Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமா : ஸ்கூல் பஸ்ஸில் ஷாஜியும் பரியும்
Page 1 of 1
சினிமா : ஸ்கூல் பஸ்ஸில் ஷாஜியும் பரியும்
ஷாஜகானும் பரிக்குட்டியும்
கார் விபத்தில் சிக்கி ஹாஸ்பிடலில் இருக்கும் மியா (அமலாபால்), விபத்துக்கு முந்திய சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார். குறுகிய கால நினைவு இழப்பில் இருக்கும் அவருக்கு யாரால் விபத்து நடந்தது. அவரது டைரியில் குறித்து வைத்திருக்கும் 'பி' யாராக இருக்கும் என்பதைக் கண்டறிய, அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மேஜர் ரவி (அஜூ வர்கீஸ்) , பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தும் தன் நண்பனுடன் (சூரஜ் வெஞ்சாரமூடு) சேர்ந்து துப்பறிகிறார்.
ஆரம்பத்தில் விபத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அறிய சுவராஸ்யம் காட்டாத அமலாவின் முன்னே பிரணவ் (ஜெயசூர்யா) , பிரின்ஸ் (குஞ்சக்கோ போபன்) இருவர் முளைத்து நான்தான் காதலித்தேன் என ஆளாளுக்கு கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதையில் குழம்பும் அமலா, யார் தன்னைக் காதலித்தவர் என்பதை அறிய முனைகிறார்.
இதற்கு இடையே வில்லனும் இவருக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டு 'பி'யில் எந்தப் 'பி' உண்மையான காதலன்...? விபத்து எப்படி நிகழ்ந்தது...? விபத்து நிகழ்ந்த பின் அந்தக் கார் என்னாச்சு...? வில்லன் எதற்காக அமலாவுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறான்...? மேஜர் ரவிக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடந்ததா...? பிரைவேட் டிடெக்டிவ் என்ன கண்டு பிடித்தான்...? என்பவற்றிற்கான விடையை மெல்ல மெல்ல அவிழ்த்திருக்கிறார்கள்.
ஜெயசூர்யாவும் குஞ்சக்கோபோபனும் போட்டி போட்டு கதை சொல்வது சிறப்பு. ஜெயசூர்யா கதை சொல்லும் போதே இது ஏதோ ஒரு தமிழ்படத்துல வருமே என்று நினைத்து படத்தையும் மூளைக்குள் பிடித்து வைத்தபோது அவர்களே சொல்லிவிட்டார்கள். அதில் ஒன்றும் சுவராஸ்யமில்லை... அவர்கள் சொல்லும் கதைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளப் படத்திலிருந்து உருவியதுதான் என்றாலும் மேஜர் ரவிக்காக டிடெக்டிவ் நண்பன் சொன்ன கதை, ஒரு கட்டத்தில் உண்மையாகிப் போக மேஜர் பேஜாராகிவிடுகிறார்.
காமெடி திரில்லர் படம் என்றால் நல்லாயிருந்திருக்கும்... ரொம்ப மெதுவாகச் செல்லும் கதை பார்ப்பவர்களுக்கு திருப்தி கொடுக்காது என்றாலும் படம் ரொம்ப மொக்கை அல்ல... பொழுது போகலையின்னா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்துக்குப் போகலாம்...
***
ஸ்கூல் பஸ்
படத்தின் பெயருக்கும் படத்தும் சம்பந்தம் என்பது அடிக்கடி வந்து போகும் ஸ்கூல் பஸ் என்பதாக மட்டுமே எனக்குத் தோன்றியது. ரெண்டு மூணு இடத்தில் பசங்க ஸ்கூலுக்கு அந்த பஸ்ஸில் போவார்கள் அப்புறம் ஒரு இடத்தில் பள்ளிக்கூடத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது என்றும் அதை விடுத்து உங்களுக்கு வேறு எந்த இடம் பிடிக்கும் என்றும் போலீஸ் விசாரணையில் கேட்கும் போது பசங்க ஸ்கூல் பஸ் என்பார்கள் அவ்வளவே படத்துக்கும் பெயருக்குமான சம்பவம். படம் குறித்து இயக்குநர் ஒரு பேட்டியில் பள்ளிகளில் நடக்கும் சில மோசமான சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தப் படம் என்றெல்லாம் சொல்லி கேரளா லுலு மாலில் ஸ்கூல் பஸ் போல செட் அமைத்து வைத்திருந்தாராம். அவரின் ஹவ் ஓல்ட் ஆர் யூ போல நம்மை ஈர்க்கவில்லை... காரணம் அப்பா தோலுரித்தது போல் இது எதையும் தோலுரிக்கவில்லை.
பசங்க செய்யும் தவறை பெற்றவர்களிடம் மறைத்து அதன் பின்னான காய் நகர்த்துதலில் என்ன ஆகிறது என்பதைச் சொல்லும் படம் இது. பள்ளியில் செய்யும் தவறுக்காக, பெற்றோருடன் வரவேண்டும் என்று சொல்லும் பள்ளி நிர்வாகம், போனில் குறுஞ்செய்தியும் அனுப்புகிறது. ஆனால் அதை செல்போனை பிரித்து மேயும் குழந்தைகள் பார்த்து அதற்குப் பதிலும் அனுப்பி, சொந்தங்களை எல்லாம் விரோதி ஆக்கி வைத்திருக்கும் அப்பா மற்றும் பிசினஸ் டென்சனில் இருக்கும் அம்மா இவர்களிடம் சொன்னால் நம்மை கொன்றுவிடுவார்கள் என்பதை மனதில் கொண்டு அதை மறைத்து விடுகிறார்கள். தப்புச் செய்யும் பையன் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிக்குச் செல்லாமல் தங்கையைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்ற ஆரம்பிக்கிறான்.
மூணு சென்ட் இடப் பிரச்சினையில் இருக்கும் பெற்றோருக்கு இதெல்லாம் தெரியவில்லை. ஒவ்வொருவராய் பார்த்துச் சொல்ல, ஒரு பெண்ணிடம் ஆட்டோவுக்குப் பணம் கேட்டு, அவள் இவர்களின் அம்மா நம்பர் கேட்டு போன் செய்ய, அங்கிருந்து தப்பி ஓடி தியேட்டரில் படம் பார்க்கும் போது மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டினால் கொன்று விடுவார்கள் என்பதை அறிந்தவன் தங்கையுடன் ஓடி பாத்ரூமுக்குள் நுழைந்து சன்னல் வழியாக அவளுடன் தப்பிச் செல்ல நினைத்து முடியாமல் போக, அவளை விட்டுவிட்டு சன்னலை உடைத்துக் குதித்து எஸ்கேப் ஆகிவிடுகிறான்.
அதன் பின் அவனைத் தேடும் படலம்... அவன் சிக்கினானா...? அவன் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததா..? சொந்தங்களைப் பகைத்துக் கொண்ட அப்பா திருந்தினாரா...? பிஸினஸ் டென்சனென குழந்தைகளை கவனிக்க மறந்த அம்மா மாறினாரா...? மூணு செண்ட் இடம் என்னாச்சு...? மூணு செண்ட் இடத்துக்காக சண்டையிட்ட கலெக்டர் சகோதரன் இவர்களுக்கு உதவினாரா...? என்பதுதான் மீதிக்கதை.
இதில் ஜெயசூர்யா சொந்தங்கள் முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை பகைத்துக் கொண்டு வாழும் மனிதராய் வருகிறார்... மகனை இழந்து விட்டு அவனைத் தேடித் திரியும் போது மனைவியிடம அழுது புலம்புவது... போலீசாரிடம் மோதுவது... போன்ற காட்சிகளில் கலக்கல்.
இன்ஸ்பெக்டராக குஞ்சக்கோபோபன்... எப்படியும் பையனைக் கண்டுபிடிக்க வேண்டும் என தன் மனைவியின் முதல் பிரசவத்துக்கு கூட போகாமல், குழந்தையின் போட்டோவை வாட்ஸ்சப்பில் பார்த்து சூவீட் வாங்கிக் கொடுத்து அலையும் கதாபாத்திரம். நிறைவாய்...
சின்னக் குழந்தைகள் பள்ளியில் நடக்கும் விசயத்தை மறைப்பதால் வரும் விபரீதத்தைச் சொல்லியிருக்கிறார்கள். படம் பரவாயில்லை ரகம்தான்... ஆஹா... ஓஹோன்னு புகழும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் பார்க்கலாம்.
***
காவிரிப் பிரச்சினை குறித்தான கட்டுரை ஒன்று பாதியில் நிற்கிறது.... முடிந்தால் நாளை பகிர்கிறேன். நாய் கடித்தால் திருப்பிக் கடிக்க வேண்டும் என்றில்லை... நம் பக்கம் வன்முறைகள் வேண்டாம்... அப்பாவிகளை அடிப்பதால் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு தீர்ந்து விடுமா என்ன...? புரியாத கர்நாடகக்காரன் புத்தி கெட்டு அலையுறான்.... பெங்களூரில் இருக்கும் நம் தமிழ் சொந்தங்கள் பத்திரமாக இருங்கள். இப்போதைக்கு உங்கள் பாதுகாப்பே முக்கியம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum