Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
துஆ பிராத்தனைகளின் ஒழுக்கங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
துஆ பிராத்தனைகளின் ஒழுக்கங்கள்
1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப்புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலேபுகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக்கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!
அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார்.அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ
2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
உயர்வானவனாகிய அல்லாஹ்,
எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான்.அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாகஇருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:திர்மிதீ
நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும்,பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனைபுரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.
3. நமது பாவங்களை ஒப்புவித்தல்
இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான்என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்
4. கேட்பதில் உறுதி
உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்
கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில்நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது,அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.
5. பிரார்த்தனையில் கடுமை
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்றுகூறினார்கள். (நூல்:அபூதாவூது)
6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப்புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலேபுகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக்கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!
அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார்.அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ
2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
உயர்வானவனாகிய அல்லாஹ்,
[rtl](البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ [/rtl]
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186) எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான்.அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாகஇருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:திர்மிதீ
நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும்,பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனைபுரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.
3. நமது பாவங்களை ஒப்புவித்தல்
இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான்என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்
4. கேட்பதில் உறுதி
உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்
கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில்நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது,அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.
5. பிரார்த்தனையில் கடுமை
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்றுகூறினார்கள். (நூல்:அபூதாவூது)
6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum