Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)
Page 1 of 1
சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)
ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த பஹத், தற்போது தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த நேரம், நஸ்ரியா மனைவி ஆன பின் தோல்விப் படங்கள்தான் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் செய்து கொண்டிருந்த நேரம்... கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா திருமணத்துக்குப் பின்னர் கிரிக்கெட் வாழ்க்கை மோசமாகிப் போனதற்கு காரணம் மனைவி வந்த நேரம்தான் என விவாகரத்து செய்தார் என்பதை நாம் அறிவோம்... மூடர்கள்... அப்படி இடையில் பஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் பிரச்சினை என செய்திகள் எல்லாம் வந்தன... அது பொய்யான தகவல் என பஹத்தும் நஸ்ரியாவும் சொல்லிவிட அது காற்றோடு போனது... அவர்கள் காதலோடு வாழ்கிறார்கள்.
ஒரு பக்கம் நிவினும் துல்கரும் அடித்து ஆடிக் கொண்டிருக்க தான் டக் அவுட் ஆகிக் கொண்டிருப்பதை தடுத்து, அதிலிருந்து மீள பஹத்துக்கு ஒரு சதம் அவசியமாக இருந்தது. அதை 'மகேஷிண்ட பிரதிகாரம்' கொடுத்தது. ஒரு சதம் எதிர்பார்த்தவருக்கு இரட்டைச் சதம் கிடைத்தது. மனுசனும் அடித்து ஆடியிருக்கிறார். சாதாரணமான கதை... பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்... அதுவரை இதைத் தொடமாட்டேன் என சின்னப் பிள்ளைகள் சவால் விடுவார்களே அப்படியான ஒரு கதை. சின்னதா நார் எடுத்து அழகாய் பூக்கட்டியிருக்கிறார்கள்.
போட்டோ ஸ்டுடியோ நடத்தும் பஹத், மிகச் சிறந்த போட்டோக்கிராபர் அல்ல... அவரின் கடை அருகே போட்டோ பிரேம் போட்டுக் கொடுக்கும் கடை வைத்திருக்கும் மாமா, வித்தியாசமான போட்டோ எடுக்க நினைக்கும் வயதான அனுபவம் நிறைந்த போட்டோகிராபரான அப்பா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களம். பஹத்தின் முதல் காதலி குடும்ப நிலையை சுட்டிக்காட்டி வேறோருவனுக்கு மனைவியாக அந்த வேதனையில் வாடினாலும் வெளிக்காட்டாமல் வாழ்கிறார். ஒருநாள் மாமாவை ஒருவன் அடிக்க, தட்டிக்கேட்கப் போய் அவனிடம் அடிவாங்கி, வேட்டி அவிழ்க்கப்பட்டு அவமானப்படுகிறார். அப்போது அவனை திருப்பி அடிக்காமல் தான் தனது எட்டாம் நம்பர் செருப்பை அணிவதில்லை என சபதம் செய்கிறார்.
அதன் பின் அவனை அடிக்க முயற்சி மேற்கொள்ளும் போது துபாய் சென்று விட்டான் என்பதை அறிந்து அவனின் வரவுக்காக காத்திருக்கிறார். இந்த சமயத்தில் பஹத்திடம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்துக்காக போட்டோ எடுக்க வரும் பெண், அவர் எடுத்த போட்டோவைப் பார்த்து உனக்கு போட்டோ எடுக்கத் தெரியாதுல்ல எனத் திட்டிவிட, போட்டோ எடுக்கிறது ஒரு கலை... அது படிச்சா வராது... என்று சொல்லும் முன்னாள் போட்டோ கிராபரான அப்பா, ஒரு மழை நாளில் இருட்டில் எடுத்த ஒரு போட்டோவைப் பஹத் பார்க்க நேரிடும் போது அவரின் அற்புதமான போட்டோத் திறமை தெரிகிறது.
அதன் பின் பஹத், மாமா கடையில் இருக்கும் பையனை வைத்துக் கொண்டு வித்தியாசமாய் முயற்சித்து அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலே அவளை அழகாய் எடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி அட்டைப் படத்தில் வரவைத்துவிட, அவளுக்கு பஹத் மீது காதல்... காதலியை கரம் பிடிக்கலாம் என்று நினைக்கும் போது தன்னை அடித்தவன் துபாயில் இருந்து வருகிறான் என்பதை அறிகிறான்... அவன்தான் தன் காதலியின் அண்ணன் என்பதையும் அறிகிறான். அவனை அடித்து சபதத்தை நிறைவேற்றி எட்டாம் நம்பர் செருப்பை அணிந்தானா..? தன் காதலிக்காக சபதத்தை கிடப்பில் போட்டானா..? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
அதன் பின் அவனை அடிக்க முயற்சி மேற்கொள்ளும் போது துபாய் சென்று விட்டான் என்பதை அறிந்து அவனின் வரவுக்காக காத்திருக்கிறார். இந்த சமயத்தில் பஹத்திடம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்துக்காக போட்டோ எடுக்க வரும் பெண், அவர் எடுத்த போட்டோவைப் பார்த்து உனக்கு போட்டோ எடுக்கத் தெரியாதுல்ல எனத் திட்டிவிட, போட்டோ எடுக்கிறது ஒரு கலை... அது படிச்சா வராது... என்று சொல்லும் முன்னாள் போட்டோ கிராபரான அப்பா, ஒரு மழை நாளில் இருட்டில் எடுத்த ஒரு போட்டோவைப் பஹத் பார்க்க நேரிடும் போது அவரின் அற்புதமான போட்டோத் திறமை தெரிகிறது.
அதன் பின் பஹத், மாமா கடையில் இருக்கும் பையனை வைத்துக் கொண்டு வித்தியாசமாய் முயற்சித்து அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலே அவளை அழகாய் எடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி அட்டைப் படத்தில் வரவைத்துவிட, அவளுக்கு பஹத் மீது காதல்... காதலியை கரம் பிடிக்கலாம் என்று நினைக்கும் போது தன்னை அடித்தவன் துபாயில் இருந்து வருகிறான் என்பதை அறிகிறான்... அவன்தான் தன் காதலியின் அண்ணன் என்பதையும் அறிகிறான். அவனை அடித்து சபதத்தை நிறைவேற்றி எட்டாம் நம்பர் செருப்பை அணிந்தானா..? தன் காதலிக்காக சபதத்தை கிடப்பில் போட்டானா..? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
பஹத் சொல்லவே வேண்டாம்... மனுசன் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கிடுவார். இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அனுஸ்ரீ , அபர்ணா பாலமுரளி என இரண்டு கதாநாயகிகள். காதலித்து விலகிச் செல்லும் அனுவை விட, கல்லூரி மாணவியாக வந்து காதலிக்கும் அபர்ணா கண்களாலேயே பேசி வசியப்படுத்தி விடுகிறார். இசையும் கேமராவும் விளையாண்டிருக்கின்றன.
சாதாரணக் கதை... சின்னப்புள்ளைத்தனமான சவால்... ஆனால் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் படம்.
மொத்தத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் நம்மளோட மனதோடு பேசும் படம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» சினிமா : கலி (மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : பத்தேமாரி (மலையாளம்)
» சினிமா : புலி முருகன் (மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : பத்தேமாரி (மலையாளம்)
» சினிமா : புலி முருகன் (மலையாளம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum