Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை முறை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை முறை
ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை முறை
வீட்டில் சுலபமாக செய்ய விக்னேஸ்வர பூஜை (17 09 2015 விநாயக சதுர்த்தி)
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீவிக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
விநாயக சதுர்த்தி: வழிபடும் நேரமும் சிறப்பும்; விநாயகர் அகவல்
ஆவணி மாதம் வரும் ’வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும்.
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.
கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.
அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அந்த திருநாள்ஆவணி மாதம் 31 ம் தேதி வெள்ளி (17.09.2015) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
விநாயகர் விரதம்
1. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மஞ்சளையும் பிள்ளையாராக பிடிக்கலாம். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
2. புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள், 7 நட்களிலேயே கரைத்து விடுகிறார்கள்.
3. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக
அடைந்தார்.
4. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
5. விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
6. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
7. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
8. சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை முறை
விநாயகரின் திருவிளையாடல்களில் அநேகம் உண்டு. அவற்றில் சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இருக்கின்றன.
பிள்ளையாய் வந்த பிள்ளையாரே...
இராவணேஸ்வரன் ஒரு முறை கயிலைக்கு வந்து, சிவ வழிபாடு முடிந்துத் திரும்பிச் செல்லும் வேளையில், சிவலிங்கத்தின் ஜோதி வடிவம் ஒன்றைத் தனக்கு இலங்கையில் வைத்துப் பூஜிக்க வேண்டி இறைவனை வேண்டிப் பெற்றுச் செல்கின்றான். இராவணனிடம் அதைக் கொடுத்துப் பூஜித்து வரும்படி கூறிய ஈசன் அவனிடம், “இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல!” என்று எச்சரித்து அனுப்புகிறார். இராவணனும் அவ்வாறே வழியில் எங்கும் லிங்கத்தை வைக்காமல் வேக வேகமாய் இலங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.
ஆனால் தேவாதி தேவர்களுக்கு அந்த லிங்கம் பாரதத்திலேயே பிரதிஷ்டை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம். இராவணனோ சிறந்த சிவ பக்தன். அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முடியாது. என்ன செய்யலாம்? யோசித்த அமரர் குலத்தவர் விநாயகனைப் பணிய, விநாயகனோ, அவனிடம் இருந்து அறவழியில் மட்டுமே லிங்கத்தைக் கேட்கலாமே அன்றி, பறிக்க முடியாது எனச் சொல்கின்றார்.
பின்னர் ஒரு சிறு பிள்ளை உருவத்தில் இராவணன் செல்லும் வழியில் நின்று கொண்டு அங்கும், இங்குமாய் அலைகின்றார். மாலை ஆயிற்று, மாலைக் கடன்கள் நிறைவேற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது. மேலைக்கடலில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். இராவணன் மாலைக்கடனை எவ்விதம் முடிப்பது எனச் சிந்தித்தான். லிங்கத்தையோ கீழே வைக்க முடியாது. பின்னர் என்ன செய்வது?
யோசனையுடன் பார்த்தவன் கண்களுக்குச் சிறு பிள்ளை ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. உடனேயே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு, “பிள்ளாய்! சற்று நேரம் இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிரு. கீழே வைத்து விடாதே. நான் என் மாலை நேரப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்றி விட்டு வருகின்றேன். அதுவரை உன் கையிலேயே இந்த லிங்கம் இருக்கட்டும்,” என்று சொன்னான்.
“எனக்குக் கை வலித்தால் நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்கவே, அதற்குள்ளாய் நான் வந்து விடுவேன், என்று சொல்லிய இராவணன், மாலைக் கடன்களை நிறைவேற்றக் கடலில் இறங்கி சந்தியாவதனம் போன்ற ஜபங்களை ஆரம்பிக்கின்றான். ஜபங்களில் இராவணன் ஆழ்ந்து போகும் வரை கரையில் நின்ற விநாயகனோ, இராவணன் இனி பாதியில் வர முடியாது என்பது நிச்சயம் ஆனதும், அந்த லிங்கத்தைக் கீழே வைத்து விட்டு, “எனக்குக் கை வலிக்கிறது, நான் போகின்றேன்’ என்று கூவிக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான்.
கோபம் கொண்ட ராவணன், பாதியிலேயே ஓடி வந்து, அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டே வந்து லிங்கத்தை எடுக்கக் கீழே குனிந்தான் ஆஹா, லிங்கம் அப்படியே பிரதிஷ்டை ஆகிவிட்டதே? இது என்ன ஆச்சரியம்? திகைத்தான் இராவணன். சுற்றும், முற்றும் பார்த்தான், விநாயகர் தன் சுய உருவில் காட்சி கொடுத்தார், “இராவணேஸ்வரா, இந்த லிங்கம் இங்கே மேலைக் கடலில், “திருக்கோகர்ணம்”
என்ற பெயரில் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். உனக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. நீ சிவ பூஜையைத் தொடர்ந்து செய்து வா. இது இவ்வாறு இருக்க வேண்டும் என்பது நியமம். ஆகவே கலங்காதே!” எனச் சொல்ல மனம் ஆறுதல் அடைந்த இராவணன், லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டு இலங்கை நோக்கிப் போனான்.
இந்தக் கோயில் கர்நாடகம், கோவா எல்லையில் மேலைக்கடலில் (அரபிக்கடல்) கடலைப் பார்த்தவண்ணமாய் உள்ளது. கோயிலுக்குத் திருக்கோகர்ணம் என்று பெயர்.
* கணேசருக்கு பெருச்சாளி வாகனம் ஏன்?
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப் பெரிய தொல்லைகள் கொடுத்தவன் கஜமுகாசுரன். அவனை எப்படியாகிலும் ஒழித்துவிடும்படி பிள்ளையாரை வேண்டினான் இந்திரன்.
கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். கடுமையான சண்டையில் விநாயகப் பெருமான், தனது ஒரு தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன், திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து கணேசர் மீது பாய்ந்தான். பிளையார் அவன் மீது தாவி ஏறி அமர்ந்தார். இனி எப்போதும் இதுபோலவே என்னைச் சுமக்கக்கடவாயாக என்றும் ‘ஆசிர்வதித்தார்’. இந்த விநாயகர் “கலங்காமல் காத்த விநாயகர்” என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அருள் பாலித்து வருகின்றார்.
மிகப்பெரிய யானையின் முகமுள்ள விநாயகர் மிகச்சிறிய பெருச்சாளியை வாகனமாகக் கொண்டிருப்பது அவரே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். எனவே அது அறியாமையையும் ஆணவத்தையும் குறிக்கிறது. ஆகவே பெருச்சாளியை பிள்ளையார் தமது காலின் கீழ் கொண்டிருப்பதன் அர்த்தம், அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை புலப்படுத்தவே கணபதி பெருச்சாளியை வாகனமாக கொண்டுள்ளார்.
* கடன் தீர்க்கும் குபேர விநாயகர்
பொதுவாக கிழக்கு முகமாகத்தான் விநாயகர் காட்சி அளிப்பார். ஆனால், மதுரை அருகே 18 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனம் அடுத்த மடப்புரம்விலக்கில் கேது பரிகார தலமான, விசாலாட்சி விநாயகர் கோவிலில் தெற்கு முகமாக, திசைமாறிய விநாயகராக காட்சி அளிக்கிறார்.
இவருக்கு தேங்காய் மாலை சாற்றி, சங்கடஹர சதுர்த்தியன்று 108 முறை வலம் வந்து, குபேரன் திசையான வடக்கு முகம் பார்த்து வழிபட்டால் குபேரன் அருள் பெற்று கடன் தொல்லை குறையும் என்பது நம்பிக்கை.
* முந்தி முந்தி விநாயகனே
எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும், அது அதிவிரைவில் முடிய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஒரு மாணவன் “இந்த கடினமான பாடம், பத்தே நிமிடத்தில் என் மனதில் பதிந்து விடாதா?’ என எதிர்பார்க்கிறான். இப்படி எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவசரம் இருக்கிறது.
ஆன்மிகவாதிகள் கைலாயத்தை அடைவதில் நான் முந்தி, நீ முந்தி என போட்டியிடுகின்றனர். அவ்வை, சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியோர் கைலாயத்தை அடைய ஆசைப்பட்டனர்.
சுந்தரர் யானையிலும், சேரமான் பெருமாள் குதிரையிலும் சென்றனர். யானையை குதிரை முந்தியது. ஆனால், வாகனம் ஏதுமில்லாத அவ்வை இவர்களுக்கு முன்னதாகவே கைலாயம் சென்று சேர்ந்தார்.
தன்னைப் பாடும்படி விநாயகர் அவ்வையிடம் கேட்டார். “ஐயனே! நீ இருக்குமிடமே கைலாயம் போன்றது தான். இப்போது, கைலாயத்தில் நின்றபடியே பாடுவதாக உணர்கிறேன்,” என்று சொல்லி, “சீதக்களப செந்தாமரைப்பூம்’ என்று அகவல் பாடி முடித்தார்.
விநாயகருக்கு ஏக சந்தோஷம். தும்பிக்கையால் அப்படியே மேலே தூக்கி கைலாயத்தில் கொண்டு சேர்த்து விட்டார். ஆக, விநாயகரை வணங்குபவர்கள் எதையும் முந்திச்செய்யும் ஆற்றல் பெறுவர்.
* விநாயகரை வழிபட்டு சிருஷ்டியை ஆரம்பித்த பிரம்மா
அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிருஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன.
ஒரு முறை சிவபெருமான் திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிருஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது -
* பிள்ளையார் சுழி ஏன் போடுகிறோம்!
நாம் எதை எழுத ஆரம்பித்தாலும் பிள்ளையார் சுழி போட்டு தான் எழுதுகிறோம் இல்லையா? உலகில் முதன் முதலில் எழுத ஆரம்பித்தவரே விநாயகர் தான். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்.
மகாபாரதம் முழுக் கதையையும் வியாசரின் மனதில் தோன்றி நிலைத்து விட்டது. லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்லோகங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை எப்படி எழுதுவது? அவ்வளவையும் எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம்! தேவலோகத்திலும் அதை எழுத யாரும் முன்வரவில்லை! செழுமையான கற்பனையோடு கூடிய அக்கதையை யார் எழுதுவது? என்ற கேள்வி…..
மிகவும் கடினமான அக்காரியத்தை தான் முடித்துத் தருவதாக விநாயக பெருமான் ஒப்புக்கொண்டார். ஆனால் விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தார். “என்ன அது?” என்று வியாசர் கேட்டார்.
“நடுவில் நிறுத்தக்கூடாது… அப்படி நிறுத்தினால் நான் எழுந்து போய்விடுவேன்” என்றார் விநாயகர்.
சரி என்று ஒப்புக்கொண்ட வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார். எந்தவித எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும் என்றார் வியாசர். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயம் வந்துவிட்டது. என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதுகின்ற வேகத்துக்கு நம்மால் சொல்ல இயலாது போலிருக்கே. உடனே வியாசரும் ஒரு நிபந்தனை விதித்தார்.
ஸ்லோகங்களைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும் என்பதே அது! இந்தப் பெரிய காரியத்திற்காக, தியாக உணர்வுடன் தனது தந்தத்தையே உடைத்து எழுதத் தயாராகி விட்டார் விநாயகர்! (யானைக்குத் தந்தம் அழகல்லவா?)
புரிந்துகொள்ள சிக்கலாக உள்ள இடங்களில் விநாயகர் சற்று யோசிக்க, வியாசர் பல ஸ்லோகங்களை மனனம் செய்து தயாராகி விடுவார்! இப்படித்தான் முழு மகாபாரதமும் வெற்றிகரமாக எழுதப்பட்டது!
எனவேதான் இப்பொழுதும் எதை எழுதுவதென்றாலும் தாளின் உச்சியில் “பிள்ளையார் சுழி’ போடுகிறோம்!
பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில் உள்ளது. பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள “மானா” என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.

விநாயகனே.... விணை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே...
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/vinaayakane vinai.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/vinaayakane%20vinai.mp3[/url]

கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/kanapadhiye varuvaai.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/kanapadhiye%20varuvaai.mp3[/url]

வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீ தானே
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீ தானே
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
மூலப் பரம்பொருளே மூஷிக வாகனே
ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மூலப் பரம்பொருளே மூஷிக வாகனே
முத்திக்கு வித்தாகும் சித்தி விநாயகனே
முத்திக்கு வித்தாகும் சித்தி விநாயகனே
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
நாளும் உன்னை நினைவேன் நாவாறப் புகழ்வேன்
நாளும் உன்னை நினைந்தே நாவாறப் புகழ்வேன்
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின் கணவா
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின் கணவா
தாளும் ஐங்கரமும் தயவும் இருக்கையிலே
தாளும் ஐங்கரமும் தயவும் இருக்கையிலே
சஞ்சலமும் வருமோ? சங்கரனின் புதல்வா
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/velanukku mooththavane.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/velanukku%20mooththavane.mp3[/url]

ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய் கஜமுகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
நாவினில் நல்லிசை
நாவினில் நல்லிசை நலம் அருள்வாய் கஜமுகனே
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/Om enum piranavath.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/Om%20enum%20piranavath.mp3[/url]

கணபதி என்றிடக் கலங்கும் ..
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கனபதி என்றிடக் காலனும் கைதொழும்
கனபதி என்றிடக் கருமம் ஆதலால்
கனபதி என்றிடக் கவலை தீருமே
காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அக்ல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்

ஊர்க்கும் உலகிற்கும் ஒளிதரும் உயிர்ப் பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்காரத் தனிப் பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை ..
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/kanapadhi endrita.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/kanapadhi%20endrita.mp3[/url]

ஓரானைக் கன்றை உமையாள் ..
ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு..
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/Oraanaik kandrai.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/Oraanaik%20kandrai.mp3[/url]

விநாயகர் வழிபாட்டு ஸ்லோகங்கள்!
வாக்கு உண்டாம்: நல்ல மணமுண்டாம்: மாமலரரள்
நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
கஜானனம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்பூபலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்
பாடல்: எஸ். தர்மராஜ் சிவம்
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மதுரை.
[url=http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/VINAYAGAR F_1-2.mp3]http://dinamalar.bc.cdn.bitgravity.com/temple_video/mp3/VINAYAGAR%20F_1-2.mp3[/url]

கணபதிக்கு பிரியமானவை!
கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.
இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.
நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

"கணபதி என்றிட கலங்கிடும் வல்வினை"
"கணபதி என்றிட காலனும் கை தொழுவான்"
"கணபதி என்றிட கருமமே" ஆதலால்
கணபதி என்றிட கவலைகள் தீருமே…
என்றார் திருமூலர்.
அதாவது, அனைத்து விதமான கடவுள்களின் அருளாசியைப் பெறுவதற்கு முதலிலே கும்பாபிஷேகம் என்ற ஒரு தெய்வீக நிகழ்ச்சியை நாம் நடத்த வேண்டும். ஆனால் கணபதிக்கு நாம் எதிலே அவரை அன்பாக அழைக்கின்றோமோ உதாரணத்திற்கு, மஞ்சளை வைத்து தன்னை உருவாக்கினாலும் கூட தன் சக்தியை வெளிப்படுத்துவார்.
உலகத்திலேயே அனைத்து கடவுள்களிலும் மிக சுலபமாக மனித வர்க்கத்திற்கு வசியமாகக் கூடிய கடவுள் கணபதியாவார். அதனால் தான்"விநாயகன்" என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. "வி" என்றால் மேலானவர் என்று அர்த்தம், "நாயகன்" என்றால் முக்கியமானவர். நம் இந்து மதத்திலே தெய்வங்களுக்கெல்லாம், மேலான தெய்வமாகக் கருதப்படுபவர் நம் கணபதியே.
இவரை வணங்காது தொடங்குகின்ற எந்தக் காரியமும் அல்லது தொழிலும் நிச்சயமாக நஷ்டத்திலேயே முடியும். அதனால் தான் அந்தக் காலத்திலேயே காவியங்களைப் படைத்தாலும் சரி, எந்த வேலையை அவர்கள் துவங்கினாலும் சரி முதலிலே கணபதி வழிபாடு செய்து, அனைத்து சுபகாரியங்களிலும், கணபதியை முன்னின்று வைத்துதான் மங்களகரமாக நடத்துகின்றார்கள் என்றால் அவையனைத்திற்கும் கணபதியே காரணம்.
நம் பண்டிகைகளில் முதன்மையாக வருவது இந்த கணபதிதான். "விநாயகர் சதுர்த்தி" வந்த பிறகு தான் அனைத்து முக்கியமான இந்து பண்டிகைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றது. நம் முன்னோர்கள் பிடித்தால் பிள்ளையார் என்று ஒரு மஞ்சளை பிடித்து பிள்ளையாராக வருணித்து அதற்கிடையே அருகம்புல்லை சொருகுவர். அதனால் ஒரு பழமொழியும் ஏற்பட்டது. அது என்னவென்றால், சாமி இல்லையென்றால் சாணத்தைப் பார். சாணியை எடுத்து பிள்ளையாராகப் பிடித்தால் அதில் புழு உருவாகிவிடும். ஆனால் அந்த சாணத்தை எடுத்து அருகம்புல்லைச் சொருகினால், புழுக்கள் வருவதில்லை. அதனால் தான் சாமி பொய்யென்றால், அதாவது கடவுள் இல்லையென்றால் சாணத்தைப் பார் என்று, விநாயகப் பெருமானை கூறினார்கள்.
"ஓம் கம் கணபதயே" என்ற மந்திரத்தை சொல்லி வைத்தார்கள். கம் என்பது விநாயகரின் பீஜங்க மந்திரத்தை காட்டுகின்றது. மன அமைதி ஒரு மனிதனுக்கு இல்லையென்றால், அவர்களுடைய ஜனன ஜாதகத்தில் சந்திரன் பழுதுபட்டிருக்கின்றான் என்று அர்த்தம்.
அப்படிப்பட்டவர்கள் மன அழுத்தம் தீர என்ன செய்ய வேண்டுமென்றால், "ஓம் சுமுகாய நமஹ" என்ற மந்திரத்தை அவர்கள் அடிக்கடி சொல்லிவர, கணபதியின் அருளாசி கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் சுபிட்சமாக இருக்கின்றார்கள்.
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Similar topics
» இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்
» ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரத பூஜை
» ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த திட்டம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து?!
» விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரத பூஜை
» ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த திட்டம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து?!
» விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum