Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சின்னச் சின்ன கதைகள்
5 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
சின்னச் சின்ன கதைகள்
First topic message reminder :
கொடுத்துப் பெறுதல்
--------------------------------
ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.
நன்றி: ந. உதயகுமார்

Re: சின்னச் சின்ன கதைகள்
ஹா... ஹா....
தண்டனை கொடுக்கும் போது சொல்லிக்கிட்டேவா தோப்புக்கரணம் போடச் சொல்றது..
இப்ப என்னாச்சு ஒரு நாய் நூறு நாயாச்சு...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சின்னச் சின்ன கதைகள்
சே.குமார் wrote:ஹா... ஹா....
தண்டனை கொடுக்கும் போது சொல்லிக்கிட்டேவா தோப்புக்கரணம் போடச் சொல்றது..
இப்ப என்னாச்சு ஒரு நாய் நூறு நாயாச்சு...
Re: சின்னச் சின்ன கதைகள்
குடும்பம் – ஒரு பக்க கதை
குடும்பம் – ஒரு பக்க கதை
-----------------------
தீபக்… என்னடா சொல்றே?
என்னைப் பிரிஞ்சு போகப் போறியா?
வேற யாரையாவது கல்யாணம் செய்துக்குற
ஐடியாவா? துரோகி’’ என ஆத்திரப்பட்டாள் புவனா.
–
‘‘இல்லை புவனா… எனக்கு வேலை போயிடுச்சு.
இப்போ நான் வேலையில்லாத உதவாக்கரை.
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில நம்ம காதல் வளர்ந்துடுச்சு.
உன்னைப் பிரிஞ்சிருக்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.
ஆனா, வருமானமில்லாத நான் உன்னை கல்யாணம்
பண்ணிக்கிட்டா உன் சம்பளத்துலதான் என் வீட்டுல
இருக்குற ரெண்டு ஜீவன்களை காப்பாத்தணும்!’’
– தீபக் தலைகுனிந்தபடி சொன்னான்.
–
‘‘சே, இதுக்குப் போயா பிரியணும்னு சொன்னே?
நீ வேற, நான் வேறயாடா? ஏன்டா இப்படிப் பிரிச்சுப் பார்க்கறே?
உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் உன்
குடும்பத்தை நான் காப்பாத்த மாட்டேனா?’’
–
‘‘ப்ச்… அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது!’’
–
‘‘ஏன், தீபக்? நான் வேணும்னா உங்க அப்பா அம்மாகிட்ட
வந்து பேசட்டுமா?’’
–
‘‘இங்கதான் தப்பு நடந்து போச்சு புவனா. எங்க வீட்ல இருக்குற
ரெண்டு பேரை என் அப்பா, அம்மானு நீ நினைச்சிக்கிட்டு
இருக்குறே.
அது, என் மனைவியும் குழந்தையும். அந்த உண்மையை இனி
மேலும் நான் மறைக்க முடியாது!’’
–
———————-
கே.என்.எஸ்.மணியன்
குங்குமம்

புதுமனை – ஒரு பக்க கதை
-------------------
தான் புதுசாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்கு
அவசர அவசரமாய் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு
செய்தான் சுகுமார்.
–
இன்னும் வீட்டு வேலைகள் முழுமையாய் முடியவில்லை.
அதற்குள் கிரகப்பிரவேசமா? அந்தத் தெரு மக்களுக்கே
இது ஆச்சரியமாய்த்தான் இருந்தது.
–
‘‘ஏங்க… இப்ப கிரகப்பிரவேசத்துக்கு என்ன அவசரம்?’’
எனக் கேட்டாள் மனைவி சுமதி. ‘‘பின்னாடி சொல்றேன்’’
எனச் சொல்லி வைத்தான் சுகுமார்.
–
மங்கள இசை ஒலிக்க, பசுவும் கன்றும் வீட்டிற்குள்
அடியெடுத்து வைத்துச் செல்ல, உறவினர்கள் வந்து
சேர்ந்தார்கள். வீட்டைச் சுற்றி வந்த நண்பர்களும்
உறவினர்களும் ஆளாளுக்கு தங்களுக்குத் தெரிந்த
யோசனைகளைச் சொன்னார்கள்.
எல்லோரும் போன பிறகு மனைவியிடம் பேசினான்
சுகுமார்.
–
‘‘ஏன் வீட்டை கம்ப்ளீட் பண்ணாம கிரகப்பிரவேசம்
வச்சீங்கனு கேட்டியே… இப்பப் பாரு, ஆளாளுக்கு எத்தனை
விதமான யோசனைகள் சொல்லியிருக்காங்கன்னு.
முழுசா கட்டி முடிச்சிருந்தாலும் ‘இப்படிக்
கட்டியிருக்கலாமே’னு இவங்க யோசனை சொல்லத்தான்
செய்வாங்க. ‘அடடா, செய்யாம விட்டுட்டோமே’னு
நமக்கு மனசு அடிச்சிக்கும்.
இப்ப பிரச்னையே இல்ல. இவங்க சொன்ன அட்வைஸ்ல
நல்லதை எடுத்துக்கிட்டு அதன்படி செய்யலாலாம்.
இதனாலதான் கிரகப் பிரவேசத்தை முன்கூட்டியே
என்றான் சுகுமார்.
அதில் உள்ள நியாயம் புரிந்தது சுமதிக்கு.
–
———————————
வெ.இளங்கோ

முயல், ஆமை கதையின் #லேட்டஸ்ட்_வெர்ஷன்
–
முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
#நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
வெயிட்… இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.
#நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்… அதுதான் இல்லை!
காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்… டூ… த்ரீ…
முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!
#நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை மக்களே.!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது… ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?
ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
#நீதி4 : டீம் வொர்க் வின்ஸ்!
#டீம்_வொர்க்
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
#முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் #அனுபவம் .
முயலாமல் தோற்றால் #அவமானம் .
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!
————–
நன்றி-முகநூல்

நட்பை முறிக்கும் வார்த்தைகள்…!
---------------------
சுட்ட கதை சுடாத நீதி
பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும்,
குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்கு காரணம்
ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி. நகரின் மிக பெரிய
பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல்
விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என
தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர்.
–
ஒருவாராக பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை
வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில்
இருந்தது.
–
அதை மீட்பதற்காக போட்ட வழக்கில், இன்று தான் அந்த
தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதை
குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.
–
குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான்.
–
‘சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு
இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள்’
என நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டு
கொண்டிருந்தார்.
–
அதனால் பீஸ் நயா பைசா கூட வாங்கவில்லை. இப்போது
ஜெயித்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை
செய்ததாக நினைத்து கொள்வாரா? என்று குழப்பம்.
–
வெற்றி தகவலை சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரை
பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை
பரிசாக தந்தார்.
–
‘இது லண்டனில் வாங்கியது. பொம்மை மாதிரி குழந்தைகள்
விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலை பயன்படுத்தலாம்’
–
‘என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பல கோடி
ரூபாய் சொத்தை வாதாடி மீட்டு தந்திருக்கிறேன். நீ என்ன
வென்றால் ஒரு பொம்மையை தருகிறாய். வெளி ஆளாக
இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்கி இருப்பேன்
தெரியுமா? என கொதித்தார்.
–
தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல்
பொம்மையை வாங்கி திறந்தார்.
–
‘இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட
பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி
ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம்
உள்ள இருக்கு’ என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு
வெளியேறினார்.
–
பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு
நின்றார் வழக்கறிஞர்.
–
நீதி:
–
அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.

நம்பிக்கைகள் தான் உறவுகளை உறுதியாக்குகின்றன!
----------------
“காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
ஆசைப்பட்டேன். ஆனால், என்னால் எந்தப் பெண்ணையும்
காதலிக்க முடியவில்லை. குழப்பமாக இருக்கிறது” என்றபடி
அந்த குருவிடம் போய் நின்றான் அவன்.
நல்ல வேலையில் இருக்கிறான்; வசதியானவன்; கம்பீரமாகவும்
இருந்தான்.
குரு அவனை பார்த்து சிரித்தார். பக்கத்திலிருந்த சோளத்
தோட்டத்தைக் காட்டினார்.
“அங்கு போ! இருப்பதிலேயே பெரிதான சோளக்கதிரை பறித்து வா.
ஒரே நிபந்தனை…. போன பாதையில் திரும்பி வந்து, ஏற்கனவே
பார்த்ததைப் பறிக்கக் கூடாது!”
இளைஞன் போனான். முதல் வரிசையிலேயே ஒரு பெரிய
சோளக்கதிர் இருந்தது. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் அதைவிடப்
பெரிதாக இன்னொன்று தெரிந்தது. தோட்டம் ரொம்பப் பெரியது.
இன்னும் உள்ளே போனால் பெரிதாக கிடைக்கும் என்று நினைத்தான்.
கொஞ்ச தூரத்தில் மிகப்பெரிய சோளக்கதிர் அவனை சுண்டி இழுத்தது.
அதையும் அலட்சியம் செய்துவிட்டு நடந்தான். நடக்க நடக்க அவனுக்கு
ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது….
தோட்டத்தின் இந்த பக்கத்தில் இருக்கும் கதிர்கள் எல்லாமே சிறிதாக
இருந்தன. பெரிய கதிர்களை அவன் இழந்துவிட்டான். எனவே வெறுங்
கையோடு தலையை தொங்கப் போட்டுக்கொண்டு வந்து குரு முன்பாக
நின்றான்.
குரு சிரித்தார்.
“இன்றைய இளைஞர்களின் பிரச்சினையே இது தான்! இதை விட சிறந்தது
வேண்டும்’ என நினைத்து, கிடைக்கும் ஒவ்வொரு துணையையும்
புறக்கணிக்கிறீர்கள். அந்த தேடல் வெறுமையில் முடியும்போது தான்
அவர்களுக்கு புரிகிறது…’கிடைத்த நல்ல துணையை இழந்துவிட்டோம்’
என்பது! வாழ்கையில் ரிவர்ஸ் கியர் போட்டு அதை அடைய முடிவதில்லை…”
“அப்போ என் கல்யாணமும் இப்படி தான் ஆகுமா?”
“இல்லை” என்று அந்த இளைஞனின் தோள்களை ஆதரவாக பிடித்தபடி
குரு சொன்னார்,
“இப்போது உன்னைத் திரும்பவும் அந்த தோட்டத்துக்கு அனுப்பினால்
உசாராகி விடுவாய். கையில் கிடைத்த ஏதோ ஒரு கதிரை பறித்து,
‘இது தான் பெரியது’ என்று திருப்தியடைந்து விடுவாய். அது தான் பெரியது
என்று நம்புகிறாயே, அந்த நம்பிக்கை உனக்கு கைகொடுக்கும்” என்றார்.

அடக்கம் அவசியம்! -ரஜினி சொன்ன குட்டி கதை!
----------------
–
என்னுடைய சின்ன வயசுல ஒரு பெரியவர் என்னைக்
கூப்பிட்டு: ‘தம்பீ! வாழ்க்கையில் நீ எவ்வளவு தூரம் நடக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?’ என்று கேட்டார்.
‘ஐயா, நான் கடைசி வரை நடந்து கொண்டே இருக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றேன்.
‘அப்படியானால் தலையை மேலே தூக்கியபடி நட’
என்றார் அந்தப் பெரியவர்.
நானும் தலையைத் தூக்கிக்கிட்டு, மேலே பார்த்தப்படியே
ஒரு பத்தடி நடநதிருப்பேன். அதற்குள் தடுக்கி கீழே விழுந்து
விட்டேன்.
பிறகு அந்தப் பெரியவர் மறுபடியும் என்னை அழைத்து,
‘இப்ப தலையை குனிந்து நடந்து போ’ என்றார்.
அவர் சொன்னபடி குனிந்து நடந்தேன். இன்றுவரை கீழே
விழாமல் நல்லபடிநடந்து கொண்டிருக்கிறேன்..
மனுஷனுக்கு எவ்வளவு அடக்கம் இருக்கோ,
அந்த அளவுக்கு வளர்ச்சியும் இருக்கும்.

பச்சை – ஒரு பக்க கதை
ஒரு பக்க கதை
-----------
தன் காதலி நளினியின் பெயரை கையில் பச்சை
குத்திக்கொண்டது எவ்வளவு தவறு என்று ராகவனுக்கு
இப்போது புரிந்தது. அமெரிக்காவில் வேலை பார்க்கும்
பணக்கார சாஃப்ட்வேர் மாப்பிள்ளை கிடைத்தவுடன்
டாட்டா சொல்லிவிட்டு பறந்து போய்விட்டாள்.
–
ராகவன் வீட்டிலும் அவனுக்கு வேறு பெண் பார்த்து
விட்டார்கள். பச்சை குத்திக்கொண்ட பெயரை எப்படி
அழிப்பது? திண்டாடினான். நிச்சயதார்த்தத்தில்
முழுக்கை சட்டை போட்டு சமாளித்தான். எத்தனை
நாள் இப்படி?
–
விசாரிக்காத டாக்டர் இல்லை. லேசர் சிகிச்சை மூலம்
அழித்துவிடலாமாம். ஆனால் அதற்கு அவன் நான்கு
மாதச் சம்பளத்தை கட்டணமாகக் கேட்டார்கள்.
–
யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல்
அடித்தது. வருங்கால மனைவி சுமாதான் பேசினாள்.
–
‘‘ராகவ், நேத்து டி.வி பார்த்தீங்களா?
என் ஃபேவரிட் நளினிக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு.
பத்து வயசில் என்னமா பாடறா! ஆறு மாசமா நடந்த
போட்டியில் அவளுக்கு நான் பயங்கர ரசிகை ஆயிட்டேன்!’’
–
ராகவனுக்கு அவள் பேச்சு பாட்டாக ஒலித்தது.
‘‘நான்கூட நளினிக்கு தீவிர ரசிகன். அவ பேரை பச்சை
குத்தியிருக்கேன்னா பார்த்துக்க…’’
–
‘‘நமக்குள்ள என்ன ஒற்றுமை… நான் கொடுத்து வச்சவ!’’
–
‘அப்பாடா!’ – பெருமூச்சு விட்டான் ராகவன்.
–
———————————–
வி.சிவாஜி

பணம் – ஒரு பக்க கதை
-------------
கொட்டும் மழை… சுற்றி எங்கும் பால் பாக்கெட்
கிடைக்கவில்லை. பசியில் அழும் குழந்தைக்கு
எதைத் தருவதென்று அமுதாவுக்குத் தெரியவில்லை.
அந்தக் குடியிருப்பெங்கும் அதே கதைதான்.
–
வாடிக்கையாய் பால் போட வரும் வேம்புலி, மழைக்கு
பயந்து வீட்டோடு இருந்துவிட்டதாகத்தான் எல்லோரும்
நம்பினார்கள். ஆனால், இங்கே வாடிக்கையாகத்
தரவேண்டிய பாலை, தண்ணீரில் தத்தளித்த அடுக்கு
மாடி குடியிருப்பில் அவன் அதிக விலைக்கு விற்றுக்
கொண்டிருந்தான்.
–
சம்பாதித்த அதிக லாபத்தை மிக்க மகிழ்ச்சியோடு
வீடு கொண்டு சென்ற வேம்புலிக்கு காத்திருந்தது
அந்தப் பேரதிர்ச்சி. வயோதிகத்தில் துன்பப்பட்டுக்
கொண்டிருந்த அவன் தாய் உயிர் பிரியும் தறுவாயில்
அல்லாடிக் கொண்டிருந்தார்.
–
பை நிறைய பணமிருந்தும் கடைசியாக அவன் தாயின்
வாய்க்கு ஊற்ற ஒரு மிடறு பால் வாங்க அந்தக் காசு
பயன்படவில்லை.
–
ஊரெங்கும் பால் தட்டுப்பாடு. மற்ற பால்காரர்கள்
மட்டும் என்ன பிழைக்கத் தெரியாதவர்களா?
–
இறந்த அவரை அன்று மாலையே அருகிலிருந்த மின்தகன
மயானத்துக்குத் தூக்கிச் சென்றான். இலவச அமரர் ஊர்தி
கிடைக்காததால், இரட்டிப்பாகக் காசு கொடுத்து தாயின்
தகனத்தை முடித்துவிட்டு வந்தான் வேம்புலி.
பணம் அத்தனையும் காலியாகியிருந்தது!
–
————————————-
எஸ்.கார்த்திகேயன்

பழமொழிக் கதைகள் ---கிட்டாதாயின் வெட்டென மற
--------------
வீரன்பட்டி வீரன்பட்டி என்று ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் வீரையன் என்று ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவனுக்கு பாலன், கோபு என்று
இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.வீரையனுக்கு இளம் வயதில் படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. ஆனால் அவனால் படிக்க
முடியாத சூழ்நிலை.
அதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைக்க விரும்பினான். ஒருநல்ல நாளில் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகே
நகரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.இருவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
சில மாதங்கள் பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தனர்.
பள்ளியில் காலாண்டுத் தேர்வு வந்தது.கோபு பாலன் இருவரின் ஆசிரியர் அவர்களுக்கு தரச் சான்றிதழ் எனப்படும் ப்ரோக்ரஸ் ரிபோர்ட் கொடுத்தார்.
இருவருமே சுமாரான மதிப்பெண்ணே பெற்றிருந்தனர்.இதைத் தந்தையிடம் கொடுப்பதற்கு மிகவும் பயந்தனர்.ஆனால் சிறியவன் கோபு தன தந்தையிடம் தன சான்றிதழைக் கொடுத்து அவர் முன் தயங்கியபடியே நின்றான்.அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் எல்லாமே சராசரிக்கும் கீழேயே இருந்தன.வீரையனுக்கு ஒரே கோபம்.மூத்தவனாவது நல்ல மதிப்பெண் எடுத்திருப்பானோ என்று பாலனைக் கேட்டான்."ஏண்டா, தம்பி எல்லாத்திலையும் குறைச்ச மார்க்கு வாங்கியிருக்கிறானே, நீ எப்படி?"
தயங்கியபடியே தன ரிபோர்டைக் கொண்டுவந்து கொடுத்தான் பாலன்.அதைப் பார்த்த வீரையன்,"தம்பியைவிட பரவாயில்லை. ஆனாலும் நல்லாப் படிக்கோணும்டா" என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.இருவரும் சரியெனத் தலையை ஆட்டினர்.,
நாட்கள் செல்லச் செல்ல கோபுவுக்குப் படிப்பின் மீது நாட்டமே இல்லாமல் போயிற்று.அவன் அண்ணன் பாலன் அவனிடம் தந்தையின் ஆசை பற்றிச் சொல்லி அவனைப் பள்ளிக்கு இழுத்து வந்தான்.
அன்றும் பாலன் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டபோதும் கோபு கன்றுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அவனிடம் வந்த பாலன் "டே,தம்பி என்னடா, பள்ளிக்கூடம் வரலையா?"என்று கடுகடுப்போடு கேட்டான். அதைக் கேட்ட கோபு "எனக்குதான் படிப்பே ஏறலியே நான்
ஏன் பள்ளிக்கூடம் வரணும்? நீ வேணுமானா போ. நான் வரலை" என்றான்..
அதைக் கேட்டபடியே வந்த வீரையனுக்குக் கோபம் மூண்டது."ஏண்டா, உங்களை எப்படியாவது படிக்கவைக்க நான் படாத பாடு படுறேன் உனக்கு வெளையாட்டா இருக்காடா? மருவாதையா அண்ணன்கூடப் போற வேலையைப் பாரு. இல்லேயின்னா..."என்று பற்களைக் கடித்தான் வீரையன்.அவனது கோபத்தைப் பார்த்த கோபு உடனே தன புத்தகப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி வெளியே ஓடினான்.
அன்று மாலையே அழுதபடியே வீட்டுக்கு வந்த கோபு தன தந்தையிடம் வந்து நின்றான்."அப்பா, உங்களுக்குப் பிடிக்குதுன்னு என்னைப் பள்ளிக்கூடம் போகச் சொல்றீங்களே எனக்கு படிப்பு வருதான்னு பாக்க வேண்டாமா?இன்னிக்கு எங்க வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா? எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடாதேடா வராத படிப்பை நினைச்சு ஏன் வீணா கஷ்டப் படுறே"அப்படின்னு சொல்லித் திட்டுறாங்கப்பா.நான் உங்க கூட வயலுக்கு வந்து விவசாயத்தைப் பாத்துக்குறேன்.அண்ணனுக்குப் புடிச்சா அவன் படிக்கட்டும்."
வீரையன் சற்று சிந்தித்தான்.அவன் மனம் பேனா பிடிக்க ஒரு கை போனால் ஏரைப் பிடிக்க ஒரு கை இருக்கட்டும் என்று எண்ணினான்.
"சரிகோபு, நீ என்கூட வயலுக்கு வா."என்றவுடன் மகிழ்ச்சியுடன் ஓடினான் கோபு.
வருடங்கள் ஓடின. இன்று பாலன் கல்லூரியில் படிக்கும் மாணவன்.ஆனால் கோபுவோ வயலில் பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கி வீட்டின் செல்வ நிலையையும் உயர்த்தியிருந்தான். முதுமையின் விளிம்பில் நிற்கும் வீரையன் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் கோபுவைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தான். பலவிஷயங்களைத் தெரிந்து கொண்டு இன்னும் சிறப்பான முறையில் தன நிலத்தைப் பாதுகாக்கவும் விளைச்சலைப் பெருக்கவும் முயன்றான். தினமும் நூல்நிலையம் சென்று விவசாயம் சம்பந்தமான நூல்களைப் படித்தான்.பொது அறிவையும் வளர்த்துக் கொண்டான்.
அடிக்கடி தந்தையின் சந்தேகங்களைப் போக்கவும் அவன் அறிவை எண்ணி வீரையன் ஆச்சரியப் பட்டான்.
பாலன் கஷ்டப் பட்டு கல்லூரிப் படிப்பை முடித்தான்.ஆனால்வேலைக்காக அலைவதே அவன் வேலையாக இருந்தது.
ஆனால் கோபுவோ நிற்க நேரமின்றி வயல் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு மாவட்டக் கலெக்டர் வருகை புரிந்தார்.அவ்வூர் அதிகாரிகள் கூடியிருக்கும் கூட்டத்தில் வீரையன் பெருமைப் படும் ஒரு காரியத்தைச் செய்தார்.ஊரே கூடியிருக்கும் அந்த இடத்தில் சிறந்த விளைச்சலைக் காட்டிய கோபுவுக்கு நமது குடியரசுத் தலைவர் பாராட்டும் பரிசும் அளிக்க இருக்கிறார் என்ற செய்திதான் அது.ஊர் பெரியவர் முதல் அனைத்து மக்களும் சிறந்த மகனைப் பெற்ற தந்தை என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
அன்று இரவு வீரையன் தன பிள்ளைகள் இருவருடனும் அமர்ந்து கொண்டான்.
"கோபு, உன் அண்ணன் படிக்கப் போனபோது நீயும் போகலையேன்னு கோபப்பட்டேன். ஆனால் நீயோ வாத்தியாரு ஏதோ சொன்னாருன்னுட்டு படிப்பை நிறுத்திட்டே, நீ உருப்படுவியான்னு கவலைப் பட்டேன். ஆனா, அந்தக் கவலை இப்போ இல்லை."
"அப்பா, வாத்தியாரு ஏதோ சொல்லலைப்பா, வாழ்க்கைக்குத் தேவையான பழமொழியைத் தான் சொல்லியிருக்காரு.
கிட்டாதாயின் வெட்டென மற அப்படின்னு." அவரு சொன்னபடி எனக்கு வராத படிப்பை நினைச்சு நான் வருந்தாம அதை மறந்துட்டு நமக்கும் நாட்டுக்கும் எது தேவையோ அதைக் கத்துக்கிட்டேன்.அந்த விவசாயம் நம்மையும் உசத்தி நாட்டையும் உசத்திடுச்சில்லெப்பா?"
முகத்தில் புன்னகை மாறாமல் நின்ற பாலனும் "என்னோட கல்வி அறிவையும் பயன் படுத்தி தம்பிக்கு உதவியா நான் இருப்பேன் அப்பா."
என்றவுடன் அவனையும் சேர்த்து அனைத்துக் கொண்டு மகிழ்ந்தான் வீரையன்.
அதனால் நம்மால் முடிந்ததை முயன்று கற்கவேண்டும் இயலவில்லையேல் அதைமறந்துவிட்டு
இயன்றதைத் தெரிந்து கொண்டுஅதிலும் வெற்றி அடைவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

மீண்டும் படித்தேன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறதுகவிப்புயல் இனியவன் wrote:கை மேல் பலன் கிடைத்தது !
---------------------------------
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!
நன்றி: ந. உதயகுமார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சின்னச் சின்ன கதைகள்
உண்மைதான் அருமையான கதைநண்பன் wrote:மீண்டும் படித்தேன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறதுகவிப்புயல் இனியவன் wrote:கை மேல் பலன் கிடைத்தது !
---------------------------------
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!
நன்றி: ந. உதயகுமார்
Re: சின்னச் சின்ன கதைகள்
ராஜாக்களின் ராஜதந்திரங்கள்...!
-------------
கேரளா நண்பன் சொன்ன ஒரு கதை. நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த செல்வந்ததம்புரான் கட்டிய ஒருவீடு, தலைமுறைகள் மாற மாற வீடு கஷ்டமான நிலையில் தள்ளப்பட, நான்காவது தலைமுறையில் வந்தவருக்கு ஒரு பெரிய டவுட்டு... இந்த வீட்டுக்குள்ளே எங்கேயோ நம் முன்னோர்கள் புதையல் வைத்திருப்பார்கள் என்று...காம்பௌன்ட் வீடு என தோண்டி தோண்டி பார்த்தும் ஒன்றுமே அகப்படவில்லை. குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்...ஆனால்...சாபம் கொண்ட வீடு என்று தம்புரான் வீட்டை யாரும்
வாங்கவேயில்லையாம். சம்பிராதயம் சாபம் இவைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் [[சவுதியில் வேலைப் பார்த்தவர்]] அல்ப விலையில் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்...அவர் அந்த வீட்டிற்கு குடிவர விரும்பாமல், வீட்டின் மரவேலைப்பாடுகளை கழட்டி விற்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கினாராம். நான்கைந்து நாட்கள் வீட்டை சுற்றி பார்த்தவருக்கு, வீட்டில் ஒரு இடத்தில் ஒரு தேக்கு மரத்தூண் வித்தியாசமாக இருக்க...[[சேட்டன் அல்லவா ?]] சந்தேகம் வலுக்க ஆரபிச்சுதாம். ஒருநாள் யாருமில்லாமல் தனியாக வந்து அந்த தூணை வேகமாக சுத்தியால் அடிக்க..சத்தம் வித்தியாசமாக இருக்க...தூணை உடைத்தால்.... தூணின் உள்ளே எல்லாம் தங்கம் பவுடராக நிரம்பி
வைக்கப்பட்டிருந்ததாம்...சேட்டன் குடும்பம் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் நண்பன்...! உண்மையா பொய்யா தெரியல சாமீ...ஆனால் திருவிதாங்கூர் ராஜாக்கள் தங்கத்தை பவுடராக சேமித்து வைத்திருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன். திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகள் கோவிலில் மார்த்தாண்ட வர்மா, சுவாமிதான் ராஜா நான் அவரின் தாசன் என்று கூறி வாளை சுவாமி காலடியில் சரண்டர் செய்யும்போதே உஷாராகி இருக்கனும், ஏன் வாளை சரண்டர் பண்ணினார்ன்னு, மொத்த கஜானாவும் அங்கல்லா இருந்துருக்கு ?!!!
நன்றி ;நாஞ்சில் மனோ

புலியின் வீரமும் தமிழனின் அன்பும்...!!!
-------------
ஒரு காட்டுக்குள்ளே புலி இருக்குறதா தகவல் கிடைச்சதும், ஐநா சபை ஒரு டெஸ்ட்டுக்காக அமெரிக்கன் போலீஸ், ரஷ்யன் போலீஸ், இந்தியன் போலீஸ் டீமை தேர்ந்தேடுத்துச்சாம்.... முதலில் பேரிக்காய் ச்சே ச்சீ அமெரிக்க போலீசை காட்டுக்குள்
அனுப்பினார்களாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு திரும்பி வந்துட்டாயிங்களாம்... அடுத்து ரஷ்யன் போலீஸ் டீம் போனதாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்களாம்... கடைசியா களம் புகுந்த நம்ம இந்தியன் டீம், ரொம்ப நேரமாகியும்
திரும்பலையாம், அதிர்ச்சி ஆன ஐநா தலைவர், இவங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு பார்க்கலாம் வாருங்கள் என காட்டுக்குள் போயி பார்த்தால்..... நம்மாளுங்க ஒரு கரடியை பிடிச்சி கட்டி வச்சி அடி பின்னிட்டு இருந்துருக்காங்க, நான்தான் புலி'ன்னு சொல்லு சொல்லுன்னு அடிச்சிட்டு இருந்துருக்காங்க.....[[ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடி]] கொசுறு : எங்கேயோ படிச்சது...!!! டிஸ்கி : சம்மந்தமே இல்லாத என் நண்பனை என்கவுன்டரில் கொன்ற மும்பை போலீஸ்.....!!!
டிஸ்கி : நானும் இந்தியன்தான், கருத்து சொல்றவன் இங்கே வந்து கருத்து சொல்லு பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி.... டிஸ்கி : புலின்னு சொன்னாலே மலையாளிகளுக்கு கொலை நடுங்குது, ஏன்னு என் உண்மை பேசும் மலையாளி நண்பன்கிட்டே கேட்டேன், அவன் சொன்னது ஆச்சர்யமா இருந்தது, பொறாமையும், கடுப்பும், இயலாமையும்தான் காரணம்னு சொன்னான்....!!!!
நாஞ்சில் மனோ

அரபியின் வழிப்பறி...!!!
--------------------------
பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம். எட்டு வருஷம் முன்பு, மாலை நான்குமணி டியூட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் போவேன். டிரான்ஸ்போர்ட் இருந்தாலும் காத்திருப்பது எனக்கு பிடிக்காத காரணத்தால் நடந்துதான் போவது வழக்கம். ஆட்களையும் கடைகளையும் ரசித்தவாறு செல்வதுண்டு. அப்படி போகும் போது எல்லா நாட்களிலும் நான் போகும் அதே நேரம் ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியே போவதை எல்லாநாளும் கவனிப்பேன், பார்க்க தமிழ் ஆண்டி மாதிரி இருக்கும். அருகில் வரும்போது எப்போதும் நான் ஆச்சர்யகாக பார்ப்பது அவர் போட்டிருக்கும் தங்கச்செயினை, செயின்'ன்னு சொல்றதை விட தங்கவடம் இல்லை இல்லை சைக்கிள் செயின் மாதிரி ஒரு செயின் இடுப்புவரை நீளமாக அணிந்திருப்பார்கள்,
எனக்கு பார்க்க பார்க்க ஆச்சர்யமா இருக்கும்!!!! சும்மா தெனாவட்டா ஆம்பிளை மாதிரி அலட்சிய பார்வையும், அகங்கார நடையுமாக செல்லும் அவர்களை அதிசயமாகத்தான் எல்லாரும் பார்ப்பார்கள். இத்தனைக்கும் எல்லாநாளும் விதவிதமான சேலையில் வருவதை பார்ப்பதற்கு [[வயசு அம்பதுக்கும் மேல்]] அழகாதானிருக்கும்...!!! ஒருநாள், எனக்கும் அவர் வீட்டிற்கும் இடையே ஒரு நூறு அடி தூரத்தில் நான் வந்துகொண்டிருக்கும் போது, அந்தப்பெண் கதவை பூட்டி வெளியேறுவதை கவனித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன்.... திடீரென ஒரு அரபி அந்த அம்மா மீது பாய்ந்து, செயினை இழுக்க முயல அது கட்டியாக இருந்தமையால் அறுபடவில்லை, இதற்கிடையில் சுதாரித்த அந்த அம்மா, அரபியை கட்டி பிடித்துக்கொண்டு ஹெல்ப் ஹெல்ப் என்று அலற, நான் ஓடினேன் வேகமாக, நான் அருகில் வருமுன் சுதாரித்த அரபி, அந்த அம்மாவை உதறி தள்ளிவிட்டு ஓடிவிட்டான்...!!! ஆண்டவா என் செயின் பத்திரமா இருக்கு'ன்னு மூச்சு வாங்கிட்டு நின்னாங்க, நான் அருகில் போயி என்னாச்சுன்னு கேக்க, தமிழ்ல பொரிஞ்சாங்களே பார்க்கணும்
[[ஹா ஹா ஹா ஹா]] என் ஹஸ்பண்ட்டுக்கு போன் பண்ணனும் மொபைல் தரமுடியுமான்னு கேக்கவும் கொடுத்தேன் சத்தமா விஷயத்தை சொல்லி அழுதாங்க... அப்புறமா மெதுவா கேட்டேன், நானும் உங்களை பலமாசமா பார்த்துட்டுதான் இருக்கேன் இம்புட்டு பெரிய தங்க செயினை போட்டுட்டு ஒய்யாரமா போற நீங்கள் மாட்டுவீங்கன்னு, என்னை முறைத்துவிட்டு வீட்டினுள் போயிடுச்சு... அந்த அரபி செயினை பிடுங்கும் போது அருகில் நெறைய இந்தியா'காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்...!!! அவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே ஒழிய அரபியை பிடிக்கவில்லை, ஏன் அரபிகள் கூட அங்கே நின்று கொண்டுதான் இருந்தார்கள் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை...!!! நான் ஒருவன் மாத்திரமே ஓடி வந்துள்ளேன், மெதுவா ஒரு மலையாளி அண்ணாச்சிக்கிட்டே கேட்டதுக்கு, ஏதாவது பிரச்சினைன்னா யாருப்பா போலீஸ்கிட்டே போயி அழுறது, அடுத்து பிடிபடும் அரபியின் ஆட்கள் வந்து மொய் வைக்கும் போது என் கதி...??
ஆடம்பரம் வேணும்னா இப்பிடியா நகை அணிவது...?? என் நெருங்கிய சொந்தத்தில் என் அண்ணி ஒருவர் இப்படி நகைகள் அணிந்து பெருமையா நடந்து செல்வது வழக்கம், மும்பையில் இருந்து ஊர்போனவர், தான் கொண்டுவந்த எல்லா நகைகளையும் அணிந்து கொண்டே விருந்துக்கு போக நெல்லை பஸ்நிலையத்தில் காத்திருந்தாராம்... எப்பிடி தெரியுமா...? முந்தானையை தலையோடு கூட சேர்த்து நகைகளை மறைத்தவாறே நின்னாராம், குழந்தைகளை பார்த்துவிட்ட உறவுக்காரர் ஒருவர் அருகில் போயி பார்த்துவிட்டு, ஊருக்கே டமாரம் அடித்ததும் அல்லாமல், இங்கே நெல்லையில பயங்கரமா களவு நடந்துட்டு இருக்கு, கொலையும் நடந்துட்டு இருக்குன்னு குண்டையும் போட்டுட்டு போயிருக்கார். வெடவெடத்துப்போன அண்ணி அலறியடிச்சி திரும்ப ஊருக்கே ஓடினாராம், இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்.... நான் தெரியாமதான் கேக்குறேன் இம்புட்டு ஆடம்பரம் தேவையா....???!!!
இதில் கேரளா பெண்களை பாராட்டுவேன், எவ்வளவு நகை இருந்தாலும், ஒன்னு ரெண்டு சின்ன சின்ன செயின்கள்தான் அணிகிறார்கள், ம்ஹும் நம்ம தமிழ்பெண்கள் ரொம்பதான் அலப்பறை செய்கிறார்களோன்னு தோணுது...!!! அடுத்தநாள் வேலைக்கு செல்லும் போது, அந்த அம்மா அதேபோல வீட்டை பூட்டி வெளியேறினார்கள், அருகில் வந்ததும் குட் ஆஃடர் நூன் என்றார், நான் வணக்கம்னு சொல்லிட்டே செயினை பார்த்தேன் ஹி ஹி, என்ன பாக்குறீங்க செயினை கழற்றி எங்க சொந்தகாரங்க வீட்டுல பத்திரப்படுத்திட்டோம்னு சொன்னாங்க, ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு....!!!!

குத்துங்க எஜமான் குத்துங்க....!!!
-----------------
முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே... நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]] ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!!
[[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]] பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது. அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது. சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...???
சொல்றேன். . . . . இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு... அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]]
ஊராருக்கு தெரியாது. அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்.... டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது. டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]
அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]].... இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....? ள்பதிவு...[[யாருலேய் Posted by
MANO நாஞ்சில் மனோ

விவசாய வாழ்வும் என் அம்மாவும்....!
***********
எனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் திரும்பினாலும் ஒன்றாகவே போய் வருவோம், எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் நடுவில்தான் அவன் வீடு, பள்ளி போகும் போதும் திரும்பும் போதும் அவன் வீட்டில் இருந்து சற்று விளையாடிவிட்டே செல்வது வழக்கம். மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்.
ஒருநாள் பள்ளி விட்டு வரும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த படியால் மகேஷின் அம்மா என்னை மழை நிக்கட்டும் தம்பி அப்புறமா போகலாம், இருட்டுச்சுன்னா நானே உன்னை கொண்டு வீட்டில் விடுகிறேன் என சொல்லவும், அங்கேயே இருந்தேன் மழை நிற்பதற்காக..... சற்று நேரத்தில் நண்பனின் இரு தம்பிகளும் தங்கையும் பள்ளியில் இருந்து வந்ததும், அம்மா சாப்பாடு கொடு என நண்பனின் அம்மாவை நச்சரிக்க தொடங்கினார்கள், அம்மாவுக்கோ சங்கடமாக போய்விட்டது காரணம் என்னை வைத்துகொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது,
எனக்கு தந்தாலும் நான் சாப்பிடமாட்டேன், எனவே பிள்ளைகளை அதட்டி கொண்டிருந்தார்கள். எனக்கும் நல்ல பசி போதாததுக்கு அங்கே மணம் பரப்பி கொண்டிருந்த இறைச்சி கறி வேறு இன்னும் ஆசையை தூண்டிக்கொண்டிருந்தது, கண்டுக்காமல் இருந்தாலும் பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காததாலும், மழை நிற்கிற நிலையில் இல்லை என்பதாலும், மகேஷின் அம்மா என்னிடம் யய்யா கொஞ்சோல சாப்புடுய்யா என பாசமாக கேட்கவும், சரி சொல்லிவிட்டேன். அந்த அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து எனக்கும் இறைச்சி சாப்பாடு பரிமாறினார்கள், நன்றாக சாப்பிட்டேன்....கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, அதுக்கிடையில் என் அம்மாவும் என்னை தேடி வந்துவிட்டார்கள். இருவரும் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினோம். வீட்டுக்கு வந்ததும் ஊரில் உள்ள மற்ற நண்பர்களோடு விளையாட போய்விட்டேன், இரவு ஆனதும் அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்தேன், அப்பா வியாபார விஷயமாக தூத்துக்குடி போயி இருந்தார். வீட்டுக்கு வந்ததும், எலேய் தம்பி வா சாப்பிடலாம்னு அம்மா கூப்பிடவும், அம்மா நான் சாப்டாச்சு என்று சொன்னேன். "எங்கலேய் தம்பி சாப்பிட்டே...?" "மகேஷ் வீட்டுல" "என்னாது மகேஷ் வீட்டுலையா...?
எலேய் இங்கே வா" "என்னம்மா" "கையை காட்டுலேய் தம்பி" என் கையை மோந்து பார்த்த அம்மா ஒன்னும் சொல்லவில்லை மாறாக சாப்பாடு பாத்திரங்கள் [[ பானை, சட்டிகள்]] மூடப்பட்டன உடனே...! என்னை வீட்டுக்கு வெளியே கூட்டிப்போன அம்மா...."எலேய் தம்பி இங்கினையே நில்லு"னு சொல்லிட்டு உள்ளே போனார்கள், நான் பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தேன். வெளியே வந்த அம்மா கையில் தண்ணீர் வாளியும் குடம் குடமாக தண்ணீரும் வெளியே வந்தது "என்னம்மா இது...?" சித்த பொறுலேய் மக்ளே" என்று சொன்ன அம்மா........என் டிரஸ்ஸை கூட கழட்டாமல் அம்புட்டு தண்ணீரையும் என் மீது ஊற்றினார்கள். எனக்கு ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தேன். அப்புறம் என் துணியை எல்லாம் கழட்டி விட்டு தன் முந்தானையால் துவட்டி விட்டு வேறு துணி மாட்டி விட்டாள்.
நான் ஒன்னும் புரியாமல் அழுது கொண்டே கேட்டேன் "ஏம்மா இவ்ளோ தண்ணி என் மேலே ஊத்துன...?" "இல்லப்பா தம்பி உன் உடம்புல அழுக்கு இருந்துச்சுப்பா அதான் அம்மா கழுவி விட்டேன்" என்று சொன்னாலும் எனக்கு என்னமோன்னு டவுட் இருந்து கொண்டே இருந்தது, அம்மா கோபமாக இருக்கும்போது ஒன்னுமே பேசமாட்டேன், அம்மா நார்மல் ஆகிட்டா அம்மாவும் எனக்கு குழந்தைதான் எனக்கு சரிசமமாக விளையாடுவாள் என்னோடு...! அப்புறம் ஒருநாள் இரவு அம்மாவுடன் படுத்து இருக்கும் போது, அம்மா என் முடிகளை கோதிவிட்டு கொண்டு இருக்கும் போது கேட்டேவிட்டேன் [[அம்மா கோபப்படும் பல புரியாத விஷயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்வது இங்கேதான்]] "அம்மா எதுக்கும்மா அன்னிக்கு என்மேல அவ்ளோ தண்ணி ஊத்துன...? அம்மாவின் பதில்..... "எலேய் தம்பி, அவங்க வீட்டுல மாட்டிறைச்சிதான் சாப்பிடுவாங்க நாம சாப்பிடமாட்டோம் தெரியுமில்ல...?" "எனக்கு எப்பிடிம்மா தெரியும் அவங்க என்ன இறைச்சி வச்சிருக்காங்கன்னு, சரிம்மா இனி எங்கேயும் சாப்பிடமாட்டேன் சரியா..?" "தெரியும்ய்யா உனக்கு தெரியாதுன்னு, அதான் அம்மா உன்னை அடிக்கலை புரியுதா...?" "சரிம்மா நாம ஏன் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டோம்னு சொல்லும்மா"
"மக்ளே......மாடு நமக்காக உழைத்து போடும் தெய்வம் மாதிரி, அது நமக்கு உழைத்து போடும் அளவுக்கு மனுஷன் ஒருத்தனும் உழைக்க முடியாது, அது நம்மை போன்ற விவசாயிகளுக்கு தெய்வம் போல உழைச்சு போடுது, உழைக்கும் சாமியை யாராவது சாப்பிடுவாங்களா சொல்லு பாப்போம்..?" "அதான் உன் மீது தண்ணீர் ஊற்றி பிரேயர் பண்ணினேன், இனி எங்கே போனாலும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்னய்யா...?" "சரிம்மா" [[ ம்ம்ம்ம் நாடோடி வாழ்க்கைக்கு வந்தபின்பு இதையெல்லாம் மறந்து ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாம் சுவாக......ஸாரி அம்மா]] இப்போதும் மும்பையில் இருந்து ஊர் வரும்போது ராத்திரி வெளியே [[என் வீட்டம்மா இருந்தாலும்]] போய் விட்டு சாப்புட்டுட்டேன்னு சொன்னால், கண்டிப்பாக அம்மா கேள்வி கேட்பாள், எலேய் தம்பி மாட்டிறைச்சி சாப்பிடலைதானே தம்பி...? என்னதான் அம்மா கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்து விவசாய குடும்பத்தில் பிறந்த அந்த சுபாவம் அம்மாவுக்கு இன்னும் மாறவில்லை கால்நடைகள்,
பறவைகள் மீது அம்மாவுக்கு அம்புட்டு பாசம்...! எனக்காக அம்மா கோழி வளர்த்து வைப்பது உண்டு, லீவுக்கு நான் வரும்போது, அதோ அந்த கோழிதான் உனக்காக வளர்த்துட்டு இருக்கேன்னு சொன்னாலும் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் என்று தெரிந்தே அம்மா அப்படி சொல்வது உண்டு. இந்தமுறை அம்மா அதே டயலாக்கை சொல்ல....என் பையன் கேட்டுவிட்டான்....ஓடி விரட்டி பிடித்து பாட்டி இப்பவே இதை எனக்கு குழம்பு வச்சு தாங்கன்னு பாட்டியை பிடித்து கொண்டான்.....எப்பா எப்பிடியோ சமாளித்து அன்னிக்கு ஹோட்டலில் இருந்து அவனுக்கு கோழி கறி வாங்கி கொடுத்து சமாளித்தேன். அம்மாவுக்கு மாடு, ஆடு, கோழிகள் என்றால் அம்புட்டு பிரியம் அவைகள் மீது.....இந்த தள்ளாத வயதிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பது உண்டு, ஆட்டுக்கும், கோழிகளுக்கும் அம்மாவின் பாஷை புரியும்,
அம்மாவுக்கும் அவைகளின் பாஷை புரியும். ஆட்டுக்கு அடிபட்டால் காயத்திருமேனி எண்ணெய் போட்டு தடவி விடுவாள், ரெண்டு நாளைக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெயும் தடவி தேய்த்து விடுவாள், எனக்கு இப்போதும் அது ஆச்சர்யமாக இருக்கும்...! ஆட்டு குட்டிகளுக்கு அம்மா கையால் கஞ்சி எடுத்து வாயில் ஊட்டினால்தான் சாப்பிடும், நாங்கள் ஊர் போனால் என் மகள் கையால் மட்டுமே சாப்பிடும் அந்த குட்டிகள், வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது...! இப்போதும் மாட்டிறைச்சி சாப்பிட்டாலோ, பார்த்தாலோ என் அம்மாவின் நினைவு வந்து போகும்.........அந்த குளிரில் குடம் குடமாக தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரும்....!

வீட்டுக்குப் போகும் காற்றாறு
-------------
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலையெல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா… அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.
“”இந்தக் காட்டாறு எங்கே போகுது?”
“”நம்ம வீட்டுக்குத்தான்”
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.
மாலையானது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.
பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்”
நன்றி ;தினமணி

சிறுகதை: மிதிவண்டி
---------------
மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.
இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.
நாளைக்கு முதன்முதலாய் சைக்கிளில் பள்ளிக்கு போகப் போகின்ற உற்சாகம் மனசுக்குள். அப்பா மாலையில்தான் புது சைக்கிளை வாங்கி வந்து, வாசலில் நிறுத்தி இருந்தார்.
இனி நாளை முதல் பள்ளிக்கும், டியூஷன் கிளாஸýக்கும் புது சைக்கிளிலேயே இறக்கைக் கட்டிப் பறக்கலாம். நினைப்பே இனிக்க, கண்ணைக் கவ்வ மறுத்த தூக்கத்திற்கு வலிய அழைப்பு விட்டு வலுவில் தூங்க முயற்சித்தான்.
ஏனென்றால் அப்போதுதான் கனவு வரும். கனவில் சைக்கிள் ஓட்டலாமில்லையா..?
விடிந்ததும் முதல் வேலையாய், சைக்கிளை அரைமணி நேரம் துடைத்தான். அம்மாவும், அப்பாவும் அவனுடைய செயலைப் பார்த்து சிரித்தார்கள்.
ஒன்பது மணி பள்ளிக்கூடத்திற்கு அவன் எட்டு மணிக்கே தயாராய் நிற்க, அம்மாவும், அப்பாவும் அசந்து போனார்கள்.
“”ஏண்டா… மணி, தினமும் எட்டரை மணிக்குப் போறவன் நீ. இப்போ சைக்கிள் வந்தாச்சு. இன்னும் ஐந்து பத்து நிமிடம் தாமதமா கிளம்பினா போதுமில்லையா… ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டே…” அம்மா ஆச்சர்யமாய் கேட்க, மணி செல்லமாய் சிணுங்கினான்.
“”அம்மா ப்ளீஸ்மா, நான் சீக்கிரம் போனாத்தான் என் பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் என் சைக்கிளை காட்ட முடியும்.”
அவனுடைய ஆர்வத்திற்கு தலைசாய்த்து அம்மாவும், அப்பாவும் அவனை அனுப்பி வைத்தார்கள்.
சைக்கிளை மிதிக்க மிதிக்க வானத்தில் பறப்பது போல மனசு பூரித்தது மணிக்கு. அவன் இத்தனை சீக்கிரம் வந்ததற்குக் காரணம் புது சைக்கிள் மோகம் மட்டுமல்ல, ஆனந்தும் தான் காரணம்.
ஆனந்த், மணி படிக்கிற அதே பள்ளியில் தான் படித்தான். பத்தாம் வகுப்பு. மணி ஒன்பதாம் வகுப்பு. மணி வசிக்கும் தெருவிலேயே வசிக்கிறான். அவன்தான் மணிக்கு சைக்கிள் ஓட்ட கத்துத் தந்தவன். அவனுடையப் பயிற்சிதான் மணி இத்தனை அழகாய் சைக்கிள் ஓட்டக் காரணமென்றால் மிகையில்லை.
நேற்று கூட சொன்னான்.
“”மணி, உனக்கு சைக்கிள் வந்ததும் எனக்கு ரொம்ப நிம்மதி ஆகிடும்டா. மணிக்கணக்கா பஸ்ஸýக்கு காத்துட்டு நிக்காம நான் நேரா உன் வீட்டுக்கு வந்துடறேன். ஆமாடா, நான் பத்தாம் வகுப்பு படிக்கறதால பள்ளியில நிறைய ஸ்பெஷல் கிளாஸý இருக்கு. என்னால சரியான நேரத்துக்குப் போக முடியாததால எல்லா வகுப்பிலேயும் திட்டு வாங்கறேன். எங்க அப்பாவால எனக்கு சைக்கிள் வாங்கித் தரமுடிலடா. அதனால நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்டா…”
அதுதான் மணிக்கு பிடிக்கவில்லை.
ரெண்டு வருஷமாய் அப்பா, அம்மாவிடம் போராடி, தான் சைக்கிள் ஓட்டும் திறமையை நிரூபித்து வாங்கிய சைக்கிள். அது முழுக்க முழுக்க இவனுக்கானதுதான். அதில் யாருக்கும் இடமில்லை. அதனால்தான் அவனை தவிர்த்துவிட்டு சீக்கிரமே கிளம்பி விட்டான்.
மறுநாள்…
“”என்ன மணி, இன்னைக்கும் சீக்கிரம் கிளம்பிட்டே..!” அப்பாவும், அம்மாவும் ஆச்சர்யமாய் கேட்க, ஏதோ ஒரு பாடத்தில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாய் சொல்லிவிட்டு பறந்தான்.
சைக்கிளில் ஜம்மென்று பறப்பது சுகமாகவும், ரொம்பக் கவுரவமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பும் முன்னரும் ஆனந்தை சந்திக்காமல் மாற்று வழியில் வீடு வந்து சேர்ந்தான். மனசு உற்சாகமாய் இருந்தது. மாலையில் ஆனந்த் வாசலில் சைக்கிளைப் பார்த்து விட்டு ஓடோடி வந்தான்.
“”என்னடா மணி, சைக்கிள் வாங்கிட்டியா..?” என்றான் ஆசையாக.
“”ஆமாண்டா..!” என்றான் சுரத்தில்லாமல்.
“”அப்புறம் ஏண்டா என்னைய விட்டுட்டு காலைல ஸ்கூல் போயிட்ட…” என்றான் அப்பாவியாய்.
“”இல்லடா… இப்பெல்லாம் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் வெச்சுடறாங்க அதான்…”
“”எத்தனை மணிக்குப் போவே… நானும் வர்றேனே…”
“”எட்டரை மணிக்கு…” என்றவன் கால்மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விட்டான்.
இரண்டொரு நாள் வந்து பார்த்து ஏமாந்த ஆனந்த், பிறகு வருவதேயில்லை. மணிக்கு நிம்மதியாய் இருந்தது. இது அவனுக்கே அவனுக்கான சைக்கிள். இதில் யாருக்கும் இடமில்லை.
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து அப்பாவே ஒரு நாள் கேட்டார்.
“”என்னாச்சு… மணி, உனக்கும் ஆனந்துக்கும் ஏதாவது சண்டையா? அவன் ஏன் வீட்டுக்கு வர்றதில்லை…?”
“”இல்லப்பா, அவன் நான் சைக்கிள் வாங்கினதைப் பார்த்து பொறாமைப்படறான் போல…”
“”என்னடா… மணி, இப்படியெல்லாம் பேசுற? ஆனந்த் என்ன அப்படிப்பட்ட பையனா? அப்படியே இருந்தாலும் உன்னுடைய நண்பன் தப்பு செஞ்சா நீதானே பக்குவமாய் திருத்தணும். அத விட்டுட்டு இப்படியா புறம் பேசுவாங்க…” அம்மா அதட்டினார்.
“”ஆமாம் மணி, எப்பவும் நீ தனியா போறதை விடவும் நல்ல நண்பரோட போறது இன்னும் அழகாக இருக்கும்” என்றார் அப்பா.
ஆனால், மணி இதெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
அன்று பள்ளியில் இருந்து கிளம்பிய மணிக்கு மெயின் ரோட்டை தாண்டியதும் சோதனை ஏற்பட்டது. மெயின் ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது, சைக்கிள் சறுக்கி கிழே விழுந்து கையில் அடிபட்டு விட்டது. இன்னொரு பக்கம், சைக்கிள் செயின் கழன்றுக் கொள்ள, அதையெப்படி மாட்டுவது என்று தெரியாமல் முழித்தான் மணி.
பக்கத்தில் உதவிக்கு யாருமில்லை. கடந்து போன ஓரிருவரும் இவனைப் பார்த்துக் கொண்டே போனார்கள். உதவிக்கு வரவேயில்லை. மணிக்கு அழுகை அழுகையாய் வந்தது. இப்படி ஆகுமென்று அவன் நினைக்கவேயில்லை. செயினை மாட்ட முன்னுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த போது ஆனந்த் ஓடோடி வந்தான்.
“”என்னடா மணி ஆச்சு? கையெல்லாம் ஒரே சிராய்ப்பா இருக்கு. செயின் கழண்டுப் போச்சா. கொஞ்சம் தள்ளு, நான் மாட்டறேன்.”
ஐந்து நிமிடத்தில் மாட்டி விட்டான். மணிக்கு வெட்கமாய் இருந்தது.
“”ஆனந்த நீ எப்படிடா இங்கே வந்தே..?”
“”நான் பஸ்ல போகும் போது, நீ இங்கே விழுந்துக் கிடக்குறதைப் பார்த்தேன்டா. அதான் அடுத்த ஸ்டாப்ல இறங்கி ஓடோடி வர்றேன். மணி என் தப்புதாண்டா, சைக்கிள் ஓட்டக் கத்துத் தந்த நான், அதில் ஏற்படற சின்னச் சின்னப் பழுதுகளை எப்படி சரிபார்க்கறதுன்னு சொல்லித் தந்திருக்கணும். என்னை மன்னிச்சுருடா…”
ஆனந்துடைய வார்த்தைக் கேட்டு வெட்கித் தலைக்குனிந்தான் மணி. படிப்பில் மட்டுமில்லை, பண்பிலும் உயர்ந்து நின்றான் மணியின் நண்பனாய் ஆனந்த்.
“”ஆனந்த், இனிமேல் நாம் சேர்ந்தே போவோம்டா. என்னை மன்னிச்சுடுடா…” மணி நிஜமாகவே வருத்தப்பட்டான்.
“”நிஜமாவாடா…” ஆனந்த் குதூகலமாய் புன்னகைத்தப்படி மணியின் பின்னால் ஏறிக் கொண்டான். இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த மணியின் பெற்றோர், பிணக்குபட்ட நண்பர்கள் இருவரும் ஒன்றானதை அறிந்து மகிழ்ச்சியுற்றனர்.

இதெல்லாம் இதற்குத் தானா?
-----------
இவாஞ்சலின் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோதுதான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது.
கீரைக்காரம்மாளுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் இந்த மரணம் பெரிய இழப்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு நிஜத்தில் இது பெரும் விடுதலைதான்.
கீரைக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு ஆரம்பத்தில் அதிகம் நெருக்கம் இல்லை. கீரைக்காரம்மாளின் பெண்ணால்தான் அந்த நெருக்கம் பின்னால் ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, கீரைக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது.
அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலையளித்தன. கீரைக்காரம்மாளிடம் இதுபற்றி விசாரிக்கலாமென்றால், இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.
பிறகு ஒரு நாள் தண்ணீர் குழாய் அருகில் சந்தித்தப்போதுதான் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளிடம், ”அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்னோட படிப்பு ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சுருக்கலாமில்ல..!” என்றாள்.
கீரைக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. ”அந்தக் கொடுமைய ஏன் தாயி கேட்குற..?” என்றபடி வாசல்படியில் கால்நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். ”என் பொண்ணு பத்தாவதுல நானூறுக்கு ஒரு மார்க் குறைவு; நம்ம தெருவே மூக்குல விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மென்ட் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்குச் சொல்லத் தெரியல! உன்னை மாதிரி விஷயம் தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் கூட்டிட்டாவது போயிருக்கலாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு.
ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக் கோடி புண்ணியம் கெடைக்கும்’ன்னு வாத்தியார்கிட்டயே பொறுப்பக் கொடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல.
அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் சொல்லிருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு பயந்துக்கிட்டு வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன செய்றது?
அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் வாங்கியிருந்தா என் பொண்ணு. சரி இன்னொரு மூணு வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஜ் தேடுனா, அக்கம் பக்கத்துல எந்தக் காலேஜுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல. பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஜுல தான் அது இருக்காம். அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்கே போறது? அதான் கார்மென்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கா… எல்லாம் விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கௌம்புறேன்” என்றபடி எழுந்து போனாள்.
இவாஞ்சலினுக்கு ரொம்பவும் துக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் இதுபற்றி சொன்னபோது அவனும் அந்தப் பள்ளியின் மீது கோபப்பட்டான். அப்புறம் ”காலேஜுல போயி அந்தப் படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் கத்தை கத்தையா பணமிருந்தால் தான் முடியும். வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…” என்றான். அவள் மலர்ந்து, ”ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா..?” என்றாள்.
”அது சாத்தியமில்லப்பா… ப்ளஸ் டூ ல மேத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத்தான் இரண்டாவது வருஷத்துல சேர முடியும். இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் சேர்த்து விடணும்…” என்றான். ”அப்ப ரெண்டு வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் பார்க்குறேன்…” என்றாள்.
அடுத்த நாள் கீரைக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது, ”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்! நான் என் பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு…” என்றபடி உடனே ஓடிப்போய் தன் பெண்ணை அழைத்து வந்தாள்.
”உன் பேரென்னம்மா..?” என்றாள் இவாஞ்சலின் அவளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அவள்.
”சுகந்தி ஆன்ட்டி…” என்று அவள் சொல்லவும், ”அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” என்றாள் இவாஞ்சலின். ”அவங்க அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசனையான மனுஷன் தான். இப்பத்தான் எதுக்கும் பிரயோசனமில்லாமப் போயிருச்சு…” என்றாள் கீரைக்காரம்மாள்.
”பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி?” என்று கேட்டாள் இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷம் பொங்க ”சரி ஆன்ட்டி…” என்று தலையை ஆட்டினாள் வேகமாக.
அடுத்து வந்த நாட்களில் கீரைக்காரம்மாளும் இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.
இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளின் வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை விசாரித்து அறிந்து கொண்டாள்.
”எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் மதுரை மேலூர் பக்கத்துல ஒரு கிராமம். சுகந்தி அப்பா அப்பல்லாம் நல்லா நையாண்டிமேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, ஊர்த் திருவிழான்னு அதுக்குத் தகுந்தபடி அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் பார்த்து நான் சொக்கிப் போவேன். ரொம்பத் தெறமையான மனுஷன்ம்மா… நான்தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்; என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கணும் போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு…
நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு. நாங்க ஒரே ஜாதிதான். எங்களோடது ரொம்ப வறுமையான குடும்பம். அன்னாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். இவரோடது கொஞ்சம் வசதியானது. அதனால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள ஏத்துக்கல. வெட்டுவோம், குத்துவோம்னு மெரட்டுனாங்க. உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு இந்தப் பட்டணத்துக்கு ஓடி வந்துட்டோம். ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் மேளம் வாசிக்கிறது விட்டுருச்சு. கேட்டா உண்மையான கலைஞனுக்கு இங்க மரியாதை இல்லைன்னு சொல்லும். அதுக்குப் பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு. சொந்தமா கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு.
ஆரம்பத்துல எல்லாம் என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு. காதலிக்கும் போது இருக்குற கரிசனமான ஆம்பளைங்க கல்யாணத்துக்கப்புறம் எப்படி காணாமப் போறாங்கன்னே தெரியல. இதுவும் அப்படியே மாறிப் போயிருச்சு. கூடவே குடிப்பழக்கம் வேற” என்றாள் கசப்பு பொங்கும் குரலில்.
பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்தமில்லாத குரூப்பைப் படித்த பெண்ணைச் சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளோ எஸ்.எஸ்.எல்.சி.யில் குறைந்த பட்சம் நானூறுக்கும் அதிகமான மார்க் எடுத்திருந்தால் தான் இடம் கிடைக்குமென்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து விட்டார்கள். சுயநிதி பாலிடெக்னிக்குகளில் டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார்கள். ஆனால் அங்கு சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபாய்த் தேவைப்படுமென்று தெரிந்தது.
”இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி. அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…” என்று சொல்லி கீரைக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.
இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை. எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று
மனசு கிடந்து துடித்து. ”இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க…” அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். ”நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண படிக்க வைக்கலாம்ப்பா…” என்றான் அவன். ”நெசமாவா… பணம் கட்டுவீங்களா?” பரவசத்தில் அவள் குரல் பதறியது.
கீரைக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. இரண்டு பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். கீரைக் கா ரம் மாள் தடா லென்று இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். இவாஞ்சலின் பதறிப்போய் ”அய்யோ என்னங்க இதெல்லாம்…” என்று அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைப்பதற்குள் போதும் போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.
காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் வாங்கி வந்தார்கள். அன்றைக்கே மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பி, ஒரு நல்ல நாளில் போய் பணம் கட்டி பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின். இரண்டு நாள் சென்றிருக்கும். கீரைக்காரம்மாளின் புருஷன் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்று கொண்டு சத்தம்போடத் தொடங்கினார். அப்போது அவர் நிறைந்த போதையிலிருந்தார்.
”என் பொண்ணுக்கு நீ யாருடா பணம் கட்டிப் படிக்க வைக்குறதுக்கு! அப்படிச் செஞ்சு என் பொண்டாட்டிய வளைச்சுக்கலாம்னு பார்க்குறியா? வெளிய வாடா…” என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினார்.
அருள்தாஸ் வெளியே வந்து சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார். அவர் அடங்குவதாக இல்லை. அப்புறம் போலீஸýக்குப் போன் பண்ணி, அவர்கள் வந்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் நாலு சாத்து சாத்தி அனுப்பவும்தான் அமைதியானார்.
கீரைக்காரம்மாள் இவாஞ்சலின் வீட்டிற்கு வந்து அழுதாள். ”அந்த மனுஷன் பேசுனத மனசுல வச்சுக்காதீங்கய்யா” என்றாள்.
”பயப்படாதீங்க… யாருக்காகவும் எதுக்காகவும் சுகந்தியப் படிக்க வைக்கிறதுலருந்து நாங்க பின் வாங்க மாட்டோம்” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பி வைத்தார்கள். சுமார் மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கடந்தது. பாலிடெக்னிக்கில் சுகந்தி நன்றாகவே படித்தாள். அவ்வப்போது இவாஞ்சலினிடம் வந்து பரீட்சையில் எடுத்த மதிப்பெண்களையெல்லாம் காட்டிப் போனாள்.
திடீரென்று ஒருநாள் கீரைக்காரம்மாளின் வீட்டிலிருந்து குய்யோ முறையோ என்று அலறல் கேட்டது. இவாஞ்சலின் ஓடிப்போய் பார்த்தாள். கீரைக்காரம்மாள் மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு பிள்ளைகள் மூன்றும் கதறிக் கொண்டிருந்தன. விசாரித்தபோது தான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது. கீரைக்காரம்மாள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதற்குச் சாட்சியாக சீலிங்ஃபேனில் கீரைக்காரம்மாளின் சேலை படபடத்துக் கொண்டிருந்தது.
முதலில் எதுவும் சொல்ல மறுத்த கீரைக்காரம்மாள் பிறகு தயங்கியபடியே சொன்னாள். ”சொல்லித்தான் தீரணும்; உன்கிட்ட சொல்றதுல தப்பில்ல தாயி… என்கிட்ட வந்து ‘வாடி படுத்துக்கலாம்’னு கூப்பிட்டான். வீட்டுல இருக்கிறதே ஒரே ஒரு ரூம்தான்; வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையும் மத்த புள்ளைங்களும் அங்க உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்காங்க; என்ன வக்கிரமான மனுஷன்னு பார்த்தியா தாயி? நான் முறைச்சுப் பார்த்துட்டு பேசாம இருந்தேன். உடனே அந்த ஆளு என்ன செய்தான் தெரியுமா? அவனோட உடைகள் மொத்தத்தையும் அவுத்துட்டு அம்மணமா நிற்குறான் தாயி…” என்றபடி முகத்தை கைகளால் மூடியபடி பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். ”புள்ளைங்கெல்லாம் வெளியே ஓடிருச்சுங்க; இந்த வெறிபிடிச்ச மனுஷனோட எப்படி மிச்ச காலத்தையும் கழிக்குறதுன்ற வேதனையிலதான் செத்துத் தொலையிறதுன்னு முடிவுக்குப் போயிட்டேன். இனிமே எது நடந்தாலும் அப்படிப் பண்ண மாட்டேன். மன்னிச்சுக்கோ தாயி…” என்றாள்.
இது நடந்து பத்து நாட்களுக்குள் கீரைக்காரம்மாளின் புருஷனின் மரணம் நேர்ந்துவிட்டது. அவனின் கடைசி நேரக் கிரியைகள் எல்லாம் முடிந்து மரணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து போன பின்பும் அழுது கொண்டிருந்த கீரைக்காரம்மாளிடம், இவாஞ்சலின் ஆறுதலாய்ச் சொன்னாள்: ”நடந்தது நடந்து முடிஞ்சுருச்சு; அத மறந்துட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிங்க…”
”எப்படித் தாயி… என்னால தாங்கவே முடியலயே! ஆசை, ஆசையா காதலிச்சு, சொந்த பந்தங்கள ஒதுக்கி கல்யாணம் பண்ணி, ஊருவிட்டு ஊரு ஓடி வந்து, கடைசியில நானே கொல்ல வேண்டியதும் ஆயிடுச்சே!”
இவாஞ்சலினுக்குச் சிலீரென்றிருந்தது. ”என்ன சொல்றீங்க? அவரு விஷச் சாராயத்தக் குடிச்சு செத்துப் போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
”இல்ல தாயி, அந்த மனுஷன் சாராயம் குடிச்சு சாகல. நாலு நாளைக்கு முன்னாடி ஒரு நடு வயசுத் தாண்டிய பாதிக் கிழவன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவனுக்கு சுகந்திய கல்யாணம் கட்டி வைப்போம்ன்னார். நான் சண்டைக்குப் போனேன்… அதுக்கு அது என்ன சொல்லிச்சு தெரியுமா தாயி?”
”அவ படிச்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்; அதிகம் படிக்காத நீயே, என்னை மயக்கி வளைச்சு பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து என் வாழ்க்கையைப் பாழாக்கிட்ட; இப்ப என்னை ஒரு துரும்புக்கும் மதிக்கிறதில்ல! இவ படிச்சு முடிச்சா உன்னை மாதிரியே தட்டழிஞ்சு, எவனையாவது இழுத்துக்கிட்டு வந்து நிப்பா! அதனால வர்ற முகூர்த்தத்துலே கல்யாணம் பண்ணியே தீர்வேன்னு ஒத்தக் கால்ல நின்னுச்சுமா..
அது பேசுனத கேட்டதும் இந்த மனுஷனப் போயி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டமேன்னு ச்சீய்ன்னு ஆயிருச்சு… என் மேலயே எனக்கு ஆத்தாமையா வந்துச்சு; இனியும் இந்தப் பூமியில உயிர் தரிச்சு இருக்கிறதுல ஒரு அர்த்தமும் இல்லைன்னு பிள்ளைகளோட சேர்ந்து செத்துப் போகலாம்னு விஷம் வாங்கிட்டு வந்தேன்; கடைசி நேரத்துல மனசு மாறி ‘நாம் ஏன் சாகணும்? அழிச்சாட்டியம் பண்ற அந்த மனுஷன்தான் சாகணும்’னுட்டு வீட்டுல அது வாங்கி வச்சுருந்த சாராயத்துல விஷத்தக் கலந்து வச்சுட்டேன் தாயி..” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.

அவள்
-----------
அவள் நாளை வருகிறாள்.
என் இதயம் முழுவதும் சந்தோஷச் சுனாமி! இதுவரை
உணராத ஒருவித தவிப்பு. இறக்கைகள் முளைத்தது போல்
புதுவகை சுறுசுறுப்பு.
அவள் வந்ததும் அப்படியே அலாக்காக தூக்கி ஒரு
சுற்று சுற்ற வேண்டும். கட்டி அணைத்து முத்தமிட்டு
கதை பேச வேண்டும். என் அன்பை முழுவதுமாய்
குத்தகை எடுத்த அவளுக்கு ஏராளம் வாங்கித்தர
பட்டியல் தயார்.
உறக்கமில்லாமல் கழிந்தது இரவு.
புதுப்பூவாய் புலர்ந்தது பொழுது.
அழைப்பு மணி ஒலித்தது.
ஆம்...வந்துவிட்டாள்....
என் அக்காவின் ஐந்து வயது அழகு மகள்!
[ தினமலரில் 22 -8 - 2010 ல்௦ வெளியானது]

அர்த்தங்கள்
----------
மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.
உடனே கணவனிடம் சென்று,
"இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு
சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?"
"சரி சரி"
அழைப்பு மணி அழைத்தது.
கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்தது. உடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்
"சரிப்பா...பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்...இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்" என்றார்கள்.
குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.
குழந்தையோ அழுது கதறியது.
கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
கதவை தாளிட்டு வந்து "அப்பாடா...போக வச்சாச்சு" என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.
அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்து 'கக்கக்கவென' சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
"பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து
கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள்.அடுத்தவரோட
உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்" என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு
உரைத்தது.
Ram Ananth

கிளிப்பேச்சு
நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள்
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில்
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.
பிறகு...
சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.
சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.
"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.
அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.
அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.
ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.
அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.
கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.
ஹனு கண்களில் நீர் திரள "அ....அம்....மா..." என்று பேச பழகினாள்.

ஆத்தா
அலமேலுபுரம். பசுமையான கிராமம். நாற்பது வீடுகள்,ஒரு ஆஞ்சநேயர் கோவில், ஒரு சிறிய நூற்ப்பாலை என்று அடக்கமான கிராமம். அந்த நூற்பாலையை நம்பித்தான் அந்த கிராமமே இருந்தது.
ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள மகிழ மரத்தடியில் வடை,பஜ்ஜி சுட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் அனாதையான மீனாட்சி பாட்டி. அங்கு வரும் நூற்ப்பாலை தொழிலாளர்களுக்கு அன்போடு பரிமாறுவாள்.
அப்படி அங்கு சாப்பிட வருபவர்களுள் சண்முகமும் ஒருவர். நிறைய பேர் பிறகு காசு தருகிறேன்னு சொல்லி போய்விடுவர். ஆனால் சண்முகம் தானும் அனாதை என்பதால் ஆத்தா, ஆத்தா என்று
பாசத்தோடு பேசுவார்.
"ஆத்தா...வேற எதாவது வேணுமா? என்னோட வந்து தங்குன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறே" என்பார்.
"வேண்டாம் ராசா...இப்படி அன்பா நாலு வார்த்தை பேசினா அதுவே இந்த அனாதைக்கு போதும்ப்பா" என்று கண் கலங்குவாள் பாட்டி. சண்முகம் பாட்டிக்கு நிறைய உதவ நெகிழ்ச்சியோடு படர்ந்தது பாசம்.
ஒரு நாள் வழக்கம் போல சண்முகம் மகிழமரத்தடி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரே கூச்சலாய் இருந்தது. கூட்டத்தை விலக்கி சென்றவர் அதிர்ச்சியில் நின்றார். ஆத்தா, ஆத்தா என்று அவர் அழைக்கும் அந்த பாச ஜீவன் இறந்து கிடந்தது. கூட்டம் சிறிது நேரம் சலசலப்பை செய்து கரைந்தது. சண்முகம் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைசியில் சண்முகமே தன் ஆத்தாவை தூக்கிக்கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்து மகிழ மரத்தடியில் அமர்ந்தார்.
கண்களை மூடியபடி மரத்தில் சாய்ந்திருந்தார்.
ஆத்தாவின் நினைவுகள் நெஞ்சுக்குள் ஓடின. "களைப்பா இருக்கியே...எதாச்சும் சாப்பிடுறியாப்பா" - ஆத்தா கேட்பது
போல இருந்தது.
அவர் கண்களில் கண்ணீர்.

Similar topics
» சின்னச் சின்ன ஆசை....
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum