சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Khan11

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

4 posters

Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Nisha Fri 12 Feb 2016 - 0:26

கடந்து போன சில நாட்களாக எதையுமே எழுத முடியவில்லை,சிந்தனைகள் தெளிவின்றி குழப்பங்கள்  நிறைந்து  எங்கள்  ஹோட்டலிலும் அடுத்தடுத்த வாரங்களில் தொடர இருக்கும் ஆர்டருக்கான ஆயத்தங்கள் என உடல் மன சோர்வுகள் எதையும் எழுதும் சூழலை தரவில்லை.

அண்மையில் நான் கண்ட கேட்ட சில பல காரியங்கள் என் உள்ளத்தை தைப்பதனால்.... உலகத்தை திருத்த என்னால் இயலாது எனினும்  என் நட்புக்களை எனை  சார்ந்திருப்போரை அவர் செய்யும் தவறுகளை சட்டென சொல்லி  திருத்திடும் என் இயல்பால் நான் இழந்தவைகள் அனேகமாயினும் குற்றம் கண்டு குமுறாமல் இருக்க முடியவில்லை!

இன்றைய உலகில் நான் அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாய் ஆகிப்போன பாலியல் கொடுமைகள் குறித்த படங்கள்  பகிர்வுகள் ஆகிப்போனது,

ஆறுமாதக்குழந்தை தொடக்கம் எண்பது வயதுப்பாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அறிந்திடும் போது நம் வீட்டு பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் வீட்டுக்குள் திரும்பி வரும் வரை மனம் திக் திக்கென திக்குகின்றது!

ஆனாலும் யாருக்கோ நடந்தது என அறியும் போது அதன் வலி உணராது, சம்பந்தப்பட்டோர் மனம் மட்டுமல்ல அவர் உறவுகள் மனம் எத்தனை துயருறும் என உணரக்கூட செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் நினைத்து உச் கொட்டி விட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை புகைப்படங்கள் எடுத்து விதவிதமாய் ஏதோ மாடல்   காட்டுவது போல் இதனால் இப்படி அப்படி என பகிர்கின்றோம்.

தவறுகளை தட்டிக்கேட்பதாக சொல்லி தவறுகளுக்கு துணை போகின்றோம் எனபதோடு  தவறுகள் செய்ய நாம் தூண்டுதலும் தருகின்றோம் என்பதை அறியாதோராய் இருக்கின்றோமா?

குற்றங்கள் என்பது நேரடியாக குற்றம் செய்வதல்ல,,, இப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என  படம் போட்டு காட்டி  ஒன்றுமறியாதவனையும் இப்படி செய்து பார்க்கலாமா என  தூண்டுதல் தருவதும்  தான் பெரிய குற்றம்,

அம்மா செய்த தப்புக்கு அவரை தண்டிக்க படிக்கும் பெண்ணை பழிவாங்குவதும், பெண் என்றாலே அவள் ஆடைகளை களைந்து  பார்க்கும் வக்கிர மனமும் உருவாக  நீங்களிடும் புகைப்படங்களும், கூட வழி காட்டியாய் இருக்கின்றது என புரிந்திடாமலா இருக்கின்றீர்கள்?

பாலியல் வக்கிரம் பிடித்த கயவர்கள் கூடி கொலை செய்ததை படமெடுத்து பரிதாபம் தேடும் வக்கிர மனம் எங்கிருந்து உருவாகியது?

ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில்  அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?

முதல் தண்டனை குற்றவாளிகளாய் இவர்களை   தண்டிக்க வேண்டும் எனும் சட்டம்வராதோ?

உலகத்தை திருத்த என்னால் இயலாது, ஆனால் நான் சார்ந்திருக்கும் சமுகத்தின் தவறுகளை திருத்த என்னால் இயலும் தானே?

அவ்வாறு இடும் புகைப்படங்களை யார் எடுத்தார்? எவர் எடுத்தார் என்பது எனக்குரிய ஆராய்ச்சியாய் இல்லை?  நான் என்ன செய்கின்றேன், எப்படி நடக்கின்றேன், இந்த சமூகத்துக்கு என்னால் செய்யக்கூடியது என்ன என்பது மட்டுமே நம் கேள்வியாய் இருக்க வேண்டும்! அடுத்தவன் முகத்தில் இருக்கும் அசிங்கத்தை துடைக்க முன் நம் முதுகில் இருக்கும்  தூசியைத் துடைப்போம்!

பேஸுபுக்கில் இதை குறித்த பகிர்வொன்றில் என் கருத்தினை இட்டேன், அக்கருத்தினை இங்கே இடுவது இதை படித்திடும் ஒரிருவரேனும்  தம் தவறுகளை உணர்ந்து அவ்வாறு செய்வோரையும் தட்டி திருத்திட மாட்டார்களோ எனும் நப்பாசையில்  என் கண் பார்வையில்  ஏன் எப்படி எதனால் என அக்குவேறு ஆணிவேறாய் விபரித்து இடும் படங்கள், பதிவுகள்கண்டால் கண்டிக்கின்றேன்,படங்களை நீக்கும் வரை கடுமையாக என் எதிர்ப்பை பதிவாக்குகின்றேன்!

பாலியல் வன்முறைகள் எங்கேயோ எப்போதோ ஏன் இப்போது தான் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர் புகைப்படம் இட்டு பதிவிடல் சரியானதல்ல என்பது என் கருத்து.

நம் மன ஆதங்கம் வெளிப்பட இன்னொருவர் அந்தரங்கம் வெளியரங்கமாகுவது மட்டுமல்ல இதைபோல் செய்யலாம் எனும் விதையையும் இம்மாதிரி புகைப்படங்கள் விதைத்து செல்கின்றன!

இதே நிலை நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் முகம் தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்க, வெளியிட அனுமதிப்போமா? வக்கிரத்திலும் மிகக்கொடூர வக்கிரம் பரிதாபப்படுகின்றோம், மனம் வருந்துகின்றோம் என சொல்லி அவர்கள் புகைப்படம் வெளியிடுவது!

இயலுமானவரை உங்கள் எதிர்ப்புக்களை பதிவுகளில் மட்டும் வெளியிடுங்கள் புகைப்படங்களை தவிருங்கள். இவ்விடயத்தில் மேல் நாட்டாரிடம் நம்மவர்கள் கற்ற வேண்டியதும், புரிய வேண்டியதும் அனேகம் தான்.

ஒரு கொலை நடந்தால்,பாலியல் கொடூரம் நடந்தால் அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஏன்,ஏப்படி, எதற்கு என வரி வரியாய் எழுதி இப்படி கூட செய்யலாமே என ஆர்வத்தினை உருவாக்கி மென் மேலும் பல குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.

வளர்ந்த நாடுகளில் அடுத்த வீட்டில் கொலை நடந்தாலும் ஏன் எப்படி எதுக்கு என ஆராய்ந்து தண்டனை கொடுப்பார்களே தவிர மக்களை குழப்புவதில்லை.அதனால் வரும் பாராட்டுகள்,புகழ்ச்சிகளுக்கு மயங்குவதில்லை!மீடியாக்கள் தம் பொறுப்புணர்ந்தே நடந்து கொள்கின்றார்கள். 

ஆனால் நம் நாட்டிலோ? நாட்டை  விடுங்கள்! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள்!

கற்பழிப்புக்கள் நிருபிக்கப்பட்டால் விசாரணைகள் என இழுத்தடிக்காமல் உடனடி தண்டனைகள் கிடைக்க வேண்டும் என உங்கள் எதிர்ப்புக்களை பதிவாக்குங்கள்”. எதிர்க்கின்றோம் எனும் பெயரில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை விதவிதமாய் இட்டு உயிரோடிருப்போரை வதைக்காதீர்கள்!

செய்தவதை நோக்கி உங்கள் விரலகளை நீட்டமுன் உங்களை நோக்கி சாட்டும் விரல்கள் சொல்வதை மனச்சாட்சியுடன் அணுகுங்கள்.

நாளை இதே நிலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலிருப்போருக்கும் வரலாம்!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

http://alpsnisha.blogspot.ch/2016/02/blog-post_10.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பானுஷபானா Fri 12 Feb 2016 - 14:05

நீங்க சேனை வராத போதே வேலை பளு தான் காரணமா இருக்கும் .
 குழப்பம் மனச்சோர்வு எல்லாம் சரியாகும் தெம்பா இருங்க நிஷா. 

நீங்க சொல்வதை ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவரின் படங்களைப் போட்டு பணத்தை எண்ணுகிற ஊடகங்கள் தான் இங்கே அதிகம் . ஒருவரின் துன்ப நிலை பலருக்கு கட்சிப் பொருள் ஆகிறது .
எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து நாம் யோசித்தோமானால் இப்படிப் படங்களைப் போட்டு வேதனையை கிளப்பமாட்டார்கள் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Nisha Fri 12 Feb 2016 - 14:18

மனச்சோர்வுக்கு வேலைப்பழு மட்டும் காரணம் இல்லை பானு!

அளவுக்கு மீறிய நம்பிக்கைகள் தரும் வலி, இனி எழுத வேண்டாம் என யோசிக்கும் படிக்கூட இருந்தது. இருக்கின்றது, எத்தனை காலம் எல்லாமே கடந்து போகும் என வலிக்காதது போல் நடிக்க முடியும் பானு?

ஆனால் பானு முத்தமிழ் மன்றம் போல் சேனையும் ஆகி விடக்கூடாது என்பதால் இங்கே தொடர வேண்டும் என தமிழ் மேல் இருக்கும் பற்றால் மட்டும் தொடர்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பானுஷபானா Fri 12 Feb 2016 - 14:32

Nisha wrote:மனச்சோர்வுக்கு வேலைப்பழு மட்டும் காரணம் இல்லை பானு!

அளவுக்கு மீறிய நம்பிக்கைகள்  தரும் வலி, இனி எழுத வேண்டாம் என யோசிக்கும் படிக்கூட இருந்தது. இருக்கின்றது, எத்தனை காலம் எல்லாமே கடந்து போகும் என வலிக்காதது போல் நடிக்க முடியும் பானு?

ஆனால் பானு முத்தமிழ் மன்றம் போல் சேனையும் ஆகி விடக்கூடாது என்பதால்  இங்கே தொடர வேண்டும் என தமிழ் மேல் இருக்கும் பற்றால் மட்டும் தொடர்கின்றேன்.

எதனால் இப்படி பேசுரிங்கனு எனக்கு காரணம் தெரியாது, ஆனால் எதிலும் எந்த விசயத்திலும் ரொம்ப ஆழ்ந்து போகாதிங்க . முடிந்தவரை மேலோட்டமாக எல்லாவற்றிலும் இருக்கப் பாருங்க நிஷா .

இறைவன் மேல் நம்பிக்கை வைங்க அவன் கைவிடமாட்டான்.

முத்தமிழ் மன்றம் போல சேனையை பார்க்காம இருந்துராதிங்க ப்ளீஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Nisha Fri 12 Feb 2016 - 14:42

இல்லப்பா அப்படி ஆகாது,எனக்கு முத்தமிழ் மன்றம் மட்டும் அல்ல தமிழ் மன்றமும் ஒரு பாடம், நான் இருக்கும் வரை கல கலவென ஓடிய தளங்கள் இன்றிருக்கும் நிலை கண்டு அப்படி சேனையும் ஆகி விடக்கூடாது என்பதை நினைத்தே இயன்ற வரை இங்கே தொடர்கின்றேன்.

யார் என்ன சொன்னாலும் என்னால் இயன்ற வரை வருவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பானுஷபானா Fri 12 Feb 2016 - 15:08

Nisha wrote:இல்லப்பா அப்படி ஆகாது,எனக்கு முத்தமிழ் மன்றம் மட்டும் அல்ல தமிழ் மன்றமும் ஒரு பாடம்,  நான் இருக்கும் வரை கல கலவென ஓடிய தளங்கள்  இன்றிருக்கும் நிலை கண்டு  அப்படி சேனையும் ஆகி விடக்கூடாது என்பதை நினைத்தே இயன்ற வரை இங்கே தொடர்கின்றேன்.

யார் என்ன சொன்னாலும் என்னால் இயன்ற வரை வருவேன்.

mikka nandri nisha மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பானுஷபானா Fri 12 Feb 2016 - 15:08

unga thumbiya kanome enge ponar.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Nisha Fri 12 Feb 2016 - 15:31

பானுஷபானா wrote:unga thumbiya kanome enge ponar.

எனக்கு தெரியாது பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பானுஷபானா Sat 13 Feb 2016 - 14:55

Nisha wrote:
பானுஷபானா wrote:unga thumbiya kanome enge ponar.

எனக்கு தெரியாது பானு!
ungakia sollama irukkara?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Nisha Sat 13 Feb 2016 - 17:03

சொல்லவும் இல்லை, சொல்வதும் இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by நண்பன் Sat 13 Feb 2016 - 18:48

பானுஷபானா wrote:நீங்க சேனை வராத போதே வேலை பளு தான் காரணமா இருக்கும் .
 குழப்பம் மனச்சோர்வு எல்லாம் சரியாகும் தெம்பா இருங்க நிஷா. 

நீங்க சொல்வதை ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவரின் படங்களைப் போட்டு பணத்தை எண்ணுகிற ஊடகங்கள் தான் இங்கே அதிகம் . ஒருவரின் துன்ப நிலை பலருக்கு கட்சிப் பொருள் ஆகிறது .
எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து நாம் யோசித்தோமானால் இப்படிப் படங்களைப் போட்டு வேதனையை கிளப்பமாட்டார்கள் .

உங்கள் கருத்தையே நானும் வழிமொழிகிறேன் அக்கா  சிறப்பான சமூக சிந்தனை கொண்ட ஒரு பதிவு இது இந்தப் பதிவு நிறையப்பேர் பார்க்க வேண்டும் படிக்க வேண்டும் நாமும் கொண்டு செல்வோம்  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by பர்ஹாத் பாறூக் Sat 13 Feb 2016 - 19:08

ஈழத்துப் பெயரில்  வெளிநாட்டில் இருந்து இயங்குகின்ற நிறைய செய்தி இணையங்கள் காசுக்காக வேண்டி இப்படியான செய்திகள் பலவற்றை பொய்யாகவும் புனைந்து வெளியிடுகின்றது....

எல்லாம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளம்பரக்காசை அள்ளத்தான்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல் Empty Re: உங்களோடு ஒரு நிமிடம்.....!ஆல்ப்ஸ் தென்றல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum