Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அர்ஜூனனின் வீரம்!
2 posters
Page 1 of 1
அர்ஜூனனின் வீரம்!
-
இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக
இருந்தான். ஒருநாள் –
இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ”அர்ஜுனா,
நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள்,
நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில்
வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள்.
நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,” என்றான்.
-
இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி
சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணி
மகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக்
கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான்.
காண்டீபத்தைக் கரத்தில் அளித்தான்.
-
ரதம் புறப்பட்டது. வெகுவிரைவில் ரதம் சமுத்திரத்தை தாண்டிச்
சென்றது. மேகங்களின் முழக்கம் போல், அதன் ஒலி திசைகளை
நடுங்கச் செய்தது. நிவாதகவசர்கள் வசித்த தீவை அடைந்ததும்
ரதம் பூமியில் இறங்கியது. உடனே தேவ தத்தமெனும் சங்கை
எடுத்து ஊதினான் அர்ஜுனன்.
-
கவசமணிந்து இரும்பினாலான பற்பல ஆயுதங்களைத் தாங்கிய
ஆயிரக்கணக்கான நிவாத கவசர்கள், அர்ஜுனனை நோக்கி
கடல்புரண்டு வருவதைப் போல் ஆர்ப்பரித்து ஓடி வரலாயினர்.
-
அர்ஜுனன் துணிவுடன் நின்றான். சற்றும் பதறாது அம்புகளை
எய்தான். கடுமையான போர் நடந்தது. ரதத்தை மேலே செல்ல
விடாது அரக்கர்கள் தடுத்தனர். கூரிய முனையுடைய
சூலாயுதங்கள் அர்ஜுனனைத் தாக்கின. காண்டீபத்தின் முழக்கம்
வெகுதூரம் கேட்டது.
-
அர்ஜுனனின் வீரத்திற்கு முன் நிற்க முடியாத எதிரிகள்,
யுத்த களத்தை விட்டு ஓடலாயினர்.
-
எதிரிகள் குவியல் குவியலாக யுத்தகளத்தில் சரிந்து வீழ்ந்தனர்.
குருதி வெள்ளம் ஓடியது.
-
இனி அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாதெனக் கண்ட
நிவாதகவசர்கள், மாய யுத்தம் புரியத் துவங்கினர்.
-
திடீர் என அர்ஜுனன் மீது கற்கள் விழுந்தன. இந்திராஸ்திரத்தைப்
பிரயோகித்து அர்ஜுனன் அக்கற்களைப் பொடிப் பொடியாக்கினான்.
பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் இருள் சூழ்ந்து
வானத்திலிருந்து பெரும், பெரும் துளிகள் விழுந்தன.
-
‘விசேஷன்’ என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, மழையைத் தடுத்து
விட்டான் அர்ஜுனன். புயல்போல் பெருங்காற்று வீசியது.
வருணதேவன் அளித்த அஸ்திரம் காற்றின் வேகத்தை நொடியில்
அடக்கியது. ஆயினும் மனம் தளராத அரக்கர்கள் மெய்சிலிர்க்க
வைக்கும் அஸ்திரங்களையும், நெருப்பையும் வாரி வீசினர்.
-
அரக்கர்களின் மாயையால் ஏற்பட்டிருந்த இருளை, ஒரு அம்பால்
விலக்கினான் அர்ஜுனன்.
அர்ஜுனனை இவ்விதமாகப் பயமுறுத்த முடியாதெனக் கண்ட
அரக்கர்கள், இன்னுமொரு தந்திரத்தைக் கையாண்டனர்.
-
மாயாவிகளான அவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்று
போரிட்டனர்.
குரலும், வில்லை நாணேற்றும் ஒலியும் கேட்டனவே தவிர, எதிரிகள்
புலப்படவில்லை.
-
அர்ஜுனன் மனம் தளரவில்லை. ஒலி வரும் இலக்கை நோக்கி
அம்பெய்வதில் அவன் வல்லவனாயிற்றே? குரு துரோணரிடம், ‘சப்தவேதி’
பாணம் எய்வதைக் கற்றிருந்தான். ஆகையால் கண்களுக்குப் புலப்படாது
நின்ற எதிரிகள் கூட மடிந்து வீழ்ந்தனர்.
-
அர்ஜுனன் வென்று வெற்றிமாலையை சூடினான் என்பதைச்
சொல்லவும் வேண்டுமா?
–
————————————
நன்றி-சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» "வீரம்"
» வீரம்!
» வீரம் ரீமேக்கில் பூஜா
» நண்பன் அவர்களின் வீரம் பாருங்கள்....
» ஜில்லா’, ‘வீரம்’ படங்கள் வெளியிடுவதில் சிக்கல்
» வீரம்!
» வீரம் ரீமேக்கில் பூஜா
» நண்பன் அவர்களின் வீரம் பாருங்கள்....
» ஜில்லா’, ‘வீரம்’ படங்கள் வெளியிடுவதில் சிக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum