Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் செய்யும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று டென்மார்க் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அகதிகளிடம் இருக்கும் 10,000 கிரோனருக்கு (1,450 டொலர்கள்) அதிகமான பணத்தை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் இந்த சட்டமூலத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அகதிகளின் பராமரிப்பு செலவுக்காகவே இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்படவிருப்பதாக டென்மார்க் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டம் அடிப்படை சொத்துரிமையை மீறுவதாக ஐரோப்பிய கவுன்ஸில் மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளன. டென்மார்க் அரசின் இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜி ஜெர்மன், யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ததோடு ஒப்பிட்டு சிலர் விமர்சித்துள்ளனர்.
கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திற்கு அமைய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடைமைகளை சோதனையிடவும் அனுமதிக்கப்படுகிறது.
இதில் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
தவிர, அகதிகளின் குடும்பத்தினர் ஒன்றிணைவதை தாமதப்படுத்தும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றும் டென்மார்க் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
இது குருட்டுத்தனமாக உள்ளது அவர்களின் உடமைகளைப் பறித்து அவர்களைக் கவனிக்க வேண்டுமா உங்கள் நாட்டில் என்ன பஞ்சமா அவர்கள் உடமைகள் அவர்களுக்கு பின்னுக்கு உதவாதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
அதாவது பணம் இல்லாதவர்களிடம் அல்ல, பணக்காரராய் செல்வந்தராய் இருப்போரிட்மிருந்து தானே? பணம் இருப்போர் தம் தேவையை தாமே பூர்த்தி செய்யலாம் தானே?அகதிகளிடம் இருக்கும் 10,000 கிரோனருக்கு (1,450 டொலர்கள்) அதிகமான பணத்தை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் இந்த சட்டமூலத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அகதிகளின் பராமரிப்பு செலவுக்காகவே இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்படவிருப்பதாக டென்மார்க் அரசு குறிப்பிட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் அகதியாய் வந்து பதிவோர் மூன்று மாதம் முதல் ஆறு மாதத்துக்குள் தமக்கென வேலை தேடி சுயமாய் வாழ தொடங்கி விட்டார்கள் ஆனால் இக்காலத்தில் அப்படி அல்ல. உடல் வளைத்து உழைக்க சோம்பலில் அரசு தரும் பணத்தினை வாங்கி சொகுசாய் வாழ்கின்றார்கள்.
அப்படியானவர்களிடம் தேவைக்கும் மேல் பணம் இருந்தால் அதை அவர்களுக்கு பயன் படுத்துவதில் தவறில்லை.
செல்போன், கடிகாரங்கள் பறிமுதல் என்பது நிஜமாய் இருக்காது,செய்தியின் சுவைக்கு சேர்த்திருப்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
நண்பன் wrote:இது குருட்டுத்தனமாக உள்ளது அவர்களின் உடமைகளைப் பறித்து அவர்களைக் கவனிக்க வேண்டுமா உங்கள் நாட்டில் என்ன பஞ்சமா அவர்கள் உடமைகள் அவர்களுக்கு பின்னுக்கு உதவாதா
அளவுக்கு மேல் இருப்பதை தான் பெற்று அவர்களுக்கே பயன் படுத்துவார்கள். பெருகி வரும் அகதிகள் தேவையை சமாளிக்க தன் நாட்டு மக்கள் மேல் வரிச்சுமையை அதிகரிப்பது மட்டும் சரியாய் இருக்குமோ?
பின்னூக்கு உதவும் என்பதற்காக இன்றைய நிலையில் பணம் இருப்போர் எதற்கு ஓசி எதிர்பார்க்கணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
Nisha wrote:நண்பன் wrote:இது குருட்டுத்தனமாக உள்ளது அவர்களின் உடமைகளைப் பறித்து அவர்களைக் கவனிக்க வேண்டுமா உங்கள் நாட்டில் என்ன பஞ்சமா அவர்கள் உடமைகள் அவர்களுக்கு பின்னுக்கு உதவாதா
அளவுக்கு மேல் இருப்பதை தான் பெற்று அவர்களுக்கே பயன் படுத்துவார்கள். பெருகி வரும் அகதிகள் தேவையை சமாளிக்க தன் நாட்டு மக்கள் மேல் வரிச்சுமையை அதிகரிப்பது மட்டும் சரியாய் இருக்குமோ?
பின்னூக்கு உதவும் என்பதற்காக இன்றைய நிலையில் பணம் இருப்போர் எதற்கு ஓசி எதிர்பார்க்கணும்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
அனியாயம் எல்லாம் இல்லை, முன்னரைப்போல் இப்போது அகதிகள் இல்லை, இப்போது அகதி எனும் பெயரில் சொகுசு வாழ்க்கை வாழ்வோர் தான் அதிகம், அனைத்தினையும் இலவசமாக பெற்று தம் சொந்த ஊரில் கோடிகோடியாய் பணம் சேமிப்போரும் உண்டு. நாங்கள் வந்த போது இத்தனை சலுகைகள் இருக்கவில்லை. இன்றைய நிலையில் நிஜத்தில் பாதிக்கப்பட்டவனை விட பாதிக்கப்படாதவர்கள் தம்மிடமிருக்கும் பணத்தினை பயன் படுத்தி தான் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.
சில விடயங்கள் சில நேரம் சட்டென முடிவெடுக்க இயலாது, அதில் இந்த அகதிகள் விடயமும் ஒன்று.
சில விடயங்கள் சில நேரம் சட்டென முடிவெடுக்க இயலாது, அதில் இந்த அகதிகள் விடயமும் ஒன்று.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
Nisha wrote:அனியாயம் எல்லாம் இல்லை, முன்னரைப்போல் இப்போது அகதிகள் இல்லை, இப்போது அகதி எனும் பெயரில் சொகுசு வாழ்க்கை வாழ்வோர் தான் அதிகம், அனைத்தினையும் இலவசமாக பெற்று தம் சொந்த ஊரில் கோடிகோடியாய் பணம் சேமிப்போரும் உண்டு. நாங்கள் வந்த போது இத்தனை சலுகைகள் இருக்கவில்லை. இன்றைய நிலையில் நிஜத்தில் பாதிக்கப்பட்டவனை விட பாதிக்கப்படாதவர்கள் தம்மிடமிருக்கும் பணத்தினை பயன் படுத்தி தான் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.
சில விடயங்கள் சில நேரம் சட்டென முடிவெடுக்க இயலாது, அதில் இந்த அகதிகள் விடயமும் ஒன்று.
ஓ உங்கள் நிலையை வைத்துச்சொல்கிறீர்கள் ம்ம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
Nisha wrote:அனியாயம் எல்லாம் இல்லை, முன்னரைப்போல் இப்போது அகதிகள் இல்லை, இப்போது அகதி எனும் பெயரில் சொகுசு வாழ்க்கை வாழ்வோர் தான் அதிகம், அனைத்தினையும் இலவசமாக பெற்று தம் சொந்த ஊரில் கோடிகோடியாய் பணம் சேமிப்போரும் உண்டு. நாங்கள் வந்த போது இத்தனை சலுகைகள் இருக்கவில்லை. இன்றைய நிலையில் நிஜத்தில் பாதிக்கப்பட்டவனை விட பாதிக்கப்படாதவர்கள் தம்மிடமிருக்கும் பணத்தினை பயன் படுத்தி தான் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.
சில விடயங்கள் சில நேரம் சட்டென முடிவெடுக்க இயலாது, அதில் இந்த அகதிகள் விடயமும் ஒன்று.
உங்கள் இந்தக் கருத்தை என்னால் ஏற்க முடிய வில்லை
நாட்டில் வாழ முடியாத நிலையில் தன் நாட்டைத் துறந்து செல்லும் மக்கள்
உள்ளதை அதிலும் எடுக்க முடிந்ததை கொண்டு செல்கிறார்கள்
அவர்களுக்கு நாட்டில் சொத்து சேர்க்கும் எண்ணம் இருந்தால் ஏன் இப்படி எடுத்துச்செல்கிறார்கள்
நாட்டிலே விட்டு விட்டு செல்லலாமே முக்கியமாக சிரியாவில் நடக்கும் பிரச்சினைக்கு அவர்கள் உயிர் தப்பினால் போதும் என்று முடிந்ததை எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறார்கள் உயிர் தப்பி அவர்களிடம் உள்ளதைப் பறித்தால் என்ன நியாயம்
அந்த இடத்தில் நீங்கள் இருந்து சிந்தித்தித்துப்பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
என்னைக் கேட்டால் ஒருவருடைய உடமை அவர் எங்கு சென்றாலும் அது அவருக்கே சொந்தமானது அதை பறிமுதல் செய்வது ஏற்புடையதல்ல அகதி என்று வருபவர்கள் அவர்களது நாடு துறந்து வாழமுடியாத நிலையில்தான் வருகிறார்கள் மத்திய கிழக்கு அகதிகளின் நிலை அதுதான் தன் நாட்டில் சொகுசாக ஆடம்பரமாக பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள்தான் நாட்டின் சூழலை மையமாகக் கொண்டு கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்லும் போது அவர்களுக்கு முடிந்தால் உதவிசெய்து வழச்செய்தல்தான் சிறப்பாக அமையக்கூடிய நடைமுறை அவர்களிடமே பறித்து அவர்களையே வாழவைப்போம் என்பது சிறந்த சட்டமாக தெரியவில்லை
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
நேசமுடன் ஹாசிம் wrote:என்னைக் கேட்டால் ஒருவருடைய உடமை அவர் எங்கு சென்றாலும் அது அவருக்கே சொந்தமானது அதை பறிமுதல் செய்வது ஏற்புடையதல்ல அகதி என்று வருபவர்கள் அவர்களது நாடு துறந்து வாழமுடியாத நிலையில்தான் வருகிறார்கள் மத்திய கிழக்கு அகதிகளின் நிலை அதுதான் தன் நாட்டில் சொகுசாக ஆடம்பரமாக பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள்தான் நாட்டின் சூழலை மையமாகக் கொண்டு கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்லும் போது அவர்களுக்கு முடிந்தால் உதவிசெய்து வழச்செய்தல்தான் சிறப்பாக அமையக்கூடிய நடைமுறை அவர்களிடமே பறித்து அவர்களையே வாழவைப்போம் என்பது சிறந்த சட்டமாக தெரியவில்லை
உங்கள் கருத்து உண்மைதான்
ஆனால் ஒரு சிலர் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பொய் சொல்லிக்கொண்டு தஞ்சம் புகிறார்கள் ஆனால் அவர்கள் எதையும் எடுத்தும் செல்வதில்லை அவர்களை இனம் கண்டு நாடு கடத்த வேண்டும்
சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்கள் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் தன் தாய் நாட்டை விட்டு வேற நாட்டில் தஞ்சம் புகும் போது அவர்களுக்கு இடம் கிடைக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள் பரிதாப நிலை எல்லாம் ஒரு நாள் தீரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
உலகத்தில் சீரியர்கள் மட்டும் பாதிக்கபப்டவில்லை, நீங்கள் சீரியர்களை மட்டும் வைத்து பார்க்க வேண்டாம். சீரியர்கள் பிரச்சனை உலக அளவில் பேசப்படுவதோடு ஐரோப்பாவிற்குள் இலகுவில் ஊருடுவக்கூடியவர்களாக இருப்பதனால் உங்களுக்கு அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதாக தோன்றுகின்றது.
சீரியர்களை விட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் ஆண்டுக்கணக்கில் உணவின்றி தவிப்போர் உண்டு.
வசதி வாய்ப்பிருப்போர் நாட்டை விட்டு வரும் வாய்ப்பிருப்பதால் வருகின்றர்கள். வரமுடியாதவர்கள் அங்கேயே கிடந்து பரிதவிகின்றார்கள்.
இலங்கையில் ஒரு சில நாட்களில் இலட்சக்கணக்கானோர் அழிக்கப்பட்டபோது இம்மாதிரி பேச்சுக்கள் எழவில்லை, இன்றைக்கும் அதன் பாதிப்புக்கள் தொடர்வதும் சீரியர்களை விட அதிக கால ஈழத்தமிழர்கள் துன்பப்படுவதும் உலகின் பார்வைக்கு வராததேன்?
அடுத்தது... என் நிலை வைத்து நான் இக்கருத்தை சொல்வதாய் புரிதல்.... நாங்கள் அகதியாய் இங்கே வந்தாலும் வந்த காலம் தொடக்கம் இன்று வர அரசின் நிதியுதவி எதையும் பெற்றதில்ல, அப்பா தான் வந்து 3 மாதத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததனாலும் நான் 16 வயதிற்குள் இருந்ததனாலும் அப்பாவுடன் தான் என்னை அனுப்பினார்கள்.
அதே போல் என் தங்கை வந்த போது ஒரு ரூபாய் கூட நாங்கள் அரச உதவி வேண்டியதில்லை.
ஆனால் இன்று அகதியாய் வருவோர் நிலை அப்படி அல்ல. ஆளுக்கு நாலு செல்போன்,தாம் கடந்து வந்ததை மறந்த திமிர்த்தனம் தான் அதிகமாக உள்ளது. யாரையும் மதிப்பதிலை, எனக்கு எல்லாம் தெரியும் என மேதமைப்போக்கு,ஏதோ அரச பரம்பரையில் வந்தது போல் நடை உடைபாவனை.
அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவருக்கு அரசு வீடுமுதன் அனைத்தையும் கவனித்து ஒரு மாதத்துக்கு இலங்கைப்பணம் ஒரு இலட்சத்துக்கு மேல் கைச்செலவுக்கும் , சாப்பாட்டுக்கும் கொடுக்கின்றது, வேறு செலவு இல்லை, அனைத்தினையும் அரசே கவனிக்கின்றது, இம்மாதிரி வசதி வாய்ப்பு நாங்கள் வந்த போது இல்லை. அதனாலேயே இப்போது அகதியாய் வரும் அனைவரும் சொகுசு வாழ்க்கை வாழ விரும்புகின்றார்கள்.உடல் களைக்க வேலைக்கு செல்ல விரும்புவதில்லை.
மாங்கு மாங்கென தினம் எட்டு மணி நெரம் உழைத்து வாழும் மனிதர் கார் வாங்க பல தடவை யோசித்து பஸ்ஸிலும் , நடையிலும், தன் பயணத்திட்டத்தை வகுக்க,,,, நேற்று வந்த பலர் அகதி அந்தஸ்து கிடைத்த்பின் கிடைக்கும் பணத்தில் ஔடி கார் வங்குவதும், பென்ஸ் , முதல் தரமான செல்போன் என ஆடம்பரமாக வாழும் போது நாங்கள் கேள்வி கேட்போம்.
இல்லாதவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை,இருப்பவர்களிடம் இருப்பதை தான் அதுவும் அதீதமாய் இருப்பதை... குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பதை அப்படி வைத்திருப்பது வெளிப்படையாக தெரியும் சூழலில் தான் அரசு அவைகளை குறித்து கேள்வி கேட்கும்.
யோசித்து பாருங்கள்... அகதி அந்தஸ்து பெற்ற ஒரு குடும்பத்தால் மாதம் ஆயிரம் பிராங்க் படி,, ஒரு வருடம் வங்கியில் காசு 12 ஆயிரம் சேமிக்க முடிகின்றது, ஆனால் இங்கே ஐந்தாயிரம் சம்பளம் பெறும் ஒருவனால் அது முடிவதிலை, ஏன் இந்த நிலை?
ஐந்தாயிரம் சம்பளம் பெற கஷ்டப்பட்டு வேலை செய்பவனிடம் வருமான வரி 15 வீதம் அறவிட்டு தான் அகதிகளுக்கு உதவி செய்கின்றார்கள் எனும் போது இம்மாதிரி தேவைக்கு மேலான சேமிப்புக்களை அரசு எடுப்பதில் என்ன தவறு?
இவர்களை போல் இன்னொருவருக்கு உதவ முடியுமே?
அகதியாய் வருவோரை அரவணைத்து துணி மணி முதல் சாப்பாடு, வீடும் கைச்செலவுக்கு நாளாந்தம் பணமும் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதை விமர்சிக்க யாருக்குமே உரிமை இல்லை
அவர்கள் கொடுக்கும் போது கை நீட்டி நீங்கள் வாங்கினால் அவர்கள் சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படத்தான் வேண்டும்.
என்னை பொறுத்த வரை ஐரோப்பாவில் வாழும் நான் இந்த மாதிரி சட்டங்களை வர வேற்கின்றேன்.
மீண்டும் சொல்கின்றேன்.சீரிய அகதிகளை மட்டும் வைத்து இப்பதிவை பார்க்க வேண்டாம், சீரிய அகதிகள் பிரச்சனை உலகம் அறியும் படியாய் ஆன படியால் தான் நீங்கள் அதை குறித்து மட்டும் சிந்திக்கின்றீர்கள். ஆனால்? உலகில் சீரியர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை.
சீரியர்களை விட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் ஆண்டுக்கணக்கில் உணவின்றி தவிப்போர் உண்டு.
வசதி வாய்ப்பிருப்போர் நாட்டை விட்டு வரும் வாய்ப்பிருப்பதால் வருகின்றர்கள். வரமுடியாதவர்கள் அங்கேயே கிடந்து பரிதவிகின்றார்கள்.
இலங்கையில் ஒரு சில நாட்களில் இலட்சக்கணக்கானோர் அழிக்கப்பட்டபோது இம்மாதிரி பேச்சுக்கள் எழவில்லை, இன்றைக்கும் அதன் பாதிப்புக்கள் தொடர்வதும் சீரியர்களை விட அதிக கால ஈழத்தமிழர்கள் துன்பப்படுவதும் உலகின் பார்வைக்கு வராததேன்?
அடுத்தது... என் நிலை வைத்து நான் இக்கருத்தை சொல்வதாய் புரிதல்.... நாங்கள் அகதியாய் இங்கே வந்தாலும் வந்த காலம் தொடக்கம் இன்று வர அரசின் நிதியுதவி எதையும் பெற்றதில்ல, அப்பா தான் வந்து 3 மாதத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததனாலும் நான் 16 வயதிற்குள் இருந்ததனாலும் அப்பாவுடன் தான் என்னை அனுப்பினார்கள்.
அதே போல் என் தங்கை வந்த போது ஒரு ரூபாய் கூட நாங்கள் அரச உதவி வேண்டியதில்லை.
ஆனால் இன்று அகதியாய் வருவோர் நிலை அப்படி அல்ல. ஆளுக்கு நாலு செல்போன்,தாம் கடந்து வந்ததை மறந்த திமிர்த்தனம் தான் அதிகமாக உள்ளது. யாரையும் மதிப்பதிலை, எனக்கு எல்லாம் தெரியும் என மேதமைப்போக்கு,ஏதோ அரச பரம்பரையில் வந்தது போல் நடை உடைபாவனை.
அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவருக்கு அரசு வீடுமுதன் அனைத்தையும் கவனித்து ஒரு மாதத்துக்கு இலங்கைப்பணம் ஒரு இலட்சத்துக்கு மேல் கைச்செலவுக்கும் , சாப்பாட்டுக்கும் கொடுக்கின்றது, வேறு செலவு இல்லை, அனைத்தினையும் அரசே கவனிக்கின்றது, இம்மாதிரி வசதி வாய்ப்பு நாங்கள் வந்த போது இல்லை. அதனாலேயே இப்போது அகதியாய் வரும் அனைவரும் சொகுசு வாழ்க்கை வாழ விரும்புகின்றார்கள்.உடல் களைக்க வேலைக்கு செல்ல விரும்புவதில்லை.
மாங்கு மாங்கென தினம் எட்டு மணி நெரம் உழைத்து வாழும் மனிதர் கார் வாங்க பல தடவை யோசித்து பஸ்ஸிலும் , நடையிலும், தன் பயணத்திட்டத்தை வகுக்க,,,, நேற்று வந்த பலர் அகதி அந்தஸ்து கிடைத்த்பின் கிடைக்கும் பணத்தில் ஔடி கார் வங்குவதும், பென்ஸ் , முதல் தரமான செல்போன் என ஆடம்பரமாக வாழும் போது நாங்கள் கேள்வி கேட்போம்.
இல்லாதவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை,இருப்பவர்களிடம் இருப்பதை தான் அதுவும் அதீதமாய் இருப்பதை... குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பதை அப்படி வைத்திருப்பது வெளிப்படையாக தெரியும் சூழலில் தான் அரசு அவைகளை குறித்து கேள்வி கேட்கும்.
யோசித்து பாருங்கள்... அகதி அந்தஸ்து பெற்ற ஒரு குடும்பத்தால் மாதம் ஆயிரம் பிராங்க் படி,, ஒரு வருடம் வங்கியில் காசு 12 ஆயிரம் சேமிக்க முடிகின்றது, ஆனால் இங்கே ஐந்தாயிரம் சம்பளம் பெறும் ஒருவனால் அது முடிவதிலை, ஏன் இந்த நிலை?
ஐந்தாயிரம் சம்பளம் பெற கஷ்டப்பட்டு வேலை செய்பவனிடம் வருமான வரி 15 வீதம் அறவிட்டு தான் அகதிகளுக்கு உதவி செய்கின்றார்கள் எனும் போது இம்மாதிரி தேவைக்கு மேலான சேமிப்புக்களை அரசு எடுப்பதில் என்ன தவறு?
இவர்களை போல் இன்னொருவருக்கு உதவ முடியுமே?
அகதியாய் வருவோரை அரவணைத்து துணி மணி முதல் சாப்பாடு, வீடும் கைச்செலவுக்கு நாளாந்தம் பணமும் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதை விமர்சிக்க யாருக்குமே உரிமை இல்லை
அவர்கள் கொடுக்கும் போது கை நீட்டி நீங்கள் வாங்கினால் அவர்கள் சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படத்தான் வேண்டும்.
என்னை பொறுத்த வரை ஐரோப்பாவில் வாழும் நான் இந்த மாதிரி சட்டங்களை வர வேற்கின்றேன்.
மீண்டும் சொல்கின்றேன்.சீரிய அகதிகளை மட்டும் வைத்து இப்பதிவை பார்க்க வேண்டாம், சீரிய அகதிகள் பிரச்சனை உலகம் அறியும் படியாய் ஆன படியால் தான் நீங்கள் அதை குறித்து மட்டும் சிந்திக்கின்றீர்கள். ஆனால்? உலகில் சீரியர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் ( டென்மார்க்)
நேசமுடன் ஹாசிம் wrote:என்னைக் கேட்டால் ஒருவருடைய உடமை அவர் எங்கு சென்றாலும் அது அவருக்கே சொந்தமானது அதை பறிமுதல் செய்வது ஏற்புடையதல்ல அகதி என்று வருபவர்கள் அவர்களது நாடு துறந்து வாழமுடியாத நிலையில்தான் வருகிறார்கள் மத்திய கிழக்கு அகதிகளின் நிலை அதுதான் தன் நாட்டில் சொகுசாக ஆடம்பரமாக பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள்தான் நாட்டின் சூழலை மையமாகக் கொண்டு கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்லும் போது அவர்களுக்கு முடிந்தால் உதவிசெய்து வழச்செய்தல்தான் சிறப்பாக அமையக்கூடிய நடைமுறை அவர்களிடமே பறித்து அவர்களையே வாழவைப்போம் என்பது சிறந்த சட்டமாக தெரியவில்லை
மத்திய கிழக்கு அகதிகள் நிலை இப்போது தான் ஹாசிம், எம் ஈழத்தமிழ் அகதிகள் கடந்த இரண்டு தலைமுறைகள் இப்படி நாடோடி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆபிரிக்க பகுதியில் சோமாலியா போன்ற பகுதிகளில் பல ஆண்டுக்கணக்கில் உள் நாட்டு யுத்தமும், பசியும் பட்டினியுமாய் தவிக்கின்றார்கள். ஆசியாவில் பர்மாவில் ஓட வழியின்றி தப்பிசெல்ல இடமின்றி பரிதவிக்கின்றார்கள். அகதிகள் என்றாலே மத்திய கிழக்கு அதிலும் சீரியா என மட்டும் நினைக்க வேண்டாம்.
கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பி வந்தோரை இந்த சட்டம் எதுவும் செய்யாது அதே போல் செல் போன் கடிகாரம் பறிமுதல் என்பதும் கூட தவறான தகவலாய் தான் இருக்கும், செய்தியும் சுவைக்காக சேர்க்கப்பட்ட வாக்கியம் அதுவாயிருக்கும், நான் அறிந்த வரை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சொத்து
வைத்திருப்போரிடம் தான் இந்த நடவடிக்கை, இல்லாத ஏழைகளிடம் அல்ல..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மிரட்டும் ஸ்வீடன் டென்மார்க் Bridge - Tunnel
» டென்மார்க் நாட்டை இரண்டு ஃபைவ் மார்க்'கா பிரிக்கணும்..!
» உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்
» பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
» ரூபா 57 இலட்சம் பெறுமதியான கைத்தொலைபேசிகள் சிக்கின
» டென்மார்க் நாட்டை இரண்டு ஃபைவ் மார்க்'கா பிரிக்கணும்..!
» உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்
» பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
» ரூபா 57 இலட்சம் பெறுமதியான கைத்தொலைபேசிகள் சிக்கின
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum