சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு Khan11

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Go down

Sticky இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by ramya karthick on Mon 22 Feb 2016 - 13:51

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
முன்னுரை:
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எனும் வள்ளுவரின் வார்த்தைகளை வாழ்க்கையாய் வாழ்த்திட்டவர். ஏழ்மையிலும் உண்மை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து இந்தியாவின் முதல் குடிமகனாய் உயர்ந்தவர். பெற்றோரின் சுமை குறைக்க நாளும் நாளிதழ்களைச் சுமந்திட்ட நல்லவர். மீனவக் குடும்பத்தில் பிறந்து விண்மீன்களை அளந்திட்ட வித்தகர். அயல்நாட்டில் வேலை கிடைத்திட்ட போதும் தாய்நாடே சிறந்தது என்று எண்ணிய தன்னலமற்றவர். அவரே .பி.ஜே.அப்துல்கலாம்.
பிறப்பு மற்றும் இளமைப் பருவம் :
கடலை நேசித்திடும் படகோட்டியான ஜெய்னுலாப்தீனுக்கு மகனாய்ப் பிறந்திட்ட அப்துல்கலாம் நேசித்தது என்னவோ வானைத் தான். பள்ளிக் காலத்தில் கடற்கரையில் பறவை பறப்பதைக் கண்டு பறக்க எண்ணிய இப்பறவை தன் கனவுகளை நிறைவேற்றிட ராமேஸ்வரம், திருச்சி , சென்னை எனப் பல இடங்களுக்கு பறந்து தன் அறிவுக்கான தீனியை சேகரித்தது. இயற்பியல் முடித்திட்டாலும் விண்ணையே அதிகம் விரும்பியதால் இப்பறவை சென்னைக்குப் பறந்திட்டது
ஆரம்பகாலப் பணி:
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
எனும் வாசகத்தை நெஞ்சில் நிறுத்தி தாய்நாட்டுக்காக தன்னலமற்று உழைத்தவர். 1959ல் அறிவியல் ஆய்வு உதவியாளராக தன் பணியைத் துவங்கியவர் தன் கடின உழைப்பால் 1963ல் ஏவூர்த்திப் பொறியாளனாய்ப் பூத்திட்டார்.
ஏவுகணை நாயகன் :
பெண் ஆசை துறந்த துறவிக்கு விண்ணாசை மட்டும் விடவே இல்லை. ஆணாய் இருந்து அப்பாச்சி, எஸ்.எல்.வி 3, அக்கினி எனப் பல ஏவுகணைகளை ஈன்று எடுத்தார். அக்கினி பறந்தது என்னவோ வானில் தான் அது உருவாக்கிய தாக்கம் என்னவோ அனைத்து இந்தியர் வாழ்வில் தான். எஸ்.எல்.வி 3 பணியின் போது பல தடைகள் வந்திட்ட போதும் கூட கலங்காமல் எடுத்த காரியத்தை முடித்தார். எஸ்.எல்.வி 3 முதலில் தோல்வி கண்டாலும் அடுத்த முயற்சியில் அதை வெற்றி பெறச் செய்து இந்தியாவை வானம் தாண்டியும் வெற்றி பெறச் செய்தார். விடா முயற்சி வெற்றியே தரும் என நிருபித்துக் காட்டினார்.
நான்கு மகிழ்ச்சிகள்:
"வேதம் மட்டுமல்ல எம் வித்தகரின் மகிழ்ச்சி கூட நான்கு தான்"
மண்ணில் பிறந்து ஆழியால் வளர்க்கப்பட்ட வல்லவர் விண்வெளி ஆராய்ச்சியில் தன் இளமைக் காலம் 20 ஆண்டுகள் செலவிட்டதும், வயிற்றில் இருக்கும் சிசுவை தாய்க் காப்பதைப் போல தாய்நாட்டைக் காக்க பாதுகாப்புத் துறையில் பணியாற்றியதும், அணுசக்தி சோதனை நிகழ்த்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலை நிமிர்த்தியதும், ஒற்றை கால் கொண்ட மழலை மலர்களின் செயற்கை கால் எடை 3 கிலோவிலிருந்து 300 கிராமாக மாற்றியது தான் இந்த நல்லவரின் நான்கு மகிழ்ச்சியாம்.
விருதுகள்:
தமிழகத்தின் வைரத்திற்கு இரத்தின விருதை வழங்கி பெருமை செய்தது நம் பாரதம். இந்த அறிவியல் மேதைக்கு ஆழ்வார் ஆராய்ச்சி மையம் ராமனுஜம் விருது வழங்கி சிறப்பித்தது. இதனன்றி பத்ம பூசன், பத்ம விபூசன் எனப் பல விருதுகளைப் பெற்றார் இந்தப் பெருமைக்குரிய மனிதர்.
முதல் குடிமகனான மூன்றாவது தமிழன்:
அக்னிக்கு சிறகு கொடுத்தவர் இந்தியாவை ஏற்றப் பாதையில் கொண்டு செல்ல வந்தார் முதல் குடிமகனாய். ஜனாதிபதி தேர்தலில் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றவர் இந்திய இளைஞர்கள் இதயத்தில் முடி சூடா மன்னராய் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். மக்களின் குடியரசுத் தலைவர் என அனைவராலும் போற்றப் பட்டார். ஜனாதிபதி ஆன பின்பு நாட்டிற்கு தன்னால் வீண் செலவு வரக் கூடாது என்று எண்ணி எளிமையை மட்டுமே கடைபிடித்தார். பூக்களையும் சைவ உணவுகளையும் அதிகம் விரும்பியவர். முதல் குடிமகனான பின்பும் கூட இந்த தமிழன் நேசித்தது என்னவோ ஆசிரியப் பணியைத்தான்.
காலத்தால் அழியாத கலாம்:
சராசரி மனிதருக்கு வேண்டுமானால் முடிவுரை இருக்கலாம் , சரித்திர நாயகனுக்கு அல்ல .சின்னதொரு துகளாம் அணுவிலும் சரி ,பேரண்டமாம் பால்வெளியிலும் சரி தன் பெயரை எழுதிச் சென்ற தலைவன். அழித்தாலும் மீண்டும் உயிர்த்தெழும் "பீனிக்ஸ்போன்றவர். ஒரு நெல்மணி மண்ணில் புதைவதால் அது மரிந்தது என்று அர்த்தமல்ல இன்னும் ஆயிரம் நெல்மணிகளைக் கொடுக்கப் போகின்றது என்று தான் அர்த்தம் .அதுபோல தான் எங்கள் ஏவுகணை நாயகனும் இந்தியாவின் கடைசி மாணவனும் ,இளைஞனும் இருந்திடும் வரையிலும் வாழ்த்திடுவார்     இந்தியாவிற்கும், இளைஞர்களுகும் முதுகெலும்பாய் இருந்தவர் .கனவு காணுவோம் கலாமின் கனவை நிறைவேற்றிட.
"ராமேஸ்வரத்தில் தோன்றிய
புதிய ராகம் 
கடின உழைப்பும் விடா முயற்சியுமே 
இதன் தாரக மந்திரம் 
வானைத் தாண்டி கொடி நாட்டிய சிகரம் 
 
அவர் காட்டிய பாதையிலே செல்கின்றது எமது கரம் "

ramya karthick
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Feb 2016 - 16:49

ரெத்தினச் சுருக்கமான விவரணம் ஒரு வாழ்ந்த சரித்திரம் பற்றியது அருமை சகோதரி தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை


இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் on Wed 24 Feb 2016 - 11:41

நேசமுடன் ஹாசிம் wrote:ரெத்தினச் சுருக்கமான விவரணம் ஒரு வாழ்ந்த சரித்திரம் பற்றியது அருமை சகோதரி தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum