Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
3 posters
Page 1 of 1
பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
பாரதி : கண் திறந்திட வேண்டும் - 1
வெள்ளி மாலை பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவான 'கண் திறந்திட வேண்டும்' அபுதாபி இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அண்ணன் கில்லர்ஜி அவர்கள்முத்துநிலவன் ஐயாவின் புத்தகத்துடன் மாலை 4 மணிக்கு மேல் அறைக்கு வந்தார். பின்னர் ஒரு சுலைமானியுடன் விருந்தோம்பலை(?) முடித்துக் கொண்டு மைத்துனனையும் அழைத்துக் கொண்டு மூவருமாய் ISC நோக்கி உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியபடி நடையைக் கட்டினோம். நாங்கள் சென்றபோது அரங்கு ஓரளவு நிரம்பியிருந்தது. சரி முன்னால் உட்கார்ந்து கேட்கலாம் என்று போனால் அங்கு எல்லாம் VIP களுக்கான இருக்கை... சுற்றி மீண்டும் பின்னால் வந்தால் முன்னால் வேகமாகப் போனதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் கேலியாக ஏதோ பேசினார்கள். சரி நமக்கெதுக்கு அதெல்லாம் என உதறிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தோம். எங்களுக்கு பின்னால் ஒரு பத்து இருக்கைகளை இரண்டு குழந்தைகள் முன்பதிவு செய்துவிட்டு விழா ஆரம்பித்த பின்னர் ஆடி அசைந்து வந்த குடும்பத்தாருக்காக பட்ட கஷ்டம் இருக்கே அது வேறு கதை... அதில் ஒரு சின்னக்குட்டி நான் அழுதுடுவேன்னு முழிச்ச முழியிருக்கு பாருங்க அதை அருகில் இருந்து ரசித்தால்தான் உணர முடியும். அப்புறம் எல்லாரும் பொங்கல் வாங்கி சாப்பிட, அட (இலவசமாய்) பொங்கல் கொடுத்திருக்கிறார்களே ஆஹா பொங்கப் போச்சே என்று யோசித்ததை பக்கத்து இருக்கை நண்பர் கேட்டிருப்பார் போல அவர் வைத்திருந்த ஒரு பார்சலை நம் பக்கம் திருப்பிவிட கில்லர்ஜி அண்ணா பெரிய மனிதராய் பிளாஸ்டிக் ஸ்பூனில் எடுத்துக் கொடுக்க, நமக்கு சொல்லவா வேணும்... வேண்டாம் வேண்டாம்ன்னு போயிக்கிட்டே இருந்துச்சு... எப்படியோ இலவசத்தையும் வாங்கியாச்சு.
விழா சொன்ன நேரத்தில் ஆரம்பித்தது... கடவுள் வாழ்த்துக்குப் பின் எப்பவும் போல் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் இந்த வருடத்தில் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள். அதன் பின் புரவலருக்கும் ISC பெரியவர்களுக்கும் மரியாதை செய்தார்கள். வெள்ள நிவாரணத்துக்கு உதவியதில் பெரும்பங்கெடுத்த சிலருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். பின்னர் குழந்தைகளில் நடனம்... எப்பவும் போல் திருமதி. ஆஷா நாயரின் அழகான நடன அமைப்பில் அற்புதமாய் ஆடினார்கள். 'வீணையடி நீ எனக்கு' ஆடிய இரண்டு பேரும் அழகான சிற்பங்கள் அசைவது போல் கலக்கலாய் ஆடினார்கள். வாழ்த்துக்கள் குட்டீஸ்...'பராசக்தி' பாடலுக்கு ஆடிய குழந்தைகளையும் குறை சொல்வதற்கில்லை.
பின்னர் மேடை பட்டிமன்றத்துக்கு தயாரானது... பாரதி அமைப்பின் நண்பர் ஒருவர் பட்டிமன்ற பேச்சாளர்களை அழகான தமிழில், கவிதை நடையில் கணீர்க்குரலில் அறிமுகம் செய்து வைத்தார். பட்டிமன்றத்தின் நடுவராக திரு. சுகி சிவம் அவர்கள். இன்றைய சூழலில் உதவி செய்வது சந்தோஷமே... சங்கடமே என்பதுதான் பட்டிமன்றத்தின் தலைப்பு. தலைப்பு விழாவிற்குச் செல்லும் வரை தெரியாது. ஏனோ இந்த முறை அழைப்பிதழில் தலைப்பு போடப்படவில்லை. சந்தோஷமே என்ற அணிக்கு தலைவராக திரு. ஆவுடையப்பன் இருக்க, அவருக்கு வலு சேர்க்க திரு. மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் சுமதி ஆகியோர் பேசினார்கள். சங்கடமே அணிக்கு திரு.சண்முக வடிவேலு தலைவராக இருக்க, அவருக்கு வலு சேர்க்க முனைவர் விஜய சுந்தரி மற்றும் திரு. மோகன சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.
முதலில் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு சால்வை மற்றும் அழகிய பூமாலையால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நடுவர் வசம் மேடை கொடுக்கப்பட, 'ஆஹா... என்ன அழகா மாலை பாருங்க... நம்ம ஊர்லயும் மாலை போடுவாங்க... இருக்கதுலயே சின்னதா... போடும் போதே எனக்கு பயமா இருக்கும்... எப்படியும் கண்ணாடியை தட்டி விட்டு விடுவார்கள்... அதைப் போட்டதும் அதில் இருக்கும் ஈரம் ஆடையில் பட்டு அது ஒரு கலராகிவிடும்... இந்த மாதிரி மாலை போடுவார்கள் என்று தெரிந்தால் நான் இன்னும் ஒருமுறை அறுபதாம் கல்யாணம் பண்ணியிருப்பேன்' என்றபடி ஆரம்பித்து உடம்பில் இருக்கும் உயிர் பற்றி எல்லாம் பேசி, நாம் பார்க்கும் வேலையை மதிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக தன் மகள் கற்றுக் கொடுத்த பாடத்தையும் சொன்னார்.
ஒருநாள் வீட்டின்கீழ் தளத்தில் அமர்ந்திருக்கும் போது மாடியில் அவரது அறையில் இருந்த கண்ணாடி தேவைப்பட, மேலிருந்து இறங்கி வந்த 7 வயது மகளிடம்(இப்போ 35 வயது என்றும் சொன்னார்) 'டேய்... அப்பாவோட கண்ணாடியை எடுத்துக்கிட்டு வாடா...' அப்படின்னு சொன்னாராம். இப்போது இடை நிறுத்தி 'பொம்பளைப் பிள்ளைங்களை டா போட்டுக் கூப்பிடுறதுல இருக்க சுகமே தனிதான்... அதே நேரத்துல பயலுகளை டீ போட்டுக் கூப்பிட முடியாது... கூப்பிட்ட அது வேற மாதிரி போயிரும்... நல்லாவும் இருக்காது' என்று சொல்லி கைதட்டலை பெற்றுக் கொண்டார். அவர் கண்ணாடி கேட்டதும் 'அட போங்கப்பா... 17 படி ஏறிப் போயி எடுக்கணுமாக்கும் என்னால முடியாது'ன்னு சொல்லிட்டு வெளிய போயிருச்சாம். இவர் எதுவும் பேசலையாம்... ஏன்னா எப்பவாச்சும்தான் வீட்ல இருக்கோம்.... அப்பவும் அந்தப் பிள்ளைங்களை திட்டினா... என்னைக்காச்சும் வர்றாரு... வரும்போதும் திட்டுறாருன்னு நினைச்சுக்கங்க என்பதால் எப்பவும் திட்டமாட்டேன் என்றார். இது உண்மை... நானும் அனுபவித்திருக்கிறேன்... இப்ப எங்க அறையில் ஒருத்தர் இருக்கார் 7வது படிக்கிற மகனை போட்டு தினமும் 2 மணி நேரம் வறுத்தெடுக்கிறார். எங்க விஷால் படிக்கிறது ரெண்டாவதுதான்.. எதாவது சொன்னா ' ஏய் என்ன... வந்தேனாத் தெரியுமான்னு' மதுரை பாஷையை குழந்தை மொழியில் பேசி சிரிக்க வச்சிடுறான்.
சரி வாங்க சுகி சிவம் ஐயா பின்னாடி போவோம்... கண்ணாடி எடுக்காத மகள் தன் பிரண்டோட மாடிப்படியில் மேலும் கீழுமாக 17 தடவை ஏறி இறங்கியிருக்கு... பொறுமையா பார்த்துக்கிட்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, தலைமுடியை கொத்தாகப் பிடித்து 'ஏன்டா... நான் கண்ணாடி கேட்டதுக்கு பதினேழு(இழுத்துச் சொல்லி) படி ஏறணுமான்னு கேட்டே... இப்போ பதினேழு (இப்பவும் இழுவை) தடவை ஏறி இறங்கியிருக்கே... அதை எடுத்துக் கொடுத்தா என்ன'ன்னு கேட்டாராம். அதுக்கு 'அது வேலைப்பா... இது விளையாட்டுப்பா' என்ற அவரின் மகள் 'இதையெல்லாம் வேலை இல்லாதவங்கதான் எண்ணிக்கிட்டு இருப்பாங்க'ன்னு சொல்லிட்டுப் போச்சாம்... இதைச் சொல்லி 'நம் வேலை நாம்தான் பார்க்க வேண்டும்... அதுவும் ஒரு ஈடுபாட்டோடு பார்க்க வேண்டும்' என்பதை அன்று கற்றுக் கொண்டேன் என்று சொன்னார். இன்னும் சில கதைகள் சொல்லி சந்தோஷமே அணித் தலைவர் திரு. ஆவுடையப்பன் அவர்களை பேச அழைத்தார்.
திரு. ஆவுடையப்பன் : ''ஒருத்தரை எதிரே பார்த்த ஒருவன் உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே... பேஸ்புக்ல இருக்கிங்களா... டுவிட்டர்ல இருக்கீங்களா... வாட்ஸ் அப்ல இருக்கீங்களான்னு கேட்டானாம்... அவரு அதுக்கெல்லாம் இல்லை இல்லைன்னு சொன்னாராம்... இல்லை எங்கயோ பார்த்திருக்கிறேன் என்றதும் நீ இருக்கிற அபார்ட்மெண்ட்லதான் நானும் ஒரு வருசமா குடியிருக்கிறேன்டா என்றாராம். உலகம் ரொம்ப சுருங்கிப் போச்சு... இப்ப எல்லாமே கைக்குள்ள வந்திருச்சு... யாரும் யாருக்கிட்டயும் கேக்கிறதுல்ல... வழி கூட நடுரோட்டுல நின்னுக்கிட்ட் மொபைல்ல பார்த்து அது சொல்றபடி போக ஆரம்பிச்சிட்டாங்க... என்றெல்லாம் பேசி சந்தோஷத்துக்கு காரணங்களை அடுக்கினார்.
இப்பல்லாம் பஸ், இரயிலில் எல்லாம் யாரும் யாருடனும் பேசுவது கூட இல்லை... ஒருமுறை நான் திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸில் போனேன். பக்கத்தில் இருந்த பெரியவரிடம் மெதுவாக பேச ஆரம்பிக்க, அவரோ பதில் சொல்லவில்லை.. பேசினா என்னங்கன்னு கேட்கவும் இப்ப நீ என் பேரைக் கேப்பே... அப்புறம் நான் உன் பேரைக் கேப்பேன்.. வர்ற நிறுத்தத்துல நீ காபி குடிக்கலாமான்னு கேப்பே... நானும் சரிம்பேன்... அடுத்த நிறுத்தத்துல நான் டிபன் பண்ணலாமான்னு கேப்பேன் நீ சரிம்பே... இறங்கும் போது அட்ரஸ் கேப்பே... கொடுப்பேன்... அடுத்த நாளே வந்து நிப்பே... எனக்கு வயசுக்கு வந்த மகள் இருக்கு... அதுவும் நீயும் காதலிப்பீங்க... கூட்டிக்கிட்டு ஓடிப்போவே... நான் மருந்தைக் குடிச்சிட்டு செத்துப்போவேன்... இதெல்லாம் வேண்டாம் தம்பியின்னு சொல்லிட்டாரு என்றார். எது எப்படியிருந்தாலும் பிறருக்கு உதவுவது சந்தோஷமே என்று சொல்லி அமர்ந்தார்.
அவரின் பேச்சுக் குறித்து சில விளக்கங்கள் கொடுத்த சுகி சிவம் அவர்கள் சங்கடமே அணித் தலைவரை அழைத்தார். அவரும் தன் பக்கம் இருந்த மைக்கை மறந்து எதிரணிப் பக்கமாக நடக்க எதிரணியினர் உங்க பக்கம் மைக் இருக்கு அங்க போங்க என்றதும் திரும்பி அங்கு சென்றார்.
திரு. சண்முக வடிவேலு : 'பாவம் எதிரணியினர் அவர்களுக்கு உதவலாம் என்று போனால் அங்கிட்டுப் போன்னு திருப்பி விட்டுட்டாங்க' என்று தான் மறந்து போனதை சமயோகிதமாக நகைச்சுவை ஆக்கினார். இதுதான் ஒரு பேச்சாளனின் திறமை. இவரின் பேச்சில் நகைச்சுவை சும்மா துள்ளலாட்டம் போட்டது. அரங்கம் மட்டுமின்றி நடுவர் கூட சிரித்து சிரித்து மண்டையில் ஏறிவிட்டது. திருவள்ளுவர் வழியில் நடக்கச் சொல்றாங்க... நான் அப்படி நடப்பவன்தான் அதுனால எனக்கு கிடைத்தது சந்தோஷமா இல்லையே சங்கடம்தானே... ஒருநாள் இப்படித்தான் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். எதிரே ஒருத்தன் வந்தான். நீதானே சண்முகவடிவேலு அப்படின்னு கேட்டான். ஆமா என்றதும் அருகில் வா என்றான்... போனேன்... இன்னும் அருகில் வா என்றான்... சரி எதோ கொடுக்கப் போறாரு போலன்னு கிட்டப் போனேன்... இன்னும் வா என்றான்... என்னடா நம்ம காது எட்டலை போல என்று அருகே போக, சட்டுன்னு ஒரு அறைவிட்டான். எதுக்கு அடிச்சான்னு தெரியலை... கேட்டாலும் பதில் இல்லை... சரியின்னு வேலைக்குப் போனாலும் எதுக்கு அடிச்சிருப்பான்னு ஒரே யோசனை நாமதான் திருவள்ளுவரை பின்பற்றுபவராச்சே... 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' அப்படிங்கிற குறளுக்கு இணங்க அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைச்சேன். அது அன்னைக்கு சாயந்தரமே நடந்தது...
நான் வேலை விட்டுப் போறேன் அவனைப் போட்டு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு இருக்கான்... சரி நம்மளை அடிச்சவன் அடிவாங்குறான்னு சந்தோஷமில்லை... காரணம் நாந்தான் திருவள்ளுவரைப் பின்பற்றுபவனாச்சே... ஏன்யா அடிக்கிறேன்னு கேட்டதும்... நீ யாருய்யா கேக்க என்றான்... சொல்லுய்யா ஏன் அடிக்கிறே என்றேன் மறுபடியும்... பத்து ரூபாய் வாங்கி ரெண்டு வருசமாச்சு... இந்தாத்தாரேன்... அந்தாத்தாரேன்னு இழுத்தடிக்கிறான் என்றதும் பத்து ரூபாய்தானே நான் தர்றேன் என்று கொடுத்ததும் அவன் போய்விட, இவன் காலையில் அடித்ததற்கு வருந்துவான் என்று பார்த்தால் பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொல்றான் 'இந்தாளு இருக்கது தெரியாம கண்டவங்கிட்டயும் பணம் வாங்கி அடிவாங்குறேன். இந்தா காலையில ஒரு அடி விட்டேன்... இப்ப பத்து ரூபாய் கொடுக்கிறார்... அப்ப இருபது ரூபாய் வேணுமின்னா 2 அடி கொடுத்தா போதும்... சாயந்தரம் இருபது ரூபாய் கொடுத்துட்டுப் போவாரு... முப்பதுன்னா மூணு, 50 ரூபாய் வேணுமின்னா 5 அடிதான் என்றானே பார்க்கலாம் என்றபோது அரங்கமே அதிர்ந்தது.
இவர் சொன்ன திருக்குறள் வகுப்பு எடுத்த கதைக்குத்தான் நடுவருக்கு சிரிச்சி சிரிச்சு புரை ஏறியது... அது அடுத்த பதிவில்...
நட்புக்காக ஒரு வேண்டுகோள் : குழந்தைகளை வீட்டில் இப்படித்தான் விடுவார்களா என்று தெரியவில்லை... ஆனால் விழா அரங்கில் சந்தைக்கடை போல கத்தவிட்டுவிட்டு பெற்றவர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் விளையாட்டுச் சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை என்ற நிலை... அப்போது நடுவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்பட, அதை வாசித்து இதெல்லாம் நடக்கிற கதையா... நாம அவர்களை அடக்க முடியுமா.. முடிந்தால் பெற்றோர்கள் கொஞ்சம் பாருங்கள் என்றார். ஆனால் எந்தப் பெற்றோரும் பார்க்கவில்லை... கனவுப்பிரியன் அண்ணன் வந்தபோது வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு இனி இருக்கைக்கு போவது என்பது சிரமம் என்பதால் பின்னால் நின்றோம்.. பின்னர் கடைசி இருக்கை காலியாக அமர்ந்தோம்... பிள்ளைகள் ஓடிப்பிடித்துத்தான் விளையாண்டார்கள்... என்ன காட்டுக் கத்தலோடு... பின் வரிசையில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே கேட்கவில்லை என்பதுதான் உண்மை. இது வருடா வருட நிகழ்வுதான் என்றாலும் முன்னிருக்கையில் அமரும் பாரதி அங்கத்தினர் சிலர் பின் வரிசைகளில் அமர்ந்து கொஞ்சமே கொஞ்சமேனும் சப்தத்தைக் குறைக்கலாமே... ஏன் எல்லாருமே முன் வரிசைக்கு ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. பெரும்பாலும் விழா நடத்துபவர்கள் அரங்கில் சுற்றிலும் இருப்பார்கள்... தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் நாங்கள் இப்படித்தான் செய்வோம். அடிகளாரின் பேச்சுக்கு எல்லாம் அரங்கமே அமைதியாக இருக்கும்... அதனால் சொல்கிறேன். இனி வரும் நிகழ்வுகளில் இதைச் செய்தால் மகிழ்ச்சியே...
படங்கள் உதவி : திரு. சுபஹான் அவர்கள்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
Last edited by சே.குமார் on Tue 26 Jan 2016 - 21:30; edited 3 times in total
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
வீணையடி நீ எனக்கு!
தலைப்பு ஏன் வந்தது என புரிந்து போனது! தலையிடிஅக்கா எதையும் சரியாக கவனிக்க வில்லை என சொல்லி விட்டு இலவசபொங்கலும் சாப்பிட்டு இத்தனை விடயமும் கவனித்து எழுதி இருக்கிங்களே குமார், தலையிடி இல்லாமல் முழுமையாக கவனித்திருந்தால் நான்கு தொடர் பதிவு கிடைத்து இருக்குமோ?
பெரிய பதிவு, ஆனால் சுவாரஷ்யமாம் இருக்கின்றது. குழந்தைகள் சத்தம்,ஓடி விளையாடல் கூட்டங்களில் மட்டுமல்ல அடுத்தவர் வீட்டுக்கு செல்லும் போதும் கவனிக்க வேண்டும். என் பசங்களை அப்படி விட்ட தில்லை.எங்க வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் போகும் இடத்தில் அமைதியாக இருக்க சின்ன வயதிலிருந்து பழக்க வேண்டும்.
அல்லது பிள்ளைகளை தனியே அதற்கென அறை ஒதுக்கி அங்கே அனுப்பி விளையாட விட வேண்டும்.
நல்ல பதிவு குமார்.
தலைப்பு ஏன் வந்தது என புரிந்து போனது! தலையிடிஅக்கா எதையும் சரியாக கவனிக்க வில்லை என சொல்லி விட்டு இலவசபொங்கலும் சாப்பிட்டு இத்தனை விடயமும் கவனித்து எழுதி இருக்கிங்களே குமார், தலையிடி இல்லாமல் முழுமையாக கவனித்திருந்தால் நான்கு தொடர் பதிவு கிடைத்து இருக்குமோ?
பெரிய பதிவு, ஆனால் சுவாரஷ்யமாம் இருக்கின்றது. குழந்தைகள் சத்தம்,ஓடி விளையாடல் கூட்டங்களில் மட்டுமல்ல அடுத்தவர் வீட்டுக்கு செல்லும் போதும் கவனிக்க வேண்டும். என் பசங்களை அப்படி விட்ட தில்லை.எங்க வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் போகும் இடத்தில் அமைதியாக இருக்க சின்ன வயதிலிருந்து பழக்க வேண்டும்.
அல்லது பிள்ளைகளை தனியே அதற்கென அறை ஒதுக்கி அங்கே அனுப்பி விளையாட விட வேண்டும்.
நல்ல பதிவு குமார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
விழா நடத்துபவர்கள் வரிசையில் இறுதி வரிகளில் தான் இருக்க வேண்டும் குமார், அப்போது தான் அனைவரையும் கவனிக்க இயலும், ஆனால் இதை புரிந்திட்டவர் குறைவே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
ரொம்ப கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் ஒரு பட்டி மன்றம் பார்த்து முடித்து விட்டீர்கள் நானும் இங்கு பல இசை நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன் பிள்ளைகளை விட்டு விட்டு பெற்றோர்கள் அமர்ந்து விடுவார்கள் பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி திரிந்து அரங்கையே அதிர வைத்து விடுவார்கள்
தாத்தாவின் தன் வேலையை தானே செய்ய வேண்டும் என்று சொன்னதை நானும் பாடமாக எடுத்துக்கொண்டேன்
பையன் சொன்னது நகைச்சுவையாக இருந்தது நீங்கள் சொன்னது வேலை நான் செய்வது விளையாட்டு ஹா ஹா சூப்பர் பஞ்ச்
அரங்கில் ஆடிய பெண்கள் மலையாளியாக தெரிகிறது ஏன் என்றால் மத்திய கிழக்கில் அதிகமாக நான் பார்த்த மேடைகளில் மலையாளிகள்தான் இப்படி ஆடி அசத்துவார்கள் தவறாக எண்ண வேண்டாம்
மொத்தத்தில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை சூப்பராக எழுதுகிறீர்கள் என்னால் முடியாது அப்பனே முயற்சியும் செய்றேன் இல்லை
தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்
தாத்தாவின் தன் வேலையை தானே செய்ய வேண்டும் என்று சொன்னதை நானும் பாடமாக எடுத்துக்கொண்டேன்
பையன் சொன்னது நகைச்சுவையாக இருந்தது நீங்கள் சொன்னது வேலை நான் செய்வது விளையாட்டு ஹா ஹா சூப்பர் பஞ்ச்
அரங்கில் ஆடிய பெண்கள் மலையாளியாக தெரிகிறது ஏன் என்றால் மத்திய கிழக்கில் அதிகமாக நான் பார்த்த மேடைகளில் மலையாளிகள்தான் இப்படி ஆடி அசத்துவார்கள் தவறாக எண்ண வேண்டாம்
மொத்தத்தில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை சூப்பராக எழுதுகிறீர்கள் என்னால் முடியாது அப்பனே முயற்சியும் செய்றேன் இல்லை
தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
ஓஹோ அப்படி நெனச்சீங்களா...Nisha wrote:வீணையடி நீ எனக்கு!
தலைப்பு ஏன் வந்தது என புரிந்து போனது! தலையிடிஅக்கா எதையும் சரியாக கவனிக்க வில்லை என சொல்லி விட்டு இலவசபொங்கலும் சாப்பிட்டு இத்தனை விடயமும் கவனித்து எழுதி இருக்கிங்களே குமார், தலையிடி இல்லாமல் முழுமையாக கவனித்திருந்தால் நான்கு தொடர் பதிவு கிடைத்து இருக்குமோ?
பெரிய பதிவு, ஆனால் சுவாரஷ்யமாம் இருக்கின்றது. குழந்தைகள் சத்தம்,ஓடி விளையாடல் கூட்டங்களில் மட்டுமல்ல அடுத்தவர் வீட்டுக்கு செல்லும் போதும் கவனிக்க வேண்டும். என் பசங்களை அப்படி விட்ட தில்லை.எங்க வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் போகும் இடத்தில் அமைதியாக இருக்க சின்ன வயதிலிருந்து பழக்க வேண்டும்.
அல்லது பிள்ளைகளை தனியே அதற்கென அறை ஒதுக்கி அங்கே அனுப்பி விளையாட விட வேண்டும்.
நல்ல பதிவு குமார்.
இல்லை பேரை காயத்ரின்னு வக்கலாமான்னு யோசனை... நேமும் கதையோட பேரும் சரியா வருமான்னு பார்த்ததால் இந்தப் பெயர் யோசித்து நண்பனிடம் திட்டு வாங்கியதே மிச்சம்... அது வேற கதை...
தலைவலிதான் அக்கா... இன்னும் கழுத்து வலி இருக்கு... சீக்கிரம் தூங்கிப் பார்க்கணும்... எப்படி என்றாலும் 11.30 மணிக்கு முன்னர் உறக்கம் வருவதில்லை....
அவங்க தொடர்ந்து வற்புறுத்தியதால்தான் எழுதினேன். இன்றும் அடுத்த பகிர்வு எழுத எண்ணமில்லை... நித்யாவுக்கு உடல் நலமில்லை.... காய்ச்சல்... இருந்தும் முடிச்சிடலாம்ன்னு எழுதினால்... நீளம் கருதி பாதி நாளை எழுதணும்...
இனி வரும் இருவரின் பேச்சையும் கேட்கவில்லை... வெளியே போய் டீ சாப்பிட்டபடித்தான் கேட்டேன்... இருந்தும் இழுத்து முடிச்சிடலாம்ன்னு முன்னால பேசினவங்களோடதை அதிகமாக்கினேன்.
பெரிய பதிவுதான்.... பிள்ளைகளை விட்டுவிட்டு அவங்க பாட்டுக்க இருக்காங்க....
பாரதி செயலாளர் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கார்.
கருத்துக்கு நன்றி அக்கா..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
Nisha wrote:விழா நடத்துபவர்கள் வரிசையில் இறுதி வரிகளில் தான் இருக்க வேண்டும் குமார், அப்போது தான் அனைவரையும் கவனிக்க இயலும், ஆனால் இதை புரிந்திட்டவர் குறைவே!
அதை அவர்கள் எப்போதும் செய்வதில்லை... முதல் வரிசையில் இருக்கவும் போட்டிருக்கும் கோட்டும் கட்டியிருக்கும் பட்டுச் சேலையும் போட்ட மேக்கப்பும் கலையாமல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதே வேலை.... சரித்தான் இனி மாறுவதாய் சொல்லியிருக்கிறார்கள் பார்க்கலாம்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பன்.நண்பன் wrote:ரொம்ப கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் ஒரு பட்டி மன்றம் பார்த்து முடித்து விட்டீர்கள் நானும் இங்கு பல இசை நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன் பிள்ளைகளை விட்டு விட்டு பெற்றோர்கள் அமர்ந்து விடுவார்கள் பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி திரிந்து அரங்கையே அதிர வைத்து விடுவார்கள்
தாத்தாவின் தன் வேலையை தானே செய்ய வேண்டும் என்று சொன்னதை நானும் பாடமாக எடுத்துக்கொண்டேன்
பையன் சொன்னது நகைச்சுவையாக இருந்தது நீங்கள் சொன்னது வேலை நான் செய்வது விளையாட்டு ஹா ஹா சூப்பர் பஞ்ச்
அரங்கில் ஆடிய பெண்கள் மலையாளியாக தெரிகிறது ஏன் என்றால் மத்திய கிழக்கில் அதிகமாக நான் பார்த்த மேடைகளில் மலையாளிகள்தான் இப்படி ஆடி அசத்துவார்கள் தவறாக எண்ண வேண்டாம்
மொத்தத்தில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை சூப்பராக எழுதுகிறீர்கள் என்னால் முடியாது அப்பனே முயற்சியும் செய்றேன் இல்லை
தொடருங்கள் அண்ணா
நன்றியுடன் நண்பன்
தலைவலியோடுதான் போனேன்.. சில காரணங்களுக்காக எழுத வேண்டாம் என்றிருந்தேன்... நட்பின் வேண்டுகோள்... நிராகரிக்க முடியவில்லை... அதுவும் சிறிதாக எழுதலாம் என்று நினைத்தால் எப்போதும் போல் வேண்டும் என்று வேறு சொல்லி படங்களும் கொடுத்தாச்சு... தட்டமுடியவில்லை.
ஆம் ஆடியதில் தமிழும் கேரளமும் கலந்தேதான் ஆடினார்கள்... எல்லாருக்கும் முகத்தில் கலவை பூசியதால் அவ்வளவு சிகப்பு... ஒரு சிறுமி ஆடி முடிந்து எங்களுக்குப் பின்னே இருந்த அன்னையிடம் ஓடிவந்தார்.... நம்ம ஊருப்பக்கம் போல என்னை மாதிரியே நல்ல சிவப்பாய்... கலர் காட்டிக் கொடுத்துச்சு... ஹா... ஹா...
முயற்சியுங்கள்... எழுதுங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
பாரதி : கண் திறந்திட வேண்டும் - 2
முதல் பகுதி எல்லாரும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். படிக்காதவங்க மேல இருக்க இணைப்பில் சென்று படியுங்கள். மற்றவங்க வாங்க நாமசண்முகவடிவேலு ஐயாவைப் பின்தொடர்வோம். நேற்றே அவர் திருக்குறள் வகுப்பெடுத்த கதையைச் சொல்றேன்னு சொன்னேன்தானே அது என்னன்னா..
திருக்குறள் வகுப்பெடுத்த கதையை அவர் பெரிதாகச் சொன்னார்... அப்படியே சொன்னால் இந்தப் பதிவில் முடிக்க முடியாது... அதனால் அதைச் சுருக்கிச் சொல்றேன்... ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் வளாகத்தில் 40 பேருக்கு திருக்குறள் வகுப்பெடுக்கச் சொன்னார்களாம். சரியின்னும் இவரும் போயிருக்கார். முதல் வாரம் 40 பேரும் இருந்தானுங்களாம்... அடுத்த வாரங்களில் அது குறைஞ்சி... குறைஞ்சி 13 பேருக்கு வர எங்கய்யா மத்தவனுங்க எல்லாம் என்றதும் அவனுங்க முக்கிய வேலையா போயிருக்கானுங்க... நீங்க நடத்துங்கன்னு சொன்னானுங்களாம். அதாவது அவனுகளுக்கு முக்கியமான வேலையிருக்கு... நமக்கு வேலையில்லை எனபதைச் சொல்லாமல் சொன்னார்கள் என்றவர், யாரைக் கேட்டாலும் முக்கியமான வேலை அப்படின்னு சொல்றாங்களே அப்படி என்ன முக்கியமான வேலை... நம்ம ஆவுடையப்பன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தார். எனக்கு பத்திரிக்கை கொடுக்கலை... பார்த்தப்போ என்ன எனக்குச் சொல்லலைன்னு கேட்டதுக்கு முக்கியமான ஆளுகளை மட்டுந்தான் கூப்பிட்டோம் என்றார். அப்ப நானெல்லாம் முக்கியமில்லை என்பதை சொல்லாமல் சொன்னார் என்று அவரைச் சீண்டி சிரிக்க வைத்தார்.
சரி திருக்குறள் கதைக்குப் போவோம்... அவனுகளுக்கு முக்கிய வேலை இருந்தா எனக்கு இல்லையா... இனி வகுப்பு கிடையாதுன்னு கோபமாச் சொல்லிட்டு கிளம்ப, அங்கிருந்த கோவில் நிர்வாகி ஒருவர் அவனுகளுக்காக நீங்க நிப்பாட்டிட்டா... எங்களுக்கும் திருக்குறள் கத்துக்க ஆசை இருக்கு... எங்களுக்காக நடத்துங்க... உங்களுக்கு கூட்டந்தானே வேணும் அதை நான் கூட்டுறேன் என்றார். ஆஹா நமக்கிட்ட கத்துக்க ஒரு கூட்டத்தைக் கூட்டுறேன்னு சொல்றாரேன்னு சரியின்னு சொல்லிட்டேன். மறுநாளே ஞாயிறு தோறும் கோவில் வளாகத்தில் திருக்குறள் வகுப்பு நடைபெறும் என என்பெயர் போட்டு விளம்பரம் வைத்திருந்தார். அதில் கீழே கோடு போட்டு பொங்கல், புளியோதரை விநியோகம் உண்டுன்னு போட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நான் போறேன்... அந்த இடமே கூட்டத்தால் நிரம்பி இருக்கு... நூறு பேர் உக்கார்ற இடத்துல ஒருத்தர் மேல ஒருத்தர் அடுக்கி வச்சதுமாதிரி இருநூறு பேருக்கு மேல இருக்காங்க... நான் போனா உள்ளே விடலை... ஒருத்தர் இங்க உக்காரு எல்லாருக்கும் கிடைக்கும் என்றார். நான் மீண்டும் உள்ளே போகணும் என்று சொல்ல, அங்க பாரு அண்டா நிறைய இருக்கு... கண்டிப்பாக கிடைக்கும் என்றார்.
நாந்தான் திருக்குறள் வகுப்பெடுக்க வந்திருக்கேன்னு சொன்னதுக்கு இப்படித்தான் ஏழெட்டுப் பேரு சொல்லிட்டு முன்னால பொயிட்டானுங்க... இங்கயே உட்கார் என்றார். அப்ப அந்த நிர்வாகி பார்த்துட்டு தம்பி இங்க வாங்க என்று கூப்பிட, நீதான் வகுப்பெடுக்க வந்த ஆளா, முன்னாடியே சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லி என்னைப் போகச் சொல்ல எப்படியே உட்கார்ந்திருந்த ஆட்களின் தோள் மீது ஏறி ஏறி முன்பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு வழியா வகுப்பெடுக்க ஆரம்பிச்சு மூணு குறள் நடத்திட்டேன். அப்ப ஒருத்தர் சீக்கிரம் முடிங்க என்றார்.. சரியின்னு சொலலிட்டு தொடர, இன்னும் எத்தனை இருக்குன்னு கேட்டார். ஏழு இருக்குன்னு சொன்னதும் மூணுக்கே அரைமணி நேரம் ஆக்கிட்டே,.. ஏழுக்கு..? என்றார். நான் வேகமா முடிச்சிடுறேன்னு சொன்னேன். அதுக்கு அவர் உன்னைய யாரு எடுக்க வேண்டான்னு சொன்னா... விநியோகம் பண்ணிட்டு எடு... இல்லேன்னா ஆறிப் போயிரும்... அப்புறம் நல்லாயிருக்காது என்றார். அதன் பின் அவர் இந்தக் கதையை இன்னும் சுவராஸ்யமாய் விளக்கி அரங்கத்தை சிரிக்க வைத்து இனிமேல் வகுப்பெடுப்பதில்லைன்னு முடிவு பண்ணினேன் என்று சொல்லி உதவி செய்வதால் சங்கடமே என்று சொல்லி முடித்தார்.
இந்த நகைச்சுவையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.... எப்பக் கேட்டாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.... இது ராமகிருஷ்ணன் போன்றோரின் நேயர் விருப்பம் வேறு என்று சொன்னவர், இவரைப் போல் இளைஞர்களும் நகைச்சுவையாய் ஆழ்ந்த கருத்தோடு பேச வரவேண்டும். அப்படி ஒருத்தர்தான் மணிகண்டன் எனச் சொல்லி அவரை சந்தோஷமே அணிக்கு பேச அழைத்தார்.
திரு. மணிகண்டன் : இவர் பேச வரும்போதே கோபமாய் வருவது போல் தெரிந்தது. காபி கொடுக்க வந்தவரை, காபி கொடுப்பதாக இருந்தால் எல்லாருக்கும் கொடுங்கள்... எனக்கும் கொடுங்கள்... ஏன்னா என்னோட ராசியோ என்னவோ எப்ப நான் பேச எழுகிறேனோ அப்போதுதான் காபி கொடுப்பார்கள். எனக்கு காபி வேண்டும். இந்த ஆறு பேருக்கும் நான் பேசி முடித்ததும் கொடுங்கள் என்று சபையில் பட்டென்று சொல்லி சந்தோஷத்துக்கு பேச ஆரம்பித்தார். தன் மகள் ஸ்கூலுக்குப் போகும் போது அப்பா நான் ஹேர் கட்டிங் பண்ணிக்கவா என்றாள். சரியென்று சொல்ல, கடைக்குப் போனதும் மொட்டை போட்டுக்கிறேன் என்றாள். என்னடா இது... மொட்டை போடுறேன்னு சொல்றாளேன்னு நானும் நடுவர் அவர்களைப் போல்தான் பிள்ளைகளை அடிப்பதோ திட்டுவதோ இல்லை. அதனால் சரியென்று சொல்லிவிட்டேன். பள்ளிக்கு போகிறேன்... அவளது வகுப்புத் தோழியும் மொட்டை அடித்திருந்தாள். என்னடா ரெண்டு பேரும் சொல்லி வச்சி மொட்டை போட்டீங்களா என்று கேட்க, அப்பா எங்க வகுப்புத் தோழி க்கு (ஒரு பெண் பெயரைச் சொல்லி) கேன்சராம்... டிரீட்மெண்ட் எடுக்கிறாளாம். டிரீட்மெண்ட் எடுத்தா தலை முடியெல்லாம் கொட்டிடுமாம். அதான் அவ மொட்டையா இருக்கதால மத்தவங்க கேட்டு அவ பீல் பண்ணாம இருக்க இந்த ரெண்டு மாசமும் எங்க கிளாஸ்ல எல்லாரும் மொட்டை போட்டுக்கிறதா பேசியிருக்கோம் என்றாள் என்றதும் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.
அதன் பின் அவர் அப்துல்கலாம் குழந்தைகள் எடை அதிகமான செயற்கைக்காலைத் தூக்கி நடக்க சிரமப்பட்டதைப் பார்த்து தானே நாற்பெத்தெட்டு மணி நேரம் தொடர்ந்து முயற்சித்து விமானம் பறக்க இலகுவாக இருக்கும் அலுமினியத்தில் 400 கிராமுக்கு குறைவான செயற்கைக்காலை தயாரித்து அதை அந்தக் குழந்தைக்கு பொறுத்தி அது நடந்ததைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டதே எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம் என்று அக்னிச் சிறகில் சொல்லியிருப்பதை எடுத்துக்கூறி, அன்னை தெரசா காளி கோவில் பூசாரி மயங்கிக் கிடந்த போது உதவியதை, ஆஸ்ரமக் குழந்தைகளுக்காக பணக்காரன் ஒருவனிடம் உதவி கேட்டு அவன் எச்சிலைத் துப்ப அதை ஒரு கையால் வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்து விட்டீர்கள் என் குழந்தைகளுக்கு என்று கேட்டதை, இன்னும் சிலவற்றைச் சொல்லி சந்தோஷமே அணிக்கு வலு சேர்த்து 'ஜெய்ஹிந்த்' என்று சொல்லி அமர்ந்தார்.
அவரின் பேச்சைச் சிலாகித்த நடுவர், அடுத்து 'இவர் அருமையாகப் பாடுவார்.. ரொம்ப நன்றாகப் பேசுவார்... எப்பவாச்சும் பசங்களுக்கு வகுப்பும் எடுப்பார்' என்று சொல்லி முனைவர் விஜயசுந்தரி அவர்களை அழைத்தார்.
முனைவர் விஜயசுந்தரி : தனது கணீர் குரலில் பாடி ஆரம்பித்தவர், பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களைவிட அவர் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எடுத்துச் சொன்னார். பாரதி உதவி செய்ததால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கவில்லை என்றார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் இருந்த போது அவரின் சகோதரர மனநிலை சரியில்லாமல் தெருவில் திரிவதைக் கேள்விப்பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் என் சகோதருக்கு உணவளியுங்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் கடனை அடைத்து விடுகிறேன் என்று மக்களைப் பார்த்து கேட்டிருந்தார் என்று வருத்தமாய்ச் சொன்னவர் மக்களுக்காக சிறைக்கு போன அவருக்கு கிடைத்தது என்ன... என்று கேள்வி கேட்டார், தில்லையாடி வள்ளியம்மை வயிற்றில் இருக்கும் போது அவரது குடும்பம் தென் ஆப்பிரிக்கா செல்ல, அங்கு பிறந்தாலும் இந்தியா மீது கொண்ட பற்றுதலால் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்தாள் அந்த இளம்பெண். அதற்கு அவளுக்கு கிடைத்த பரிசு வெள்ளையனின் பூட்ஸ்காலால் வயிற்றில் கிடைத்த உதை. அவள் சாகும் தருவாயில் கிடக்க அவரைப் பார்க்க காந்தியடிகள் போனார். அவள் யார் தெரியுமா? நம் தில்லையாடி வள்ளியம்மைதான். அவளுக்கு கிடைத்த பரிசு என்ன என்று மீண்டும் கேட்டார்... மேலும் சில வரலாற்றுச் செய்திகளுடன் பாடல்களும் அழகாகப் பாடி கணீரெனப் பேசினார். இவர் இன்னொன்றும் சொன்னார்... அதாவது பாரதி தன்னோட முடி நரைக்கும் முன்னரே இறந்து போனான் ஏன் தெரியுமா..? அவனது தலை முடியில் கூட ஒரு வெள்ளையன் நுழைந்து விடக்கூடாது என்று நினைத்தான் என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பேசியவர்களில் வரலாற்றுச் செய்திகளுடன் கணீரெனப் பேசினார் பார்க்க சிறிய உருவமாக இருந்த இந்தப் பேராசிரியை... வாழ்த்துகள் அம்மா.
பதிவு எழுதினால் ரொம்ப போய்க்கிட்டே இருக்கேன்னு குறைத்தாலும் நீளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை... பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி.வழக்கறிஞர் சுமதி என்ன பேசினார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
கொசுறு : நிஷா அக்கா சேனையில் தலைவலியுடன் பார்த்தே இவ்வளவா என்று சொல்லியிருந்தார். உண்மைதான் அக்கா.... இன்னும் தலைவலி தொடரத்தான் செய்கிறது. இந்த முறை செல்லும் எண்ணமே இல்லை.... கில்லர்ஜி அண்ணாஅறைக்கு வந்ததால்தான் கிளம்பினேன். இல்லையேல் படுத்து உறங்கியிருப்பேன். இதுவரை பகிர்ந்தது சரிதான்.. இனி வரும் பேச்சாளர்களின் பேச்சை எல்லாம் அதிகம் கவனிக்கவும் முடியாமல் தலைவலி தொடரத்தான் செய்தது. தலைவலி மற்றும் அலுவலக காரணிகளால் பதிவாக பகிரும் எண்ணமும் இல்லை என்பதே உண்மை. திரு. சுபஹான் அண்ணன் அவர்கள் என்னாச்சு... எழுதலையா... என்று கேட்டதற்கு இணங்கவே பதிகிறேன்... சென்ற வருடங்களைப் போல் நிறைவாக எழுதவில்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதாலே எழுதுகிறேன். உங்களிடம் சொன்னபடி இரண்டில் முடிக்க முடியவில்லை... இன்னும் ஒரு பகிர்வும் இருக்கு....
நன்றி.
படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணா.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
பாரதி : கண் திறந்திட வேண்டும் - 3
பாரதி நட்புக்காக பட்டிமன்றத்தின் முதல் இரண்டு பகிர்வுகளை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.
முனைவர் விஜயசுந்தரி பேசி முடித்ததும் அவர் சொன்ன வரலாற்றுக் கருத்துக்கள் குறித்து சிறிது விளக்கம் சொன்ன நடுவர் அவர்கள், வழக்கறிஞர் சுமதி அவர்களைப் பேச அழைத்தார். இவர் மேடையேறும் போது திரு. கனவுப் பிரியன்என்னை அழைத்தார். இணையத்தின் மூலமே அறிந்தவரை நேரில் சந்திக்கும் பொருட்டு நான் எழுந்து பின்பக்கம் செல்ல, அங்கே அவரும் ஆரஞ்சுக்கலர் டீசர்டில் நின்று கொண்டிருந்தார். முதல் சந்திப்பில் இருவரும் ஒரே கலர் டீசர்ட்டில் இருந்தது சிறப்புத்தானே... சிறிது நேர பேச்சுக்குப் பிறகு கில்லர்ஜி அண்ணாவையும் போனில் அழைக்க அவரும் வந்து சேர மூவரும் பேசி, போட்டோ எடுத்து மைத்துனரையும் அழைத்து டீ சாப்பிட போய்விட்டோம். மேடையில் வழக்கறிஞர் சுமதி பேசிக் கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் சுமதி : என்னோட அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம்... பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரது இளம் மனைவி அழுதபடி இருக்கிறாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன். அவள் அவருக்கான வியாதியைச் சொல்லி, இன்னொரு மருத்துவமனை பெயரைச் சொல்லி இவரை அங்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக காப்பாற்றிவிடலாம் என்றாள். பின்னே என்ன அங்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே என்றேன். பணம் அதிகம் சிலவாகும் என்றாள். உன்னால் பணம் ரெடி பண்ண முடியுமா என்றேன். என்னால் முடியும் என்றாள்... பின்னே என்ன அதற்கான வேலையைப் பாரு என்றதும் என் மாமியார் விடமாட்டார் என்றாள். இங்கபாரு கண்டிப்பாக பிழைக்க வைக்க முடியும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல என்றதும் இருக்கு என்றாள். அப்ப எதுக்கு அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறே.. முதல்ல பணத்தை ஏற்பாடு பண்ணு... மற்ற வேலைகளை நான் பார்க்கிறேன் என்றேன். அப்படி அந்தப் பெண்ணுக்குச் செய்த உதவி சிறியதாகினும் மன நிம்மதி, ஒரு சந்தோஷம் கிடைத்தது என்றார்.
மேலும் சின்ன வயதில் சினிமாவுக்குச் செல்லும் போது வேலைக்காரரின் பெண்ணையும் அழைத்துச் சென்று தாங்கள் இடைவேளையில் வாங்கித் தின்ன வைத்திருந்த காசில் டிக்கெட் எடுத்ததையும், அந்தப் பெண் சந்தோஷமாய் படம் பார்த்ததையும் மகிழ்வோடு சொன்னார். இன்னா, இஸ்துக்கின்னு என சென்னைத் தமிழ் குறித்தும் பேசினார்.
இவரது பேச்சும் மற்றும் இவருக்கு பின்னே வந்த திரு.மோகனசுந்தரம் அவர்களின் பேச்சையும் உட்கார்ந்து கவனிக்கவில்லை என்பதால் மேலோட்டமாகத்தான் எழுத முடியும். இங்கு எழுதும் எந்த வார்த்தையும் குறிப்பெடுத்து எல்லாம் எழுதவில்லை என்பதால் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு குறித்த எழுத்தில் தவறும் இருக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
நடுவர் திரு.சுகி சிவம் அவர்கள் இறுதிப் பேச்சாளராக திரு. மோகன சுந்தரம் அவர்களை அழைத்தார். இவர் இதற்கு முன்னர் பாரதி நடத்திய திரு.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியவராக இருக்குமோ என்று ஒரு சிறு சந்தேகம். சரி விடுங்க... பேசி சிரிக்க வைத்தாரான்னு பார்ப்போம்.
திரு. மோகனசுந்தரம் : இவரின் பேச்சும் பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு சரியாக கேட்கவில்லை.... இருப்பினும் விமானத்தில் வரும்போது விமானப் பணிப்பெண் இவரைக் கேட்டதாகச் சொன்ன செய்தியில் நடுவரை நீங்க பிஸினஸ் வகுப்பில் இருந்ததால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். என்ன விஷயம் என்பதை சரியாக கவனிக்கவில்லை... ஆனால் விவரம் தெரிந்த அரங்கம் சிரித்தது.
தன் நண்பனுக்கு பைக் ஓசியாக கொடுத்த கதையைச் சொன்னார். வண்டியைக் குடுடா இப்பக் கொண்டாந்து தாறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவன் வரவேயில்லை என்னடா இப்ப வாறேன்னு சொன்னான்... இன்னும் வரலையின்னு பார்த்தா... ராத்திரி நடந்து வர்றான்... எங்கடா வண்டியின்னு கேட்டா போலீஸ் ஸ்டேசன்ல இருக்கு போயி எடுத்துக்கன்னு சொன்னான்... என்னடா நீ போலீஸ் ஸ்டேசன்லயா என்றதும் ஆமா போலீஸ்காரன் பிடிச்சிட்டான்... குடிச்சிட்டு வண்டி ஓட்டுனேன்... குடிச்சிருந்தியா...? ஆமா லைசென்ஸ் கேட்டான்... கொடுக்க வேண்டியதுதானே... அதுதான் இல்லையே.. என்னது இல்லையா... ஆமா வண்டியே இல்லாத எனக்கு எதுக்கு லைசென்ஸ்ன்னு நான் எடுக்கலை... அது சரி... ஆர்.சி.புக் கேட்டான்... அதெல்லாம் தெரியாது வண்டியை வச்சிக்க... வண்டிக்காரனை வந்து வாங்கிக்கச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றானே பார்க்கலாம் உதவி செய்யப் போயி நான் போலீஸ் ஸ்டேசன்ல போயி நிக்க வேண்டியிருந்துச்சு என்று வேடிக்கையாகச் சொன்னார்.
இந்த மழை வந்தது ரொம்பப் பாதிப்புத்தான் என்றாலும் எனக்கு ஒருவகையில நல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சிட்டுப் போயிருச்சு.. ஆமா மழையில எங்க வீட்டு பிரிட்ஜ், ஓவன் எல்லாம் போயிருச்சு... இப்ப மூணு நேரமும் சூடா சாப்பாடு பண்ணிப் போடுறா... முன்னால எல்லாம் பிரிட்ஜ்ல வச்சு வச்சு... ஓவன்ல சூடு பண்ணிப் போடுவா.... ஆனா இப்ப அதெல்லாம் இல்லை... போனவாரம் மெதுவா ஏங்க பிரிட்ஜ் என்றாள். அதெல்லாம் நிவாரணத்துல கொடுப்பாங்க... அப்படியும் இல்லையின்னா ஆறு மாசத்துல தேர்தல் வருதுல்ல... அப்ப ரெண்டு கட்சியில ஏதாச்சும் ஒரு கட்சி விலையில்லாத பிரிட்ஜ், விலையில்லாத ஓவன் எல்லம் கொடுப்பாங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்று சொன்னபோது அரங்கமே கைதட்டலிலும் சிரிப்பொலியிலும் அதிர்ந்தது.
சந்தோஷமே... சங்கடமே... என இரு அணிகளும் தங்கள் வாதத்தை முன் வைக்க, நடுவர் திரு. சுகிசிவம் அவர்கள் தீர்ப்புச் சொல்லும் பொருட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து 'சங்கடமே' என்ற அணியினர் பேச வைத்திருந்த மைக்கின் முன் வந்தார்.
இரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க... அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க.
இரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க... அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க.
என்னோட மனைவிக்கிட்ட ஒரு பழக்கம் தலைவலி வந்தா தலையில தலைப்பாக் கட்டிருவா... (இந்தப் பழக்கம் எனக்கும் இருக்கு... துண்டை எடுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டு படுத்துவிடுவேன்... நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... திருமதி சுகிசிவமும் அப்படித்தானாம்) அன்னைக்கும் அப்படித்தான் காபி கேக்கலாம்ன்னு போனா, தலையில தலைப்பாக் கட்டிட்டா... சரி இனி கேக்க கூடாதுன்னு என்னம்மா தலைவலியா... என்றேன்... ம் என்று பதில் வந்தது. சரி நான் வெளியில போறேன் ஏதாவது வாங்கிக்கிட்டு வாறேன்... நீ சமைக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனேன். என் வேலைகளை முடித்து விட்டு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர்றேன் என்னை பஜ்ஜி வாசம் வரவேற்குது. என்னடா இது முடியலைன்னு சொன்னாளே... என்று எட்டிப்பார்த்தால் அடுப்படியில் தலைப்பாக் கட்டோடு பஜ்ஜி சுட்டுக்கிட்டு இருக்கா... ஏய் முடியலைன்னு சொன்னே.... இப்ப பஜ்ஜி சுடுறே... இல்ல அந்தப் பய (என் பேரன்) வந்திருக்கான்... எப்பவும் கேக்கமாட்டான்... இன்னைக்கு பாட்டி பஜ்ஜி சுட்டுத்தாயேன்னு கேட்டான்... அதான்... என்றாள். பாருங்க பேரன் என்றதும் தலைவலி போச்சு... நாம காபி கேட்டா... ம்ன்னு பதில் வரும். இருந்தாலும் எனக்கு கோபம் வரலை... காரணம் என்னன்னா தனக்கு முடியாட்டியும் பேரன் கேட்டதுக்காக செஞ்சா பாருங்க அதுலதான் சந்தோஷம் இருக்கு.
ஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை... உடனே டாக்டருக்கு போன் பண்ணினார். அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார். இவருக்கு கோபம் வந்தாச்சு... என்னால எந்திரிக்க முடியலை... எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப் போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது அதிகம்... வயதானவர்... மேலே மாடியில் இருந்தவரை பார்க்க படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா, டாக்டர் மயங்கியிருப்பதைப் பார்த்து டீப் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, குடித்து விட்டு எழுந்தவரிடம் இப்பப் பரவாயில்லையா என்றதும் ம் சரியாயிருச்சு எனச் சொல்லி தன்னோட பில்புக்கை எடுத்து 30 பவுண்டு எழுதி பெர்னாட்ஷாக்கிட்ட கொடுக்க என்ன விளையாடுறீங்களா... என்னை எப்போது செக்கப் பண்ணினீர்கள்... உங்களுக்குத்தானே நான் பணிவிடை செய்தேன் என்றதும் நீங்க என்ன சொன்னீங்க படுக்கையை விட்டு எழ முடியலை.... என்னால நடக்க முடியலை... ஒரு டீக்கூட போட முடியலைன்னுதானே... இப்ப எழுந்தீங்க... நடந்தீங்க... டீப்போட்டு எனக்கு கொடுத்தீங்க... உங்க வியாதி போச்சா.... அதுக்குத்தான் பில் என்றதும் ஒன்று பேசாமல் கொடுத்தாராம். வியாதி மனதில் இல்லை என்றும் சொன்னார்.
அப்பொதெல்லாம் 16 முழ வேஷ்டி, அதாவது 10 முழம் வேஷ்டியாகவும் 6 முழம் துண்டாகவும் உடுத்துவார்கள். பாரதியின் நண்பர் ஒருவர் அவருக்கு 16 முழ வேஷ்டி கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்ல, இவரும் கட்டிக் கொண்டு வெளியே போயிருக்கிறார். அப்போது குளிரில் நடுங்கியபடி ஒருவன் படுத்திருக்க, அதைப் பார்த்த பாரதி ஆறு முழ துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு 10 முழ வேஷ்டியை அவனிடம் கொடுத்திருக்கிறார். இடுப்பில் இருந்த வேஷ்டியைக் கொடுக்காமல் துண்டை அவனிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் பாரதி அப்படிச் செய்யவில்லை. இடுப்பில் கட்டிய துண்டோடு வீட்டுக்குப் போக, அவரின் நண்பர் வேஷ்டி எங்கே என்றதும் ஒருவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான் அதான் அவனுக்கு கொடுத்திட்டேன் என்று சொன்னாராம். துண்டைக் கொடுத்திருக்கலாமே ஏன் வேஷ்டியைக் கொடுத்தே என்றதும் துண்டைவிட அந்த வேஷ்டிதான் அவனுக்கு சரியாக இருக்கும் என்பதாலேயே கொடுத்தேன் என்றாராம். நீ உதவி செய்வேன்னு தெரியும் அதுக்காக இப்படியா என்றபடி இன்னொரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்ல, பார் ஒன்றை கொடுத்தால் ஒன்றைப் பெற முடியும் என்று சொல்லி சிரித்தவர் வேஷ்டியைக் கொடுத்தேன் வேறு வேஷ்டி கிடைத்துவிட்டது பார் என்று சொன்னாராம். எனவே நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்.
கர்ணனிடம் கண்ணன் போர்க்களத்தில் தர்மம் கேட்க, அவனோ தனது குருதியைப் பிடித்துக் கொடுத்தான் என்ற கதையையும், ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவை உதைப்பது போல் நடிக்க மறுத்த ராஜம் அவர்களை வாங்கிற காசுக்கு நீ மிதிக்கணும் நான் வாங்கணும் என்று எம்.ஆர்.ராதா அவர்கள் சொன்னதையும், சென்னை வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றி பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்த முஸ்லீம் இளைஞர் குறித்தும்... இன்னும் பல கதைகளை கருத்தாய்ச் சொல்லி உதவுவதில் சங்கடம் இருந்தாலும்... சங்கடம் ஏற்படாமல் எந்த சந்தோஷமும் இல்லை என்பதால் சந்தோஷமே கிடைக்கிறது என்று சொல்லி முடித்தார். அவர் சந்தோஷமே என்று சொன்னது சங்கடமே அணியினரின் பக்கம் இருந்த மைக்கில்தான் என்றாலும் அருமையான நிறைவான தீர்ப்புத்தான். உண்மையில் உதவி செய்வதில் சங்கடம் இருக்கிறது என்பதற்காக உதவாமல் இருந்தால் அது சரியில்லை... எப்படி சங்கடம் வந்தாலும் உதவிய திருப்தியில் சந்தோஷமே விஞ்சி நிற்கும் என்பதை நாம் அறிவோம் அல்லவா..? எனவே இதுவும் அதுவும் என்று நடுநிலையில் நிற்காமல் நல்லதீர்ப்பை நல்ல கருத்துக்களுடன் சொன்ன நடுவர் திரு. சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதன் பின் நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவடைய, நாங்கள் மெல்ல நடையைக் கட்டினோம். கவிப்பிரியன் அவர்கள் டாக்ஸியில் செல்வதாகச் சொல்ல, நாங்களோ மீண்டும் அரசியல் பேசியபடி அறைக்கு வந்து சேரும் போது இரவு 11 மணிக்கு மேலாகியிருந்தது.
சந்தோஷமே அணியினர் அவ்வளவு நகைச்சுவையாக பேசவில்லை... சங்கடமே அணியினர் நகைச்சுவையில் தல தோணியின் சிக்ஸர் அடித்து ஆடினர். இரண்டு குழுவையும் கல்வையாய் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால் சந்தோஷமாக பேச வேண்டிய அணியினர் மூவருமே பொறுமையாகப் பேச, அரங்கில் கொஞ்சம் சலிப்பு மழை பெய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
இருப்பினும் அருமையான பேச்சு... அழமான கருத்துக்கள்... அழகான பட்டிமன்றம்... ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திய பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு எல்லாருடைய சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொசுறு : இன்னும் சில நகைச்சுவைகள் இருக்கு, பதிவின் நீளம் கருதி இங்கு பகிரவில்லை என்றாலும் என்னோட மனசின் பக்கத்தில் அப்பப்ப வரும்... நமக்கு சிரிப்புக்கு சிரிப்பும் ஆச்சு.. பதிவுக்கு செய்தியும் ஆச்சுல்ல...
பொறுமையாக மூன்று நீளப் பகிர்வுகளையும் வாசித்து கருத்தும் அளித்த நட்புக்களுக்கு நன்றி.
வருடா வருடம் அமீரகம் வாழும் எங்களுக்கு தமிழ் அமுது பருகிடக் கொடுக்கும்பாரதி நட்புக்காக அமைப்புக்கும் எனக்கு அழகிய போட்டோக்களை உடனே கொடுக்கும் அண்ணன் புகைப்படக் கலைஞர் திரு. சுபஹான்அவர்களுக்குமாய் ஒரு பூங்கொத்து...
பாரதி நட்புக்காக குழுமத்தின் முகநூல் பக்கம் செல்ல இங்கு கிளிக்குங்கள்.
சுபம்.
-'பரிவை' சே,குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
இரண்டாவதே இன்னும் படிக்கவில்லை. மூன்றாவதும் வந்து விட்டதா?
ஒன்று எழுத வேண்டுமா என யோசித்து மூன்று பகுதியாக்கி எதிலும் சில நகைச்சுவைகளை விட்டு... அமமாடியோவ்! குமார் ரெம்ப வேலை, தலைவலி என சொல்லியே இவ்வளவு எழுதுகின்றீர்களே . முழு நேர எழுத்தாளராகி விட்டால் சிந்தனை ராக்கட் வேகத்தில் பறக்கும் போலவே!
நிகழ்வுகளை அபப்டியே கண் முன் கொண்டு வரும் படியான விமர்சனம், பாராட்டுகள் குமார்!
பெரும்பாலும் உதவி உபத்திரமாவது தான் எனினும் அதற்காக உதவி செய்யாமல் இருக்கவும் முடியாது, நம் நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.
/////நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்./////
நிஜமான கருத்து!
ஒன்று எழுத வேண்டுமா என யோசித்து மூன்று பகுதியாக்கி எதிலும் சில நகைச்சுவைகளை விட்டு... அமமாடியோவ்! குமார் ரெம்ப வேலை, தலைவலி என சொல்லியே இவ்வளவு எழுதுகின்றீர்களே . முழு நேர எழுத்தாளராகி விட்டால் சிந்தனை ராக்கட் வேகத்தில் பறக்கும் போலவே!
நிகழ்வுகளை அபப்டியே கண் முன் கொண்டு வரும் படியான விமர்சனம், பாராட்டுகள் குமார்!
பெரும்பாலும் உதவி உபத்திரமாவது தான் எனினும் அதற்காக உதவி செய்யாமல் இருக்கவும் முடியாது, நம் நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.
/////நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்./////
நிஜமான கருத்து!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாரதி : கண் திறந்திட வேண்டும் (பட்டி மன்றம்)
திருக்குறளுக்கு கூட்டம் கூடலையா? ஐயோ பாவம்!அதில் கீழே கோடு போட்டு பொங்கல், புளியோதரை விநியோகம் உண்டுன்னு போட்டிருந்தார்.
வகுப்பிலிருக்கும் கான்சர் பிள்ளைக்காக முழு வகுப்புமே மொட்டை போட்ட நிஜழ்வு நெகிழ்ச்சியானது,
நகைச்சுவையாக் சொன்னாலும் இது நிஜமான கருத்து தான், நான் என்னை வைத்தே உதாரணம் சொல்வேன், நாம் நல்லது செய்தால் நலல்வர் என பெயரெடுப்பதும் அனைவராலும் நேசிக்கப்படுவதும் குறைவே!பாரதி உதவி செய்ததால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கவில்லை என்றார்.
குறிப்பெடுக்காமல் தொகுத்தாலும் நிகழ்வுகள் கண் முன் வரும் படியான பதிவு குமார், பாராட்டுகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் …!
» இம்மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வாகன சாரதிகளும் இருக்கை பட்டி அணிய வேண்டும்.
» பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரர்..!
» பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரரு...!
» சீன அதிபர் மனைவியின் இண்டர்நெட் ரசிகர் மன்றம் நீக்கம்
» இம்மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வாகன சாரதிகளும் இருக்கை பட்டி அணிய வேண்டும்.
» பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரர்..!
» பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரரு...!
» சீன அதிபர் மனைவியின் இண்டர்நெட் ரசிகர் மன்றம் நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum