சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Khan11

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

4 posters

Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Nisha Thu 10 Dec 2015 - 3:01

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!எனும் தலைப்பிலான கவர் ஸ்டோரி படித்த பின் தோன்றியது 


என்ன செய்யப்போகின்றோம்? 


அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம். 

நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!? 

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? 

குப்பை கூழம் பிளாஸ்டிக் என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இந்த பேரிட இழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை! பிளாஸ்டிக் போட்டார்கள் குப்பை போட்டார்கள் வடிகான்களை அடைத்தார்கள் என ஆயிரம் சாக்குப்போக்கு சொன்னாலும் அவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததில்லை பல வருடங்களாக நடக்கும் ஒரு விடயத்தை வைத்து இதனால் அதனால் என சொல்லி விலகுதல் ஏற்புடையதல்ல. 

முதலில் டிசம்பர் முதல் வாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி அறிவிப்பு செய்த பின்னும் நவம்பரிலிருந்து மழை பெய்து அந்த நீரே ஓடுவதற்கு சரியான வடிகான்கள் இல்லாத நிலையில்... தொடர்ந்தும் மழை பெய்தால் என்னாகும் என அறியவும் உணரவும் இதற்கென ஆராய்ச்சிப்படிப்பா படித்து வரவேண்டும்?

முதலாம் கிளாஸ் படிக்கும் பிள்ளையே சொல்லும்... இத்தனை நடந்தும் அணைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை கடைசி நிமிடம் வரை வேடிக்கை பார்த்து விட்டு.... கடைசி நிமிடத்தில் தான் உணர்ந்தார்கள் அல்லவா? 

இந்த நேரடி அனுபவத்தினை படித்து பாருங்கள். 
http://swthiumkavithaium.blogspot.com/2015/12/blog-post.html

இராணுவம், காவல்துறை சேர்ந்து வாகனத்தில் வந்து அறிவிப்பு செய்த நேரம் நள்ளிரவு 11 மணிக்கும் மேலாம். எந்த ஊரில் இரவு ஒன்பது மணிக்கு பின் தெருவில் நடமாட்டம் இருக்கும். ஏற்கனவே பேரிடர் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி அறிவிப்பால் பயன் இராது. அப்படி இருக்கும் போது சாக்குப்போக்காய் ஒரு அறிவிப்பு... 

தன் கட்சிக்கு ஒரு பாதிப்பு எனில் தெருவில் செல்லும் பேருந்தை நிறுத்தி தீவைத்து கொழுத்த ஆயிரம் பேரை கூட்ட முடிந்தவர்களால் தன் மக்களுக்கு ஆபத்து எனும் போது செயல்பட முடியாமல் போனதேன்? ரயிலை நிறுத்தி, பேருந்தை எரித்து மரங்களை வெட்டி நாட்டை சுடுகாடாக்க ஒரே நொடியில் விரலசைவில் பல்லாயிரம் பேரை கூட்டி செயல் படுத்த முடிந்தவர்களால் அப்பாவிமக்களை வற்புறுத்தி அவசரகால பிரகடனம் செய்தாவது குறித்த நேரத்தில் மேடான பகுதிக்கு வர வேண்டும் என கட்டளை பிறப்பித்திருக்க முடியாதா? 

முடியாது என எவரேனும் சொன்னால் சொல்பவர்களுக்கு அறிவே இல்லை எனத்தான் நான் சொல்வேன்! ஒரு மணி நேரம் போதுமே! உடைமை போனாலும் உயிரிழப்புகள் குறைந்திருக்குமே! 

மழையால் மட்டும் வெள்ளப்பாதிப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்... அணைகள் திறக்கப்ட்டதால் தான் இத்தனை அழிவும் என்பதும் நிஜமே!அணையை திறந்து தான் விட்டீர்கள்.. கன மழை பெய்து அணை நிரம்பும் போது அடையாறு நதி கடலில் சேரும்மிடத்தில் ஆழமாக்கப்பட்டு விரிவாக்கபட்டு முகத்துவாரம் வெட்டப்படணுமாம். இம்முறை முகத்துவாரம் வெட்டப்படவில்லையாம். ஏன் முகத்துவாரம் வெட்டவில்லை. இதை செயல் படுத்த வேண்டியவர் யார்? 

அரசு தான் செய்யவில்ல எனில் வெள்ளம் வரும் போது நடைமுறை இதுவென பொதுமக்களேனும் கூடி பேசி முகத்துவாரம் வெட்டி நதி நீர் கடலில் போய் கலக்க வழி செய்திருக்கலாமே! 

அரசு செய்யட்டும் என மக்களும் பதவி மட்டும் தான் முக்கியம் என அந்த நேரத்துக்கு குழைக் கும்புடு போட்டு வரும் அரசியல் வாதிகளும், லஞ்ச லாவண்யங்களில் புரையோடிய அதிகாரிகளும்.... அத்தனை பேரும் தான் இத்தனை இழப்புக்கும் காரணம். 

அணை நீர் பெருக்கெடுத்து வரும் போது பாலங்கள் உடைகின்றது. அந்த நொடியிலாவது வரும் ஆபத்தினை உணர்ந்து கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி இருக்கலாமே! விடியோ எடுப்பதும் அதை பகிர்வதுமா முக்கியம். வேடிக்கை பார்ப்பதும் அனைத்திலும் அசட்டையாய் இருப்பதும் தான் அனைத்து இழப்புகளுக்கும் காரணம்! 

இனிமேல் அம்மா என்றால் ஆகுமா? ஐயா என்றால் ஆகுமா? இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவேனும் அரசு ஓடோடி வந்ததா என்றால் அது தானும் இல்லை.ஆற அமர போட்டி கொடுக்கின்றார்களாம். 

சென்னை மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள். எஙகள் தங்கத்தலைவி இராணுவ வேகத்தில் செயல்பட்டு மக்களை தாலாட்டினார் என போட்டி கொடுக்க முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களோ? 

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் உதவிக்கு செல்லும் போதும் போருக்கு செல்வது போல் முன்னும் பின்னும் படையணி சூழ போட்டோக்கிராபரும் வீடியோகிராபருமாய் முழங்கால அளவு நீரில் நின்று மாடல் செய்த விதம் கண்டு சத்தியமாய் சிரித்தேன். இது தானா மீட்புப்பணி செய்யும் அழகென எனக்குள் கேள்வி எழுந்ததென்னமே நிஜம். 

அப்படியும் செய்து விட்டு... எம் தலைவன் உங்களுக்காக அதை செய்தான், இதை செய்தான் இனியும் உங்களுக்கு பாதுகாவலன் யார், என பெண்கள் புடை சூழ போட்டோஷாப் திருவிளையாடல்கள் வேறு...!

மோடி வெள்ளத்தினை பார்க்க போனேன் என போட்டோ ஷாப் செய்தார் என பி.பிசி ஒரு அசைபடம் வெளியிட்டு கிண்டல் செய்யும் படியும் அரசு மெத்தனம், வேகம் காட்டவில்லை, நூறு வருடங்களில் இல்லாத வரலாறு காணாத அழிவு. சென்னை வெள்ளம் என வெளி நாடுகளே தலைப்பிட்டு செய்தி இடும் படித்தானே அரசின் செயல் இருந்தது. 

ஆனாலும் நான் பெருமைப்படுகின்றேன். எம் எதிர்கால சந்ததியை நினைத்து....ஹாட்ஸ் அப் என் சந்ததியே! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுய நலவாதிகளாக இருக்கின்றார்களே என எம் இளைய தலைமுறையை திட்டிய ஒவ்வொருவரும் வெட்கித்தலை குனியுங்கள். சுய நலமாய் சிந்தித்ததான சொன்ன இளைஞர் படையணிதான் பொங்கி பெருகி பதறித்துடித்து புறப்பட்டது.

மதம்,ஜாதி,இனம், மொழி மறந்து பேதமை மறந்து எம் மக்கள் எனும் தேசிய உணர்வோடு பசி தூக்கம் மறந்து செயலாற்றினார்கள். என் எதிர்கால சந்ததி சுயநலமானதென இனியும் சொல்வோமா...? 

இனியும் என்ன செய்ய போகின்றீர்கள்? 

மதவாதம் பூசி வரும் அரசியல் வியாதிகளை ஓடோட விரட்டுங்கள். முகப்பூச்சு போட்டு வேடிக்கை காட்டுவோரை உணருங்கள்! 

நிச்சயம் இனி செயல் படும் நேரம் தான் தமிழ் மக்களே! 
தூங்கியது போதும் விழித்தெழுங்கள்! 
ஏமாந்ததும் போதும் எழுச்சி பெறுங்கள்!

http://alpsnisha.blogspot.ch/
உங்கள் கருத்துக்களை ஆல்ப்ஸ்தென்றலிலும் இங்கும் இடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by நண்பன் Thu 10 Dec 2015 - 8:54

அரசாங்கத்தின் அலட்சியம் அரசியல் வியாதிகளின் கையாலாகாத தனம் இந்த அழிவுக்கு காரணம் என்பதுதான் உண்மை இதை அறியாத அப்பாவி தமிழ் மக்கள் மீண்டும் அவர்களுக்கு கொடி பிடிப்பார்கள் பாருங்கள்  அரசியல் வாதிகழுக்கு விளக்குப்பிடிக்கும் சில சில்லறைகள் இருக்கும் வரை இந்த இலவசத்தை விரும்பும் மக்களும் திருந்த மாட்டார்கள் நாடும் உருப்படாது 

தேவையான நேரத்தில் பெறுமதியான கருத்துக்களை அள்ளித்தெளிக்கும் என் அருமை சகோதரி நிஷா அக்கா உங்களுக்கு நான் என்றும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்  உங்கள் இந்தக் கட்டுரை இன்னும் பல மக்களுக்கு தமிழ் மக்கள் கண்ணுக்கு முன் கொண்டு செல்ல வேண்டும் இதைப் படித்தாவது திருந்த வேண்டும் இந்த மழை இவர்களுக்கு பாடம் கற்றுத்தர வில்லை என்றால் இனியும் இவர்கள் திருந்த மாட்டார்கள் மீண்டும் பழய குருடி கதவ திறடி என்ற போர்வையில் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.

அரசு தரும் நிவாரணத்தினை வாங்கி டாஸ்மார்க்கில் கொண்டு போய் மீள கொடுத்து நன்றாக வயிறு முட்ட குடித்து விட்டு மதி கெட்டு மறுபடியும் என்ன இலவசங்கள் தருவார்கள் என அரசியல் கட்சிகள் தரப்போகும் எலும்புத்துண்டுகளுக்காக எச்சில் வடிய நன்றியுள்ள நாய்களாய் மாறி காத்திருக்க போகின்றோம். 

நாய்க்கு ஐந்தறிவு தான்! மனிதருக்கோ? ஒரு அறிவும் கிடையாது! அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது!தமிழன் என்றாலே ஏமாளி என அவன் மூஞ்சியில் ஒட்டி இருக்குமோ என்னமோ!? 


சிந்திக்க வேண்டிய விடயங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள் அன்புத் தமிழர்களே அரசியல் வியாதிகளை நம்பி இலவசத்தை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள் விழித்தெழுங்கள் வெற்றி பெறுங்கள் 
நன்றி அக்கா நன்றியுடன் முஸம்மில்
நிஷா அக்கா   சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Nisha Thu 10 Dec 2015 - 12:52

விகடன் கவர் ஸ்டோரியில் வந்திருக்கும் என் விமர்சனம்


சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? 2ufzzon



சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? V3lsvn


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by நண்பன் Thu 10 Dec 2015 - 16:57

ஒன்றும் தெரிய வில்லையே அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by சுறா Thu 10 Dec 2015 - 17:22

நெத்தியடி பதிவுகள். மக்கள் மனதில் எரிமலை குமுறிக்கொண்டு தான் இருக்கிறது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Dec 2015 - 17:41

அடுத்த தேர்தலுக்கு அருமையான சந்தர்பம் 
------------
எப்பவுமே ஒரு இடர் நடந்து பெரும் துன்பம் ஏற்றபட்டு சொல்லென்னா துயர்கள் நடந்து முடிந்தபின் 
அந்த இடருக்கு என்ன காரணம் தெரியுமா ...? என்று வாய் கிழிய கத்துவோரிடம் மக்கள் கேட்கும் கேள்விகள் 
இவைதான் ......

1) தமிழ் நாட்டில் ஏறத்தாள 8 கோடிமக்கள் . இதில் லச்சக்கணக்கில் படித்த புத்தி ஜீவிகள் . பல்கலைகழக விரிவுரையாளர்கள் . ஆராச்சியாளர்கள் . நிபுணர்கள் . சமூக ஆர்வலர்கள் .சமூக சிந்தனையாளர்கள் .,
வானிலை ஆராச்சியாளர்கள் .அணு ஆராச்சியாளர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் . இந்திய 
மாநிலங்களில் தமிழ் நாடு அறிவு வீதத்திலும் குறிப்பிட்டு சொல்லும் இடத்தில் இருக்கிறது . இத்தனை இருந்து 
இப்பேர் பட்ட இடர் வரமுன் எந்த பாதுகாப்பு  நடவடிக்கையும் எடுக்காதது ஏன்...?

2) இடர் வந்தால் எப்படி மக்களை காப்பாற்றுவது ..? விரைவாக எப்படி இயல்பு வாழ்கைக்கு மாற்ருவதென்ற ...
நீண்டகால திட்டம் ஏன் முன்னரே தயாரிக்கவில்லை ...?

3) இன்று நீங்கள் சொல்லும் காரணத்தை முன்னரே தடுபப்தற்கு ஏன் மக்கள் போராட்டம் ,மக்கள் சிந்தனை 
மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை ....?

4) பல்லாயிரகணக்கான ஊடகங்கள் தமிழ் நாட்டில் இருந்தும் ஊர் ஊராய் நிருபர்கள் இருந்து அந்ததந்த 
பிரதேசத்தின் இப்பேர்பட்ட இடர் வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏன் கண்டறியவில்லை ....?
ஏன் ஊடகங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடார்த்த வில்லை ..? முன்வரவில்லை ...?

5) எப்பவுமே நாங்கள் விழிப்புனர்வில்லாதவர்கள். துன்பத்தின் பின்னரே விழிப்படைபவர்கள் 


அடுத்த தேர்தல் வரை எல்லோருக்கும் அருமையான சந்தர்ப்பம் மாறி மாறி குறைகூறவும் 
தமது காப்புணர்ச்சியை வெளிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் ....

அன்புள்ள புத்தி ஜீவிகளே அடுத்த தலைமுறை இத்தகைய இடரை சந்திக்காமல் இருக்க இனிமேலாவது 
அரசியல் மறந்து ,  சுயலாபம் மறந்து போராடுவோம் ....அருமையான திட்டங்களை வகுப்போம் ...!!!
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நீண்டகால பாதுகாப்பு திட்டங்களை ஏற்ப்போம் . துன்பத்தில் இருக்கும் 
மக்களை வைத்து அரசியல் நடாத்துவதும் . இலவச வசதிகளை வழங்கி குறுங்கால திருப்பதியை 
வழங்காமல் நீண்டகால திட்டத்தை  சிறப்பாக செய்வோம் ....!!!


வருத்தத்துடன் முடிக்கிறேன் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by நண்பன் Thu 10 Dec 2015 - 17:56

சுறா wrote:நெத்தியடி பதிவுகள். மக்கள் மனதில் எரிமலை குமுறிக்கொண்டு தான் இருக்கிறது.

மீ டூ  ரெம்ப ரெம்ப  கோபமாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Nisha Thu 10 Dec 2015 - 19:24

நண்பன் wrote:ஒன்றும் தெரிய வில்லையே அக்கா

நான் சேனையில் இருக்கும்  இமேஜ் மூலம் தான் டவுன் லோட் செய்தேன் தெரியவில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Nisha Thu 10 Dec 2015 - 19:24

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? 12313546_920758867960314_2631066301272462609_n


சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? 12341060_920759031293631_6820654252692428575_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Nisha Thu 10 Dec 2015 - 19:26

மேலே இருக்கும் கட்டுரை தான் விகடன் கவர் ஸ்டோரியில் விமர்சனமாக வந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 18:37

Nisha wrote:மேலே இருக்கும் கட்டுரை தான் விகடன் கவர் ஸ்டோரியில் விமர்சனமாக வந்தது.

மிக்க மகிழ்ச்சி அக்கா படிப்பதற்கு சிரமமாக உள்ளது எனிவே சிறக்கட்டும் உங்கள் பணி  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்? Empty Re: சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum