Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆறுமுக விநாயகர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆறுமுக விநாயகர்
-
-
ஆனைமுகக் கடவுள் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கும்
அரிய தலம், பழநி அருகேயுள்ள சண்முகாநதி.
இங்கு விநாயகப் பெருமான் அற்புதக் கோலம் கொண்டிருப்பது
எதனால்?
சூரனை வீழ்த்தியதும், உக்கிரகம் தணியாமல் இருந்தாராம்
முருகக் கடவுள். தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக
அவர் முன் ஆறுமுகங்களைக் காட்டியபடி நின்றாராம் விநாயகர்.
தன்னைப்போல் அண்ணன் இருப்பதைக் கண்டு சிரித்ததில்
கந்தப் பெருமானின் கடும் கோபம் காணாமல் போனதாம்.
அதன் அடிப்படையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு
சண்முகா நதிக்கரையில் ஆறுமுக விநாயகரை பிரதிஷ்டை
செய்து ம்கள் வழிபட்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு மலையிலிருந்து உற்பத்தியாகும்
பச்சையாறு, வரதமா ஆறு (வரத்தாறு), பாலாறு, பொருந்தலாறு, கல்லாறு,
முள்ளாறு என ஆறு நதிகளும் பழநி மலைக்கு அருகே ஒரு இடத்தில்
சங்கமிக்கின்றன.
முருகப் பெருமானின் ஆறு அவதாரத்தைக் குறிக்கும் வகையில் அந்த
ஆறு நதிகளும் ஒன்றிணைந்து, ‘சண்முகா நதி’ என்ற பெயருடன் வடக்கு
நோக்கிப் பாய்கிறது. அதன் கரையில் பிற்காலத்தில் உருவான ஊரும்,
‘சண்முகாநதி’ என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.
இங்கு ஜெய ஆஞ்சநேயர், சுந்தர விநாயகர் மற்றும் தோகையடி விநாயகர்
என மூன்று சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. அதில் சுந்தர விநாயகர்
கோயிலில்தான் பழமையான ஆறுமுக விநாயகர் தரிசனம் கிடைக்கிறது.
கிழக்கு நோக்கிய ஆலயங்களுக்குச் செல்லும் வழியில் வில்வ மரத்தைத்
தொடர்ந்து சிறிய ஆலயத்தில் கருவறையில் ஜெய ஆஞ்சநேயரும்,
வெளியே வீர ஆஞ்சநேயரும் சேவை சாதிக்கிறார்கள். அடுத்துள்ள
பழமையான ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் முன்பக்கம் ஐந்து முகம்,
பின் பக்கம் ஒரு முகம் என ஆறுமுகங்களுடன் ஆதிகாலத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட ஆறுமுக விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இவர் பெயராலேயே ஆலயம் பிரபலமாகியுள்ளது.
அடுத்துள்ள கருவறையில் சுந்தர விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
பாதுகாப்புக் கருதி, வள்ளி – தெய்வானை சமேத முருகர், நாக கன்னியம்மன்
ஆகியோரையும் பிற்காலத்தில் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டித் திருக்கோலத்தில் முருகன்,
காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காளியம்மன் ஆகியோர் தனிச்
சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நந்தியம்பெருமான் தரிசனமும்
கிடைக்கிறது.
இக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனிக்கோயிலில் கருவறையில்
தோகையடி விநாயகர் அருள்காட்சி தருகிறார். இவர் சன்னதியின் முன்பாக
சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆறுமுக விநாயகப் பெருமானும்,
ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்தவாறு சண்முக நாதர் என்ற திருநாமத்துடன்
முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.
அண்ணன், தம்பியின் இந்த ஆறுமுக அருட்காட்சி முன்பு சொன்ன புராண
சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது.
அருகே போகரும், புலிப்பாணி சித்தரும் காட்சி தருகின்றனர். கிரகதோஷங்கள்
நீங்க இங்குள்ள நவகிரக சன்னதியில் தினமும் மாலை நான்கு மணியளவில்
விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகி்ன்றன.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆறுமுக விநாயகர்
-
இப்பகுதியில் தைபூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய நாட்களில்
பழநி முருகப்பெருமானுக்கு வேண்டிக் கொள்பவர்கள் இங்கு வந்து
ஆறுமுக விநாயகரை வணங்கிய பிறகுதான் அலகு குத்திக் கொள்வார்களாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் காலை முதல் விசேஷ வழிபாடுகள் இத்தலத்தில்
நடைபெறுகின்றன.
ஆறுமுக விநாயகரை வணங்கினால் மனசஞ்சலம் விலகி, மன நிம்மதி கிட்டும்,
சகல ஞானங்களையும், யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில்
நீராடிவிட்டு சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, சீரகம் மற்றும் நல்லெண்ணெய்
கலந்து ஆறுமுக விநாயகருக்குப் படைத்தால் வியாபாரம் விருத்தியாகும்.
கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.
எங்கே இருக்கு:
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ.
தொலைவில் சண்முகா நதி ஆறுமுக விநாயகர் ஆலயம் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 – இரவு 7
–
—————————————————–
– செ.சு. சரவணகுமார்,
-சென்னிவீரம்பாளையம்
இப்பகுதியில் தைபூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய நாட்களில்
பழநி முருகப்பெருமானுக்கு வேண்டிக் கொள்பவர்கள் இங்கு வந்து
ஆறுமுக விநாயகரை வணங்கிய பிறகுதான் அலகு குத்திக் கொள்வார்களாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் காலை முதல் விசேஷ வழிபாடுகள் இத்தலத்தில்
நடைபெறுகின்றன.
ஆறுமுக விநாயகரை வணங்கினால் மனசஞ்சலம் விலகி, மன நிம்மதி கிட்டும்,
சகல ஞானங்களையும், யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில்
நீராடிவிட்டு சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, சீரகம் மற்றும் நல்லெண்ணெய்
கலந்து ஆறுமுக விநாயகருக்குப் படைத்தால் வியாபாரம் விருத்தியாகும்.
கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.
எங்கே இருக்கு:
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ.
தொலைவில் சண்முகா நதி ஆறுமுக விநாயகர் ஆலயம் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 – இரவு 7
–
—————————————————–
– செ.சு. சரவணகுமார்,
-சென்னிவீரம்பாளையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum