Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அம்மா கணக்கு – திரைப்பட விமர்சனம்
2 posters
Page 1 of 1
அம்மா கணக்கு – திரைப்பட விமர்சனம்
‘உங்கள் கனவுகளைப் பிள்ளை கள் மீது திணிக்காதீர்கள்’
என்ற பேரன்டிங் தத்துவம் அதிகம் அதிகம் சொல்லப்பட்டே போரடிக்கிறது.
அதிலிருந்து வேறுபட்டு, ‘பிள்ளைகள் கனவே காணாமல் இருக்கிறார்கள்’
என தூஸ்ரா டர்ன் எடுத்தால், அதுதான் ‘அம்மா கணக்கு’!
-
கணவன் இறந்துவிட்ட நிலையில், அடுத்தடுத்து பல்வேறு அடித்தள
வேலைகளைப் பார்த்து மகள் யுவஸ்ரீயைப் படிக்க வைக்கிறார் அமலா பால்.
ஆனால், மகள் அதை உணராமல், ‘‘நானும் உன்னைப் போல வேலைக்
காரியாகத்தான் ஆவேன்.
அதற்கு எதற்காகப் படிக்கணும்?’’ என்கிறார்.
-
மகளுக்கு வராத கணக்கை வர வைக்க அமலா, தானே அவள் படிக்கும்
பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்கிறார். நினைத்தபடி யுவ கணக்கில்
தேர்ந்தாரா? அல்லது தாயைப் போல வேலைக்காரி ஆனாரா? என்பதே
‘அம்மா கணக்கின்’ விடை! ‘36 வயதினிலே’ என ஒரு படம் வராமல்
இருந்திருந்தால் இந்தக் களம் இன்னும் புதுசாக மனம் ஈர்த்திருக்கலாம்.
-
எனினும் அமலா பால் அண்ட் கோவின் யதார்த்த நடிப்பு இந்த சினிமாவுக்கு
தனித்துவம் தந்து நிலை நிறுத்துகிறது.
-
வீட்டு வேலை செய்யும் பெண் சாந்தியாக அமலா பால். மகள் பற்றிய
கவலையைத் தேக்கியபடியே பணியிடங்களில் உலவும் அவரின் உடல்
மொழிக்கு ஃபுல் மார்க்ஸ். ஒரே வகுப்பில் மகளுடன் போட்டி போட்டு
கணக்குப் பரீட்சை எழுதுவதும், அம்மா மகள் உறவை வகுப்புத்
தோழர்களிடம் மறைக்கும் இடங்களும் வெல்டன்.
-
யாருங்க அது… யுவ? விக்கிபீடியாவில் கூட விவரங்கள் இல்லாத ஒரு
சுட்டியிடமிருந்து இப்படி ஒரு நடிப்பா? அபியாக அந்தக் கண்கள் பேசுகின்றன.
அம்மாவை வகுப்புத் தோழியாக ஏற்க முடியாமல் அவமானத்தில் குறுகும்
போதும், ரோஷம் பொங்க கணக்கில் 58 மார்க் வாங்கிக் காட்டும்போதும்,
அம்மா வேறு ஒருவருடன் டூவீலரில் வந்து இறங்குகிறார் என்றதும் விரக்தி
கொள்ளும் போதும் அந்தப் பிஞ்சு முகம் பிக்சர் பர்ஃபெக்ட்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அம்மா கணக்கு – திரைப்பட விமர்சனம்
-
சமுத்திரக்கனியின் தகுதிக்கு இந்த ஹெட்மாஸ்டர் பாத்திரம் ரொம்பவே
குறுகல்! அர்த்தபுஷ்டியான அவர் முகம் குட்டிக் குட்டி காமெடி சேஷ்டைகளுக்குள்
அடைபடாமல் திமிறுகிறது. எச்சரிக்கை பாஸ்! ஈர நெஞ்சம் கொண்ட
எஜமானியாக ரேவதி கச்சிதம்.
-
இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படமாக்குதல் தரம் மிக நன்று.
எனினும் அந்தப் படிப்பாளி பையன் உள்ளிட்ட இதர பாத்திரங்கள் எல்லாமே
உணர்ச்சியின்றி பேசிச் செல்லும் துயரத்துக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
-
ஏழை வீட்டுக்கும் பங்களாவுக்கும் மாறி மாறிப் பயணிக்கும் கேமராவில்
வெரைட்டி காட்டி நிற்கிறார் கேவ்மிக் யு ஆரி. இளையராஜாவின் இசைக்கு
முழுமையான தீனி இல்லை என்றாலும் பின்னணி நச். பெண்களின் தேர்ச்சி
விகிதம் எப்போதும் உச்சத்தில் இருக்கையில் ‘பெண்களுக்கே கணக்கு வராது’
என இதில் ஆளாளுக்குச் சொல்வது எந்த அடிப்படையிலோ… புரியவில்லை.
-
கடைசியில் அம்மாவின் தியாகத்தைப் புரிந்து மகள் திருந்தும் இடங்களில்
இத்தனை நாடகத்தனமா? பள்ளி திறக்கும் நாளில் இருந்து அரையாண்டுத்
தேர்வு முடிவு வரையிலான நான்கைந்து மாதம்தான் கதைக் காலம்.
அப்படியெனில் சம்பவங்கள் எத்தனை சுவையாகக் கோர்க்கப்பட்டிருக்க
வேண்டும். அது மிஸ்ஸிங்! சீரியல்தனத்தை ஒதுக்கியிருந்தால் ‘அம்மா கணக்கு’
சென்டம்!
-
--------------------------------------------
-குங்குமம் விமர்சனக் குழு
-
-------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அம்மா கணக்கு – திரைப்பட விமர்சனம்
இன்னும் பார்க்கலை...
அம்மா கணக்கு
அப்பா இரண்டும் பார்க்கணும்...
விமர்சன தொகுப்புக்கு நன்றி.
குங்குமம் கபாலியை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாருங்கள்.
அம்மா கணக்கு
அப்பா இரண்டும் பார்க்கணும்...
விமர்சன தொகுப்புக்கு நன்றி.
குங்குமம் கபாலியை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாருங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» யுவா -திரைப்பட விமர்சனம்:
» சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
» யுவா -திரைப்பட விமர்சனம்:
» சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum