சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Khan11

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:05

ஹரிவன்ஷ் ராய் பச்சன்
-----------
ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது. மேலும் “சோவியத் லேண்ட் நேரு விருதினை” வென்றுள்ளார். இவர் பிரபல இந்தித் திரைப்பட நடிகரான “அமிதாப் பச்சனின்” தந்தை ஆவார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அற்புதக் கவிஞராகவும், மொழிப்பெயர்ப்பாளராகும் விளங்கிய ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 27, 1907

பிறப்பிடம்: பாபுபட்டி, உத்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: கவிஞர் மற்றும் எழுத்தாளர்

இறப்பு: ஜனவரி 18, 2003

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், 1907  ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில், அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிரதாப் நாராயண் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் சரஸ்வதி தேவிக்கு மூத்த மகனாக ஒரு காயஸ்தா எனப்படும் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடங்கினார். பிறகு காயஸ்தா பாத்ஷாலஸ்லிருந்து உருது கற்கத் தொடங்கிய அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து உயர் கல்வி கற்றார். 1941 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1952 ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.

ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்

இங்கிலாந்தில் முனைவர் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவர், மீண்டும் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் அலகாபாத் நிலையத்திலுள்ள “ஆல் இந்திய ரேடியோவிலும்” சில நேரங்களில் பணிபுரிந்தார். பின்னர் 1955 ஆம் ஆண்டு தில்லிக்கு சென்ற அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சுமார் பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியபோது, மக்மத், ஓதெல்லோ, பகவத்கீதை மற்றும் உமர்கயாம் பற்றிய “ருபாயியத்” போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகங்களுக்கு இந்தியில் மொழிப்பெயர்க்கும் பணி இவரிடம் வந்து சேர்ந்தது.

கவிஞர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளராக அவரின் பயணம்

1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் இவருக்கு பெரும் புகழைப் தேடித்தந்தது மட்டுமல்லாமல், மக்களிடைய மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தந்தது. இதில் ஒவ்வொரு வரிகளிலும் மனிதர்களின் வாழ்க்கையில் மதுவினால் ஏற்படும் சிக்கல்களை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். மேலும் ‘மதுபாலா’ (1936)  மற்றும் ‘மதுகலாஷ்’ (1937) இவரின் புகழ்பெற்ற படைப்புகளாக கருதப்படுகிறது. 1969 ல் நான்கு பகுதிகள் கொண்ட சுயசரிதை புத்தகத்தின் முதல் பதிப்பை “கியா போலூன் க்யா யாத் கரூன்” என்ற பெயரில் வெளியிட்டார். பின்னர் 1970ல் “நீடு கா நிர்மான் ஃபிர்” என்ற பெயரில் இரண்டாம் பதிப்பையும், 1977ல் “பசெரே சே டோர்” என்ற பெயரில் மூன்றாவது பதிப்பையும், 1985ல் “டாஷ்த்வார் சே சோப்பான் தக்” என்ற பெயரில் நான்காவது பதிப்பையும் வெளியிட்டார். 1998 ஆம் ஆண்டு இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட “இன் தி ஆஃப்டர்நூன் ஆஃப் டைம்” என்ற பதிப்பு இந்தி இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

இல்லற வாழ்க்கை

ஹரிவன்ஷ் ராய் பச்சன், 1926 ஆம் ஆண்டு தன்னுடைய 19 வது வயதில் ஷ்யாமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஹரிவன்ஷ் ராய் பச்சனுடனான சுமார் பத்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஷ்யாமா அவர்கள், 1936 ஆம் ஆண்டு காசநோயால் காலமானார். பிறகு ஐந்து ஆண்டுகள் தனிமையில் இருந்த அவர், 1941ல் தேஜி ஸ்ரீ என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அமிதாப் மற்றும் அஜிதாப் என இருண்டு குழந்தைகள் பிறந்தனர்.

இறப்பு

இறுதிகாலத்தில் சுவாசநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிவன்ஷ் ராய் பச்சன் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தன்னுடைய 95வது வயதில் காலமானார்.

காலவரிசை

1907 – நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலம் அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிறந்தார்.

1926 – 19 வது இருக்கும் பொழுது ஷ்யாமா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

1935 – “மதுஷாலா” என்ற இந்தி கவிதைப் புத்தகம் வெளியிடப்பட்டது.

1941 – தேஜி ஸ்ரீ என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

1952 – மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.

1955 – தில்லியில் “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்” இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.

1966 – இந்திய பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.

1969 – சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

1976 – இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.

2003 – ஜனவரி 18 ஆம் தேதி தன்னுடைய 95வது வயதில் காலமானார்

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:08

கம்பர்
---------

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: கிபி 1180

பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: கிபி 1250

பணி: தமிழ்க் கவிஞர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

கம்பரின் கவிப்புலமை

மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.

கம்பராமாயணம்

கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:

சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.

இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.

போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.

இறப்பு

கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:10

திருவள்ளுவர்
--------------
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்

பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய

பணி: புலவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.

மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.

வள்ளுவரின் திருக்குறள்

திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.

ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.

திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.

அவர் இயற்றிய வேறு நூல்கள்

திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:12

குஷ்வந்த் சிங்
------------------
குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 02, 1915

இடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தானில்), பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா

பணி: பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், 1915  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2  ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது), என்ற இடத்தில் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர், ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ்பெற்று விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல அழகான கட்டிடங்களை கட்டியுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை, புது தில்லியில் உள்ள “மாடர்ன் பள்ளியில்” முடித்த அவர், இளங்கலைப் படிப்பை லாகூர் அரசுக்கல்லூரியில் நிறைவுசெய்தார். பிறகு லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1947 ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்தார்.

இலக்கியப் பணி

எழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், தன்னுடைய முதல் நாவலை “மனோ மஜ்ரா” என்ற பெயரில் எழுதினார். எழுதிமுடித்த பின்னரும் இந்த புத்தகம் சில காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பிறகு, “கரூவ் ப்ரெஸ்” என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு “மனோ மஜ்ராவை” அனுப்பிவைத்தார். அந்த போட்டியில், முதல் பரிசை வென்ற அந்த நூல் பிறகு “பாகிஸ்தான் போகும் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. இன்றுவரை போற்றத்தக்க ஒன்றாக கூறப்படும் இந்த நாவலின் கதை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட உன்னதப் படைப்பாகும். பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய் பழகியவர்கள் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதை அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ சமூகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

அவரது படைப்புகள்

“தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.

பணிகள்

இந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டி, 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை “இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி” என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில், சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் “வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்” அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. 1980 முதல் 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

1974 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.”
2006 ஆம் ஆண்டு, பஞ்சாப் அரசால் அவருக்கு “பஞ்சாப் ரத்தன் விருது” வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அவருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு, அவருக்கு “இந்திய சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.
குஷ்வந்த் சிங் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நகைச்சுவையாளராகவும் தனி முத்திரைப் பதித்தவர். வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்தபொழுதும், அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதர் ஆவார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:13

ஜெயகாந்தன்
-------------

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 24, 1934

பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா

பணி: எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்

நாட்டுரிமை: இந்தியன்

 

பிறப்பு

ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்


ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கியம் மீது ஆர்வம் 

சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

எழுத்துலக வாழ்க்கை

ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.

அவரது படைப்புகள்

ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:

‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.

தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.

அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’

விருதுகள்

1972 - சாஹித்ய அகாடமி விருது
2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
2011 – ரஷ்ய விருது
காலவரிசை

1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.

2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:15

பாரதிதாசன்
--------------
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

 

பிறப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

 இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று      

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:16

அமர்த்தியா சென்
---------------
அமர்த்தியா சென் அவர்கள், ‘நோபல் பரிசும்’, ‘பாரத ரத்னா புரஸ்கார் விருதும்’ பெற்று, இந்திய குடிமக்களுள் மிக முக்கியமான பொக்கிஷமாக கருதப்படுபவர். அவர், ஏராளமான மாற்றங்களை பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் கொண்டு வந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் சவால் விடுத்தார். தனது சிறு வயதிலேயே வங்கப் பிரிவினையின் போது நடந்த மோசமான விளைவுகளையும், வன்முறைகளையும் நேரில் கண்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த அனுபவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததோடு மட்டுமல்லாமல், “இந்தப் பிரிவினை, அரசியலில் புதைக்கப்பட்ட நெஞ்சறிந்த மறைப்புரை” என்றும், இந்த அனுபவத்தை தனது படைப்புகளில் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அமர்த்தியா சென் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றி மேலுமறிய ஆவலாக இருந்தால், தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 3, 1933

பிறந்த இடம்: சாந்திநிகேதன், வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (இன்றைய மேற்கு வங்காளம்)

தொழில்: பொருளியலாளர், எழுத்தாளர், பேராசிரியர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அமர்த்தியா சென் அவர்கள், அஷுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதியருக்கு நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மேற்கு வங்கத்திலிருக்கும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். சாந்திநிகேதன், ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளி / கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அமர்த்தியா சென் அவர்களின் மூதாதையர்களின் இருப்பிடம் இப்போது வங்காளத்தின் தலைநகரான ‘டாக்கா’ ஆகும். ஆகவே, அவரது தந்தையான அஷுதோஷ் சென், டாக்கா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து, மேற்கு வங்கத்தின் பொது சேவை ஆணைக்குழு தலைவராகி டெல்லியில் பணியாற்றினார். சென் அவர்கள், சாந்திநிகேதனுக்கு வரும் முன், அவர் வங்காளத்திலிருக்கும் ‘புனித கிரிகோரி பள்ளியில்’ கல்வி கற்றார். சென் அவர்களின் தாய்வழி தாத்தா ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளியில் ஒரு ஆசிரியராகவும், அவரது அம்மா ஒரு மாணவியாகவும் இருந்ததால், சென்னும் இப்பள்ளியில் படித்தார் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரது உயர் கல்விக்காக கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்று பொருளாதாரம் (மேஜர்) மற்றும் கணிதத்தில் (மைனர்) பி.ஏ. பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லூரியில், தூய பொருளாதாரத்தில் மற்றுமொரு பி.ஏ பட்டத்தைப் பெற்றார்.

தொழில்

1956ல் கேம்பிரிட்ஜிலிருந்து திரும்பிய அமர்த்தியா சென் அவர்கள், புதிதாக நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தி மூன்று வயதாக இருந்ததால், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை அது ஏற்படுத்தியது. ஓரிரு ஆண்டுகள் அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர், அவர் கேம்பிரிட்ஜிற்குத் திரும்ப சென்று, டிரினிட்டி கல்லூரியில் தத்துவப் பாடத்தில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு, இந்தியா திரும்பிய அவர், தில்லி பல்கலைக்கழகத்திலும், தில்லி பொருளாதார பள்ளியிலும் பொருளாதார பேராசிரியராக பணியில் அமர்ந்தார். 1970ல், அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” என்ற படைப்பை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டில், அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதால், அவர் டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். இருப்பினும், அவரது மனைவி இறந்ததால், அவர்களது திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டில், லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்த அவர், அதற்கு பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் என்ற பெருமை இவரையே சேரும். 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அவரது படைப்புகள்

சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி, வெளியிட்ட வரலாற்று உரிமை அமர்த்தியா சென் அவர்களுக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு அவர் தனது கட்டுரையான, ‘பாவர்ட்டி அண்ட் ஃபாமைன்ஸ்: (வறுமை மற்றும் பஞ்சம்): உரிம மற்றும் வாழ்வாதாரங்களின்மைக்கான ஒரு கட்டுரையை’ வெளியிட்டார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட “ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப்போர்ட்” (மனித அபிவிருத்தி அறிக்கை), என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டில், அவர் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், அவரது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான “மோர் தான் ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் அவர்கள், இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவைகள் பல முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

பங்களிப்பு

அமர்த்தியா சென் அவர்கள், தனது ஆராய்ச்சி மூலமாக அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய தரங்களைக் கொண்டு வந்தார். இன்று அதிகாரிகளின் செல்வாக்கை நிர்வகித்து, துன்பத்திற்கான வழிகளைக் கண்டுபிடித்து ஒழித்ததோடு மட்டுமல்லாமல், ஏழைகளின் வருமான இழப்பிற்கான மாற்றீடாக இருப்பனவற்றையும் கண்டுபிடித்தார். பொருளாதார வளர்ச்சி பகுதியில், அவர், “ஈக்வாலிட்டி ஆஃப் வாட்” என்ற ஆய்வு கட்டுரையின் மூலமாக ‘செயல்திறனின் கோட்பாட்டை’ அறிமுகப்படுத்தினார். இது பொருளாதார வளர்ச்சியில் அவருடைய முக்கிய பங்களிப்பாகும்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.
1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.
1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.
1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.
1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.
1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’
1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’
1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
1997: ‘எடின்பர்க் பதக்கம்’
1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’
1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’
1999: ‘பாரத் ரத்னா விருது’
1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.
2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’
2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’
2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’
2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’
2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’
யுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
காலவரிசை

1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.

1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.

1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.

1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.

1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.

1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1986: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.

1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:18

மு. கருணாநிதி

--------------

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். எம். கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும்,   சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரது சக்திவாய்ந்த செல்வாக்கு ஆளுமையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூன் 3, 1924

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

தொழில்

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’,  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’,  ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’,  ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் பரவளான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.

அரசியல் வாழ்க்கை

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று,  அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள்,  தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர்  அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.

1967ல்  தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய  அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர்  பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.

சாதனைகள்

கருணாநிதி அவர்கள், 1970ல், பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த  உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  2010 க்கான  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில்,  டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில்,  புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது

தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி அவர்கள்,  மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

விருதுகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
காலவரிசை

1924: கருணாநிதி, திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில், ஜூன் 3ம் தேதி பிறந்தார்.

1942: அவரது பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.

1957: அவர் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1961: திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962: தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967: பொது நல அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

1969: முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.

1970: உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.

1971: இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989-1991: எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.

1996:  நான்காவது முறையாக முதலமைச்சரானார்.

2006: ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிப்பெற்று, மீண்டும் முதலமைச்சரானார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:19

சுப்ரமணிய பாரதியார்
----------------
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:21

சி. என். அண்ணாதுரை
-------------------
அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த  கா. ந. அண்ணாதுரை  அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார்.  திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த கா.ந. அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப்  பெற்று விளங்கிய அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற ஒரு கட்சி எம். ஜி ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண  மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர்  அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

பிறப்பு : செப்டம்பர் 15, 1909

இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

இறப்பு : பிப்ரவரி 3, 1969

தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை : இந்தியா

ஆரம்ப வாழ்க்கை:

அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக  செப்டம்பர்  15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த  முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப்  பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார  சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர்  தன்னுடைய பட்டப்  படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.

1930-ல் தனது 21வயதில்  ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும்,  பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை  பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில  ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப்  பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

அண்ணாவின்  அரசியல் தொடக்கம் :

தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா  1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த  ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.  பிறகு பெரியாருக்கும்  அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து  “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர்,  பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.

திமுக உருவாக்கம்:

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது  காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட்  15, 1947ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால்  மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார்,  இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948ல்  நடந்த “திராவிட கட்சியின் கட்சி”  கூட்டத்திலிருந்து  அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி  1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.

திராவிட நாடு:

பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்த போது, அண்ணா பெரியாரின் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு அளித்தார். ஆனால், பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட அவரின் மருமகனான  இ.வி.கே சம்பத்  இக்கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பது மட்டும் அல்லாமல் பெரியாரின் திராவிட கழகத்தை  விட்டு திமுகவிலும் இணைந்தார்.  ஆனால் அண்ணாவின் திமுக கட்சி தமிழ் திரைப்பட கலைஞர்களை முன்னிறுத்தி செயல்பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத்,  தி.மு.கவிலிருந்து விலகி 1961-ல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற தனி கட்சியை தொடங்கினார்.

1962 ல் நடந்த மாநிலங்கள் அவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா  என்ற நாடு’என்று உரையாற்றினார்.   அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது.  “அண்ணா திராவிட நாடு, திராவிடர்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.

இந்தி எதிர்ப்பு :

1928-ல் மோதிலால் நேரு அவர்கள் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை  பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும்  ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள்.  இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும்  கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.   ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள்,  புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும்  அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு”  நடத்தப்பட்டது.  பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேரு   இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.

தமிழக முதல்வராக அண்ணா:

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல்  கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக   தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3,  1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு”  நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக  கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:

அண்ணா  அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில்  அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும்  எழுதினார்.  அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா,  பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம்  இவரின் முக்கிய படைப்புகளாகும்.

அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:

1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத்  திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி,  K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.

இறப்பு:

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி  3 ஆம் தேதி இறந்தார்.  அவர் புற்று நோயால் அவதிபட்டுக்  கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார்.  அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்  என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :

திமுக வில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை”  என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு  சென்னையில்  நிறுவப்பட்டது.

அண்ணாவின் படைப்புகள்:

1939  – கோமளத்தின் கோபம்
1942  – களிங்கரணி
1943  – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி

குறிப்பிடத்தக்க படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்

காலவரிசை:

1909  – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்

1930  – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.

1934  – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1935  – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

1938  – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

1944  – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1948  – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி”  திரையிடப்பட்டது.

1949  – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.

1962  – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1967  – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968  – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.

1969  – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.

1969  – பிப்ரவரி 3 ம்தேதிதன்னுடைய   59 வது வயதில்சென்னையில்காலமானார்.

1972  – அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.

1978  – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.

1987  – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.

2010   - அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:23

ரவீந்திரநாத் தாகூர்
----------------------

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று,ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. நம் நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கிய அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மே 7, 1861

பிறந்த இடம்: கல்கத்தா

இறப்பு: ஆகஸ்ட் 7, 1941

தொழில்: கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, கல்வியாளர், ஓவியர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடகாசிரியர், மெய்யியலாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார். அவர் தேவேந்திரநாத் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது மகன். அவரது தாத்தா த்வாரகனாத் தாகூர் ஒரு பணக்கார உரிமையாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.

ஆரம்ப கால கல்வி

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், ஓரியண்டல் செமினரி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பாரம்பரிய கல்விமுறைப் பிடிக்காததால், பல ஆசிரியர்களின் கீழ் வீட்டிலேயேபடிக்கத் துவங்கினார். இவருக்கு பதினொரு வயதில் ‘உபாநயன்’ என்ற பூணூல் சடங்கு நடத்தப்பட்டது. இதன் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டு, பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்திற்கு சென்றனர். பின்னர், இமயமலைப் பகுதியான டல்ஹௌசியை அடையும் முன், அம்ரித்சாரிலும் தங்கினர். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பலருடைய சுயசரிதைகள்மற்றும் வரலாறுகளைக் கற்றதுடன், வீட்டிலேயே வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களையும் படித்தார். காளிதாசரின் மரபார்ந்த கவிதைகளையும் ஆர்வத்துடன் கற்றார்.

கவிதைகள் எழுதும் ஆர்வம் 

1874ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டில், அதாவது 1875ல்,தாகூர் அவர்களின் தாயார் சாரதா தேவி காலமானார். கவிதைகளில் ரவீந்திரநாத்தாகூர் அவர்களின் முதல் கவிதைப் புத்தகமான‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை) 1878ல் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், தாகூர் அவர்கள் சட்டம் பயில்வதற்காக அவரது மூத்த சகோதரரான சத்யந்திரநாத்துடன் கடல்வழியாக இங்கிலாந்து சென்றார். ஆனால், ஷேக்ஸ்ப்பியர் மற்றும் பிறரது ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே 1880ல் வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.பின்னர், ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இல்லற வாழ்க்கை 

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ஆனால், இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர்.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் 

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1884ல், ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும், அவர் ‘ராஜா-ஓ-ராணி’ (கிங் மற்றும் ராணி) மற்றும் ‘விசர்ஜன்’ (தியாகம்) –என்ற நாடகங்களையும் எழுதினார். 1890 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார். 1893 முதல் 1900 வரை, தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார். 1901ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். பழைய இந்திய ஆசிரம முறை அடிப்படையில்,அவர் சாந்திநிகேதனில் ‘போல்பூர் பிராமசார்யாஸ்ரமம்’ என்றொரு பள்ளியைத் துவங்கினார். 1902 ஆம் ஆண்டில், அவரது மனைவி மிருணாளினி இறந்தார். பின்னர், தாகூர் அவர்கள் இயற்றிய கவிதைகள் தொகுப்பான ‘ஸ்மரன்’ (மெமோரியம் அங்குலம்), என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார்.

வங்கப்பிரிவினையில் தாகூரின் பங்கு

1905ல், கர்சன் பிரபு, வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார்.இந்த முடிவை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கடுமையாகப் போராடினார். தாகூர் அவர்கள், பல தேசிய பாடல்களை எழுதி, பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அவர் பிரிக்கப்படாத வங்காள அடிப்படை ஒற்றுமையை குறிக்கும் விதமாக‘ராக்கிபந்தன் விழாவை’வங்கத்தில் அறிமுகப்படுத்தினார்.

தாகூரின் கீதாஞ்சலியும், நோபல் பரிசும் 

1909ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், ‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டில், இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார். இந்த லண்டன் பயணத்தின் போது, அவர் கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.இவர் லண்டனில் மதிக்கத்தக்க ஆங்கிலேய ஓவியரான வில்லியம் என்பவரை சந்தித்தார். அவரது கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரோத்தென்ஸ்டீன்அவர்கள், அவரது கவிதைகளைப் பிரதிகள் எடுத்து,  ஈட்ஸ் மற்றும் பிற ஆங்கிலக் கவிஞர்களுக்கும் கொடுத்தார். ஈட்ஸ் அவர்களும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். செப்டம்பர் 1912ல்,லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்ட போது, தாகூர் அவர்கள், அதற்கு முன்னுரை எழுதினார். 1913 ஆம் ஆண்டில்,ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 1915 ஆம் ஆண்டில்,தாகூர் அவர்களுக்கு, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

சுதந்திர போராட்டத்தில் தாகூரின் பங்கு 

1919ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, தாகூர் அவர்கள் ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவர்கள் வழங்கிய ‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார். அவர் காந்திஜியின் ஒரு ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அவர் கொள்கை என்ற நோக்கில் இருந்து தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்து, அதற்கு பதிலாக ஆன்மீக மதிப்புகள் மற்றும் பண்பாடு, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைகள் கொண்ட ஒரு புதிய உலக கலாச்சாரத்தை உருவாக்க எண்ணினார். அவரது கருத்துக்களுக்கு ஒரு கருத்தியல் ஆதரவு பெறாதாதன் காரணமாக, அவருடைய சிந்தனைகளில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கியே இருந்தார். 1916 முதல் 1934 வரை, அவர் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தாகூரின் பரந்த மனப்பான்மையும், கூர்ந்த அறிவுத் திறமையும் 

1921ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவர் தனது புத்தகங்களுக்காகக் கிடைத்த நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். தாகூர் அவர்கள், ஒரு படைப்பாக்க மேதையாக மட்டுமல்லாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராகவும் திகழ்ந்தார். தற்கால நவீன நியூட்டனின் இயற்பியலில் தாகூர் அவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருந்ததால், புதிதாக வளர்ந்து வரும்குவாண்டம் மெக்கானிக்ஸின் கொள்கைகள் மற்றும் குழப்பங்களின் பேரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் 1930ல் நடந்த ஒரு விவாதத்தில், அவரால் தனது கருத்துகளை முன் வைக்க முடிந்தது. அவரது சமகாலத்தவர்களானஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹெச்.ஜி.வெல்ஸ் போன்றோருடன் நடந்த கூட்டங்கள் மற்றும் நாடா பதிவு உரையாடல்கள் மூலமாக அவரது திறமைகளைசங்கிரகிக்கமுடிந்தது.1940ல்,சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்து, ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

இறப்பு

நீண்ட காலம் நோய்வாய்பட்டகுருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.

காலவரிசை

1861: கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார்.

1873: பூணூல் சடங்கிற்குப் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.

1874: அவரின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது.

1875: அவரது தாயார் சாரதா தேவி காலமானார்.

1878: முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை)வெளியிடப்பட்டது.

1878: சட்டம் பயில்வதற்காக கடல்வழியாக இங்கிலாந்து சென்றார்

1880: கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.

1883: டிசம்பர் 9ஆம் தேதி, 1883ஆம் ஆண்டில் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார்

1884: ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். 1890:தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார்.

1893–1900:  தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார்.

1901: பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.

1902: அவரது மனைவி மிருணாளினி இறந்தார்.

1909:‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார்.

1912: இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார்.

1912: லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்டது.

1913: கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.

1915:ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

1919: ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர்‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார்.

1916 –1934: சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1921:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

1940:சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1941: கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:25

டி. சதாசிவம்
---------------
‘டி.சதாசிவம்’ என்றும் ‘தியாகராஜ சதாசிவம்’ என்றும் ‘கல்கி தியாகராஜ சதாசிவம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் அவர் தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்த மிகப் பெரிய சுதந்திர போராட்ட வீரர்களுள் ஒருவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல கலகங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தாலும், தியாகராஜ சதாசிவம் அவர்கள் ஒரு திறமையான பாடகர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜ சதாசிவம் அவர்களை ஒரு சுதந்திர போராட்ட வீரராக பலருக்குத் தெரிந்திருந்தாலும், திரையுலகில் தயாரிப்பாளராக இவருடைய பங்களிப்பு மிகவும் பேசப்பட்டது. மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றான புகழ்பெற்ற தமிழிதழான ‘கல்கியை’,  கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து  துவங்கியது, டி.சதாசிவம் அவர்களின் வாழ்க்கையை பெரிதும் அலங்கரித்தது. இத்தகைய புகழ் தரும் பறைசாற்றல்கள் இருந்தாலும், டி.சதாசிவம் அவர்கள் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பாரம்பரிய கர்நாடக பாடகர்களுள் ஒருவரான எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் கணவர் என்று நன்கு அறியப்பட்டார்.

பிறப்பு: செப்டம்பர் 4, 1902

பிறந்த இடம்: ஆங்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா

இறப்பு: நவம்பர் 22, 1997

தொழில்: எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், டி.சதாசிவம் அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். டி.சதாசிவம் அவர்கள், தனது வாழ்க்கைப் பயணத்தை சென்னை மாகாணத்தின் கீழ் வரும் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆங்கரையில் தொடங்கினார். அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில், செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார். ஆகவே, தனது இளம் வயதிலேயே, மரபுசார்ந்த விஷயங்களை அறிந்துக் கொண்டார்.

ஆரம்ப வாழ்க்கை

ஒரு சிறுவனாக இருக்கும் காலத்திலேயே டி.சதாசிவம் அவர்கள், சுதந்திர போராட்டத்தில் சேர வேண்டுமென்பதற்காக தனது பள்ளியை விட்டுவிட்டார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும். தொடக்கத்தில், விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரமான செயல்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், சிறுது காலத்திற்குப் பின், அவர் காந்தியடிகளின் அஹிம்சைத் தத்துவங்களைப் பின்பற்றினார். ஆங்கிலேயரைக் கொன்ற சுதந்திர போராட்ட வீரரான, சுப்ரமணிய சிவாவின் தீவிர பக்தரான டி.சதாசிவம் அவர்கள், ‘பாரத் சமாஜில்’ சேர்ந்தார். டி. சதாசிவத்தின் தைரியத்தைக் கண்டு வியந்த சுப்ரமணிய சிவா அவர்கள், அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழுநோயால் அவதியுற்ற சுப்ரமணிய சிவாவிற்கு சேவை செய்தார்.

தொழில்

1920ல், சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான ‘சட்டமறுப்பு இயக்கத்தின்’ தன்னை ஒரு அங்கமாக கருதி செயல்பட தொடங்கினார். அவர் வகித்த இந்தப் பங்கே அவரது இசைத் திறமையை வெளிக்கொண்டு வர உதவியது. டி.சதாசிவம் அவர்கள் கிராமம், கிராமமாக சென்று தன் இசைத் திறமையின் மூலம் தேச பக்திப் பாடல்களைப் பாடினார். இது மக்களை மிகவும் கவர்ந்தது. அவரது திறமையும், சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்புணர்வும், மக்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லமால் சுதந்திர உணர்வையும் விதைத்தது.

 இல்லற வாழ்க்கை 

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை, ஜூலை மாதம் 1936ல் டி.சதாசிவம் அவர்கள் சந்தித்தார். இதுவே, அவர் வாழ்வின் மிக அற்புதமான நிகழ்வாகும். இருவரும் ஈடிணையாயிருந்தனர். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாடகியாக இருந்ததால், டி.சதாசிவம் அவர்களின் சித்தாந்த மற்றும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், ஆதரவு தரவும் முடிந்தது. அதேசமயம், சதாசிவம் அவர்களும், சுப்புலட்சுமி அவர்களின் இசை வாழ்க்கைக்கு ஆதரவுத் தந்து பெரும் வழிகாட்டியாக இருந்தார். இருப்பினும், அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், டி.சதாசிவம் அவர்கள் ஏற்கனவே அபிதகுசாம்பாள் என்பவரை மணமுடித்திருந்தார். அவர்களுக்கு ராதா, விஜயா என்ற மகள்களும் இருந்தனர். இதற்கிடையில், அவரது மனைவி ஜூலை 10, 1940ல் இறந்ததால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணமுடித்தார்.

கல்கி நாளிதழ் 

1941ல், டி.சதாசிவம் அவர்கள், தன் வாழ்வில் பெரும் திருப்பத்தை சந்தித்தார். இந்த ஆண்டில், அவருடைய நண்பரான ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து “கல்கி” என்ற தேசிய வாராந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிக்கை, பல பிரதிகள் விற்று மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 1954ல், பத்திரிகையாசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பின், டி.சதாசிவம் அவர்கள், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ‘கல்கி’ நாளிதழின் தரத்தையும், குணத்தையும் கருத்தில் கொண்ட டி.சதாசிவம் அவர்கள், எந்த ஒரு சமரசமுமில்லாமல் மிக சிறப்பான உள்ளடக்கத்தையே வெளியிட விரும்பினார்.

சதாசிவம் ஆற்றிய தொண்டுகள் 

டி. சதாசிவம் அவர்கள், ஒரு சிறந்த நண்பராக இருந்தார். இளம் வயதிலிருந்த நட்பு வட்டத்தை, அவர் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். ஏழை, எளியோருக்கு அவர் செய்த அபரிமிதமான தொண்டும், அவர்களுக்கு செய்து கொடுத்த வசதியும் பெரிதும் பேசப்பட்டது. மேலும், வேலையற்றோருக்கு பல உதவிகளும் செய்தார். டி. சதாசிவம் அவர்கள் தனது மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சேர்ந்து அறக்கட்டளைக்காக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் வரை வழங்கினார். டி. சதாசிவம் அவர்களை ‘மனிதருள் மாணிக்கம்’ என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களாலேயே சொல்ல முடியும்.

டி.சதாசிவம் அவர்களின் ஆன்மீகத் தலைவரான, காஞ்சி காமகோடி பீடத்தின்  சங்கராச்சாரியராக இருந்த மறைந்த ‘சந்திரசேகராந்திர சரஸ்வதி’ அவர்களின் நினைவாக ஒரு ‘மணி மண்டபம்’ கட்ட நிதித் திரட்ட முயன்றார். இதனையே, தனது வாழ்வின் இறுதி நோக்கமாக கொண்டிருந்தார். தனது நண்பர்களின் உதவியுடன், காஞ்சிபுரத்திற்கருகே மணி மண்டபத்தைக் கட்டி முடித்தார். இதுவே, நண்பர்களின் மீது எவ்வளவு பற்றுடையவராக இருந்தாரோ, அதே அளவு தனது குருவிடத்திலும் பற்றுடையவராக இருந்தார் என்பதற்கு சான்று. தனது குருவை, ‘பூமியின் கடவுள்’ என்று நினைத்து வழிபாடு செய்தார்.

இறப்பு

 ‘கல்கி’ தியாகராஜ சதாசிவம் அவர்கள், தமிழ்நாட்டின் தென்னகரமான சென்னை மாநகரில், நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.

 பரம்பரைச்சொத்து

டி.சதாசிவம் அவர்கள் இன்று இல்லையென்றாலும், அவரது புராணம் இன்றும் வாழ்கின்றது. சி.ராஜகோபாலாச்சாரியின் மரணத்திற்குப் பின், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற சுதந்திர போராளிகளுள் ஒருவராவார். எனினும்,  நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அவர் கொண்ட ஈடுபாட்டிலும், பற்றிலும், அவர் தனது இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார்.

 காலவரிசை

1902: சென்னை மாகாணம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருக்கும் ஆங்கரையில் பிறந்தார்.

1920: சட்டமறுப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

1936: எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை சந்தித்தார்.

1940: அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை மணமுடித்தார்.

1941: தனது நண்பரான ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, தேசிய வாராந்திர நாளிதழான ‘கல்கியை’ தொடங்கினார்.

1997: சென்னையில் காலமானார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:27

சரோஜினி நாயுடு
----------------
சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள்,  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி அறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: பிப்ரவரி 13, 1879

பிறப்பிடம்: ஹைதராபாத்

இறப்பு: மார்ச் 2, 1949

தொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்

நாட்டுரிமை: இந்தியா 

பிறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், ஹைதெராபாத்தில், ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். அவர் ஹைதெராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராவார். சரோஜினி நாயுடு அவர்களின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார், மேலும், அவர் பெங்காலியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார், சரோஜினி நாயுடு அவர்கள். அவரது சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.

ஆரம்ப கால கல்வி

சரோஜினி நாயுடு அவர்கள், இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

கவிதைகள் மீது பற்று 

சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். பல கவிதைகள் எழுதிய அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதெராபாத் நிஜாம், வெளிநாடு சென்று அவர் படிக்க உதவித்தொகையும் வழங்கினார். தனது 16 வது வயதில், அவர் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் கல்விப் பயின்றார்.  அங்கு அவர், அவரது சமகால புகழ்பெற்ற மேதைகளான ‘ஆர்தர் சைமன்’ என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். காஸ் அவர்கள், சரோஜினி நாயுடு அவர்களின் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோயில்கள், சமூக சூழல், போன்றவற்றை ஒட்டியே எழுதுமாறு அவருக்கு அறிவுரைக் கூறினார். அவர் தற்கால இந்திய வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளைத் தனது கவிதைகளில் சித்தரித்தார். சரோஜினி நாயுடு அவர்களுடைய படைப்புகளான “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”,  மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.

காதல் மற்றும் இல்லற வாழ்க்கை 

சரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக அவர் ஒரு மருத்துவராக இருந்த அவர் ஒரு அல்லாத பிராமணர். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா,  பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.

இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு

1905ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

சரோஜினி ஆற்றிய பணிகள்

சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.

சரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.

1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல்,  நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.

ஆகஸ்ட் 15,  1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

இறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

காலவரிசை

1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905:  வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 14:28

அரவிந்த் அடிகா
---------------
சிறந்த மொழித் திறமையும் எழுத்துத் திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா, பிரிட்டனின் மிகவும் மதிப்புமிக்கக் இலக்கிய விருதான “மான் புக்கர்” விருதைப் பெற்றவர். இவரின் முதல் புதினமான “தி வைட் டைகருக்கு” கிடைக்கபெற்றதன் மூலமாக இந்தியா பெருமை கொள்கிறது.

பிறப்பு: அக்டோபர் 23, 1974

பிறப்பிடம்: சென்னை (தமிழ் நாடு)

தொழில்: எழுத்தாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அரவிந்த் அடிகா, அக்டோபர் 23, 1974 ஆம் ஆண்டு, டாக்டர் கே. மாதவா அடிகாவுக்கும், உஷா அடிகாவுக்கும் மகனாக சென்னையில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அவர் தனது பள்ளிப்படிப்பை, மங்கலூரிலுள்ள கனரா உயர்நிலைப் பள்ளி மற்றும் புனித ஆலோய்சியஸ் (Aloysius)உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். அவர் 1990ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகவும், இவருடைய மூத்த சகோதரன் ஆனந்த் அடிகா இரண்டாவது மாணவனாகவும் தேர்ச்சிப் பெற்றனர். அதுமட்டுமல்லாமல்,பி.யு.சி (PUC)தேர்வில், மாநிலத்திலேயே முதல்மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு குடிபெயர்ந்ததால்,தன்னுடைய படிப்பை “ஜேம்ஸ் ரூசே வேளாண் உயர்நிலைப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர் நியூயார்க்கிலுள்ள (அமெரிக்கா) கொலம்பியா பல்கலைக்கழகத்தில், “ஆங்கில இலக்கியம்” படித்தார். 1997 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த அவர், ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள மாக்டலன் கல்லூரிக்குச் சென்றார்.அங்கு “வோல்ஃப்ஸன் கல்லூரி” (ஆக்ஸ்போர்ட்) நிவாத் தலைவரான ஹெர்மியோன் லீ தலைமையில் கீழ் கவிகற்றார்.

பணிகள்: 

பொருளாதார பத்திரிக்கைகளில் செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, ‘மணி’, ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஆகிய பத்திரிக்கைகளிலும் செய்தியாளராக பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் தென் ஆசிய நிருபராகப் பணியாற்றிய அவர் பின்னர், ‘டைம்ஸ்’ பத்திரிக்கையில் இந்திய செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு டைம்ஸ் பத்திரிக்கையில் பாதிநேரமே வேலைபார்த்த இவர், தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன் முதல் இலக்கிய நாவலான “தி வைட் டைகரை” எழுதினார்.இந்த புதினத்திற்கு, பிரிட்டனின் புகழ்பெற்ற இலக்கிய விருதான “மான் புக்கர் விருது”2008 ஆம் ஆண்டு கிடைத்தது. ‘மான் புக்கர் விருது’ பெறும் நான்காவது இந்தியர் என்ற பெருமையையும் அவருக்கு தேடித்தந்தது. அதன் பின்னர் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னை உருவாக்கிய “புனித ஆலோய்சியஸ் (Aloysius) கல்லூரிக்கு நன்றியின் அடையாளமாக தனக்கு கிடைத்த பரிசின் மொத்தத்தொகையில் ஒரு பகுதியை வழங்கினார். இந்த தொகை “ஆலோய்சியன் (Aloysian) பாய்ஸ் இல்லத்தில்” ஏழ்மையில் வாடும் குழந்தைக்கு உதவித்தொகை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது.

தி வைட் டைகர் நாவலின் கரு:

இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்,‘ஒரு கிராமத்தில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து சற்று படிப்பறிவு இல்லாத ஒருவனின் மனப்பான்மையையும்,கண்ணோட்டத்தையும் பிறகு நாகரிக உலகில் அவனுடைய வளர்ச்சியையும் கருவாகக் கொண்டுள்ளது’. அதை கோபம், கனவு, நகைச்சுவை கலந்து மிக அழகிய நடையில் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியில் ஏழைகளின் நிலையையும் மனம் வறுட விவரித்துள்ளார். தொகுத்து எழுதப்பட்ட இந்த நாவல், இந்தியாவில் 2,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்புகள்:

இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறப்புபெற்று விளங்குகிறார்.

நாவல்கள்:

தி வைட் டைகர் (2008)
பிட்வீன் த அஸ்சாஸிநேஷேன், 2008
லாஸ்ட் மேன் இன் டவர் ட்யூ டு பி பப்லிஷ்ட், 2011
சிறுகதைகள்:

சுல்தான் பீரங்கி படை, 2008 (ஆன்லைன் உரை)
மணம், 2008 (ஆன்லைன் உரை)
‘லாஸ்ட் கிறிஸ்துமஸ் இன் பாந்திரா’,2008(ஆன்லைன் உரை)
யானை, 2009 (ஆன்லைன் உரை)
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

“மான் புக்கர் விருது” (2008)
காலவரிசை:

1974 – சென்னையில் பிறந்தார்.

1990 – எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

1997 – பட்டபடிப்பை முடித்தார்.

2008 – ‘மான் புக்கர் விருது’ வழங்கப்பட்டது.

2009 – ‘தி வைட் டைகர்’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.

^
இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

நன்றி ; ITSTAMIL
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் Empty Re: இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum