சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Khan11

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

5 posters

Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by சே.குமார் Fri 4 Dec 2015 - 21:37

ழையின் கோரத் தாண்டவத்தில் வீடு, உடமைகள் இழந்து வாடும் நம் சென்னை மற்றும் கடலூர் சொந்தங்கள் இந்த மீளாத்துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்திப்போம்.

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் 9-629x420


ண்பர்களே... தயவு செய்து நடிகர்களைத் தொங்காதீர்கள்... உதவி செய்வது அவரவர் விருப்பம். சித்தார்த்தும் ஆர்.ஜே. பாலாஜியும் வெள்ளத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களிடம் நல்ல மனது இருக்கிறது. எல்லோரிடமும் நாம் அதை எதிர்பார்க்க வேண்டாம். நடிகர்கள் அவர்கள் தொழிலில் பணம் சம்பாரிக்கிறார்கள். அதில் நீ உதவலை... நீ உதவியது பத்தலைன்னு எல்லாம் சொல்லி எந்தக் காரியமும் ஆகப் போவதில்லை. நம் தமிழக மக்களுக்கு ஜாதி மத பாகுபாடுயின்றி நல்ல மனது இருக்கிறது. எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் நான் இதைத் செய்தேன்... நான் இதைச் செய்யலாமென காத்திருக்கிறேன் என்றெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளாமல் உதவி செய்யும் அவர்களைப் பாராட்டுவோம்.

ர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியால் துடிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பார்க்கும் போதும் மனசு கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்து குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் நலம் என போட்டோ போடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முகநூலும் டுவிட்டரும் ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன் படுத்தப்படுவதில், முக்கியப் பங்காற்றுவது குறித்தும் நட்புக்கள் முனைப்புடன் செயல்படுவது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி.

வ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அம்மாவின் ஆணைப்படி நடக்கும் அரசு அதிகாரிகளும் நமக்கு நாமே என்று உதார் நாடகம் நடத்தியவர்களும் மாற்றம் முன்னேற்றம் முதல்வர் நாற்காலியே என்று சொல்லியவர்களும் எங்கே போனார்கள்..?. இத்தனை பேரிடரிழும் மற்றவர் செய்யும் உதவிகளை தங்கள் செய்ததாய்ச் சொல்லும் ஈனப்பிறவிகள் இவர்களை இனம் காட்டிய மழைக்கு நன்றி என்றுதான் சொல்ல வேண்டும்,

ன்று நம்மைப் பார்த்து செய்வீர்களா...? செய்வீர்களா...? என்றார்கள். இன்று நாம் அவர்கள் செய்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் நமக்கு நாமே உதவிகளைக் குவித்து வருகிறோம். முகநூல் பக்கமெல்லாம் உதவிகள்... உதவிகள்... நாங்கள் மதத்துக்குள்ளும் ஜாதிக்குள்ளும் சிக்கியவர்கள் அல்ல... தமிழர்கள்... மனிதாபிமானம் நிறைந்த தமிழர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களை வாழ்த்துவோம்.

வடியில் இருக்கும் நண்பனின் வீடு வெள்ளத்திற்குள்... அவனுக்கு நெஞ்சளவு தண்ணீர் இருப்பதாய்ச் சொன்னான். சின்னக் குழந்தைகள் வேறு... இப்போது அருகில் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருப்பதாகவும் நலமுடன் இருப்பதாகவும் சொன்னான். மனசு சந்தோஷப்பட்டாலும் இதுபோல் எத்தனை குடும்பங்கள்... தவித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் வேதனை அதிகமாகிறது.

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் 12316547_1073533526014912_1510115920831368283_n
(அடுத்தவன் அனுப்பியதில் அம்மா போட்டோ... வாழ்க அம்மா)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்களே சற்றே சிந்தியுங்கள். இந்த இயற்கை... சென்னையையும் கடலூரையும் புரட்டிப் போட்டு விட்டு ஆங்காங்கே உங்களைப் போன்ற சிலரை விட்டு வைத்திருக்கிறது என்றால் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். இப்படி ஒருவன் சாகக்கிடக்கும் போது அவன் வயிற்றில் அடித்து சொத்து சேர்த்து எங்கு கொண்டு போகப் போகிறீர்கள்...? யோசியுங்கள்... இந்த நேரத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவியே உங்களை வாழவைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

ம் வலைப்பூ நட்புக்கள், முகநூல் நட்புக்கள் எல்லாம் களப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுத்து உதவுவதிலும் தீவிரமாய் இருப்பது கண்டு, எங்கோ இருந்து கொண்டு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் எங்கு என்ன தேவை, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற செய்திகளை உடனுக்குடன் தாங்கள் பகிர்ந்து கொள்வதுடன் இவரை அழையுங்கள் அவரை அழையுங்கள் என்று சொல்லும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

க்கள் அவதிப்படும் நிலையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பதில் பேசமால் ஓடும் அமைச்சர்கள்தான் நாளை உங்களுக்கு சேவை செய்வேன் என பணத்தோடு வந்து நிற்பார்கள் ஓட்டுக்காக... இனி அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். இன்று நம்ம முதல்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மா அவர்களின் தொகுதியில் அமைச்சர்களை மக்கள் விரட்டி, செயலாளரை நையப் புடைத்தார்களாமே அப்படி அடித்து விரட்ட வேண்டும்.

க்களுக்கு உணவு வழங்க வெள்ளத்திற்குள் வாகனத்தில் பயணித்த வைகோ, மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் காப்பாற்றி உணவளித்த இளையராஜா,  ஒரு கோடி கொடுத்து தனது உயர்ந்த உள்ளத்தைக் காட்டிய லாரன்ஸ், தனது வீடுகளை தங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்ன மம்முட்டி, நிவாரணப் பணிக்காக உண்டியல் ஏந்தி வசூலித்த கர்நாடகா மக்கள் பள்ளிக்குழந்தைகள், நிவாரணப் பணிக்கு பணம் கொடுத்த பீகார் மற்றும் ஜார்கண்ட் முதல்வர்கள், இரண்டு மாதங்களுக்கு சாப்பாடு, உணவு என எல்லாம் கொடுக்கிறேன் என்றும் தனது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என எல்லா இடத்திலும் தங்கச் சொன்ன அஜீத், மண்டபங்களைத் திறந்து விட்ட ரஜினி, விஜய், நிவாரணத் தொகை கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா, முதல் மாத சம்பளத்தைக் கொடுத்த பீகார் துணை முதல்வர், அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள், இவற்றிற்கெல்லாம் மேலாக டோல்கேட்களை எல்லாம் டிசம்பர் 11ம் தேதி வரை திறந்து விட வைத்த ஷாஜகான் சார் என எல்லாருக்கும் நன்றிகள்.

மேலே சொன்னவர்கள் எல்லாம் பிரபலங்கள்.... இவர்கள் விளம்பரம் தேவையில்லை என்று சொன்னாலும் மீடியாக்கள் விடுவதில்லை... விரட்டிப் பிடிப்பார்கள்... ஆனால் இவர்களின்றி எந்த விளம்பரமும் இல்லாமல் சாப்பாடு, உடை, போர்வை, பால், மாத்திரைகள்,  நாப்கின் என இன்னும் இன்னுமாய் வண்டி வண்டியாய் ஏற்றி அனுப்பும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

டோல்கேட்டில் பணம் வசூலிக்காமல் திறந்து விட வேண்டும் என்று திரு.ஷாஜஹான் சார் செய்த செயலை ஏதோ தாங்கள் செய்தது போல் காட்டிக் கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வது..? 

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் 12294873_1077962565569172_2981284528524834178_n
(கடலூரில் இருக்கும் கிராமத்தில் களப்பணியில் இருக்கும் நண்பன் எடுத்த போட்டோ)

டலூர் நகரைத்தை விட அதைச் சுற்றி இருக்கும் 80க்கும் மேற்பட்ட கிராமங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பாதாகச் சொல்கிறார்கள். கடலூரைக் கண்டு கொள்ளவில்லை என்று முகநூலில் தம்பி தினேஷ் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இன்று போதுமான ஆட்கள் களப்பணி செய்கிறோம்... நிறைய பொருட்களை மக்கள் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய செய்தி.

டலூர் களப்பணியில் எனது நண்பன் தமிழ்க்காதலன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தமிழ்க்குடில் அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட இன்னும் உதவிகள் போகாத கிராமங்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சொன்னதெல்லாம் உதவி செய்... நீயும் பாதுகாப்பாய் இரு என்பதே... அறக்கட்டளை மூலமாக உதவும் நண்பனையும் அவனுக்கு உறுதுணையாக இருக்கும் காயத்ரி அக்கா உள்ளிட்ட உறவுகளுக்கும் நன்றி. 

ஷ்டப்பட்டு பொருட்களைச் சேகரித்துக் கொடுத்தால் அதை ஆளும் கட்சியும் ஆளத் துடிக்கும் கட்சியும் திருடி தாங்கள் கொடுப்பது போல் கொடுக்க நினைக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கும் போது 'சே... கேவலப்பட்ட ஜென்மங்கள்... இவர்கள் இதிலும் அரசியல் பண்ணி என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்... மலம் தின்னும் மனிதர்கள்' என்றே எண்ணத் தோன்றுகிறது.


ன்று எங்கள் வரிப்பணத்தில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் என உங்கள் படங்களைப் போட்டுக் கொடுத்தீர்கள். இன்று தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களை எல்லாம் பறித்து அதில் உங்கள் படத்தை ஓட்டிக் கொடுக்க நினைக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் நிகழுமா..? இப்படிப் பெயரெடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்...? வாழ வைக்க வேண்டாம்... வாழ வைக்க நினைக்கும் ஒரு சாமானியன் கொடுக்கும் பத்து ரூபாய் பண்டத்தில் உன் போட்டோ போட நினைக்கும் கேவலத்தை நிறுத்தச் சொல்லுங்கள். தமிழனுக்கு தமிழன் மட்டுமின்றி உலகமே உதவும் போது கோடிகளில் புரளும் நீங்கள் எல்லாம் பிடுங்கி பெயரெடுக்க நினைக்கிறீர்களே.... இது எந்த வகையில் நியாயம்...? யோசிப்பீர்களா...? யோசிப்பீர்களா..?

க்களின் வரிப்பணம் என்னாச்சு என்று கமல் காட்டமாய்க் கேட்டதை பலர் கேலி செய்கிறார்கள். நம் வரிப்பணத்தை விலையில்லா கிரைண்டர், மிக்ஸியாகக் கொடுத்து விட்டு இப்போது பேசாமல் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களை என்ன செய்வது..? அவர் சராசரி தமிழனாய் கேட்டிருக்கிறார்... உடனே நீ பணம் கொடுத்தாயா என்று கேள்வி எழுப்புகிறோம். அவர் கொடுக்க வேண்டும் என்று நாம் எதற்காக எதிர்பார்க்கிறோம்... அப்படியே அவர் கொடுத்தாலும் விளம்பரம் பண்ணிக் கொண்டு கொடுக்க வேண்டுமா என்ன.. கேட்டால் எங்கள் பணம்தானே உன்னிடம் இருக்கு என்று வேறு சொல்கிறோம். இனி எவன் படத்தையும் தியேட்டரில் பார்க்காதீர்கள்... எவனுக்கும் கட்-அவுட்டும் பாலாபிஷேகமும் செய்யாதீர்கள்... இப்படி இருப்பீர்களா..? சகஜநிலைக்கு மாறியதும் அவர்கள் படம் வரும்போது நாம் மீண்டும் பால்குடம் எடுக்கத்தானே போறோம்... அவர்களை திட்டுவதை விடுத்து நாம் திருந்துவோம்.

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் 04-1449209817-chennai-floods8234-600


முகநூலில் தொடர்ந்து செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கும் ஜாக்கி சேகர் அண்ணா, முகநூல் நண்பர்கள் ராஜ் அருண், வசந்த் பாலாஜி, கனி ஓவியா அக்கா,சுபஸ்ரீ ஸ்ரீராம் அக்கா, கிருத்திகா தரன் அரவிந்த் நிவி, திருமதி. ஜோதிமணி சென்னிமலை மற்றும் வலைச்சித்தர் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், சுவிஸ்சில் இருக்கும் ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா, 'தமிழ்க்குடில்' காயத்ரி அக்கா,  சகோதரிகள் தேன் மதுரத்தமிழ் கிரேஸ், மைதிலி கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட இன்னும் நம் உறவுகள் அனைவருக்கும் நன்றி.

க்களைக் காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த சகோதரன் பரத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ப்போது மீண்டும் மழை வலுத்திருப்பாதாக செய்திகள் சொல்கின்றன. குடந்தை சரவணன் அண்ணனிடம் பேசிய போது மழை பெய்கிறது என்றும் முதல் முறையாக மழை மீது கோபம் வருகிறது என்றும் சொன்னார். உறவுகளே பத்திரமாய்... பாதுகாப்பாய் இருங்கள்.

(மீண்டும் அடுத்த வெள்ளி)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty Re: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by Nisha Sat 5 Dec 2015 - 1:56

க்களைக் காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த சகோதரன் பரத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty Re: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 5 Dec 2015 - 7:39

அனர்த்தம் ஏற்றபட்ட இடத்தை அடைந்து திரும்பிய அளவு உங்களது விமர்சனம் கொண்டு சென்றிருக்கிறது அண்ணா நன்றிகள் 

இன்றய செய்தி ஒன்றில் ஆற்றில் பிணங்கள் மிதந்து வருவதாக அறிகிறோம் கவலையடைகிறோம் அவர்கள் ஆத்மா சாந்தி பெறட்டும் 

ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டிருக்கின்ற அத்தனை ஜென்மங்களும் பாரட்டப்பட வேண்டியவர்களே அதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள் 

உண்மையில் இந்த அனர்த்தம் மனிதாபிமான முள்ளவர்களை அடையாளங் காட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை 

திட்டமிடப்படாத அரசியல் நடவெடிக்கைகளும் அனுமதிகளுமே இந்த அவல நிலைக்கு காரணம் 

வானத்தின் கீழ் வாழுகின்ற நாம் எவ்வகையான இயற்கை அனர்த்தங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவு திட்டங்களை தீட்டிக்கொண்டு வடிகாலமைப்புகள் பாததைகளின் விஸ்திரணம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் அவைகளை விடுத்து பேராசை பிடித்த மக்களின் வீடமைப்புதான் காரணம் என்று மக்கள் மீது குற்றம் சுமத்திய வண்ணமிருக்கிறார்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது 

அத்தனை அவலங்களும் அகன்று நல்ல சுமூகமான நிலை உருவாக இறைவன் துணைபுரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்


மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty Re: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by rammalar Sat 5 Dec 2015 - 16:23

தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்
உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன...
-
மனித நேயத்துடன் போர்க்கால அடிப்படையில்
பணியாற்றிய அனைவரையும் வாழுத்துவோம்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty Re: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by நண்பன் Sat 5 Dec 2015 - 16:33

குமார் அண்ணா நீங்கள் எழுதிய அத்தனை விடயமும் என் மனதின் குமுறுல்கள் அத்தனையும் வழிமொழிகிறேன் அண்ணா 

இந்த அம்மாவின் செயலை நினைத்தால் கடுமையாக கோபம் வருகிறது அண்ணா  என் மனக் சுமிறல்களை வரைந்த உங்களுக்கு  சலூட் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர் Empty Re: மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum