Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
2 posters
Page 1 of 1
குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
குழந்தையின் முதல் ஆசான், அக்குழந்தையின் பெற்றோர் ஆவர். அதிலும் குழந்தை முதலில் அறிந்து கொள்ளும் ஆசான் தாய் தான். அந்த வகையில் ஒரு வீட்டுச் சூழலில் குடும்பம் என்ற ஒரு பெரிய வலையமைப்பிற்குள் ஒரு பிள்ளையின் நடத்தைகளும், கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பமாகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கற்றல் என்பது புத்தகங்களும் ஆசிரியர்களும் கூறுபவற்றை மாத்திரம் ஏற்றுக்கொண்டு பரீட்சையில் மாணவனை வெற்றி பெறச் செய்வது மட்டுமல்ல. மாறாக கற்பவனின் வாழ்க்கைப் பரீட்சையில் அவனை வெற்றிபெறச் செய்வதே உண்மையான கற்றல் செயற்பாடாகும். இக்கற்றல் செயற்பட்டில் பாடசாலையின் வகிபங்கு மட்டுமல்லாது பெற்றோரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் ஒரு பிள்ளையின் கற்றல் செயற்பாட்டில் பெற்றோரின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகக் காணப்படுகிறது.
முதலில் பெற்றோர் தமது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. கற்றல் செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழல் காணப்படும் போதே கற்றல் வினைத்திறனாக அமைய முடியும். காற்றோட்டமுள்ள போதியளவு வெளிச்சம் மிக்க, அமைதியான. சுகாதாரமான சூழல் ஒன்றினை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் வீடோன்றினை நிர்மாணிக்கும் போது பிள்ளைகளை கவரக்கூடிய வகையில் கற்றல் அறையொன்றினை நிர்மாணிப்பது பயனுடையதாகக் காணப்படுகின்றது. இதனாலேயே சேரிப்புறங்களில் வாழும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளையும் பார்க்க வசதியான குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு திறன் மிக்கதாகக் காணப்படுகின்றது.
மேலும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் இடையறாத இணைப்பு, பாடசாலையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் அறைகூவல்களையும் சந்திப்பதற்கு பிள்ளையை உளரீதியாக மென்மேலும் தயார்படுத்துகின்றது. பிள்ளைகளிடம் அன்பான தொடர்புகளைப் பேண வேண்டும். குறிப்பாக பிள்ளை பயத்தால் அல்லது கவலையால் பீடிக்கப்பட்டிருக்கும் போது இவ்வாறு பிள்ளைகளிடத்தில் அன்பைப் பேணுவது மிக அவசியமானதாகக் காணப்படுகின்றது. ஏனைய குடும்ப அங்கத்தவரின் அல்லது தொலைக்காட்சியின் இடையூறின்றி ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களையேனும் ஒவ்வொரு பிள்ளையுடனும் அந்த நாள் பற்றி தனியாக உரையாடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொரு முக்கியமான விடயமாக அமைவது சிறுபிள்ளைகள் அனைவரும் புதிய சொற்களைப் பயன்படுத்த மிகவும் விரும்புவார்கள். சில குடும்பங்களில் சொற்களைப் பற்றி துருவி ஆராய்தல் ஊக்குவிக்கப்படுகின்றது. உண்மையில் அது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு ஊற்றாக அமைகின்றது. ஆனால் சில பிள்ளைகள் புதியதொரு சொல்லை தவறாக உச்சரிக்கும் போது அல்லது தவறாகப் பயன்படுத்தும் போது கேலி செய்யப்படுகின்றார்கள். இதனால் சொற்கள் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மங்கிவிடுகிறது. எனவே பெற்றோர் இவ்விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்.
அடுத்து முக்கியமான விடயமொன்றாக இருப்பது மாணவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி வழிகாட்டுவதாகும். உயர் அடைவுகளை எய்தும் மாணாக்கர்கள் வீடுகளில் நேரத்தை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் படிப்பதற்கென குடும்பம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும் போது கற்றலுக்கு குடும்பம் மதிப்பளிக்கின்றதென பிள்ளைகள் உணர்ந்து செயற்படுவார்கள்.
அடுத்து மிக முக்கியமான விடயமான அமைவது கற்பதற்கு பிள்ளைகளிடம் காணப்படும் அர்ப்பணிப்பை மெச்ச வேண்டும். ஒருவரை அவருடன் சகோதர சகோதரிகளுடன் ஒப்பிடுதல் நண்பர்களுடன் ஒப்பிடுதல் என்பன பெற்றோரைப் பொறுத்தவரையில் பிரத்தியேகமான தவறாகக் காணப்படுகின்றது.
அத்துடன் நமது பிள்ளைகள் எந்நிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? யாருடன் சேர்கின்றார்கள் என்பனவற்றை எப்பொழுதுமே பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பிள்ளைக்குக் கற்பிக்கும் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்வது பெற்றோரின் சிறந்த வகிபங்காகக் காணப்படுகின்றது. இவ்வாறு ஆசிரியருடன் சிறந்ததொரு இடைவினையை மேற்கொள்ளும் போதே பிள்ளையின் கல்வித் திறமை பற்றி விசாரித்துக் கொள்ள முடிகின்றது.
மேலும் கற்றலுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள் “எழுதுகோல் போன்ற உபகரணங்களை தவறாது வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் கற்றலுக்குத் தடையாக உள்ள காரணிகளை இனங்கண்டு அகற்றுவது பெற்றோரின் முக்கிய கடமையாக காணப்படுகின்றது.
இன்று இலத்திரனியல் தொடர்புசாதனங்கள் மாணவர்களின் கைகளில் சரளமாகத் தவழ்கின்றன. கையடக்கத் தொலைபேசி, ஐபேட், மடிக்கணனி என்பன மாணவர்களின் கற்றலுக்கான நேரத்தில் பெரும் பகுதியை உள்ளடக்குகின்றன. அத்துடன் இவ்வாறான இலத்திரனியல் சாதனங்களின் மிதமிஞ்சிய உபயோகத்தால் பிள்ளை நோய் வாய்ப்படுவதோடு நடத்தைகளில் மாற்றங்கள் நிகழவும் ஏதுவாகின்றதென்பதை மறுக்க முடியாது.
அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளை ஆரோக்கியமாக இருந்தாலேயே கற்றல் நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ள முடிகின்றது.
எனவே இவ்வாறு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பாடசாலை மட்டுமன்றி பெற்றோர்களின் வகிபங்கும் மிக முக்கியமானது என்பதை பெற்றோர் உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதே இன்றைய தலைமுறையினரை நாளைய ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் உருவாக்க முடியும்.
எஸ். ஏ. டீ. ரைஹானா
கல்விப் பீடம்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
தினகரன் பத்திரிகையிலிருந்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
paransothi wrote:பெற்றோருக்கு பயனளிக்கும் கட்டுரை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum