சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

ரசித்த பொன்மொழிகள் Khan11

ரசித்த பொன்மொழிகள்

+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரசித்த பொன்மொழிகள் Empty ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:33

வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.
******
நாம் வீழ்ச்சி  அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.
******
எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.
******
வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக் குடித்துத் தனக்குத்தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக் கொள்ளும்.
******
வழக்கம் என்பது வன்மையான,வஞ்சகமான ஒரு வாத்தியார்.அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின் காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.
******
நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம்,பயன்,நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
******
தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்ல முயற்சி   செய்யக் கூடாது.
******
பேராசைக்குக் கூட  நிறைய சொத்து உண்டு.ஆனால் பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை.
******
புகழை நோக்கி ஓடாதீர்கள்;புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.
******
என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்.
******
சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும்.பெருந்துன்பங்கள் ஊமையாக்கும்.
******
தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.
******
தலைக் கனம் என்பது இரண்டு வகை.தன்னைப்  பெரிதாக நினைப்பது.முதல் வகை.தலைக்கனமுள்ள பிறரைத் தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.
******
செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்தைப் பொறுத்தது.
******
சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவோம்.
******
சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம்,கர்வம்,பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
******
படைக்கலங்களின் முழக்கம்,சட்டத்தின் குரலை மூழ்கடித்து விடுகிறது.
******


நன்றி : ஐன்ஸ்டின் பொன்மொழிகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:34

ஆசையும்,இன்பம் துய்த்தலுமே நம்மை ஆத்திரக்காரர்களாக உருமாற்றுகின்றன.
******
மூடனுக்குக் கல்வியறிவின் மீது கோபம்;குடிகாரனுக்கு யோக்கியன் மீது ஆத்திரம்;ஒழுக்க சீலனுக்கு அயோக்கியத்தனம் செய்யச் சொல்வதே தண்டனை.தேகப் பயிற்சியே சோம்பேறிக்குத் தண்டனை.
******
மக்கள் தங்கள் ஆசைகளுக்கும்,விசமத்திற்கும் வன்செயலுக்கும் உற்சாகம் என்னும்  பெயரை சூட்டுகிறார்கள்.
******
நமது மூளையை மற்றவர்களின் மூளையோடு தேத்தப் பள பளப்ப்பாக்கிக் கொள்வது நல்லது.
******
நல்ல சுபாவமும்,நேர்மைப் பயிற்சியும் இல்லாதவனுக்கு மற்ற அறிவனைத்தும் தொந்தரவுதான்.
******
பெண்ணொருத்தி தன் அழகை  அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த வித சித்திரவதையையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.
******
ஒரே மாதிரியான இரு தலைமுடியோ,இரு தானியங்களோ,இரு கருத்துக்களோ,இந்த உலகில் இருந்ததில்லை.வேறுபாடு தான் இந்த உலகின் பொதுவான பண்பு.
******
மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சில நேரங்களில் வெற்றி பெறுவதுண்டு.
******
தடைகளை நீக்க வன்முறை நிரந்தரமாக்கப் படும்போது பேரழிவே எஞ்சியிருக்கும்.
******
தலைமையினைக் கேள்வி கேட்க முடியாத செயல்பாடுகள் உண்மைக்குப்
புறம்பானவைகளாகவே இருக்கும்.
******
ஒரு பொருளைப் பார்ப்பதால் மட்டும் முக்கியத்துவம் ஏற்படாது.எப்படிப் பார்க்கிறோம் என்பதனால்தான் ஏற்படும்.
******

நன்றி : ஐன்ஸ்டின் பொன்மொழிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:35

கவிஞர் வைரமுத்து எழுதிய ''பாற்கடல்'' என்னும் நூலிலிருந்து:

கல்மேல் உளி விழுவது போன்ற தாக்குதலும்,
விதை மேல் மழை விழுவது போன்ற பாராட்டும்
மனிதனை உயர்த்தும்.
******
அன்பு என்பது கூட ஒரு வகை ஆதிக்கம்தான்.
******
நடை கற்றுத் தருவதே பெற்றோர் கடமை;
சாலைகள் அவரவர் உரிமை.
******
நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு.
வளரும் பிறைக்குக் களங்கம் இல்லை.
******
பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சிகள்.
சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறோம்.
பல பறந்து விடுகின்றன.
******
அறிவைப் பொருளாக்குதல் பலம்.
பொருள் தேடும் அறிவு மட்டும் போதும் என்பது பலவீனம்.
******
நூறாண்டு வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான்.
சில நாட்கள் வாழப்போகும் பூ சிரித்துக் கொண்டே மலர்கிறது.
******
பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு.
******
நின்ற இடத்திலேயே நிற்க வேண்டுமா?
ஓடிக் கொண்டே இரு.
******
சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம்.
கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:36

வால்டேரின் பொன்மொழிகள்.
-------------------------------------

உலக சிந்தனையாளர்களில் மிக சிறந்த இடத்தில் இருப்பவர் பிரான்ஸ் தேசத்தின் வால்டேர்.அவரின் பொன் மொழிகள் சில:
******** 
ஒரு கிராமம் நல்ல கிராமமாக இருக்க ஒரு மதம் இருந்தாக வேண்டும்.கடவுள் இல்லையென்றால் அவரைக் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிறது.சாதாரண மக்களுக்கு பரிசு மற்றும் தண்டனை வழங்கும் கடவுள் ஒருவர் தேவை.
********
ஆதி காலத்தில் அறியாமையும் பயமுமே கடவுள்களை உருவாக்கின. உற்சாகம்,விருப்பம்,வஞ்சனை ஆகியவை அவற்றை அலங்கரித்தன அல்லது சீரழித்தன.வலிவானவை அவற்றை வணங்குகின்றன.உடனே நம்பி விடும் பழக்கம் அவற்றைப் பாதுகாக்கின்றன.பழக்க வழக்கங்கள் அவற்றை மதிக்கின்றன.மனிதர்களின் குருட்டுப் பார்வை அவற்றை சாதகமாக்கிக் கொள்ள, கொடுங்கோன்மை அவற்றைத் தாங்குகின்றன.
********
மனசாட்சி என்பது கடவுளின் குரல் அல்ல.வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் அள்ளிக் கொட்டிய தடைகள்,அவர்கள் மனதில் தேங்கியிருப்பதே மனசாட்சி ஆகிறது.
********
நான் கடவுளைத் தொழுது கொண்டே இறக்கிறேன்;நண்பர்களை நேசித்துக் கொண்டே இறக்கிறேன்.என் விரோதிகளை வெறுக்காது மூட நம்பிக்கைகளை மிகவும் வெறுத்துக் கொண்டே இறக்கிறேன்.
********
சின்னப் புத்தி உடையோரை பொறாமையே அழிக்கிறது.
********
நாம் அனைவரும் பலவீனம் மற்றும் தவறுகளுடன் அமைந்தவர்கள். ஒருவருக்கொருவர் நம்முள் இன்னொருவரின் தவறுகளை மன்னிப்போமாக!இதுவே இயற்கையின் முதல் சட்டம்.
********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:37

நீ நொந்து போயிருந்தால் இறந்த காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள். மிகுந்த ஆர்வத்துடன் இருந்தால் எதிர் காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
நல்ல அமைதியுடன் இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
********
இரவு நம் கண் பார்வையிலிருந்து உலகை மறைக்கலாம்.ஆனால் இந்த அண்டத்தைக் காட்டுகிறதே!
********
பெரிய மனிதர்களின்  கோபம், எதிரிகளின் முழு சமர்ப்பணத்தைத்தான் எதிர்பார்க்கிறது.
********
பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன.அச்சம் வஞ்சகமாகிறது.வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் நஞ்சாக்குகிறது.
********
அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு.
********
வல்லமை என்றும் கீழோரால்  வெறுக்கப்படுகிறது.
********
காதலிலிருந்துதான் வாழ்க்கைக்கு உண்மை இன்பம்பெற முடியும்.நோய்க்குப் பரிகாரமும் அதுவே.பரிகாரம் இல்லாத நோயும் அதுவே.
********
அனுபவம் என்பது தேர்வை முதலில் நடத்தி விட்டுப் பின்னர் பாடம் சொல்லிக் கொடுப்பது.
********
மனிதனின் அச்சம் தான் நரகம்.
அவனது பேராசைதான் சொர்க்கம்.
********
சந்தேகத்தைக் கட்டுப் படுத்தவே நம்பிக்கை தேவைப் படுகிறது.
********
அகந்தையாலோ,ஆசையாலோ,அச்சத்தாலோ எடுக்கும் முடிவுகள் தீங்கையே கொண்டுவரும்.
********
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:38

இளைஞனே விளையாடு.எவரும் உன்னை வெல்ல முடியாது என்பதற்காக அல்ல.உன்னை வெல்லும் தகுதி கொண்டவன் யார் என்று அறிவதற்காக.
********
அச்சமும் ஐயமும் முடிவிலாது தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வல்லமை உடையவை.
******
ஒரு தாய் தனது பிள்ளையை வயிற்றில் சுமப்பதை விட மனதில் சுமப்பதுதான் அதிகம்.
********
மிருகங்களில் வல்லமை அற்றவை உடனடியாக வல்லமையானவற்றால் கொன்று உண்ணப் படுகின்றன.அது மிகக் கருணையான செயல்.மனிதன் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாகக் கொள்கிறார்கள்.
********
நீ ஒரு முறைதான் வாழப் போகிறாய்.அதையே நீ சிறப்பாக செய்தால் ,அந்த ஒரு முறையே போதுமானதுதான்.
********
உன் வலியில் கவனம் செலுத்தாதே!
உன் வலிமையில் கவனம் செலுத்து.
********
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளை சாப்பிடுகிறது.
அந்தப் பறவை இறந்தால் எறும்புகள் அதை சாப்பிடுகின்றன.
காலமும் சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
யாரையும் குறைத்து மதிப்பிடாதே.
நீ இன்று அதிகாரம் மிக்கவனாக இருக்கலாம்.
காலம் உன்னை விட அதிகாரம் மிக்கது என்பதை மறந்து விடாதே.
******
சமூகத்தின் விதி முறைகளுக்கு மாறுபட்டு நீ நடந்தால் உன்னை மக்கள் வெறுக்கலாம்.ஆனால் உள்ளூர தங்களுக்கு அப்படி வாழ தைரியம் இல்லையே என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கும்.
********
கோபம் என்பது மனதின் பலவீனம்.
********
பொன்மொழிகள்-51
1
Posted on : Thursday, April 24, 2014 | By : ஜெயராஜன் | In : பொன் மொழிகள்
சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் அவர்கள் தங்களது மனதில் இருப்பதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள் என்று பொருள்.
******
மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு அர்த்தமில்லாதது.
தகுதியும் உழைப்பும் உடையவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
வெற்றி கிடைக்காவிடில் அதற்கு அவரவர் சொந்தப் பிழையே காரணம்.
******
அடிமைகள் பிறர் சுதந்திரத்திற்காகப் போராடுவதில்லை.
******
மனப்பான்மைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. நாம் எந்த செயலை செய்கிறோம் என்பதைவிட என்ன மனப்பான்மையுடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
******
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தால் வெற்றி எண்ணும் சிகரத்தை அடைய கடின உழைப்பு தேவையில்லை.
******
உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாலோ,ஒப்புக் கொள்ள மறுப்பதாலோ,எந்த நன்மையையும் கிடையாது.சோகமும் விரக்தியும் உங்களை சுற்றி வளைக்கும்.நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும்.
******
வெற்றியாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை.
ஏதாவது வேலைசெய்வதில்தான் ஓய்வினை அடைகிறார்கள்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:39

இளைஞனே விளையாடு.எவரும் உன்னை வெல்ல முடியாது என்பதற்காக அல்ல.உன்னை வெல்லும்  தகுதி கொண்டவன் யார் என்று அறிவதற்காக.
********
அச்சமும் ஐயமும் முடிவிலாது தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வல்லமை உடையவை.
******
ஒரு தாய் தனது பிள்ளையை வயிற்றில் சுமப்பதை விட மனதில் சுமப்பதுதான் அதிகம்.
********
மிருகங்களில் வல்லமை அற்றவை உடனடியாக வல்லமையானவற்றால் கொன்று உண்ணப்  படுகின்றன.அது மிகக் கருணையான செயல்.மனிதன் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாகக் கொள்கிறார்கள்.
********
நீ ஒரு முறைதான் வாழப் போகிறாய்.அதையே நீ சிறப்பாக செய்தால் ,அந்த ஒரு முறையே போதுமானதுதான்.
********
உன் வலியில் கவனம் செலுத்தாதே!
உன் வலிமையில் கவனம் செலுத்து.
********
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளை சாப்பிடுகிறது.
அந்தப் பறவை இறந்தால் எறும்புகள் அதை சாப்பிடுகின்றன.
காலமும் சூழலும் எப்போது  வேண்டுமானாலும் மாறலாம்.
யாரையும் குறைத்து மதிப்பிடாதே.
நீ இன்று அதிகாரம் மிக்கவனாக இருக்கலாம்.
காலம் உன்னை விட அதிகாரம் மிக்கது என்பதை மறந்து விடாதே.
******
சமூகத்தின் விதி முறைகளுக்கு மாறுபட்டு நீ நடந்தால் உன்னை மக்கள் வெறுக்கலாம்.ஆனால் உள்ளூர தங்களுக்கு அப்படி வாழ தைரியம் இல்லையே என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கும்.
********
கோபம் என்பது மனதின் பலவீனம்.
********

சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் அவர்கள் தங்களது மனதில் இருப்பதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள் என்று பொருள்.
******
மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு அர்த்தமில்லாதது.
தகுதியும் உழைப்பும் உடையவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
வெற்றி கிடைக்காவிடில் அதற்கு அவரவர் சொந்தப் பிழையே காரணம்.
******
அடிமைகள் பிறர் சுதந்திரத்திற்காகப் போராடுவதில்லை.
******
மனப்பான்மைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. நாம் எந்த செயலை செய்கிறோம் என்பதைவிட என்ன மனப்பான்மையுடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
******
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தால் வெற்றி எண்ணும் சிகரத்தை அடைய கடின உழைப்பு தேவையில்லை.
******
உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாலோ,ஒப்புக் கொள்ள மறுப்பதாலோ,எந்த நன்மையையும் கிடையாது.சோகமும் விரக்தியும் உங்களை சுற்றி வளைக்கும்.நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும்.
******
வெற்றியாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை.
ஏதாவது வேலைசெய்வதில்தான் ஓய்வினை அடைகிறார்கள்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:40

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
******
எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.
******
பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.
அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.
******
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.
ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.
******
வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை.
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன் கலைஞன்.
தேவை இல்லாத வேலைகளை 
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன் முட்டாள்.
******
தூங்குகிறவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
******
எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
******
அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
******
அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
******
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
******
விவேகத்திற்குத் தந்தை அனுபவம்.
******
மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:41

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
******
எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.
******
பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.
அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.
******
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.
ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.
******
வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை.
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன் கலைஞன்.
தேவை இல்லாத வேலைகளை 
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன் முட்டாள்.
******
தூங்குகிறவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
******
எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
******
அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
******
அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
******
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
******
விவேகத்திற்குத் தந்தை அனுபவம்.
******
மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:41

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
******
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
******
பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
******
மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
******
குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
******
நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
******
அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
******
பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத்  தயாராகி விடுகிறோம்.
******
நம்பிக்கையின் கை உடையும்போது
சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
******
இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம்.
வலிய ஏற்படுத்திக் கொள்ளும்  மாற்றம்,சுமை.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:43

மகிழ்ச்சி என்பது பிரச்சினை ஏதும் இல்லாத நிலை அல்ல.
அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் திறமைதான்.
******
வாழ்க்கையில் பயப்பட வேண்டிய விஷயம் ஏதுமில்லை.
புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் தான் இருக்கின்றன.
******
முதல் முயற்சியில் தோல்வி அடையும் போது பயப்படாதே.
வெற்றிகரமான கணிதமே பூஜ்யத்தில்தான் ஆரம்பிக்கிறது.
******
உணர்வு என்பது ஒரு சித்திரம்-அதைக் கெடுத்து விடாதே.
முகம் ஒரு புத்தகம்.-அதைப் படி.
வாழ்க்கை விலை மதிப்பில்லாதது.-அதை இழந்து விடாதே.
நட்பு என்பதுஒரு கண்ணாடி.-அதை உடைத்து விடாதே.
******
கோவிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் ஆன்மீகவாதி ஆகி விட முடியாது.
ஒர்க்சாப்பிற்குப் போவதால் மட்டும் ஒருவன் மெக்கானிக்காக முடியுமா?
******
கண்ணீர் சொறிவதற்காகக் கண்கள் படைக்கப் படவில்லை.
அச்சப்படுவதற்காக இதயம் படைக்கப் படவில்லை.
சோர்வு கொள்ளாதே,எப்போதும் உற்சாகத்துடன் இரு.
கண்ணீர் சிந்துபவர்முகத்தில் புன்னகை வரவழைக்க உன்னால்தான் முடியும்.
******
கடின உழைப்பு என்பது படிக்கட்டுகள்.
அதிர்ஷ்டம் என்பது லிப்ட் .
லிப்ட் சில சமயங்களில் வேலை செய்யாமல் போகலாம்.
ஆனால் படிக்கட்டு நீ மேலே செல்ல எப்போதும் உதவும்.
******
வன்முறை துளியுமில்லா மனிதனின் அண்மை மிருகங்களைக்கூட ஆனந்தம் அடையச் செய்யும்.
******
பழிச் சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம்.
******
உலகின் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:44

ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.
******
நாள் என்பது வெறும் பகல் மட்டும் அல்ல.இரவும் சேர்ந்ததுதான் அது.மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல.அதுவும் வாழ்வின் ஒரு அங்கமே.அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது.
******
தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக்  கடந்து சென்று விடுவதுதான் தியானம்.
******
எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான்,இது சரி,இது தவறு,இது விருப்பமானது,இது வெறுக்கக் கூடியது,என்பவை புகுந்து விடுகின்றன.
******
மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.
******
விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையே கடலாக
நினைத்துக்கொள்.
******
அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.
******
ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.
******
சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:45

எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.
******
ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.
******
சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது.
******
அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.
******
மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும்.
சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.
******
வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-பெரிதும் திண்டாடுவீர்கள்.
******
'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.
******
கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.
******
உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம்.
******
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான். 
******
ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால் அது தத்துவம்.
அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால் அது வேதாந்தம்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:46

நண்பர்கள் முலாம்  பழத்தைப் போன்றவர்கள்.ஒரு நல்ல முலாம் பழத்தை சுவைக்க நூறு பழங்களை  ருசி பார்க்க வேண்டியிருக்கும்.
******
நட்பு இரு உடல்களில் உறையும் ஒரே ஆன்மா.
******
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.நட்பு கொண்டபின் அதில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்கவும்.
******
மனிதன் மன மகிழ்ச்சி கொள்ளவும்,பெருமை கொள்ளவும் இறைவன் கொடுத்த வரம் 'நண்பர்கள்'.
******
நம்மைப் பாராட்டுவதை விட நம்மிடம் அதிக அன்பு செலுத்தி,நமக்கு உதவுபவனே உண்மையான நண்பன்.
******
சட்டம் என்ன சொல்கிறது என்பது முக்கியம் அல்ல.
சட்டம் என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்.
******
இறக்கைகளுடன் பிறந்திருக்கும் நீ ஏன் தவழ ஆசைப்படுகிறாய்?
******
எல்லோரிடமும் இரக்கம் காட்டு.ஏனெனில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையோடு கடுமையாகபோரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
******
ஆயிரம் தலைகள் பிரார்த்தனைக்காக குனிந்து வணங்குவதை விட
ஒரேஓர் இதயம் மகிழ செய்யப்படும் ஒரே ஒரு செயல்  மேலானது.
******
உண்மையே பேசு.
இனிமையானவற்றையே பேசு.
இனிமையற்ற உண்மையைப் பேசாதே.
இனிமையான பொய்யைப் பேசாதே.
******
பணத்தையும்,அதிகாரத்தையும்,செல்வாக்கையும்
அடித்துவிடக் கூடிய சமாசாரம் ஒன்று உண்டு.
அதுதான் உற்சாகம்.
******
நண்பர்களைக் கூட்டு.பகைவர்களைக்கழி.
உற்சாகத்தைப் பெருக்கு.உன் கவலைகளை வகு.
கடவுளை மையமாக வைத்து
அன்பை ஆரமாக வைத்து
உன் வாழ்க்கை என்னும் வட்டத்தை வரை.
******
அதிக ஏக்கமே புலம்பலாக மாறும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:47

விசிறியை அசைக்காமல் காற்று வராது.
உழைப்பில்லாமல் உயர்வு வராது.
******
புத்திசாலித்தனமான குழந்தை
மகிழ்ச்சியான தந்தையை உருவாக்குகிறான்.
******
வெற்றி நமது தவறுகளை மூடி மறைத்துவிடும்.
******
கடமை உங்கள் வாசல்கதவைத்தட்டும் போது உடனே உள்ளே அழையுங்கள்.
காக்க வைத்தீர்களோ,அது புறப்பட்டுப்போய் இன்னும் ஏழு கடமைகளை அழைத்து வந்துவிடும்.
******
பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்.
போகும்போது பல கால்களுடன் போகும்.
******
நீ நிமிர்ந்து நிற்கும்வரை உன் நிழல் கோணலாய் இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
******
சந்தேகம்,நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.
அதன் ஒரு பாகமே.
******
இரக்கத்தின் பனித்துளி கண்ணீர்.
******
துளசிக்கு வாசமும்,முள்ளுக்குக்  கூர்மையும்
முளைக்கிறபோதே தெரியும்.
******
அசுத்தம்,வறுமை,துன்பம் எங்கு இருக்கிறதோ,அங்கு இசை இருக்க முடியாது.
******
கிணறு வற்றியபின் தான் தண்ணீரின் அருமை நமக்குத் தெரிகிறது.
******
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
******
தங்கத் திறவுகோல் எல்லா பூட்டுக்களுக்கும் சேரும்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:48

சத்தம் அதிகம் உள்ள இடத்தில்
சட்டம் அமைதியாகிவிடும்.
******
ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.
******
மக்களிடம் எதையும் ரகசியமாய்ச் சொன்னால்  நம்புவார்கள்.
******
முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.
******
வீழ்வது வெட்கத்திற்குரிய விசயமில்லை.
வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.
******
எவன் மனிதர்களை அடக்கி ஆள்கின்றானோ
அவன் குழப்பத்தில் வாழ்கின்றான்.
எவன் மற்றவர்களால் அடக்கி ஆளப்படுகின்றானோ
அவன் துன்பத்தில் வாழ்கின்றான்.
******
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.-அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது-நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது-எச்சரிக்கையுடன் இருங்கள்.
******
ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.
******
யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால்  முடியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.
******
மனிதன்குறையுடையவன்மட்டுமல்ல.குறைகாண்பவனும்ஆவான்.
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
என் மகன் ஒரு தவறு செய்தால் அவனுக்காகப் பரிந்து பேச மாட்டேன்.
அப்படிப் பேசி நான் வெற்றி பெற்றுவிட்டால் பின்னால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:50

தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் நிலைக்கும், தனது பொம்மை உடைந்ததற்காக வருத்தப்படும் குழந்தையின் நிலைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
******
ஒருவன் கடும் முயற்சியினால் உயர்ந்த மலையின் சிகரத்தை அடைந்து விடலாம்.ஆனால் அவன் அங்கேயே வாழ்ந்து விட முடியாது.
******
வெற்றிகரமாகப் பொய் சொல்ல வரம்பற்ற நினைவாற்றல் வேண்டும்.
******
கோபமான மனிதன் தனது வாயைத் திறந்து கண்களை மூடிக் கொள்கிறான்.
******
இளமை குறைகள் உடையது.
நடுத்தர வயது சிரமங்கள் உடையது.
முதுமை வருத்தங்கள் உடையது.
******
'தான் மிக முக்கியமானவன்'என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி,''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்துவிடும்?''
******
வாழ்க்கை முழுவதும் இன்பமா!
அதைக் காட்டிலும் நரகம் எதுவும் இருக்க முடியாது.
******
நெற்றியைக் காயப்படுத்திக் கொள்வதைவிட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
******
நரி நம்புகிறது,''எல்லோரும் என்னைப்போல கோழியைப் பிடித்துத் தின்கிறார்கள்,''என்று.
******
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் என்னைவிட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவனாக உள்ளான்.
******
பணிதல் நல்ல பண்புதான்.அதில்  ஒரு வரம்பைக் கையாளவில்லை என்றால் நீ அடிமையாவதற்கு அஸ்திவாரம் போடப்படும்.
******
ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் யார் அடிதடியில் இறந்குகிறார்களோ,அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று பொருள்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:51

நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல குடையைப் போன்றது.ஆனால் அது நல்லதொரு கூரை இல்லை.
******
பணிவாக நடந்து கொள்வது,
மேலோரிடம் எனில்,அது கடமை.
சமமானவரிடம் என்றால் அது பண்பாடு.
கீழானவரிடம் என்றால் அது பெருந்தன்மை.
******
தொழிலில் மகிழ்ச்சி இருந்தால்
வேலையில் கச்சிதம்(perfection) தானே வரும்.
******
பிரச்சினைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.
கண்ணின் அருகில் வைத்தால் நம்முடைய பார்வையை மறைத்துவிடும்.
தள்ளி வைத்துப் பார்த்தால் அவை எவ்வளவு சிறியவை என்பது புரியும்.
******
வெற்றி என்பது நிரந்தரம் அல்ல.தோல்வி என்பது இறுதியானது அல்ல.எனவே வெற்றி பெற்ற பின்னும் நம் பணியை நிறுத்தி விடக் கூடாது.தோல்வி அடைந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது.
******
நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம்;
நாம் எப்போதுமே இன்றைக்கு விட நாளைக்கு நமக்கு அதிகமான நேரம் இருக்கிறது என்று நினைக்கிறோம்,நம்புகிறோம்.
******
கண்கள் இரண்டும் சேர்ந்தே இமைக்கின்றன;சேர்ந்தே பார்க்கின்றன.சேர்ந்தே அழுகின்றன.சேர்ந்தே தூங்குகின்றன.ஆனாலும் அவை ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதில்லை.அதுதான் உண்மையான நட்பின் இலக்கணம்.
******
உலகின் மிகச்சிறிய சர்வாதிகாரமான வார்த்தை எது தெரியுமா?
'அதெல்லாம் எனக்குத் தெரியாது.'
******
மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள்.இவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
*மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி,தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவர்கள்.இவர்கள் மிருகத்தைப் போன்றவர்கள்.
*தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள்.இவர்கள்தான் மனிதர்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:52

ஒவ்வொருவரிடமும் உங்கள் காதைக் கொடுங்கள்;ஆனால்
ஒரு சிலரிடம் மட்டும் வாயைக் கொடுங்கள்.
******
விமரிசகன் என்பவன் ஓடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நொண்டி.
******
பிறர் நம்மைப் புகழ்வது பூவைப் போன்றது.நாம் அதன் வாசனையை நுகரலாம்,அதை அப்படியே விழுங்கி விடக் கூடாது.
******
உன்னிடம் பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.
பணம் உன்னிடம் இல்லாவிட்டால் உன்னை எவருக்குமே தெரியாது.
******
சுமை அதிகமாயிருக்கிறதே என்று நான் அழவில்லை .'ஆண்டவனே,முதுகை அகலமாக்கித்தா' என்றுதான் கேட்கிறேன்.
******
பல வாய்களை மூடுவதைவிட,இரு காதுகளை மூடுவது எளிது.
******
ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் மட்டும் அவனுக்கு அறிவு வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பொருள் இல்லை.அவன் பதவியில் இருப்பதால்,'உனக்கு அறிவு வளர்ச்சி அடையவில்லை,''என்பதைத்தான் நாம் சொல்ல முடியாமல் போகிறது.
******
கொள்கைகளுக்காகச் சண்டை இடுவது, அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் எளிது.
******
காட்டின் அருகாமையில் வாழ்ந்தாலும் விறகை வீணாகச் செலவழிக்காதே
******
அசட்டுத்தனமான பெரும் தவறு எதுவுமே செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி காண முடியும் என்பதில்லை.அதே தவறை இரண்டாம் முறையும் செய்யாதிருந்தாலே போதும்,வெற்றி கிடைத்துவிடும்.
******
ஒரு மனிதன் தன மனைவிக்காகக் கார்க் கதவைத் திறக்கிறானா,புரிந்து கொள்ளுங்கள்;ஒன்று கார் புதிதாயிருக்கும்.அல்லது மனைவி புதிதாயிருப்பார்
******
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே,
உலகம் உன்னை விழுங்கி விடும்.அதற்காக,
முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருந்து விடாதே,
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:53

தீயவனை நண்பனாக்கிக் கொள்வதை விடதனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
******
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
******
தன் விருப்பபடி நடந்து கொல்லும் வசதி வரும்போதுதான்
மனிதனின் துன்பங்கள் ஆரம்பம் ஆகின்றன.
******
முழுமையான நிதானத்துடன் இருக்கும் ஒருவனை முட்டாள் ஆக்க முடியாது.
******
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
******
மழையைக் கண்டு கலங்குபவை காகிதப் பூக்களே.
******
உன்னை அடக்குபவர் முன் நீ சுதந்திரமாக இரு.
உனக்கு சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு.
******
வீணான எண்ணங்கள் விசக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அதன்பின் அழிப்பது சிரமம்.
******
ஆகாயத்திலிருந்து பால் கொட்டினாலும் அதைப் பிடிக்கும் பாத்திரம் என்னவோ பணக்காரர்களிடம் தான் இருக்கிறது.
******
என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர்.அவர்களின் பெயர்கள்:
எங்கே? என்ன? யார்? ஏன்? எப்படி?எப்போது?
******
தோற்று விடுவோமோ என்ற பயத்தை வெல்வதுதான் உண்மையான வெற்றி.
******
மனதின் காதுகளை மூடிவிடும் ஒரே சாதனம் அச்சம்தான்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:54

தீயவனை நண்பனாக்கிக் கொள்வதை விடதனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
******
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
******
தன் விருப்பபடி நடந்து கொல்லும் வசதி வரும்போதுதான்
மனிதனின் துன்பங்கள் ஆரம்பம் ஆகின்றன.
******
முழுமையான நிதானத்துடன் இருக்கும் ஒருவனை முட்டாள் ஆக்க முடியாது.
******
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
******
மழையைக் கண்டு கலங்குபவை காகிதப் பூக்களே.
******
உன்னை அடக்குபவர் முன் நீ சுதந்திரமாக இரு.
உனக்கு சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு.
******
வீணான எண்ணங்கள் விசக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அதன்பின் அழிப்பது சிரமம்.
******
ஆகாயத்திலிருந்து பால் கொட்டினாலும் அதைப் பிடிக்கும் பாத்திரம் என்னவோ பணக்காரர்களிடம் தான் இருக்கிறது.
******
என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர்.அவர்களின் பெயர்கள்:
எங்கே? என்ன? யார்? ஏன்? எப்படி?எப்போது?
******
தோற்று விடுவோமோ என்ற பயத்தை வெல்வதுதான் உண்மையான வெற்றி.
******
மனதின் காதுகளை மூடிவிடும் ஒரே சாதனம் அச்சம்தான்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 17:54

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் 
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by நண்பன் Mon 12 Oct 2015 - 18:05

கவிப்புயல் இனியவன் wrote:வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் 
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******
கடைசியில் இருந்து வருகிறேன்
பொன்மொழிகள் அனைத்தும் அருமை
முகநூலில் பகிரலாம் என்றும் நினைக்கிறேன்
தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 18:23

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் 
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******
கடைசியில் இருந்து வருகிறேன்
பொன்மொழிகள் அனைத்தும் அருமை
முகநூலில் பகிரலாம் என்றும் நினைக்கிறேன்
தொடருங்கள்

SUPER  சியர்ஸ் சியர்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by rammalar Fri 16 Oct 2015 - 18:04

ரசித்த பொன்மொழிகள் 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரசித்த பொன்மொழிகள் Empty Re: ரசித்த பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum