சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Khan11

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

3 posters

Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 21:27

படித்ததில் மிக பிடித்தது ......
{ படித்த போதே என்னை கண்கலங்க வைத்த
அழகிய குட்டி சம்பவங்கள் ........ படிக்கும் போது
பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட
வைக்கும் .}

சம்பவம்-1
----------------
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 21:34

சம்பவம்-2
----------------
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவறக்கூடாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 22:11

சம்பவம்-3
----------------
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்த தாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 22:16

சம்பவம்-4
----------------
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு
பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ
ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்
கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்
டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த
காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ
காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்
கலங்கினார். தோளில் கிடந்த துண்டை
எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்
கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க
பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச்
சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது
என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை
விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்
என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக
இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே
பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய
அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும்
இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி
அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம்
அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி
காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்
சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய
சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்
மகனை கீழே கிடத்தி , தலையிலையும்
நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி
அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன
காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில், இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்
பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்
புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு
தெரியாமல் இறந்து போன தன் மகனை
மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த
அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 22:18

சம்பவம்-5
----------------
இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த
பொம்மை வாங்குவதற்கு தேவையான
பணம் இல்லை என்று சொன்னார். அந்த
சிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும்
பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்
குறைவாக உள்ளது என்றார். அந்த
சிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான். மேலும் அவன்
பேச தொடர்ந்தபோது என் இதயம்
நின்று விட்டது போல் உணர்தேன். அவன்
கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,
நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன்
கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.
நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Fri 18 Dec 2015 - 22:22

சம்பவம்-6
----------------
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி
சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை
தட்டினால். ஜன்னலின் கண்ணாடி
திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன்
கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த
சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி
சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு
கைக்குழந்தையுடன் ஒரு பெண்
அமர்திருந்தாள்.
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்?
என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும்
கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ?
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க
ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை
கொடுத்துறாதீங்க அய்யா.
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன
நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும்
பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்

அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்
நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்.
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு
பெண்.
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன
அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த
சிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்
என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு
நிறுத்துங்கள் .


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:37

மிகவும் அதிர்ச்சியான அறிவுரை தான் அந்த ஆளுக்கு கிடைத்து.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:40

அந்த சிறுவன் அம்மா தங்கை பாசம் கண்கலங்க வைத்துவிட்டது தம்பி :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:43

மகனை மயானம் வரை சுமந்த அந்த தந்தையின் துயரம் அழவைக்கிறது :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:46

குதிரையை ஊக்கப்படுத்திய ஆடு பிரியாணி ஆயிடுச்சே ஹய்யோ பாவம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:49

முதல் இரண்டு கதைகளும் அருமை.
பிறவிக்குருடு சரியாகி அழகை ரசிப்பது
ஆப்பிளை அம்மாவுக்காக கடித்து கொடுப்பபது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Sun 20 Dec 2015 - 19:52

படித்ததற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by சுறா Sun 20 Dec 2015 - 19:55

அணைத்தும் மிக மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Sun 20 Dec 2015 - 20:01

சுறா wrote:அணைத்தும் மிக மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி
நானும் படித்ததும் கண் கலங்கி விட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by Nisha Sun 20 Dec 2015 - 20:32

இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

 நிஜம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by Nisha Sun 20 Dec 2015 - 20:33


உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..

அனைத்து கதையும் ஏதோ ஒரு வாழ்க்கைப்பாடம் சொல்லி செல்கின்றது. பகிர்வுக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by நண்பன் Sun 20 Dec 2015 - 20:37

உண்மைதான் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!! Empty Re: இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum