சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தேர்தல் அலப்பறைகள் Khan11

தேர்தல் அலப்பறைகள்

4 posters

Go down

தேர்தல் அலப்பறைகள் Empty தேர்தல் அலப்பறைகள்

Post by சே.குமார் Fri 9 Oct 2015 - 19:54

தேர்தல் அலப்பறைகள் 14417057973197vishal_team


நாட்டுல தேர்தல் வந்தாலே இந்த அரசியல்வாதிங்க முதற்கொண்டு அல்லக்கைகள் வரை பண்ற அலப்பறை இருக்கே அது சொல்லி மாளாது. அதுவும் இப்போ நாமெல்லாம் காசுக்கு அடிமையான பின்னாடி இவனுக பண்ணுற கூத்து... அப்பப்பா... ஐந்து வருட கொள்ளைக்காக எப்படியெல்லாம் பணம் கொடுத்து பாஸாகப் பார்க்கிறார்கள் என்பதை சென்ற தேர்தல் அப்பட்டமாகக் காட்டியது. பஞ்சாயத்து தேர்தல்ல இருந்து பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் ஓட்டுப் போடும் வரை ராஜ உபச்சாரம்தான். அதற்கு அப்புறம்...?
சரி விடுங்க... கேடுகெட்ட அரசியல் நமெக்கெதுக்கு... அதனால நாம இப்போ சினிமாக்காரனுங்க தேர்தலைப் பற்றி பேசலாம் வாங்க... இன்னைக்கு நடிகர் சங்க தேர்தல்தான் தமிழகத்தின் மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது. வாத்தியார் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததால் செத்தாலென்ன... குடும்பத்தை நிர்வாணமாக்கி குதூகலித்தாலென்ன... சிறுமியை அப்பன், அண்ணன், காவல்துறை என பங்கு போட்டு கெடுத்தாலென்ன... அதெல்லாம் தேவையில்லை... நடிகனுங்க அடிச்சிகிறதுதான் தலைப்புச் செய்தியாக வர வேண்டும். என்னா நாமதான் கட் அவுட் வச்சி அதுக்கு பாலாபிஷேகமும் பண்ணுவோமுல்ல... பக்கத்து வீட்டுப் பெண்ணை கெடுத்துக் கொன்னுட்டானுங்க என்றாலும் ம்... அப்படியா.... ஐய்யோ பாவம் என கடந்து போகத் தெரிந்தவர்கள்தானே நாம்... சரி... இன்னைக்கு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் செய்திகளை வாரி வழங்குகின்றன. இவன் அவனைத் திட்டினான்... அவன் இவனைத் திட்டினான் என்று சொல்லி பரபரப்புச் செய்திகளை கொடுப்பதில் யார் முதல் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
தேர்தல் அலப்பறைகள் Sarath


பல வருடங்களாக இருக்கும்தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல தலைவர்கள் வந்து சென்ற போதும்... நடிகர் சங்கம் கடனில் கிடக்கு... அப்படி இருக்கு... இப்படியிருக்கு என்று புலம்பிக் கொண்டே இருந்தார்களே ஒழிய முன்னணிகள் எல்லாம் அதைத் தீர்த்து வைப்பதற்கு முன் வரவில்லை. விஜயகாந்த் பொறுப்பேற்ற பின்னர்தான் நடிகர்களை ஒருங்கிணைத்து கலைவிழா நடத்தி கடனில் இருந்து மீட்டார். அதன் பின் அவர் அரசியல்வாதி ஆகிவிட அரசியல் செய்பவர்கள் நடிகர் சங்க தலைவராக இருக்கக்கூடாதென தற்போதைய தலைவர் சரத்குமாரும் இன்னும் சிலரும் அவரை வெளியேற்றினர். அதன்பின் சரத்குமார் தலைவரானார். சரத்குமார் அரசியல்வாதியாக இல்லையான்னு கேக்கப்படாது... ஏன்னா ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை அம்மா வாழ்கன்னு எழுதுறாராம்... இந்தச் சங்கம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்ததுன்னு நினைக்கிறேன்... ஏன்னா பத்து வருசமா தேர்தல் வைக்காமல் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள்... ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து வண்டி ஓட்டினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமையோ தலைகீழா இருக்கு...
சரத்குமார் அணி என்றும்  விஷால் அணி என்றும் கபடிக் களத்தில் வீரர்கள் மோதலுக்கு தயாராய் நிற்பது போல் நிற்கிறார்கள். நாசர் தனக்கு நண்பன் என்பதால் கமல், நாசர் தலைவராக போட்டியிடும் விஷால் அணிக்கு ஆதரவாய்ப் பேசியிருப்பார் போல, அவருக்கு நான் அந்த சமயத்தில் உதவினேன்... இந்த சமயத்தில் உதவினேன்னு சொல்லி கமல் தூண்டிவிடுகிறார் என சரத்குமார் அறிக்கை விடுகிறார். உதவி செய்ததை சொல்வது என்ன வகை என்று தெரியவில்லை. அந்தப்பக்கம் விஷாலுக்கு ஆதரவாக பேசும் வடிவேலு கிணற்றைக் காணோமுன்னு ஒரு படத்துல நான் சொன்னேன்... இங்க நடிகர் சங்கத்தையே காணோமய்யான்னு சாதிகளை கடைவிரிக்கிறார். நாம சட்டசபைத் தேர்தல்ல தேவையில்லாமப் பேசித்தான் நமக்குன்னு இருந்த இடத்தை விட்டுவிட்டு வீட்டில் கிடக்கிறோம். இப்போ இங்க வேற வந்து கூவி நமக்கான ஆப்பை நாமே சரியாக செதுக்கி வைத்துக் கொள்கிறார்.
தேர்தல் அலப்பறைகள் Kamal-support-vishal-team

விஷாலுக்கும் சரத்குமாருக்கும் பிரச்சினை... சொந்தப் பிரச்சினையை நடிகர்களுக்குள் கொண்டு வந்து பிரிக்கிறார் என்று ஒரு பக்க வாதம்... அப்படி என்னய்யா சொத்துப் பிரச்சினை என்றால் அதுதான் இல்லை... பொண்ணு பிரச்சினை... யாரு... சரத்குமார் மகள்... அதுவா... ஆமா... அதேதான்யா... சிம்பு கூட ஒரு படத்துல நடிச்சிச்சே... படம் பேரு கூட போடாபோடி... ரசிகர்கள் கூட போடியின்னு சொன்னாங்களே... ஆமா...அதுக்குத்தான்... மாமன் மாப்பிள்ளை சண்டை அப்படின்னு சொல்றாங்க... இல்லை கிரிக்கெட் விளையாடப் போனப்போ... பிரச்சினையின்னும் சொல்றாங்க... எது எப்படியோ இது அவங்க குடும்பப் பிரச்சினை... இதுல எதுக்குய்யா எல்லாரையும் பிரிக்கிறீங்கன்னு தெரியலை.
பல தரப்பட்ட பிரச்சினைகளைக் கடந்து வாலு கொடுத்த சந்தோஷத்தில் இருந்த சிம்புவை ஏத்திவிட்டு பேச விட்டுருக்காங்க சரத்குமார் அணியினர்... ராஜேந்தர் மகனுக்கா பேசச் சொல்லிக் கொடுக்கணும்... சும்மா நான் என் குடும்பத்தை பிரிக்ககூடாதுன்னு நினைக்கிறேன்... எல்லோரும் என் சொந்தங்கள் என்று சொல்லிக்கொண்டே அடேய்... உடேய்... அவனே... இவனேன்னு சும்மா போட்டுத் தாக்கிப்புட்டாப்லயில்ல... அதுவும் பாருங்க... என்னவோ ஒரு வார்த்தை... அது... ஆமா... intention... அதேதான்... எனக்குத் தெரிந்த ஒருவர் குடித்து விட்டால் ஆக்சுவலி... அக்சுவலின்னு கொன்னு எடுத்துடுவாரு... சிம்பு பேசினதில் அதிகமாக சொன்னது இந்த intention. ஆனா அளு சும்மா வடிவேலு மாதிரி எல்லாம் பேசலை... ரொம்ப விபரமாப் பேசினாரு... நிறைய விஷயங்களை எடுத்து வைத்தாரு... இடையில் தனுஷ் என்னோட போட்டியாளந்தான்... அவன் கூட எப்படியாச்சும் சேர்த்து வைக்கணும்ன்னு சொல்றான்னு சொன்னார். எல்லாம் சரிதான்.... ஆனால் எதுக்காக இவ்வளவு கோபமான பேச்சு... அப்பா புலி...புலின்னு சும்மா உறுமி... உசுப்பேத்தி... தளபதிய குதிச்சு வர வச்சி... இன்னைக்கு அது எலியாயிப் போயிக்கிடக்கு... இதுல புள்ள ஆய்... ஊயின்னு பேசி.... ம்... சரத்குமாரு ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாரு... பாவம் சிம்பு... இன்னும் உலகம் அறியாதவராய் இருக்கிறார்.
தேர்தல் அலப்பறைகள் Vishal-and-simbhu



இளைஞர்கள் கையில் கொடுங்கன்னு விஷால் குதிக்கிறாரு... சரித்தான்... என்னைக்குமே நம்மளை ஆளுறவன் எல்லாமே வேற மாநிலத்துக்காரனுங்கதானே.... தமிழன் தமிழனை ஆள்வதில்லையே... விஷாலுக்கும் ஆசை.... ஆளட்டும்... நாளைக்கு அரசியலுக்கும் வரலாம்... நாமும் ஓட்டுப் போட்டு மேலே ஏற்றிப் பார்ப்போம்... நகைக்கடை, சினிமா, அரசியல், பைனான்ஸ் என எல்லாவற்றிலும் நமக்கு முன்னால் பக்கத்து மாநிலத்துகாரனுங்கதானே இருக்கானுங்க... ஆனா அரசியல் பண்ணுவதற்காகவே பிரச்சினைகளை ஊதிப் பெரிசாக்கும் வேலையை விஷால் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது.
நாங்கள் வந்தால்.... ஏய் நாங்கள் வந்தால்... என அரசியல்வாதிகள் போல அறிக்கைகள் விடுகிறார்கள். இவர்கள் சொல்வதை எல்லாம் செய்வார்களா? குறிப்பாக நாடகக் கலைஞர்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் எனச் சொல்கிறார்கள்... செய்வார்களா? இல்லை இதெல்லாம் தேர்தல் நேரத்து அறிக்கைதானா..? என்பதை திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில்... இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைவிட மோசமான பேச்சுக்கள், ஜாதியை இழுக்கும் அநாகரீக வார்த்தைப் பிரயோகம் என விறுவிறுப்பாய் இருக்கிறது. இதில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் உடைந்த சங்கம் இனி ஒன்றாய் கூடுமா என்பது சந்தேகமே... இவர்கள் எல்லாரும் பேசுவதைப் பார்த்தால் சாதாரண மனிதர்களாய்ப் பேசவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. எல்லோர் மனதிலும் சினிமாக் ஹீரோயிசம்தான் தெரிகிறது. அது கற்பனை வாழ்க்கை என்பதை மறந்து பேசுகிறார்கள்... எது எப்படியோ நடிகர்களுக்காக அடித்துக் கொள்ளும் ரசிகர்களை வைத்து பிழைப்பை நடத்தும் நடிகர்கள் இன்று காரசாரமாக அரசியல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... வெல்பவர் நாளை முதல்வராகக் கூட நம்மால் உட்கார வைக்கப்படலாம்... கூத்துக் கட்டுறவன் கூடி நின்னா சந்தோஷமே... தெருவுக்கு தெரு தனித்தனியா கூத்துக்கட்டினா... யாருக்கு நஷ்டம்?
சரிங்க... புதுக்கோட்டை விழாவுக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கு... எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கங்க...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தேர்தல் அலப்பறைகள் Empty Re: தேர்தல் அலப்பறைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Oct 2015 - 9:14

இதுவும் ஒரு வகையில் சினிமாதான் அனைவரும் நடிக்கிறார்கள் தேர்தல் முடிந்ததும் மாமன் மச்சான் என்று கிள்ளிவிளையாடுவார்கள் இவர்கள் பின்னால் ரசிகர் என்ற பட்டாளம் ஏமார்வது மட்டும் தான் உண்மை 
நீங்கள் மேலே சுட்டிக்காட்டியது போல் சுதந்திர இந்தியாவில் எத்தனை கொடுமைகள் அதை தட்டிக்கேட்க பேச யாருக்கும் நாதியில்லை அவரவரின் சுயநலத்திற்காக சமுகத்தை பகடைக்காயாய் உபயோகிக்கிறார்கள் 
அனைத்தையும் தாண்டி அண்மையில் இடம்பெறுகின்ற குற்றங்கள் எங்கும் நடந்தேறாத கண்டிராத குற்றங்களாக இருந்தும் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை மாட்டிறைச்சி சாப்பிட்டவனை கொலைசெய்தது தலித் குடும்பத்தினை வீதியில் நிர்வாணமாக பொலிசாராலே இழுத்துச்செல்வது போன்ற விடயங்கள் இந்த நாட்டை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதை யாரும் சிந்திக்கவில்லை 

அருமையான பதிவு அண்ணா நன்றிகள்


தேர்தல் அலப்பறைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேர்தல் அலப்பறைகள் Empty Re: தேர்தல் அலப்பறைகள்

Post by Nisha Tue 13 Oct 2015 - 0:27

எனக்கு பிடிக்காத சம்பந்தமில்லாத ஆர்வம் காட்டாத துறைப்பா. சினிமாவும் அரசியலும்  சும்மா பொழுதைபோக்கவென படித்து செல்வேனே தவிர  சிந்தித்து கருத்திடும் படியெல்லாம் இல்லை. 

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.  ஊரான் காசை வித்து  உத்தமரென பேரெடுக்கணும் என பாடு படுவது எப்படின்னு இவங்க கிட்டதான் கற்றுக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தேர்தல் அலப்பறைகள் Empty Re: தேர்தல் அலப்பறைகள்

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 12:33

அடடடடா இவர்கள் தொல்லை பெருந்தொல்லையாக உள்ளது அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் குறை கூறிக்கொண்டு கேவலப்படுத்துகிறார்கள் பல வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளது நிஷா அக்கா கூறிய கருத்துப்படி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இன்று அடித்து நாளை அணைத்துக்கொள்வார்கள் இவர்கள் நடிகர்கள்தானே

விரிவான தகவலுக்கு நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேர்தல் அலப்பறைகள் Empty Re: தேர்தல் அலப்பறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 2020 அலப்பறைகள்
» சம்பள நாள் அலப்பறைகள் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum