக்கொட்டுப் பாட்டு
ஏற்றப் பாட்டு (தண்ணீர் இறைக்கும் போது பாடுவது)
நலுங்குப் பாட்டு
ஒப்பாரிப் பாட்டு
என்பவற்றைச் சொல்லலாம்.
நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த அறிவை கொஞ்சமாவது வளர்த்துக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்கான சூழல் இப்போது அமைவது போல் தெரியவில்லை. அலுவலகத்திலும் கூடுதல் பணி, நாளையெல்லாம் எத்தனை மணிக்கு வருவேன் என்பதே தெரியாது. இந்த வாரத்தில் முடிக்க வேண்டிய பணி இன்னும் ஆரம்பிக்காமல் கிடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தேடுதல் என்பது சிரமமே. ஆனால் தாலாட்டுப் பாடல் குறித்து கொஞ்சம் பேசலாம்.
அன்று கிராமத்தில் பிறந்த குழந்தைகள் எல்லாருமே தாலாட்டுப் பாடல் கேட்டுத்தான் வளர்ந்தார்கள். நகரத்தில் தாலாட்டுப் பாடல் கேட்டு தூங்கிய குழந்தைகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. இன்று அன்றைய நகரத்து நிலமைக்கு கிராமங்களும் மாறியாச்சு. பிள்ளையை தொட்டிலில் போட்டு ஆட்டி விட்டுவிட்டு டிவியில் பாடலைப் போட்டு விட்டு வேலை செய்யப் போகிறார்கள். எங்கிருந்தோ வரும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே பிள்ளைகள் தூங்கப் பழகிவிட்டார்கள்.
குழந்தையை தொட்டிலில் போட்டு 'ரே...ரே..ரே... எங்கண்ணூறங்கு...' என்று ஆரம்பித்து அழகாகப் பாட, தொட்டிக்குள் கிடக்கும் குழந்தை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கும். அந்த இசை அற்ற ராகத்தில் மயங்கி அப்படியே தூங்கிப் போகும். எங்க வீட்டில் எங்க அக்காள்களின் குழந்தைகளுக்கும் அண்ணன்களின் குழந்தைகளுக்கும் அம்மா தாலாட்டுப் பாடுவார். கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்... அவரோடு அடுத்தடுத்த வரிகளை நம்மளும் பாடுவதுண்டு.
தாலாட்டில் கூட பிறந்து வீட்டுப் பெருமையை அழகாகப் பேசுவார்கள். புகுந்த வீட்டை கொஞ்சம் இறக்கித்தான் வைப்பார்கள். அடிச்சது யாருன்னு கேட்கக்கூட பாடலின் ஊடே
'மாமன் அடிச்சானோ... மல்லிகைப்பூச் செண்டாலே...
அத்தை அடிச்சாளோ... அரளிப்பூக் கம்பாலே... '
அப்படின்னு பாடுவாங்க. அடுத்த வரியில
'யாரடிச்சி நீ அழுதே... அழுத கண்ணீர் ஆறாச்சு..
அடிச்சாரைச் சொல்லிவிடு அபதாரம் போட்டிடுவோம்... '
இப்படிப் பாடுவாங்க.
இதையே இப்ப நாட்டுப்புறப் பாடல்கள் பாடுறவங்க கொஞ்சம் நகைச்சுவை ஆக்கிட்டாங்க.... அம்மா இப்படிப் பாடினதும் அப்பா திண்ணையில் இருந்து
'யாரும் அடிக்கவில்லை... அபராதம் தேவையில்லை...
தன்னோடு விளையாட தம்பிப்பாப்பா வேணுங்கிறான்'
அப்படின்னு பாடுவதாகச் சொல்லி சிரிக்க வைக்கிறாங்க. இது நகைச்சுவையா இருந்தாலும் நாட்டுப்புறப் பாடலே வாயில் வரும் வார்த்தைகளைக் கோர்த்து வர்ணஜாலம் ஆக்குவதுதானே என்பதால் கோர்வையாய் பாடுவதால் இதுவும் நல்லாத்தான் இருக்கு.
தாலாட்டுப் பாடும் போது அழுகாம கேக்குற குழந்தை, பாட்டை விட்டுட்டா உடனே அழுக ஆரம்பிச்சிடும். அப்புறம் நாலு அதட்டுப் போட்டு... பூனை வருது... மியாவ், நாய் வருது... வவ். மாடு வருது...ம்மா என்றெல்லாம் சத்தம் கொடுத்து அதட்டிப் பார்த்து முடியாதபட்சத்தில் மீண்டும் தாலாட்டை ஆரம்பித்து விடுவார்கள்.
'ஆராரோ... ஆரிரரோ....
யாராரோ... யாரிவரோ...'
என்று ஆரம்பிக்கும் பாடலில் வரிகள் எல்லாம் ஒவ்வொரு மண்ணுக்குத் தகுந்தவாறு மாறிவரும். வார்த்தைகளைக் கோர்வையாக்கி அழகாகப் பாடுவார்கள். எங்கம்மா கூட தாலாட்டுப் பாட்டை வகைவகையாகப் பாடுவார். ஆனால் எதற்குமே தொகுப்பு இல்லை. ஒவ்வொரு முறை பாடும் பாடலிலும் நல்லதங்காள் கதை, மருது சகோதரர்கள் கதை, மீனாட்சி திருக்கல்யாணம் என எதாவது ஒரு கதையை அழகாய் பாடலாக்கிவிடுவார்கள். தாலாட்டுப் பாடல்களில் வரும் வரிகள் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறேன் பாருங்கள். எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது என்று பாருங்கள்.
"சித்திரை மாசத்துல எங்கண்ணே...
கள்ளழகர் திருவிழாவாம்...
திருவிழாக் கூட்டத்துல எங்கண்ணே...
உங்கப்பா திருதிருன்னு முழிச்சாங்களாம்''
"ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ"
"ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
நீ புத்திமான் பெற்ற கண்ணோ..."
"முத்தோ ரத்தினமோ என் கண்ணே
நீ தூத்துக்குடி முத்தினமோ...
முல்லை மலரோ என் கண்ணே
நீ அரும்புவிரியா தேன்மலரோ.."
"மாடு மேய்க்கப் போகயிலே என் கண்ணே
மரிக்கொழுந்து பறிச்சு வாறேன்...
ஆடு மேய்க்கப் போகயிலே என் கண்ணே
அல்லிப் பூவும் கொண்டு வாறேன்..."
இப்போ எந்தக் குழந்தைக்கும் தாலாட்டுப் பாட்டு இல்லை என்பதைவிட தாலாட்டுப் பாடல் தெரிந்த எல்லோருமே முதுமையின் எல்லையில் நிற்கிறார்கள். இப்போது உத்திரத்தில் தொட்டில்கட்டி அதில் குழந்தையை இட்டு, இடையில் குழந்தை முகம் பார்க்க, தொட்டிக் கம்பு வைத்து 'ரே... ரே.. ரே...' என்றெல்லாம் பாடுவதில்லை. குழந்தை ஏசியில்தான் படுக்கும்... மெத்தையில் போட்டால் போதும் என்றுதான் வளர்க்கிறார்கள். மேலும் கிராமத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும் தொட்டியை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க சக்தியும் இல்லை.
இன்னொரு வருத்தம் என்னன்னா அன்னைக்கு ரெண்டு வயசு மூணு வயசு வரைக்கும் எல்லாம் குழந்தைகளுக்கு பால் கொடுத்தாங்க... இன்னைக்கு ரெண்டு மாசம் கொடுக்கிறதே பெரிய விஷயமா இருக்கு... அழகு போயிருமாம்... எனக்கென்னவோ வருடக் கணக்கில் பால் கொடுத்த, அதுவும் இப்ப போல ஒண்ணு ரெண்டு இல்லை... குறைந்தது அஞ்சு... எங்க வீட்டுல நாங்க ஏழு பேர்... எங்க ஊரில் எல்லார் வீட்டிலும் அஞ்சு, ஆறு, ஏழு தான்... எங்க ஐயா ஒருத்தருக்கு பதினோரு குழந்தைகள். அன்னைக்கு வருடக் கணக்கில் பால் கொடுத்த எங்க கருப்பாயிகளும் காளியம்மாக்களும் கடைசி வரைக்கும் அழகாத்தான் இருந்தாங்க... அவங்க அழகுக்காக எந்த அழகு சாதனப் பொருளும் பயன்படுத்தலை.. இருந்தும் கல்லு வச்ச மூக்குத்தியும் காதுல தண்டட்டியுமாக கட்டையில போறவரைக்கும் அழகிகளாத்தான் வாழ்ந்தாங்க... ம்... இதெல்லாம் இப்ப உள்ள இளவட்டங்களுக்கு சொன்னா புரியவா போகுது.
சரிங்க... ரொம்ப பேசியாச்சு... மீண்டும் முடிந்தால் இன்னும் சிறப்பாக மற்றுமொரு நாட்டுப்புற பாடலை பகிரலாம்... அதுவரைக்கும்
"சாமி அடிச்சிச்சோ சாமந்திப் பூவாலே...
இல்ல பக்கத்து விட்டு மாமி
அடிச்சிச்சோ மல்லிகைப் பூவாலே..."
மேலே உள்ள வரி நானா போட்ட பிட்டுங்க... இந்த மாதிரியெல்லாம் பாட்டு இல்லைன்னு சண்டைக்கு வரக்கூடாது. சரியா...
ஆராரோ... ஆரிரரோ... என் கண்ணே....
மாசி பொறக்குமடா...
உன் மாமன் குடி ஈடேற!
தையி பொறக்குமடா - உங்க
அப்பன் குடி ஈடேற!
ஆராரோ ஆரிரரோ...
என் கண்ணே கண்ணுறங்கு...'
வரட்டா... இருங்க... இந்தப் பாட்டை கேட்டுட்டுப் போங்க...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆராரோ... ஆரிரரோ...
ஆராரோ ஆரிராரோ... ஆய்வுக்கட்டுரை அருமை குமார்!
அக்கால நாட்டுப்புறப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் ரசிப்புக்குரியதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தது. சின்ன வயதில் நானும் இம்மாதிரி பாடல்களை கேட்டிருக்கின்றேன்.
இன்னும் இதே போல் தொடருங்கள்!
அக்கால நாட்டுப்புறப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் ரசிப்புக்குரியதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தது. சின்ன வயதில் நானும் இம்மாதிரி பாடல்களை கேட்டிருக்கின்றேன்.
இன்னும் இதே போல் தொடருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum