Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்
Page 1 of 1
மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்
மனசின் பக்கத்தில் என்ன நினைக்கிறோமோ.... நம்மைச் சுற்றி என்ன நடந்ததோ... நடக்கிறதோ அது எல்லாவற்றையும் கிறுக்கலாம். அப்படிக் கிறுக்குவதால் சில சமயங்களில் ஏன் அப்படி எழுதினாய் என்ற கேள்விகளும் எழலாம்... எழுந்திருக்கின்றன... இருந்தாலும் மனசின் பக்கத்தில் நாம தொடர்ந்து கிறுக்குவோமுல்ல.
கிறுக்கல்
அவன் ; 'நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய்..'
இவன் : சரி.
அவன் : 'மனசுலபட்டதைப் பேசு...'
இவன் : சரி.
அவன் : 'அவன் என்ன நினைப்பானோ இவன் என்ன நினைப்பானோன்னு யோசிக்காதே...'
இவன் : சரி.
அவன்: 'யாருக்காகவும் எதுக்காகவும் செய்ய நினைத்ததை செய்யாமல் விடாதே...'
இவன் : சரி.
அவன் : 'எந்த விஷயத்துலயும் யார்க்கிட்டயும் யோசனை கேக்காதே...'
இவன் : சரி.
அவன்: 'இதுதான் பாதை... இதில்தான் பயணம் என்று நினைத்துவிட்டால் அதில் பயணப்படு... துணைக்கு ஆள் வேண்டுமென காத்திருக்காதே...'
இவன் : சரி.
அவன் : 'நீ இதைச் செய்யணுமின்னு நினைச்சியன்ன எவன் பேச்சையும் கேக்காதே...'
இவன் : 'ச...ரி'
அவன் : 'மற்றவன் ஆயிரத்தெட்டு அட்வைஸ் பண்ணுவான்... அதையெல்லாம் தூக்கிச் சுமக்காதே...'
இவன் : '.....'
அவன் : 'என்னடா பதில் சொல்லாம யோசிக்கிறே...?'
இவன் : 'இம்புட்டு நேரம் நீ என்ன சொல்லிக்கிட்டு இருந்தே...?'
அவன் : 'உன்னை உன்னோட வழியில் போன்னு சொன்னேன்... நல்லதுதானே சொன்னேன்...'
இவன் ; 'அது எங்களுக்குத் தெரியாதோ...? என்ன 'டாஷ்'க்கு அறிவுரை சொல்ல வர்றே...'
அவன் ; '.....'
இவன் : 'பொத்திக்கிட்டு போ... என்னோட பாதையில எப்படி நடக்கணுமின்னு எனக்குத் தெரியும்... அட்வைஸ் பண்றேன்னு எவனுக்கிட்டயும் போயி நிக்காதே... வச்சி செஞ்சிருவானுங்க... உன்னோட பாதையில நீ முதல்ல சரியாப் போறியான்னு பாரு... முதல்ல நீங்க திருந்துங்கடா... அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணலாம்'
(உண்மையிலேயே இது கிறுக்கியதுதான்... உள் குத்து... வெளிக்குத்து எல்லாம் இதில் இல்லை)
அடி தூள்...1
அண்ணன் சந்தோஷிடமிருந்து 'ஸ்கை கிட்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்து பார்த்துவிட்டு அடுத்த நாள் அக்காவிடம் கொண்டு போய் 'ஏய் இந்தப் படத்தைப் பாரு... சூப்பரா இருக்கு...' என்றபடி மொபைலை நீட்டியிருக்கிறான்.
'நான் சரவணன் மீனாட்சிதான் பார்ப்பேன்... இதெல்லாம் பார்க்கமாட்டேன்..' என்று சொல்ல, 'உன்னைய எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்றேன்னு நினைச்சே... அக்கா தம்பியை எப்படிப் பாத்துக்குதுன்னு பாத்துச் தெரிஞ்சிக்கத்தான்... நீ எப்பப்பாரு அடிச்சிக்கிட்டேத்தான் இருக்கே.... அதான் கொடுத்தேன்... பாரு' என்று நீட்டியிருக்கிறான்.
'அம்மா அவனுக்கு உள்ள கொழுப்பைப் பாருங்க... என்ன சொல்லி என்னைய படம் பாக்கச் சொல்றான்னு...' என்று அக்கா கத்த... 'இந்தா பாத்துத் திருந்து'ன்னு மொபைலைக் கொடுத்திருக்கிறான்.
# விஷால் ராக்ஸ்
அடி தூள்...2
'இந்தப் படிப்பை எவன் கண்டு பிடிச்சானோ... யார் போன் பண்ணுனாலும் படி... படியின்னு...'
'பரிட்சைக்கு படிக்கத்தானே வேணும்...? மார்க் எப்படி எடுக்குறது...' நான்.
'அவன் மட்டும் கெடச்சான்..... கொலை பண்ணிடுவேன்...'
'எவன்...?' - நான்.
'பரிட்சையை கண்டுபிடிச்சவன்...'
'அது சரி... இப்பவே இப்படியா.... வாழும்...' - நான்.
'என்னைய படி படியின்னு சொல்றீங்களே... உங்களுக்கு தமிழ், இங்கிலீஸ் தெரியாது.... அம்மாவுக்கு தமிழ், இங்கிலீஸ், ஹிந்தி தெரியாது... அப்புறம் என்னைய மட்டும் படி படியின்னு...'
'இது யாருடா சொன்னா... எங்களுக்குத் தெரியாதுன்னு...' - நான்.
'அதான் எழுதிக் கொடுத்துட்டீங்களே...?'
'எங்க..? எப்ப..?' - நான்.
"எங்க டைரியில..."
'டைரியிலயா..?'
'ஆமா... அதான் நோ லாங்குவேஜ்ன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்களே...?'
'அடப்பாவி... நோ லாங்க்வேஜ் இல்லடா... KNOWN (தெரிந்த) லாங்க்வேஜ்டா...'
'சும்மா போங்கப்பா...'
# விஷால் III வகுப்பு
(குழந்தைகள் குறித்து எதுவும் வலையிலோ முகநூலிலோ எழுதுவதில்லை என்றாலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் எழுதத் தோன்றியதால் எழுதியாச்சு.)
சந்தோஷம்
பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்து 'மக்கள் மனசு' பகுதியில் வந்து கொண்டிருக்கிறது. அகலுக்காக எழுதிய 'குழலியின் தேவன்' கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமே... மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் என இரண்டு கட்டுரைகள் எழுதி ரொம்ப நாளைக்குப் பின்னர் எழுதிய வரலாறு சம்பந்தமான கட்டுரை... நண்பர்கள் நல்லாயிருந்தது என்று சொன்னதில் சந்தோஷமே.
மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : அகமும் புறமும்
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : அகமும் புறமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum