சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எளிய அறிவுரை Khan11

எளிய அறிவுரை

+2
Nisha
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

எளிய அறிவுரை Empty எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Sep 2015 - 18:38

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன்  ஏன்  நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.

ஜார்ஜ் குருட்ஜிவ்  ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு  சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன்  முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.

ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர்  கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக  உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது  என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''

நன்றி தென்றல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Wed 16 Sep 2015 - 19:09

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன்  ஏன்  நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.

இது சூப்பர் பாயிண்ட்ஸ்- அடேங்கப்பா. எல்லோரும் நல்லா படிச்சு  தெரிந்துக்கோங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Wed 16 Sep 2015 - 19:13

அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.

கொஞ்சம் கஷ்டம்   தான். நாம  ஏன் எதுக்கு என கேட்க போனால் அவங்க மலையிலேறி நிற்கவும் சான்ஸ்  இருக்கின்றது  என்ன இருக்கின்றது.  நிஜத்தில் அப்படித்தான் நடக்கின்றது. அதனால் யாரிடமும் இனி ஸாரி பூரி கேட்க போறதாய் இல்லை. 

இனியவன் சார். இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் சார். மணி மணியா கருத்தெல்லாம் போடுகின்றீர்கள். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Wed 16 Sep 2015 - 19:19

.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு  சொல்கிறேன்,'என்று கூறவும்.

நிச்சயம் இதை  கடைப்பிடிக்க முயல்கின்றேன். நன்றி  இனியவன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by *சம்ஸ் Wed 16 Sep 2015 - 20:29

Nisha wrote:
நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன்  ஏன்  நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.

இது சூப்பர் பாயிண்ட்ஸ்- அடேங்கப்பா. எல்லோரும் நல்லா படிச்சு  தெரிந்துக்கோங்கப்பா!

அட! ஆமாங்கோ எல்லாரும் நல்லா படிங்கோ....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Thu 17 Sep 2015 - 0:36

நீங்க படித்தீர்களோ சம்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 7:50

Nisha wrote:நீங்க படித்தீர்களோ சம்ஸ்?
ம்! படித்த பின் தான் பின்னூட்டம் இட்டேன் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 7:56

Nisha wrote:
அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.

கொஞ்சம் கஷ்டம்   தான். நாம  ஏன் எதுக்கு என கேட்க போனால் அவங்க மலையிலேறி நிற்கவும் சான்ஸ்  இருக்கின்றது  என்ன இருக்கின்றது.  நிஜத்தில் அப்படித்தான் நடக்கின்றது. அதனால் யாரிடமும் இனி ஸாரி பூரி கேட்க போறதாய் இல்லை. 

இனியவன் சார். இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் சார். மணி மணியா கருத்தெல்லாம் போடுகின்றீர்கள். 
நான் எதையும் சிந்திக்காது அதிபடியாக ஸாரி கேட்பது வழக்கம். அதனால் இது எனக்கு கஷ்டம் இல்லை.ஸாரி கேட்பதால் எனக்கு ஒன்னும் குறைவதும் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by நண்பன் Thu 17 Sep 2015 - 8:06

சபாஷ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 8:14

நண்பன் wrote:சபாஷ் சியர்ஸ்
எதை சொன்னீர்கள் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Thu 17 Sep 2015 - 10:37

*சம்ஸ் wrote:
Nisha wrote:
அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.

கொஞ்சம் கஷ்டம்   தான். நாம  ஏன் எதுக்கு என கேட்க போனால் அவங்க மலையிலேறி நிற்கவும் சான்ஸ்  இருக்கின்றது  என்ன இருக்கின்றது.  நிஜத்தில் அப்படித்தான் நடக்கின்றது. அதனால் யாரிடமும் இனி ஸாரி பூரி கேட்க போறதாய் இல்லை. 

இனியவன் சார். இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் சார். மணி மணியா கருத்தெல்லாம் போடுகின்றீர்கள். 
நான் எதையும் சிந்திக்காது அதிபடியாக ஸாரி கேட்பது வழக்கம். அதனால் இது எனக்கு கஷ்டம் இல்லை.ஸாரி கேட்பதால் எனக்கு ஒன்னும் குறைவதும் இல்லை.

உணராமல்  சட்டென  கேட்க்கப்படும் மன்னிப்புக்கள் உணர்வை தொடுவதில்லை. அவர்கள் செய்த தவறை உணர்த்துவதுமில்லை. 

எதற்கும் ஒரு அளவு கோல் உண்டு. மன்னிப்பு கேட்கவும்  தான். தவறில்லாத இடத்தில் மன்னிப்பு கேட்பதும் செய்தவை தவறென உணர்ந்தும் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும்  தப்பு. 

உங்கள் மன்னிப்பை  தேவைக்கு மட்டும் பயன் படுத்துங்கள்.  அனாவசியமாய் பயன் படுத்தினால் மன்னிப்பின்  அருமை புரியாமல் போகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 11:13

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.

கொஞ்சம் கஷ்டம்   தான். நாம  ஏன் எதுக்கு என கேட்க போனால் அவங்க மலையிலேறி நிற்கவும் சான்ஸ்  இருக்கின்றது  என்ன இருக்கின்றது.  நிஜத்தில் அப்படித்தான் நடக்கின்றது. அதனால் யாரிடமும் இனி ஸாரி பூரி கேட்க போறதாய் இல்லை. 

இனியவன் சார். இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் சார். மணி மணியா கருத்தெல்லாம் போடுகின்றீர்கள். 
நான் எதையும் சிந்திக்காது அதிபடியாக ஸாரி கேட்பது வழக்கம். அதனால் இது எனக்கு கஷ்டம் இல்லை.ஸாரி கேட்பதால் எனக்கு ஒன்னும் குறைவதும் இல்லை.

உணராமல்  சட்டென  கேட்க்கப்படும் மன்னிப்புக்கள் உணர்வை தொடுவதில்லை. அவர்கள் செய்த தவறை உணர்த்துவதுமில்லை. 

எதற்கும் ஒரு அளவு கோல் உண்டு. மன்னிப்பு கேட்கவும்  தான். தவறில்லாத இடத்தில் மன்னிப்பு கேட்பதும் செய்தவை தவறென உணர்ந்தும் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும்  தப்பு. 

உங்கள் மன்னிப்பை  தேவைக்கு மட்டும் பயன் படுத்துங்கள்.  அனாவசியமாய் பயன் படுத்தினால் மன்னிப்பின்  அருமை புரியாமல் போகும்.

தாங்கள் சொல்வது சரிதான் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by சுறா Thu 17 Sep 2015 - 15:41

ஒருமுறை உதவியாளர் ஒருவர் என்னிடம் பணம் கடனாக கேட்டார். நான் கொடுக்கவில்லை. ஏனெனில் பலமுறை அவர் வாங்கி திருப்பித்தராததால் தான்.

அதனால் அவர் என்னிடம் இப்பவெல்லாம் கோபமாக நடந்துக்கொள்கிறார் :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Nisha Thu 17 Sep 2015 - 15:50

அப்படியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by சுறா Thu 17 Sep 2015 - 15:51

Nisha wrote:அப்படியா?

ஆம் தாயே ஆமோதிக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:20

மனதிற்கான மருந்துகள்

மனவளக் கட்டுரை

1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்கா
விட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப்
 பணத்தைச் செலவழியுங்கள்.

2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்

3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,
நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.

5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ
அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள்
என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!

8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை  ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!

9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,
நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.

10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!

11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.
அதுதான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச்
செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
 நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:21

இனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்!:

✨தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨ நிறைய புத்தகம் படியுங்கள்.
✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
✨ மன்னிக்கப் பழகுங்கள்.
✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:23

அப்பச்சியின் பயிற்சி வகுப்பு

வலைக்குள் பயிற்சி (Net practice)

சிறுகதை: உண்மைக்கதை
----------------------------------------------------
கிரிக்கெட் ஆட்டத்தில் பேட்ஸ்மென்களுக்கும் பெளலர்களுக்கும்
வலைக்குள் பயிற்சியளிப்பார்கள். அது அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக உள்ள பயிற்சியாகும்.

கிரிக்கெட்டிற்கு மட்டுமா? அந்தக் காலத்தில் சில வீடுகளில், தங்கள் குழந்தைகளுக்கு,  அவற்றின் செயல்பாடுகளுக்குப் பயிற்சி
கொடுப்பார்கள். எங்கள் அப்பச்சி எனக்குக் கொடுத்த பயிற்சிகள் அற்புதமானவை. 50 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பது வரை பயிற்சி
கொடுத்தார். ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்ப்பதற்கும் பயிற்சி
கொடுத்தார்.

உடனே கிரிக்கெட்டை நினைத்துக் கொண்டு குழம்பாதீர்கள்.
வாழ்க்கையில் பலரை எதிர்  கொள்வதற்கான பயிற்சி.
ஜெயிப்பதற்கான பயிற்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லாம் சுவையாக இருக்கும். அப்பச்சி சொன்ன கதைகளைப்
படித்த நீங்கள், அவர் கொடுத்த பயிற்சிகளையும் படியுங்கள்.
சிறுசிறு சம்பவங்களாக எழுதித் தொகுத்துக் கொடுத்துள்ளேன்
-----------------------------
பயிற்சி 1

அப்போது எனக்கு 14 வயது. ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்த சமயம்.
வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன். உள்ளே நுழைந்த அப்பச்சி
என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்னடா, சும்மா உட்கார்ந்திருக்கே?”

“தேர்வு முடிந்து விட்டது. படிப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் சும்மா உட்கார்ந்திருக்கேன்”

“சும்மா உட்காரக்கூடாது. கல்கி, விகடன், குமுதமெல்லாம்
வைத்திருப்பாயே! அவற்றை எடுத்துப் படி”

“இந்த வாரம் வந்தது வரை, எல்லாவற்றையும் படித்து விட்டேன்”

“பைண்டு பண்ணின தொடர்கதைப் புத்தகமெல்லாம் இரவல் வாங்கி வைத்திருப்பாயே - அவற்றை எடுத்துப் படி”

“அவையெல்லாம் ஒன்றும் இல்லை...”

“அப்படியா? சரி வா, நான் உனக்கு வேலை தருகிறேன். மாணிக்க
முதலியார் கடை தெரியுமா?”

“தெரியும்”

“அவர் கடைக்குப் போய் வேஷ்டி இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு வா”

அவர் சொன்னால் உடனே செய்ய வேண்டும். உடனே கிளம்பி விட்டேன். எங்கள் வீட்டில் இருந்து அவருடைய கடை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெய்யில். நடந்துதான் போக வேண்டும். ஓட்டமும் நடையுமாகச் சென்று விசாரித்து விட்டு வந்தேன்.

”இருக்கிறதாம்”

உடனே அவர் கேட்டார்: “4 முழம் வேஷ்டியா அல்லது 8 முழம் வேஷ்டியா?”

”அதைக் கேட்க வில்லை”

”மறுபடியும் போய்க் கேட்டுக் கொண்டு வா”

கேட்டுக் கொண்டு வந்து சொன்னேன். “இரண்டுமே இருக்கிறதாம்”

“மில் வேஷ்டியா அல்லது கைத்தறி வேஷ்டியா?”

“அதைக் கேட்கவில்லை” என்று சொன்னவன் மனதிற்குள் நொந்து
கொண்டு மூன்றாவது முறையாக  நானே கிளம்பிச் சென்று விட்டேன்.

என்னைப் பரிதாபமாகப் பார்த்த கடை முதலாளி, ஒரு சீட்டில் எல்லா விபரத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டார்.

சென்னிமலை கைத்தறி வேஷ்டி, மீனாட்சி மில் மற்றும் மேட்டூர் மில்
வேஷ்டி, 4 முழம், 8 முழம், அவற்றின் விலை விபரம் என்று அனைத்து தகவல்களையும் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார்.

அதைப் படித்துப் பார்த்தவுடன், இனிமேல் இவனை அனுப்புவதற்கு
வழி இல்லை என்று தெரிந்து கொண்டதோடு, புத்திமதிகள் சொன்னார்.
 ”முதல் தடவை சென்ற போதே இந்த விபரங்களை நீ கேட்டு எழுதிக்
கொண்டு வந்திருக்க  வேண்டாமா?”

”ஆமாம்’ என்று சொன்ன நான், அடுத்த தடவை என் தந்தையார்
என்னை எங்கே அனுப்பினாலும் கடைந்து எடுத்துக் கொண்டு முழு விபரங்களுடன்தான் வருவேன்.

பிறகு ஒரு காலத்தில் என் தந்தையார் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.” எங்கள் சுப்பையாவை விட்டால் கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பான். எடுப்பதோடு மட்டுமல்ல, அதைப் பொட்டலம் போட்டு மேலே சீட்டை வைத்து, எடையையும், விலையையும்
எழுதிக் கொடுத்துவிடுவான்.
--------------------------------------
பயிற்சி 2

எங்கள் தந்தையார், வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும்
கடை வைத்திருந்தார். அவரிடம் சாமான்கள்  வாங்கிச் சென்ற ஒருவன்
ஐநூறு ரூபாய்கள் பாக்கி வைத்து விட்டுப் போய் விட்டான், அப்போது
எனக்குப் பதினைந்து வயது. அதை வசூலிக்கும் பொறுப்பு எனக்கு
வந்து சேர்ந்தது.

ஐநூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை.

எங்கள் கடை சேலம் கல்லாங்குத்துப் பகுதியில் இருந்தது. அந்த வாடிக்கையாளரின் வீடு செவ்வாய்ப் பேட்டையில். எங்கள்
தந்தையார் கொடுத்த முகவரியை வைத்து வீட்டைக் கண்டு பிடித்து விட்டேன். ஒரு நாளா அல்லது இரண்டு நாளா? சுமார் ஒரு மாத
காலம் தொடர்ந்து அலைந்திருக்கிறேன். பாதி நாட்கள் அந்த ஆசாமி
வீட்டில் இருக்க மாட்டார். இருந்தாலும் ஏதாவது சால்ஜாப்புச்
சொல்லி என்னை அனுப்பி வைத்துவிடுவார்.

ஒரு நாள் அவருடைய மனைவிக்கே கோபம் வந்து தன் கணவரைக்
கடிந்து கொண்டு சொன்னார்: “பாவம் அந்தப் பையன் (என்னைத்தான்) எத்தனை தடவை வருவான். படிக்கிற பிள்ளை. நீங்கள் செய்வது
உங்களுக்கே நல்லா இருக்கிறதா? ஒவ்வொரு தடவையும் ஐம்பது,
நூறு என்று கொடுத்திருந்தால் இந்நேரம் கடன் கழிந்திருக்குமே.
இன்று நீங்கள் முழுத் தொகையையும் கொடுத்து அந்தப் பையனை
அனுப்பி வையுங்கள். இல்லை  என்றால் நான்  கொடுக்கிறேன். எங்கள்
நைனா நேற்றுக் கொடுத்து விட்டுப்போன பணம் இருக்கிறது.”

என்னவொரு ஆச்சரியம்? அந்த ஆசாமி முழுப்பணத்தையும் அன்று
கொடுத்து விட்டார்.

வானமே வசப் பட்டது போலிருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் ஓட்டமும் நடையுமாக கடைக்கு வந்து சேர்ந்தேன்.

எங்கள் கடையில் எங்கள் அப்பச்சியின் முன்பாக அவருடைய
நண்பர்கள் இருவர் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அதை
மறந்து விட்டு, ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைக்கச் சொன்னேன்.
ஒரு ஆர்வக் கோளாறுதான். அவர்  மகிழ்வார் என்று நினைத்துச்
சொன்னேன்.

”அவன் முழுப் பணத்தையும் கொடுத்து விட்டான் அப்பச்சி”

அவர் அதைக் காதில் வாங்காமலேயே, சொன்னார்.” பக்கத்து
ஓட்டலுக்குப் போய் நீ காப்பி சாப்பிட்டு விட்டு, எங்கள்
மூவருக்கும்  காப்பி வாங்கிக் கொண்டு வா!”

நான் அதன்படியே செய்து விட்டு, கடையின் முற்பகுதியில் இருந்த
ஸ்டூலில் அமர்ந்தேன். சற்று நேரத்தில், வந்திருந்த நண்பர்கள்
எல்லாம் கலைந்து சென்று விட்டார்கள்.

அதற்குப் பிறகு எங்கள் அப்பச்சியிடம் இருந்து சரியான டோஸ்
விழுந்தது. அடிக்காத குறை. அடித்திருந்தால் கூட வலிக்காது.
அப்படி ஒரு தொடர் திட்டு.

“ஏன்டா மடப் பயலே! ஒரு இடத்திற்குப் போய்விட்டு வந்தால், நான்
கேட்ட பிறகுதான் நீ சொல்ல வேண்டும். அதுவரை பொறுமையாக இருப்பதற்கு என்ன கேடு? முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டான்
என்று சத்தமாகச் சொல்கிறாயே! என்னிடம் ஒருவன் பணம் கேட்டு வந்திருப்பான். அல்லது நான் கொடுக்க வேண்டிய பாக்கியைக்
கேட்டு வந்திருப்பான். அது தெரியாமல் நீ உள்ளதைப் போட்டு
உடைத்தால் என்ன அர்த்தம்? இனிமேல் இது போன்று செய்யாதே.
நான் என்ன ஆச்சு என்று கேட்ட பிறகுதான் நீ சொல்ல வேண்டும்
தெரிகிறதா?”

தெரிகிறது” என்று முனுமுனுப்போடு சொல்லி வைத்துத் தப்பித்துக் கொண்டேன்.

இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேச வேண்டும் என்பதை அன்றுதான்
கற்றுக் கொண்டேன்.
--------------------------------------
பயிற்சி 3

எங்கள் தாயார் நன்றாக சமைப்பார்கள். விதம் விதமாக சமைப்பார்கள்.
எங்கள் அப்பச்சி, என்னையும் என் உடன் பிறப்புக்களையும் சேர்த்து
ஆறு பிள்ளைகள் என்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். எங்கள் தாயார் அன்போடு பறிமாறுவார்கள்.

எங்கள் தாயார் பாகற்காயையே மூன்று விதமாகப் பொரியல்
செய்வார்கள். அன்றும் செய்திருந்தார்கள்.

எனக்கு அப்போது பாகற்காய் பிடிக்காது. தட்டில் வைத்திருந்ததை
ஒதுக்கி வைத்துவிட்டு மற்றதை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

என் தந்தையார் அதைக் கவனித்து விட்டுக் கேட்டார்கள்.

”அதை ஏன்டா ஒதுக்கிவைத்துவிட்டாய்?”

“கசக்கும். எனக்குப் பிடிக்காது” இது நான்.

“எதையும் ஒதுக்கக்கூடாது. அதன் அருமை உனக்கு இப்போது தெரியாது. சாப்பிடு!” என்று சொன்னவர், என்

தாயாரைப் பார்த்துச் சொன்னார்கள்,, 
“அவனுக்கு இன்னொரு கரண்டி வை”

அப்படியே நடந்தது. நான் வேண்டா வெறுப்பாக வைத்த பாகற்காய்
கறியை மென்று ருசித்துத் திங்காமல், அப்படியே கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து விழுங்கி வைத்தேன்.

அதைக் கவனித்த என் தந்தையார், என் தாயாரிடம் சொன்னார்.
” இன்னும் பத்து நாட்களுக்கு, அவனுக்கு மட்டும் என்று
பாகற்காய் செய். அவன் மென்று தின்று, உருளைக் கிழங்கை
ருசித்துச் சாப்பிடுவதைப் போல இதையும் சாப்பிடும் வரை
விடாதே!”

அப்புறம் என்ன?

பத்து நாட்களில் பாகற்காயை எனக்குப் பிடித்துப் போய் விட்டது.
வேறு வழியில்லாமல் பிடித்துப் போய் விட்டது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இறைவின் படைப்பில் உள்ள
எந்தக் காயையும், கனியையும் ஒதுக்காமல் சாப்பிடும்  பழக்கமும்
ஏற்பட்டது.
----------------------------------------------
பயிற்சி 4

அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாதாரண நகராட்சிப் பள்ளிதான். எங்கள் பள்ளிக்கு மூதறிஞர் ராஜகோபாலாச்சாரி அவர்கள் படித்த பள்ளிகூடம் என்ற பெருமை உண்டு. பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு வைத்து, பெற்ற மதிப்பெண்களுக்கான பட்டியல் சீட்டைக் (Progress Report) கொடுத்து, பெற்றோர்களிடம்
காண்பித்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வரச் சொல்வார்கள்.

நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். என் தந்தையாரிடம்
அந்த சீட்டைக் கொடுத்து, கையெழுத்திட்டுத்  தாருங்கள் என்று
கேட்பேன். சற்று   தள்ளி  நின்றுதான் கேட்பேன்.

சட்டென்று சீட்டை வாங்கி, மதிப் பெண்கள் இருக்கும் பகுதியை இடது கையால் மறைத்துக் கொண்டு, அதாவது  மதிப்பெண்களைப்
பார்க்காமல் கீழே உள்ள இடத்தில் கையெழுத்தைப் போட்டுக்
கொடுத்து விடுவார்.

”மார்க்கை நீங்கள் பார்க்கவில்லையே” என்று மெதுவாகச் சொன்னால், அதற்கு அதிரடியாக அவர் இப்படிச் சொல்வார்:

” நான் பார்த்து என்னடா ஆகப் போகிறது? உனக்கு அக்கறை இருந்து
நீ தானே படித்து மார்க் வேண்டும்? நான்  சொல்வதற்கு என்ன
இருக்கிறது? ஒன்று மட்டும் தெரிந்து கொள். என்  நண்பர்தான்
வங்கியில் வேலை வாய்ப்பு அதிகாரி. நீ எப்படிப் படித்தாலும்
அவரிடம் சொல்லி உனக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்து
விடுவேன். நன்றாகப் படித்து முடித்தால் ஆபீசர் வேலை. சுமாராகப்
படித்தால் கிளார்க் வேலை. படிக்கவில்லையா? ப்யூன் வேலை. என்ன
வேலைக்குப் போக    வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்.
அதற்கு ஏற்றாற்போல படி. கட்டிக் கொடுக்கிற சோறும் சொல்லிக்
கொடுக்கிற சொல்லும் இரண்டு நாட்களுக்கு மேல் வராது!”

அது 1966ம் ஆண்டு. அப்போது வங்கிகள் தனியார் வசம்தான் இருந்தன.
தேசிய மயமாக்கப் படவில்லை. இந்தியன் வங்கியில் என் தந்தையாரின் நண்பர் பள்ளத்தூர் ஸ்டைல் அருணாசலம் செட்டியார் என்பவர் தான்
ஸ்டாஃப்  டிபார்ட்மென்ட்டின் மேலாளராக இருந்தார்.

நான் படித்து முடித்தவுடன் ஸ்டேட் பாங்கில் வேலை கிடைத்தது.
ஆனால் நான் அதில் சேரவில்லை. அது தனிக் கதை.
அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
--------------------------------------------
பயிற்சி 5

என் தாயருக்கு நான் மூத்த மகன். அதனால் என் மீது அவர்களுக்கு
அலாதிப் பிரியம். பள்ளிக்கூடம் விட்டு மாலை 5 மணிக்கெல்லாம்
வீட்டிற்கு வந்து விடுவேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் திடீரென்று
மாஜிக் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதைப் பார்த்து
விட்டு நான் வீட்டிற்குத் திரும்பும் போது மாலை மணி ஏழு ஆகிவிட்டது.

அதற்குள் என் தாயாருக்குக் கவலையாகி, நான் வருகிறேனா என்று
வீட்டு வாசலில் நின்று தெருவை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்த என் தந்தையார் இப்படிச் சொன்னாராம்:

“என்ன எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ பார்ப்பதற்காக
அவன் உடனே வந்து விடுவானா? வரும்போதுதான் வருவான். நீ
உள்ளே போய் வேறு வேலையைப் பார். வந்தால் சேர்த்துக் கொள்.
இல்லை என்றால் ஆறில் ஒன்று போனால் ஐந்து. அதை மனதில் வை.
கவலை இருக்காது!

அதுதான் அப்பச்சிக்கும் ஆத்தாளுக்கும் உள்ள வித்தியாசம் என்றாலும்
அந்த மனப் போக்கை பின்னாளில் நானும் கடைப் பிடித்திருக்கிறேன்.
நாம் கவலைப் பட்டு ஒன்றும் ஆகாது. நடப்பதுதான் நடக்கும் நடக்க
வேண்டிய  நேரத்தில்தான் நடக்கும் என்று மனது தானாகவே
சமாதானமாகும் மனப்   பக்குவம் அது!
-----------------------------------------------
பயிற்சி 6

ஒரு நாள் எங்கள் அப்பச்சி நிறையக் காய்கறிகளை வாங்கிக் கொண்டு
வந்து எங்கள் தாயாரிடம் புலவு சாதம் போடச் சொன்னார்கள். எங்கள்
தாயார் புலவு சாதம் போட்டால் சூப்பராக இருக்கும். ஹைதராபாத் தம்
கட்டி பிரியாணி என்று கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா அந்த
முறையில் செய்வார்கள்.எங்கள் தாயாரும் சரி என்று சொல்ல,
வீட்டில்  பிரியாணி அரிசி மட்டும் இல்லை. பாசுமதி அரிசி எல்லாம்
அப்போது கிடையாது. சீரகச்  சம்பா அரிசியைத் தான்
உபயோகிப்பார்கள்.

எங்கள் அப்பச்சி என்னைப்போய் ஒரு கிலோ சீரகச் சம்பா அரிசி
வாங்கிக் கொண்டு வரும்படி பணித்தார்கள். எங்கள் தெருவில்
அப்போது சித்தம்மா கடை’ என்ற பெயரில் விருது நகர்
அண்ணாச்சியின் கடை ஒன்று இருந்தது.

அண்ணாச்சி கையை விரித்துவிட்டார். சீரகச் சம்பா ஸ்டாக் இல்லை.
நான் திரும்பி வந்துவிட்டேன்.

எங்கள் அப்பச்சியிடம் இருந்து பத்து நிமிடம் தொடர் டோஸ்!

“அவர் கடையில் இல்லை என்றால் என்னடா? நேரே வ.உ.சி
மார்க்கெட்டிற்குப் போய் வாங்கிக் கொண்டு வர  வேண்டியதுதானேடா. முட்டாப் பயலே இதை எல்லாம் சொல்லியா தருவார்கள்? ஏதாவது காரியமாகப் போனால் அதை முடிக்காமல் திரும்பி வரலாமா?
செத்துப்போன  ஒருத்தனின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு
சுடுகாட்டிற்குப் போனால் எரிக்காமல் திரும்புவோமா? என்ன
சிக்கல் என்றாலும் எரித்துவிட்டுத் தானே திரும்புவோம். எவனாவது
கொண்டு போன பிணத்தை வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு வருவானா? ஒவ்வொரு காரியமும் பிணத்தைப் போன்றதுதான். புறப்பட்டுச்
சென்றால்,  அதை முடிக்காமல் திரும்பக்கூடாது. பாதியில் திரும்பக்
கூடாது. என்ன புரிந்ததா? மார்க்கெட்டிற்குப் போய் வாங்கிக் கொண்டு
வா!”

நானும் அப்படியே செய்தேன். இந்தப் பிண உதாரணம் சற்று
அருவருப்பாக இருந்தாலும், அது உணர்த்தும் செய்தி
அற்புதமானதாகும். அதற்குப் பிறகு இன்று வரை  எந்த ஒரு
செயலையும் கையில் எடுத்தால் முடிக்காமல் நான் விட
மாட்டேன். அப்படியொரு மனப் பக்குவம் உண்டானது!

கட்டுரையின் நீளம் கருதியும், படிக்கும் உங்களின் பொறுமை கருதியும் இப்போது இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அப்பச்சியின் மற்ற பயிற்சிகளை   இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:24

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

முடியாது.

எதிர்த்துப் போராடினால் என்ன ஆகும்?

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நாம் வெறுப்படைய நேரிடும் என்கிறார் ஒரு
சிந்தனையாளர். அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நாம்
ஆனந்தமாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார் அவர். ஓஷோ’
தான் அவர். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.
----------------------------------------------------------
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக்
கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ
அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?''
என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப்
போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்! நாய்களின்
குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

ஆகவே சுற்றியிருப்பதை, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 15:29

ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்?

மனவளக் கட்டுரை
----------------------------------------------------------------------------
உலகில் உள்ள மக்களை எல்லாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அல்லது இரண்டாகப் பிரிக்கலாம்.

1.  பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறவன்.
2. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறவன்.

ஆனால் இரண்டு பேர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேர்களுமே பணத்தேடலில் உள்ளார்கள். செல்வம் உள்ளவனும் பணத் தேடலில் உள்ளான். செல்வம் இல்லாதவனும் பணத் தேடலில் உள்ளான். நூறு கோடிகள் உள்ளவன் ஆயிரம் கோடிக்கு முயற்சி செய்கிறான். ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளவன் அடுத்த நிலைக்கு (next stage)முயற்சிக்கிறான்.

என்னால் நிறையப் பேர்களை அடையாளம் காட்ட முடியும். உதாரணத்திற்கு சிலரை மட்டும் அடையாளப் படுத்துகிறேன். ஜி டிவியின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா, முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா, பில் கேட்ஸ், வாரென் ப்ஃபெட் போன்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் பணம் தேவைப்படுகிறது, உங்களுக்கும் எனக்கும் உள்ள லெவல் ஆயிரங்கள் என்றால். அதுவே சிலருக்கு லட்சங்கள். சிலருக்குக் கோடிகள். எண்ணிற்குப் பின்னால் வரும் சைபர்கள்தான் வேறுபடும்.

மெய்ஞானம் என்ன சொல்கிறது? பணத்தின் மீது ஆசை வைக்காதே! ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறது.
விஞ்ஞானம் என்ன சொல்கிறது. ஆசைப்படு. கனவு காண்.
அப்போதுதான் உன் கனவுகள் நனவாகும் என்கிறது.

அந்தக் கனவை கவியரசர் கண்ணதாசன் மூன்றே வரிகளில் சொன்னார்:

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் 
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

நிர்வாக இயலும் அதைத்தான் சொல்கிறது. ஆசைப்படுவதை நிறுத்தாதே, நிறுத்தினால் உன் வளர்ச்சி முடிந்துவிடும் 
(your prosperity will come to an end)

”சரி எல்லோரும் பணம் சம்பாதிக்க முடியுமா?

”முடியும்”

”ஜாதகப்படி இரண்டாம் வீடும் பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால்தானே பணம் வரும்?”

“அப்போது முயற்சிக்கு என்ன பலன்?”

“என்ன சொல்கிறீர்கள்? முயற்சி செய்தால் பணம் வருமா?”

“உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந்தால் பணம் வரும்.
உழைக்கிறேன் என்று நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு மணி நேரம் கூலிக்கு மண் வெட்டினால் பணம் வராது. புத்திசாலித்தனம் கலந்த உழைப்பில் பணம் வரும். அதாவது செய்யும் தொழிலைப் புத்திசாலித் தனத்தோடு செய்தால் பணம் வரும்.”

“ஜாதகம்?”

“கவியரசர் கண்ணதாசன் கவிஞராக வேண்டும் என்பதுதான் ஜாதகம். ஆனால் அவர் 5,000ற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், அதற்குச் சமமான எண்ணிக்கையில் தனிப்பாடல்களையும் எழுதினாரே - அதை எப்படி ஜாதகக் கணக்கில் சேர்க்க முடியும்? அல்லது அதிர்ஷ்டக் கணக்கில் எப்படிச் சேர்க்க முடியும்? அவர் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தார். புத்திசாலித் தனத்தோடு உழைத்தார்.அதனால்தான் அவரால் சாதிக்க முடிந்தது. மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது.” ” 

நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால், மாடுகளை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அந்த எண்ணிக்கை உன்னுடைய உழைப்பால் மாறுபடும். நான்கு மாடுகள் நாற்பதும் ஆகலாம் அல்லது நானூறும் ஆகலாம். அதைத்தான் நமது முன்னோர்கள் முயற்சி திருவினையாக்கும் என்றார்கள்.

சரி, இப்போது சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.

ஒரு செட்டியார் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தோட்டம், துறவு, வயல், நகை நட்டு, மனைகள், இடங்கள், வங்கி இருப்புக்கள், பங்குப் பத்திரங்கள் என்று எல்லா செல்வங்களும் உள்ள வசதி படைத்த சீமான் அவர்.

இத்தனை வசதிகள் இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு வீட்டில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்காமல்,தன்னுடைய உழைப்பால், சிறப்பாகப் பணி செய்து, நிதிவர்த்தகத்தில் மென் மேலும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்தார். கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய மகன் வணிகவியலில் முதுகலைக் கல்வியை முடித்து விட்டு வெளியில் வந்தான். மகனையும் தன்னுடைய தொழிலேயே ஈடுபடுத்த விரும்பினார் அவர்.  அதற்காக அவனுக்குத் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு வேலை கொடுத்ததோடு, அவரே முன்னின்று பயிற்சியும் கொடுக்கத் துவங்கினார்.

"ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது. கூடை கவிழ்ந்தால் எல்லா முட்டைகளும் உடைந்து, ஊற்றிக் கொண்டுவிடும். பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகவே நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை நான்கு பங்காக வைத்து, ஒரு பங்கை நிலத்திலும் (lands & real estates), ஒரு பங்கை தங்கத்திலும் (gold) , ஒரு பங்கை பங்கு வணிகத்திலும் (shares), மீதமுள்ள ஒரு பங்கை வட்டித் தொழிலிலும் (money lending) ஈடுபடுத்த வேண்டும்.புரிந்ததா?”

“ஒன்று இறங்கினாலும், மற்றவை நம் முதலீட்டைத் தக்க வைக்கும். நம்மைக் காப்பாற்றும்”

“கரெக்ட்” என்று சொன்னவர், அந்த நான்கு தொழிலிலும் உள்ள நெளிவு சுளிவுகளைச் சொல்லிக் கொடுத்து, சுமார் 15 நாட்களுக்குப் பயிற்சியையும் கொடுத்தார்.

அடுத்து, இருக்கும் செல்வத்தையும், சேரும் செல்வத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்று சொல்லிக்கொடுத்தார். அதற்கும் ஒரு விரிவான 15 நாள் பயிற்சியைக் கொடுத்தார்.

ஒரு மாதம் ஆயிற்று?

அவனுக்கு என்று தன் அலுவலகத்தில் ஒரு தடுப்பறையைக் கொடுத்து(exclusive cabin) வேலையைத் துவக்கி வைத்தார்.

அன்று மாலை, வேலைகள் முடியும் சமயத்தில் அவரை வந்து சந்தித்த அவன், “அப்பச்சி ஒரே ஒரு சந்தேகம் உள்ளது.கேட்கலாமா?” என்றான்.

“ஆஹா...தாராளமாகக் கேள்”

”உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்' என்றார் கவியரசர் கண்ணதாசன். அதுபோல துவக்கம் என்று
ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்று இருக்குமல்லவா? பிஸினஸின் துவக்கத்தை மட்டும் சொல்லிக் கொடுத்தீர்கள். பிஸினசின் முடிவை நீங்கள் சொல்லித் தரவில்லையே? அதாவது எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித் தரவில்லையே? 

”நல்ல கேள்வியடா மகனே! அதற்கு பதில் இருக்கிறது. சொல்கிறேன் கேள்” என்று அவர் அசத்தலாக சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை, மற்றும் நேரம் கருதியும், எனது ஆக்கம் மற்றும் தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். கட்டுரையின் அடுத்த பகுதி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by பானுஷபானா Mon 26 Oct 2015 - 15:11

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.

கொஞ்சம் கஷ்டம்   தான். நாம  ஏன் எதுக்கு என கேட்க போனால் அவங்க மலையிலேறி நிற்கவும் சான்ஸ்  இருக்கின்றது  என்ன இருக்கின்றது.  நிஜத்தில் அப்படித்தான் நடக்கின்றது. அதனால் யாரிடமும் இனி ஸாரி பூரி கேட்க போறதாய் இல்லை. 

இனியவன் சார். இத்தனை நாளா எங்கே இருந்தீர்கள் சார். மணி மணியா கருத்தெல்லாம் போடுகின்றீர்கள். 
நான் எதையும் சிந்திக்காது அதிபடியாக ஸாரி கேட்பது வழக்கம். அதனால் இது எனக்கு கஷ்டம் இல்லை.ஸாரி கேட்பதால் எனக்கு ஒன்னும் குறைவதும் இல்லை.

உணராமல்  சட்டென  கேட்க்கப்படும் மன்னிப்புக்கள் உணர்வை தொடுவதில்லை. அவர்கள் செய்த தவறை உணர்த்துவதுமில்லை. 

எதற்கும் ஒரு அளவு கோல் உண்டு. மன்னிப்பு கேட்கவும்  தான். தவறில்லாத இடத்தில் மன்னிப்பு கேட்பதும் செய்தவை தவறென உணர்ந்தும் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும்  தப்பு. 

உங்கள் மன்னிப்பை  தேவைக்கு மட்டும் பயன் படுத்துங்கள்.  அனாவசியமாய் பயன் படுத்தினால் மன்னிப்பின்  அருமை புரியாமல் போகும்.

அருமையான விளக்க்ம் நிஷா...
சட் சட்டென்று மன்னிப்பு கேட்பது தான் செய்த தவறை உணராமல் கேட்பது போலாகும்.

தன் தவறை உணர்ந்து இனிமேல் இது போல செய்யமாட்டேன் என உறுதியாக இருந்து மன்னிப்பு கேக்கனும் அது தான் மன்னிப்புக்கு மரியாதையே...

சிலர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டுமீண்டும் அதே தவறை செய்வாங்க . அப்புறம் மன்னிப்பு எதற்கு கேக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிய அறிவுரை Empty Re: எளிய அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum