Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு
Page 1 of 1
பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு
தொடர்பதிவுகள் முடிவதில்லை என்பது போல் கடவுளைக் கண்டு கேட்ட கேள்விகள் இன்னும் முடியாதபட்சத்தில் இப்போ பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில் சகோதரி மகிழ்நிறை மைதிலி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்... ஆனா சகோதரி தேன் மதுரத் தமிழ்கிரேஸ்கிட்ட நம்ம ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மாட்டிக்கிட்டதும் இல்லாம நம்மளையும் மாட்டிவிட்டுட்டாங்க... சரி அழைத்தாச்சு... எழுதுறதுதான் மரியாதை... அப்படியே நமக்கும் ஒரு பதிவு தேறும்... அதுபோக நாம ரெண்டு அப்பாவிகளை மாட்டிவிடலாமே... சரி வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
நாம இருந்தது தமிழகத்தின் கடைக்கோடியில்... கல்லூரி, பல்கலைக்கழகம், பின்னர் தேவகோட்டை கல்லூரியில் பணி என என் வாழ்க்கை வயலோடும் வரப்போடுமே திருமணம் வரை பயணித்தது. எங்கு சென்றாலும் பேருந்துப் பயணமே... ரயில் பயணம் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான். முதல் பயணம் சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னோட சான்றிதழ்களில் அமீரக தூதரகத்தில் கையெழுத்துப் பெறுவதற்காக மனைவியின் மாமா மற்றும் உறவினர் பையனுடன் போனேன். மிகவும் அருமையானதொரு பயணம்... ஒரு ராணுவ வீரரின் குடும்பத்துடன் பேசியபடி பயணித்தோம். இரண்டு நாட்கள் பயணம்... சந்தோஷமான பயணம்.
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
மறக்கமுடியாத பயணம்ன்னா நிறைய இருக்கு... ஒவ்வொன்னாப் பார்ப்போமே... ரயிலில் என்றால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சென்ற பயணங்கள்... அதிலும் குறிப்பாக நான், மனைவி, என் மகள் ஸ்ருதி என மூவரும் பயணித்த பயணங்கள்... ஸ்ருதிக்கு சன்னல் வழியே செழிப்பான, விளைந்து நின்ற வயல்களைக் காட்டியபடி பயணித்தது மறக்க முடியாதது.
பேருந்தில் என்றால் எம்.சி.ஏ., பண்ணும் போது காரைக்குடியில் இருந்து என்.என்.எல் பேருந்தில் பயணித்த தினங்கள்... பிடித்த பாடல்கள்... எங்களது நட்புக்கூட்டம், கண்டக்டருடன் அரட்டை, எங்களுக்காக பேருந்தை நிறுத்தி வைத்து ஏற்றி வருவது என அது ஒரு சந்தோஷமான பயண அனுபவம்தான் போங்கள்.
வேனிலோ காரிலோ என்றால் அம்மா, அப்பா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அழகர் கோவில் சென்று அப்படியே மீனாட்சியை தரிசித்து வரும் அந்த நாட்கள் என்றுமே மகிழ்ச்சியான நாட்களே... அப்படி ஒரு பயணம் சென்ற முறை அழகர்கோவிலுக்கு ஏற்பாடாகி பின்னர் சிலகாரணங்களால் முடியாமல் போக பின்னர் திருச்செந்தூருக்கு அதேபோல் ஒரு பயணம் அமைந்தது. இப்ப இருக்கும் குடும்ப பிரச்சினைகளில் இனி அது போன்றதொரு பயணம் அமையுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்தப் பயணம்தான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான பயணம்.
பைக்கில் என்றால் எங்கள் கணிப்பொறி மையம் பள்ளிகளில் வகுப்பெடுக்கும் போது கிட்டத்தட்ட 20, 25 கிலோ மீட்டரில் இருக்கும் கிராமத்துப் பள்ளிகளுக்கு நானும் என் நண்பன் முருகனும் ஆளுக்கொரு வண்டியிலோ அல்லது ஒரே வண்டியிலோ முன்னால் கணிப்பொறி மற்றும் கீபோர்டை வைத்து ஓட்ட பின்னால் ஒருவர் சிபியூ பிடித்திருக்க பயணிப்போம். அந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்.
சைக்கிளில் என்றால் கல்லூரி படிக்கும் போது நாங்கள் பத்துபேர் ஒரு குழுவாய் இருப்போம்... நல்ல நட்பு வட்டம்... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு தேவகோட்டையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் சென்றோம். அது மிகவும் இனிமையான பயணம்.. கல்லூரி வாழ்க்கையை நினைத்தால் மனசுக்குள் நவநீ, ஆதி, திருநா, ராம்கி, பிரான்சிஸ், முத்தரசு, அண்ணாத்துரை, சேவியர் என எல்லாரும் வந்து செல்லும்போது இந்த சைக்கிள் பயணமும் வந்து மலர்ச்சியை மனதில் புகுத்திச் செல்லும். அதேபோல் தினமும் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் நானும் ராம்கியும் மட்டும் சைக்கிளை மெதுவாக ஓட்ட மற்றவர்கள் நடந்துவர பயணித்த மூன்று வருடங்கள் மறக்கமுடியாதது.
நடைப்பயணம் என்றால் பழனிக்கு நடந்த அந்த ஆறு ஆண்டுகள், சபரிமலை சென்ற நான்கு ஆண்டுகள், திருப்பரங்குன்றம் சென்ற பயணம் மறக்க முடியாதது.
3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
நமக்கு பேருந்துப் பயணத்திலே அலாதி இன்பம்... அதுவும் பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கையோதான் என்னோட தேர்வு. காற்றும் வேண்டும் அதே நேரம் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க வேண்டும் எனவே சன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கவே பிடிக்கும். பேருந்தில் நின்று கொண்டோ அல்லது படியில் தொங்கிக் கொண்டோ பயணிக்கப் பிடிப்பதில்லை.
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
ராசாதான்..... 80, 90களில் ராசாவின் ஆதிக்கம் மேலோங்கிய பாடல்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மனநிலையைப் பொறுத்து மெலோடியோ அடிப்பாடலோ கேட்கத் தோன்றும். ராமராஜனின் பாடல்கள் எல்லாம் விருப்பம்... வேனில் பயணித்தால் நான் தேடித்தேடி பதிந்து வைத்திருக்கும் கேஸெட்டுக்களை அள்ளிக் கொண்டு போய்விடுவேன். அதுதான் காலை முதல் இரவு திரும்பும் வரை.... இப்பவும் எனக்கு ராசா பாடல்களே...
5.விருப்பமான பயண நேரம்?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எப்பக் கிளம்ப வேண்டும் என்றாலும் ரெடிதான்.. இந்த நேரத்தில்தான் பயணிக்கனும் என்று எண்ணுவதில்லை.
6. விருப்பமான பயணத்துணை?
படிக்கும் காலத்தில் ஏதாவது வார, மாத இதழ்கள். இப்போ பெரும்பாலும் மொபைலில் சேமித்து வைத்திரும் பாடல்கள்.
7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?
பயணத்துக்கு என தனி புத்தகம் எல்லாம் எடுப்பதில்லை... பெரும்பாலும் வார மாத இதழ்கள்தான்.
8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
மழையில் நனைந்தபடி சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பது.... அதுவும் மழை அடித்துப் பெய்யும் போது முழுக்க நனைந்தபடி முகத்தில் சுளீரென பட்டுத் தெறிக்கும் மழையை ரசித்தபடி பயணிப்பதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அப்படியெல்லாம் எதுவுமில்லை... கேட்க்கும் பாடல் வரியும் வார்த்தையும் மாறாமல் அப்படியே முணுமுணுப்பேன்... அதே ராகத்திலும். அது இப்பவும் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது காதில் நுழையும் பாடல் வாய் வழியாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் பிடித்த பாடலென்றால் சத்தமாகவும் வரும்.
10. கனவுப் பயணம் ஏதாவது ?
கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை... நிறையக் கனவுகளைக் செயலாக்க நினைத்து இன்னும் ஏமாற்றத்தில்தான் இருக்கு. அதனால் கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் எங்காவது பயணிக்க வேண்டும்.
(மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் இந்தப்பாடல்)
சரி.. நம்ம பயணம் முடிவுக்கு வந்தாச்சு... அடுத்த டிரைவரை மாற்றி விட்டுட்டு நாம இறங்கணும்.. அப்படி மாட்டபோற ரெண்டு பேரு... ம்... கில்லர்ஜிஅண்ணாவை மாட்டலாம் என்றால் நிஷா அக்கா முந்திக்கிட்டாங்க... அதனால நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களையும் சந்தித்ததும் சிந்தித்ததும் வெங்கட் நாகராஜ்அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். இருவரும் நேரம் கிடைக்கும் போது மெதுவாக என்னைத் திட்டாமல் (திட்டமாட்டாங்க) எழுதுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இதுல என்ன விஷேசம்ன்னா நான் சொல்லியிருக்கும் இருவருக்குமே பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரின் பகிர்வும் பக்காவாக இருக்கும் என்பதை இங்கு சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» பயணங்கள் முடிவதில்லை...
» ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum