Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழைப்பழம்
+2
கவிப்புயல் இனியவன்
anuradha
6 posters
Page 1 of 1
வாழைப்பழம்
வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தைப் படைக்கிறோம். கல்யாணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியே இது.
வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. இவ்வளவு சத்துகள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.
வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலைத் தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகியுள்ளது.
அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளனது.
வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் என்னும் சத்து மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.
மலச் சிக்கலுக்கும் வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டின் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைரேட் சத்தும் 3 மடங்கும் அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு விட்டமீன் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. ஆனால் விலையே ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.
உலகிலேயே மிகவும் பிரபலமான அதிக அளவில் மக்களால் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம்தான்! மலைப்பிரதேசங்களிலும். சமதரைகளிலும் வளரும் வாழைமரம் தனது பூ, காய், கனி, தண்டு என அனைத்து விதத்திலும் உணவாகப் பயன்படுவது நம் நாட்டில் மட்டும்தான்.
உடம்பு சோர்வாக இருக்கிறதா? மனதில் அழுத்தம் ஏற்பட்டது போன்ற உணர்வா? இரண்டு வாழைப்பழங்களை உரித்து வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு விடும். எதனால்? வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், க்ளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை இருப்பதால், உண்டவுடன் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
வாழையின் மருத்துவ பலன்கள்:
•இது நம் உடலில் தோன்றக்கூடிய பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.
•இதில் உள்ள நார்ச்சத்து, பெரும்பாலானோர் அவதிப்படும் மலச்சிக்கல் தொந்தரவிலிருந்து விடுதலை அளிக்கிறது.
•உடலில் நல்ல இரத்த ஓட்டம் அமைய ‘ஹீமோக்ளோபின்’ உற்பத்தியை அதிகரித்து, உடலில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
•பொட்டாசியம் சத்து அதிகமாக, அதே சமயத்தில் உப்பு சத்து குறைவாக வாழைப்பழத்தில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இப்பழம் மிக ஏற்ற உணவாகும்.
•இதே பொட்டாசியம் சத்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் இப்பழம் எப்படி உதவியாயிருக்கிறது? வாழைப் பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒரு வகை புரதம் உடலில் சேரும்போது ‘செரடோனின்’ என்ற பொருளாக மாறுகிறது. இதுவே உடலை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிக அளவு வேலை பளு உள்ளவர்களுக்கு, உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இந்த நிலை ஏற்படாமலிருக்க அவ்வப்போது ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதோடு வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, நரம்புகளுக்குத் தளர்ச்சி அடையாமல் தெம்பூட்டுகிறது.
நம் ஊரில் மதிய உணவு, இரவு உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம். வயிற்றிற்கு, குடலுக்கு இதமாக உள்ள இப்பழம் வயிற்றில் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. எளிமையாகப் பயிரிடப்பட்டு, எல்லா இடங்களிலும், வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழம் விலையும் மலிவாகவே உள்ளது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்தவரின் உதவியை நாட வேண்டாம் என்று. தினம் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டால், நோயே உங்களை அண்டாதே!
ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்!
‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
வாழைப்பழ மில்க் சேக்
தேவையானவை :
வாழைப்பழம் - 2
குளிர்ந்த பால் - 1 கப் (சூடுபண்ணி ஆறவைத்து ப்றீஸரில் வைத்த பால்)
சீனி - 2 டேபிள்ஸ்பூண்
பொடித்த ஏலக்காய் - 1
பாதாம் - 2
முந்திரி - 3
அல்மோண்ட் - 2
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை :
வாழைப்பழம்,பாதாம்,முந்திரி,அல்மோண்ட் சீனி, ஏலக்காய், தண்ணீர் எல்லவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அடிக்கவும்.
நன்கு அடித்தபிறகு குளிர்ந்த பால் சேர்த்து 2 நொடி அடித்தால் போதும்
எப்பொழுது தேவையோ அப்போது அடித்து உடனே குடிக்க டேஸ்டாக இருக்கும்
கோடைக்கால்த்திற்க்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான வாழைப்பழ மில்க் சேக் ரெடி..

anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழம்
என் மகனுக்கு வாழைப்பழத்தினை கண்டால் இது தான் வேலை! அவன் எசென்ஸ், சர்க்கரை என சேர்க்காமல் வாழைப்பழமும் பாலும் மட்டும் சேர்த்து மிக்சியில் அடிச்சு பிரிஜ்ஜில் வைத்து குடிப்பான்.
அதிலும் நல்ல வெயில் நேரம் தினம் குடிப்பார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழைப்பழம்
நானும் ரொம்ப குடித்தேன் இப்போது நிறுத்தி விட்டேன் காரணம் இப்போது நான் துப்பாNisha wrote:என் மகனுக்கு வாழைப்பழத்தினை கண்டால் இது தான் வேலை! அவன் எசென்ஸ், சர்க்கரை என சேர்க்காமல் வாழைப்பழமும் பாலும் மட்டும் சேர்த்து மிக்சியில் அடிச்சு பிரிஜ்ஜில் வைத்து குடிப்பான்.
அதிலும் நல்ல வெயில் நேரம் தினம் குடிப்பார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழம்
ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழைப்பழம்
வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழைப்பழம்
நண்பன் wrote:வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழைப்பழம்
புதிய அறிவு நன்றி*சம்ஸ் wrote:நண்பன் wrote:வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழம்
நண்பன் wrote:புதிய அறிவு நன்றி*சம்ஸ் wrote:நண்பன் wrote:வாழைப் பழம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன் வாரம் ஒரு பழம் அவ்வளவுதான்Nisha wrote:ரெம்ப நல்ல விடயம்! இனி அதிகம் குடிக்காதிங்கோ!
வாழைப் பழம் சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது சாப்பிடாவிட்டால் வாழைப் பழதிற்கு நல்லது பாஸ்
அப்படியா பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வாழைப்பழம்
» தினம் ஒரு வாழைப்பழம்
» எய்ட்டஸ் வராமல் தடுக்கும் வாழைப்பழம்
» வலிப்பு நோயை தடுக்கும் வாழைப்பழம்!!
» நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !
» தினம் ஒரு வாழைப்பழம்
» எய்ட்டஸ் வராமல் தடுக்கும் வாழைப்பழம்
» வலிப்பு நோயை தடுக்கும் வாழைப்பழம்!!
» நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum