சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 பீர்பால் கதைகள்  Khan11

பீர்பால் கதைகள்

Go down

 பீர்பால் கதைகள்  Empty பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 16:55

அக்பர் பீர்பல், இவர்கள் இருவரையும் இணைத்து பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவையாவும் அக்பர் சாம்ராஜ்யத்தில் நடந்ததா இல்லையா என்பது கம்பராமாயணம் ஒரு நடந்த சம்பவமா, இல்லை அது வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ஒரு முழு நீளச் சித்திரமா என்பதைப்போன்ற ஒன்றானாலும், இவர்களை மேற்கோள் காட்டி பல வாழ்க்கை நீதிகள் அவற்றில் சொல்லப் பட்டிருக்கிறது என்பதுதான் நாம் அறியவேண்டிய ஓர் உண்மை. அக்பர்-பீர்பல் கதைகளில் பல வாழ்க்கைப் பிரச்சனைகளை, இக்கட்டான சூழல்களைச் சந்திக்கும்போது அதிலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் நாம் வெற்றிகாணவும் அவற்றுள் பல தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் உணர்ந்து நான் சொல்லும் ஓர் பீர்பல் கதையைப் பார்ப்போம்.

பீர்பல் சிறுபிராயத்திலிருக்கும்போது அக்பர் மத்தியப் பிரதேசத்திலிருக்கும் அவரது கிராமத்திற்கு ஒரு முறை வந்தார். அப்போது அக்பர், “என்னைப்போல் எவனொருவன் என்னை அச்சடித்ததுபோல் சித்திரமாக வரைகிறானோ, அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆயிரம் பொற்காசுகளென்றால் அந்தக்காலத்தில் சாமான்யமான ஒன்றா? பலர் அந்தப்போட்டியில் கலந்துகொள்ள வரிசையில் நின்றனர். அதில் மகேஷ் தாஸ் என்னும் பீர்பலும் ஒருவர். 

எல்லோரும் தாம் வரைந்திருந்த அக்பரின் ஓவியத்தைக்கொண்டு அரசனிடம் காண்பித்தார்கள். அரசனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மனம் ஒப்பவில்லை. கடைசியாக அந்த வரிசையில் மகேஷ் தாஸ் வந்தார். அக்பர் அவரைப் பார்த்து, “நீ எதைக் காட்டப் போகிறாய்?” என்று விரக்தியோடு வினவினார் அக்பர். உடனே மகேஷ் தாஸ் தான் தன்னுடன் எடுத்துவந்திருந்த தன்னையே காட்டும் நிலைக்கண்ணாடி ஒன்றைக் காட்டி, “பாருங்கள் அரசே, நீங்கள் நீங்களாகவே தத்ரூபமாக இதிலிருக்கிறீர்கள்,” என்று அதைக் காட்டியவுடன் அக்பருக்கு மனம் புளகாங்கிதமாகியது. மேலும், மகேஷ் தாஸின் சமயோஜித ஆறிவுக்கூர்மையைப் பாராட்டி, ஆயிரம் பொற்காசுகளையும் வழங்கி, தனது ராஜ முத்திரை பதித்த மோதிரத்தையும் அவருக்கு பரிசாக அளித்தார் அக்பர். அதுமட்டுமன்றி, பிற்காலத்தில் உனக்கு விருப்பப்பட்டபோது வந்து நம் தலைனகரான ஃபத்தேபூர் சிக்கிரியில் என் அரண்மனைக்கு வந்து என்னைக் காணலாம், என்றும் அழைப்பு விடுத்தார்.

இது ஒரு சாதாரண கதையோ, சம்பவமாகவோ தோன்றினாலும் இதில் பொதிந்திருக்கும் கருத்து யாதெனில், “வியாபாரி என்பவன் வாடிக்கையாளரின் மன விருப்பமறிந்து பொருளை வழங்கினால் அவன் வியாபாரம் செழிக்கும்” என்ற கருத்து மிக அழகாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பொதிந்து கிடக்கும் மற்றொரு உண்மை என்னவென்றால் மாவரசன் அக்பராயிருந்தாலும், யாரும் அவன் மனம் என்ன வேண்டுகிறது என்பதை எவரால் கொடுக்க முடியும்? அதனால்தான் மகேஷ் அவரது பிரதிபிம்பத்தையே கண்ணாடியில் காட்டினான். இது ஒரு மனோதத்துவ ரீதியான உண்மையென்பதை நாம் அறியவேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 16:57

பீர்பால் கதைகள்  _ விசித்திரக் கனவு

இன்னும்.... கா​லைச் சூரியன் மலரவில்​லை. இருள் ​வெளிறி, ​மெல்லிய ​வெளிச்சம் த​ழைத்திருந்தது. பனித் தூறலில் ந​னைந்த காற்று, ஜில்​லெனத் தவழ்ந்தது. அரண்ம​னைக்குள்ளிருந்து, கவர்ச்சியான ​ரோஜா நிறப் பட்டுப் ​போர்​வை​யைப் ​போர்த்தியவாறு, வாசலுக்கு வந்த அரச​ரைக் கண்ட ​நொடி​யே- அழகிய ​வெண்ணிறக் குதி​ரைக்கு அருகில் நிற்கிற இரண்டு வீரர்கள், 'அஸ்ஸலாமு அ​லைக்கும், மஹாராஜ்!...' எனப் பணிவன்புடன் சலாமிட்டார்கள். 

பதிலுக்கு, 'வ அ​லேக்கும் ஸலாம்...' என்றவா​றே குதி​ரை​யை ​நெருங்கிய ராஜா, 'பிஸ்மில்லாஹ்!... அல்லாஹூ அக்பர்!... என்றபடி​யே எம்பித் தாவிக் குதி​ரையில் ஏறி அமர்ந்தார். த​லை​யை​ மெல்லச் சாய்த்து, வீரர்க​ளைப் பார்த்தார். 'அ​மைச்சர் வந்தால்.... ஏரிக் க​ரைக்கு வரச் ​சொல்....' என்றவா​றே கடிவாளத்​தைச் சுண்டினார். 

குதி​ரை, புறப்பட்டது. 'டடக் டக்...டடக் டக்.....' அரண்ம​னைக் கட்டிடங்க​ளைச் சுற்றிச் சூழ அ​மைந்திருக்கிற கருங்கல் மதி​லை​யொட்டிய ஒரு சா​லை. அகன்று பரந்த அந்த ராஜவீதியின் இருமருங்கிலும் காட்டு விருட்சங்கள் ஓங்கி வளர்ந்து அடர்ந்து ​செறுமிப் பரந்து கிடந்தன. ​வெள்​ளைக் குதி​ரை, ​மெல்ல ஓடிக் ​கொண்டிருந்தது. ​பையக் குலுங்கியபடி​யே அங்கும் இங்குமாய் பராக்குப் பார்த்தவாறிருந்தார். மரப் பூச்சிகள் கீறிச்சிட்டன. பற​வைகள் கூவிப் பறந்தன. 

எங்​கோவிருந்து ஒரு கழு​தை ஓங்கிக் கத்தியது. மறு ​நொடி​யே- 'டளுக்! ​கெனக் குளத்தில் பாய்ந்து மூழ்கி மீ​னைக் ​கொத்துகிற பற​வை மாதிரி- ராஜாவின் மனசு, கடந்த இரவு ஆழ்ந்த உறக்கத்தில் ​​தோற்றிய விசித்திரக் கன​வைக் ​கொத்திக் கவ்வியது!... 'இத்த​கைய விசித்திரக் கனவுகள், தூக்கத்தில் ​தோற்றுவதற்குக் காரணம் என்ன? நி​னைவுகளும், கனவுகளுக்கும் ​தொடர்பு உண்டா...? ஏ​தே​தோ எண்ணிக் குழம்பிய ராஜா' ஏரிக்க​ரை மணல் ​வெளியில், தன்னிச்​சையாக நிற்கிற குதி​ரையிலிருந்து இறங்க.... 'டடக் டக்.... டடக் டக்.....'

குதி​ரையின் குளம்படிக் சப்தத்​தைக் ​கேட்டுத் திரும்பிக் கவனித்தபடி​யே குதி​ரை​யை விட்டிறங்கிய ராஜா. குதி​ரை​யை விட்டு விலகி நடந்தார். ஓரிரு ​நொடிகளுக்குள், படு ​வேகமாகப் பாய்ந்​தோடு வந்த குதி​ரை​யைக் கடிவாளத்​தை இழுத்து நிறுத்தினார். 

குதி​ரையிலிருந்து ​மெல்லக் குதித்தார். அரச​ரை ​நோக்கி, 'நமஸ்​தே பாதுஷா....' எனக் ​கை குவித்தவா​றே பணிவன்பும் புன் சிரிப்புமாகச் ​சொல்லியபடி​யே வந்தார், அ​மைச்சர். 

'இன்​றைக்கு என்ன தாமதம்....?' எனக் குறுந​கையுடன் வினவினார், மன்னர். 

'ராஜா​வே... மன்னிக்கவும். தூக்கம் க​லைகிற ​நேரத்தில்.. ஒரு விசித்திரக் கனவு கண்​டேன். அத....'மந்திரியின் ​பேச்சில் சடக்​கெனக் குறுக்கிட்ட ராஜா, வியப்பும் விதிர்ப்புமாகக் ​கேட்டார். 

'இ​தென்ன விசித்திரம்!...நானும் அப்படித்தான்.. ​கோழி கூவும் ​நேரத்திற்குச் சற்று முன்​னே... ஒரு விசித்திரச் ​சொப்பனத்​தைப் பார்த்​தேன்...' 'அப்படியா....?'என்றார், மந்திரி. 'ஆமாம்...'என்றார், அரசர். முதலில், தாங்கள் கண்ட கன​வைச் ​சொல்லுங்கள். பிறகு, நான் பார்த்த கன​வைச் ​சொல்லுகி​றேன்....' என்றவா​றே ஏரிக்க​ரையின் ஈர மணலில் ராஜாவுடன் ​பைய நடந்தார், அ​மைச்சர்.

ராஜா, ​பொறு​மையாக ஞாபகப்படுத்திக் ​கொண்ட பின் - ​தெளிவாகக் கூறினார். '​பெரிய வா​ழைப்பூ மடல் மாதிரி, ​நெடிய காதுகள் அ​மைந்த ஒரு கழு​தை. ஆமாம், கழு​தை தான்... 

ஆனால், முழுக் கழு​தை அல்ல!... மனித உடலில், கழு​தையின் த​லை ​பொருந்திய அந்த விசித்திரப் பிறவிக்கு, வால் இருந்த​தோ, இல்​லை​யோ....? நான் கவனிக்கவில்​லை.

அரண்ம​னைத்​ தோட்டத்திலுள்ள மாதுளமரத்​தை ​நெருங்கி, ஒரு பழத்​தை ​தொட்​டேன். உட​னே, ஒரு முரட்டுக் குரல் அதட்டியது. '​தொடா​தே!' அதட்ட​லைக் ​கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்​தேன். ஒரு ​தென்​னை மரக் கி​டைத் தூரத்திலுள்ள ​கொய்யா மரத்தடியில் நிற்கிற ஒரு கழு​தை... இல்​லை!... ஒரு மனிதன்... தப்பு... ஒரு மனிதக் கழு​தை அல்லது ஒரு கழு​தை மனிதன். 'இந்தத் ​தோட்டத்தின் காவல் பூதம் நான். என்னு​டைய ஒப்புதல் இல்லாமல், இங்குள்ள எந்தப் பூ​வைப் பறித்து முகர்ந்தாலும், அது மணக்காது. நாறும். எந்தப் பழத்​தைப் பறித்துத் தின்றாலும், அது இனிக்காது. கசக்கும்!...' எனக் கூறியது. 

​நொடி ​நேரம் தயங்கிய பின், 'உன்னு​டைய ஒப்புத​லைப் ​பெற, நான் என்ன ​செய்ய ​வேண்டும்...?' என்று அந்த கழு​தைப் பூதத்​தை நயமாகக் ​கேட்​டேன். 'நான் ​கேட்கிற மூன்று ​கேள்விகளுக்கு சரியான பதி​லைக் கூறிவிட்டால் ஒப்புத​லோடு, உயர்ந்த பரிசும் அளிப்​பேன்!... எனக் குறுகுறுப்புடன் ​சொல்லியது, கழு​தைப் பூதம். 'என்ன பரிசு....?' என்​றேன். 'அடக்க முடியாதது எது....? ​கொடுக்க முடியாதது எது...? மறுக்க முடியாதது எது...? இம்மூன்று வினாக்களுக்கும் முத்தான வி​டையளித்து விட்டால், காணாமல் ​போயிருக்கும் உங்களு​டைய நவரத்தின மா​லை​யைக் கண்​டெடுத்துக் ​கொடுப்​பேன்!...' எனப் பூதம் ​சொல்லி முடித்த ​​நொடி​யே- திடுக்கிட்​டேன்!... தூக்கம் சிதறித் துடித்து எழுந்​தேன்! கழு​த்​தைக் கவனித்​தேன். பிறகு, ஆ​டை அணிமணிக​ளை ​வைக்கும் ​பெட்டி​யைத் திறந்து துழாவி​னேன். 


நான் வழக்கமாக அணியும் கழுத்தணிகளில் எனது மதிப்பிற்குரிய நவரத்தின மா​லை​யைக் காணவில்​லை!... எங்​கே ​போயிற்று அது? நான்... ராஜாவாகப் பட்டம் சூட்டிக் ​கொண்ட நாளிலிருந்து அன்றாடம் அணிந்து பழகிய நவரத்தின மா​லை - எப்படித் ​தொ​லைந்தது...?

யாருக்​கேனும் பரிசுப் ​பொருளாக வழங்கி விட்டதாகக் கூட ஞாபகம் இல்​லை! அந்த மதிப்பு மிக்க மணிமா​லை​யை யாருக்கும் பரிசாகக் ​கொடுத்திருக்க மாட்​டேன், அது நிச்சயம்' எனக் கூறிய ராஜா மனக் குழப்பத்துடன், அருகில் நடந்துவரும் ​அ​மைச்ச​ரைப் பார்த்தார். மந்திரி, த​லை கவிழ்ந்தவாறு, ​மெளனமாக நடந்து ​கொண்டிருந்தார்.
'அ​மைச்ச​ரே!...என்றார் ராஜா. 

மறு​நொடி​யே, 'ராஜா​வே'... என்ற​வா​றே சுருக்கமாக நிமிர்ந்த அ​மைச்சர், ராஜா​வைப் பார்த்து ஆழ்ந்த ​பெருமூச்சு விட்டார். 'நான்... தி​கைத்துத் திணறித் தத்தளிக்கி​றேன். தாங்கள் ஊ​மையாக நடந்து வருகிறீ​ரே...?' எனக் குழப்பத்துடன் ​கேட்டார் மன்னர். மந்திரி, குழப்பமும் தவிப்புமாகச் ​சொன்னார். 

'மகாராஜா​வே...தாங்கள் கண்ட கனவும், அந்தக் கன​வோடு ​தொடர்புள்ள மாதிரி, நான் கண்ட கனவும் சாதாரணக் கனவல்ல. அ​வை, யாராலும் விளக்கிக் கூறவியலாத ​ஜெகஜ் ஜாலப் புதிராகும்!'... 'ஓ... அப்படியா..? தாங்கள் கண்ட கன​வைச்​ சொல்லுங்கள்'... என ஆவ​லோடு ​கேட்டார், அரசர். மந்திரி கூறினார். 

'கிழக்கு அடிவானத்தில் வடி​வெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கிற ​நேரத்தில் பாபுஜி! பாபுஜி!... உங்களுக்கு ஒரு நற்​செய்தி.. எனும் இனிய குர​லைக் ​கேட்டதும் எனது உறக்கம் க​லைந்தது. கண்ணி​மைக​ளைப் பிரித்துப் பார்த்​தேன். வலது ​கைப் பக்கத்தில், சாளரத்திற்கு அரு​கே, உத்தரத்திலிருந்து ​தொங்குகிற தங்க வ​ளையத்தில் அ​மர்ந்திருக்கிற ​வெண்ணிறக் ​கொண்​டைக் கிளி, புத்துணர்வுடன் ​பேசியது. 'பாபுஜி...நமது வீட்டு வாசலில் உள்ள மாதுள மரத்தடியில், உங்களுக்​கொரு அற்புதமான பரிசு காத்திருக்கிறது!... கிளியின் ​பேச்​சைக் ​கேட்டதும்- தி​கைப்பும், துடிப்புமாக எழுந்​தேன். பரபரப்புடன் ​போ​னேன். வீட்டு வாசலிலிருக்கும் மாதுள மரத்தடி​​யை அணுகி ஆ​சையும் ஆவலுமாகப் பார்​த்​தேன். கிளியின் ​சொற்படி​யே, மாதுள மரத்தடியில்... ​பேசவ​தை நிறுத்தி, இறுக்க முடிந்த ​வேட்டியின் மடியிலிருந்து, அரசரு​டைய காணாமல் ​போன நவரத்தின மா​லை​யை எடுத்து, மன்னரிடம் ​கொடுத்தார், அ​மைச்சர்.

அ​தைக் கண்டதும், கா​லை ​நேரத்துப் ​பொன் ​வெய்யிலில் தகதக​வென டாலடிக்கிற நவரத்தின மா​லை​யைப் பார்த்ததும்- கண்கள் மலர, கண்ணி​மைகள் படபடக்க, உள்ளம் ப​தைப​தைக்க, உணர்ச்சி கிறுகிறுக்க, மந்திரியின் ​கைகளிலிருந்து மணி மா​லை​யைச் சுருக்கமாகப் பறித்த அரசர் பரபரப்புடன் ​சொன்னார். 'இது என்னு​டைய மா​லைதான்.' 'ஆமாம், ராஜா​வே... உங்களு​டைய மா​லை​யேதான், எனத் தீர்க்கமாகச் ​சொன்னார், அ​மைச்சர். 

ஓரிரு ​நொடி ​நேரம்... எங்​கே​யோ பார்த்தபடி என்ன​வோ ​யோசித்த அரசர் சடக்​கெனத் திரும்பினார். மந்திரி​யை ​நோக்கிக் குழப்பம் ​தெளிந்த குர​லை உயர்த்திக் கூறினார். 'அ​மைச்ச​ரே...ஆமாம், அப்படித்தான்... எனக்குத் ​தெளிவாகப் புரிகிறது. ​நேற்​றைக்கு முன்தினம், நள்ளிரவு​ நேரத்தில்... தூக்கம் பிடிக்காமல் அவஸ்​தைப்பட்டு... உங்களிடம் சற்று ​நேரம் ஆறுதலாகப் ​பேசிவிட்டு வரலாம் என்​றெண்ணித் தங்கள் வீட்டுக்கு வந்​தேன். வீட்டு வாசலில், மாதுள மரத்தடி இருளில் தயங்கி நிற்​கையில்...வீதியில்..யா​ரோ இரண்டு ​பேர் வந்தார்கள். அவர்க​ளைப் பார்த்ததும். நான் சட்​டென மரத்தடியில் உட்கார்ந்த சமயம்.. ​நெஞ்சிலிக்கிற மணி மா​லைகள் மரக் கி​ளையில் சிக்கி... நவரத்தின மா​லை அறந்து விழுந்த​தைக் கவனிக்க வில்​லை. அப்புறம் என்ன​வோ நி​னைப்புடன் அரண்ம​னைக்குத் திரும்பி​னேன்... இ​தைக் ​கேட்டதும், அ​மைச்சர் குறுஞ் சிரிப்புடன் ​கேட்டார். 'ஆமாம் ராஜா​வே... நவரத்தினமா​லை காணாமல் ​போன விஷயம், உங்களது கனவில் ​தோன்றிய கழு​தை மனிதனுக்கு எப்படித் ​தெரியும்...?'

ராஜா ​வெடுக்​கென ​கேட்டார். 'காணாமல் ​போன நவரத்தின மா​லை, மாதுள மரத்தடியில் கிடப்பது உங்களு​டைய ​கொண்​டைக் கிளிக்கு எப்படித் தெரியும்...?' மந்திரியும், ராஜாவும் குலுங்கிச் சிரித்தார்கள்!... 'இத்த​கைய மகா விசித்திரங்கள் மனிதனு​டைய பகுத்தறிவுக்குப் புரிபடாத​வை!... எனப் புன்சிரிப்புடன் ​சொல்லிய ராஜா, நவரத்தின மா​லை​யை அ​மைச்சரிடம் ​கொடுத்தவா​றே புன்ன​கையுடன் ​சொன்னார். 

'எனது அன்பளிப்பாக ஏற்றுக் ​கொள்ளுங்கள்....' மா​லை​யைப் ​பெற்றுக் ​கொண்ட மந்திரி, 'ராஜா​வே..இன்றிரவு.. அந்தக் கழு​தை மனிதன் உங்கள் கனவில் வந்து, எனது புதிர்க் ​கேள்விகளுக்குப் பதில் என்ன? - எனக் ​கேட்டால் என்ன ​சொல்வீர்கள்...?' என்று குறும்புச் சிரிப்புடன் ​கேட்டார். 

'ஆமாம்...அந்தக் கழு​தையின் ​கேள்விகளுக்கு என்ன வி​டை அளிப்பது...?' எனப் புன்ன​கையுடன் ​கேட்டார், அரசர். அ​மைச்சர் நிதானமாகக் கூறினார். 'கழு​தை மனிதனின் முதல் ​கேள்வி இது, அடக்க முடியாதது எது...? பதில் இது, அடக்க முடியாதது கடல் அ​லை. இரண்டாவது ​கேள்வி, ​கொடுக்க முடியாதது எது...? தன்னிச்​சையாக விட்டுவிடலாம் ஆனால் மற்றவருக்குக் ​கொடுக்க முடியாதது, உயிர்.! மறுக்க முடியாதது எது...? எனும் மூன்றாவது வினாவுக்கு வி​டை இதுதான் மரணம்...! மதி மந்திரியின் வி​டை​யைக் ​கேட்டதும், 'சபாஷ்!...' என மகிழ்ச்சிப் ​பொங்கக் கூவினார், ராஜா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 16:58

பீர்பால் கதைகள்  _ இறைவன் அளித்த பரிசு

அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர்.

தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார்.

சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார்.

”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார்.

அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன்” எனக் கூறினார்.

உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள்; நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே காரணம்!” எனக் கூறினார்.

அக்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பொறாமைக்காரர் வெட்கித் தலை குனிந்ததோடு, பீர்பாலிடம் மன்னிப்புக் கோரினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 16:59

உபதேச மொழிகள் தேவையா? - பீர்பால் கதைகள் #6

சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும், இவ்வாறு அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமானது.

ஒரு நாள் அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டு, உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விட்டார்.

பீர்பாலும் அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தம்முடைய விசுவாசமுள்ள பணியாளுடன் நாட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் வேறு ஒரு நாட்டை அடைந்து அங்கே தங்கினார்கள்.

அந்நாட்டின் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து வர பீர்பால் பணியாளுடன் புறப்பட்டார்.

கடைத் தெருவில் நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு, தெருவில், போவோர் வருவோரைப் பார்த்து, 'ஒரு உபதேசத்துக்கு ஆயிரம் ரூபாய்; நான்கு உபதேச மொழிகள் எம்மிடம் உள்ளன. அதற்கு நான்கு ஆயிரம் ரூபாய்கள்!' என்று விலை கூறிக்கொண்டிருந்தான்.

ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள உபதேசமொழி என்னவென்றுதான் கேட்டுப் பார்ப்போமே என்று பீர்பாலுக்கு ஒரு ஆசை உண்டாயிற்று.

அவனிடம் சென்று, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு உபதேச மொழியைச் சொல்லும்படி கேட்டார் பீர்பால்.

ரூபாயைப் பெற்றுக் கொண்டு அவன்:

"சிறிது பெரிதானாலும் அதைச் சிறிது என்று எண்ணி விடக் கூடாது!" என்று பகர்ந்தான் - இது முதல் உபதேச மொழி!

பீர்பால் மறுபடியும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, இரண்டாவது உபதேச மொழியையும் கேட்க ஆவலாக இருந்தார்.

மறுபடியும் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அவன்:

"யாரிடமாவது குற்றம் கண்டால் அதை வெளிப்படுத்தக் கூடாது!" என்று கூறினான் - இது இரண்டாவது உபதேச மொழி!

மறுபடியும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து மூன்றாவது பொன்மொழிகயைக் கேட்கத் தயாரானார் பீர்பால்.

மூன்றாவதாக ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:

"யாராயினும் விருந்துக்கு அழைத்தால், எத்தகைய அலுவல் இருந்தாலும் அதை விடுத்து விருந்துக்குச் செல்ல வேண்டும்" என்று மொழிந்தான் - இது மூன்றாவது உபதேச மொழி!

இன்னும் ஒன்றுதானே, அதையும் கேட்டுவிடுவோமே என்ற ஆவலில் மீண்டும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டார் பீர்பால்.

நான்காவதாக, ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:

"யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது!" என்றான். - இது நான்காவது உபதேச மொழி!

இப்படியாக நான்கு ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளையும் அறிந்து கொண்டார்.

அந்த நாட்டிலேயே பீர்பால் சில காலம் தங்கலானார்.

சில நாட்களில் அவருடைய ஊழியன் அவரை விட்டு விலகி விட்டான்.

பீர்பால் தனியாகக் காலம் கழிக்க வேண்டியதாயிற்று. கொண்டு சென்ற ரூபாய்கள் முழுதும் செலவழிந்து விட்டன. கடைசியில் சிரமத்துடன் போராடினார். வறுமையால் துன்புற்று, பசியோடு ஒரு மரத்தின் நிழலில் படுத்து உறங்கினார்.

முன்பு அக்பர் அரண்மனையில் ஊழியம் புரிந்த ஒருவன் அந்நகருக்கு அதிபதியாயிருந்தான். அவன் நகர்வலம் வரும்பொழுது மரநிழலில் படுத்திருந்த பீர்பாலை அடையாளம் கண்டு கொண்டு, அவரை சபைக்கு அழைத்து வரும்படி சேவகனை அனுப்பினான்.

சபையில் வந்து நின்ற பீர்பாலைப் பார்த்து, 'என்னைத் தெரிகிறதா? நான் யார்?' என்று கேட்டான்.

'நீங்கள் இந்நாட்டின் அதிபதி' என்றார் பீர்பால்.

தம்மை இந்நாட்டின் அதிபதி என்று கூறியதும், தம்மை இன்னார் என்று அறிந்து கொள்ளாததும் மட்டற்ற மகிழ்ச்சியாயிருந்தது அதிபதிக்கு. ஆகவே, உடனே தனக்கு அமைச்சராக் இருக்கும்படி பீர்பாலைக் கேட்டுக் கொண்டார். பீர்பாலும் தம்முடைய அப்போதைய நிலைமையைக் கருதிச் சம்மதித்தார்.

சில நாட்கள் சென்றன!

அரசாங்க அலுவல் காரணமாக, பீர்பால் அந்தப்புரத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பொழுது, காவல் அதிகாரி ஒருவனும் பணிப்பெண் ஒருத்தியும் குடிவெறியில் சுயநினைவற்று, ஆடைகள் இன்றி அலங்கோலமான நிலையில் காணப்பட்டனர். அதைக் கண்ணுற்ற பீர்பால், தம்முடைய சால்வையை எடுத்து அவர்கள் மீது போர்த்தி விட்டு அப்பால் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து, காவல் அதிகாரி எழுந்து பார்த்தான்; வெட்கக்கேடான நிலையை உணர்ந்து அங்கிருந்து ஓடிவிட்டான். அடுத்து எழுந்த பணிப்பெண், முன்ஜாக்கிரதையாக அரசனிடம் சென்று, அமைச்சர் பீர்பால் தன்னை மானபங்கம் செய்துவிட்டதாகவும் அதற்கு அத்தாட்சி, இதோ அவருடைய சால்வை என்றும் காண்பித்து முறையிட்டாள்.

சாட்சியத்தோடு கூறிய அந்தப் பணிப்பெண்ணின் சொல்லை நம்பிய அரசன் பீர்பால் மீது கோபம் கொண்டான். மேற்கொண்டு விசாரணை எதுவும் செய்ய விரும்பவில்லை. ஆனால், தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டான்.

அவசரமாக ஒரு கடிதம் எழுதி, அதைப் பீர்பாலிடம் கொடுத்து, இந்த ரகசிய கடிதத்தை உடனே சென்று, சேனாதிபதியிடம் சேர்ப்பிக்கும்படி கூறினான் அரசன்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பீர்பால் சேனாதிபதியை நோக்கி விரைந்தார்.

நகரத்துப் பெரியவியாபாரி ஒருவர் வழியிலேயே பீர்பாலை நிறுத்தி, என் வீட்டில் ஒரு விருந்து, சிறிது நேரம் வந்து கலந்து கொண்டு செல்லலாம் என மிகவும் வற்புறுத்தினார். தான் ஒரு அவசர காரியமாக சேனாதிபதியைக் காணச் செல்வதாகவும் திரும்பி வரும்பொழுது கலந்து கொள்வதாகவும் கூறினார் பீர்பால். வியாபாரி அவரை விடுவதாக இல்லை. கடமையில் கருத்துடைய பீர்பால் வியாபாரியின் வேண்டுகாளை ஏற்று, அவர் வீட்டுக்குச் சென்று விருந்தில் கலந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பழைய காவல் அதிகாரி பீர்பாலை வணங்கி, நட்புக்கு இணங்குவதே பெருமை. நீங்கள் கொடுக்க வேண்டிய கடிதத்தைப் பத்திரமாகவும் அவசரமாகவும் சேனாதிபதியிடம் நான் கொடுத்துவிட்டு வருகிறேன். என்னை நம்பி ஒப்படையுங்கள் என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதலுக்கு இசைந்து, அவனிடம் கடிதத்தைக் கொடுத்தார் பீர்பால்.

விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கடிதம் கொண்டு சென்ற காவல் அதிகாரியின் தலைவெட்டப்பட்டு ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அவ்வழியாக வந்து கொண்டிருக்கிறார் சேனாதிபதி! 

"இக்கடிதத்தைக் கொண்டு வருபவனின் தலையை உடனே வெட்டி தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வரவும்" - இதுவே அந்தக் கடிதத்தில் அரசன் எழுதியிருந்த வாசகம்.

கடிதத்தைப் பீர்பாலிடமிருந்து வற்புறுத்தி வாங்கிச் சென்றவன் காவல் அதிகாரி.

சேனாதிபதியிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அரசனிடம் சென்றார் பீர்பால். அதைக் கண்ட அரசன் பிரமித்துப் போனான்.

"உம்முடைய தலையை அல்லவா வெட்டும்படி எழுதியிருந்தேன். காவல் அதிகாரி தலை வெட்டுண்ட மர்மம் என்ன?" என்று பீர்பாலிடம் கேட்டான் அரசன்.

"இதுதான், இறைவன் கட்டளை!" உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான்" என்று கூறி, தான் நாட்டை விட்டு வெளியேறி வந்தது முதல், அதுவரை நடந்தவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி விவரித்தார் பீர்பால். "இனி இங்கு இருப்பது முறையல்ல, எனக்கு உற்ற நண்பரும் அரசர் பெருந்தகையுமான அக்பரிடம் நான் செல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பீர்பாலை விட்டுப் பிரிய மனம் இல்லாத அரசன், விடை கொடுக்க மறுத்து, அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினான்.

நாலாயிரம் ரூபாய்கள் கொடுத்து தான் பெற்ற நான்கு உபதேச மொழிகளின் விவரத்தைக்கூறி, அவற்றில் மூன்றின் உண்மை சேதனை செய்யப்பட்டு விளங்கிவிட்டது. நான்காவது உபதேச மொழியான "யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது" என்பதை நினைவு படுத்தி, இனி தன்னால் ஊழியம் புரிய இயலாது என்பதையும் எடுத்துக் கூறினார் பீர்பால்.

அரசனுக்கும் தன்னுடைய பழைய நிலைமை நினைவுக்கு வந்து வெட்கப்பட்டான். பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரை மரியாதையுடன் அனுப்பிவைக்க முற்பட்டான்.

இதன் மத்தியில், அக்பருக்கு பீர்பால் இல்லாத குறை, பெருங்குறையாகத் தோன்றியது. நாடெங்கும் பீர்பாலைத் தேடிக்கண்டு பிடித்து வருமாறு ஆட்களை அனுப்பி வைத்தார்.

அக்பருடைய சேவகர்கள், பீர்பாலை வழியில் சந்தித்து, அரசரின் கட்டளையைத் தெரிவித்தார்கள். அவர்களுடன் சக்கரவர்த்தி அக்பரைக் காணப் புறப்பட்டார் பீர்பால்.

நெடுநாள் பிரிந்திருந்த பீர்பாலைக் கண்டதும் அக்பர், 'நான் இழந்த ரத்தினத்தை மீண்டும் பெற்றேன்' என்று மனமாரக் கூறி, பீர்பாலைக் கட்டித் தழுவி வரவேற்றார்.

தான் கற்றுக்கொண்ட நான்கு உபதேச மொழிகளையும் அக்பரிடம் விவரித்துக் கூறினார் பீர்பால்.

நீரே மகா புத்திசாலி, உமக்கு வேறு உபதேச மொழிகள் தேவையா?' எனக் கூறிப் புகழ்ந்தார் அக்பர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 17:00

பீர்பால் புகையிலை 

பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.


அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.


உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, "அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை .


_____
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 17:01

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:

“நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, ‘செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,’ என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், ‘செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.

தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, ‘செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!’ என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 17:03

அக்பர் - பீர்பால் கதைகள் 

 கசையடிகள்

மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான்.

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது. வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 17:04

பீர்பாலை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட அவரது எதிரிகள் பல முயற்சிகள் செய்து தோற்றுப்போயிருந்தனர். அவர்கள் அனைவரும் அரசியாரின் தம்பியை அனுகி பீர்பாலை அரசவையிலிருந்து நீக்க ஏதாவது செய்தால் அந்த இடத்தில் உங்களை இருத்தலாம் என்றும் இதனால் நீங்கள் மன்னருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூபம் போட்டனர். பதவி ஆசை முற்றியதாலும் மன்னருக்கு மிக நெருக்கமான முறையில் பீர்பால் இருப்பதால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியாலும் அரசியாரின் தம்பி இதற்கு சம்மதித்தான்.

அவன் அரசியாரிடம் சென்று ஏதாவது நாடகமாடி பீர்பாலை தொலைத்துக் கட்டு. இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிற எனக்கு வேறு வழியில்லை என்றும் மிரட்டலானான். அரசியும் தம்பியின் மேலிருந்த பாசத்தால் நாடகமாட சம்மதித்தாள். அவன் கூறிய திட்டப்படி அன்று அரசி நாடகமாடினாள்.

அன்று மன்னர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசியார் அழுது கொண்டிருந்தாள். மன்னர் அதிர்ந்தார். காரணம் வினவினார். அரசியோ பீர்பால் மிகவும் செருக்குற்று இருப்பதாகவும் அரசியாகிய தன்னை மதியாமல் நடந்து கொள்வதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கூறி விம்மலானாள். அரசர் மேலும் அதிர்ந்தார். "பீர்பாலை எந்த காரணமும் இல்லாமல் எப்படி பதவி நீக்கம் செய்வது?. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா?" என்றார் மன்னர்.

அரசியும் சம்மதித்தார். அரசியின் யோசனைப்படி இதற்காக ஒரு நாடகமாட இருவரும் தீர்மானித்தனர். அரசி கூறியதாவது "நீங்கள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிச் சென்றது போல நடியுங்கள். பீர்பால் சமரசம் செய்ய வருவார். நீங்கள் அரண்மனைக்கு வர மறுத்துப் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உன்னால் முடிந்தால் மகாராணியாரை இங்கே வந்து பார்க்கச் சொல்" என்று சவால் விடுங்கள். இதில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கேளுங்கள். அதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார். என்னைச் சமாதானம் செய்ய வருவார். என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டால் நான் மதித்து வருவேன். இல்லையேல் நான் மிகவும் பிடிவாதமாக வர மறுத்து விடுவேன். அவர் முயற்சியில் தோற்பார். தானாகவே பதவியை விட்டு விலகி விடுவார்." என்று யோசனை கூறினார்.

மன்னரும் இதற்கு சம்மதித்தார். மன்னருக்கு பீர்பால் தான் வெல்வார் என்று நன்றாகத் தெரியும். மறுநாள் மன்னர் அரசியிடம் கோபப்பட்டு அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டார் என்று செய்தி காட்டுத் தீ போல பரவியது. பதறிய பீர்பால் மன்னரைச் சென்று பார்த்தார். மன்னரோ திட்டமிட்டபடி "பீர்பால், நான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டுமானால் எனது ஒரு நிபந்தனையை நீர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

"எந்த நிபந்தனை என்றாலும் சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்" 

"அது உம்மால் முடியாது"

"நிச்சயம் முடியும்"

"முடியாது, ஒரு வேளை நீர் தோற்றால்.."

"நான் அமைச்சர் பதவியை விட்டே விலகிவிடுகிறேன்"

எல்லாம் திட்டப்படி நடப்பதால் மன்னர் புன்னகைத்தார்.

"பீர்பால், கோபித்துக் கொண்ட நான் தானாகவே அரன்மனை திரும்பமாட்டேன். அரசியார் என்னை இங்கே வந்து அழைத்துச் சென்றால் தான் வருவேன். உன்னால் முடிந்தால் அவரை இங்கே அழைத்து வா" என்றார் அக்பர்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே பீர்பால் மனதிற்கு தோன்றியது. அவர் அரசியை வரவழைக்கத் திட்டம் போட்டார்.

கண்களில் கண்ணீருடன் அரசியை சந்தித்தார் பீர்பால். "பீர்பால் என்ன நடந்தது? ஏன் இந்தக் 
கண்ணீர்?" 

"என்ன சொல்வது அரசியாரே, மன்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி பாதை மாறி போகிறாரே. மனம் வெறுத்துப் போனதால் நான் பதவி விலகிவிட்டேன்"

"என்ன? விலகிவிட்டீர்களா...? தெளிவாகச் சொல்லுங்கள்.. மன்னர் நீக்கினாரா? நீங்களே 
விலகினீர்களா?"

"அரசியாரே.. நானே விலகிக்கொண்டேன்."

"காரணம்.?"

"என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செய்வதுபோல மன்னர் நடந்து கொள்வாரா? நான் எப்படிச் சொல்வேன்.. அரசியாரே..உங்களை நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டு மன்னர் வேறு திருமணம் செய்ய பிடிவாதமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்" 
என்றார் பீர்பால்.

அரசிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விளையாட்டுக்குத்தானே சண்டை போட்டேன். மன்னர் நிஜமென்று நம்பிவிட்டாரா என எண்ணிக் குழம்பினாள். அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே பீர்பாலை அழைத்துக் கொண்டு மன்னரிருக்கும் இடம் தேடி ஓடலானாள்.

பீர்பாலுடன் அரசியார் வருவதைக் கண்ட அக்பர் மகிழ்ந்தார். தான் நினைத்தது போலவே பீர்ப்பால் சவாலில் ஜெயித்ததை கண்டு பூரிப்படைந்தார். மிகுந்த பதைபதைப்புடன் வந்த அரசியை சமாதானப்படுத்தினார் அக்பர். 

பீர்பாலும் அரசியிடம் தான் நடத்திய நாடகத்தை தெரிவித்தார். அரசி பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகவும் பாராட்டினார். இருவரும் மகிழ்ச்சியுடன் பீர்பாலுக்கு அன்பளிப்புக்கள் கொடுத்து மகிழ்வித்தனர். 

அந்த நாள்முதல் அரசி பீர்பாலை விரட்டும் எண்ணத்தை அடியோடு கைவிட்டார்.

அந்த அரசனும் அரசியும் இவங்கதானோ!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Oct 2015 - 17:05

க்பருக்கும் பீர்பாலுக்கும்மடிக்கடி ஏற்படும் மனவேறுப்பாடுஅன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார்.

சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.

"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.


உளறுவாயன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 பீர்பால் கதைகள்  Empty Re: பீர்பால் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum