சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா? Khan11

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா?

Go down

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா? Empty குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா?

Post by சே.குமார் Tue 27 Oct 2015 - 17:51

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா? 12107820_945743602165153_6346860282353783274_n
குடந்தையூர் என்னும் தளத்தில் எழுதிவரும் அண்ணன் சரவணன் அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இவரின் எழுத்தில் 'இளமை எழுதும் கவிதை நீ'என்ற நாவல் வெளிவந்திருக்கிறது. அதில் கல்லூரிக்குள் நடக்கும் கதையை திரைக்கதை வடிவில் எழுதியிருப்பார். அதன் பின்னர் 'சில நொடி சிநேகம்' என்ற தனது முதல் குறும்படத்தை சென்ற ஆண்டு மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிட்டார். அந்தப்படம் நல்லதொரு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் நடிகர்களின் செயற்கைத்தனமான நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் பெரிதாக பேசப்படவில்லை. மேலும் அந்தப் படத்தை நண்பர்களிடம் கொண்டு சென்ற அளவுக்கு மற்றவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதால் அது வெற்றி என்று சொல்லமுடியாத நிலைதான். இருப்பினும் தனது முயற்சியில் இருந்து பின்வாங்காது இரண்டாவது படத்தை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார். வாருங்கள் அகம் புறம் எப்படியிருக்குன்னு மனம் விட்டுப் பேசலாம்.

அகம் புறம் - பூட்டப்பட்ட அறைக்குள் என்ன இருக்கிறது, அதேபோல் கலர் பேப்பர் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கு என்பதை மையமாக வைத்து அகமும் புறமுமாக கதை நகர்கிறது. பூட்டிய அறைக்குள் இருந்து கேட்கும் சப்தம், சிரிப்பொலிகள் என மிரட்டலாய் பயணிக்கிறது படம். 

துளசி சார், கார்த்திக் சரவணன், பாலகணேஷ் அண்ணா, அரவிந்த், ஆரூர் மூனா, ஜெகன் என  ஒரு பட்டாளமே பூட்டிய அறைக்குள் இருந்து சப்தம் வருவதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு பக்கம் நகர, கணிப்பொறி முன் அமர்ந்திருக்கும் அரசனிடம் ஒரு சிறுவன் பரிசுப் பெட்டியைக் கொடுத்து பிரிக்கச் சொல்ல அதை மெதுவாக பிரித்துக் கொண்டிருக்கிறார். முடிவில் அறைக்குள் நிகழ்ந்தது என்ன...? பரிசுப் பெட்டியின் கதை என்ன என்பதை நகைச்சுவையுடன் திரில்லையும் கொஞ்சம் கலந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.

முதல் படத்தைப் போலவே இந்தப் படத்துக்கும் அவர் எடுத்துக் கொண்ட கதையும் அவரின் வசனங்களும் அருமை...  ஒரு வீட்டின் மாடிப்படியும் பூட்டிய அறையும்தான் கதையின் களம்... அங்கு நின்றே அனைவரும் நடித்து விடுகிறார்கள்... கேமரா வேறு எங்கும் நகரவில்லை. படியில் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் சரவணன் அண்ணனிடம் இந்தப் படத்தில் நல்ல முன்னேற்றம் இயக்குநாய்...

'கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர்றவன்டா' என்றபடி வரும் மொட்டை முருகேசன், நம்ம நண்பர் ஆரூர்.மூனா நடிப்பிலும் வசனத்திலும் கலக்கியிருக்கிறார். அலட்டலில்லாமல் குறிப்பாக கேமரா பயமின்றி நடித்திருக்கிறார். அவருக்கு கைத்தடியாக சரவணன் அண்ணன் அவர்களின் தம்பி அரவிந்த், குறைவாய் பேசினாலும் நிறைவாய்...

நண்பர் அரசனை ஒரு இடத்தில் அமர்ந்து பரிசுப்பெட்டியை பிரிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் அதைச் செவ்வனே செய்கிறார். இடையிடையே நக்கலான வசனங்கள். ஆரூர்.மூனாவைப் பற்றிச் சொல்லும் போது 'கட்சியோட போர்வாள்' என்று அரவிந்த் சொல்ல, 'ரொம்பத் துருப்பிடிச்சிருக்கே' என்று தன் கையில் இருக்கும் கத்தியைப் பார்த்துச் சொல்வார். இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறார். வார்த்தைகளைக் கடிப்பது போல் பேசுவதை இதிலும் தொடர்கிறார். அதுதான் ஸ்டைலா அரசன்?

துளசிதரன் சார்... வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுப் புலம்பும் சராசரி சென்னைவாசியாய்... மௌனவிரதம் இருக்கும் மனைவி சைகையால் நாளைக்கு இருக்கு உங்களுக்கு என்று சொன்னதும் இன்னைக்கி நீ இருந்த மாதிரி நாளைக்கு நான் இருந்துட்டுப் போறேன் என்று சொல்லி ரசிக்க வைக்கிறார்.

கார்த்திக் சரவணன்... சாவி தேடி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என படிகளில் ஓடுகிறார்... பேப்பர் போடும் பையனாக வருவது ஆவியின் சகோதரர் என்று நினைக்கிறேன்... துறுதுறுவென பேசுகிறார். 

பாலகணேஷ் அண்ணன் போலீஸ் என்பதால் முறுக்கிய மீசையுடன் வருகிறார்... நம்ம மீசை முருகேசன் ஐயாவை நினைவூட்டுகிறார்... ஆரம்பத்தில் துளசி சாரிடம் வாங்க போங்க போட்டு, வா என்றழைத்து என்னய்யாவுக்கு வருகிறார்... ஒருவேளை போலீஸ் என்றால் இப்படித்தான் என்பதால் வசனத்தில் சரவண அண்ணன் இப்படி எழுதியிருப்பாரோ?

சரவண அண்ணனின் மகன் ஹர்ஷா, பல்ராம் நாயுடு கமல் போல் பேசுவது ரசிக்க வைத்தது.... நடிப்பில் பெரியவர்களைவிட சிறியவர்கள் அதிகம் ஸ்கோர் பண்ணி விடுகிறார்கள். அதிலும் நான் கொக்கிதான் போட்டேன்... எல்லாத்தையும் எம்மேல சொல்லாதீங்க என்று சொல்லும் சிறுவனின் கேமரா பயமில்லாத நடிப்புக்கு சபாஷ்.

ஒரு வார்த்தை கூட பேசாமல் கை. முக பாவனையால் பேசும் துளசி சாரின் மனைவியாக வரும் திருமதி.உஷா அவர்கள் இன்னும் முகபாவனை நன்றாக காட்டியிருக்கலாமே என்று தோன்றினாலும் தனக்கான கதாபாத்திரத்தில் நிறைவாய் செய்திருக்கிறார்.

இன்னும் இதில் நடித்த மற்றவர்களும் அவரவர் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள்.

ஆங்... பாருங்க முக்கியமான ஆளை விட்டாச்சு... நம்ம கோவை ஆவி... பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் எப்படி பேசுவனோ அப்படிப் பேசி அருமையாய் நடித்திருக்கிறார். ஆரூர் மூனா, துளசி சார் போல ஆவியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் வரும் 'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி' பாடல் நல்ல தேர்வு... அதேபோல் செல்போன் ரிங்டோனாக வரும் ரஜினிப் பட இசை இயக்குநர் தீவிர ரஜினி ரசிகர் என்பதை அறியாதவர்களுக்கு அறிவிக்கிறது.

என்ன நிறையாய் போறீங்க... உங்ககிட்ட நான் கேட்டது நிறைகளை மட்டுமல்ல... குறைகளையும்தான் என்று சரவணன் அண்ணன் கோபமாகப் பார்க்கலாம்... ஒரு மனிதனின் முயற்சியை நல்லாயிருக்கு என்று பாராட்டுவதே அழகு... அதில் குறை சொல்வது அழகல்ல என்று எங்கள் இருவருக்குமான அரட்டையில் பேசினோம். அப்போதே எனக்கு உங்கள் பார்வையில் குறைகளும் வேண்டும்... எதிர்பார்ப்பேன் என்று  கண்டிப்புடன் சொல்லிவிட்டார். அதனால் இனி குறைகள்... இந்தக் குறைகள் அவரின் அடுத்த ஆக்கத்தில் நிறைகளாகும் என்ற நம்பிக்கையில்...

ஆரூர்.மூனா, ஆவி, துளசி சார், சிறுவர்கள் தவிர மற்றவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. இந்தக் கருத்தை அவரின் சில நொடி சிநேகம் பார்த்த போதும் அவரிடம் சொல்லியிருந்தேன். இந்தப் படம் பண்ணும் முன்னும் நாங்கள் இருவரும் பேசினோம். இருந்தும் அந்த செயற்கைத்தனம் இதிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

வசன உச்சரிப்பு எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போல இருக்கிறது.... எழுதும் எழுத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாம் யாரும் எழுதியது போல் பேசுவதில்லை... பேச்சு வழக்குத்தான் ஜெயிக்கும். 'என்ன இருக்கு..?' என்று கேட்பதை 'இதுல என்னடா இருக்கு' என்று இழுத்தாற்போல் சாதாரணமாகக் கேட்டால் இன்னும் நல்லாயிருக்கும் இல்லையா..?.அந்த பேப்பர் போடுற பையன், ஆருர் மூனா என சிலர் பேச்சு வழக்கில் பேசுவது போல் எல்லோரும் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆரம்பத்தில் அறையைக் காட்டும் போது ஆடாத பூட்டு, அடுத்த முறை காட்டும் போது ஆடுவது கொஞ்சம் இடிக்கிறது. டீசரில் அறையைப் பார்க்கும் போது இருந்த 'பக்' இதில் 'பக்', 'பக்' என்று இருந்திருக்க வேண்டாமா..?

ஒரு பார்சலை படம் ஆரம்பிக்கும் போது பெற்று முடியும்வரை பிரிப்பது என்பது ஏற்புடையாதாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதாவது முயற்சித் திருக்கலாம்...

இறுதிக் காட்சியில் கோவை ஆவி சொல்லும் காரணம் சப்பென்று இருக்கிறது. 

நிறைய கதாபாத்திரங்கள்... கொஞ்சம் கொஞ்சம் நடித்துச் செல்வது அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே தோன்றுகிறது. குறைவான கதாபாத்திரங்களை வைத்து இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.

சரி... அண்ணன் கேட்டதற்காக மனசில்பட்டதைச் சொல்லியாச்சு....

இனி நாம பேசலாம்... சில நொடி சிநேகம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதைவிட சரியான முறையில் அதை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதை சரவணன் அண்ணனும் நானும் பலமுறை பேசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தை எல்லோரிடமும் பரவலாய்க் கொண்டு செல்லவேண்டும் என்பதே அண்ணனிடம் நான் கேட்டுக் கொண்டது. சில விஷயங்களைத் தவிர்த்து விட்டு பார்த்தோமேயானால் இயக்குநராய் சரவணன் அண்ணன் சிறப்பாய் செய்திருப்பதோடு வசனங்களில் ஆட்சி செய்கிறார். அதில் என்னைக் கவர்ந்த சில வசனங்கள்...

"தெரியலைன்னு சொல்லக்கூடாது திங்க் பண்ணனும்..."



"எதுக்கு திங்க் பண்ணனும்... ? பிரிச்சிப் பாத்தா தெரியப்போகுது..."



***



"என்ன கிண்டலா கட்சியோட போர்வாள் தெரியும்ல..."



"ரொம்பத் துருப் பிடிச்ச மாதிரி இருக்கே..."



***



"உன் வணக்கத்தைப் போயி குப்பையில போடு"



"இதுக்கு நீ குப்பைத் தொட்டிக்கே வணக்கம் வச்சிருக்கலாம்.."



***



"கதவை நீதானே பூட்டினே..."



"உண்மையைச் சொல்லவா... பொய் சொல்லவா...?"



"நடந்ததைச் சொல்லு..."



"நடக்கப் போறதைப் பாரு...."



***



"நீதான் கதவைப் பூட்டுனியாடா..."



"இல்லை இல்லை... எல்லாப் பழியையும் என் மேல போடாதீங்க... நான் ஒன்லி தாப்பாள் மட்டுந்தான் போட்டேன்... தப்பிச்சேன்டா..."



***


இப்படி இன்னும் சொல்லலாம்... வசனகர்த்தாவாக இயக்குநராக சரவணன் அண்ணனிடம் நல்ல முன்னேற்றம்... படத்துக்கு இசை நல்லாயிருக்கு... பெரும்பாலும் முகநூலில் வரும் கருத்துக்களில் கூட நடிப்பைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது. பரவாயில்லை... நண்பர்கள் அனைவரும் கேமராவுக்கு புதியவர்கள்... பயம் இருக்கத்தான் செய்யும்... பாலகணேஷ் அண்ணா முறுக்கு மீசைக்கு ஏற்றவாறு புகுந்து விளையாடியிருக்கலாமே..? ஆரூர் மூனா அதிரடியாய்... ஆவி அடக்கி வாசித்தாலும் அமர்க்களமாய்... துளசி சார் கவலைப்பட்டாலும் கலக்கலாய்... சிக்ஸரடித்திருக்கும் போது முறுக்கு மீசை போலீஸ் அந்த சிக்ஸரை ஹெலிகாப்டர் ஷாட்டாக மாற்றி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பி நம்ம தலயின்னு கைதட்ட வச்சிருக்க வேண்டாமா? 

முகத்தில் நடிப்பை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய நடிகர்களுக்கே சவால்... அப்படியிருக்க நம் நண்பர்கள் வளர்ந்து வருபவர்கள்தானே... விரைவில் மெருகேறுவார்கள்... வசனங்களை வாசிப்பதாய் இல்லாமல் சாதாரணமாக பேசியிருந்தால் முகபாவனைகளை யாரும் அதிகம் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

தலைப்பில் அகம் புறம் அசத்தலான்னு வச்சிட்டு ஒண்ணுமே சொல்லலைன்னு பாக்குறீங்களா...? இருங்க... இது சில நொடி சிநேகம் கதையைவிட சாதாரண நகைச்சுவைக் கதைதான் என்றாலும் திரில்லர் மிக்ஸ்... ரசிக்க வைக்கும் வசனங்கள்... முடிவை அறியும் வரை எழும் ஆவல்... என எல்லாமே அருமையாய்.... படத்தின் குறைகளை மனதில் கொள்ளாது பாருங்கள்... கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்... அசத்தலான ஒரு எழுத்தாளரின் ஆளுமையைக் காண்பீர்கள்... ரசிப்பீர்கள்...


சரிங்க... மறக்காம உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்... அவரின் பாதையை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரின் பார்வையும் முக்கியம்...

அடுத்தடுத்த குறும்படங்களின் மூலம் குறும்பட இயக்குநராய் ஜொலிக்கும்குடந்தையூட் ஆர்.வி. சரவணன் அண்ணன் தனது கனவான வெள்ளித் திரையிலும் விரைவில் இயக்குநாய் ஜொலிக்க வாழ்த்துவோம்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum