சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Khan11

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

4 posters

Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Fri 18 Dec 2015 - 21:32

சென்ற வாரம் முழுவதும் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக அலுவலகப் பணி. அதுவும் கணிப்பொறியோடு கட்டிப் புரள வேண்டும் என்பதால் கண்கள் எல்லாம் வலி.  இவ்வளவுக்கும் காரணம் எனக்கு மேல் இருக்கும் அந்த எகிப்துக்காரனின் ஈகோவும் வேலை செய்யாமல் உட்கார்ந்து பொழுதை ஓட்டும் செயலும்தான்... அவனைத் தவறாகச் சொல்ல எண்ணமில்லை இருந்தும் இதற்கான காரணி அவனே என்னும் போது கோபம் கொப்பளிப்பதை தவிர்க்க முடியவில்லை. 

இந்த எட்டாண்டு காலத்தில் எத்தனையோ அரசு நிறுவனங்களில் நாங்கள் பணி செய்திருக்கிறோம். எனக்கு மேலே முதலில் ஒரு ஆர்மேனியன் அதன் பின்னர் லெபனானிகள் இருந்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போ கம்பெனியில் பெரும்பாலான பதவிகளில் எகிப்துக்காரர்கள் வந்து அமர்ந்துவிட எல்லாப் பக்கமும் பிரச்சினைதான். எங்க குழுவில் நாங்க நாலு பேர் ஒரு பாகிஸ்தானி, ரெண்டு மலையாளி மற்றும் நான். எனக்கு மேலே இந்த வேலை பார்க்காமல் 'டூ மச் ஓர்க்' என்ற வசன உச்சரிப்போடு அமர்ந்திருக்கும் எகிப்துக்காரன். நம்ம பாகிஸ்தானி சொல்லவே வேண்டாம்... நாம சரியான நேரத்துக்கு கிளம்பின அரைமணி நேரம் இருந்து செய்துட்டுப் போறேன்னு சொல்லுவான். அவனுக்கு நல்ல பேர் வேண்டும் அதுக்காக இரவு 10 மணி வரைகூட அமர்ந்திருப்பான். ஆனா பெரும்பாலும் கொடுக்கும் வேலை எல்லாம் கடினம் என்று சொல்லியே வேலை பார்க்காமல் நேரத்தை ஓட்டுவான். காலையிலும் அரைமணி நேரம் தாமதமாகத்தான் வருவான்.

அப்புறம் நம்ம மலையாளியில் ஒருவன் நல்லவன்... நமக்கிட்ட வீர வசனம் பேசுவான்... ஆனா 'அங்க என்னம்மா சத்தம்?' என்று கேட்டதும் 'சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் மாமா'ன்னு வடிவேலு சொல்வாரே அந்தக் கதைதான். எகிப்துக்காரன் இன்னைக்கு இதை முடிக்கணும் அதுவரைக்கும் இடத்தை விட்டு எந்திரிக்க கூடாதுன்னா பாத்ரூம், சாப்பாடு எல்லாம் மறந்து வேலை பார்ப்பான். மற்றொரு மலையாளியோ கேட்க வேண்டியதற்கு கேள்வி கேட்பான். ஆனா இண்டர்நெட்டை ஷேர் பண்ணுறது, கை பிடித்து விடுறது, கழுத்தை அழுத்தி விடுறதுன்னு மத்த வேலை எல்லாம் செய்து நல்லபேர்(?) வாங்கி வைத்திருப்பான். அதுபோக வேலையையும் விரைந்து முடிப்பான். நாங்க அதை மறுபடியும் சரி செய்யணும். ஆனா இவனைத்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

என்னைப் பொறுத்தவரை பார்க்கும் வேலையில் முடிந்தளவு சரியாக, குறைகள் இல்லாது செய்ய வேண்டும். என்ன வேலை பார்க்கிறே என்றெல்லாம் கேள்விகள் நம்மை நோக்கி வரக்கூடாது. யாராவது தப்பாச் சொல்லிட்டா கோபம் அதிகமாக வரும். அவனுக்கிட்ட திருப்பிக் கேட்டாத்தான் அந்தக் கோபம் அடங்கும். அதனால் என்னோட வேலை... எனக்கான நேரம்... இதில் எப்பவும் சரியாக இருப்பேன். எந்த வேலை என்றாலும் அதை தனியாக பார்க்க வேண்டும் என்றால் என்னைத்தான் அனுப்புவானுங்க... 

கொஞ்ச நாள் முன்னால இதே பணிக்காக பக்கத்தில் இருக்கும் அரசு அலுவலகத்துக்கு (TRANSCO) சென்ற போது என்னோட வேலை தவிர்த்து மற்றொரு வேலையையும் சேர்த்து செய்யச் சொன்ன போது உங்காளுங்க என்ன பண்றாங்க... என்னால முடியாதுன்னு சொன்னதும் அங்கிருந்த மேலதிகாரியான அரபிப் பெண் எனக்கு வேலை தெரியவில்லை என்றும் அனுசரித்துச் செல்ல மாட்டேங்கிறான்... கோபப்படுறான் என்றும் நீளமான மின்னஞ்சல் எங்க கம்பெனி மற்றும் நாங்கள் இப்போ பணி செய்யும் ADWEA அலுவலகத்தின் எங்கள் துறை சம்பந்தமான மேலதிகாரிக்கும் அனுப்பிட்டாங்க. எங்காளு எங்கிட்ட காட்டி இதுக்கு சரியான பதிலை நம்ம இஞ்சினியர் அனுப்பிட்டான்னு சொன்னான். நான் ஒன்றும்  சொல்லலை... ஆனா ADWEA மேலதிகாரியான பெண்ணுக்கு நான் ADWEA, ADDC, AADC, ADM என எல்லா இடத்திலும் கடந்த நான்கு வருடமாக மாறி மாறி பணி செய்வது தெரியுமென்பதால் 'குமார் சரியாக வேலை செய்யவில்லை என்று நீ சொல்வதை ஏற்க முடியாது. அவருக்குத் தேவையானதை கொடுத்திருந்தால் சொன்ன தேதிக்கு முன்னதாக முடித்துக் கொடுத்திருப்பார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும்' என மின்னஞ்சல் அனுப்பி எங்க கம்பெனிக்கும் CC போட்டுவிட்டார். அதையும் பார்த்தேன்... இந்தப் பெயர்தான் நம்மை வாழவைக்கிறது.

சரி பேசின விசயத்துக்கு வருவோம் ADWEAவில் ஒவ்வொரு வேலை ஆரம்பிக்கும் போதும் எகிப்துக்காரனிடம் இது சரிதானா...? இதில் இன்ன பிரச்சினை இருக்கு..? இப்படிச் செய்தால் சரிவருமா...? என்றெல்லாம் கேட்டு அவனுக்கு மேலிருப்பனிடம் ஒருமுறை சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளச் சொல்வேன். அது அவருக்கு ஈகோ பிரச்சினை... இப்படித்தான் போனவாரம் எங்களைப் படுத்திய கூடுதல் சுமை வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 80% வேலை முடித்து விட்டோம். முதல் நாளே அவனிடம் இன்னைக்கு நாம பண்ணியிருக்கிறது சரிதானான்னு பாரு... மேல இருக்கவனிடம் கேட்டுச் சொல்லு என்றேன். உடனே 'நான் சொல்றேன்... நீ செய்யி' என்றான்... இங்கே அவனின் நான் என்ற அகங்காரம் முன் நிற்க, நாங்கள் அவன் சொன்னபடி செய்தாச்சு. ஒருநாள் அவனுக்கு மேல இருக்கவன் வந்து பார்த்துட்டு அவனைப் பிடித்து திட்டி தீர்த்துட்டான். அவன் போகும் வரை ஒன்றும் பேசாதிருந்துவிட்டு போனதும் திரும்ப செய்யுங்கள் என்றான். எனக்கு எப்பவுமே நேராகத்தான் பேசப் பிடிக்கும் முன்னாடி விட்டு பின்னாடி பேசுறது அறவே பிடிக்காது. என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கே... அன்னைக்கே சொன்னேனுல்லன்னு அவனைப் பிடித்து கட்டி ஏறிட்டேன். 

அதன்பின் என்னிடம் பேசாமல் இருந்தவன் மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது மலையாளியிடம் சொல்லி குமாரிடம் எனக்காக அதிக நேரம் எடுத்து முடிச்சிக் கொடுக்கச் சொல்லு நான் சொன்னா திட்டுவான்னு சொல்லியிருக்கான். ஏன்னா எங்களுக்கு கூடுதல் பணிக்கான எந்த சலுகையும் அலுவலகத்தில் கொடுப்பதில்லை. எனவே என்னிடம் சொல்லவந்தால் ஏதாவது பேசிவிடுவேன் என்ற பயம் அவனுக்கு. ஆனால் மலையாளியோ நான் போயிச் சொன்னா நீ என்ன மேனேஜரான்னு என்னைத் திட்டுவான்னு சொல்லி நீயே மெதுவாச் சொல்லு என்று சொல்ல, தயங்கித் தயங்கி ஆரம்பித்தான். சரி தொலைஞ்சிட்டுப் போறான்னு போன சனிக்கிழமை மதியம் ரெண்டு மணி வரைக்கும் வந்து பார்த்துத் தாறேன்னு சொல்ல, மற்றவர்கள் வாறேன்னு சொன்னாங்க. 

அதன்படி வேலைக்குச் சென்றோம். அன்று அரசு அலுவலகங்கள் விடுமுறை.... தண்ணீர், டீ என எதுவும் இருக்காது... கிச்சனை பூட்டிவிடுவார்கள். அப்படியும் 8 மணிமுதல் 3 மணி வரை பார்த்து மூணு மணிக்கு கிளம்ப (நான் சீட்டை விட்டு எழுந்தால்தான் மற்றவர்கள் எழுவார்கள்) உடனே இன்று ஆறு மணி வரை பார்க்கணும் என்றான். (அவன் வந்ததோ 1 மணிக்கு). நான் சொன்னது 2 மணி வரை... இப்ப மணி மூணு... காலையிலும் சாப்பிடலை... இப்பவும் இன்னும் சாப்பிடலை... இனி முடியாது என்று வந்துவிட, பக்கத்து வீட்டுகாரன் பொதுச்சுவத்துக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி உக்கார்ந்து முணங்கிக் கொண்டிருந்தான். இந்த வார ஞாயிறன்று என்னிடம் எதுவும் பேசவில்லை. இவ்வளவுக்கும் நானும் அவனும் அருகருகேதான் அமர்ந்திருப்போம். போடா இவனேன்னு நான் பாட்டுக்கு வேலை பார்த்தேன். இருக்கவே இருக்கு நம்ம ராசாவோட பாடல்கள்... காதுகளில் ஆனந்தராகமாய் இறங்கி மனசில் சங்கமிச்சி வாய் வழியாக மெதுவாக வழிந்து கொண்டிருக்க என்னோட வேலை அதுபாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கும். தினமும் எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு எல்லாரிடமும் கேட்பான்... என்னிடம் எதுவும் கேட்பதில்லை.

யாரை மிரட்ட வேண்டும் என்றாலும் நான் பாத்ரூம் பக்கம் போகட்டும் என்று காத்திருப்பான். நான் அங்கிட்டு போனதும் இவரோட மிரட்டலை ஆரம்பிப்பார். வந்ததும் சொல்வானுங்க... நமக்கு கோபம் தலைக்கேறும்... இப்பல்லாம் குமார் நீ எதுக்குடா கோபப்படுறேன்னு அடக்கி வச்சாலும் அப்ப அப்ப வெடிச்சிடும். தினமும் காலை 8 முதல் இரவு 7, 7.30, 8 என வேலை பார்க்க, வேலையில் வேகம் இல்லை அப்படின்னு சொன்னான். இது யாரால வந்த பிரச்சினையின்னு உனக்குத் தெரியும்ல்ல... என்ன வேகமில்லை.... நான் பாக்குறதை நீ பாத்துருவியா... சும்மா உக்காந்துக்கிட்டு எங்கிட்ட பேச வராதே... இனி எதாவது பேசினே நான் நம்ம இஞ்சினியர்கிட்ட நேர பேச வேண்டியிருக்கும் என்று நான் சொன்னதும் அவன் அதற்குப் பிறகு பேசவே இல்லை. 

நேற்று மற்றவர்களிடம் நீங்க வேலையை சரியான நேரத்தில் முடிச்சிக் கொடுக்காததால் உங்க சம்பள உயர்வு (வருடா வருடம் பொருளாதார இறக்கநிலையை காரணம் காட்டி சம்பளத்தை உயர்த்துவதில்லை) குறித்த பேப்பர்ல உங்களைப் பற்றி நல்லா எழுதமுடியாதுன்னு எனக்கு மேல உள்ளவன் சொல்லிட்டான்னு மிரட்டியிருக்கான். வேலையும் பார்க்க மாட்டான்... தெரியலைன்னா கேக்கவும் மாட்டான்... பேச்சு மட்டும் இவனுகளுக்கு கடவுள் கொடுத்த வரம். ஒரு வாரமாக அவனிடம் பேசவில்லை... முகத்தை முகத்தைப் பார்ப்பான்... பாட்டுப் பாடுவான்... நேற்று பணி முடிந்து எழும்போது என்ன சீக்கிரம் எழுந்துட்டான் எனப் பார்த்தான்... இனி 8 முதல் 5.30 வரைதான்... அதுக்கு மேல உக்கார மாட்டேன் என்று சொல்லியபடி வெளியேறினேன். கோபத்தைக் குறைக்க நினைத்தாலும் சில விஷயங்கள் நம்மை கோபப்படவே வைக்கிறது.

***

கிராமத்தில் வீடு ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கலாம் என்றே ஆரம்பித்தோம். இப்போ அது என்னவோ தெரியலை... ரொம்ப வேகமாக போய்க் கொண்டிருக்கிறது... கையில் இருப்பு இல்லாத சூழலில் அதற்காக கடனை அங்கிட்டும் இங்கிட்டும் புரட்ட வேண்டிய நிலமை அதிகமாக இருந்தாலும் வேகமாகப் போவது நமக்கு நல்லது என்ற கிராமத்தினரின் வாக்கு பொய்க்காமல் நல்லதே நடக்கட்டும் என்ற நினைவோடு ஓடிக் கொண்டிருக்கிறோம். கடன் முன்னே நின்றாலும் நம்ம ஊரில் நமக்குன்னு ஒரு வீடு என்ற சந்தோஷத்திற்காகவே நாங்களும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம்... நாங்கள் என்பதை விட என் மனைவிதான் ஓடுகிறார் என்று சொல்லலாம். என்னைவிட என் மனைவிதான் ரொம்ப அலைகிறார் நான் பார்க்க வேண்டிய எல்லா வேலையும் அவர் ஒருவரே உதவிகள் மறுக்கப்பட உறவுகளுக்கு மத்தியில் குழந்தைகளோடு போராடி, பணத்துக்காக அலைந்து... தினமும் ஊருக்கு போய் வீட்டு வேலை பணிகளைப் பார்த்து... பொருட்கள் வாங்கிக் கொடுத்து... இப்படியாக பரபரப்பான சூழலில் தினமும் பயணிக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 
***

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் 14435487574797eeti

ட்டி படம் பார்க்கலாம் என்று ஆரம்பித்தபோது படம் ஜாலியாய் பயணிக்க, சரி இடைவேளை வரை பார்த்துவிட்டு படுக்கலாம், மீதத்தை நாளை பார்ப்போம் என்று நினைத்துப் பார்த்தால் இடைவேளை வரும்போது படம் வேகமெடுத்தது. அப்புறம் என்ன முழுப்படமும் பார்த்துத்தான் படுத்தேன். அதர்வா முரளி படத்துக்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொள்கிறார். இதில் ஒரு விளையாட்டு வீரனுக்காக உடல்கட்டுடன் கதாபாத்திரத்தின் உச்சம் தொட்டிருக்கிறார். ஸ்ரீதிவ்யா நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி... நல்லவே பண்ணியிருக்கு... கள்ள நோட்டுக் கும்பல், காயம் பட்டால் ரத்தம் நிற்காமல் வெளியேறும் வியாதி என படம் பயணித்து முடிவில் நம்மை பதற வைத்து நிறைவாய் முடிகிறது. அப்பாவாக ஜெயபிரகாஷூம் பயிற்சியாளராக நரேனும் வாழ்ந்திருக்கிறார்கள். பாடல்கள் அலுவலக நேரத்தில் கேட்டு ரசித்தவை என்பதால் மீண்டும் ரசிக்க வைத்தன. இயக்குநர் ரவி அரசு ஜெயித்திருக்கிறார். படம் மாரத்தானில் ஆரம்பித்து ஈட்டியாக பயணித்திருக்கிறது.
***

அலுவலகப் பணி, வீடு கட்டுவதற்கான பணப் போராட்டம் என மனம் ஒரு நிலையில் இல்லாததால்தான் மனசு பக்கம் அதிகம் எழுத வரவில்லை. இதனாலேயே 'கொலையாளி யார்?' கதையின் முடிவு எழுதப்படாமலே கிடக்கு, பலரின் பக்கங்கள் வாசிக்காமலே கிடக்கு. விரைவில் மீண்டு வருவேன் நட்புக்களே... அதுவரைக்கும் என்னடா இவன் பெரியாளாயிட்டானோ கருத்து இட வருவதில்லை என்று நினைக்காமல் எப்போதும் போல் உங்கள் அன்பைத் தொடருங்கள்... விரைவில் வருகிறேன்.

நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by Nisha Sat 19 Dec 2015 - 12:13

வீடு விடயம் சீக்கிரம் சரியாகிடட்டும் குமார். எந்த நல்ல காரியத்திலும் இம்மாதிரி தடைகள் வரத்தான் செய்யும். அப்போது தான் அதன் அருமை புரியும் என்பார்கள். வீட்டுக்கும் அப்படி தான் போல.. நித்யா பாவம் தான். 

அலுவலக அனுபவம் கண்ணை கட்டுது. நல்ல வேளை நான் அங்கே வேலைக்கு வரல்லை ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by பானுஷபானா Sat 19 Dec 2015 - 13:31

எல்லா ஆஃபிஸ்லயும் இப்படியெல்லாம் நடப்ப்பது சகஜம் தான் போல...

என் பையன் வேலை பார்க்கும் இடத்திலும் இப்படித் தான் ஒருத்தன் இருந்தான். ஒழுங்கா வேலை பார்க்காமல் சீட்டைத் தேய்ச்சிட்டு இருந்தான். கம்பெனியே அவனை வேலைய விட்டு தூக்கிடுச்சு.

அவன் இருக்கும்போது நடந்ததை என் பையன் சொன்னான். இவன் ஆஃபிஸ்ல இருந்து ஸ்டாக் வைப்பதற்காக மெட்டீரியல் ஆர்டர்மெயில் வந்திருக்கு. இவன் தான் அந்த மெட்டீரியல கொட்டேஷன் கேட்டு கம்மியா இருந்தா வாங்கி வைக்கனும். ஆனா இவன் 10 நாளாகியும் அதை செய்யவே இல்ல. என் பையன் அந்த மெயில பார்த்து இவன் செய்வானு எதிர்பார்த்துட்டு இருந்தான் அவன் கிட்ட சொல்லவும் செய்திருக்கான் அவன் அசால்ட்டா இருந்திட்டான். அதோட என் பையனே சில கம்பெனிக்கு கொட்டேஷன் கேட்டு கம்மியா இருக்குற கம்பெனில ஆர்டர் புக் பண்ணீ மெட்டீரியலும் ஆஃபிசுக்கு வந்திருச்சு. எப்போ ஆர்டர் பிளேஸ் பண்ணானு தெரியல அன்னைக்கே அந்த வீணாப் போனவன் ஆர்டர் செய்த மெட்டீரியலும் சேர்ந்து வந்திருக்கு. மெட்டீரியல் ரேட் என் பையன் வாங்கினது கம்மியா இருக்கு. அவன் வாங்கினது அதிகமா இருக்கு. உடனே மேனேஜர் பார்த்துட்டு அவன் புக் பண்ணீயதை ரிட்டர்ன் குடுத்திட்டாராம். உடனே இவன் நீ ஏன் ஆர்டர் குடுத்தனு கோவமா கேட்டிருக்கான். என் பையன் நீ அந்த வேலைய பார்க்காம இருந்தா நானும் தான் மேனேஜருக்கு பதில் சொல்லனும் அதான் வாங்கினேனு சொல்லி இருக்கான். அதிலிருந்து இவன்கிட்ட ஒழுங்காவே பேசமாட்டானாம். போடா ம.... நு இவனும் பேசாம இருந்திருக்கான் . அவன் மேல நிறைய கம்ளைண்ட் போய் வேலைய விட்டு தூக்கிட்டாங்க. இப்போ தான்மா நிம்மதியா இருக்கு இல்லனா இவன் மேனேஜர் கிட்டஎங்க எல்லார் பத்தியும் ஏதாச்சும் குறை சொல்லி போட்டு கொடுத்திட்டுருப்பானு சொன்னான்....

இந்த மாதிரி ஆட்களிடம் உஷாராவே இருங்க எப்போ காலை வாரி விடுவாங்கனு தெரியாது.

வீடு கட்டுவதற்கு வேலை பார்ப்பது லேசான காரியமா? பாவம் தான் உங்க மனைவி.

எனக்கும் எங்க சொந்த ஊர்ல வீடு இருக்கனும்னு ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியல ...பிள்ளைகளுக்கு கல்யாணமாகிட்டா ஊரோட செட்டிலாகனும்குறது ரொம்ப ஆசை...ஆண்டவன் அருள் புரியனும்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Sat 19 Dec 2015 - 18:12

நிறுவனத்தில் நீங்கள் பார்க்கும் ஊழியம் ஒரு நாளும் குறைந்தபாடில்லை போல் ஹா ஹா நாட்டுக்கு போகும் நாள் வரைக்கும் இதே சல சலப்பு தொடரும் நீங்கள்தான் மனதை மாற்றி இஸ்டப்பட வேண்டும் இஸ்டப்பட்டு கஸ்டப்பட வேண்டும் அப்போது எல்லாம் பளகி விடும்

வீடு கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள் நானும்தான் 3 றூம் கட்டுவதற்கு ஐந்து வருடம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று இன்னும் வேலைகள் முடிந்த பாடில்லை

கல கலப்பிலும் ஒரு கிலுகிலுப்பாக ஈட்டி படம் பார்த்துள்ளீர்கள் உங்களால் மட்டும் எப்படித்தான் இப்படி முடிகிறதோ தெரிய வில்லை ம்ம் அருமையாக செல்லட்டும் உங்கள் மன ஆறுதல் இப்போதைக்கு சினிமாப் படம் பார்ப்பதுதான் போல்!

தொடரட்டும் பணிகள்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Sat 19 Dec 2015 - 21:49

Nisha wrote:வீடு விடயம் சீக்கிரம் சரியாகிடட்டும் குமார். எந்த நல்ல காரியத்திலும் இம்மாதிரி தடைகள் வரத்தான் செய்யும். அப்போது தான் அதன் அருமை புரியும் என்பார்கள். வீட்டுக்கும் அப்படி தான் போல.. நித்யா பாவம் தான். 

அலுவலக அனுபவம் கண்ணை கட்டுது. நல்ல வேளை நான் அங்கே வேலைக்கு வரல்லை ஹாஹா!

வாங்க அக்கா...

வீட்டு அனுபவம் ரொம்பவே... நித்யா இடத்தில் நானாக இருந்தால் போங்கடான்னு போட்டுட்டு வந்திருப்பேன்.

அலுவலகத்தில் நானே ராசாதான் என்றாலும் தொடர் 11, 12 மணி நேரங்கள் வீட்டுக்கு வரும்போது சோர்வை மட்டுமே துணைக்கு அனுப்புகிறது... அலுப்போடு படுத்து அலுப்போடு எழுதல் என்பது வாங்கி வந்த வரம் போலும்...

கருத்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Sat 19 Dec 2015 - 21:56

பானுஷபானா wrote:எல்லா ஆஃபிஸ்லயும்  இப்படியெல்லாம் நடப்ப்பது சகஜம் தான் போல...

என் பையன் வேலை பார்க்கும் இடத்திலும் இப்படித் தான் ஒருத்தன் இருந்தான். ஒழுங்கா வேலை பார்க்காமல் சீட்டைத் தேய்ச்சிட்டு இருந்தான். கம்பெனியே அவனை வேலைய விட்டு தூக்கிடுச்சு.

அவன் இருக்கும்போது நடந்ததை என் பையன் சொன்னான். இவன் ஆஃபிஸ்ல இருந்து ஸ்டாக் வைப்பதற்காக மெட்டீரியல் ஆர்டர்மெயில் வந்திருக்கு. இவன் தான் அந்த மெட்டீரியல கொட்டேஷன் கேட்டு கம்மியா இருந்தா வாங்கி வைக்கனும். ஆனா இவன் 10 நாளாகியும் அதை செய்யவே இல்ல. என் பையன் அந்த மெயில பார்த்து இவன் செய்வானு எதிர்பார்த்துட்டு இருந்தான் அவன் கிட்ட சொல்லவும் செய்திருக்கான் அவன் அசால்ட்டா இருந்திட்டான். அதோட என் பையனே சில கம்பெனிக்கு கொட்டேஷன் கேட்டு கம்மியா இருக்குற கம்பெனில ஆர்டர் புக் பண்ணீ மெட்டீரியலும் ஆஃபிசுக்கு வந்திருச்சு. எப்போ ஆர்டர் பிளேஸ் பண்ணானு தெரியல அன்னைக்கே அந்த வீணாப் போனவன் ஆர்டர் செய்த மெட்டீரியலும் சேர்ந்து வந்திருக்கு. மெட்டீரியல் ரேட் என் பையன் வாங்கினது கம்மியா இருக்கு. அவன் வாங்கினது அதிகமா இருக்கு. உடனே மேனேஜர் பார்த்துட்டு அவன் புக் பண்ணீயதை ரிட்டர்ன் குடுத்திட்டாராம். உடனே இவன் நீ ஏன் ஆர்டர் குடுத்தனு கோவமா கேட்டிருக்கான். என் பையன் நீ அந்த வேலைய பார்க்காம இருந்தா நானும் தான் மேனேஜருக்கு பதில் சொல்லனும் அதான் வாங்கினேனு சொல்லி இருக்கான். அதிலிருந்து இவன்கிட்ட ஒழுங்காவே பேசமாட்டானாம். போடா ம.... நு இவனும் பேசாம இருந்திருக்கான் . அவன் மேல நிறைய கம்ளைண்ட் போய் வேலைய விட்டு தூக்கிட்டாங்க. இப்போ தான்மா நிம்மதியா இருக்கு இல்லனா இவன் மேனேஜர் கிட்டஎங்க எல்லார் பத்தியும் ஏதாச்சும் குறை சொல்லி போட்டு கொடுத்திட்டுருப்பானு சொன்னான்....

இந்த மாதிரி ஆட்களிடம் உஷாராவே இருங்க எப்போ காலை வாரி விடுவாங்கனு தெரியாது.

வீடு கட்டுவதற்கு வேலை பார்ப்பது லேசான காரியமா? பாவம் தான் உங்க மனைவி.

எனக்கும் எங்க சொந்த ஊர்ல வீடு இருக்கனும்னு ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியல ...பிள்ளைகளுக்கு கல்யாணமாகிட்டா ஊரோட செட்டிலாகனும்குறது ரொம்ப ஆசை...ஆண்டவன் அருள் புரியனும்....
வாங்க அக்கா...

ஆமாம் அக்கா இவனைப் போன்றோர் எங்கும் உண்டு.

உங்கள் ஆசை விரைவில் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாவம்தான் குமாரைக் கட்டியதே பாவம்தான் போங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Sat 19 Dec 2015 - 22:05

நண்பன் wrote:நிறுவனத்தில் நீங்கள் பார்க்கும் ஊழியம் ஒரு நாளும் குறைந்தபாடில்லை போல் ஹா ஹா நாட்டுக்கு போகும் நாள் வரைக்கும் இதே   சல சலப்பு தொடரும் நீங்கள்தான் மனதை மாற்றி இஸ்டப்பட வேண்டும்  இஸ்டப்பட்டு கஸ்டப்பட வேண்டும்  அப்போது எல்லாம் பளகி விடும்

வீடு கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்  என்பார்கள்  நானும்தான்  3 றூம்  கட்டுவதற்கு ஐந்து வருடம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று இன்னும் வேலைகள் முடிந்த பாடில்லை  

கல கலப்பிலும் ஒரு கிலுகிலுப்பாக  ஈட்டி படம் பார்த்துள்ளீர்கள் உங்களால் மட்டும் எப்படித்தான் இப்படி முடிகிறதோ தெரிய வில்லை  ம்ம் அருமையாக செல்லட்டும் உங்கள் மன ஆறுதல் இப்போதைக்கு சினிமாப் படம் பார்ப்பதுதான் போல்!

தொடரட்டும் பணிகள்
நன்றியுடன் நண்பன்

வாங்க நண்பன்...
கஷ்டப்பட்டு இஸ்டப்பட்டாச்சு...
விரைவில் வீடு கட்டி முடிக்க வாழ்த்துக்கள்.

கஷ்டம் என்றாலும் நமக்கு விடுமுறை தினமெல்லாம் வெட்டியாய் வெளியே சுற்ற என்ன இருக்கு...
அதனால் அறையில் அமர்ந்து வாசிப்பேன்... ஊருக்குப் பேசுவேன்...

மனக்க்ஷ்டத்தால் வாசிக்கவும் எழுதவும் ஏதோ ஒரு வித அடைப்பு...

பின்னர் படம்தானே நமக்கான மாற்றுக் காரணி... கொஞ்சம் ரிலாக்ஸிற்காகவே...

இன்று தங்கமகன் பார்த்தாச்சு... இன்னும் படம் இங்கு ரிலீஸ் ஆகவில்லை...

சினிமா செய்திகளை குறைக்கச் சொல்லி நண்பனிடம் இருந்து அன்புக் கட்டளை... ஆனாலும் மனசில் பக்கத்தில் கலவையாய் எழுத வேண்டும் என்பதால் சினிமாவும் சேர்க்கிறேன்... தனியான பதிவாக, விமர்சனப் பதிவாக எழுதாமல் இப்படி....

ஈட்டி பாருங்க... நல்லாவே பாஞ்சிருக்கு...

தங்கமகன் இடைவேளை வரை கலக்கல்... பின்னர் செண்டிமெண்ட்... பட் பக்கா தனுஷ் படம்... நம்பிப் பாக்கலாம்...

முடிந்தால் உப்புக்கருவாடு பாருங்க... கடைசி வரை சிரிக்கலாம்... வசனங்கள் நச்...

என்னடா இவன் சினிமாவா சொல்றானேன்னு நினைக்காதீங்க... கொஞ்சம் ரிலாக்ஸேசனும் வேண்டுமல்லவா...?

இதெல்லாம் வேண்டாம்ன்னா மனசு தளத்தில் இருக்கும் கதைகளை எல்லாம் படிங்க... ஹா... ஹா... என்ன ஓடுறீங்க... இருங்க இருங்க....

கருத்துக்கு நன்றி....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Sat 19 Dec 2015 - 22:19

நன்றி அண்ணா ஹா ஹா அருமையான படத்தின் பெயர்கள் தந்துள்ளீர்கள் கண்டிப்பாக பார்க்கிறேன் அண்ணா நாளை எங்களுக்கு லீவு எப்படியாவது இந்த மூன்று படங்களை பார்க்கிறேன் தங்க மகன் படம் பார்க்க தேட்டர் போகிறேன் ஹாசிம் வருகிறார்
ஈட்டி
தங்க மகன்
உப்புகருவாடு
கண்டிப்பாக பார்க்க வேண்டும்
நன்றி அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 20:32

நண்பன் wrote:நன்றி அண்ணா ஹா ஹா  அருமையான படத்தின் பெயர்கள் தந்துள்ளீர்கள் கண்டிப்பாக பார்க்கிறேன் அண்ணா நாளை எங்களுக்கு லீவு எப்படியாவது இந்த மூன்று படங்களை பார்க்கிறேன்  தங்க மகன் படம் பார்க்க தேட்டர் போகிறேன்  ஹாசிம் வருகிறார்
ஈட்டி
தங்க மகன்
உப்புகருவாடு
கண்டிப்பாக பார்க்க வேண்டும்
நன்றி அண்ணா
தங்கமகன் பார்த்தாச்சா...
உங்க ரேட்டிங் என்ன...?

என்னை அதுக்கு விமர்சனம் எழுதச் சொல்லி நண்பர் சொன்னார்....
எல்லாரும் திட்டுறாங்களேன்னு யோசனை...
ஹா... ஹா...

எனக்கு வசனங்கள் ரொம்ப பிடிச்சிருந்தது...
குறிப்பாக எமி வீட்டில் தங்கும் போது தனுஷ் - சமந்தாவுக்கு இடையிலான வசனம் சூப்பர்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Tue 22 Dec 2015 - 20:42

சே.குமார் wrote:

ஐயோ அண்ணா எனககு தங்க மகன் கிடைக்க வில்லை தேட்டரில் ஹிந்திப்படம் பார்க்க வேண்டிய நிர்ப்பதந்தம் அதனால் ஷாருக்கான் காஜோல் நடித்த தில்வாலே படம் பார்க்க கிடைத்தது படம் சூப்பர்  ரேட் 35ரியால்

இப்போது உப்புகருவாடும்
ஈட்டியும் பார்த்த குறை
இன்னும் பல குடும்பம் பார்க்க கூடிய நல்ல படங்களின் பெயர்கள் சில எனக்கு அனுப்புங்க அண்ணா  இங்க அனுப்புங்க அல்லது தனி மடல் அனுப்புங்க

தரவிறக்கி எடுக்கிறேன்
நன்றி அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 21:20

நண்பன் wrote:

www.tamilyogi.com
இங்க போங்க 720hd பிரிண்ட்ல ஒரு மாதம் முன்பு வந்த படங்கள் பார்க்கலாம்.
நேற்று வந்த படம் இன்று தியேட்டர் பிரிண்ட் என்றாலும் ஓரளவு நல்ல கிளாரிட்டியில் பார்க்கலாம்
நம்ம பொழப்பு இதுலதான் ஓடுது... ஹா... ஹா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Tue 22 Dec 2015 - 21:46

மிக்க நன்றி அண்ணா  நான் கேட்டது இன்னும் இருக்கு
நீங்கள் பார்த்த படங்களில் அருமையான படம் கதை குடும்பம் பார்க்க முடிகிறது என்று சொல்லும் படி உள்ள படங்கள் ஒரு பத்து சொல்லுங்கள் அண்ணா சிரமத்திற்கு மன்னிக்கவும்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Wed 23 Dec 2015 - 6:05

இதில் சிரமம் என்ன இருக்கு...

மலையாளப் படங்கள் பார்ப்பீர்கள் என்றால்

அன்னாவும் ரசூலும்(பஹத், ஆண்ட்ரியா)
ஹவ் ஓல்ட் ஆர் யூ (மஞ்சு வாரியர்)
பாஸ்கர் தி ராஸ்கல் (மம்முட்டி)
வர்ஷம் (மம்முட்டி)
டுவண்டி டுவண்டி
பிரேமம் (நிவின் பாலி, சாய் பல்லவி)
என்னு நிண்ட மொய்தீன் (பிருத்விராஜ், பார்வதி)

மேலே சொன்ன படங்கள் எல்லாம் அருமையான படங்கள்... என்னோட கலெக்ஷனில் இருக்கும் படங்கள்.

தமிழில்

காக்கா முட்டை
சதுரங்க வேட்டை
சுந்தர பாண்டியன்
தங்கமகன் (தனுஷ்)
தனி ஒருவன்
வேலை இல்லாத பட்டதாரி
உப்புக் கருவாடு
நானும் ரவுடிதான்
ஈட்டி
கத்துக்குட்டி
சண்டி வீரன்
களவாணி
ருத்ரமாதேவி (பார்க்கலாம்)

பழைய படங்கள் என்றால் நிறையத் தருகிறேன்....

கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என நிறைய படங்கள் பார்க்கலாம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 18:06

மிக்க நன்றி அண்ணா நான் சரியான ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறேன் மிக்க மிக்க நன்றி அண்ணா
முதலில் இந்த தமிழ் படங்களை தரவிறக்கிக்கொள்கிறேன்
அதன்னுடன் மலையாளத்தையும் தரவிறக்கிக்கொள்கிறேன்
எங்க வீட்டு மேடம் படப்பிரியை என்பது ரகசியம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 7:10

நண்பன் wrote:மிக்க நன்றி அண்ணா நான் சரியான ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறேன் மிக்க மிக்க நன்றி அண்ணா
முதலில் இந்த தமிழ் படங்களை தரவிறக்கிக்கொள்கிறேன்
அதன்னுடன் மலையாளத்தையும் தரவிறக்கிக்கொள்கிறேன்
எங்க வீட்டு மேடம் படப்பிரியை என்பது ரகசியம்
நன்றியுடன் நண்பன்

ஐய்யய்யோ....
அப்படி எல்லாம் இல்லைங்க...
ஏதோ தெரிந்ததைச் சொன்னேன்...
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 17:13

சே.குமார் wrote:
நண்பன் wrote:மிக்க நன்றி அண்ணா நான் சரியான ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறேன் மிக்க மிக்க நன்றி அண்ணா
முதலில் இந்த தமிழ் படங்களை தரவிறக்கிக்கொள்கிறேன்
அதன்னுடன் மலையாளத்தையும் தரவிறக்கிக்கொள்கிறேன்
எங்க வீட்டு மேடம் படப்பிரியை என்பது ரகசியம்
நன்றியுடன் நண்பன்

ஐய்யய்யோ....
அப்படி எல்லாம் இல்லைங்க...
ஏதோ தெரிந்ததைச் சொன்னேன்...
நன்றி.

தவறாக எண்ணி விடாதிங்க
சந்தோசத்தில் சொன்னேன்
அதில் என்ன அர்த்தம் கண்டிங்களோ தெரியல
என்றும் மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 19:13

நண்பன் wrote:
சே.குமார் wrote:
நண்பன் wrote:மிக்க நன்றி அண்ணா நான் சரியான ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறேன் மிக்க மிக்க நன்றி அண்ணா
முதலில் இந்த தமிழ் படங்களை தரவிறக்கிக்கொள்கிறேன்
அதன்னுடன் மலையாளத்தையும் தரவிறக்கிக்கொள்கிறேன்
எங்க வீட்டு மேடம் படப்பிரியை என்பது ரகசியம்
நன்றியுடன் நண்பன்

ஐய்யய்யோ....
அப்படி எல்லாம் இல்லைங்க...
ஏதோ தெரிந்ததைச் சொன்னேன்...
நன்றி.

தவறாக எண்ணி விடாதிங்க
சந்தோசத்தில் சொன்னேன்
அதில் என்ன அர்த்தம் கண்டிங்களோ தெரியல
என்றும் மாறா அன்புடன் நண்பன்
ஒரு அர்த்தத்திலும் சொல்லலை.
நானும் ஜாலிக்காகத்தான் சொன்னேன்...
எப்பவும் குமார் குமார்தான்...
மாற்றமெல்லாம் இல்லை... குதூகலம்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும் Empty Re: மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum