சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

கணணி தொடர்பான தகவல்கள் Khan11

கணணி தொடர்பான தகவல்கள்

Go down

Sticky கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:27

கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம்
--------------------
உலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை விட பல மடங்கு, தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப தேவைகளும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தகவல் பரிமாற்றத்தின் அளவு 35 க்வின்ட்டில்லியன் பைட்சாக (Quintillion Bytes) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் வைஃபை  தொழில்நுட்பமான, மின்சாரப் பயன்பாடு உள்ள காலத்தில் தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சமமாகி விடும். அதனால் எதிர்கால தேவை கருதி ஆராய்ச்சியாளர்கள் லைஃபை (Lifi) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

வைஃபை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு அதிக திறன் கொண்ட இந்த லைஃபை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தால் நமது எதிர்கால இணைய வேகம் நமது தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனையில் முயற்சியில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் அடுத்த சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.


‘வயர்லஸ் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் தான் wifi. அதேபோல், ‘லைட் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் Lifi. எல்ஈடி (LED) விளக்குகள் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதே இதன் வியக்கத்தகு தொழில்நுட்பம். இணைய உலகை அடுத்த சில வருடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் தான் ஆள வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:30

கூகுள் நிறுவனம் தனது ‘போட்டோஸ்’ (Photos) சேவையை நேற்று அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை பிற சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் பயன்படும் ஒரு பொதுவான பயன்பாடு தான் கூகுள் போட்டோஸ்.

புகைப்படங்களை எடுப்பதை விட அவற்றை வரிசைப்படுத்தி ஒரு தொகுப்பாக வைத்திருப்பது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தும் வேலை. நடைமுறையில் இருக்கும் வேலைகளில் நமது புகைப்படங்களை தொகுப்பதும், தேவையான மாற்றங்களை செய்வதும் நம்மால் முடியாத காரியம்.

இதற்கென நாம் இணையத்தில் பல்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். புகைப்படங்களில் மாற்றங்களை செய்வதற்கு ஒரு செயலி, சேகரிப்பதற்கு ஒரு செயலி என தனித்தனி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி வரும். இந்நிலையில் தான் கூகுள் தனது போட்டோஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

‘கூகுள் டிரைவ்’ (Google Drive) போன்று கூகுள் போட்டோஸ் சேவையும் அளவற்ற சேமிப்பு வசதியை அளிக்கிறது. இந்த சேவையில் நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது, நமது இடங்கள் மற்றும் பின்புலங்களுக்கு தகுந்தவாறு அவற்றை தானியங்கியாகவே வரிசைப்படுத்திவிடும். இதற்காக கூகுள், படத்தை அங்கீகரிக்கும் ‘இமேஜ் ரிகக்னைசன்’ (Image Recognition) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. மேலும் இந்த சேவையில் தரத்தை மெருகேற்ற தேவையான மாற்றங்களை செய்யும் வசதியும் உள்ளது.

அனைத்து சேகரிப்பு மற்றும் மாற்றங்களையும் செய்து முடித்தாகிவிட்டது. நமது புகைப்படங்களை டுவிட்டர் அல்லது வேறு சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அந்த வசதியும் உள்ளது. இணையப் பயன்பாடாகவும், செயலியாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த சேவை பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

‘கூகுள் ப்ளே ஸ்டாரில்’ (Google Play Store) இந்த செயலியை அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இணையப்பயன்பாடாக இதனை பெறுவதற்கு பயனர்கள் கீழ் காணும் இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:33

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது, அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம், அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
கணணி தொடர்பான தகவல்கள் %E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.
இணையதள முகவரி : http://www.distancefromto.net/
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது.
கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.
ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
http://wp.me/p6I7w0-93
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:35

கூகுளின் புதிய லோகோ
தேடியந்திர நிறுவனமான கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ...

1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின், ஆறாவது லோகோ.

2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம்.

3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் இரண்டின் கலைவையே இதற்கு காரணம்.

4. கூகுளின் பழைய லோகோவில் பாருங்கள். இ எனும் எழுத்து சற்று சாய்வாக இருக்கும். புதிய லோகோவிலும் இ எழுத்து சாய்ந்தே இருக்கும். கூகுளின் எதையும் வித்தியாசமாக செய்யும் கலாச்சாரத்தின் அடையாளம் இது.


5.புதிய லோகோ மட்டும் அல்ல, புதிய எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் புதிய சேவைகளை அறிவிக்க இந்த எழுத்துரு பயன்படுத்தப்படும். லோகோ மற்றும் சேவை அறிவிப்புகளுக்கு இடையிலான தனித்தன்மை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

6. இதற்கு முன்னர் செல்போன்களில் குறைந்த வேக இணைப்பு எனில் அதற்கேற்ற கூகுள் லோகோ இடம்பெறும். இனி எல்லா இணைப்புகளிலும் ஒரே லோகோ தான்.

7.பழைய லோகோவின் எடை தெரியுமா? 14,000 பைட்கள். புதிய லோகோ மிகவும் இலேசானது. 305 பைட் தான் இதன் எடை.

8. புதிய லோகோவில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களின் துடிப்பான தன்மை லோகோவின் முழுமைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.

9. கூகுள் மேற்கொண்டுள்ள லோகோ மாற்றங்களில் இதுதான் மிகவும் பெரியது. இதற்கு முந்தைய மாற்றங்கள் சிறிய அளவிலானவையே.

10. லோகோவின் சுருக்கமான வடிவத்தை குறிக்கும் ஆங்கில எழுத்தான சிறிய ஜிக்கு பதிலாக பெரிய ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களும் இருக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:36

விண்டோஸ் 10 இல் உள்ள வசதிகள் ............

வேகமான இயங்கும் இயங்குதளம் என்பதைவிட Microsoft Edge உலாவி வேகமாக செயல்படுவதுடன் பல வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனாலும் add-ons பாவிக்கும் வசதிக்கும் வட்ஸ் அப் வசதிக்கும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த Edge உலாவி பிடிக்காவிட்டால் விரும்பிய உலாவிக்கு Default- ஆக மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 10 இல் உள்ள Cortana வசதி உலகின் விண்டோஸ் பாவனையில் உள்ள 190 நாடுகளில் USA, UK, France, Spain, Germany, Italy, China ஆகிய ஏழு நாடுகளில் மட்டுமே தற்போது செயல்படுகிறது.

மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் இந்த Cortana வசதியை பயன்படுத்த முடியாது. இருப்பினும் அதைப் பயன்படுத்த விரும்புபவர்கள்  Windows Phone பாவனையாளர்கள் பாவிக்கும் உத்தியைப் பாவித்துப் பயன்படுத்தலாம்.

புதிய Start Menu மீண்டும் புதிய வடிவில்-இதில் தேவையற்றவற்றை unpin செய்து கொள்ளலாம்.

மேம்படுத்தல்கள்-updates- தானியங்கியாக செயல்பட்டாலும் அதை தடுத்து வேண்டியதை மட்டும் தரவிறக்க முடியும்.

windows 10 ற்கு Upgrade செய்தவர்கள் - பிடிக்காவிட்டால் 30 நாட்களுக்குள் மீண்டும் பழைய வேர்சனிற்கு திரும்பலாம். முப்பது நாட்களின் பின் windows old கோப்பு நீக்கப்பட்டு விடும்.
அப்கிரேட் செய்யும் போது சில கோப்புகள் நீக்கப்பட்டு இருந்தால் அவற்றை windows old Folder இல் இருந்து 28 நாட்களுக்குள் திரும்பப் பெற முடியும்.

நேரடியாக அப்டேட் செய்ய விரும்பாவிடின் சுலபமாக DVD-USB-4GB இல் சேமித்து பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து விண்டோஸ் 10 ஐப் பாவிக்க விரும்புபவர்கள் அப்கிரேட் செய்து முடிந்ததும் windows is activated என்ற செய்தியை தவறாது கவனிக்கவும்.

settings இல் நமக்கேற்ற வகையில் பலவற்றை மாற்ற வேண்டி உள்ளது.முக்கியமாக privacy settings இல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:39

இணையத்தில் உலக மக்களின் தகவல் களஞ்சியமாக விளங்குவது விக்கிபீடியா.

விக்கிபீடியாவின் ஆங்கில வடிவத்தைப் புத்தகமாகக் கொண்டு வரும் இமாலய முய்ற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நியூயார்க்கைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரான மைக்கேல் மாண்டிபெர்க்.

இவர் விக்கிபீடியாவின் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.விக்கிபீடியாவின் தகவல்களை 7600 தொகுதிகள் கொண்ட புத்தகமாகத் தயார் நிலையில் வைத்துள்ளார்.

தேவைக்கேற்ப online-ல் அச்சிட்டு வழங்குவார். இதை அச்சில் பதிவேற்றம் செய்வதற்கு 14 நாட்கள் ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விக்கிபீடியா புத்தகத்தின் விலை அதிகமில்லை; வெறும் 5 லட்சம் டாலர் தான்! இந்திய நாணய மதிப்பில் 3 கோடியே 20 லட்சம்!

என்ன மயக்கம் வருகிறதா?

ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாகவும் பெறலாம்.ஒரு தொகுதியின் விலை 80 டாலர்.அதாவது, 5100 ரூபாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:06

கணினி 
---------------
என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.

கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் செயற்படுத்தும் எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பிட்ட இழிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் அகில தெரிங் எந்திரத்தை போன்மிக்ககூடிய எந்த கணினியும்) கொண்ட கணினி, கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்த கணினியினதும் கொள்பணியை ஆற்றக் கூடியது, அதாவது தனியாள் உதவியாளத்தில் இருந்து மீக்கணினி வரையுள்ள எந்த கணினியினதும். ஆகவே சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலக-யந்திரனை கட்டுப்படுத்தல் வரையான அனேக கொள்பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறன் காலப்போக்கில் அடுக்குறிபோக்கில் அதிகரித்து சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை மூர் விதி என்று குறிப்பிடுவர்.

பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீக்கணினிகள் மற்றும் நிறுவனங்களின் பரிமாற்ற செயற்பாடுகளுக்கு பயன்படும் பிரதான-சட்டங்கள் போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சையமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன்பாட்டுக்குரியதுமான தனியாள் கணினிகளும், அதன் கொண்டுசெல் நிகரான ஏட்டுக்கணினிகளும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக்கணினிகளாகும். உட்பொதிக்கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகள் ஆகும். இவை சண்டை விமானங்களில் இருந்து இலக்கமுறை படப்பிடிப்பு கருவிகள் வரை பயன்படுத்தப் படுகின்றன.

பொருளடக்கம் 
1 வரலாறு
1.1 கட்டுப்பாட்டகம்
1.2 கணித ஏரண அகம்
1.3 நினைவகம்
2 கணினிகள் செயல்படும் முறை
2.1 நுண்செயலியின் கட்டளைத் தரவு அளவு
2.2 கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்கள்
3 கணினி வகைகள்
3.1 மீக்கணினிகள்
3.2 நடுத்தர கணினிகள்
3.3 மிகச்சிறிய/தனிநபர் கணினி
3.3.1 வகைகள்
4 அருஞ்சொற்பொருள்
5 மேற்கோள்கள்
6 வெளி இணைப்புகள்

வரலாறு

ஆதியில் "கணிப்பான்" என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறிமுறை கணிப்பு சாதனங்களின் உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அன்டிகைதிரா எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதொவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது.

ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறிமுறை கணிப்பு சாதனங்கள் பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக துளைப்பட்டை, வெற்றிட கட்டுளம் என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை 1837 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பல விஞ்ஞான கணிப்பு தேவைகளுக்கு, கூடிய மடங்கடி கொண்ட விசேடபயன் ஒத்திசை கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிரசினைகளின் நேரடி பௌதிக அல்லது இலத்திரனியல் மாதிரியுருவை அவை கணிப்புக்களுக்கு பயன்படுத்தின. இத்தகைய கணினிகள் இலக்கமுறை கணினிகளின் அபிவிருத்திக்கு பின்னர் மிகமிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அலன்_டூரிங் ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.


இரண்டாம் உலக போரின் போது சேர்மானிய சங்கேத குறிப்புகளை கண்டறிய கொலோசஸ் கணினி பயன்பட்டது.
வரவர திறனும், நெகிழ்வுதன்மையும் கூடிய கணிப்பு சாதனங்கள் 1930, 1940 ஆம் ஆண்டுகளில் பின்னடையாக உருவாக்கப்படலாகின. இவை நவீன கணினிகளின் மேன்மையான பண்புக்கூறுகளை படிப்படியாக சேர்த்துக் கொண்டன, உதாரணமாக இலக்கமுறை இலத்திரனியல் உபயோகம் (கௌவுட் சனொன் என்பவரால் 1937 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது), கூடுதல் நெகிழ்வுதன்மை வாய்ந்த செய்நிரலாக்கம். ஒரு குறிப்பிட்ட புள்ளியை இந்தக் காலக்கோட்டில் முதலாவது கணினி என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. குறிப்பிடதக்க சாதனைகளாக கொன்ராட் ஃசுஸ் என்பாரின் ஃசட் எந்திரம், ஆங்கிலேயரின் இரகசிய கொலோசஸ் கணினி, அமெரிக்க என்னியாக் என்பவை அமைந்தன.

என்னியாக்கின் குறைகளை தெரிந்து கொண்ட அதன் அபிவிருத்தியாளர்கள், அதைவிட நெகிழ்வுதன்மை கூடியதும், இலட்சணமானதுமான வடிவமைப்பை உருவாக்கினார்கள். பின்னாளில் செய்நிரல் தேக்க கட்டமைப்பு என அறியப்படும் இதிலிருந்தே அனைத்து நவீன கணினிகளும் பெறப்படுகின்றன. இந்த கட்டமைப்பிலிருந்தே கணினிகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் பல 1940 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன, இதில் முதலில் செயற்பட தொடங்கியது மான்செஸ்டர்-சிறிய-அளவிடை-பரீட்சார்த்த எந்திரம் ஆகும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய முதலாவது கணினி எட்சாக் ஆகும்.

கட்டுளத்தால் இயக்கப்பட்ட கணினிகளே 1950 ஆம் ஆண்டுகள் முழுவதிலும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு திரிதடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக 1960 ஆம் ஆண்டுகளில், கட்டுள கணினிகள் செலவு குறைந்த, சிறிய, வேகமான திரிதடையக் கணினிகளால் மாற்றீடு செய்யப்படலாயின. ஒருங்கிணைந்த-சுற்றமைப்பு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் 1970 ஆம் ஆண்டுகளில் கணினி உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைந்து சென்றது, இதனால் தற்போதைய தனியாள் கணினிகளின் முன்தோன்றல்களை வாங்கும் திறன் சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டது.


பொதுத் தேவைகளுக்கான ஒரு கணினி நான்கு முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவை,

கணித ஏரண அகம் (arithmetic and logic unit)
கட்டுப்பாட்டகம் (Control unit)
நினைவகம் (memory)
உள்ளிடு சாதனங்களும், வெளியீட்டுச் சாதனங்களும்
இப் பகுதிகள், கம்பித் தொகுதிகளினால் உருவாக்கப்படும் பாட்டைகளினால் (busses) ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டகம், கணித ஏரண அகம், பதிவகம் (registers), அடிப்படையான உள்ளிடு - வெளியீட்டுச் சாதனங்கள், இவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்படும் பிற வன்பொருட்கள் என்பன ஒருங்கே மையச் செயலகம் (central processing unit) எனப்படுகின்றன. தொடக்ககால மையச் செயலகங்கள் தனித்தனியான கூறுகளைக் கொண்டிருந்தன. ஆனால் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒருங்கிணை சுற்றமைப்பாக (integrated circuit) உருவாக்கப்படுகின்றது. இது நுண்செயலகம் (microprocessor) எனப்படுகின்றது.

கட்டுப்பாட்டகம்

கட்டுப்பாட்டுத் தொகுதி அல்லது மையக் கட்டுப்படுத்தி என்றும் சில சமயங்களில் அழைக்கப் படுகின்ற கட்டுப்பாட்டகம், கணினியில் பல்வேறு கூறுகளை இயக்குகிறது. இது ஆணைகளை ஒவ்வொன்றாக வாசித்து அவற்றைக் குறிநீக்குகிறது (decode). கட்டுப்பாட்டுத் தொகுதி குறிநீக்கிய ஆணைகளைத் தொடராக கட்டுப்பாட்டுக் குறிப்புகளாக்கி அவற்றின் மூலம் கணினியின் பிற பாகங்களை இயக்குகிறது. உயர்தரக் கணினிகளில், கட்டுப்பாட்டகம், செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஆணைகளின் ஒழுங்கை மாற்றவும் கூடும்.

எல்லா மையச் செயலகங்களிலும் பொதுவாக இருக்கும் ஒரு கூறு ஆணைச்சுட்டியாகும். சிறப்பு நினைவகமான இக் கூறு, அடுத்த ஆணையை நினைவகத்தின் எவ்விடத்திலிருந்து வாசிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறது.

கட்டுப்பாட்டகத்தின் செயல்பாட்டு ஒழுங்குகளும், அவற்றின் வகைகளைப் பொறுத்து மாறுபாடாக அமையக் கூடும். சில படிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யாமல் ஒரே நேரத்தில் செய்யும் நிலைகளும் உண்டு. கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகள் எளிமைப் படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஆணைச்சுட்டியினால் சுட்டப்படும், அடுத்த ஆணைக்குரிய குறிமுறையை வாசித்தல்.
கணினியின் பிற தொகுதிகளுக்கு ஆணை வழங்குவதற்காக எண்முறைக் குறியீடுகளை குறிப்புகளாக மாற்றும் பொருட்டு அவற்றைக் குறிநீக்குதல்.

ஆணைச்சுட்டி அடுத்த ஆணையைச் சுட்டும் வகையில் அதனை ஏறுமானம் (Increment) செய்தல்.
ஆணைகளைச் செயல்படுத்தத் தேவையான தரவுகளை நினைவகத்திலிருந்து அல்லது உள்ளிடு சாதனத்தில் இருந்து வாசித்தல். தேவைப்படும் தரவுகள் இருக்கும் இடம் பெரும்பாலும் ஆணைக் குறிமுறைகளுள் தரப்பட்டிருக்கும்.
தேவையான தரவுகளை கணித ஏரண அகத்துக்கு அல்லது பதிவகத்துக்கு வழங்குதல்.
ஆணைகளை நிறைவேற்றுவதற்கு, கணித ஏரண அகத்தின் அல்லது வேறு சிறப்பு வன்பொருட்களின் தேவை இருப்பின், அவ்வேலையைச் செய்வதற்குக் குறித்த வன்பொருளுக்கு ஆணையிடுதல்.
கணித ஏரண அகத்திலிருந்து கிடைக்கும் முடிவுகளை நினைவகத்தின் ஒரு இடத்திலோ, பதிவகத்திலோ, வெளியீட்டுச் சாதனம் மூலமாகவோ எழுதுதல்.

மீண்டும் முதலாவது படிமுறைக்குச் செல்லுதல்.

கருத்துரு அடிப்படையில், ஆணைச்சுட்டி என்பது இன்னொரு நினைவகமே என்பதால், இது கணித ஏரண அகத்தில் செய்யப்படும் கணிப்பீடுகளினால் மாற்றப்படலாம். ஆணைச் சுட்டிக்கு 100 ஐக் கூட்டுவதன் மூலம் அது அடுத்த ஆணையை நிரலில் 100 இடங்கள் கீழே தள்ளியுள்ள இடத்திலிருந்து வாசிக்கும்படி செய்யலாம். ஆணைச்சுட்டியை மாற்றும் ஆணைகள் தாவல்கள் எனப்படுகின்றன. இவை, கணினிகளால் திரும்பத் திரும்ப நிறைவேற்றப்படக் கூடிய ஆணைகளான கண்ணிகள், நிபந்தனை ஆணைகள் என்பவற்றுக்கும் இடமளிக்கின்றன.

ஒரு ஆணையைச் செயல்படுத்துவதற்காகக் கட்டுப்பாட்டகம் நடைமுறைப்படுத்தும் இயக்கங்களுக்கான படிமுறைகள் ஒரு சிறிய கணினி நிரல்களைப் போன்றவை என்பது கவனிக்கத் தக்கது. உண்மையில் சில சிக்கலான மையச் செயலக வடிவமைப்புக்களில், இத்தகைய வேலைகளைச் செய்யும் நுண்குறிமுறைகளை இயக்குவதற்காக நுண்வரிசைமுறையாக்கி (microsequencer) என்னும் சிறிய கணினி பயன்படுத்தப்படுவது உண்டு.

கணித ஏரண அகம்

கணித ஏரண அகம், எண்கணித முறையானதும், ஏரண முறையானதுமான இருவகை இயக்கங்களைச் செயல்படுத்தக் கூடியது. இது கூட்டல், கழித்தல் ஆகிய எண்கணிதச் செயற்பாடுகளை மட்டும் செய்யக்கூடியனவாகவோ அல்லது பெருக்கல், வகுத்தல், முக்கோணகணிதச் செயற்பாடுகள் (சைன், கோசைன் முதலியவை), வர்க்கமூலம் போன்ற செயற்பாடுகளையும் செய்ய வல்லவையாகவோ இருக்கலாம். சில வகையானவை முழு எண்களில் மட்டுமே செயற்பாடுகளைச் செய்யக் கூடியன. வேறு சில மெய்யெண்களுக்காகப் பயன்படும் மிதவைப் புள்ளிகளைப் பயன்படுத்துகின்றன. எனினும், மிக எளிமையான செயல்பாடுகளை மட்டும் செய்யக்கூடிய கணினிகளையும், சிக்கலான செயல்பாடுகளையும் எளிமைப்படுத்திச் செய்யக்கூடிய வகையில் நிரலாக்கம் செய்யமுடியும். ஆனால், இவ்வகையில் செயல்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கும். கணித ஏரண அகங்கள், ஒன்று இன்னொன்றுக்குச் சமமா, ஒன்றை விட இன்னொன்று பெரியதா சிறியதா போன்ற அடிப்படைகளில் எண்களை ஒப்பிட்டு பூலியன் உண்மை மதிப்பை ("உண்மை" அல்லது "பொய்") தரக்கூடும்.

ஏரணச் செயற்பாடுகள், AND, OR, XOR, NOT போன்ற பூலியன் ஏரணத்தை உள்ளடக்கியவை.

நினைவகம்

கணினியின் நினைவகம் ஒன்றை எண்களை வைக்கக் கூடிய அல்லது அவற்றிலிருந்து எடுத்து வாசிக்கக் கூடிய சிற்றறைகளின் பட்டியலாகக் கொள்ள முடியும். ஒவ்வொரு சிற்றறைக்கும் ஒரு எண்ணிடப்பட்ட முகவரி உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு எண்ணைச் சேமிக்க முடியும். "எண் 123 ஐ 1357 எண்ணிட்ட சிற்றைக்குள் வை" என கணினிக்கு ஆணையிட முடியும். அல்லது, "சிற்றறை 1357 இலுள்ள எண்ணை, சிற்றறை 2468 இலுள்ள எண்ணுடன் கூட்டி 1595 எண்ணிட்ட சிற்றறைக்குள் வை" என ஆணையிட முடியும். நினைவகத்துள் சேமிக்கப்படும் தகவல் எதுவாகவும் இருக்கலாம். எழுத்துக்கள், எண்கள், கணினிக்குரிய ஆணைகள் போன்ற எவற்றையும் ஒரேயளவு இலகுவாக நினைவகத்துள் இடமுடியும். மையச் செயலகம் தகவல்களை பல்வேறு வகைகளாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. நினைவகங்களைப் பொறுத்து வெறும் எண்களாக இருக்கும் தகவல்களை அவற்றுக்குரிய இயல்புகளுடன் வெளிப்படுத்த வேண்டியது மென்பொருட்களின் வேலையாகும்.

ஏறத்தாழ எல்லாத் தற்காலக் கணினிகளிலும், ஒவ்வொரு நினைவுச் சிற்றறையும் 8 பிட்டுக்கள் கொண்ட குழுக்களாக அமையும் இரும எண்களைச் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பிட்டுகள் கொண்ட தொகுதி ஒரு பைட்டு எனப்படும்.

கணினிகள் செயல்படும் முறை

கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. (0 மற்றும் 1) மையச்செயலகம்(CPU) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது. மையச்செயலகத்தில் ஒரு நுண்செயலி(microprocessor), ஒரு நினைவகம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு (control unit) ஆகியன ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். அந்த நினைவகத்தில் ஒரு நுண்செயலி என்ன செய்ய வேண்டும் மற்றும் என்னச்செய்யக்கூடாது என்று இயந்திர மொழியில் கட்டளைகள் இடப்பட்டு அது சேமிக்கப்பட்டிருக்கும்.

நுண்செயலியின் கட்டளைத் தரவு அளவு

கட்டளைகளானது ஒரு நுண்செயலியின் செயல் அளவைப் பொருத்து மாறக்கூடியது. நுண்செயலிகள் பொதுவாக 8 பிட்(8 துண்டுகள்) அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளை கையாளும் தண்மையுடையது. ஒருசில நவீன நுண்செயலிகள் 16 பிட், மற்றும் 32பிட் அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் தண்மை கொண்டது. 64 பிட் தரவு கட்டளைகள் கொண்டு செயல்படும் நுண்செயலிகள் அதிவேகமாக கணக்குகளையும் மற்ற வேளைகளையும் செய்து முடிக்கும்.

கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்கள்

முதலில் தரவு பிறகு கட்டளைகள் அதன்பிறகு செயலாக்கம் என்ற அடிப்படையில் தான் கட்டளைத் தொகுதிகள்(INSTRUCTION SETS) உருவாக்கப்படுகின்றன. இந்த கட்டளைத் தொகுதிகள் ஒரு கணினியை வழிநடத்துகின்றன. முதலில் கணனியின் நினைவகத்தில் ஒரு கோப்பு உருவாக்கி, அந்த கோப்பில் ஒரு செயலுக்கான கட்டளைத் தொகுதிகளை தயார்செய்து பிறகு அதை சேமித்து அதனை தேவைப்படும்போது பயன்படுத்தலாம். கட்டளைகளை நடைமுறையில் நிரல்கள் (programs) என்றழைக்கப்படுகின்றன. இந்த நவீன உலகில் கணினியின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் அதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்க இந்த நிரல்கள் என்று சொல்லக்கூடிய கட்டளைத்தொகுதிகளை பயன்படுத்தி, பல பயன்பாடுகளை செய்யக்கூடிய கட்டளைகளை உருவாக்கி, பிறகு அதனை நிலைவட்டில் சேமித்து இயக்கப்படுகின்றது. இதனையே நாம் இயக்கமுறைமை (operating system) என்று கூறுகிறோம். இந்த இயக்கமுறைமையானது கணினி புரிந்துகொள்ளும் விதத்தில் பயனர் இடக்கூடிய கட்டளைகளை இயந்திர மொழியாக மாற்றி கொடுக்கின்றது. இவ்வாறு கணினியானது மிக நுட்பமாக தனது பணியை செய்கின்றது.

கணினி வகைகள்

கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் தயாரிக்கபப்டுகின்றன.

மீத்திறன் கணினி
பெருங்கணினி
நடுத்தர கணினிகள்
மிகச்சிறிய/தனிநபர் கணினி
மீக்கணினிகள்[தொகு]
இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நுண்செயலிகளைக் (microprocessors) கொண்ட, மிகமிகச் சிக்கலான கணக்குகளைச் செய்யும் மிகப் பெரிய கணினிகள் ஆகும்.

கணினி
தொடரிசை
எணினி
இருபிறப்பி
மீக்கணினிகள்
பெருங்கணினி
நடுத்தர கணினிகள்
தனிநபர் கணினி
நடுத்தர கணினிகள்[தொகு]
இந்தக் கணினிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை மட்டும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை.

மிகச்சிறிய/தனிநபர் கணினி

ஒரே சமயத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவை பல்வேறு பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

வகைகள்

மேசைக் கணினி
மடிக்கணினி
கையடக்கக் கணினி
கைக்கணினி

நன்றி ; விக்கிபீடியா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:12

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்.
ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில், இரண்டு போட்டோக்கள் கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:14

விண்டோஸ் 10 தரும் கூடுதல் பாதுகாப்பு வளையங்கள்
-------------------
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இதன் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து பாராட்டி வருகின்றனர். இதற்காகவே, நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர், இதனைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிஸ்டத்தில், பாதுகாப்பு தரும் ஐந்து வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.


ஒருங்கிணைந்த பல அடுக்கு இசைவு: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பயனாளர்கள் தங்கள் டேட்டாவினைப் பல அடுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு வளையத்திலும், இசைவான நிலை ஏற்பட்டாலே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர் டேட்டாவினை அணுக முடியும். முதலாவதாக, பயோமெட்ரிக் வழியில் பாதுகாப்பு. பயனாளர்கள், பாஸ்வேர்ட் போன்ற, சிலரால் அறிந்து கொள்ள இயலும் வழிகளுக்குப் பதிலாக, பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தலாம். விரல் ரேகை ஸ்கேன் செய்து அமைத்தல், விழி ரேகை அறிந்து வழி விடல் போன்ற வசதிகளைப் பயன்படுத்த, விண்டோஸ் 10 செயலிகளைக் கொண்டுள்ளது. Fast Identity Online Alliance என்னும் பன்னாட்டளவிலான வரையறை கொண்ட செயல்முறையை, விண்டோஸ் 10 சப்போர்ட் செய்கிறது. பயனாளர்கள், இவற்றிற்கான ஹார்ட் வேர் சாதனங்களைப் பெற்றுப் பயன் படுத்த வேண்டும். எனவே, தனி நபர் பயன்பாட்டினைக் காட்டிலும், நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் இதனை மேற்கொள்ளலாம்.

சுருக்கப்பட்ட தொகுதிகள்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெரும்பாலான பயனாளர்கள், தனிநபர் பயன்பாட்டிற்கும், தங்களின் தனிப்பட்ட அலுவல் சார்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிந்து வைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய Enterprise Data Protection தொழில் நுட்பம், மிக ரகசிய டேட்டாவினை, அதனைச் சுருக்கி அமைக்கும் தொகுதிகள் (encrypted containers) மூலம் பாதுகாக்கிறது. இது buffer எனப்படும் இடைத்தேக்ககமாகச் செயல்படுகிறது. அதே கம்ப்யூட்டரில் செயல்படும் மற்ற செயலிகளின் செயல்பாட்டிலிருந்து டேட்டா பாதுகாக்கப்படுகிறது. டேட்டாவினை நிர்வகிப்பவர்கள், ஒவ்வொரு வகை டேட்டாவிற்கும், சர்வர்களின் பெயர், மற்றும் நெட்வொர்க் பெயர்களை அமைத்து, மற்ற தனிநபர் செயல்பாட்டிலிருந்து இவற்றைக் காப்பாற்றலாம். இத்தகைய இடைத்தேக்ககத்திற்குச் செல்ல வேண்டிய டேட்டாவினை வகைப்படுத்திப் பெயர் இட்டுவிட்டால், அவை தானாக, சுருக்கப்பட்டு, இந்த தேக்ககங்களுக்குச் சென்றுவிடும். பின்னர், தகுந்த உரிமை பெற்றவர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தேக்ககத்திலிருந்து, குறிப்பிட்ட டேட்டா விரிக்கப்பட்டு தரப்படும். 

வலைப் பின்னல்களுக்குத் தனி அடையாளம்: இன்றைய அளவில், பல நிறுவனங்கள், Virtual private networks எனப்படும் தன்னளவிலான மெய்நிகர் வலைப்பின்னலைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இவற்றில் பல பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதை, இதன் நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர்.
இந்த வலைப் பின்னலைப் பயன்படுத்துபவர்கள், மால்வேர் மற்றும் தேவையற்ற செயலிகளை, நிர்வாக அலுவலகத்தின் இத்தகைய வலைப்பின்னல்களில் இணைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எப்போதும் உள்ளது. விண்டோஸ் 10ல் இதற்கான பாதுகாப்பு வளையம் தரப்பட்டுள்ளது. மெய்நிகர் வலைப்பின்னலை நிர்வகிப்பவர்கள், பயனாளர்கள் தொடர்பு கொள்கையில், அவர்களைக் குறிப்பிட்ட போர்ட் மற்றும் ஐ.பி. முகவரிகளுக்குள் மட்டும் அனுமதிக்க விண் 10 அனுமதிக்க வழி வகைகளைத் தருகிறது.
தனித் தொகுதிகளாக நம் செயலிகள்: விண்டோஸ் 10 சிஸ்டம், செயலிகளைத் தனிமைப் படுத்தி வைப்பதில் (application whitelisting) மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தருகிறது. அலுவலக நிர்வாகிகள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற செயலிகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொள்ளலாம். அல்லது, விண்டோஸ் ஸ்டோரில், தங்களுக்கென ஒரு பகுதியை அமைத்து, அதில் தங்களுக்கான செயலிகளை ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான எட்ஜ் பிரவுசர்: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்படும் ‘எட்ஜ்’ பிரவுசரைப் பயன்படுத்துவது பல செயல்பாடுகளுக்கு அனுகூலமாக உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. அதன் இடத்தில், மாறா நிலையில், புதிய பிரவுசரை Edge என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் செயல்பாடு இதுவரை பயன்படுத்தப்படாத தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல புதிய பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த பிரவுசரில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ActiveX தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால், இந்த தொழில் நுட்பப் பயன்பாட்டினால் தான், பல ஹேக்கர்களுக்கு வழி தந்த பிழையான குறியீடுகள் ஏற்பட்டன என்று மைக்ரோசாப்ட் கண்டறிந்துள்ளது. எட்ஜ் பிரவுசர் sandbox தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இது இணைய தளங்களைத் தனித் தொகுதியாகக் கொண்டு சென்று சோதனை செய்கிறது. இதனால், ரகசிய டேட்டாவினை இவை அணுக இயலாது. 

இறுதியாக நமக்கு அளிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த sandbox தொழில் நுட்ப பயன்பாடு, பயனாளர்கள் விருப்பப்பட்டால் பயன்படுத்திப் பார்க்கும் வகையில் தரப்பட்டது. ஆனால், எட்ஜ் பிரவுசரில் அது மாறா நிலையில் தரப்படுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:18

விண்டோஸ் 10 பதிய மூன்று வழிகள்
----------------
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும், பல பயனாளர்கள், இந்த சிஸ்டத்தினை எப்படி தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்று தயங்கியபடியே உள்ளனர். முதன் முதலாக, (விண்டோஸ் 7 மற்றும் 8.1 கொண்டுள்ளவர்களுக்கு) இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் இதுதான். அது மட்டுமின்றி, முதன் முதலாக, இணையம் வழியாக வழங்கப்பட்டதுவும் இதுவே.


இலவசமாகக் கிடைத்திடும் இந்த சிஸ்டத்தினை எப்படி இன்ஸ்டால் செய்வது எனப் பல வழிகளை, தகவல் தொழில் நுட்ப பத்திரிகைகள் தந்து வருகின்றன. இணைய தளங்களிலும், சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. எதனைப் பின்பற்றுவது என்ற குழப்பமும், எதனைப் பின்பற்றினால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும் என்ற அச்சமும் பயனாளர்களிடையே உள்ளது. இங்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிந்துரை செய்த மூன்று வழிகளைக் காணலாம்.
இவற்றில், முதல் வழி, நேரடியாக இன்ஸ்டால் செய்திடும் வழி. ஆனால், சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் பரிந்துரை செய்துள்ள வழியை மேற்கொள்ளலாம் என்று எண்ணினால், இரண்டாவது வழிமுறையை மேற்கொள்ளவும். இது சற்று விரைவாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடும். ஆனால், உங்களைச் சற்று வேலை வாங்கும்.
ஒரு முக்கிய தகவலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது 8/8.1 இருப்பின், அதற்கான உரிமத்தினை, இன்னொரு கம்ப்யூட்டருக்கும் மாற்றிக் கொள்ளலாம். இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்றி, விண்டோஸ் 7 அல்லது 8/8.1 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம். பின்னர், கீழே தரப்பட்டுள்ள வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ள இலவச அப்கிரேட் திட்டம், 29 ஜூலை 2016ல் காலாவதியான பின்னர், இந்த வழியை நீங்கள் மேற்கொள்ள இயலாது. நீங்கள், ஒருமுறை அப்கிரேட் செய்து கொண்டால், உங்களுக்குப் புதிய உரிமம் வழங்கப்படும். அதில் உங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் நீங்கள் எந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் மற்றும் மேற்கொள்ள இயலாது என்ற வரையறைகளும் தரப்படும். 

விண்டோஸ் முன்பதிவு வழிமுறை:
1.1) விண்டோஸ் 10 சிஸ்டம் இன்ஸ்டால் செய்வதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இருப்பினும், ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என, எதனை இன்ஸ்டால் செய்வதாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பேக் அப் காப்பி எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், இன்ஸ்டலேஷன் செயல்பாட்டில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உங்கள் அனைத்து பைல்களுக்கும், உங்களிடம் பேக் அப் காப்பி இருக்கும். 

1.2) விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 அல்லது 8.1 சிஸ்டத்திற்கான அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டரில், Control Panel\All Control Panel Items\Windows Update எனச் செல்லவும். விண் 8.1 எனில், Control Panel\System and Security\Windows Update என்று செல்லவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ்களில், தரப்படும் ஆப்ஷன்களை உணர்ந்து, கிடைக்கக் கூடிய அனைத்து அப்டேட் பைல்களையும் இன்ஸ்டால் செய்திடவும்.

1.3) இந்த அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் சிஸ்டம் ட்ரேயில், சிறிய விண்டோஸ் ஐகான் இருப்பதைக் காணலாம். உங்கள் கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்று இயக்க முடியுமா என்பது சோதனை செய்யப்பட்டு, உங்களுக்கான விண்டோஸ் 10 சிஸ்டம் காப்பி முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிப்பு கிடைக்கும். உங்கள் முன்பதிவு, பன்னாட்டளவில் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும்.

1.4) உங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட விண்டோஸ் காப்பி தயாராக இருந்தால், ஒரு சிறு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை டவுண்லோட் செய்திடும்படி செய்தி கிடைக்கும். இதனை ஏற்றுக் கொண்டால், உங்களுடைய பதிவு, வரிசையில் வைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் பதிவுக்கேற்ற வகையில், இன்ஸ்டாலர் பைலின் அளவு மாறுபட்டிருக்கும். எப்படியும், ஏறத்தாழ 2.5 ஜி.பி. அளவில் இருக்கும். 

1.5) இன்ஸ்டாலர் பைல் டவுண்லோட் செய்யப்பட்டவுடன், இன்னொரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில், இன்ஸ்டலேஷன் செயல்பாட்டைத் தொடங்கலாமா! என்ற இறுதி தகவல் தரப்படும். இப்போது இன்ஸ்டால் செய்திடலாமா? அல்லது பின்னொரு நாளில் மேற்கொள்ளலாமா? என்று ஆப்ஷன் தரப்படும். இன்ஸ்டால் செய்வது அதிக நேரம் எடுக்கும் செயல் என்பதால், உங்களுக்கு அந்த அளவிற்கு நேரமும், உங்களுக்குப் பொறுமையும் உள்ள நாளை, இன்ஸ்டலேஷனுக்கு என ஒதுக்கி வைக்கவும். அந்த நாளில், இந்த விண்டோவில் தரப்படும் தகவல்களைப் பின்பற்றி, இன்ஸ்டலேஷனைத் தொடங்கவும். சற்று நீண்ட நேர செயல்பாடு என்றாலும், அதனை மேற்கொள்வது நல்லதும், பயன் தருவதுமாகும். 

விண்டோஸ் 10 சிஸ்டம் மீடியா டூல் உருவாக்குதல்:

2.1. முதலில், உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் இன்ஸ்டலேஷன் பைல்களை பேக் அப் செய்திடவும். 
2.2. தற்போது கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அனைத்து அப்டேட் பைல்களையும், இன்ஸ்டால் செய்திடவும். 
2.3. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டம் 32 பிட் இயக்கமா அல்லது 64 பிட் இயக்கமா என்பதனைக் கண்டறியவும். 

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டரில், Control Panel\All Control Panel Items\System எனச் சென்று காணலாம். விண்டோஸ் 8.1ல், Control Panel\System and Security\System எனச் சென்று காணலாம். 

2.4. அடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் http://www.microsoft.com/en-gb/software-download/windows10 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து, மீடியா கிரியேஷன் டூல் என்பதனை டவுண்லோட் செய்திடவும். இங்கு கிடைக்கும் பைல், விண்டோஸ் இன்ஸ்டலேஷன் டி.வி.டி. அல்லது யு.எஸ்.பி. ஸ்டிக் தயார் செய்திடுவதற்கு என உருவாக்கப்பட்டிருந்தாலும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்வதற்கும் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டருக்கான, சரியான (32 பிட் / 64 பிட்) இன்ஸ்டலேஷன் பைலைத் தரவிறக்கம் செய்திடவும்.
2.5. இந்த டூல் தரவிறக்கம் செய்யப்பட்டவுடன், அதனை இயக்கவும். டவுண்லோட் செய்திடுவதற்கான வழிமுறைகள் தரப்பட்டால், அவற்றைப் பின்பற்றவும். பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடவும். இதுவும் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், ஏதேனும் அவசர வேலை இருப்பின், இதனை மேற்கொள்ள வேண்டாம். இடையே விட்டுச் செல்வது நல்லதல்ல; மேலும், நீங்கள் அருகில் இருந்து, சில முடிவுகளை எடுத்து, டயலாக் பாக்ஸ் வழியாகத் தெரிவிக்க வேண்டியதிருக்கும்.

முற்றிலுமான புதிய பதிவு:

3.1. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான ‘அப்கிரேட்’ வழியில், பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கான பழைய பைல்கள், செட்டிங் அமைப்புகள் மற்றும் புரோகிராம்கள், புதிய கம்ப்யூட்டருக்கென எடுத்துக் கொள்ளப்படும். இருந்தாலும், உங்களுடைய கம்ப்யூட்டரை, முற்றிலுமான புதிய பைல்களுடன் கூடிய விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். இதனையே, முற்றிலுமான புதிய பதிவு எனக் கூறுகிறோம். ஆனால், இது சற்று சிக்கலான வழியைக் கொண்டதாகும். இருப்பினும், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தரும் தேவையற்ற புரோகிராம்கள், கம்ப்யூட்டரில் பதியப்படுவதனைத் தடுக்கும். அதே போல, உங்கள் கம்ப்யூட்டரில், புதியதொரு, ஹார்ட் ட்ரைவ் இணைத்திருந்தால், இந்த இன்ஸ்டலேஷன் வழிமுறை, சிறந்ததாக இருக்கும். இதற்கு, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் உள்ள Reset செயல்பாடு சிறந்ததாக இருக்கும். இது, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்ட Reset செயல்முறை போலானது இல்லை. அந்த முறையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள் வழங்கிய அனைத்திற்கும், ஒரு ரெகவரி இமேஜ் தயார் செய்யப்படும். இது அவர்கள் வழங்கிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான இமேஜ் ஆக இருக்கும். இதன் மூலம், அவர்கள் வழங்கிய ட்ரைவர் பைல்கள் பாதுகாக்கப்பட்டு கிடைக்கும். ஆனால், இந்த வழியில், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய தேவையற்ற பைல்கள், புதிய சிஸ்டத்துடன் மாற்றப்படும். இதில் Superfish போன்ற நாம் வெறுக்கும் புரோகிராம்களும் வந்து சேரும். 

விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, மீண்டும் அதனை அமைக்க, தனியாக ரெகவரி இமேஜ் தேவைப்படாத நிலையினையே அமைத்துக் கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சிஸ்டத்தினை முழுமையாக அலசி ஆய்வு செய்து, தேவையான, அண்மைக் காலத்திய பைல்களை மட்டும் வைத்துக் கொள்கிறது. அதாவது, ஒருமுறை ரீசெட் செய்த பின்னர், நீங்கள் விண்டோஸ் அப்டேட் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதனாலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த முறை பற்றிக் கூறுகையில், “விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் சாதனங்கள் அனைத்தும், தொடக்கமான முதல் நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றில், விண்டோஸ் பைல்கள் மட்டுமே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

உங்களுடைய விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டரை ரீசெட் செய்திட எண்ணினால், Settings அப்ளிகேஷனைத் திறந்து, Update & security என்பதனைத் தேர்வு செய்திடவும். பின்னர் Recovery என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Reset this PC என்ற பிரிவின் கீழ், “Get started” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு “Remove everything” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது, உங்கள் பைல்கள் அனைத்தையும் நீக்கிவிடும். எனவே, உங்கள் பைல்கள் அனைத்திற்கும் பேக் அப் பைல்களை வைத்துக் கொள்ளவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 10:19

கவிப்புயல் இனியவன் wrote:கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம்
--------------------
உலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை விட பல மடங்கு, தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப தேவைகளும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தகவல் பரிமாற்றத்தின் அளவு 35 க்வின்ட்டில்லியன் பைட்சாக (Quintillion Bytes) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் வைஃபை  தொழில்நுட்பமான, மின்சாரப் பயன்பாடு உள்ள காலத்தில் தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சமமாகி விடும். அதனால் எதிர்கால தேவை கருதி ஆராய்ச்சியாளர்கள் லைஃபை (Lifi) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

வைஃபை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு அதிக திறன் கொண்ட இந்த லைஃபை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தால் நமது எதிர்கால இணைய வேகம் நமது தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனையில் முயற்சியில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் அடுத்த சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.


‘வயர்லஸ் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் தான் wifi. அதேபோல், ‘லைட் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் Lifi. எல்ஈடி (LED) விளக்குகள் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதே இதன் வியக்கத்தகு தொழில்நுட்பம். இணைய உலகை அடுத்த சில வருடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் தான் ஆள வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

தகவலைப் படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது  
எனக்கு ஒரு சந்தேகம் எழுதுகிறது எப்படியென்றால்
மனிதனின் ஆயுளும் வேகமாக குறைந்து விடும் போல் தோன்றுது எனக்கு
எனிவே சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி இனியவரே தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:23

கன மழை… கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!
By ; vayal 

1. மழையால் ஏடிஎம் மையங்கள் கூட்டமாகவும், சில சமயங்களில் வங்கிகளால் சேவை செய்ய முடியாமலும் இருக்கும். முன்னெச்சரிக்கையாக குறிப்பிட்ட அளவு தொகையை பணமாக மாற்றி கையில் வைத்துக்கொள்ளுங்கள். டெபிட் கார்டு இருக்கிறதே என்ற அலட்சியமும் வேண்டாம். மழையால் நெட்வொர்க் இயங்காமல் போனால் அதன் மூலம் பொருட்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்படலாம்.


2. மழையால் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விற்கும் சூழ்நிலை நிலவுகிறது. சில இடங்களில் பணம் கொடுக்கத் தயார் என்றாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. அதனால் அருகில் உள்ள இடங்களில் சில நாட்கள் வைத்து   பயன்படுத்துகிற  மாதிரி   உணவுப் பொருட்களை வாங்கி  வீட்டில்   சேமித்து  வைத்து கொள்ளுங்கள். மழை நீரினால் வீடு சூழப்பட்டாலும் அந்த உணவுப் பொருட்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். தண்ணீர் மற்றும் பாலுக்கான மாற்றுப் பொருள் ஆகியவற்றை போதிய அளவு வாங்கி  வைத்துக்கொள்வது.

3. கன மழை காரணமாக  பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போட முடியாத நிலை    ஏற்பட்டிருக்கிறது. இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி அலுவலகத்துக்கு சென்று வருகிறவர்கள், தங்கள் வண்டியில் அதிகபட்சமாக எவ்வளவு பெட்ரோலை நிரப்பிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு நிரப்பிக்கொள்வது அவசியம்.

4. போக்குவரத்து நிலவரங்களை அறிந்து உங்கள் இருப்பிடங்களில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள். பாதி வழியில் மாட்டிக்கொண்டால் நீங்கள் வீடு திரும்புவது கடினமாகிவிடும். ரயில்கள் மற்றும் விமானங்கள் வழக்கம்போல இயங்குகிறதா அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என்பதை எல்லாம் சரியாக பார்த்து பின் பயணத்தை துவங்குவது நல்லது.

5. சரியான ஹெல்ப் லைன் எண்களை மட்டும் பகிருங்கள். வதந்திகளை பரப்பி உண்மையாலுமே உதவுபவரையும் தவறாக நினைக்க வைத்துவிடாதீர்கள். சமூக இணையதளங்களில் உங்களுக்கு வரும் தகவலை உறுதி செய்தபின்னர் பகிருங்கள். அதுமட்டுமின்றி தவறான கணிப்புகள் வதந்திகள் ஆகியவற்றை தேவையில்லாமல் பரப்பாதீர்கள்.

6. உங்கள் செல்போன்களில் போதிய அளவு பேட்டரி திறனை வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பயந்து பலருக்கு போன் செய்து பேட்டரியை தீர்த்துவிடாதீர்கள். யாராவது ஒருவரை தொடர்புகொள்ள பேட்டரி அவசியம். மின்சாரம் இல்லாமல் தவிப்பதால், பேட்டரியை தீர்க்காமல் கூடியமட்டும்் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். லேப்டாப் போன்ற உபகரணங்களில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். அலுவலகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் உங்கள் செல்போன், கணினிகளை சார்ஜ் செய்ய முடியுமோ, அங்கு சென்று பேட்டரி திறனை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 10:24

உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்… எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
By vayal on 15/12/2015
 
கணணி தொடர்பான தகவல்கள் El%20nino%20leftt[size=16]சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino)  என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்…

1.  ‘எல் நினோ’ என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. ‘குட்டிப் பையன் அல்லது சிறுவன்’ என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக ‘குழந்தை ஏசு’ என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே ‘எல் நினோ.’

2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும், ‘எல் நினோ தெற்கத்திய அலைவு’ (El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக அழைக்கப்படுவதே சரியானது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின் காரணமாகவே ‘எல் நினோ தெற்கத்திய அலைவு’ என்று அழைக்கப்படுகிறது.3.
 இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது. வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. இதேபோல  எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட  பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்றமடைகிறது.


4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடைவதையும் கவனித்தே வந்தனர்.
[/size]
கணணி தொடர்பான தகவல்கள் El%20nino%20leftt%20600%201
[size]
5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த ‘சர் கில்பர்ட் வாக்கர்’. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சியில்,  தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வுகளையே ‘எல் நினோ தெற்கு அலைவு’ என்று அழைத்தார்.

கணணி தொடர்பான தகவல்கள் El%20nino%20leftt%20gilbert6.
 எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லி யமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது.


சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு  வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால் மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு  ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும்,  உலகம் முழுவதும் ஏற்பட்ட  2000க்கும் மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால் சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் ‘ஜெட் காற்றோட்டங்கள்’ இக்காலப் பகுதியில் பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.
[/size]
கணணி தொடர்பான தகவல்கள் El%20nino%20leftt%20600%20pacific
[size]
எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

10
. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ‘ சிறுமி’ என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.


பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும். ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.

Share this:

[/size]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கணணி தொடர்பான தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum