Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்திய பிரபல இசைக்கலைஞர்கள்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
இந்திய பிரபல இசைக்கலைஞர்கள்
இந்திய பிரபல இசைக்கலைஞர்கள் - என். ரவிக்கிரன்
-------------------
என். ரவிக்கிரன் அவர்கள், புகழ்பெற்ற சித்திர வீணைக் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் அவர் மேற்கொண்ட யுத்திகளும், அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றதோடு மட்டுமல்லாமல், இசை உலகில் “சங்கீத சாம்ராட்” எனவும் பெயர் பெறச் செய்தது. இவர், கோட்டு வாத்தியக் இசைக் கலைஞர் அமரர் நாராயண அய்யங்காரின் பேரன் ஆவார். தன்னுடைய அற்புதமான வாசிப்பால் அனைவரையும் வியக்கவைத்த இவர், ‘இந்திய சங்கீத நாடக அகாடமி விருது’, தமிழ்நாடு மாநில அரசின், ‘கலைமாமணி விருது’, மத்தியபிரதேச மாநில அரசின், ‘குமார் கந்தர்வ சம்மான் விருது’, ‘லயன் சர்வதேச விருது’, ‘சங்கீத சூடாமணி’, ‘சங்கீதா ரத்னாகர்’, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ என மேலும் பல வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் பல விருதுகளை வென்று, இசை மேதையாக விளங்கிய என். ரவிக்கிரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 12, 1967
இடம்: மைசூர், கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: இசையமைப்பாளர், பாடகர், திரைப்படப் பின்னணி பாடகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
என். ரவிகிரன் அவர்கள், 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “மைசூர்” என்ற இடத்தில் நரசிம்மன் என்பவருக்கு மகனாக ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மற்றும் தாத்தா இந்திய பாரம்பரிய இசைக் கலையில் சிறப்பு பெற்று விளங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவருடைய தாத்தாவான அமரர் நாராயண அய்யங்கார், கோட்டு வாத்தியக் இசை கலையில் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இந்திய பாரம்பரிய இசை நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தையான நரசிம்மன், இவருக்கு முதல் ஆசானாக விளங்கினார். மிக இளம் வயதிலேயே இந்தியப் பாரம்பரிய இசையில் அற்புதங்களை வெளிப்படுத்திய ரவிகிரன், பல இசை ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்றார்.
இசைப் பயணம்
தந்தையின் கீழ் முழு இசைப் பயிற்சியை மேற்கொண்ட ரவிக்கிரன், 1972 ஆம் ஆண்டு தன்னுடைய ஐந்தாவது வயதில் கோயம்புத்தூரில் ஒரு இசைப் பாடகராக தன்னுடைய இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பத்து வயதில் சித்திர வீணை கலையில் ஈடுபாடு கொண்ட அவர், பதினொரு வயதிலேயே முதல் சித்திர வீணைக் கச்சேரியை அரங்கேற்றினார். அடுத்த மூன்று ஆண்டுக்குள் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவராக மாறிய அவர், 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் 24 மணிநேர இடைவிடாது இசைக் கச்சேரியினை நிகழ்த்திக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வெற்றிப்பயணம்
இந்தியா மட்டுமல்லாமல், உலகமுழுவதும் தொடர்ந்து பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்திய அவர், வெகு விரைவிலே இசை உலகில் “சங்கீத சாம்ராட்” என்ற பட்டம் பெற்றார். இவருடைய கடுமையான உழைப்பும், இசைத் தேடலில் மேற்கொண்ட முயற்சியும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது எனலாம். நாட்டை, கவுளை, வராளி, ஆரபி, கைகவசி, ஸ்ரீராகம் மற்றும் நாராயண கவுளை போன்ற ராகங்களில் அற்புதமாக வாசித்து இசை நெஞ்சங்களுக்கு விருது படைத்துள்ளார். ஸ்வரங்களில் ரவிக்கிரனின் நயமான வாசிப்பு, மனம்கவர்ந்த ஒன்றாகும். இவருடைய கோட்டு வாத்திய இசை, மனதை கொள்ளைகொள்ளும் எனலாம். மேலும், அமெரிக்கா லண்டன், கீளிவ்லேண்ட், இங்கிலாந்து, டெக்சாஸ், பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலும் தன்னுடைய இசை நயத்தை வெளிபடுத்தினார். ரவிக்கிரன் அவர்களுக்கு, பிரட்டன் அரசால் “மில்லினியம் விருது”, அமெரிக்க அரசால் சிறந்த சமகால உலக இசை தொகுப்பிற்கான “நியூ ஏஜ் வாஸ் அவார்ட்ஸ்” மற்றும் சங்கீதா ரத்னாகர் விருது, ஆஸ்திரேலியாவிலிருந்து “சித்ரவீணா வித்யா வர்த்தி”, டெக்சாஸில் இருந்து “வாத்திய ரத்னாகர் விருது”, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் “ஹார்வர்ட் சங்கீத் விருது”, லண்டனிலிருந்து “ரகளையா சாகர விருது” எனப் பல விருதுகளை வென்று இந்திய பாரம்பரிய இசையின் அழகை வெளிநாட்டு ரசிகர்களிடமும் கொண்டுசேர்த்தார். மேலும் சுமார் 600 க்கும் மேற்பட்ட இந்திய பாரம்பரிய இசை தொகுப்புகளை வழங்கியுள்ளார். இதைத்தவிர இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், ஆசிரியராகவும் சிறப்பு பெற்று விளங்கியுள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
1973 – அருள் இசை செல்வன்.
1979 – இசை அகடமி முதுநிலை விருதுகள்.
1979 – லயன் சர்வதேச விருது.
1985 – சங்கீத் சாம்ராட் மற்றும் ரோட்டரி தொழிற்கல்வி விருது.
1985 – இந்திய ஸ்டார் விருது,
1985 – தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருது.
1986 – மதுர நாட மன்னர்.
1990 – சான்ஸ்கிரிட் அறக்கட்டளையின் மூலம் “சான்ஸ்கிரிட் விருது”
1991 – கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மூலம் இசை பேரொளி விருது.
1995 – கிருஸ்ண கானா சபா மூலம் சங்கீத சூடாமணி.
1996 – மத்தியபிரதேச மாநில அரசின் குமார் கந்தர்வ சம்மான் விருது.
1996 – சித்ரவீணா வித்யா வர்த்தி (யியர்ல் சங்கம், பெர்த், ஆஸ்திரேலியா)
2000 – பாம்பே குமார் கந்தர்வா அறக்கட்டளை மூலம் குமார் தந்தர்வா விருது.
2000 – பிரட்டன் அரசால் “மில்லினியம் விருது”
2001 – அமெரிக்க அரசால் சிறந்த சமகால உலக இசை தொகுப்பிற்கான “நியூ ஏஜ் வாஸ் அவார்ட்ஸ்”
2002 – வாத்திய ரத்னாகர் விருது (இந்தியா ஃபைன் ஆர்ட்ஸ், ஆஸ்டின், TX)
2003 – இந்திய காஞ்சி அறக்கட்டளை மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.
2003 – டி.டி.கே விருது (இசை அகாடமி, சென்னை, இந்தியா)
2005 – ஹார்வர்ட் சங்கீத் விருது (ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய அமேரிக்கா)
2005 – சங்கீத சப்த சாகரா (சாந்தி ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை, இந்தியா)
2006 – நல்லி சீசன் விருது (நல்லி அறக்கட்டளை, சென்னை, இந்தியா)
2007 – இந்திய சங்கீத நாடக அக்காடமி விருது.
2008 – ரகளையா சாகர விருது (ரகளையா அறக்கட்டளை, லண்டன்)
2010 – சங்கீதா ரத்னாகர் (கிளீவ்லேண்ட், அமேரிக்கா)
2011 – ரோட்டரி வாழ்நாள் சாதனையாளர் விருது.
ஒரு குழந்தை மேதையாக இசையுலகில் ஒளிவீசத் துவங்கி, தன்னுடைய கடினமான உழைப்பினால் இசை உலகில் “சங்கீத சாம்ராட்” என புகழ் பெற்றுள்ளார் என்பதற்கு அவர் பெற்ற விருதுகளே சான்றுகளாகும். ரவிக்கிரனின் நயமான வாசிப்பும், கோட்டு வாத்திய இசையில் மேற்கொண்ட புதுமையும் அனைவரையும் வியக்கவைத்தது எனலாம்.
நன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்

Re: இந்திய பிரபல இசைக்கலைஞர்கள்
இந்திய பிரபல இசைக்கலைஞர்கள் - கத்ரி கோபால்நாத்
-----------------
கத்ரி கோபால்நாத் அவர்கள், தென்னிந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாக்சஃபோன் இசை மேதை ஆவார். மேலைநாட்டு இசைக்கருவியைத் தன்னுடைய இரு விரல்களால், உதடுகளால் அடிமையாக்கி, உன்னத இசையை உள்ளம் உருக்கும் வகையில் அள்ளித்தரும் அற்புதக் கலைஞன். இந்தியாவில் சாக்சஃபோன் இசை என்றால், அனைவரின் மனதிலும் உடனே நினைவுக்கு வரும் குறிப்பிடத்தக்க ஒருவர். கேட்பவர்கள் மனதை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு, ஒரு சிறந்த சாக்சஃபோன் சக்ரவர்த்தி. இதனால், இசைத்துறையில் இவர் ஆற்றிய தொன்மையான பங்களிப்பிற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அரசால் ‘கலைமாமணி’ விருது’, ‘கர்நாடக கலாஸ்ரீ’, ‘சாக்சபோன் சாம்ராட், ‘கானகலா ஸ்ரீ’, ‘சங்கீத வாத்திய ரத்னா’, ‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன், லண்டன் என வெளிநாடுகளிலும் தன்னுடைய சாக்சஃபோன் இசையை அரங்கேற்றியுள்ளார். மேலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐயரால் ‘மெய்யான கர்நாடக இசை மேதை’ எனப் பாராட்டப்பட்டவர். இத்தகை மாபெரும் சிறப்புபெற்ற பத்மஸ்ரீ கலைமாமணி கத்ரி கோபால்நாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1949
பிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா
பணி: சாக்சஃபோன் இசைக் கலைஞர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
கத்ரி கோபால்நாத் அவர்கள், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில், தந்தையார் தனியப்பா என்பவருக்கும், தாயார் கனகம்மாக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சஃபோனை வாசித்தப்போது, அந்த இசையால் மிகவும் ஈர்க்கப்பட்ட இவர், அன்றிலிருந்து சாக்சஃபோன் இசையில் ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசைக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சஃபோன் வாசிப்பை கற்கத் தொடங்கினார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசை மேதை டி. வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார்.
இசைப் பயணம்
அவர் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை செம்மை நினைவு அறக்கட்டளையில் முதன் முதலாக அரங்கேற்றினார். அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற “பாம்பே ஜாஸ் இசைவிழா” நிகழ்ச்சி, இவரின் இசை பயணத்தில் மாபெரும் திருப்புமுனையினை ஏற்படுத்தியது எனலாம். அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல கலிஃபோர்னியா ஜாஸ் இசைக் கலைஞர் ஜான் ஹன்டி என்பவர், இவருடைய சாக்சபோன் இசையில் மிகவும் ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், இவருடன் இணைந்து இசை வழங்கவும் விரும்பினார். அதன் பிறகு, கர்நாடக இசையுடன் இணைந்து வழங்கப்பட்ட ஜாஸ் இசைக்கோர்வை, இசை நெஞ்சங்களை மிகவும் கவர்ந்தது.
1994 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூயட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய சாக்சஃபோன் இசையை அரங்கேற்றிய அவர், அத்திரைப்படத்தில் ‘கல்யாண வசந்தம்’ என்ற ராககத்தில் இவர் வாசித்த சாக்சபோன் இசை உலகப் புகழ்பெற்றது எனலாம். இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களிலும் சாக்சஃபோன் இசை பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், பெரும்பான்மை இசை சாக்சஃபோனினை கொண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், இத்திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன் என வெளிநாடுகளிலும், தன்னுடைய சாக்சஃபோன் இசையில் இந்தியப் பாரம்பரிய இசையைக் கொண்டு சேர்த்த இவருக்கு, பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, ஜெர்மனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த ‘அனைத்துலக செர்வாண்டினோ இசைவிழா’ போன்றவை மிகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. மேலும், 1994 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நடத்திய ‘உல்லாசவீதி’ என்னும் இசை விழாவில், மனதை மயக்கும் தன்னுடைய சாக்சஃபோன் இசையை வழங்கி மேலும் சிறப்பு பெற்றார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக் கலைஞர் இவர் தான் என்பது மேலும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இசைத் தொகுப்புகள்
அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சாக்சஃபோன் இசை கலைஞரான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் இணைந்து ‘கின்ஸ்மென்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர், அதே நாட்டை சேர்ந்த ஜாஸ் புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஜேம்ஸ் நியூட்டன் என்பவருடன் இணைந்து ‘சதர்ன் பிரதர்ஸ்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். மேலும், இந்திய மேற்கத்திய இசைக் கலப்பினை பிரதிபலிக்கும் வகையில் ‘ஈஸ்ட்-வெஸ்ட்’ என்னும் ஒலி-ஒளி வழங்குதலையும், இந்தியாவில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற மேற்கத்திய செவ்விசை இசைக் கலைஞரான லுடுவிக்வான் பேத்தோவன் போன்றோரின் இசைப் பரிணாமங்களை உள்ளடக்கிய இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
விருதுகளும் மரியாதைகளும்
1996 – ‘கர்நாடக கலாஸ்ரீ’,
1998 – ‘கர்நாடக ராஜ்யோட்சவா’ விருது.
2004 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
2004 – பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘மதுப்புறு முனைவர்’ பட்டம்.
தமிழ்நாடு அரால் ‘கலைமாமணி’ விருது.
‘சாக்சஃபோன் சக்ரவர்த்தி’ மற்றும் ‘சாக்சஃபோன் சாம்ராட்’ விருது.
‘கானகலா ஸ்ரீ’ மற்றும் ‘நாதபாசன பிரம்மா’ விருது.
‘சுனதா பிரகாசிகா’ மற்றும் ‘சங்கீத வாத்திய ரத்னா’ விருது.
‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ விருது.
‘ஆசுதான வித்வான்’ மூலம் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்’, ‘ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்’, ‘ஸ்ரீ அஹோபில மடம்’ மற்றும் ‘ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்’ விருது.
மெட்ராஸ் ரோட்டரி கழகத்தின் மூலம் ‘மேதகைமை விருது’.
இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை எனக் கூறலாம், அத்தகைய அற்புதமானக் கலையை சாக்சஃபோன் என்னும் இசையில் ஜனரஞ்சகமாக்கி பல இசைக் கச்சேரிகளில் அதை அரங்கேற்றி, கோடானுகோடி ரசிகர்களை இசை என்னும் மழையில் நனையச் செய்தவர். கேட்பவர்களை சொக்கவைத்துவிடும் அளவிற்கு, இவரின் சாக்சஃபோன் இசை வெளிப்பாடு, மிக அற்புதமாக இருக்கும் எனலாம். குறிப்பாக சொல்லப்போனால், சாக்சஃபோன் வாசிப்பதில் கத்ரி கோபால்நாத் அவர்கள், ஒரு ‘மகா கலைஞர்’ என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது.

இந்திய பிரபல இசைக்கலைஞர்கள் - இசைஞானி இளையராஜா
---------------
தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கிய இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை மற்றும் திரைத்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 2 ஜூன், 1943
பிறப்பிடம்: பண்ணைப்புரம், தேனி, சென்னை மாகாணம், இந்தியா
பணி: திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக்கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அவர், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஞானதேசிகனாகப் பிறந்த அவர், டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர். சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.
இசையுலகப் பிரவேசம்
நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். மேலும், அவர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தையான ஆர். கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.
திரையுலக வாழ்க்கை
அவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம் அவர்கள். 1975ல் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அடுத்தப் படமான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘16 வயதினிலே’, ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடலோர கவிதைகள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆணழகன்’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆராதணை’, ‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அமைதிப்படை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’, ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்ன தம்பி’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘இதயத்தை திருடாதே’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.
பிற இசையாக்கங்கள்
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரைத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கின்றனர்.
“பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கினார்.
இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்’ (“How to name it”) என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார்.
“இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும், “மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.
ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
எழுத்தாளராக இளையராஜா
அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
இல்லற வாழ்க்கை
அவர், ஜீவா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.
விருதுகள்
1988 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.
2010 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2012 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.
1988 – மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது. இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி’ என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா’ என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.
1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2௦௦3ல் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2௦௦5ல் ‘அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே’ படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்’ படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.
கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி’ படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.

-
கத்ரி கோபால்நாத்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum