Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
4 posters
Page 1 of 1
சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி குறித்த புதிய விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சு பணிப்புரை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்த மோசடியைத் தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் அனுமதி பெறாமல் எந்தவொரு உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்வதாயின் சுகாதார அமைச்சில் முன் அனுமதி பெறுவது அவசியம்.
உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தொடர்பில் உத்தியோகபூர்வமான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்திருப்பதாகவும், அதுவரையான காலப் பகுதியில் குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சட்டவிரோதமான சிறுநீரக மாற்றுச் சிகிச்சைஇடம்பெறுவதாக இரண்டாவது தடவையாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் திகதி இது விடயம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இடம்பெறுவதாக இந்திய ஊடகங்கள் இந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த நான்கு வைத்தியசாலைகளைச் சேர்ந்த ஆறு வைத்தியர்கள் இதில் தொடர்புபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையில் உள்ள நான்கு வைத்தியசாலைகளில் இவ்வாறான சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை இடம்பெறுவதாகவும், சிறுநீரகம் வழங்குபவர்கள் மற்றும் அதனைப் பெறுபவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோசடிக்கு முக்கியமான நபரான அஹமதாபாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரஜாபதி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த மோசடிக்கு இந்தியா ரூபாயில் 28 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அறிவிடப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியின் பிரதான நபராக செயற்படும் சுரேஷ் பிரஜாபதி என்பவர் தனக்கு 5 இலட்சம் ரூபாவை வைத்துக்கொண்டு எஞ்சிய பணத்தை வைத்தியசாலைக்கு வழங்குவதாகக் கூறியுள்ளார். இந்த மோசடி மூலம் அவர் 3 கோடி இந்திய ரூபாய்களை ஈட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த ஆறு வைத்தியர்களுக்கு எதிராக இந்தியப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வைத்தியர்கள் 60ற்கும் அதிகமான சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்டிருப்பதாகவும் இந்து பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் பிரஜாபதி என்ற முக்கிய நபருடன் அவருக்கு உதவியாக இருந்த பிறிதொரு நபரும் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்களுக்கு டெல்லி, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களை பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தெலுங்கானாவை சேர்ந்த வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட பலரை, தெலுங்கானா குற்றப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
அட! எல்லாத்திலும் வேஷம்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடை யில் இடம்பெறும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன. இது குறித்துக் கவனம் செலுத்திய சுகாதார அமைச்சு, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது.
இது விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு பணித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் பாலித்த மஹிபால, தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்பாளர் உட்பட மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பூரண ஒத்துழைப்பு இன்மையால் விசாரணைகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான நிலையிலேயே குறித்த விடயம் பற்றி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், விசாரணை அறிக்கையின் பிரகாரம் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களும் சிறுநீரக மாற்று சிகிச்சை மோசடிக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், மருத்துவர்கள் தவறு செய்வது நிரூபனமானால் அவர்களை மருத்துவ தொழில் வான்மையில் இருந்து நீக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் சிறுநீரக மாற்று மோசடி குறித்த வினவப்பட்டது.
6 மருத்துவர்கள் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் எமக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. சி.ஜ.டிக்கு இது தொடர்பில் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. தேவையான தகவல்களை திரட்டுமாறு சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளேன். அவயவங்களை மாற்றுவது பாரிய வியாபாரமாக மாறிவருகிறது. பணம் தருவதாக வாக்களித்து அழைத்து வந்து இங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு சத்திர சிகிச்சைக்காக 28 இலட்சம் ரூபா செலவானாலும் 44.5 இலட்சம் ரூபா அறவிடப்படுகிறது.எஞ்சிய பணத்தை தரகர்களும் வேறு தரப்பினரும் பெறுகின்றனர்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் மருத்தவர்கள் ,குறித்த நபர் விரும்பி தனது சிறுநீரகத்தை வழங்குகிறாரா இல்லையா என அறிந்திருக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வழங்குவதை தடைசெய்வதற்காக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், வெளிநாட்டில் இருந்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு வருபவர்கள் சுகாதார அமைச்சிடம் முற்கூட்டியே அனுமதி பெறவேண்டும். இருந்தபோதும் உறுப்புக்களைத் தானம் செய்பவர்கள் தொடர்பில் வழங்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ அறிவிப்பு
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று சத்திரிசிகிச்சை செய்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் பணிப்பிற்மைய அமைச்சு இந்த நடவடிக்ைகயை எடுத்துள்ளதுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபாலதெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இலங்கையிலுள்ள 06 வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸார் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுக்கும் இதில் தொடர்பிருப்பதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளமை தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் இலங்கையருக்கு நாட்டிலுள்ள எந்த அரச மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தடை எதுவுமில்லை என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
சிறுநீரக மலையக பெருந்தோட்ட மக்களில் யாராவது மோசடிக்குள்ளாகி இருப்பார்களாயின், அவர்கள் தங்களது அத்தாட்சி பூர்வமான அனைத்து விபரங்களையும் தெரிவிக்குமாறு சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி. அந்தோனிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்
இது சம்பந்தமாக தாம் சுகாதார அமைச்சர ராஜித சேனாரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நடவடிக்கை எடுப்பதோடு எதிர்கால மலையக சந்ததிகளை இவ்வாறான அனைத்து மோசடி களிலிருந்தும் மீட்பதை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்முடன் தொடர்பு கொள்பவர்கள் 0773059167 என்ற தொலைபேசி ஊடாகவும்amuthu19@yahoo.om என்ற மின் அஞ்சல் மூலமாகவும் விபரங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இலங்கையிலுள்ள 06 வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸார் முறைப்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுக்கும் இதில் தொடர்பிருப்பதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
ஐயோ! முடியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
Nisha wrote:ஐயோ! முடியல்ல!
உடனே கம்ளைன்ட் பண்ணுங்க அக்கா
ஆமா ஏன் முடியலை, மலையக ஆஸ்பத்திரிப் பக்கம் நீங்களும் சோதனைக்குப் போனிங்களா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி
நேசமுடன் ஹாசிம் wrote:அனைத்திலும் மோசடி விழிப்புணர்வுப் பதிவு நன்றி நண்பன்
புலனாய்வு நடக்கிறது யார் அந்த திருட்டு வைத்தியன் கண்டு பிடிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum