Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
3 posters
Page 1 of 1
மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
(எங்க ஊர் மாரியம்மன்)
உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன... சில நாடுகளில் புத்தாண்டு பிறந்து விட்டது. பல நாடுகள் புத்தாண்டை எதிர்நோக்கி நிமிடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பதிவராய் இருக்கும் எல்லாரும் தங்களுக்கு கடந்து செல்லும் ஆண்டு என்ன செய்தது என்றும் வரும் ஆண்டில் நான் என்ன செய்ய இருக்கிறேன் என்று பதிவுகளைத் தட்டிய வண்ணம் இருக்கிறார்கள். நானும் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துக்கவில்லை என்று வரலாறு நம்மை பேசும் அல்லவா..? அதனால நாமளும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
கடந்து சென்ற வருடங்களில் சில நல்லவைகள் நடந்திருக்கின்றன... சில கெட்டவைகள் நடந்திருக்கின்றன. இருப்பினும் வாழ்க்கையில் வலிகளும் சந்தோஷங்களும் கொடுத்துத்தான் அனைத்து ஆண்டுகளும் கடந்து செல்கின்றன. மேலும் வயதும் கூடிக்கொண்டே போகிறது ஆனால் சாதித்து விட்டோம் என்றெல்லாம் சந்தோஷிக்க முடியவில்லை என்றாலும் இன்னும் நம் வாழ்வை நாம் அழகாய் கடந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே சந்தோஷம்தான். சரி வாங்க எனக்கு 2015 செய்தது என்ன... வாழ வைத்ததா... அல்லது வீழ்த்தியதா என்பதைப் பார்ப்போம்.
சந்தோஷங்கள்:
முதலில் சொல்ல வேண்டியது நிறைய நட்புக்களைப் பெற்றுத் தந்தது இந்த 2015.
இங்கு வந்தது முதல் மனைவி, குழந்தைகளை இங்கு கூட்டிவர வேண்டும் என்ற ஆவலை ஒரு மாத விசிட் மூலமாக நிறைவேற்றி வைத்தது இந்த 2015.
பல வருடங்களாக எழுதி வந்தாலும் என்னை எழுத்தாளனாய் பலருக்கு அடையாளம் காட்டியது இந்த 2015.
என்னுடைய சிறுகதைகளுக்கு ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுத் தந்தது 2014 என்றால் மிகையானது. அப்படியிருக்க கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று என்னை இன்னும் வளர வைத்தது இந்த 2015.
என்னாலும் கட்டுரைகள் எழுத முடியும் என்று காட்டி, அதற்கு தொடர்ந்து பரிசுகளைப் பெற வைத்தது இந்த 2015.
கஷ்டப்பட்டாலும் கவலைப்பட்டாலும் எங்கள் ஊரில் வீட்டுப் பணி ஆரம்பிக்க வைத்தது இந்த 2015.
பாக்யா வார இதழில் ஏழெட்டு மாதங்களாக மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களும் தொடர்ந்து வர வைத்தது இந்த 2015.
'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து தொடர்கதைக்கும் 'கொலையாளி யார்?' என்ற திகில் குறுநாவலுக்கும் சிறப்பான வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்து நானும் தொடர்கதைகள் எழுதலாம் என்று நினைக்க வைத்தது இந்த 2015.
வெள்ள அரசியலில் வெகுண்டெழுந்து அரசியல் கட்டுரைகள் எழுத வைத்து, அது நல்லாயிருக்கு தொடர்ந்து எழுது என்று நண்பர்கள் சொன்னதால் நாமு ம்எழுதலாமோ என்று சிந்திக்க வைத்த இந்த 2015.
எங்கள் பகுதி குறைகள் குறித்து என் மனைவி சொன்ன கருத்தை போட்டோவுடன் பத்திரிக்கையில் வர வைத்தது இந்த 2015.
பதிவர் எழுத்தாளர் மகேந்திரன் அண்ணனை சந்திக்க வைத்து அவருடன் தம்பியாய் நட்போடு இருக்க வைத்தது இந்த 2015.
அண்ணன் கில்லர்ஜி அவர்களை சென்ற வருடத்தின் இறுதியில் சந்தித்தாலும் என் குடும்பத்தில் ஒருவராய் என்னோடு ஒருவராய் இணைத்து வைத்தது இந்த 2015.
அன்பின் ஐயா திரு. துரை. செல்வராஜ் அவர்களையும் அவர்களின் மகள், மாப்பிள்ளை, பேத்தி என ஒரு அன்பான குடும்பத்தினை சந்திக்க வைத்து அந்த அன்பு நட்பை தொடர வைத்தது இந்த 2015.
அன்பு ஐயா முத்துநிலவன் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும் அவரின் மகனைச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது இந்த 2010
வசீகரமாய்... கவித்துவமாய்... வாசிப்போரை ஈர்க்கும் விதமாய் எழுதும் துபாயில் இருக்கும் தேவா சுப்பையா அண்ணன் அவர்களுடன் சென்ற ஆண்டில் பழகியிருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த 2015.
சேனையில் இணைந்து அங்கிருப்பவர்களுடன் உறவாய் நட்பு மலர்ந்த போது உடன் பிறந்தவர் போல் நேசங்கொண்ட நிஷா அக்காவைக் கொடுத்தது இந்த 2015.
பாரதி நட்புக்காக அமைப்பில் 2012-ல் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் பேசியதை பகிர்வாக்கியிருந்தேன். அவருக்கும் அது தெரிய வர எனக்கு அப்போதே மின்னஞ்சல் அனுப்பி பாராட்டினார். இந்த முறை பாரதி விழாவுக்கு வந்தவர் என்னைக் குறிப்பிட்டுக் கேட்டு என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வைத்தது இந்த 2015.
மேலும் அபுதாபியில் இருக்கும் முகநூலில் எழுத்தில் பன்முகம் காட்டும் அண்ணன் கனவுப்பிரியன், அகல் ஆசிரியர் நண்பர் சத்யா, 'பாக்யா' எஸ்.எஸ்.பூங்கதிர் சார், பிரதிலிபி நண்பர்கள் என எழுத்து வட்டத்தை விரிவுபடுத்தியது இந்த 2015.
உறவுகளைப் புரிந்து கொள்ள வைத்தது இந்த 2015.
உண்மையான நட்புக்களை எனக்கு அளித்தது இந்த 2015.
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிஸியான நிஷா அக்காவின் கருத்துக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். அதை வைத்து அவரை நச்சரித்து வலைப்பூவுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வைத்தது இந்த 2015.
(எங்க ஊர் முனியய்யா)
வலிகள்:
குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் வாழ்க்கையை தொடர வைத்தது இந்த 2015.
கடன்களின் பிடியில் இன்னும் இன்னுமாய் தொடர வைத்தது இந்த 2015.
சிறுகதைத் தொகுப்பு, தொடர்கதையை புத்தகமாக்கும் முயற்சி என 2014 ஆசைகளை நிராசையாகவே ஆக்கி வைத்தது இந்த 2015.
வேலை மாற்றம் தொடர்பான ஆசையைக் காட்டி அதை அப்படியே விட்டு வைத்தது இந்த 2015, (வருடக் கடைசியில் மீண்டும் நட்பின் மூலமாக துளிர்க்க வைத்துச் செல்கிறது... பூக்கிறதா... அல்லது புஸ்வானமாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்)
எனது கதையை குறும்படம் ஆக்க வேண்டும் என்று குடந்தையூர் சரவணன் அண்ணன் அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க, 2014ம் போய் 2015ம் கடந்து விட்டது.
விஷாலின் சேட்டைகளை ரசிக்க வைத்தாலும் அவன் விழுந்து தலையில் தையல் போட வைத்த நிகழ்வைக் கொடுத்தது இந்த 2015.
யாரோ வைத்த தீ-க்கு நாங்கள்தான் நெருப்புக் கொடுத்தோம் என்று சொல்லி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எல்லாரும் வேண்டும் என்று நினைக்கும் எங்களை இவர்கள் வேண்டாம் என்று ஒதுங்க வைத்தது இந்த 2015.
உறவுகளின் கேலிப் பேச்சுகளால் மனவலியை அவ்வப்போது அளித்துக் கொண்டே வந்தது இந்த 2015.
நனவாக விரும்பும் எண்ணங்கள்....
சிறுகதைத் தொகுப்பு அல்லது வேரும் விழுதுகளும் தொடர்கதையை நாவலாக்குவது என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல்.
இன்னும் நிறைய கதைகள் நிறைவாய் எழுத வேண்டும்.
எங்கள் மண்வாசனையுடன் கதைகள் எழுத வேண்டும்.
மனசு தளத்தில் எப்பவும் போல் தொடர்ந்து எழுத வேண்டும்.
நான் விரும்பியபடி இப்போது முயற்சிக்கும் அந்த வேலை தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.
கடன்கள் அடைந்து நாட்கள் சந்தோஷமாய் நகர வேண்டும்.
என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் காயத்ரி அக்கா, என்னைப் பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் நான் தொடரும் என்னைத் தொடரும் நட்புக்கள் அனைவரின் அன்பும் இன்று போல் என்றும் தொடர வேண்டும்.
சில கனவுகள் இன்னும் நனவாகாமலே வருடாவருடம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன... அவை இந்த வருடத்திலாவது நனவாக வேண்டும் என்பது ஆவா... ஆசை உயிர்ப்பெறுமா... அல்லது 2017க்கு நகர்த்தி வைக்கப்படுமா என்பதை வரும் ஆண்டின் வசந்தங்கள்தான் சொல்ல வேண்டும்.
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மலரும் ஆண்டு மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் தரும் ஆண்டாகஅமையட்டும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
மொத்தத்தில் 2015 ல் நிறைய உறவுகளைச் சந்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழும் காலை வரைக்கும் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
நனவாக நீங்கள் விரும்பி எண்ணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய நானும் உங்களுக்காக பிராத்திக்கிறேன் நண்பர்கள் அனைவரையும் உள்வாங்கிய உங்கள் கடந்து வந்த பாதைக்கு ஒரு லைக் போட்டு விட்டேன்
நன்றியுடன் நண்பன்
நனவாக நீங்கள் விரும்பி எண்ணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய நானும் உங்களுக்காக பிராத்திக்கிறேன் நண்பர்கள் அனைவரையும் உள்வாங்கிய உங்கள் கடந்து வந்த பாதைக்கு ஒரு லைக் போட்டு விட்டேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாங்கல்லாம் வேண்டாம்ல!என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் காயத்ரி அக்கா, என்னைப் பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் நான் தொடரும் என்னைத் தொடரும் நட்புக்கள் அனைவரின் அன்பும் இன்று போல் என்றும் தொடர வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
சேனையில் இணைந்து அங்கிருப்பவர்களுடன் உறவாய் நட்பு மலர்ந்த போது உடன் பிறந்தவர் போல் நேசங்கொண்ட நிஷா அக்காவைக் கொடுத்தது இந்த 2015.
மத்தவங்க பேரெல்லாம் எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிஸியான நிஷா அக்காவின் கருத்துக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். அதை வைத்து அவரை நச்சரித்து வலைப்பூவுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வைத்தது இந்த 2015.
அம்மாடியோவ் ரெம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சாதனையாக்கும். இழுத்து வைத்து ஈடு கட்டி என்னாலும் முடியும் எனும் இன்னொரு பரிமாணம் வெளிப்பட வைத்தமைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய சல்யூட் சார்!
தோண்ட தோண்ட தான் ஊற்று ஊறும் என்பது போல் வலைப்பக்கம் வந்து படிக்க படிக்க எழுதும் ஆர்வம் அதிகமாகத்தான் செய்கின்றது.
அருமை! மொத்தமால் வலிகளூக்கு அடுத்தாண்டில் வழிகள் பிறக்கட்டும். பரீசில்களும், பராட்டுகளும் இன்னும் தொடரட்டும். குமாரின் சேவை எங்கும் மிளிரட்டும்.
வாழ்த்துகள் குமார்ஜி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
நன்றி நண்பன்...நண்பன் wrote:மொத்தத்தில் 2015 ல் நிறைய உறவுகளைச் சந்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழும் காலை வரைக்கும் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
நனவாக நீங்கள் விரும்பி எண்ணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய நானும் உங்களுக்காக பிராத்திக்கிறேன் நண்பர்கள் அனைவரையும் உள்வாங்கிய உங்கள் கடந்து வந்த பாதைக்கு ஒரு லைக் போட்டு விட்டேன்
நன்றியுடன் நண்பன்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
ஹா... ஹா... அக்கா.Nisha wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாங்கல்லாம் வேண்டாம்ல!என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் காயத்ரி அக்கா, என்னைப் பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் நான் தொடரும் என்னைத் தொடரும் நட்புக்கள் அனைவரின் அன்பும் இன்று போல் என்றும் தொடர வேண்டும்.
தங்களைத்தான் மற்ற இரண்டு இடத்தில் சொல்லியிருக்கேனே... அதான் இதில் சொல்லலை...
சொல்லணுமின்னு இல்லை அக்கா... மனசுல இருந்தாலே போதுமில்ல... எப்படி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
அருமையா எழுதுறீங்க அக்கா...Nisha wrote:ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிஸியான நிஷா அக்காவின் கருத்துக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். அதை வைத்து அவரை நச்சரித்து வலைப்பூவுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வைத்தது இந்த 2015.
அம்மாடியோவ் ரெம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சாதனையாக்கும். இழுத்து வைத்து ஈடு கட்டி என்னாலும் முடியும் எனும் இன்னொரு பரிமாணம் வெளிப்பட வைத்தமைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய சல்யூட் சார்!
தோண்ட தோண்ட தான் ஊற்று ஊறும் என்பது போல் வலைப்பக்கம் வந்து படிக்க படிக்க எழுதும் ஆர்வம் அதிகமாகத்தான் செய்கின்றது.
அருமை! மொத்தமால் வலிகளூக்கு அடுத்தாண்டில் வழிகள் பிறக்கட்டும். பரீசில்களும், பராட்டுகளும் இன்னும் தொடரட்டும். குமாரின் சேவை எங்கும் மிளிரட்டும்.
வாழ்த்துகள் குமார்ஜி!
இப்படி ஒரு பிரபல எழுத்தாளரை உலகுக்கு கொடுக்க நாங்களும் காரணமாய் இருந்தோம் என்பது எங்களுக்கும் பெருமைதானே...
வாழ்த்துக்கு நன்றி அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
Nisha wrote:சேனையில் இணைந்து அங்கிருப்பவர்களுடன் உறவாய் நட்பு மலர்ந்த போது உடன் பிறந்தவர் போல் நேசங்கொண்ட நிஷா அக்காவைக் கொடுத்தது இந்த 2015.
மத்தவங்க பேரெல்லாம் எங்கே?
எல்லாருடைய பேரையும் எழுத ஆசைதான்... யாராவது ஒருவரை விட்டுவிட்டால்... அதனால்தான் உறவாய் நட்பாய்ன்னு போட்டுட்டேன்...
எங்கயும் தல-க்கு மரியாதை குடுத்தா தளபதிகளுக்கும் கொடுத்தமாதிரித்தானே...
நீங்க எங்க தல...
நாங்கள்லாம் தளபதிகள் (இளைய தளபதிகளும் இல்லை மு.கவின் தளபதியும் இல்லை) பாசமான தளபதிகள்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்
ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா !
பேனர் எப்போ அடிப்பீங்கப்பூ?
பேனர் எப்போ அடிப்பீங்கப்பூ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum