Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீசை தத்துவம்
2 posters
Page 1 of 1
மீசை தத்துவம்
-
அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது
தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட
பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண
முடியாத நிலை…
-
ஆனால், இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோம்
பழகியிருக்கிறோம் என்பதால் நினைவுகளில் சற்று
குடைந்தார்.
-
வீட்டுக்கு வந்து பால் கவரை கொடுத்துவிட்டு வாக்கிங்
போகும் எண்ணத்துடன் தெருவுக்கு வந்தபோது மீண்டும்
அவர்.
-
யார் என்று கேட்டு விடலாமா?
-
யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கும் அந்த
எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். நின்றார்.
நான் அவரை நெருங்க… ‘‘என்ன சார், அடையாளம்
தெரியலையா?’’ என்றார்.
நான் மையமாக சிரித்து வைத்தேன்.
-
‘‘மீன்கடை பாண்டி சார்…’’
-
இப்போது பளிச்சென அடையாளம் புரிந்தது. முகவாயில்
கெடாமீசையை ஒட்ட வைத்துப் பார்த்தேன்.
-
‘‘மீசைய எடுத்துட்டேன்ல… அதான் தடுமாறிட்டீங்க!’’
-
சிரித்தேன். மீன்கடை பாண்டி நான் விருகம்பாக்கம் வந்த
இந்த பத்து வருடத்தில் ஒன்பது வருடங்கள் பழக்கமான
ஒரு கேரக்டர். வாரத்திற்கு இரண்டு நாள் மீன் வாங்குவதற்காக
சாலிகிராமம் மார்க்கெட் செல்லும் எனக்கு பாண்டி ரொம்பவே
பரிச்சயம். அதைவிட மிரட்டும் அந்த மீசை.
-
கடந்த சில மாதங்களாக நான் அசைவத்தைத் தவிர்க்க…
பாண்டியுடனான சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
-
‘‘ஏன் பாண்டி மீசைய எடுத்துட்டே?’’
-
‘‘எனக்கு சின்ன மீசைதான் சார் பிடிக்கும்.
ஆனா, மீன் வியாபாரம் பண்ற இடத்துல பொம்பளைங்க ரொம்ப
டார்ச்சர் கொடுப்பாங்க. பத்து ரூவா மீனை வெறும் ரெண்டு
ரூபாய்க்கு கேட்பாங்க… அதமாதிரி ஆளுங்கள மிரட்டத்தான்
மீசை வச்சிருந்தேன்.
-
இப்ப ரெண்டு மாசமா காலைலங்காட்டியும் காசிமேடு போய்
மீன் வாங்க உடம்பு ஒத்துழைக்கல… அதனால வியாபாரத்த
நிறுத்திட்டேன். மீசையையும் ட்ரிம் பண்ணிக்கிட்டேன்…’’
-
‘‘மீசைல என்ன பாண்டி இருக்கு? தொழில விட்டா என்ன…
அத அப்படியே மெயின்டெயின் பண்ண வேண்டியதுதானே?
பாரு எனக்கே உன்னை அடையாளம் தெரியல…’’
-
‘‘அப்படி இல்ல சார். இப்ப ஆட்டோ ஓட்டுறேன்.
கெடா மீசை வச்சுக்கிட்டு ஆட்டோ ஓட்டினா யாரும் ஏற
பயப்படுவாங்க சார்… ஸ்கூல் புள்ளைங்கள நம்ம ஆட்டோல
அனுப்பமாட்டாங்க.. அதான் மீசைய சுத்தமா எடுத்திட்டேன்…’’
என்றபடி நகர்ந்தான்.
-
பாண்டி உதிர்த்த அந்த மீசை தத்துவத்தில் நான் வியந்து
போனேன்!
–
————————————–
திருவாரூர் பாபு
குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மீசை தத்துவம்
அட இப்படியும் காரணமிருக்குதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum