சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள் Khan11

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்

Go down

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள் Empty வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 19 Oct 2015 - 13:28

இந்த கட்டுரைகள் யாவும் பல தளங்களில் படித்து தொகுத்தவை தனி தனியாக குறிப்பிட முடியவில்லை நன்றி 

மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு இரகசியம்

ஒவ்வொரு நாளும் பிறத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறப்பதற்கு அதற்கு முதல் நாள் இறத்தல் வேண்டும். உறக்கம் இறப்பாகவும் விழிப்பு பிறப்பாகவும் இருத்தல் வேண்டும். புதிதாகப் பிறக்கும் போது அன்று நாம் முகம் கொடுக்கும் ஒவ்வொன்றும் புதுமை. ஒப்பீடுக்கு இடமில்லாத புதிய அனுபவம். ஒவ்வொன்றும் அழகு. ஒவ்வொன்றும் அற்புதம். ஒவ்வொன்றும் தனித்துவம். நேற்றயவைகள் எதுவும் இல்லை. 

எல்லாமே புதியவை. நேற்றயவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். இன்றைய அனைத்தும் உறக்கம் வரைதான். நாளைய விழிப்பு புதிய பிறப்பு. மீண்டும் எல்லாமே புதுமை, ஆச்சரியம், அற்புதம். 'வார்த்தையில் கூறலாம் ஆனால் வாழ்க்கையில் சாத்தியமா?' என்று நீங்கள் நினைத்தால் இதோ ஒரு சிறு பயிற்சி. காலையில் எழுந்ததும் உங்கள் துணையைப் புதிதாகப் பாருங்கள். உங்கள் குழந்தைகளை புதிதாகப் பாருங்கள். உங்கள் முற்றத்து மல்லிகையை புதிதாகப் பாருங்கள். அன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பாருங்கள். புதிதாகப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். நிச்சயமாக மகிழ்ச்சியின் இரகசியம் புரியத் தொடங்கும்.


no 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 19 Oct 2015 - 13:33

குடும்பம் ஒரு இருபக்க நாணயம்

குடும்பம் ஒன்றின் உருவாக்கத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் உறவுகளுக்கும் அடிப்படையாக அமைவது நட்பு. குடும்பம் ஒன்றின் ஆரம்ப அங்கத்தவர்களாக அமைகின்ற கணவன் என்ற ஆணும், மனைவி எனும் பெண்ணும் நட்பின் இணைப்பாக குடும்பம் எனும் அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த அமைப்பையும் அதன் ஆரம்ப அங்கத்தவர்களாகிய கணவன் மனைவியையும் நாணயம் ஒன்றின் இயல்பு மூலமாகப் பார்ப்போம். 


நாணயமானது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக இருப்பது போல், குடும்பம் என்பது அது சார்ந்த சமூக அமைப்பின் அடையாளச் சின்னமாக அமைகின்றது. ஒரு நாணயத்தின் உட்பொருள் உலோகம். நாணயத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. குடும்பத்தின் உட்பொருள் நட்பு. கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான நட்பு. இந்த நட்பானது ஒரு குடும்பத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. உறுதியான நட்பை எந்தவிதமான இடர்களோ, அழுத்தங்களோ, எதிர்மறை விளைவுகளோ ஒன்றும் செய்து விட முடியாது. நட்பின் உறுதி குடும்பத்தின் உறுதியாகும். 

நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இந்தப் பக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட, தமக்கெனத் தனித் தனியான தன்மைகளைக் கொண்ட, ஆனால் ஒன்றில் ஒன்று சார்ந்து இருக்கும் இயல்புகளைக் கொண்டவை. உதாரணமாக ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பூவாகவும் மறு பக்கம் தலையாகவும் இருக்கும். இங்கே 'பூ' தனக்கான தனித்தன்மையையும் 'தலை' அதற்கான தனித் தன்மையையும் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. ஆனாலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும். இதே போன்றே கணவனும் மனைவியும் குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் தனித்துவமானவர்கள். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாறுபட்ட தன்மைகளை உடையவர்கள். ஆனாலும் ஒருவரில் ஒருவர் சார்ந்து இருப்பார். 

மிகவும் முக்கியமான இன்னுமொரு இரகசியமும் இங்கே புதைந்து கிடக்கின்றது. அதாவது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இதன் பொருள் எந்தப் பக்கத்தைப் பார்க்கிறோமோ அந்தப் பக்கமாகிவிடு என்பது தான். அதாவது குடும்பம் என்ற நாணயத்தில் ஒருவர் மறு பக்கத்தைப் பார்க்கும் போது தனது பக்கம் முற்றாக மறைந்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தூய்மையான நட்பின் அடிப்படையே தன்னை மறைத்து, மறந்து, மற்றவரை முழுமையாகப் புரிந்துகொள்வது தான். 

நாணயத்தின் பெறுமதியை நிலைநாட்டுவதற்கு இந்த இரண்டு பக்கங்களின் பங்களிப்பைப் பற்றிப் பார்ப்போம். தனித்துவம், முரண்பாடு, வெவ்வேறு பக்கங்கள் எனப் பல்வேறு இயல்புகள் இந்த இரண்டு பக்கங்களில் இருந்தாலும் நாணயத்தின் பிரதிநிதித்துவம், அதன் பெறுமதி என்பவற்றை இரண்டு பக்கங்களுமே ஒன்று சேர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கின்றன. எப்பொழுது நாணயத்தின் ஒரு பக்கம் தனது தனித்தன்மையை இழக்கிறதோ அல்லது மறு பக்கத்தை இழக்க அனுமதிக்கிறதோ அப்போது அதன் பெறுமதி இழக்கப்பட்டு 'செல்லாக் காசாக' புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறே குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களான கணவனும் மனைவியும் அந்தக் குடும்பத்தின் பெறுமதியை நிலையாக உறுதிப்படுத்துவதற்கு தமது தனித்தன்மையையும் இழக்காமல் அதே நேரத்தில் மற்றவரது தனித் தன்மைக்கும் இழப்பு ஏற்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். ஏனெனில் ஒரு நாணயத்தின் எந்தப் பக்ககம் பெறுமதி இழந்தாலும் அது அந்த நாணயத்தின் ஒட்டு மொத்தமான பெறுமதி இழப்பாகி விடுவது போல் குடும்பம் ஒன்றில் கணவன் மனைவி இருவரில் எவர் தனது பெறுமதியை இழந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரது பெறுமதியை இழக்கச் செய்தாலும் அது குடும்பத்தின் ஒட்டுமொத்தமான பெறுமதி 

இழப்பாகவே அமைந்துவிடுகின்றது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 19 Oct 2015 - 13:42

குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம்.

குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம். போராட்டத்துக்கான களம் அல்ல. குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்களான கணவன் மனைவி எனும் இரண்டு ஜீவன்களுக்கிடையே எண்ணில் அடங்காத வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அமைந்துள்ளன. இதனால் தான் தரமான குடும்ப வாழ்க்கை என்பது இந்த வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ளாத வாழ்க்கைதான். 

எப்போது நாம் ஒருவரை எம்மிலிருந்து வேறுபட்டவர் என எண்ணுகிறோமோ அப்போது அவரிலிருந்து எம்மை நாம் விலக்கிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. ஏனெனில் இந்த வேறுபாடும் விலக்கலும் தான் பகைமை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தப் பகைமை உணர்வு நாளடைவில் போராட்டத்துக்கு வழி அமைத்து விடுகின்றது. ஒரு போராடத்தின் ஆரம்ப கர்த்தா எப்போதுமே ஒரு தனி மனிதன் தான். 

ஒரு மனிதனுக்குள் ஏற்படும் பகைமை உணர்வின் விளைவு தான் போராட்டத்திற்கு விதையாகின்றது. இந்த விதை மரமாவதோ அல்லது இன்னொரு விதைக்கு உரமாவதோ தவிர்க்க முடியாததாகும். விதை மரமாகுமானால் போராட்ட வடிவத்தை அடைந்ததுவிடுகிறது. உரமானால் இன்னொரு போராட்ட விதை மரமாவதற்கு உறுதுணையாக அமைந்துவிடுகின்றது. 

இதனால் தான் பகைமை உணர்வு என்ற விதை என்ன வடிவத்தை எடுத்தாலும் ஆபத்தானதே. குடும்பத்தின் தளம் நட்பு. நட்பின் தளம் புரிந்துணர்வு. புரிந்துணர்வின் தளம் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல். நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல் என்பது உள்ளதை உள்ளபடி உள்வாங்குதல். இந்தச் சிறப்பம்சங்களை பயில்வதற்குத் தரப்பட்டுள்ள அதி சிறந்த தளம் தான் குடும்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள் Empty Re: வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum