Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?
2 posters
Page 1 of 1
உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?
நான், என் சமுகம்,என் குடும்பம், நம்சமுகம் என எதையும் நமக்குள் மட்டும்வைத்து எடை போடும் மனிதர்களாய் நாம் இருப்பதேன்?
ஒருவர் தனக்கு ஒரு பிரச்சனை என வரும் போது அவருக்கு தானே அது பிரச்சனை என ஏனோ தானோ என யாரோவாய் வேடிக்கை பார்க்கும் நாம் நாளை நமக்கும் அப்பிரச்சனை வரும் என ஏன் உணர்வதில்லை?
உங்கள் மேல் பாசம் காட்டுவோர், நல்ல நட்பென உங்களை மதிப்போர் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் எனக்கது தேவையில்லை என சொல்லி நொந்திருக்கும் மனதை நோகடிக்காமல் ஆறுதலாய் நான்கு வார்த்தை "என்ன" என்றாவது கேட்க முடியாமல் போகும் நிலை ஏன்?
உங்களுக்கு தேவையின்றி தோன்றுவது அவர்களுக்கு உயிர் பிரச்சனையாகவும் இருக்கலாம், கௌரவப்பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இந்த சூழலில் தேவை, தேவையில்ல என்பதல்ல,நட்பின் உண்மை தான் இங்கே கேள்விக்குறியாகின்றது என்பதை புரிந்திடாமல் இருப்பதேன்!
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!
இக்காலத்தில் உயிர் துறக்க கூட வேண்டாம், நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?
யாருக்கு என்ன பிரச்சினை எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.இன்று உங்கள் நண்பர் காணும் பிரச்சனைக்குரிய சூழல் உங்களுக்கும் வரலாம் என்பதை மறந்து விடாதீர்கள்?
பிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.
உலகத்திலிருந்து எனக்கு என வட்டம் இட்டு நான் என் குடும்பம் என ஒதுங்கி இருந்த காலத்தில் உலகமே அழகாய், அனைவரும் நல்லவராய் தோன்றியதுண்டு, ஒதுங்கியது போதும் என உலகை புரிந்திட புறப்பட்ட பின் இது வரை கண்டதெல்லாம் கனவென தோன்றுகின்றது!
உலகமும் அதில் காணும் பாசங்களும் வேசமாய்,விசமாய் தோன்றுகின்றது!
அனைத்துமே நல்லதென என்னை நாமே ஏமாற்றுகின்றேனோ? இதில் ஏமாளி நானா இல்லை என்ன ஏமாற்றுவதாக நினைக்கும் என்னை சார்த்தோரா?
நிச்சயமாய் நான் ஏமாளியாய் இருக்க மாட்டேன் என மட்டும் உறுதி பட சொல்வேன்.
நன்மையையும், நல்லதையுமன்றி எவருக்கும் சிறு தீங்கு கூட நினைத்திடா என் உள்ளத்து அன்பில் ஆழத்தினை புரிந்திடாமல் என் இரக்கங்களை இறுக்கமாக்கி செல்வோர் தான் ஏமாளிகள்!
மனிதர்கள் தமக்கு ஏற்ப அனைத்தையும் வளைப்பது ஏன்?
நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொல்வார்கள், அன்பு அத்தனை சீக்கிரம் சலித்து போய் விடுமா என்பது எனக்கு புரியவே இல்லை!
பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல் சக மனிதர் மேல் நாம் காட்டும் நேசமும் புளித்து போகுமா!?
அப்படியெனில் இன்று வரை எனக்குள் பல கசப்புக்களை காலம் விதைத்தும் கூட எனக்குள்ளான நேசிப்புக்கள் இன்னும் உயிர்ப்போடிருப்பதெப்படி?
அன்னை,தந்தை முதல் நான் கண்ட அனைவருமே என் நேசிப்பை தூசீயாய் துச்சமாக்கியும் கூட என்னால் எவரையும் வெறுத்திட முடியாததேன்? இன்னும் இன்னும் எப்படி நேசிக்க முடிகின்றது?
மனசுக்கு பிடிக்கும் போது இலகுவாய் கிடைக்கும் நேரமும், காலமும் மனசுக்கு பிடிக்காமல் போகும் போது கடினமாகி போகும் மர்மங்கள் என்ன?
சின்னக்குழந்தை கையில் கிடைத்திடும் பொம்மை போல் அன்பும், நட்பும் கூட இவ்வுலகில் நிகரே இல்லை என இறுமாப்பாய் பொக்கிஷமாய் உணர்ந்த போதினில் வராத சூழல்கள்,காணாமல் போகும் காரண காரியங்கள் சாக்குப்போக்குகள் அசட்டை செய்ய வேண்டும் என தோன்றியபின் இலகுவாய் வருவதேன்?
காலம் அனைத்துக்கும் மருந்தே! ஆனாலும் காலம் விட்டு செல்லும் வடுக்கள் மட்டும் எக்காலத்திலும் மறையாததாய்....................!
சூழ்நிலை சரியில்லை என எதன் மீதோ சாக்குப்போக்குகள் சொல்லி தப்பிப்பதை விட பிடிக்காவிட்டால் பிடிக்க வில்லை என சொல்லி செல்வதற்கென்ன?
தேவை எனில் நேரத்தையும் தம் வசப்படுத்த தெரிந்தோர் சொல்லும் சூழ்நிலை சரியில்லை எனும் காரணம் எனக்கு பிடிப்பதே இல்லை.
அதன் பின் அன்பும் கேள்விக்குறியாகி வெறுமை மட்டுமே எஞ்சி நிற்கின்றது!
வேலியில் போகும் ஓணானை தூக்கி காதினுள் விடுவது என்பது இதைத்தானோ?
உடல் நிலை சரியில்லாமல் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்ட்டிருப்பதாயும் வைத்தியத்துக்கு பல இலட்சங்களில் தேவை எனவும் அறிந்த நொடியில் நேரில் சந்திக்கா விட்டாலும் எழுத்தில் பேசிய சகோதரனை குறித்து பதறி ஏதேனும் எவர் மூலமேனும் உதவிட வேண்டுமென நினைத்ததற்கு கிடைத்த பரிசு மைண்ட் டியர் வோர்ட்ஸ்@
உயிரைவிட கௌரவம் முக்கியமாம்!
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத ஆரம்பித்து சமூதாயத்தில் சில தவறுகளை நான் சுட்டிய பொழுதினில் என் தனிப்பட்ட திறமைகள் விமர்சிக்கப்பட்ட போது நான் எனக்காக ஒரு வார்த்தையேனும் சொல்வார்கள் என மிக நம்பியோரின் அமைதி தந்தது இன்னொரு வாழ்க்கைக்குரிய பாடத்தினை என்பேன்!
யாரென அறியாதோர் எனக்காக என் எழுத்தை வைத்து பேச,என்னை அறிந்ததாய் நான் நம்பியோர் .............?
தேவையில்லாத பிரச்சனை என எப்படி மனதை உடைக்க முடிகின்றது?
ஈற்றில் ஒன்று மட்டும் எனக்குள் தெளிவாய்........!
இத்தனை வருடங்களானாலும் நான் உலகையும் அதில் வாழும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவே இல்லை!
இதை படித்து விட்டு இது யாருக்கு? எனக்கா? உனக்கா? அவருக்கா? அவளுக்கா? என கேட்காதீர்கள்!ஆராய்ந்திடாதீர்கள்!
மொத்தமாய் நான்கண்ட உலக அனுபவம் என்னுள் இப்பதிவை எழுதிட தூண்டியதே அன்றி எவர் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலும் இல்லை!
சில பல நேரங்களில் இப்படி நானா நீயா என அராயும் போது என்ன எழுதுவது எனவே குழப்பம் விளைகின்றது. எழுத்துகள் அனைத்தும் சொந்த அனுபவமாய் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லையே!
எவரையும் குற்றவாளியாய் சுட்டிட நான் தயாராய் இல்லை, நான் தான் எங்கோ எதிலோ எப்படியோ குற்றவாளியாய் ?
எனக்கு தான் எதை, எப்படி, என தெரிந்தெடுத்து நேசிக்க தெரியவில்லை போலும்!
இந்த வலைப்பூவை நான் ஆரம்பிக்கும் போதே என்னுள் தோன்றும் அனைத்தையும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பதிவாக்கி வேண்டும் எனும் முடிவெடுத்தே ஆரம்பித்தேன்!
என் வாழ்க்கை இன்னொருவருக்கேனும் பாடமாகட்டும்.!
இன்னும் எழுதுவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?
நாட்டு நடப்புக்களைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் அக்கா நீங்கள் கடந்து வந்த பாதையின் வடுக்களாய் இவைகள் இருந்தால் இவைகளுக்கு உங்களுக்கு தனிப்பட்ட விதமாக கருத்தும் கமன்டும் எடுத முடியும் ஆனால் நீங்கள் பொதுவாக மற்றவர்களுக்கு பாடத்திற்காக எழுதி இருந்தால் இது சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
அவதானமாக இருக்க வேண்டும்
இந்த உலகம் பொல்லாதது சுயநலமானது
மிகவும் கவனமாக வாழ்ந்து மடிவோம்
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை அந்த வாழ்க்கை நல்ல பாடமாக அமைய வேண்டும்
அவதானமாக இருக்க வேண்டும்
இந்த உலகம் பொல்லாதது சுயநலமானது
மிகவும் கவனமாக வாழ்ந்து மடிவோம்
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை அந்த வாழ்க்கை நல்ல பாடமாக அமைய வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum