Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மார்கழிக் கோலங்கள் - 1
5 posters
Page 1 of 1
மார்கழிக் கோலங்கள் - 1
மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம்.
நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர் கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து, எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.
அப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ணியோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.
பெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(?) வேறு எழுதுவதுண்டு.
இப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.
அதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல் உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.
இடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி விரித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,
என் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...
இங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மார்கழிக் கோலங்கள் - 1
நித்யாவின் கை வண்ணமும் கலை வண்ணமும் அசத்துது. கோலம் தானா அல்லது பெயிண்டிங்க் வாங்கி ஒட்டி வைத்திருக்கா என ஆச்ச்சரியப்படுத்தும் படி அழகும் நேர்த்தியும் கோலங்களில் தெரிகின்றது. எங்கள் பாராட்டுக்களை சொல்லி விடுங்கள்.
அப்படியே குட்டிக்குமாரை இன்னும் கேள்வி கேட்கவும் சொல்லுங்கள்.
அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.
அப்படியே குட்டிக்குமாரை இன்னும் கேள்வி கேட்கவும் சொல்லுங்கள்.
அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மார்கழிக் கோலங்கள் - 1
வாவ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...அதிலும் வீட்டு வாசல் பாய் விரித்து தூங்கலாம் போல தோணுது. நானும் வாழ்த்து சொன்னேனு சொல்லுங்க குமார்...படத்தின் மேல் உங்க மனைவி பெயர் போட்டுருங்க குமார் யார் தூக்கினாலும் திருடியது தெரிந்து போகும்....
சின்ன வயசுல எங்க வீட்டு பக்கத்துல 10 மணிக்கு மேல கோலம் போடுவாங்க. அதப் பார்த்துட்டு தான் தூங்கவே போவோம்... கலர் பொடி தூவுறதுக்கு உதவி செய்வோம்...
சின்ன வயசுல எங்க வீட்டு பக்கத்துல 10 மணிக்கு மேல கோலம் போடுவாங்க. அதப் பார்த்துட்டு தான் தூங்கவே போவோம்... கலர் பொடி தூவுறதுக்கு உதவி செய்வோம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மார்கழிக் கோலங்கள் - 1
Nisha wrote:
படத்தின் ஓரத்தில் போட்டால் படத்தை மறைக்காமல் இருக்கும் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மார்கழிக் கோலங்கள் - 1
வாங்க அக்கா...Nisha wrote:நித்யாவின் கை வண்ணமும் கலை வண்ணமும் அசத்துது. கோலம் தானா அல்லது பெயிண்டிங்க் வாங்கி ஒட்டி வைத்திருக்கா என ஆச்ச்சரியப்படுத்தும் படி அழகும் நேர்த்தியும் கோலங்களில் தெரிகின்றது. எங்கள் பாராட்டுக்களை சொல்லி விடுங்கள்.
அப்படியே குட்டிக்குமாரை இன்னும் கேள்வி கேட்கவும் சொல்லுங்கள்.
அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்.
வணக்கம்.
வாழ்த்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மார்கழிக் கோலங்கள் - 1
வாங்க ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் அத்தனையும் அருமை அருமை
வணக்கம்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மார்கழிக் கோலங்கள் - 1
அருமையாக உள்ளது அதில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து ரசிப்பார்கள் ஒரு நாள் கோலம் போட வில்லை என்றால் ஏன் ஏதுன்னு கேட்பார்கள் சூப்பராக உள்ளது அனைவரையும் கவரும் வண்ணமயமாக உள்ளது இந்தக்கோலம்
இந்தக்காலத்தில் இப்படி கோலங்கள் காண்பது அரிது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
இந்தக்காலத்தில் இப்படி கோலங்கள் காண்பது அரிது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மார்கழிக் கோலங்கள் - 1
வணக்கம் நண்பன்...நண்பன் wrote:அருமையாக உள்ளது அதில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து ரசிப்பார்கள் ஒரு நாள் கோலம் போட வில்லை என்றால் ஏன் ஏதுன்னு கேட்பார்கள் சூப்பராக உள்ளது அனைவரையும் கவரும் வண்ணமயமாக உள்ளது இந்தக்கோலம்
இந்தக்காலத்தில் இப்படி கோலங்கள் காண்பது அரிது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
எங்க பக்கம் கோலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்குள் சுருங்கியவர்கள்தான் கோலம் போடுவதில்லை... இல்லை என்பதைவிட போட இடமில்லாததே காரணம்...
மற்றபடி பெண் பிள்ளைகளுக்கு கோலத்தின் மீது ஒரு ஈர்ப்பு.
எங்க ஸ்ருதி கூட கோலம் போட பழகிவிட்டது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மார்கழிக் கோலங்கள் - 1
சே.குமார் wrote:வணக்கம் நண்பன்...நண்பன் wrote:அருமையாக உள்ளது அதில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து ரசிப்பார்கள் ஒரு நாள் கோலம் போட வில்லை என்றால் ஏன் ஏதுன்னு கேட்பார்கள் சூப்பராக உள்ளது அனைவரையும் கவரும் வண்ணமயமாக உள்ளது இந்தக்கோலம்
இந்தக்காலத்தில் இப்படி கோலங்கள் காண்பது அரிது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
எங்க பக்கம் கோலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்குள் சுருங்கியவர்கள்தான் கோலம் போடுவதில்லை... இல்லை என்பதைவிட போட இடமில்லாததே காரணம்...
மற்றபடி பெண் பிள்ளைகளுக்கு கோலத்தின் மீது ஒரு ஈர்ப்பு.
எங்க ஸ்ருதி கூட கோலம் போட பழகிவிட்டது.
வாவ் சூப்பர் நான்தான் தவறான புரிதலில் உள்ளேன் இன்று முதலிருந்து திருத்திக்கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum