Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
3 posters
Page 1 of 1

சுவிட்சர்லாந்து நாட்டின் பூகோள அமைப்பின் அடிப்படையில் எந்த நேரத்திலும் பேரழிவு உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவிஸின் நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து நாடு பேரழிவு பூகம்பம் எந்த நேரத்திலும் எதிர்நோக்கியுள்ள நாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் பூகோள அமைப்பை 2004ம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தற்போது ஒரு புதிய ‘நில அதிர்வு அபாயத்திற்குரிய’ பகுதிகளின் வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில், சுவிஸின் வாலைஸ்(Valais) மண்டலம் தான் அதிகளவில் நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக பேசல், Graubunden, St. Gallen Rhine பள்ளத்தாக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகள் நிலநடுக்கத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய வரைப்படத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருப்பது நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.
கருஞ்சிகப்பாக உள்ள பகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்படும். லேசான பச்சை நிறத்தில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மைய அதிகாரியான ஸ்டீபன் வைமெர், சுவிஸில் எந்த நேரத்திலும் அல்லது சில வருடங்களுக்கும் பிறகும் கூட மிதமான அல்லது கடுமையான அல்லது மிக பேரழிவை உண்டாக்கும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 500 முதல் 800 முறைகள் நில அதிர்வுகள் ஏற்படுகிறது.
உதாரணமாக, பேசில் மண்டலத்தில் 6.6 ரிக்டல் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 1,000 முதல் 6,000 பேர் வரை உயிரிழப்பும், 45,000 பேர் வரை பலத்த காயமடையும் நிலையும், 1.6 மில்லியன் மக்கள் வீடு இழக்க நேரிடும் நிலையும், 50 முதல் 140 பில்லியன் பிராங்க் மதிப்பில் மிக மோசமான சேதாரமும் ஏற்படும் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
எனினும், உடனடியாக பேரழிவு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான எந்தவித உறுதியான ஆதரங்களும் ஆராய்ச்சியாளர்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மிதமான நில அதிர்வு அல்லது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் www.seismo.ethz.ch என்ற இணையத்தளத்தில் ஒவ்வொரு பகுதிகளின் சேதாரத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
ஸ்டீபன் உனக்கு தல சரி இல்லையா மெண்டல் மக்களை இப்படி பயமுறுத்துகிறாய்
ஆராய்ச்சி பன்றாராம் ஆராய்ச்சி
ஆராய்ச்சி பன்றாராம் ஆராய்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
கடவுளே! ஏனுங்க அவரை திட்டுறிங்க? பாவம் நல்லதை எடுத்து சொல்லும் போது ஏன் திட்டணும்.
நல்லாக்கவனியுங்கள் உங்கள் நிஷாக்கா ஊரும் சிவப்புக்குறிக்குள் தான் இருக்கின்றது. நிஜம் சொன்னால் சுவிஸில் நில நடுக்கம், பூக்ம்பங்கள் வந்தால் அழிவு எவரும் எதிர்பாராத பேரழிவாய் இருக்கும் என எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நாங்களே அறிவோம்.
சுத்தி வர மலைத்தொடர்கள். கொஞ்சம் காத்தும் மழையும் அதிகமானால் மலையிலிருந்து கல் உருண்டு வந்து வாகனம் போகும் பாதைகளில் அல்லது வீடுகளில் விழும் நிலை. நில நடுக்கம் வந்தால் அப்படியே சமாதி தான். தோண்டி எடுக்கக்கூட வேண்டாம். அதிலும் அல்ப்ஸ் மலை தொடர்... ஐஸ் மலையுமாய்...? நினைக்கவே தேவையில்லை.
என் வேண்டுதல் எல்லாம் எப்படி என்ன நடந்தாலும் நாங்கள் நான்கு பேரும் ஒரே நேரம் போகணும். ஒருவர் போய் அடுத்தவர் மீந்திருக்கும் நிலை வேண்டாம். அப்படி ஒரு வாழ்க்கையும் தேவையில்லை.
ஆனாலும் இம்மக்களில் நன்மைகளுக்காகவாவது இறைவன் இங்கே பாரிய அழிவை அனுமதிக்க மாட்டான் என நம்புவோம். விசுவாசிப்போம்.
நல்லாக்கவனியுங்கள் உங்கள் நிஷாக்கா ஊரும் சிவப்புக்குறிக்குள் தான் இருக்கின்றது. நிஜம் சொன்னால் சுவிஸில் நில நடுக்கம், பூக்ம்பங்கள் வந்தால் அழிவு எவரும் எதிர்பாராத பேரழிவாய் இருக்கும் என எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நாங்களே அறிவோம்.
சுத்தி வர மலைத்தொடர்கள். கொஞ்சம் காத்தும் மழையும் அதிகமானால் மலையிலிருந்து கல் உருண்டு வந்து வாகனம் போகும் பாதைகளில் அல்லது வீடுகளில் விழும் நிலை. நில நடுக்கம் வந்தால் அப்படியே சமாதி தான். தோண்டி எடுக்கக்கூட வேண்டாம். அதிலும் அல்ப்ஸ் மலை தொடர்... ஐஸ் மலையுமாய்...? நினைக்கவே தேவையில்லை.
என் வேண்டுதல் எல்லாம் எப்படி என்ன நடந்தாலும் நாங்கள் நான்கு பேரும் ஒரே நேரம் போகணும். ஒருவர் போய் அடுத்தவர் மீந்திருக்கும் நிலை வேண்டாம். அப்படி ஒரு வாழ்க்கையும் தேவையில்லை.
ஆனாலும் இம்மக்களில் நன்மைகளுக்காகவாவது இறைவன் இங்கே பாரிய அழிவை அனுமதிக்க மாட்டான் என நம்புவோம். விசுவாசிப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
நிலங்களை இறைவன் மலைகள் மூலம் பலப்படுத்தியுள்ளான் ஆனால் அவன் சோதிக்க நாடினால் அதை யாராலும் தடுக்க முடியாது இவங்கட கண்டு பிடிப்புப்படி ஒன்றும் நடக்காது போக்கத்த பயலுவ நான் இவர்களை நம்புவதே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
Nisha wrote:கடவுளே! ஏனுங்க அவரை திட்டுறிங்க? பாவம் நல்லதை எடுத்து சொல்லும் போது ஏன் திட்டணும்.
நல்லாக்கவனியுங்கள் உங்கள் நிஷாக்கா ஊரும் சிவப்புக்குறிக்குள் தான் இருக்கின்றது. நிஜம் சொன்னால் சுவிஸில் நில நடுக்கம், பூக்ம்பங்கள் வந்தால் அழிவு எவரும் எதிர்பாராத பேரழிவாய் இருக்கும் என எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நாங்களே அறிவோம்.
சுத்தி வர மலைத்தொடர்கள். கொஞ்சம் காத்தும் மழையும் அதிகமானால் மலையிலிருந்து கல் உருண்டு வந்து வாகனம் போகும் பாதைகளில் அல்லது வீடுகளில் விழும் நிலை. நில நடுக்கம் வந்தால் அப்படியே சமாதி தான். தோண்டி எடுக்கக்கூட வேண்டாம். அதிலும் அல்ப்ஸ் மலை தொடர்... ஐஸ் மலையுமாய்...? நினைக்கவே தேவையில்லை.
என் வேண்டுதல் எல்லாம் எப்படி என்ன நடந்தாலும் நாங்கள் நான்கு பேரும் ஒரே நேரம் போகணும். ஒருவர் போய் அடுத்தவர் மீந்திருக்கும் நிலை வேண்டாம். அப்படி ஒரு வாழ்க்கையும் தேவையில்லை.
ஆனாலும் இம்மக்களில் நன்மைகளுக்காகவாவது இறைவன் இங்கே பாரிய அழிவை அனுமதிக்க மாட்டான் என நம்புவோம். விசுவாசிப்போம்.
அவருடையக கருத்தைப் பாருங்கள் சில வருடங்களிலும் நடக்கலாமாம் இவருக்கு வேற வேலை இல்லை சம்பளத்துக்கு வேலை செய்யச்சொல்லுங்கள் சும்மா மக்களைப் போட்டுக் குளப்பாமல்
அக்கா நீங்கள் பயப்படத் தேவை இல்லை நீங்கள் வசிக்கும் ஏரியா முழுவதும் மலைப் பிரதேசம் ஐஸ் மலை சரிவு வந்தாலும் சரி நீங்கள் பயப்பட வேண்டாம் இறைவன் எழுதியதைத் தவிர வேறு எதுவும் நடக்காது
பி கெப்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
ஹாஹா!
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நினைப்பதையே நடத்தி விட்டால்??
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நினைப்பதையே நடத்தி விட்டால்??
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
Nisha wrote:ஹாஹா!
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நினைப்பதையே நடத்தி விட்டால்??
உண்மைதான் இன்னொரு செய்தி கட்டாரில் இந்த வாரம் அதிகமாக தூசிக்காற்று வீசுவதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
கனடாவில் எந்த நேரமும் பூகம்பம் ஏற்படலாம் எனவும் பத்தாயிரம் பேருக்கும் மேல் உயிரிழப்பு வாய்ப்பும் பெரும் பொருட் சேதமும் ஏற்படலாம் என்பதனால் மின்சாரம் இல்லாத நேரம் பாவிக்க தேவையான பட்டரி லைட்டுகள், தண்ணீர் பிஸ்கட் பாக்கெட்கள். அத்தியாவசிய பொருட்களை எந்த நேரமும் தயாராக வைத்திருந்து சிறிய அதிர்வு தோன்றினாலும் வீட்டை விட்டு வெளியே திறந்த வெளி நோக்கி செல்லும் படி அறிவித்திருக்கின்றார்கள்.
கடந்த வாரம் அனடந்த சுறாவளி இனி வரும் பூகம்பத்துக்கு முன்னோடியாக இருக்க்கலாம் என ஆய்வாளர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.
கடந்த வாரம் அனடந்த சுறாவளி இனி வரும் பூகம்பத்துக்கு முன்னோடியாக இருக்க்கலாம் என ஆய்வாளர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
என்னக்கா சொல்றீங்க...
உண்மையா?
உண்மையா?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
சே.குமார் wrote:என்னக்கா சொல்றீங்க...
உண்மையா?
கனடாவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படும் என்றும் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படியும் கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வான்கூவர் மாகாணத்தில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த பேரிடரில் 11,000 பேர் வரை இறக்கவும், 1,28,000 பேர் வரை காயமடையும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பேசிய கனடாவின் புவியியல் ஆய்வு மைய அதிகாரியான ஹோன் கவோ, பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னதாக சில நில அதிர்வுகளை உணர்வதின் மூலம் இந்த அபாயத்தை முன்கூட்டியே கண்டு கொள்ளலாம். தற்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையானது கனணியின் உதவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் வான்கூவர் மாகாணத்தில் ஏற்பட்ட பலத்த சூறாவளியின் தாக்கம் தான் வரவிருக்கும் பேரழிவு பூகம்பத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றார்.
கனடாவின் அவசரகால தயார்நிலை துறை அமைச்சரான நயோமி யமாமோடோ கூறுகையில், சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி தான் வரவிருக்கும் பூகம்பத்தின் எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால முதல் உதவி சாதனங்கள், 3 நாட்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் தடைப்பட்டால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்கூட்டிய தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/48516.html#sthash.1gAafPil.dpuf
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
நான் நினைக்கின்றேன் இனிமேல் சுவிஸ் மக்கள் கூட அவசரகால முன்னெச்சரிக்கைக்குரிய பொருட்களை தயார் நிலையில்வீட்டு வாயிலில் எப்போதும் தயாராக வைத்திருக்கணும்.
முக்கியமானவை
பிஸ்கட் வகை.
குடி நீர்
சுகர் ஆஸ்துமா, வலி மாத்திரைகள்,
காயத்துக்குரிய மருந்துகள்
லைட்டர்
ரோச்லைட்
குளிர் தேசம் என்பதால் ஆபத்துக்கால போர்வைகள்
அத்துடன் முக்கியமாக பாஸ்போர்ட் அடையாள அட்டை, பிறப்புச்சாட்சி பத்திரம், மற்றும் இன்சுரன்ஸ் அட்டைகளை காப்பி செய்து சின்ன பையில் தண்ணீர் புக முடியாத வாறு லெமினேட் செய்தி வைத்து விட வேண்டும்.
சட்டென எடுத்துகொண்டு வெளியேறும் படியாய் எப்போதும் ஒரு பை தயார் நிலையில் இருக்கணும். சின்னதாய் அதிர்வு உணர்ந்தாலும் சட்டென வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
எங்கள் பகுதியில் உயர் மாடிக்கட்டடங்கள் இல்லை. நான்கு மாடி கட்டடங்கள் தான் ஒன்றிரண்டு உண்டு. உயிர்ச்சேதங்கள் இல்லாமல் இருந்தாலே போதும் இருந்தாலும் இனி இன்சுரண்ஸ் காரர் இதுக்கும் சேர்த்து காசு கட்டு என வருவினம். கட்டத்தான் வேண்டும்
எங்கள் வீட்டில் சில வருடங்கள் முன்னால் ஏற்பட்ட நில அதிர்வில் பாத்ரூம் மார்பிள், மற்றும் சுவரில் குட்டி விரிசல் வந்தது. இப்போதும் அப்படியே தான் இருக்கின்றது. அப்பொதெல்லாம் இங்கே நில அதிர்வு வரும் என்பதே தெரியாது.
சில வருடங்கள் முன் ஐஸ்கட்டி மழை பெய்து கிச்சன் ஜன்னல் எல்லாம் சுக்குசுறாய் உடைந்தது. நான் அதற்குள் மற்ற அறைகளின் சட்டர்களை இழுத்து மூடி விட்டதால் நல்ல வேளையாக மற்றவை உடையவில்லை. ஆனால் கிச்சன் புகைபோக்கியினூடான தண்ணீர் உள்ளே வந்தது.
முக்கியமானவை
பிஸ்கட் வகை.
குடி நீர்
சுகர் ஆஸ்துமா, வலி மாத்திரைகள்,
காயத்துக்குரிய மருந்துகள்
லைட்டர்
ரோச்லைட்
குளிர் தேசம் என்பதால் ஆபத்துக்கால போர்வைகள்
அத்துடன் முக்கியமாக பாஸ்போர்ட் அடையாள அட்டை, பிறப்புச்சாட்சி பத்திரம், மற்றும் இன்சுரன்ஸ் அட்டைகளை காப்பி செய்து சின்ன பையில் தண்ணீர் புக முடியாத வாறு லெமினேட் செய்தி வைத்து விட வேண்டும்.
சட்டென எடுத்துகொண்டு வெளியேறும் படியாய் எப்போதும் ஒரு பை தயார் நிலையில் இருக்கணும். சின்னதாய் அதிர்வு உணர்ந்தாலும் சட்டென வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
எங்கள் பகுதியில் உயர் மாடிக்கட்டடங்கள் இல்லை. நான்கு மாடி கட்டடங்கள் தான் ஒன்றிரண்டு உண்டு. உயிர்ச்சேதங்கள் இல்லாமல் இருந்தாலே போதும் இருந்தாலும் இனி இன்சுரண்ஸ் காரர் இதுக்கும் சேர்த்து காசு கட்டு என வருவினம். கட்டத்தான் வேண்டும்
எங்கள் வீட்டில் சில வருடங்கள் முன்னால் ஏற்பட்ட நில அதிர்வில் பாத்ரூம் மார்பிள், மற்றும் சுவரில் குட்டி விரிசல் வந்தது. இப்போதும் அப்படியே தான் இருக்கின்றது. அப்பொதெல்லாம் இங்கே நில அதிர்வு வரும் என்பதே தெரியாது.
சில வருடங்கள் முன் ஐஸ்கட்டி மழை பெய்து கிச்சன் ஜன்னல் எல்லாம் சுக்குசுறாய் உடைந்தது. நான் அதற்குள் மற்ற அறைகளின் சட்டர்களை இழுத்து மூடி விட்டதால் நல்ல வேளையாக மற்றவை உடையவில்லை. ஆனால் கிச்சன் புகைபோக்கியினூடான தண்ணீர் உள்ளே வந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் எந்த நேரத்திலும் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
அதுசரி...
அப்ப பார்த்து இருங்கள் அக்கா...
அப்ப பார்த்து இருங்கள் அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum