சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Khan11

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:26

பலருக்கு பயனாக அமையும் என்பதால் பல தளங்கள், வலைப்பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை இங்கு தொகுத்து வழங்குகின்றேன்



MS Word
வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை
இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு
இடப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?

File என்பதில் F எழுத்திலும், Edit என்பதில் E எழுத்திலும் அடிக்கோடு
இடப்பட்டுள்ளது. அவை அந்த மெனுவின் ஷார்ட் கட் எழுத்தைக் குறிக்கின்றன. Alt
கீயுடன் இந்த எழுத்துக்களை அழுத்தினால், அந்த மெனுக்கள் விரியும்.
எடுத்துக்காட்டாக View என்ற மெனு பெற Alt+V அழுத்தினால் போதும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:26

Recycle Bin

பைல்களை அழிக்கும்போது, அவை நேராக ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கின்றன.
அப்படி வேண்டாம் எனில், ஷிப்ட் அழுத்தியவாறு டெலீட் கொடுத்தால், அங்கு
செல்லாமல் அழிந்து போகின்றன. நாம் அழிக்கும் பைல்கள், எமக்கு உறுதியாகத்
தெரியும் பட்சத்தில், எப்போதும் அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லவிடாமல்
தடுக்கும் முறை.

அதாவது பைலை அழிக்கும்போது அது, அழிக்கப்பட்டே ஆக வேண்டும். ரீசைக்கிள்
பின்னுக்குச் செல்லக் கூடாது என்று விரும்புகிறவர்கள். அதற்காக செட்
செய்திடலாம். ரீசைக்கிள் பின் ஐகான் டெஸ்க்டாப் திரையில் உள்ளதல்லவா? அதில்
ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ்
தேர்ந்தெடுங்கள். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு திரை
காட்டப்பட்டு, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் பிரிவுகள்
அனைத்தும், அவற்றின் எழுத்து மற்றும் பெயருடன் தெரியவரும். இதில் Use one
setting for all drives என்று ஒரு ரேடியோ பட்டனுடன் கூடிய வரி இருக்கும்.
இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதன் கீழாக, ஒரு சிறிய கட்டத்துடன், Do
not move files to the Recycle Bin. Remove files immediately when deleted
என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க டிக் அடையாளம் அமைத்து ஓகே
கொடுக்கவும். இனி ஜாலியாக பைல்களை அழிக்கவும். அது குப்பைத் தொட்டிக்குப்
போகாது. ஆனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை இந்த ஆப்ஷனை மேற்கொள்ளும் முன்
யோசிக்கவும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:27

ஃபைல்கள்

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப்
போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம்.
Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்
பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல்
முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை
அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும்
டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர்
ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள்
அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:27

ஃபைல்கள்

.csv: ஒரு ஸ்ப்ரெட்
ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும்
கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப் படுகையில் இந்த துணைப் பெயர்
அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து
பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த
வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:28

ரைட் க்ளிக்

புரோகிராம்களை இயக்க மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்கிறோம். அதே போல
நாம் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு செயல்பாடு மவுஸின் வலது பட்டனைக்
கிளிக் செய்வது. இதனால் வித்தியாசமான மெனு ஒன்று கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக்
செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம். பைல்களின்
பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; காப்பி செய்கிறோம்;
சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத்
தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும்
உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல் பாடுகளுக்கு நாம் ரைட்
கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். மவுஸில் மேற்கொள்ளும் இந்த ரைட்
கிளிக் பயன்பாட்டினை, கீ போர்டு வழியாகவும் மேற்கொள்ளலாம். ஷிப்ட் + எப்10
என்ற பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். நீங்கள் எந்த இடத்தில்
இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக்
கிடைக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:28

BIOS

பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல்
கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம்.
ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக்
கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை
அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ
போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில்
அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக
இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத்
தெரியப்படுத்தும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:29

ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்

பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம்
புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது. வைரஸ்
எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து
இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!

நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள
கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம்.
அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான
தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள்
பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட்
செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. எனவே நாம் கையில்
எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க
முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது
இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று http://www.freeav.com என்ற
முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir. இதன் சிறப்பு தன்மை, இந்த
புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர்
புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில்
பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும்.

ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில்
பட்டது. இதன் பெயர் AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ்
ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம். ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில்
ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல்
புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள AdAware பைலை காப்பி செய்து, பிளாஷ்
ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை
http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற
முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by நண்பன் Fri 25 Feb 2011 - 10:29

பிரிண்டருக்கான குறிப்புகள்

எப்போதும் பிரிண்டருக்கான புதிய டிரைவரை நிறுவ வேண்டும். பிரிண்டரை
வாங்கும்போது அதனுடன் தந்துள்ள டிரைவரை பின்பு மேம்படுத்தியிருப்பார்கள்;
அந்த டிரைவரில் உள்ள பிழைகளை நீக்கியிருப்பார்கள்; புதிய வசதிகளை அதில்
சேர்த்திருப்பார்கள். எனவே உங்களின் பிரிண்டரைத் தயாரித்த நிறுவனத்தின்
வெப் தளத்தில் நுழைத்து, அதன் புதிய பதிப்பு டிரைவர் வெளியாகியிருந்தால்
அதை டவுன்லோடு செய்து கம்ப்யூட்டரில் நிறுவுங்கள்.

பிரிண்டரை ஆப் செய்ய, பிரிண்டரில் உள்ள சுவிட்சையே பயன்படுத்துங்கள்; பவர்
ப்ளக் அருகே உள்ள சுவிட்சை பயன்படுத்தாதீர்கள். பிரிண்டரில் உள்ள ஆஃப்
சுவிட்சை அழுத்தினால், உடனே பிரிண்ட் ஹெட்டை சுத்தம் செய்து அதை சரியான
இடத்தில் நிலை நிறுத்துகிற வேலையை பல இங்க்ஜெட் பிரிண்டர்கள் செய்கின்றன.

இப்போதைய பிரிண்டர்கள் எல்லாம் யுஎஸ்பி (USP) போர்ட்டுகளில் இணைக்கப்படும்
விதத்திலேயே வெளியாகின்றன. நீங்கள் பயன்படுத்தும் பழைய பிரிண்டரை பேரலல்
போர்ட்டில் இணைத்திருந்தால் அந்த பிரிண்டர் கேபிள் IEEE 1284 வரையறைக்கு
ஏற்றதா என்பதைப் பாருங்கள். (பல மலிவான பிரிண்டர் கேபிள்கள் உள்ளன. அவை
IEEE 1284 வரையறைக்கு ஏற்ப தயாரிக்கப்படடவை அல்ல). இந்த வரையறையிலான
கேபிள்களால் அச்சின் வேகம் கூடும். Bidirection வசதி இந்த கேபிளில் உண்டு.

பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் பயாஸின் (BIOS) செட்டப்பில்
நுழைந்து ECP அல்லது EPP செட்டிங்கை கொண்டு வர வேண்டும்.Enthaneed Parallel
Port (EPP) மற்றும் Enhanced Capabilities Port (ECP) ஆகியவை பயாஸ்
செட்டப்பின் எந்த மெனுவின் கீழ் வருகிறது என்பதைப் பார்த்து அவற்றை Enabled
என மாற்றுங்கள். பயாஸை பாதுகாத்து வெளியேறுங்கள். இவை எல்லாம் பழைய
கம்ப்யூட்டரில், பழைய பிரிண்டரைப் பயன்படுத்துவோருக்கே. நீங்கள் புதியதாக
அண்மைக் காலத்தில் இவற்றை வாங்கி இருந்தால், மேலே உள்ளதை ஒதுக்கிவிட்டுப்
படியுங்கள்.
பயன்படுத்தாத போது பிரிண்டரை மூடி வையுங்கள். தூசிகள், அழுக்குகள், காகித
பிசிறுகள் போன்றவற்றால் பிரிண்டர்கள் சரியாக இயங்காமல் போய் விடும். எனவே
பிரிண்டரின் உள்ளே துடையுங்கள். சிறிய வாக்வம் கிளீனர் மூலம் பிரிண்டரின்
உள்ளே உள்ள அழுக்குகளை உறிஞ்சி எடுங்கள். தூசிகள் வராத இடத்தில் பிரிண்டரை
வைப்பது நல்லது.

பிரிண்டர்ஹெட்டை அவ்வப்போது துடைக்க வேண்டும். பிரிண்டருடன் வந்துள்ள
சாப்ட்வேரில் பிரிண்டர்ஹெட்டைச் சுத்தப்படுத்தும் வசதி உள்ளதா எனப்
பாருங்கள். இருந்தால் அந்த சாப்ட்வேரை இயக்கி பிரிண்டர்ஹெட்டை துடையுங்கள்.
சாப்ட்வேரில் அந்த வசதி இல்லாவிடில் பிரிண்டர் ஹெட்டை துடைக்கிற வழி
பிரிண்டருக்கான புத்தகத்தில் தரப்பட்டுள்ளதா எனப்பாருங்கள். பிரிண்டர்
ஹெட்டை மிதமான வெந்நீரில் நனைய வைத்த பிசிறற்ற துணியால் துடையுங்கள்.
Isopropxl Alcohol திரவத்தில் முக்கிய பஞ்சால் பிரிண்டர்ஹெட்டை துடைக்கவும்
செய்யலாம்.

சரியான காகிதத்தையே பயன்படுத்துங்கள். பிரிண்டருக்கான தகவல் புத்தகத்தில்
எப்படிப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கும். மிக அதிக எடை கொண்ட காகிதங்களைப்
பயன்படுத்தினால் அவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம். சில காகிதங்கள் இங்கை
உறிஞ்சி பரப்பி விடுகின்றன. எனவே அச்சைப் பார்க்க/படிக்க எரிச்சலாக
இருக்கும். தரமான காகிதங்களைப் பயன்படுத்துங்கள். மடங்கிய, கிழிந்த, வளைந்த
காகிதங்களை அச்சடிக்கப் பயன்படுத்தாதீர்கள். இவை பிரிண்டரினுள் சிக்கி
கொள்ளலாம்.

இங்க்ஜெட் பிரிண்டர்களைப் பயன்படுத்துகிறவர்கள் வாரம் ஒரு முறையாவது
அச்சடிக்க வேண்டும். அந்த வாரம் அச்சடிக்க ஒன்றும் இல்லையே என்று சும்மா
இருந்துவிட்டால் இங்க் உறைந்துபோய் விடும். பின்பு இங்க் கார்ட்ரிட்ஜையே
தூக்கி எறிய வேண்டியதுதான். எனவே Test Printவசதியைப் பயன்படுத்தி
கறுப்பிலும், வண்ணத்திலும் அச்சடியுங்கள். தேவைப்படுகிறதோ இல்லையோ வாரம்
ஒரு முறை எதையாவது அச்சடிக்கிற பழக்கத்தை மேற்கொண்டால் பிரச்னைகள் எழாது.

ஓரிரு வாரங்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் கார்ட்ரிட்ஜை கழற்றி, காற்று
புகாவண்ணம் நல்ல காகித உறையில் அதை வைத்து மூடுங்கள். கார்ட்ரிட்ஜை
வாங்கும்போது அது இருந்த உறையை பத்திரப்படுத்தி வைத்திருந்தால், அந்த உறையை
இப்பொழுது பயன்படுத்தலாம்.

அச்சடிப்பதற்கு முன்னர் பிரிண்ட் பிரிவியூவைப் பாருங்கள். பிரிவியூவில்
நன்றாக இருந்தால் மட்டுமே அச்சடியுங்கள். இதனால் காகிதமும்,
இங்க்கும்/டோனரும் வீணாகாது. ஒரு காகிதத்திலேயே பல படங்களை அல்லது
டாக்குமெண்டுகளை அச்சடிக்க முடிந்தாலும் நமக்கு பணம் லாபமே. Fine Printஎன்ற
யுடிலிட்டியை www.download.comதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து
பயன்படுத்துங்கள். ஒரு காகிதத்திலேயே பலவற்றை அச்சடிக்கும் ஆற்றல்
இதற்குண்டு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6 Empty Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum